Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. வணக்கம் வாத்தியார் . ........! இசையமைப்பாளர் : விஸ்வாதன் – ராமமூர்த்தி ஆண் : உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி ஆண் : தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலையென்றால் வெறும் சிலைதான் தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலையென்றால் வெறும் சிலைதான் உண்டென்றால் அது உண்டு இல்லையென்றால் அது இல்லை இல்லையென்றால் அது இல்லை ஆண் : தண்ணீர் தணல் போல் எரியும் செந்தணலும் நீர் போல் குளிரும் தண்ணீர் தணல் போல் எரியும் செந்தணலும் நீர் போல் குளிரும் நண்பனும் பகை போல் தெரியும் அது நாள்பட நாள்படப் புரியும் நண்பனும் பகை போல் தெரியும் அது நாள்பட நாள்படப் புரியும் நாள்பட நாள்படப் புரியும்.......! ...... உள்ளம் என்பது ஆமை .....
  2. என்னை அழைத்தது யாரடி கண்ணே ...........! 😍
  3. doSnpotesr6mif00l5073967lg1i75f43i05101ah7um3m iigfm1cfc6c47 · ஒருவரிடம் குதிரை ஒன்று இருந்தது. எழில் என்று அதற்குப் பெயரும் வைத்திருந்தார் அவர். அவருடைய நிலத்து வேலைகளுக்கு பெரிதும் உதவுவது எழிலே தான். ஒரு மாலை நேரத்தில், தன் வீட்டு வாசலில் உட்கார்ந் திருந்தார் அந்த விவசாயி. அவரைத் தேடிக் கொண்டு ஒருவர் வந்தார். வெகு தூரத்திலிருந்து வருகிறார் என்பதை அவருடைய கலைந்த தலையும், கசங்கிய ஆடைகளுமே உணர்த்தின. வந்தவர், வணக்கம் சொன்னார். விவசாயி, அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார். அவர் உட்கார்ந்ததும், சூடாக டீ குடிக்கி றீங்களா ? என்று கேட்டார். வந்தவர், அவசரமாக 'வேண்டாம்' என்று சொன்னார். சொல்லுங்க, என்ன விஷயம் ?' விவசாயி கேட்டார். ஒண்ணு மில்லை. நான் கோபி முல்லங் கரையிலிருந்து வர்றேன். இது எனக்குப் பழக்கமில்லாத பாதை. வழியில கன்ட்ரோல் பண்ண முடியாம, நான் வந்த கார் ஒரு பள்ளத்துல இறங்கிடுச்சு. அதை வெளியே எடுக்கணும். உங்ககிட்ட ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க. அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துடலாம் என்றும் சொன்னாங்க. அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம் என்று... ரொம்பப் பெரிய காரா ?' என்று கேட்டார் விவசாயி. இல்லை, இல்லை. சின்ன கார் தான்' என்றார் வந்தவர். விவசாயி கயிறு உட்பட சில உபகரணங் களை எடுத்துக் கொண்டார். குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்திய படியே அவருடன் சென்றார். விவசாயி, கார் விழுந்திருக்கும் பள்ளம், அதன் நிலை எல்லா வற்றையும் பொறுமையாகப் பார்த்தார். கார் சிறியதாகத் தான் இருந்தது. ஆனால், காரை வெளியே எடுக்கும் முயற்சியில், ஒரு வேளை அவருடைய குதிரைக்குக் காயம் ஏற்படலாம் என்றும் அவருக்குத் தோன்றியது. விவசாயி ஒரு கயிற்றை எடுத்து காரில் கட்டி, குதிரையோடு இழுப்பதற்குத் தோதாகவேப் பிணைத்தார். கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார். பிறகு, எங்கடா பழனி.. இழு பார்ப்போம் ! என்று சத்தமாகவேக் குரல் கொடுத்தார். குதிரை அசையாமல் அப்படியே நின்றிருந்தது. ஏண்டா கந்தா இழுடா ராஜா ! இன்னும் சத்தமாகவேச் சொன்னார் விவசாயி. குதிரை துளிகூட நகரவே இல்லை. டேய் முருகா... வேகமா இழு ! மறுபடியும் உரத்த குரலில் சொன்னார். மீண்டும் குதிரை ஒரு இஞ்ச் கூட நகரவேயில்லை. என் செல்லம்.. என் தங்கம்... எழிலூ.. நீயும் சேர்ந்தே இழுடா ! என்றார். அவ்வளவு தான் குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடமே, கார், பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது. வெளியூர்க் காரரோ, விவசாயிக்கு நன்றி சொன்னார். ஐயா, நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பேரால கூப்பிட்டீங்க ? அது தான் எனக்கு ஒண்ணுமே புரியலை. ஐயா, என் எழிலுக்கு ரெண்டு கண்ணுமே தெரியாது. தான் மட்டும் தான் இந்த கஷ்டமான வேலையைச் செய்யப் போறோம்ன்னு அது நினைச்சுடக் கூடாது இல்லியா ? அதான் அது கூட இன்னும் மூணு குதிரைகள் இருக்கிற மாதிரி நம்ப வெச்சேன். அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு. சரசரவென காரை வெளியே இழுத்துடுச்சு ! அன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு நாம் காசு பணம் எதுவும் செலவழிக்க வேண்டிய தில்லை. ஆனால், அவை சம்பாதித்துக் கொடுப் பவையோ மிக ஏராளம், இதையே பிரெஞ்ச் கணித வியலாளரும், தத்துவ வியலாளருமான பிளெய்ஸ் பாஸ்கல் மிக (Blaise Pascal) அற்புதமாகச் சொல்லி யிருக்கிறார். வார்த்தைகளின் மகிமையோ அபாரமானது. அதனால் தான் நல்ல நல்ல சொற்களைப் பேச வாய்ப்பு இருக்கும் போது,.. கடுஞ் சொற்களை ஏன் பேச வேண்டும். இதையே கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்கிறார் வள்ளுவரும்... Voir la traduction.....!
  4. தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி......! 🙂
  5. tonSodpres19 fhàashi06gltf:9155f1l2t9 1L2el3cmg3 i5i926lmrt · பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!” அப்பா ஒருகணம் யோசித்தார். “மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார். “இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார். மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ… முனுசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார். “சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க முனுசாமினு யாரும் இல்ல…” போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… இதுதான் கோபமா…?’ “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார். ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ… முனுசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது. “சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல முனுசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…” போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… இதுதான் கோபமா…?’ “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார். “ஹலோ… முனுசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது. “ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…” போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார். “மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார். “ஹலோ… முனுசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது. “டேய்… அறிவு கெட்டவனே… நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…இல்ல வேற ஏதாவதத் திங்கறியா…? அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ… அப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்க… வைடா போனை…!” மகன் அப்பாவிடம் சொன்னான். “அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?” “இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார். ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்… … லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார். “ஹலோ… நான் முனுசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…😂" Voir la traduction.....!
  6. வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : இலக்கணம் மாறுதோ ஹோ ஹோ ஓ ஓஓ ஆண் : இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம் ஆண் : கல்லான முல்லை இன்றென்ன வாசம் காற்றான ராகம் ஏன் இந்த கானம் வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று மன்மதன் என்பவன் கண் திறந்தானோ பெண்மை தந்தானோ பெண் : என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன் உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன் என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன் உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன் பெண் : புரியாததாலே திரை போட்டு வைத்தேன் திரை போட்ட போதும் அணை போட்டதில்லை மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ விலக்கி வைப்பாயோ ஆண் : தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை தாலாட்டுப் பாட ஆதாரம் இல்லை தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும் பாடாமல் போனால் எது தெய்வமாகும் மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை உரைப்பது கீதை பெண் : மணி ஓசை என்ன இடி ஓசை என்ன எது வந்த போதும் நீ கேட்டதில்லை நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம் நிஜமாக வந்து எனை காக்கக் கண்டேன் நீ எது நான் எது ஏனிந்த சொந்தம் பூர்வ ஜென்ம பந்தம்......! ......இலக்கணம் மாறுதோ ......
  7. இலக்கணம் மாறுதோ ......! கமல் & சுமித்ரா ...... நிழல் நிஜமாகிறது ......! 😍
  8. கேட்க மிகவும் இனிமையாய் இருக்கின்றது .......... பாராட்டுகள் ........! 👍
  9. Sdreopontsfi30323mg5i9a:1g s1m72cac1 021689cr6l82 te00à 72L7 · ரு I.T மேனேஜர் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்தார். எமன் சொன்னான், "நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா?. நரகமா? எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீட்டு கணிணியிலும் வைரஸை புகுத்தி விட்டு விட்டாய். அதனால் நான் இதற்குமுன் செய்யாத ஒன்றை உனக்காக செய்யப்போகிறேன். உனக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை உன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன். " "நல்லது கடவுளே! ஆனால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?" " ஒகே! இரண்டின் வேறுபாட்டையும் நீ நேரில் பார்த்து முடிவாக உன் பதிலை சொல்!, வா என்னோடு, முதலில் நரகத்தை பார்ப்போம்! " "அப்படியே செய்வோம் எமதர்மராஜா! வாருங்கள் போகலாம்" நரகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் ஐடி மேனேஜர். இதுவா நரகம்?. தெளிவான நீரோடு, வெண்மையான பெரிய கடற்கரை, கண்ணை கவரும் இளம் நங்கைகள் சிரித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்க, இதமான சூரிய ஒளி. "ஆஹா! அருமை! " இதுதான் நரகம் என்றால், எனக்கு சொர்கத்தை பார்க்க அவகாசமில்லை. " என்று ஐடி மேனேஜர் சொன்னபோதும் "வா சொர்கத்தை பார்க்கலாம். " என சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார் எமன். அங்கே, நீல ஆகாயம், சிறு சிறு வெண் மேகங்கள், தேவதைகள் ஆடிப்பாடி களித்திருக்க. அருமை. ஆனால் மேனேஜருக்கு, நரகத்தை போல சொர்க்கம் அவரைக் கவரவில்லை. நீண்ட யோசனைக்குப்பின், "தர்மராஜா!, நான் நரகத்திற்கே போக ஆசைபடுகிறேன்" என்றார் ஐடி மேனேஜர். "உன் விருப்பம்", எமன். இரண்டு வாரங்களுக்குப் பின், ஐடி மேனேஜர் நிலையை சோதிக்க எமன் நரகத்திற்கு போனார். அங்கே, இருண்ட குகையில், கை, கால்கள் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு பெரிய தீ சுவாலைகளுக்கு நடுவே துடித்துக்கொண்டிருக்க, எம கிங்கரர்கள் ஐடி மேனேஜரை சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள். "எப்படி இருக்கே?" என்றான் எமன். ஐடி மேனேஜர் கடுமையான வேதனையோடு, ஈனமான குரலில், "முடியல. நான் அன்று பார்த்த அழகிய கடற்கரை, இளம் மங்கைகள் எல்லாம் எங்கே?" எமன் சொன்னான், "அட லூசு பய புள்ள, அது SCREEN SAVER டா !!!" 😂" All that glitters are not gold, How many of us are believing this >?? Voir la traduction.....!
  10. tposrondeSia22 g0i65002u43lsLmu7à1 ef5r6hc4m :75326902haa16 · 🚗" ஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். படுசுட்டி மட்டுமல்ல புத்திசாலியும் கூட.. சில காலம் கழித்து அவன் தானே ஒரு காரை வடிவமைத்தான்.. அதை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்.. அற்புதம் என்றார் மேலாளர்.. இது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை.. உடனே காரை உருவாக்குவோம் என்று அந்த கம்பெனி முதலாளியின் அனுமதியோடு காரை தயாரித்தனர்.. முதலாளிக்கு மிகுந்த சந்தோஷம்.. முதல்கார் கண்ணை கொள்ளை கொண்டது.. அனைவருக்கும் மகிழ்ச்சி.. காரை மார்க்கெட்டிங் பிரிவுக்கு எடுத்து செல்ல முற்படும் போது தான் தெரிந்தது.. காரின் உயரம் வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் அதிகம்.. ஆஹா.. இளைஞன் சோர்ந்தான்.. தன்னையே நொந்து கொண்டான்.. ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்தனர்.. வாயிலின் மேற்பகுதியை உடைத்துவிட்டு காரை வெளியே எடுத்துவிடலாம்.. பின்னர் சரிசெய்யலாம் என்றார் மேலாளர்.. காரை கஷ்டப்பட்டு இருக்கும் வாயில் வழியே எடுத்து செல்லலாம்.. மேற்பகுதியில் கீறல்கள் ஆகும்.. அதை பெயிண்டிங் மூலம் சரிசெய்யலாம் என்றார் பெயிண்டர்.. முதலாளிக்கு மனது ஒப்பவில்லை.. புது காரின் மீது கீறல்களை நினைக்கவே அவருக்கு முடியலை.. அனைவருக்கும் குழப்பம்.. முகத்தில் ஏமாற்றமும் வெறுமையும் .. இவ்வளவு அழகான புது வடிவமைப்புடன் உருவாக்கிய காரை வெளியே கொண்டு செல்ல முடியலையே.. இதை அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்த வயதான வாட்ச்மேன் தயங்கி தயங்கி முதலாளியிடம் "ஐயா.. நான் ஒன்று சொன்னால் கேட்பீர்களா? அனுமதி உண்டா?" என்றார்.. அனைவருக்கும் ஆச்சரியம்.. இந்த கிழவன் என்ன சொல்லப்போகிறான் என்று.. ம்..ம்..ம்.. சொல்லு.. சொல்லு.. வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் தான் கார் உயரம் அதிகம்.. காரின் நான்கு டயர்களின் காற்றை இறக்கி விட்டால் காரை சுலபமாக வெளியே எடுத்துவிடலாம்.. பின்பு காற்றை நிரப்பிக்கொள்ளலாம்.. அடடே.. எவ்வளவு சுலபமான வழி.. எந்த சேதமும் இன்றி.. வாழ்க்கை மிக சுலபமானது.. வாழ்வது ஒரு முறை.. அதை அனுபவியுங்கள்.. ஒரு இன்ச் உயரம் போலவே ஒரு இன்ச் ஈகோ & ஒரு இன்ச் கோபம் என எல்லாவற்றையும் டயரிலிருந்து காற்றை கழட்டி விடுவதைப்போல் கழட்டி எறியலாம் தானே.. Voir la traduction.....!
  11. சீர்காழியார் போலவும் இருக்கின்றது . ..... அவருக்கு பல கிளைகள் கிடையாது......அவர் ரோல்ராய்ஸ்,ரோலெக்ஸ் மாதிரி...... ரி . எம் . எஸ் சுக்கு எம் . ஜி.ஆர் ......சிவாஜி என்று பல கிளைகள் உண்டு.....அதனால் அவர் சீர்காழி போலவும் ட்ரை பண்ணியிருக்கலாம் . .......! 🙂 உங்களை வரவேற்பதில் இந்தத் தளம் பெருமையடைகிறது ......... நன்றி கவி ......! நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ .........! 😍 பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்.....!
  12. Top 10 Best Indian Players Run Outs In Cricket History Ever || Cricket Plus.....! 😂
  13. வீட்டையே ஆட்டையைபோடலாம் என்று போய் இப்ப வீடு கிடக்கட்டும் பின் கோடிக்குள்ள சாக்கடையை திறந்துவிடுகிற நாத்தத்தில வந்து நிக்குது . ........! 🙂
  14. நல்லாயிருக்கு ....... எது கெடாது என்பதையும் போட்டுவிடுங்கள் நல்லாயிருக்கும் ......! 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.