Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு

Featured Replies

யாழ்.கொம் இணைத்தளத்தில் யூலை 7, 2003 ஆம் ஆண்டு சோழியன் என்ற பாதிக்கப்பட்ட அன்பரால் வழங்கப்பட்ட அனுபவப்பகிர்வு இது.

யாழ் தளத்திற்கும் சோழியனுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்

முழுப்பதிவிற்கும்:

http://kanapraba.blogspot.com/2006/07/83.html

  • கருத்துக்கள உறவுகள்

சோழியனுக்கும் கானாபிரபாவுக்கும் நன்றிகள். யாழ்கள உறவுகளுக்கு உங்களுக்கும்,உங்கள் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் 83ம் ஆண்டுக்கலவரத்தின்போது பல அனுபவங்கள் நடந்திருக்கும்,தெரிந்திருக்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேப்பரில் வந்த எழுபரிதியின் கட்டுரை

http://www.orupaper.com/issue51/pages_K___Sec1_10.pdf

அந்த கலவரநேரத்தில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இருந்தபோது, உண்மையாக நிகழ்ந்த வேடிக்கையான சம்பவம் ஒன்றையும் கேள்விப்பட்டேன்.

ரத்மலானை இந்துக் கல்லூரி அகதிகள் முகாமில் இருந்த பெரும்பாலானவர்களை உணவும் வேறு பொருட்களும் தருவதாகக் கூறி, இரண்டு பேருந்துகளில் ஏற்றிக்கொண்டு கல்கிசை சென்ற். தோமஸ் கல்லூரிக்கு சென்றார்கள்.

அங்கே மேசை கதிரைகள் ஒழுங்காக அடுக்கப்பட்டு, மேசைகளில் பலவித உணவுப்பண்டங்களை அழகாக அடுக்கி வைத்திருந்தார்களாம். அழைத்து சென்றவர்களை கதிரைகளில் அமரச் செய்து, சில அரசியல் பிரமுகர்கள் உரையாற்ற, மணிக்கணக்காக வீடியோ ஒளிப்பதிவு செய்தார்களாம்.

அலுவல் முடிந்ததா? அழைத்துச் சென்றவர்களை சாப்பிடவே கேட்கவில்லை. அத்தனை பேரையும் மீண்டும் ரத்மலானை இந்துக் கல்லூரியிலேயே கொண்டு வந்து விட்டுவிட்டார்கள்.

ஆக, பாதிக்கப்பட்டவர்களை விருந்தாளிகளைப்போல கவனிக்கிறோம் எனக் காண்பிக்க அந்த நாடகத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள் என அப்போது பேசிக் கொண்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

1983ம் அண்டு 24 ந்திகதி காலை 7.30 மணியளவிருக்கும் மானிப்பாய் சந்தி வழைமை போல வேலைக்கு போவோர் பாடசாலை மாணவ மாணவியர் என்று ஒரே சனகூட்டம் அதற்கிடையில் முதல் நாள் இரவு திருநெல் வேலியில் நடந்த இராணுவத்தின் மீதான தாக்குதல் பற்றி கூட்டம் கூட்டமாய் நின்று பெரியவர்களின் ஆராச்சிகள் வதந்திகள் என்று நடந்து கொண்டிருந்தது நானும் அந்த கூட்டத்திடையே ஒரு மாணவனாய்.

மற்றறைய நண்பர்களுடன் என்ன நடந்திருக்கும் நேற்றிரவு?? எதற்கும் பாடசாலை முடிந்ததும் தாக்குதல் நடந்த இடத்தை போய் பாக்கலாம் என்று கதைத்தவாறு பாடசாலை தொடங்க நேரமிருந்தது எனவே சந்தியில் இருந்த தேனிர் கடையில்போய் ஒரு தேனீர் அரந்தலாம் என நினைத்து நண்பனுடன் போய் கடை காரரிடம் அண்ணை இரண்டு பிளேன்ரீ என்று சொல்லி விட்டு கடையின் உள்ளே இடமில்லாததால் வெளியே சைக்கிளில் நின்றபடியே தேனிருக்காக காத்து நின்ற போதுதான் ஒரு தனியார் பேரூந்து ஒன்று யாழ்ப்பாணபக்கமிருந்து வந்து சந்தியில் வேகத்தை குறைத்தது திடீரென தொடர்ச்சியாக சர வெடி கொழுத்த வது போல சத்தம் காரணம் அந்த கால கட்டங்களில் நாங்கள் துப்பாக்கி வெடி சத்தங்கள் கேட்டு அனுபவம் இல்லை.

நானும் யாரது காலங்காத்தாலை வெடி கொளுத்திறது என்று திரும்பவும் மக்கள் மாணவர்கள் மாணவிகள் என்று எல்லோரும் எல்லா பக்கமும் சிதறி ஓடினர் சிலர் கத்தினார்கள் ஆமி அமி சுடுறாங்கள் ஓடுங்கொ என்று கத்தியபடி அய்யோ அம்மா என்று எங்கும் ஒரே அலறல் சத்தம் ஒரு சில வினாடிகளே அப்போது தான் பார்த்தேன் அந்த பேருந்தில் இருந்தவர்கள் சீருடையில் இராணுவத்தினர் ஒருவன் வாசலில் நின்றபடியும் மற்றவர்கள் பேரூந்தின் சன்னல் ஊடாகவும் சரமாரியாக கண்டபடி சுட்டபடி இருந்தனர்.

நானும் நண்பனும் சைக்கிளை விட்டு பாய்ந்து அங்கு தேனிர் கடைபாவனைக்கு அடுக்கிஇ வைக்க பட்டிருந்த விறகு கட்டைகளிற்கு பின்னால் பதுங்கி கொண்டோம் சில வினாடிகளில் நடந்து முடிந்த அந்த கோரத்தை நடத்தி முடித்த இராணுவத்தினர் அங்கிருந்து தொடர்ந்து சுட்டபடியே சண்டிலிப்பாய் பக்கமாக போய் கொண்டிருந்தனர் அவர்கள் அங்கிருந்து போனதும் மெதவாய் தலையை நிமிர்த்தி பார்த்தேன் அங்கிருந்த எவரும் அதிர்ச்சியில் இருந்து மீழவில்லை கத்தியபடியே இருந்தனர் சிலர் தொடர்ந்து ஒடியபடியெ இருந்தனர் எனக்கும் உடலெல்லாம் நடுங்கிய படி இருந்தது காரணம் முதல் முதல் அவ்வளவு இரத்தத்தை மரணத்தை துப்பாக்கி சூட்டை மரணபயத்தில் அலறிய மக்களை பார்த்தது அன்றுதான்.

அதில் 3 இந்துகல்லூரிமாணவர்களும் 4 பொது மக்களும் கொல்லபட்டனர். அதில் இறந்து போனமாணவரில் எனது நண்பனும் ஒருவன் சண்டிலிப்பாயை மாகியம்பதி என்கிற இடத்தை சேர்ந்தவன்.இராணுவம் போனதும் அங்கிரந்த சில பெரியவர்கள் அங்கு நின்ற வாகனங்களில் இறந்தவர் காய பட்டவர் என பலரையும் வைத்திய சாலைக்கு ஏத்தி கொண்டு போக எனக்கு அதிர்ச்சியில் எதுவுமே செய்ய தோன்றாமல் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலடியில் போய் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு நண்பனிடம் பேசாமல் வீட்டிற்கு போய் விடலாம் என்று புறப்பட்டபோததான்

சண்டிலிப்பாய் பக்கமாக இருந்து வந்த இன்னொரு தனியார் பேருந்து ஒன்று கோவிலடியில் நிறுத்தி விட்டு அதில் வந்த எல்லோரும் பதட்டமாக இறங்கிகொள்ள சிலர் கோவிலுக்கள் ஓடிபோய் கடவுளே காப்பாத்து என்று அலறினர் விபரம் கேட்டபோதுதான் ஒருவர பதட்டத்துடன் சொன்னார் சண்டிலிப்பாய் சந்திக்கு அருகில் இவர்களின் பேரூந்திற்கு முதல்வந்த இன்னொரு பேரூந்தை இராணுவத்தினர் மறித்து சுட்டதில் அதில் பலர் கொல்ல பட்டு விட்டார்கள் என்றும் இவர்கள் வந்த பேருந்திற்கும் துப்பாக்கி சூடு விழுந்ததாம் ஆனால் யாரிற்கும் காயமில்லை தப்பி விட்டனர்.

எனக்கு கொஞ்சம் பதட்டம் குறைந்துவிட்டிருந்தது நண்பனையும் அழைத்து கொண்டு சண்டிலிப்பாய் பக்கமாக சைக்கிளில் விரைந்தோம் வீதியெங்கும் வெளிச்சோடி இருந்தது சில இளைஞர்கள் மட்டும் வீதிகளில் நின்று விபரம் கேட்டு கொண்டு நின்றனர்.சண்டிலிப்பாயில் சூடுபட்ட அந்த பேரூந்தில் 3 போர் இற்ந்து கிடந்தனர் சற்று தள்ளி ஒருவர் அவருக்கு அருகில் இருந்தே தலையில் சூடு பட்டிருக்க வேண்டும் தலை சிதறி மூளை வெளியே வந்து காகங்கள் கொத்தி கொண்டிருந்தது. அவ்வூர் இளைஞர் சிலர் இறந்தவர்களை யாழ் வைத்திய சாலைக்கு கொண்டு போகும் முயற்சியில் இறங்கியிருந்தனர்.

நான் வீட்டிற்கு ஓடிவிட்டேன் என்னைகாணும்வரை வீட்டிலும் ஒரே கலவரமாக இருந்தனர்.அந்த அதிர்ச்சியில் இருந்து நான் மட்டுமல்ல யாழ்குடாநாடே மீளமுதல் கொழும்பில் கலவரம் தொடங்கி விட்டிருந்தனர்.தமிழர் காங்கேசன் துறையில் கப்பலில் வந்து இறங்க தொடங்கியிருந்தனர். எங்கள் ஊர்காரரும் கனபேர் வந்தனர்.அதுவரை எந்த கவலைகளுமற்ற பாடசாலை விழையாட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுவது எல்லேரை போலவும்திரிந்த எனக்குள்ளும் பல கேள்விகள் ஏன் எதற்கு இத்தனையும் அன்று பாடசாலை வந்த மாணவர்களில் எதிர்காலம் பற்றிய எத்தனை கனவுகள் கற்பனைகளை சுமந்து வந்திருப்பார்கள்.

அவர்களை பாடசாலை அனுப்பி விட்டு அவர்களது பெற்றோர் இப்படி பிணமாக திரும்பி வருவார்கள் என்று எதிர்பாத்திருப்பார்களா? இப்படி ஆயிரம் கேள்விகள். அந்த சம்பவத்திலிருந்து எங்கள் மானிப்பாய் இந்துவிலும் மாணவர் வருகைகள் குறைய தொடங்கியது. பலஉயர் வகுப்பு மாணவர்கள் வகுப்புகளில் இருந்து காணாமல் போனார்கள் அந்த சம்பவங்களால் பாதிக்கபட்டு பல மாணவர்களும் விடுதலை போராட்டத்தில் பல இயக்கங்களிலும் இணைந்து கொண்டனர்.அந்த ஆண்டு இறுதி பரீட்சையின் பின்னர் நானும் ஒரு நாள் காணாமல் போயிருந்தேன்.

எல்லோருடைய அனுபங்களும் சோகமாக இருக்கின்றது. அந்த நேரத்தில் உங்கள் மனங்கள் எவ்வளவு தாக்கத்தை அனுபவித்து இருக்கும். உயிருடன் எரித்ததையும் வெட்டியதையும் நேர கண்டு இருக்கின்றீர்கள். உங்கள் கைகள் கட்டப்பட்டு இருப்பதை போல் உணர்ந்து இருப்பீர்கள். இப்போ கற்பனை செய்து பார்க்கவே இயலமால் இருக்கு.

தாயகத்தில் கறுப்பு யூலை கொண்டாடும்போது அதன் தாக்கம் பெரிதாக தெரிந்ததில்லை. அதைப்பற்றி அறிய வேண்டும் என்றா அர்வமும் வந்ததில்லை. இப்போ வாசிக்கும்போது கேட்கும்போது மனம் துடிக்கின்றது.

அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.