Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!''

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!''

உருத்திரகுமாரன் உருக்கம்

சமஸ்

விசுவநாதன் உருத்திரகுமாரன். நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர். இவர் மீதும் விமர்சனங்கள் உண்டு. ஆனால், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில், எஞ்சி இருக்கும் நம்பிக்கையாக இவரைத்தான் இலங்கைத் தமிழர்கள் பார்க்கிறார்கள். இலங்கை அரசு எப்படியாவது இவரைக் கைது செய்து, நாடு கடந்த தமிழீழ அரசமைப்பை முடக்கிவிடத் துடிக்கிறது. ஆனால், அமெரிக்கக் குடியுரிமை பெற்ற வழக்கறிஞரான உருத்திரகுமாரன், சட்ட ரீதியிலான காய் நகர்த்தல்களில் கில்லாடி. நியூயார்க்கில் இருந்தபடியே தன்னுடைய அமைப்பை இயக்குகிறார்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் இரண்டாம் ஆண்டு நிறைவு, இலங்கை இறுதிப் போர் தொடர்பான ஐ.நா சபையின் அறிக்கை, உலகிலேயே இனப் படுகொலைகள் அதிகம் நடந்த சூடானில் இப்போது நடந்திருக்கும் பிரிவினை ஆகியவற்றின் பின்னணியில் உருத்திரகுமாரன், ஆனந்த விகடனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது.

''முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய இந்த இரு ஆண்டுகளில் தமிழினம் கற்றுக்கொண்டு இருப்பது என்ன? கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?''

''முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய கடந்த இரு ஆண்டு களில், அனைத்துலக அரசுகளின் நலன்களையும் தமிழர் நலன்களையும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கவைக்க வேண்டிய அவசியத்தை நாம் மேலும் உணர்ந்து இருக்கிறோம். சுயநலன்களின் அடிப்படையில், தமது புவிசார் அரசியல் தளத்தில் இயங்கும் உலக அரசுகளிடம், நீதியையும் நியாயத்தையும் அறத்தின் அடிப்படையில் மட்டுமே எதிர்பார்க்க முடியாது என்பது யதார்த்தம். இந்த நிலையில், நாடு கடந்த சமூகமாக வாழும் தமிழர்களாகிய நாம், கீழிருந்து மேல் எழும் சக்தியாக மிளிர்ந்து, நீதியின்பால் பற்றுகொண்ட உலக மக்கள் சமூகத்தின் உதவியுடன் நமது விடுதலையை வென்றெடுக்கும் வாய்ப்பு களை மேலும் துல்லியமாகக் கண்டறிந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம்!''

''இறுதிப் போர் தொடர்பான ஐ.நா குழுவின் அறிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?''

''இந்த அறிக்கை அனைத்துலகச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும். கொடூரமான முறையில் நடத்தப் பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக மட்ட விசாரணைதேவை என்ற குரலை மேலும் வலுவடையச் செய்யும். நீதியை மதிக்கக்கூடிய உலகச் சமூகத்தின் மத்தியில், களங்கப்பட்ட அரசாக சிறீலங்கா அரசு கூனிக் குறுகும் நிலையைத் தோற்றுவிக்கும். இலங்கைத் தீவில் இன்னும் ஒரு முறை இனப் படுகொலை நடக்காமல் இருப்ப தற்கான மாற்று வழி கருத்துப் பரி மாற்றத்தை சர்வதேச சமுதாயத்தில் ஏற்படுத்தும். தென் சூடான்,கொசாவோ, கிழக்கு திமோர் ஆகிய நாடுகள் தொடர்பாக எடுத்திருக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையில், இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு சுதந்திரத் தனி நாடே அவசியம் என்ற முடிவை சர்வதேச சமுதாயம் எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

அதே சமயம், இந்த அறிக்கை ஒரு வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வியையும் வெளிப்படுத்துவதாகக் கருதுகிறோம். இது ஐ.நா சபையின் மறுசீரமைப்பு குறித்த விவாதங்களைத் தோற்றுவிக்கலாம். இத்தகைய மறுசீரமைப்பு, ஐ.நா சபையை நீதியின் ஆலயமாக மாற்ற வேண்டுமே தவிர, அதிகார அரசியலின் பலிபீடமாகத் தொடர வழி செய்யக் கூடாது!

போரின் இறுதிக் காலகட்ட இன அழிப்பின்போது கொல்லப்பட்ட 80,000-க்கும் மேற்பட்ட நமது மக்களுக்கு நீதி கிடைக்கும் நாள் விரைவில் வந்தடைய வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்!''

''தமிழ் மக்களை மனிதக் கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?''

''ஈழத் தமிழ் மக்களை ஆக்கிரமிப்புக்கும், படுகொலைகளுக்கும், பாலியல் கொடுமைகளுக்கும், கொடூரமான வாழ்க்கைச் சூழலுக்கும் உள்ளாக்கியது யார் என்பதை நமது மக்கள் நன்கு அறிவார்கள். அனைத்துலக விசாரணைகள் இதனை உறுதிப்படுத்தும்!''

''இறுதிப் போரின்போது தமிழகத்தில் வைகோ, நெடுமாறன் போன்றோரின் தவறான வழிநடத்தலால் தான், புலிகள் தலைமையைக் காப்பாற்ற முடியாமல் போனதாகச் சொல்லப்படுவதுபற்றி..?''

''தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் தேசியத் தலைமையின் மீதும் நெடுமாறன் ஐயா மற்றும் வைகோ அண்ணனுக்கு இருக் கும் விசுவாசம் குறித்து நாம் அப்பழுக்கற்ற நம்பிக்கை கொண்டு இருக்கிறோம்!''

''இப்போதைய சூழலில் தமிழகத் தமிழர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?''

''ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்னைக்கு, தமிழீழத் தனியரசே தீர்வாக அமைய முடியும். இதை வலியுறுத்தியும், தமிழீழத் தனிஅரசை அங்கீகரித்தும், தமிழகத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றச் செய்ய வேண்டும்.

சிறீலங்கா அரசின் போர்க் குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய அரசை வலியுறுத்தும் வகையில், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றச் செய்ய வேண்டும்.

சுதந்திரத் தமிழீழ அரசை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக மக்களின் சார்பில், இந்திய அரசிடம் முன்வைத்து அதை வென்றெடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துஉள்ள ஈழத் தமிழ் மக்களின் கௌரவமான, பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்தப்படுவதுடன், இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ள திபெத் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும், ஈழத் தமிழ் மக்களுக்கும் வழங்கப் படுவதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்தி, இந்தியச் சிறைக் கூடங்களிலும் சிறப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் தமிழர்களை மனிதாபி மான அடிப்படையில் விடுவிக்க, மாநில, மத்திய அரசுகளைத் தூண்ட வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்டு உள்ள ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கை மீளக் கட்டியெழுப்பத் தேவையான உதவிகள், நம் மக்களை நேரடியாகச் சென்று அடைவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசின் ஊடாகவும், மற்றும் ஏனைய அனைத்துலக நிறுவனங்கள் ஊடாகவும் முன்னெடுக்க வேண்டும்.

இவையே எமது எதிர்பார்ப்புகள்!''

''பிரபாகரன் - பொட்டு அம்மான் உயிருடன் இருக்கின்றனரா?''

p22.jpgp20.jpg

- அடுத்த இதழில்...

thanks-vikatan.com

p22.jpg

  • கருத்துக்கள உறவுகள்

''

''பிரபாகரன் - பொட்டு அம்மான் உயிருடன் இருக்கின்றனரா?''

அடுத்த இதழ் அமோக விற்பனைக்காக விகடனின் இந்த தொடரும் உத்தி

Edited by putthan

உருத்திரகுமாரன், சட்ட ரீதியிலான காய் நகர்த்தல்களில் கில்லாடி. நியூயார்க்கில் இருந்தபடியே தன்னுடைய அமைப்பை இயக்குகிறார்.

Wheelchair_sign_spins.gif

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசப்பிரதமர் உருத்திரகுமாரின் பேச்சை நாமே... மதிக்கப் பழக வேண்டும்.....

எம்மை, நாமே... மதிக்காவிடில் உலகம் காறித்துப்பும்..

நாடு கடந்த அரசப்பிரதமர் உருத்திரகுமாரின் பேச்சை நாமே... மதிக்கப் பழக வேண்டும்.....

எம்மை, நாமே... மதிக்காவிடில் உலகம் காறித்துப்பும்..

மதிக்கத்தக்க வகையில் செயற்பாடு இருந்தா மதிக்கலாம்.

Edited by aathirai

  • கருத்துக்கள உறவுகள்

மதிக்கத்தக்க வகையில் செயற்பாடு இருந்தா மதிக்கலாம்.

இப்ப, அவரிலை குறை கண்டு பிடிக்க வேணுமெண்டே... அலையுறது நியாயமா?

ஆக்களை பாத்தாலே... தெரியுது... எந்தக் கூட்டத்திலை இருந்து வந்தவை எண்டு......

ஒரு கூட்டத்தின், ஒரு முகமூடித்தலைவனை எல்லாத்தமிழரும் எற்பார்கள் என்று எண்ணுவதும் அறியாமையே

Edited by aathirai

நாடு கடந்த அரசப்பிரதமர் உருத்திரகுமாரின் பேச்சை நாமே... மதிக்கப் பழக வேண்டும்.....

எம்மை, நாமே... மதிக்காவிடில் உலகம் காறித்துப்பும்..

... சிறி, இந்த நா.க.த.அ என்ற அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தே வந்தவுடன் ஆதரவளித்து, இதற்கு பலவழிகளில் உதவிய பலர் இன்று முகம் சுழிக்கின்றனர் .... காரணம் இதனை உடைத்தெறியவோ அல்லது சிங்களத்துக்கு விலை போயோ அல்ல!!! ... இவர்கள் எமக்குள் மோதுறுவதற்கு நடுத்த்ருவில் இறங்கினார்களே ஒழிய, எம் மக்கள், அவர்களின் இன்றைய பிரட்சனை என்பதில் எள்ளளவு சிந்தனையும் அற்றே இருக்கிறார்கள்!! ... சொல்லப்போனால் இலக்கு, நோக்கம், செயல், என்ற ஒரு மண்ணாங்கட்டியும் அற்றே இவர்கள் இருக்கிறார்கள்!!!

... அன்று அமிருக்கு இரத்தப் போட்டு இட்டு அனுப்பினார்கள் ... போனவர்கள் போனதுதான்!!! ... இவர்களும் அதே நிலையே!!!!!!!!!

... இதுவரை காலமும் அங்குள்ள போராளிகளின் தியாகங்களில் இவர்கள், பெயருக்கு ஓர் பதவியை அனுபவித்தார்களே ஒழிய ... அன்றும் இவர்கள் செய்தது ஒன்றும் இல்லை!!!

  • கருத்துக்கள உறவுகள்

... சிறி, இந்த நா.க.த.அ என்ற அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தே வந்தவுடன் ஆதரவளித்து, இதற்கு பலவழிகளில் உதவிய பலர் இன்று முகம் சுழிக்கின்றனர் .... காரணம் இதனை உடைத்தெறியவோ அல்லது சிங்களத்துக்கு விலை போயோ அல்ல!!! ... இவர்கள் எமக்குள் மோதுறுவதற்கு நடுத்த்ருவில் இறங்கினார்களே ஒழிய, எம் மக்கள், அவர்களின் இன்றைய பிரட்சனை என்பதில் எள்ளளவு சிந்தனையும் அற்றே இருக்கிறார்கள்!! ... சொல்லப்போனால் இலக்கு, நோக்கம், செயல், என்ற ஒரு மண்ணாங்கட்டியும் அற்றே இவர்கள் இருக்கிறார்கள்!!!

... அன்று அமிருக்கு இரத்தப் போட்டு இட்டு அனுப்பினார்கள் ... போனவர்கள் போனதுதான்!!! ... இவர்களும் அதே நிலையே!!!!!!!!!

... இதுவரை காலமும் அங்குள்ள போராளிகளின் தியாகங்களில் இவர்கள், பெயருக்கு ஓர் பதவியை அனுபவித்தார்களே ஒழிய ... அன்றும் இவர்கள் செய்தது ஒன்றும் இல்லை!!!

நெல்லையன்,

நாங்கள் நாடு கடந்த அரசின், ஒவ்வொரு நகர்வுகளையும் விவாதிப்பது அழகல்ல.

என்னவோ... உங்களது மேற்கூறிய கருத்துக்களை, சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் எடுப்பார்கள் என்று நம்புகின்றேன்.

நேற்று முந்தினம் ஒரு மூத்த பத்திரிகையாளர் கூறினார்,...

... இந்த நா.க.த.அ தொடங்கப்பட்ட நாளிலிருந்து வங்கி மூலம் மாதாமாதம் பணம் கொடுத்து வந்தேன், தற்போது நிறுத்தி விட்டேன். இவர்களின் உள் பிடுங்குப்பாடுகளுக்கு முடிபிற்கு கொண்டு வர இங்கு ஓர் சந்திப்பை ஏற்பாடு செய்தோம், ஆனால் இங்கு வந்தவர்கள் குறிப்பாக உருத்திரகுமாருடன் இன்றிருப்பவர்கள் ஒரு முடிபை தாம் எடுக்க பயப்படுகிறார்கள், அவர்களை சில பின்னணிகள் ஆட்டிப்படைக்கின்றன. உருத்திரகுமார் நல்ல மனிதர், ஆனால் அவர் ஒரு நல்ல இராஜதந்திரியோ அல்லது நல்ல அரிசியல்வாதியோ இல்லை!! இதனை புரிந்து கொண்டேன்!! அவரினதோ அல்லது அவருடன் இன்றிருப்பவர்களின் ஆளுமை, ஆற்றல் என்பன கேள்விக்குறியே! நாம் கனக்க எதிர்பார்க்கிறோம், ஆனால் அங்கோ செயற்படு தன்மை இல்லாமல் இருக்கிறது. இலக்கற்றிருக்கிறார்கள், நோக்கமற்று இருக்கிறார்கள்!!! ... தொடர்ந்தார் ...

... இந்த நேரம் இந்த நா.க.த்.அ என்று கூறும் எம் புலத்து பிரதிநிதிகள், ஓர் முடிபை எம்மினத்துக்காக எடுக்க வேண்டிய தருணம்!!! ... உங்களால் முடியாதுவிடில் ஒதுங்குங்கள்!!!

... இங்கிருந்து இயங்கும் ஓர் வானொலி ஊடகம் ... பகிரங்கமாக இந்த நா.க.த.அ இற்கு ஆதரவளித்தார்கள். உருத்திரகுமாரை தம் வானொலிக்கு அழைத்து வந்து கருத்தும் பகிர்ந்தார்கள். ... இன்று அவ்வானொலி நிர்வாகம், தாம் இவர்களிற்கு ஆதரவளித்து பிழையான முடிபை எடுத்து விட்டோம் என ஆதங்கப்படுகிறதாம்.

... இவை, எமக்கான ஒரு கட்டமைப்பு வேண்டாம் அல்லது உடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அல்ல ... இந்த நா.க.த.அ பிரதிநிதிகளின் ஆளுமை, ஆற்றல், செயல்,களில் இருந்த நம்பிக்கை போன காரணத்தால்தான்!!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=84940&st=0&p=657219&fromsearch=1&#entry657219

...

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.