Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்களத்தில் தமிழில் எழுதல்

Featured Replies

கருத்துக்களத்தில் தமிழில் எழுதுவதற்கான சில வழி முறைகள்

அனைவரும் Keyman எனும் Program இனை தரவிறக்கம் செய்து install செய்து அதன்பின் யாழ் அவர்களால் உருவாக்கப்பட்ட பாமுனியினை இணைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர

  • 4 months later...

நட்புக்குரிய யாழ் இணையக் கருத்துக்கள நண்பர்களுக்கு,

யூனிக்கோட் தமிழில் கருத்துக்களத்தில் எழுதுவதற்கான விளக்கம் இது.

யாழ் இணையமானது வலையூடகத்தின் புதிய நுட்பமான "யூனிக்கோட்" எழுத்துரு முறையினைப் பயன்படுத்துவது

யாவரும் அறிந்ததே. இதன் மூலம் உலகின் எந்தவொரு மூலையில் இருந்தும், எந்தவொரு கணணி மூலமும்,

எந்தவொரு புதிய எழுத்துருவினையும் தரவிறக்கம் செய்யாமல் யாழ் இணையத்தை தமிழில் பார்வையிட முடியும்.

இன்று இணையத்தில் தமிழ் இணையத்தளங்கள் பரந்து விரிந்திருக்கின்றன. அதேபோல் தமிழ் எழுத்துருக்களும்

வெவ்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு அமைந்துள்ளன. அதனால் பாவனையாளர்களும்/பயனாளர்களும்

ஒவ்வொருவிதமான எழுத்துரு முறையினைப் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படியே பழக்கப்பட்டும் விட்டார்கள்.

அதனால் ஒரு குறுகியவட்டத்துக்குள்ளேயே தமது செயற்பாடுகளையும் குறுக்கிக் கொள்கிறார்கள். இது தமிழின்

வளர்ச்சிக்கும், தமிழரின் முன்னேற்றத்திற்கும் தடையாகவுள்ளது. இதன்பொருட்டு யாழ் இணையம், வெவ்வேறு

முறைகளைப் பயன்படுத்தி வருபவர்களை, அவர்கள் பயன்படுத்தும் எழுத்துரு முறையிலேயே இலகுவாக

"யூனிக்கோட்டில்" எழுத வழிவகைகள் செய்து அதனைக் கருத்துக்களம் மூலம் அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம்

அனைத்துத் தரப்பினரும் தமது கருத்துக்களையும், தகவல்களையும் அனைவரோடும் பகிர்ந்துகொள்ள இலகுவாக

அமையும்.

எனவே, அதுபற்றிய விளக்கங்களை கீழே சுருக்கமாக எழுதுகிறேன்.

----------------------------------------------------------------------------------

1. யாழ் இணையக் கருத்துக்களத்தில் பதிந்த அங்கத்துவர்களாகிய நீங்கள், முதலில் உங்கள் பயனாளர் பெயரையும்

(Username), மறைவுச்சொல்லையும்(Password) பயன்படுத்தி உள்நுழைந்திருக்க வேண்டும்.

2. கருத்துக்களத்தின் மேற் பகுதியில் யாழ் இணையத்தின் பிரிவுகளுக்கான தொடுப்புகள் இருக்கும்:

முற்றம் - கருத்துக்களம் - விம்பகம் - மடல் - தேடி - நாற்சந்தி

அதன் கீழ் கருத்துக்களத்திற்கான தொடுப்புகள் இருக்கும்:

Home - Search - Memberlist - Statistics - Album - Links - Calendar - Recent Topics -

Nickpage - Staff Site - Ranks - Usergroups - FAQ - Profile - You have no new

messages - Log out [ வலைஞன் ]

3. மேற்கண்ட கருத்துக்களத்திற்கான தொடுப்புகளில், "Profile" என்பதை அழுத்துங்கள்(click).

அதனை அழுத்தியதும் உங்களுக்கான, உங்களைப்பற்றிய தரவுகள் அடங்கிய பகுதி திறக்கப்படும். அதன்

மேற்பகுதியில் பின்வரும் பிரிவுகள் இருக்கும்:

Public - Home - Registering - Profile - Buddylist - Private Messaging

4. மேற்கண்ட பிரிவுகளில் "Profile" என்பதை அழுத்துங்கள்(click).

அதனை அழுத்தியதும் அதன் கீழே உபபிரிவுகளை உள்ளடக்கிய இன்னொரு பகுதி திறக்கும்.

Public : Preferences : Signature : Avatar : Admin

5. மேற்கண்ட உபபிரிவுகளில் "Preferences" என்பதை அழுத்துங்கள்(click).

அதனை அழுத்தியதும் பல தரவுகளுடன் கூடிய ஒரு பகுதி திறக்கும்.

6. அதன்படி, மேலிருந்து கீழாக 15 ஆவது தரவாக "Board Style" என்ற ஒன்று உள்ளது.

அதன் வலது புறத்தில் நீங்கள் உங்களுக்கு இலகுவான எழுத்துரு முறையில் கருத்துக்களத்தில் எழுதுவதற்கான

வடிவமைப்புகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

-வடிவமைப்புகள்:

*bamini2unicode: நீங்கள் "பாமினி" தட்டச்சு எழுத்துரு முறையில் எழுதிப் பழக்கப்பட்டவராக இருப்பின்,

அதேநேரம் சுரதா யாழ்வாணன் அவர்களின் பாமுனி செயலி(Keyman Software + bamuni.kmx)

இல்லாதவராக இருப்பின், அல்லது பயன்படுத்தாதவராக இருப்பின் இந்த முறையைத் தெரிவு செய்க.

இதன் மூலம், நீங்கள் கருத்துக்களத்தில் கருத்து எழுதும்போது (new topic, post reply)

மேலே ஒரு பெரிய பெட்டியும், கீழே ஒரு சின்னப் பெட்டியும் இருக்கும். கீழுள்ள சின்னப் பெட்டியில் நீங்கள்

பாமினி தட்டச்சு முறையில் எழுதினால் அது தானாக மேலுள்ள பெட்டியில் யூனிக்கோட் முறையில் மாற்றும்.

*converter: இதனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் கருத்தெழுதும் பொழுது மேலும் கீழுமென இரண்டு

பெட்டிகள் இருக்கும். இவ்விரண்டிற்குமிடையே மாற்றத்திற்குரிய எழுத்துரு முறைகளின் பெயர்கள் இருக்கும். மேலே

உள்ள பெட்டியில் நீங்கள் எந்த முறையைப் பயன்படுத்தியும் எழுதிவிட்டு அதன் கீழே எந்த எழுத்துரு

முறையென்பதை அழுத்தினீர்களாயின், தானாக கீழே உள்ள பெட்டியில் நீங்கள் எழுதியதை யூனிக்கோட் முறையில்

காண்பிக்கும். இந்த வடிவமைப்பில் இன்னொரு சாத்தியம் என்னவென்றால், நீங்கள் வலையூடகத்தில் உள்ள எந்த

ஒரு தமிழ்ப் பக்கத்தில் இருந்தும் நல்ல தகவல்களை பிரதியெடுத்து, கருத்துக்களத்தில் யூனிக்கோட் முறையில்

உருமாற்றி இணைக்க முடியும்.

*english2unicode: நீங்கள் இதுவரை எந்தவொரு தமிழ் எழுத்துருமுறையும் பயன்படுத்தவில்லையா?

e-kalappai, Bamuni போன்ற செயலிகளின் மூலம் தமிழ் எழுதும் பழக்கம் இல்லையா? கவலை வேண்டாம்.

இந்த வடிவமைப்பைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், கருத்தெழுதும் பொழுது மேலே பெரிய பெட்டியும், கீழே சிறிய

பெட்டியும் இருக்கும். கீழே உள்ள சிறிய பெட்டியில் ஆங்கிலத்தில் தமிழை (உதாரணம்:ammaa) என்று

எழுதினால் மேலே உள்ள பெட்டியில் தானாகவே யூனிக்கோட் முறையில் மாறும்.

*fisubsilver : FI Subsilver Shadow : உங்களிடம் சுரதா யாழ்வாணன் அவர்களின் பாமுனி செயலி

(Keyman Software + bamuni.kmx) இருக்கிறதா. அப்படியென்றால் இந்த இரண்டு வடிவமைப்புகளில்

ஏதாவதொன்றைத் தெரிவு செய்வதன் மூலம், நேரடியாகவே பாமுனி செயலியின் மூலம் யூனிக்கோட் முறையில்

எழுத முடியும்.

*tscii2unicode: நீங்கள் இதுவரை tscii முறையில் எழுதிப் பழக்கப்பட்டவரா. பரவாயில்லை! இந்த

வடிவமைப்பத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் கருத்து எழுதும் மேலே பெரிய பெட்டியும், கீழே சிறிய பெட்டியும்

இருக்கும். கீழே உள்ள சிறிய பெட்டியில் tscii முறையில் நீங்கள் எழுதினால், மேலே உள்ள பெட்டியில் அது

தானாகவே யூனிக்கோட் முறைக்கு மாறிவிடும்.

நேரடியாக சுரதா யாழ்வாணனின் "பாமுனி" செயலி பயன்படுத்தி எழுதாதவர்கள், அல்லது "bamini2unicode, english2unicode, tscii2unicode, converter" ஆகிய வடிவமைப்புகளைப் பயன்படுத்தி எழுதுபவர்கள் பின்வரும் படத்தினைக் கவனிக்க.

***சாதாரணமாக நீங்கள் Post Reply என்பதை அழுத்திவிட்டு கருத்து எழுதுதல்.

reply.gif

***Quick Reply இல் உடனடியாகக் கருத்து எழுதுதல்.

quick_reply.gif

பி.கு.: மேலே குறிப்பிட்டுள்ளது போன்று, கீழே இருக்கும் சிறிய பெட்டியில் எழுதிவிட்டு, பின்பு பெரிய பெட்டிக்குள்

சென்று மாற்றங்கள் செய்துவிட்டு மீண்டும் சிறிய பெட்டிக்குள் உங்கள் சுட்டியை அழுத்தினால் மீண்டும் பழைய

படியே வந்துவிடும். அதனால் கவனமாக இருக்கவும்!

-----------------------------------------------------------------------------------

நண்பர்களே,

மேலே எழுதப்பட்ட விளக்கம் கணணியில் திறமையுள்ளவர்கள், அதிகம் ஈடுபடாதவர்கள் என்று அனைத்துத்

தரப்பினர்க்கும் ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளது. சிலவேளைகளில் சிலருக்கு இது அளவுக்கதிகமான எழுத்தாகவும்,

சிலருக்கு விளக்கம் போதாததாகவும் இருக்கலாம். எனவே மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் இங்கெழுதுக,

இல்லையெனில் தனிப்பட்ட செய்திச்சேவையின் மூலம் தொடர்புகொள்க.

நன்றி

  • 3 years later...

கள உறவுகளிற்கு வணக்கம்,

மேலே இணைக்கப்பட்டுள்ள தமிழில் எழுதுவதற்கான உதவி குறிப்புக்கள் பழைய களங்களுக்கு உரியவை. தற்போதைய புதிய களத்தில் தமிழில் எழுதுவதற்கான வழிமுறைகளை மோகன் அண்ணா தன்னுடைய யாழ் வலைப்பதிவில் (புளொக்) இணைத்துள்ளார். ஆனால் இன்னும் பல புதிய உறுப்பினர்கள் தமிழில் எழுத முடியாமையால் களத்தில் ஆங்கிலத்தில் எழுதுவதையும் காண கூடியதாக உள்ளது. அதனால் மோகன் அண்ணாவின் தமிழில் எழுதுவதற்கான வழிமுறைகள் அனைவரையும் சென்றடையும் வண்ணம் இங்கு மீள இணைத்துள்ளேன். இதனை வாசித்தறிந்து புதிய கள உறுப்பினர்கள் களத்தில் ஆங்கில மொழியினை தவிர்த்து தமிழில் எழுதுமாறு தயவுடன் கேட்டு கொள்கின்றேன். இந்த உதவிகுறிப்புக்களை படித்த பின்பு தமிழில் எழுதுவதில் உங்களுக்கு சிரமம் ஏதும் இருந்தால்/உதவி தேவைப்பட்டால் தயங்காமல் தனிமடல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

இனிவரும் காலங்களில் மீண்டும் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதப்படும் கருத்துக்கள் நீக்கலாம் என எண்ணியுள்ளோம்.

கள உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்பிற்கு நன்றி.

நட்புடன்

மதன்

களத்தில் தமிழில் எழுதுவதற்கான வழிமுறைகள்

தமிழில் இலகுவாக எழுதுவதற்கு இங்கே இரண்டு வழிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளது.

converter.gif

பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்கள் களத்தின் இறுதிப்பகுதியில் மேலே காண்பிக்கப்பட்டது போன்று மாற்றிக் கொள்வதற்கான வசதி உண்டு. அங்க நீங்கள் Bamini type என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதிக் கொள்ளவே அல்லது ஏற்கனவே எழுதப்பட்ட விடயத்தினை யுனிக்கோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ளவோ முடியும்.

convert_bamini.gif

ஆங்கில உச்சரிப்பு முறைப்படி எழுதுபவர்கள் English type என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் எழுதுவதை யுனிக்கோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ள முடியும். உதாரணமாக ammaa அல்லது ammA என்று எழுதும்போது "அம்மா" என்று மாறிக்கொள்ளும்.

convert_english.gif

இவற்றினைத் தவிர பல்வேறுவகையான சிறு programs வகைகளையும் தமிழில் எழுதுவதற்காகப் பாவித்துக் கொள்ள முடியும். உதாரணமாக சுரதாவின் பாமுனி: http://www.yarl.com/downloads/vanni.zip

மேலும் மேலே குறிப்பிட்ட வகை எழுத்துரு அமைப்பினைத் தவிர வேறு எழுத்துரு அமைப்புக்களில் இருந்து யுனிகோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ள சுரதாவின் தளத்தில் உள்ள பொங்குதமிழ் எனும் convert இனைப் பாவிக்கலாம். http://www.suratha.com/reader.htm

Flash animation வடிவில்:

http://www.yarl.com/help/forum/changeing_s...eing_style.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.