Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய - சீன எல்லைப் பிரச்சினை - தீராத தலைவலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய - சீன எல்லைப் பிரச்சினை - தீராத தலைவலி
சந்திர. பிரவீண்குமார்

ஒரு படத்தில் வழக்கம்போல அடிவாங்கிக்கொண்டு வரும் வடிவேலு புலம்பிக்கொண்டிருப்பார். 'அடிக்க அடிக்க ஏன் பொறுத்துக்கிட்டிந்தே?' என்று ஒருவர் கேட்பார். 'எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான், இவ ரொம்ம்ம்ம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க' என்று சொல்லிவிட்டு குமுறிக் குமுறி அழுவார். இந்திய நாட்டை ஆளும் காங்கிரஸ் அரசின் நிலை வடிவேலுவின் குமுறலை நினைவுபடுத்துகிறது. உள்ளூர் அரசியல் முதல் பாகிஸ்தான், இத்தாலி, சீனாவுடனான பிரச்சினைகள்வரை எல்லா மட்டங்களிலும் செமத்தியாக அடி வாங்கியும் அது பொறுத்துக்கொண்டு குமுறுகிறது. பெயரை எல்லாம் இழந்த பின்னும் 'நல்லவன்னு சொல்லிட்டாங்க' என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வதைக் கேட்டு சிரிப்பதா அழுவதா என்று புரியாமல் மக்கள் திகைக்கிறார்கள்.

காங்கிரஸ் அரசுக்கும், கட்சிக்கும் இப்போது போதாத காலம். ஏராளமான ஊழல் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, கூட்டணி கட்சிகளும் மன்மோகன் அரசைத் திட்டி வருகின்றன. இந்த அவலம், உலக அரங்கிலும் எதிரொலிக்கிறது. இலங்கை விவகாரத்தில் ராஜபக்சே இந்தியாவை மதிப்பதாக இல்லை. காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் தாய்நாடான இத்தாலி மாலுமிகளின் விஷயத்திலும் அலட்சியத்தைச் சந்தித்தது. இது தவிர வழக்கம் போல பாகிஸ்தானின் சீண்டல், தற்போது சப்ரஜித் சிங் மரணம்வரை (கொலை?) தொடர்கிறது. இது போதாதென்று, தற்போது அண்டை நாடான சீனாவின் சீண்டலும் சேர்ந்திருக்கிறது. சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக் பகுதியில் உள்ள தௌலத் பெக் ஓல்டி என்ற இடத்தில், இந்திய எல்லையில் 19 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஊடுருவிய சீன ராணுவத்தினர், அங்கிருந்து வெளியேற மறுத்து வருகின்றனர். இதன் காரணமாக, இரு வாரங்களுக்கும் மேல் இந்திய - சீன எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

 

உண்மையில் இந்திய எல்லையில் சீனப் படைகள் ஊடுருவுவது பல ஆண்டு காலமாக நடப்பதுதான். இந்திய - சீன எல்லை சுமார் 4,050 கி.மீ. நீளமானது. இந்தப் பகுதியில் சீனாவின் அராஜகம் தினசரி கதை. ஆனால் எங்கே 'நட்புறவு' கெட்டுவிடுமோ என்று மத்திய அரசு மௌனம் சாதிக்கிறது.

 

சீனாவுடன் இந்தியாவின் உறவு பல நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்டது. பண்டைய இந்தியாவின் பொருளாதார வளம், மக்களின் வாழ்க்கை நிலை ஆகியவை பற்றி சீன யாத்திரிகர் யுவான் சுவாங் எழுதி வைத்த குறிப்புகள் இன்றும் பேசப்படுகின்றன. இரண்டு நாடுகளுக்கும் பொருளாதாரப் பங்கீடுகளும் உண்டு. அதைப் போலவே திபெத் உள்ளிட்ட பகுதிகளால் ஏற்பட்ட சண்டைகளின் வரலாறும் நீளமானது.

 

தற்போதைய யுத்த சூழல் 1954இல் சீனாவுடன் இந்தியாவின் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, கை குலுக்கியதிலிருந்து துவங்குகிறது. கைகுலுக்கிய சீனா தோள் தட்டுவதையும் நிறுத்தவில்லை. முதலில் அஸ்ஸாமின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. வடகிழக்கு மாநிலங்கள், லடாக்கின் 40 ஆயிரம் சதுர மைல் பரப்பளவு ஆகியவையும் குறிவைக்கப்பட்டன. அதன் விளைவாக, 1962இல் போர் மூண்டது. ஆனால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் போனது போனதுதான். மேலும் 'ஆக்சாய்சின்' என்ற பகுதியையும் சீனா கைப்பற்றியது.

 

இது போதாதென்று, லடாக் அருகில் தான் ஆக்கிரமித்த பகுதியான 5,120 சதுர மைல் நிலத்தைப் பாகிஸ்தான் சீனாவுக்குக் கொடுத்துள்ளது. அதற்குப் பிரதிபலனாக சீனாவும் பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகளைச் செய்துவருகிறது. இதையெல்லாம் மனதில் வைத்துதான் 1999இல் நடந்த கார்கில் போர் சமயத்தில் 'நாம் பாகிஸ்தானை நமது எதிரி நாடாக நினைத்துக்கொண்டாலும், மற்றொரு அண்டை நாடு நம் மீது போர் தொடுக்கக் காத்திருக்கிறது. எனவே நாம் அதனிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்று அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணாண்டர்ஸ் கூறினார். 'அந்த எதிரி நாடு எது?' என்பதை அவர் நேரடியாகத் தெரிவிக்காவிட்டாலும் சீனா அதைப் புரிந்துகொண்டது. அவர் தேவையில்லாமல் தங்களை வம்புக்கிழுப்பதாக எச்சரித்தது.

 

ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா என்ன? இந்தியா அமைதியாக இருக்க ஆசைப்பட்டாலும் சீனா விடுவதாக இல்லை. வடகிழக்கு மாநிலங்களில் தனது கபளீகர வேட்டையை நடத்திவருகிறது. குறிப்பாக அருணாசலப் பிரதேசத்தைத் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்தப் பகுதிக்கு சீனா வைத்திருக்கும் பெயர் தெற்கு திபெத். பிரதமர் மன்மோகன்சிங் அவ்வப்போது அருணாசல பிரதேசத்திற்கு விஜயம் செய்து 'இது எங்கள் நாடுதான்' என்று முழங்குவதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை.

 

டிராகனின் கரங்கள் எல்லைகளைத் தாண்டி விரிவதுடன் நிற்கவில்லை. இந்திய உள்நாட்டு பயங்கரவாதத்தில் பாகிஸ்தானைப் போன்றே சீனாவுக்கும் பங்கு இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. முக்கியமாக வடகிழக்கு மாநிலங்களில் நடந்துவரும் நக்ஸலைட்டுகளின் பயங்கரவாதச் செயல்களில் சீனாவின் வேலையும் இருப்பதாக மத்திய உளவுத் துறை கூறுகிறது.

 

 

f363c10d-68a5-4b6d-a5ec-1392f74a33054.jp

 

சீனாவின் இந்த அணுகுமுறைகள், போருக்கான சூழலை உண்டாக்குகிறது. இந்தியாவை உன்னிப்பாகக் கவனித்துவரும் சீனா, தற்போதைய நெருக்கடியான நிலையில் போரை ஏற்படுத்தினால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்கிடுகிறது. ஆனால் ஊழல் குற்றச்சாட்டுகள், கூட்டணிக் குழப்பங்கள், பொருளாதாரச் சீர்குலைவுகள் ஆகியவற்றால் தத்தளிக்கும் காங்கிரஸ் அரசுக்கு அண்டை நாடுகளைச் சமாளிக்கும் வலிமை இல்லை. அதுதான் சீனாவுக்கு சாதகம்.

 

சீனாவுக்கு இந்தியாவை எதிர்ப்பதில் மேலும் பல காரணங்களும் உள்ளன. உலக அரங்கில் மனித வளம் அதிகமுள்ள நாடுகள் இந்தியாவும், சீனாவும்தான். சீனர்களின் முன்னேற்றத்துக்கு இந்தியர்கள் சவாலாகத் திகழ்வதை அந்நாடு எரிச்சலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பகையைத் தீர்த்துக்கொள்ளவும் சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

 

இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் சீனா இந்தியாவை அச்சுறுத்தப் பார்க்கிறது என்கிறார் தமிழ் ஆழி என்னும் செய்தி இதழின் ஆசிரியர் செ.ச.செந்தில்நாதன். 'உலக வல்லரசு என்று அமெரிக்கா தன்னைத் தானே முன்னிறுத்திக்கொள்வது போல சீனாவும் தன்னை ஆசிய வல்லரசாக முன்னிறுத்தப் பார்க்கிறது. அதற்குப் போட்டி இந்தியாதான். அதனால்தான் இந்த ஊடுருவல்கள். மேலும் இது பல ஆண்டுகளாக நடப்பதுதான். ஊடகங்கள்தான் இது ஏதோ புதிய விஷயம் என்பது போலச் சர்ச்சையைக் கிளப்புகின்றன' என்று அவர் கூறுகிறார்.

 

சோதனை மேல் சோதனை வந்துகொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்த செய்தி வந்ததுதான் காங்கிரசைக் கலங்கவைத்துள்ளது. உண்மையில் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நுழைவது புதிதல்ல. அதே நேரத்தில் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவும் முடியாது. இதை எப்படிக் கையாள்வது என்பது குறித்த திட்டம் அரசுக்கு இருக்க வேண்டும். சீனாவால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு காங்கிரசின் தொடர்ச்சியான தவறுகளும் காரணம் என்பதையும் மறுக்க முடியாது. ஐம்பதுகளிலிருந்தே சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை அடுத்தடுத்து வந்த காங்கிரஸ் அரசுகள் உறுதியாகக் கையாளத் தொடங்கிவிட்டன. இதை எப்போதோ சர்வதேச அரங்கிற்குக் கொண்டுபோய் பெரிய விவாதப் பொருளாக ஆக்கியிருக்க வேண்டும். இந்தியாவோ கடுமையான சொற்கள் கொண்ட கண்டனங்கள், இறையாண்மை குறித்த வழக்கமான அறிக்கைகள் ஆகியவற்றுடன் நின்றுவிடுகிறது. பஞ்ச சீல முழக்கம் முதல் இன்றைய அறிக்கைகள்வரை இந்தியாவுக்கு எல்லாமே பேச்சுதான். சீனாவோ எதையும் பேசுவதில்லை. எல்லாமே செயல்தான்.

 

சமீபத்திய ஆக்கிரமிப்பு பற்றிய செய்தி வரத் துவங்கியதுமே மத்திய அரசுக்குத் தலைவலி ஆரம்பித்துவிட்டது. எதிர்க்கட்சிகள் நாட்டின் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் கட்சி கவலைப்படுவதில்லை என்று குற்றம்சாட்டின. ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சீன ஊடுருவலை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஊடகங்களும் அரசை வறுத்தெடுத்தன. அதற்கு பிரதமர் மன்மோகன் அளித்த பதில் ஆச்சரியத்துக்குரியது. 'இது அந்த மாநிலத்தின் பிரச்சினை. அதைப் பற்றி கவலை கொள்ள ஏதுமில்லை' என்று வர்ணித்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், சீன ராணுவம் ஊடுருவும் எண்ணத்தில் வரவில்லை என்றும், பிரச்சினைக்குரிய இடம் மக்கள் வாழ முடியாத இடம் என்றும் கூறினார். மத்திய அரசின் இத்தகைய பதில்கள் சர்ச்சையைக் கிளப்பின.

 

இந்த விவகாரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க. மத்திய அரசை உலுக்கியெடுக்கிறது. சீனாவின் ஊடுருவலுக்குப் பிரதான காரணமாக இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பஞ்ச சீலக் கொள்கையை பா.ஜ.க. சுட்டிக்காட்டுகிறது. அவர் காலம் முதலே சீன விவகாரத்தில் சரியான அணுகுமுறை பின்பற்றப்படவில்லை என்கிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், நாடாளுமன்றத்தில் கேள்விகளால் துளைத்தெடுத்தார். சீனாவின் இந்த ஊடுருவலுக்கு காங்கிரஸ் இந்தப் பிரச்சினையை சரியாக அணுகாததே காரணம் என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் குற்றம்சாட்டினார்.

 

சமாஜ்வாதி கட்சி தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான முலாயம் சிங்கும் மக்களவையில் ஆவேசமானார். உடனடியாகச் செயலில் இறங்கி நாட்டின் நிலப்பரப்பைக் காப்பாற்ற வேண்டும் என்றார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் சீன ஊடுருவலை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

 

சீனாவில் கம்யூனிச ஆட்சி நடைபெற்று வருவதால் இந்த விஷயத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் குரலும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவளிப்பதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூறிவிட்டது. இந்திய - சீன உறவு பாதிக்காத வகையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

 

சீனாவின் ஊடுருவல் குறித்து நடந்த மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. அதனால் எல்லையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் என்ற சூழல் நிலவுகிறது. இந்தப் பிரச்சினை குறித்து ராணுவ தலைமை தளபதி மத்திய அமைச்சரவையில் விளக்கம் அளித்தார்.

 

இலங்கையில் ராஜபக்சே அரசு, அப்பாவித் தமிழர்களைக் கொல்ல இந்தியாவும் தனது பங்குக்கு ராணுவத்தை அனுப்பியது. ஆனால் சீன ஊடுருவல் பிரச்சினையில் இந்திய அரசு மௌனம் சாதிக்கிறது. தங்களை விட பலம் குறைந்த நாடுகளில்தான் இந்தியா வீரத்தைக் காட்டும் போலும்.

 

இந்த நிலையில் முன்னரே முடிவு செய்யப்பட்டபடி வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், சீனாவுக்கு மே 9ஆம் தேதி செல்லவுள்ளார். அந்நாட்டுடன் பிரச்சினை முற்றியுள்ளதால் இந்த சுற்றுப்பயணத்தை அமைச்சர் ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் இதை குர்ஷித் நிராகரித்துள்ளார். இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

 

இந்தச் சூழலில் இந்திய அரசு ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்வது நல்லது. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் முகச் சாயல் அசப்பில் சீன மக்களைப் போன்றே இருப்பதால் புது தில்லியிலும் மற்ற நகரங்களிலும் வடகிழக்கு மாநிலத்தவர்களை சீனர்களாகப் பாவித்து அலட்சியப்படுத்தும் மனோபாவம் காணப்படுகிறது. மேலும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியைப் புறக்கணிப்பதும், அந்த மாநிலங்களின் இயற்கை வளங்களைச் சுரண்டுவதும் நடந்துவருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் கோபத்தை சீனா பயன்படுத்த நினைக்கிறது. எனவே வடகிழக்கு மாநிலங்களையும் அவற்றின் மக்களையும் அரவணைக்காத வரை சீன ஊடுருவலும், தலையீடும் தொடரவே செய்யும்.

 

உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலில் இடம்பெற்றிருப்பது மன்மோகன் சிங்குக்கும், சோனியா காந்திக்கும் பெருமைதான். ஆனால் உள்நாட்டிலும் அண்டை நாடுகளிலும் மரியாதையைத் தக்க வைக்காவிட்டால் இந்தப் பெருமை வீணாகக் கரைந்துவிடும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=8&contentid=f363c10d-68a5-4b6d-a5ec-1392f74a3305

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவை இலங்கைக்கு குடுத்தமாதிரி லடாக்கை சீனாவிடம் கொடுக்கலாம்.. :unsure::D

நல்லக்கட்டுரை.  லடாக்கு காஸ்மிரியோடது. அதுனால இந்தியாவுக்கு சொந்தமான் டெல்லியா குடுக்கலாம்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா?... சீனா?.. நாம் எங்கே செல்கிறோம்.

 
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%
 
கீழ்க்கண்ட இரண்டு செய்திகளைப் படியுங்கள். ஒவ்வொரு கட்சிகளின் உண்மை முகங்களையும் காணுங்கள். நாம் ஏற்கனேவே சீனாவிடம் தோல்வி கண்ட ஒரு தேசம். உலகத்திலேயே இந்தியாவுக்கு பெரிய எதிரி சீனாதான் என்று தைரியமாகச் சொன்ன ஒரே பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ்தான். கீழ்க்கண்ட பதிவுகளைப் படித்துவிட்டு நேர்மையான நெஞ்சம் கொண்டவர்கள், நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். கம்யூனிஸ்ட் கட்சி என்பது யாது? அதன் கொள்கைகள் என்ன? அது யாருக்காக உழைக்கிறது. கடந்த காலப் பார்வையோடு இணைத்து வருங்கால நிகழ்வுகளைக் கணித்துப் பாருங்கள். சீனா நமது நண்பனா? எதிரியா? கம்யூனிஸ்ட் கட்சி என்பது (அது எந்த கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சரிதான்) உளவு நிறுவனமா அல்லது இந்தியாவுக்கு ஆபந்தாந்தவனா? நன்மக்களே முடிவு செய்வீர்! (இலங்கையின் ராணுவத்தளவாடம் அமைக்கும் அதே சீனாதான் காஷ்மீரத்தையும் அபகரிக்கிறது. சீனப் பிரதம் இந்தியா வருவதற்கு சில காலத்திற்கு முன் இப்படி நிகழ்வது தற்செயலானதா? ஏற்பாடு செய்யப்பட்டதா? தமிழக மீடியாக்கள் ஏன் இந்த செய்திக்கு அதி முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் என்கின்றன? பழங்கலாத்திலிருந்து பல காலங்களாக சீனாவுக்கு, ஆன்மிகத்தில் ஆகட்டும், தத்துவத்தில் ஆகட்டும், பொருளாதாரத்தில் ஆகட்டும். இந்தியாவே வழிகாட்டி தேசமாக இருந்திருக்கிறது (மாவோ வந்த பிறகு வேறு கதை என்பது வேறு). இன்று சீனா நமக்குப் பாடம் கற்பிக்கிறதோ என்று தோன்றுகிறதா? நன்மக்களே சிந்திப்பீர்! (இத்தாலிய அடிவருடி) காங்கிரஸ், கம்யூனிச உளவு நிறுவனங்கள் இதற்கு மத்தியில் நாம் அடுத்த நாடாளுமன்றத்திற்கு நாம் யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்.?.... சிந்திப்பீர்.... (மோடியாக இருந்தால் இந்தியா பிழைக்கும்.)

இனி செய்திகள்.... எல்லைக்குள் சீன ராணுவம் 10 கி.மீ ஊடுருவல் இந்திய படைகள்விரைகின்றன - 24.4.2013, தினகரன் புதுடெல்லி : காஷ்மீர் எல்லையில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம், 10 கி.மீ தூரம் ஊடுருவிய நிலையில்அங்குஇந்திய படைகள் விரைகின்றனராணுவ தளபதி விக்ரம் சிங்கும் காஷ்மீர் விரைந்துள்ளார்எனினும்,பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளதுஇதற்கு பா..கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீரில் லடாக்கில் உள்ள தவ்லத் பெக் ஆல்டி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்தியபகுதிக்குள் சீன ராணுவத்தினர் கடந்த 15ம் தேதி இரவு ஊடுருவினர்இந்தியாவுக்குள் 10 கி.மீதூரம் வந்த சீனராணுவத்தினர் அங்கு தற்காலிக கூடாரம் அமைத்துள்ளனர்இது குறித்து தகவல் அறிந்ததும்சீனாவுடன் மத்தியஅரசு தொடர்பு கொண்டு பேசி வருகிறதுஆனால்ஊடுருவல் இல்லை என்றும் தங்கள் ராணுவத்தினர் எல்லைபகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டதாகவும் சீனா கூறியது.

ஹெலிகாப்டர்கள் ஊடுருவல்லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மட்டுமின்றி அந்நாட்டின் ராணுவஹெலிகாப்டர்களும் இந்திய பகுதிக்குள் ஊடுருவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுஇதைத் தொடர்ந்துஎல்லையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்சீன ராணுவம் ஊடுருவியுள்ள எல்லைப்பகுதிக்கு இந்திய படைகள் அனுப்பப்பட்டு வருகின்றனஅங்குஏராளமான வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்இதனால்எல்லையில் பதற்றம் நிலவுகிறதுகாஷ்மீர் மட்டுமின்றிஅருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்டெல்லியில் நேற்று மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அக்பரூதீன் கூறியதாவது:சீன ராணுவத்தினர் ஊடுருவியது குறித்து அந்நாட்டு அரசுடன் இந்தியா தொடர்ந்து பேசி வருகிறதுஎல்லையில்ஊடுருவலுக்கு முன் இருந்த நிலைமையே தொடர வேண்டும் என்று சீனாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.ஊடுருவல் காரணமாக இருநாட்டு வீரர்களும் எதிர் எதிரே இருக்கும் நிலை உருவாகியுள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தவறான கணிப்புகளால் இதுபோன்ற ஊடுருவல் நடந்திருக்கலாம்.எல்லையில் இருதரப்பு ராணுவத்தினரும் பேச்சு நடத்தி வருகின்றனர்இந்தியா , சீனா இடையே ஏற்கனவேஉள்ள ஒப்பந்தப்படி இப்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணப்படும்.இந்திய,சீன எல்லையில் அமைதி நீடிக்கிறது. இவ்வாறு அக்பரூதீன் கூறினார்சீனா உறுதிபெய்ஜிங்கில் நேற்று பேட்டியளித்த சீன வெளியுறவு செய்திதொடர்பாளர் ஹுவா சன்யிங், ‘‘சீன ராணுவம் ஊடுருவவில்லை என்று ஏற்கனவே தெரிவித்தோம்இந்தியா,சீனாஉறவு நல்ல நிலைமையில் உள்ளதுஉறவை மேம்படுத்தும் வகையில் எல்லை பிரச்னைக்கு தீர்வு காணஇருதரப்பும் சுமுகமான முறையில் பேசுவதற்கு ஒத்துழைப்போம்’ என்றார்.

விக்ரம் சிங் ஆய்வுஇதனிடையேராணுவ தளபதி விக்ரம் சிங் நேற்று காஷ்மீர் சென்றார்எல்லையில் நிலவும்நிலைமைகள் குறித்து ராணுவ அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துகிறார்சுமுக தீர்வு ஏற்பட அவர் முயற்சிமேற்கொள்வார் என்று ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

பா.கோபம்டெல்லியில் பேட்டியளித்த பா.மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, ‘‘சீன ஊடுருவல்முற்றிலும் தவறானதுகடுமையான கண்டனத்துக்குரியதுசீனாவை பார்த்து மத்திய அரசு பயப்படுகிறதுஇந்தியஅரசு பலவீனமாக இருப்பதாலும் அதன் மென்மையான கொள்கைகளாலும் சீனா அடிக்கடி நம்மைசீண்டிப்பார்க்கிறதுஊடுருவலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும்’’ என்றார்.

குர்ஷித் விளக்கம் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், ‘‘எல்லையில் இதுபோன்று பிரச்னைகள் வந்தால் பேசிதீர்த்துக்கொள்ள ஏற்கனவே ஒப்பந்தம் உள்ளதுஇதன் அடிப்படையில் இருதரப்பு ராணுவ அதிகாரிகள் பேசிவருகின்றனர்பேச்சு மூலம் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்இந்தியாவின் நலனை காக்க தேவையான எல்லாநடவடிக்கைகளும் எடுக்கப்படும்’’ என்றார். - நன்றி: தினகரன்

இந்திய-சீன உறவு பாதிக்காத வகையில் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்பிரகாஷ் காரத் - 01.05.2013 தினமணி
இந்திய-சீன உறவு பாதிக்காத வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும்என்று பிரகாஷ்காரத் தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விசாரணை அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வனிகுமார் மற்றும்உயர் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதன் மூலம் மத்திய புலனாய்வுத்துறை(சிபிஐதனது நம்பகத்தன்மையைஇழந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளதுஉச்சநீதிமன்றத்தின் விமர்சனத்தை தொடர்ந்துசட்டத்துறைஅமைச்சர் அஸ்வனிகுமார் பதவிவிலக வேண்டும்அஸ்வனிகுமாரை ராஜிநாமா செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டைபிரதமர் எடுக்க வேண்டும்இந்த நடவடிக்கையை பிரதமரிடம் நாடு எதிர்ப்பார்க்கிறது.
இந்திய-சீன எல்லையில் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளதுசீனப்படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளதாக பிரச்னைஎழுந்துள்ளதுஎல்லை சிக்கலை தீர்த்து கொள்வதற்கு இரு நாடுகளும் பரஸ்பரம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதோடு,செயல்திட்டத்தையும் உருவாக்கியுள்ளனகட்டுப்பாட்டு எல்லைஇரு நாடுகளுக்கும் இடையிலான இறுதி எல்லைஇல்லைஊடகங்கள் வர்ணிப்பது போல இது மிகப் பெரிய சிக்கலும் இல்லைஇது நீண்டகாலமாக நிலவும் பிரச்னை.எனினும்கடந்த 50 ஆண்டுகளாக சீனாவுடன் இந்தியா நல்லுறவை பேணி பாதுகாத்து வந்துள்ளதுஇரு நாடுகளுக்கும்இடையே சுமுகமான உறவு நீடிக்கிறதுஅடுத்தவாரம் வெளியுறவுத்துறை அமைச்சர் சீனா செல்லும்போது பிரச்னைக்குதீர்வு ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கிறோம்ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் அல்லாமல் உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தைநடத்தினால் பிரச்னைக்கு நல்ல முடிவு கிடைக்கும் என்றார். - நன்றி : தினமணி
இந்திய-சீன எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது : அமெரிக்கா
 
வாஷிங்டன்மே 7-
இந்தியாவின் லடாக் எல்லைப்பகுதிக்குள் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்துதவுலத் பெக் ஒல்தி பகுதியில்கூடாரங்களை அமைத்து அடாவடி செய்தனர்நான்கு முறை நடைபெற்ற கொடி அமர்வு பேச்சு வார்த்தைகளை தொடர்ந்துசீன ராணுவம் இந்திய பகுதியைவிட்டு ஞாயிற்றுக்கிழமை வெளியேறியது.
இந்நிலையில் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் சீனா குறித்த தனது ஆண்டு அறிக்கையை அமெரிக்கநாடாளுமன்றத்தில் அளித்தது.
அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டுகளில் இந்திய - சீன பொருளாதாரஅரசியல் உறவுகள் வளர்ந்துள்ள போதிலும்இருநாட்டு எல்லைகளிலும்தொடர்ந்து பதட்டம் நிலவிவருகிறதுஇருநாடுகளும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 4,057 கிலோமீட்டர் நீளமுள்ளஎல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன.
ஆசிய வளர்ச்சி வங்கி இந்தியாவுக்கு வழங்குவதாக இருந்த 2.9 பில்லியன் டாலர் கடனை தடுக்க சீனா முயற்சித்ததுஇந்தக்கடனில் ஒருபகுதி அருணாச்சல பிரதேசத்தில் தண்ணீர் வசதியை மேம்படுத்த பயன்படுத்தப்படலாம் என்று கூறி இந்தசெயலை செய்ததுஇது சீனா எல்லைப் பிரச்சினைகளில் பன்னாட்டு அமைப்பு வழியாக தனது அதிகாரத்தை நிலைநிறுத்தசெய்த முதல் முயற்சியாகும்.
இந்தியாவுக்குள் சீனாவின் ஊடுருவல் முன்பை விட அதிகரித்து இருப்பதாக இந்திய செய்தித்தாள் ஒன்று செய்திவெளியிட்டுள்ளதுஎல்லை பிரச்சினைகளில் சீனா ராணுவத்தை பயன்படுத்திய விதம் சில நேரங்களில் போர் மூளவழிவகுத்துள்ளதுஇதனால் இந்தியாவுடன் 1962-ம் ஆண்டும்வியட்நாமில் 1979 ம் ஆண்டும் போர் நடந்ததுகுறிப்பிடத்தக்கது.
நன்றி : மாலை மலர்

 

http://www.arasan.info/2013/05/blog-post.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.