Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் அனல்மின் நிலையத்துக்கான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படும்

Featured Replies

சம்பூர் அனல்மின் நிலையத்துக்கான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் திருகோணமலை சம்பூரில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டாவது அனல் மின் நிலையத்திற்கான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படும். இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் செய்து கொள்ளப்படவுள்ள இந்த கூட்டு ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் மின் சக்தி மற்றும் எரிபொருள் துறை அமைச்சின் செயலாளர் ஆர்.வி. சாபி கைச்சாத்திடுவார்.

இந்தியாவின் தேசிய நிறுவனமான தேசிய அனல் மின்சக்தி நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்திற்கு 500 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளன.

இத்திட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் 350 அமெரிக்க டொலர்கள் கடனுதவியாக வழங்கப்படவுள்ளதுடன் எஞ்சிய 150 அமெரிக்க டொலர்களை இலங்கை மின்சார சபையும் இந்தியாவின் (என்.டி.பி.சி.) நிறுவனமும் வழங்கவுள்ளது. இந்த திட்டத்திற்கான நிர்மாணப் பணிகள் 2010 ஆம் ஆண்டு நிறைவடையும்.

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் அமைச்சர் ஜோன் செனவிரத்னவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத்தும் கலந்து கொள்ள விருக்கின்றனர்.

மேற்படி அனல் மின் நிலையத்தை அண்மித்த பகுதியிலும் திருகோணமலை, சம்பூர் பிரதேசத்திலும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்த இலங்கை துறைமுக அதிகார சபை கடற்படை தலைமையகமொன்றையும் நிர்மாணிக்கவுள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

நுரச்சோலயிலும் தமிழர்களை விரட்டிவிட்டு அந்த இடத்தில் அனல்மின் நிலையமொன்றை கட்டினார்கள். இப்போது சம்பூரில்.

De-populating Sampoor

trinco_coal_plant_59383_200.jpg

Indian state owned National Thermal Power Corporation (NTPC) is set to sign a Memorandum of Understanding (MoU) with Colombo, on Friday, amid protests from Tamil parliamentarians who are voicing concerns that the Coal-Fired Power Plant project in Sampoor has a hidden political agenda to permanently evict Tamils from the Muthur east region. Around 30,000 Tamils were forced to leave the southern Trincomalee region into Vaharai when Sri Lanka military launched a major offensive and captured Sampoor from the Liberation Tigers of Tamil Eelam in September.Indian High Commissioner Alok Prasad will be present at the Sri Lankan Presidential Secretariat when the agreement between Sri Lanka and India to build a 500MW imported-coal power plant is signed Friday, media sources in Colombo said.

Tamil National Alliance (TNA) parliamentarian from Trincomalee, K. Thurairetnasingham, in a media release, slammed the Government of Sri Lanka for rushing with the project without consulting the Tamil representatives, while thousands of Tamils are forced to flee the region. The power plant will have a permanent adverse impact on the future livelihood of Tamils in the region, he said.

trinco_power_plant_study_59387_200.jpg

The new location of coal power plant is shifted to Sampoor, from the location identified in Veppankuda, above Marble Beach

Colombo has been engaged since April this year with a politico-military objective to capture the Tamil populated territories in southern Trincomalee and Northern Batticaloa, and have already engineered the exodus of more than 30,000 Tamils from the region, the MP charged. Tamils have fled from nearly 30 villages, including Sampoor, Kadarkaraichenai, Chenaiyoor, Ilakkanthai, Sudaikudah, Pattalipuram and Koonithivu in Muthur east during SLA's recent offensives.

The first coal power plant is already being set up with Chinese assistance, amid strong protests from the civilians in Norochcholai in the Puttalam district in the west of the island.

In the East, Indian Oil Corporation, took over 99 storage tanks of World War II vintage in Trincomalee Oil Tank Farm in 2003 during the peace process.

Sri Lanka viewed the Indian presence in Trincomalee as a part of its "international safety net" against the Tigers.

CoalFiredPP_59390_200.gif

Feasibility tour by Indian experts and Sri Lankan officials with UNP (now SLFP) minister Rohita Bogollagama, 17 May 2002 [Library Photo]

On 17th and 18th May 2002, Rohitha Bogollagama, then Minister of Industries under United National Front (UNF) Government, together with the Indian National Thermal Power Corporation officials, carried out a feasibility study, and selected a location near the China Bay airstrip inside the High Security Zone in the Trincomalee Harbour to build the coal-fired power plant. Mr. Bogollagama is currently Minister of Enterprise Development and Investment Promotion, having crossed over to SLFP from UNP, two years ago.

During the 2002 evaluation, concerns were raised that the tall chimney of the Coal Power Plant may disrupt the landing of aircrafts at the China bay airbase. Foreign experts assured local officials that the chimney will not be a hinderance to the air traffic.

However, Colombo abandoned the location later, believed to be due to pressure from the Sinhala lobby which was concerned over the polution of Sinhalese populated Kantalai area lying to the southwest of Chinabay along the direction of monsoon winds.

In October this year, when the Sri Lanka Ministry of Power and Energy, announced their plan to construct a coal power plant using a loan from the Indian Government on concessionary terms, the Indian Government officials denied their participation in the project.

In Coal-fired power plants, coal is burnt in a furnace to heat re-circulating water that produces steam at high-pressure. The steam is fed through a steam-turbine to produce torque driving an alternator to produce electricity. Low pressure steam from turbine outlet is cooled by external water in a condenser and refed into furnace.

Power plant typically requires a long jetty in proximity. By moving the project from Chinabay to the opposite side of Koddiyar Bay to Sampoor, despite the absence of a deep-sea jetty for unloading, large tracts of arable land will likely end-up as storage area for coal. Or a new jetty should be built at high cost.

The Tamil areas that survived Sinhala colonisation will be affected with micro-particle dust from buring coal, civil society sources in the east say. In addition, the haze will reduce visibility in the region and obscure the spectacular vistas along prestine local beaches.

Power plants on average have useful life of fifty to sixty years, and emit large amounts of carbon dioxide (1 million tons of CO2 per 100MW) and other greenhouse gases into the atmosphere. Sulfur dioxide and oxides of nitrogen which cause environmentally hazardous acid-rain are also emitted. Poisionous mercury is also released to the air.

Further, warm water outflow from the cooling pipes to the power-plant condenser will be discharged into the sea, and this will deplete the fish stock along the cost. The livelihood of Tamil fisher families along the coastal villages will be endangered.

Sri Lankan military officials and the hardline bureaucracy in the East port town, were quick to seize the opportunity following the military capture of Sampoor and the eviction of Tamils from Muthur East region, advocating to shift the site of coal power plant.

Developmental zones in Trincomalee town have been systematically colonized and the Tamil areas have been neglected in the development with a long term politico-military objective in Trincomalee.

The advocates of power plant in Sampoor region seem to think that a military victory alone would not be sufficient, in the long run, to evict Tamils from the region, permanently.

அதுவும் தமிழரை விரட்டிய பகுதியில் அமைபது என்றால்???????

இந்தியா எங்களை எமாற்றுவது வேற தமிழ்நாட்டு மக்களையுமா?

இலங்கை இந்தியா இடையில் நிலக்கரி அனல் மின்நிலைய ஒப்பந்தம் கைச்சாத்து.

வெள்ளி 29-12-2006 22:39 மணி தமிழீழம் (பதிவு நிருபர்)

நிலக்கரி அனல்மின்நிலையம் அமைப்பது தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபைக்கும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.சி அமைப்புக்கும் இடையில் இவ் ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

500 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிலக்கரி அனல்மின்நிலையம் அமைக்கப்படவுள்ளது.

நன்றி : பதிவு

இந்த காலகட்டத்தில் உடன்படிக்கையை செய்ததன் மூலம் சிறீலங்காவின் தமிழர் தாயகத்தை 3 ஆக துண்டாடியதற்கு ஒரு அங்கீகாரத்தையும் வழங்கியிருக்கிறது. நாம் என்னதான் இந்தியாவை அவமதித்துவிட்டது பிராந்திய வல்லரசை அவமதித்துவிட்டது என்று பிரச்சாரம் செய்தாலும் இந்தியா இவ்வாறான ஒரு உடன்படிக்கை செய்யாது அல்லது பிற்போட்டு ஆயினும் தனது அதிருப்த்தியை மேலோட்டமாக காட்ட முற்படவில்லை என்பதை தமிழர்களும் தமிழ்நாடும் கவனிக்க வேண்டிய விடையம்.

மிக முக்கியமாக, பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்தித்து தமிழர் தரப்பை திருப்த்திப்படுத்தி மொளனப்படுத்திய படி இவ்வாறான ஒரு திட்டத்தை நிறை வேற்றியிருக்கிறார்கள். சிங்கள இனவாதிகளும் இதை தமது மிதவாதப் போக்கிற்கு இந்தியாவிடம் இருந்து கிடைத்த பச்சைக் கொடியாகத்தான் கணிப்பார்கள்.

முன்பு எமது தரப்பை முற்று முழுதாக வெளிப்படையாக நிராகரித்த படி சிங்களத் தரப்பை வெளிப்படையாக ஊக்குவித்து தட்டிக் கொடுத்த நிலை இருந்தது. அதாவது இந்திய இராணுவ அதிகாரிகள் வருகை பற்றியும் இராணுவ உதவிகள் பயிற்சிகள் பாதுகாப்பு உடன்படிக்கை பற்றியும் வெளிப்படையாக பிரச்சாரம் செய்யுது எம்மை மிரட்ட முற்பட்ட அளவில் இருந்தது. இன்று தமிழ்நாட்டின் அழுத்தங்களிற்கு செவிசாய்த்து திருப்த்திப்படுத்துவதற்காக எம்மையும் ஏதோ ஒருவகையில் ஏற்றுக் கொள்வதாக காட்டிக் கொண்டு தமிழ்நாடு சீண்டப்படாத முறையில் தமது உதவிகளை ஆதரவை சாதுரியமாக தொடர்கிறார்கள். தமிழ்நாட்டை மேலும் விழிப்படையச் செய்து எமது உறவு நிலையை மேலும் பலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டிய தேவையைத்தான் இது காட்டுகிறது.

அது மாத்திரமல்ல எம்மிடம் bargaining chips வரவேண்டிய தேவையையும் காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அனல் மின்சார நிலையம் எங்கே?

திருகோணலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில், அறுபது அல்லது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் பூர்வீக தமிழர் பிரதேசங்களாக இருந்த பல நிலப்பரப் புகள் இப்போது அவ்வாறு இல்லை!

இலங்கை பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற கை யோடு, தமிழர் பிரதேசங்களை, திட்டமிட்ட அரச உதவியுடனான குடியேற்றத் திட்டங்கள் மூலம் சிங்களப் பிரதேசங்கள் ஆக்குவதற்கான "சுதந்திரமும்' கொழும்பு அரசுகளுக்கு கைவரப்பெற்றன.

நாட்டின் அபிவிருத்தி என்ற முகப்புடன், அரச ஆதரவுடனான குடியேற்றத் திட்டங்களைக் கிழக்கில் தமிழ்பேசும் மக்களின் பிரதேசங்களில் பெரும் பகுதிகள் சிங்களப் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. அம்பாறை என்ற புதிய மாவட்டம் ஒன்றைத் தோற்றுவிக்கும் அளவுக்கு அசுர வேகத்தில் இந்தக் கபளீகரம் நடத்தப்பட்டது.

இலங்கை இனப்பிரச்சினைக்கு குடியேற்றக் கபளீகரமே மூலவிதை. அதிலிருந்து முளைவிட்டு, கன்றாகி, மரமாகி எண்ணற்ற இனவாதக் கிளைகள் பரப்பி நச்சு விருட்சமாகி அது நிற்பதைக் காண்கிறோம்.

மழைவிட்டும் தூவானம் விடுவதில்லை என்ற வாசகத்துக்கு ஏற்ப, தமிழர் பிரதேசங்களை பெரும்பான்மை சமூகத்தினரின் வாழ்விடங்களாக மாற்றும் நயவஞ்சகத் திட்டங்கள் இன்னமும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

திருகோணமலை மாவட்டத்தின் தெற்குப் பிரதேசத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்தினது வடக்குப் பிரதேசத்திலும், மிக அண்மைக் காலமாக, மிகக் குறிப்பாக மஹிந்த அரசு பதவிக்கு வந்த பின்னர், தமிழர்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றும் உள்நோக்கத்துடன் துரித வேகத்தில் காரியங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த இரண்டு பிரதேசங்களிலும் உள்ள 30 கிராமங்களில் இருந்து 30, 000 தமிழ் மக்கள் இராணுவ நடவடிக்கைகள் மூலம் வெளியேற்றப்பட்டதாக திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரத்திரசிங்கம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.

தமிழர்கள், தமது பூர்வீக வாழ்விடங்களில் இருந்து இராணுவ நடவடிக்கை மூலம் அகதிகளாக்கப்பட்டு, விரட்டியடிக்கப்பட்ட கிராமங்களில், சம்பூர் நெய்தல் நிலமும் ஒன்று. இந்த விரட்டியடிப்பு தற்காலிகமானது அல்ல. அந்தப் பிரதேசத்தை முற்றாகவே மக்கள் வாழ்வதற்கு உகந்த பிரதேசமற்றதாக்கி நிர்மூலமாக்கிவிடும் உள்நோக்கத்துடனேயே நடத்தப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் இப்போது வலுத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி பதவியில் இருந்த காலத்தில் 2002இல் இந்திய உதவியுடன் அனல் மின்சார நிலையம் ஒன்றை சீனக்குடாவில் அமைப்பதற்கு முடிவாகி இருந்தது. இந்திய தேசிய அனல்மின்சாரக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் நடத்திய சாதக பாதக நிலை ஆய்வுகளின் பின்னரே அந்த முடிவு எடுக்கப்பட்டது.

சீனக்குடாவுக்கு தென்மேற்கே உள்ள கந்தளாய்ப் பிரதேசத்தில் அது பெரும் சுற்றுச்சூழல் பதிப்புகளை உண்டாக்கும் என்று பெரும்பான்மையின மக்களால் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் தமிழர்களின் நிலப்பரப்புத் தானே, என்னகேடு கெட்டால் என்ன, என்ற கரவோடு சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்க இப்போது உத்தேசிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் அனல் மின்சார நிலையத்தை அமைப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில், அவரது முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

இந்திய அரசின் சார்பில் இந்திய தேசிய அனல் மின்சக்திக் கூட்டுத்தாபனத்தின் முக்கியஸ்தர் ரி.சங்கரலிங்கமும், இலங்கை அரசின் சார்பில் மின்சாரசபையின் தலைவர் பெரேராவும் கைச்சாத்திட்டனர்.

இந்த நிகழ்வில் இந்தியத் தூதுவர் அசோக் பிரசாத்தும், மின் சக்தி அமைச்சர் ஜோன் செனிவிரத்னாவும் பிரசன்னமாகி இருந்தனர்.

ஆனால், மின்சக்தி நிலையத்தின் அமைவிடம் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை. அநேகமாக அனல் மின் நிலையம் சம்பூரிலேயே நிறுவப்படும் என்று சொல்லப்படுகின்றது.

சம்பூரில் அனல் மின்நிலையத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்துவருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

அவர்களுடன் எந்தவிதமான கலந்தாலோசனையும் செய்யாமல், ஒரு தரப்பு நடவடிக்கையாக அரசாங்கம் இந்த விடயத்தில் நடந்துகொண்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிரான இவ்விடயத்தில் தமிழ் எம்.பிக்களுடன் ஆலோசனை எதற்கு என்ற தீவிராதப்போக்கை அரசு கடைப்பிடிக்கிறது.

பதினொராயிரம் தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசம் சம்பூர். அப்பகுதி மக்களைத் திட்டமிட்டு விரட்டிவிட்டு, அந்த இடத்தை அரசு ஆக்கிரமித்துள்ளது.

விரட்டப்பட்ட மக்கள் இப்போது அகதி முகாம்களில் சீரழிந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமது சொந்த பூர்வீக கிராமத்துக்குச் சென்று மீளக்குடியேறாதவாறு அரசு மிகப்பாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

அந்த உள்நோக்கத்துடனேயே அங்கு அனல் மின்சார நிலையத்தை நிறுவுவதற்காக அவசர அவசரமாகக் காரியமாற்றுகிறது என்று திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினர் கே.துரைரட்ணசிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனல் மின்நிலையம் நிறுவப்படவுள்ள சம்பூரின் கடல்வளம், நிலவளம் ஆகியன இரண்டும் மிகப் பாரதூரமான அளவில் பாதிப்புறும்.

மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் நுண்துகள்களால் கடலும், கடற்கரையும் மாசுறும்.

அதில் இருந்து வெளியேறும் பாதரசம் (மேர்க்குரி) என்ற நச்சுப்பொருள் பரவிப் பரந்து மக்கள் உடல்நலத்தை உறிஞ் சிப் பல பாதிப்புகளை உண்டாக்கும்.

100 மெகாவாட் அளவான மின்சாரத்தை உற்பத்திசெய்யும்போது, 10 லட்சம் தொன் கரியமிலவாயு பிறக்கும்.

இத்தனை பாதகமான அம்சங்களையும் பொருட்படுத்தாமல், அனல் மின் நிலையம் நிறுவுவதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்தாக இருக்கிறது.

புத்தளம் நுரைச்சோலையில் அனல் மின்சார நிலையம் ஒன்றினை நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டது. அந்தப் பிரதேச மக்கள் தொடர்ந்து காட்டிவரும் எதிர்ப்பைத் தொடர்ந்து சுமார் இரண்டு வருடங்களாக அதில் கை தொடாமல் இருக்கிறது அரசு. இப்போதும் கூட அங்கு வாழும் மூவின மக்களும் சேர்ந்து ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு ஊர்வலங்களும் நடத்திவருகின்றனர்.

அனல் மின்நிலையம் நிறுவப்பட்டால் அது அமையும் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பல வகையான பாதிப்புகள் உண்டாகி, அவர்களுக்கு மிகக் குந்தகமான எதிர்கால விளைவுகளைத்தோற்றுவிக்கும் என்பது நிறுவப்பட்ட கருத்து.

அதனால், தனித்தமிழர் பிரதேசமான சம்பூரில் அனல் மின்சார நிலையத்தை நிர்மாணித்து அதனை மக்கள் வாழ்வதற்கு உதவாத பிரதேசமாக்குவதற்கு அரசு கங்கணம் கட்டிநிற்கிறது இனி யாரால் என்ன செய்யமுடியும் என்ற அதிகார அகந்தையுடன்!

-உதயன்

இலங்கையில் அமைக்கப்படும் எந்த மின்சார உற்பத்தியும் தமிழரின் இருப்பைக் கேள்விக்குறி ஆக்கின. ஆக்குகின்றன. மலையகத்தில் செய்யப்பட்ட மின் திட்டங்கள் மலையக மக்களை இடம்பெயர வைக்கப்பட்டே செய்யப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நஸ்டஈடு கொடுக்கப்படவில்லை. இப்போது கொத்மலை மின்திட்டம் கூட மலையகத்தில் தமிழ்மக்களின் இருப்பை அகற்றும் ஒரு வேலையாகவே நடக்கின்றது. அவ்வாறே நுரைச்சோலை, சம்பூர் போன்றவையும் தமிழ்மக்களின் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பாகவே செய்யப்படுகின்றது.

வறண்டபூமியான அம்பாந்தோட்டையில் இவ்வாறன செயற்பாட்டிற்கு அவ்விடத்தைச் சேர்ந்த மகிந்த ராஜபக்சா முயல்வாரா? அவரால் அது முடியுமா?

  • தொடங்கியவர்

சீனன்குடாவில் அமைக்க இந்தியாவுக்கு விருப்பம் சம்பூரில் நிறுவவே கொழும்புக்கு அதிக ஆர்வம்

[30 - December - 2006] [Font Size - A - A - A]

திருகோணமலை மாவட்டத்தில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திட்ட போதும் இதற்கான பணிகளை ஆரம்பிக்க முன் இரு முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய நிலைமை காணப்படுகிறது.

முதலாவதாக அனல் மின் உலை அமைக்கப்படும் `இடம்' குறித்த பிரச்சினையாகும்.

இரண்டாவதாக இந்தத் திட்டத்துக்கு நிதி வழங்கும் மூன்றாவது தரப்பு யார் என்ற பிரச்சினை காணப்படுகிறது.

கொட்டியாரக்குடாவுக்கு குறுக்கே சம்பூரில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்பட வேண்டுமென்பதில் இலங்கை அரசாங்கம் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.

ஆனால், திருமலைத் துறைமுகத்துக்கு சமீபமாக சீனக்குடாவில் இந்த மின் உலை அமைக்கப்படுவதே இந்தியாவின் விருப்பமாக உள்ளது.

நேற்று புரிந்துணர்வு உடன்படிக்கை மட்டுமே கைச்சாத்திடப்பட்டது. 2006 இல் மேற்கொள்ளப்பட்ட பூர்வாங்க ஆய்வுகளின் பிரகாரம் இந்திய தேசிய அனல் சக்தி கம்பனியானது சீனக்குடாவில் நிலையத்தை அமைக்கவே விரும்பியது. அதேசமயம், இவ்வருட நடுப்பகுதியில் புலிகளிடமிருந்து சம்பூரைக் கைப்பற்றிய பின்பே சம்பூரில் மின் நிலையம் அமைக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் கொழும்பிடம் தோன்றியது.

சம்பூரில் அனல் மின் உலை அமைப்பதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை அதிகரித்துக் கொள்ள முடியுமெனவும், ஏனெனில், அந்த இடத்தை விடுதலைப் புலிகள் மீளக் கைப்பற்ற முயற்சிக்கக் கூடும் என்றும் கொழும்பு எதிர்பார்ப்பதாக `இந்துஸ்தான் ரைம்ஸ்' பத்திரிகை நேற்று தெரிவித்திருக்கிறது.

அதேசமயம், இந்தியாவுடன் பகைத்துக் கொள்ள நேரிடுமெனக் கருதி எந்தவொரு துணிகரமான செயலிலும் புலிகள் ஈடுபடமாட்டார்களெனவும் கொழும்பு எதிர்பார்க்கிறது.

இலங்கைப் படையினரைப் பொறுத்தவரை சம்பூர் கேந்திர இடமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், திருமலைத் துறைமுகம், கடற்படைத்தளம் என்பவற்றின் நுழைவாயில் முகப்பில் சம்பூர் உள்ளதால் இது முக்கியமான இடமாகியுள்ளது.

இதேவேளை, மறுபுறத்தில் தமிழ் சிறுபான்மையினருடன் இந்த விடயம் குறித்து பகைத்துக் கொள்ள இந்தியா விரும்பவில்லை. சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைப்பதால் தமிழ் மக்களின் நியாயபூர்வ அபிலாஷைகளை கடுமையாக மறுத்துவரும் இலங்கை அரசுக்கு புதுடில்லி உதவி அளித்து வருகிறது என்ற உணர்வுகளை தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவித்துவிடும்.

அத்துடன், சம்பூரை அபிவிருத்தி செய்து பொருளாதார கேந்திரமாக மாற்றுவதன் மூலம் சிங்களக் குடியேற்றத்திற்கு வழி வகுப்பதுடன் திருமலை மாவட்டத்திலிருந்து தமிழ் மக்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்துவிடுமென்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

மேலும், இவ்வாறான தந்திரோபாய நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடையே இடைவெளியை அதிகரிக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து சம்பூர் இராணுவத்திடம் சென்ற பின்னர் அங்கு தமிழ் மக்கள் எவரும் இல்லாததையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சம்பூரில் மீண்டும் தாம் குடியேற அனுமதிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை அங்கிருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் இல்லை.

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து கொழும்பு வட, கிழக்கு என இரு தனித்தனியான நிர்வாகங்களை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்தியாவும் இது குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

1987 இல் இந்திய- இலங்கை உடன்படிக்கை மூலம் இந்தியாவே இரண்டையும் இணைத்தது.

இந்தியா சம்பூரை விட சீனன்குடாவையே அதிகம் விரும்புகின்றது.

சீனன்குடாவினால் இதற்கு அவசியமான மனித வளங்களை வழங்க முடியும்.

மேலும், இது துறைமுகத்திற்கு அருகில் உள்ளது. அனல் மின் நிலையம் துறைமுகத்திற்கு அருகில் அமைந்திருக்க வேண்டியது அவசியம்.

மற்றைய விடயம் நிதி வழங்குவது. மூன்றாவது தரப்பொன்று பங்குகொள்ள வேண்டும் என திட்டத்தில் குறிப்பிடப்படுகின்றது.

இதில் பங்குகொள்ள விரும்பும் எந்த மூன்றாவது தரப்பும் திட்டம் பாதுகாப்பானது, அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடியது, பொருளாதார ரீதியாக சாத்தியமானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்தம் மிக அருகில் நடைபெறுகையில் இந்தத் திட்டத்திற்கு சர்வதேச அமைப்புகள் நிதியுதவி வழங்குமா என்பதும் நிச்சயமற்றதாகவுள்ளது

http://www.thinakkural.com/news/2006/12/30...s_page18260.htm

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் அனல் மின் நிலையம்: இந்தியா பின்வாங்குகிறது?

[ஞாயிற்றுக்கிழமை, 31 டிசெம்பர் 2006, 05:03 ஈழம்] [பா.பார்த்தீபன்]

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அனல் மின் நிலையத்தை திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு சம்பூரில் அமைப்பதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த அனல் மின் நிலைய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் இந்திய அரசு, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில்,

சம்பூரில் அனல் மின் நிலையம் அமைப்பதை விரும்பவில்லை என்று தெரிவித்தள்ளது. இதற்கு பிரதான காரணியாக சம்பூருக்கும் திருகோணமலை துறைமுகத்திற்கும் இடையில் உள்ள தூரம் அதிகம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சக்கி எரிபொருள்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன கருத்து தெரிவிக்கையில்,

சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டால் மேலதிக நிலங்களை இணைப்பதற்கு இலகுவானது என்றும் இந்தியா பொறியியலாளர்கள் இடத்தை பார்வையிட்டு விட்டு அரசுக்கு தெரிவிக்குமாறும் நான் கேட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம் தமிழ் மக்களை மூதூர் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டும் இரகசிய அரசியல் நடவடிக்கை என்று தமிழ்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசின் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன், சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம் தமிழ் மக்களை அவர்களின் பிரதேசத்தில் இருந்து நிரந்தரமாக வெளியெற்றும் திட்டம் எனவும், இராணுவ நடவடிக்கை மூலம் புதிதாக கைப்பற்றப்பட்ட பகுதிகளை பாதுகாக்கும் நடவடிக்கையும் ஆகும் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.