-
Posts
6121 -
Joined
-
Last visited
-
Days Won
68
Justin last won the day on August 7
Justin had the most liked content!
Profile Information
-
Location
USA
Recent Profile Visitors
11280 profile views
Justin's Achievements
-
வாலி, என்னப்பா சொல்கிறீர்கள்😂? "மருத்துவ தீயசக்தி" பில் கேட்சா? கொரனா தடுப்பூசி விரைவாக உருவாக பண உதவி செய்ததால் பில் கேட்ஸ் தீய சக்தியாகி விட்டரென்ற kool aid "ஐ நீங்களும் அப்படியே குடித்து விட்டீர்களா?
-
ஹன்ரர் பைடனுக்கு சீனியர் பைடன் மன்னிப்புக் கொடுக்க மாட்டார் என நம்புகிறேன். அவர் சிறை போகாமல் பாதுகாக்க பைடன் குடும்பத்திற்கு ஏனைய வழிகள் இருக்கின்றன. செனட்டர் மெனண்டெசுக்கு என்ன நடக்குமெனச் சொல்லக் கடினமாக இருக்கிறது. வன்முறைக் குற்றங்கள் அல்லாமல், ஊழல் மோசடிக் குற்றங்களால் தண்டனை பெற்ற அரசியல் பிரபலங்களுக்கு இரு கட்சிகளின் ஜனாதிபதிகளும் முன்னர் மன்னிப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால், மெனெண்டஸ் தன் குற்றங்களுக்கு மன வருத்தம் கூட தெரிவிக்காமல் சமாளிக்கும் ஆளாக இருப்பது, மன்னிப்புப் பெற உதவாது.
-
பகுதியளவில் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், யார் தீவிர இடதுசாரிகள் அமெரிக்காவில் பதவியில் இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தால் Bernie, AOC இனைத் தவிர வேறு யாரும் எனக்குத் தெரிய இல்லை. பேர்னியெல்லாம் நாட்டின் தலைமைக்கு வரமுடியாது என்று மக்கள் தீர்ப்பளித்த பின் மிதவாதிகளான பைடன், கமலா ஆட்சியில் தீவிரமாக இடது சார்பு இருக்கவில்லை. ஆனால், இனவாதம், கிறிஸ்தவ அடிப்படை வாதம் (நான் கிறிஸ்தவ தலிபான்கள் என்பேன்), வெள்ளையினத் தேசியவாதம் இவையெல்லாம் இணைந்த தீவிர வலதுசாரி அமைப்புகள், அமெரிக்காவைப் பொறுத்த வரை இடதுசாரிகளுக்கான பின்விளைவாக உருவாகவில்லை. "குடும்பங்களில் விளைவுகள்" என்பதன் மூலம் நீங்கள் ஒரு பால் திருமணம், இடைப்பாலினர் போன்ற விடயங்களைத் தொடுகிறீர்களென ஊகிக்கிறேன். பழைய காலத்தில் ஒதுக்கல் சட்ட பூர்வமாக இருந்த நிலை மாறி, சாதாரணமான ஏற்றுக் கொள்ளல், அத்தோடு தீவிர வலதுசாரிகளிடமிருந்து பாதுகாக்க சட்டப் பாதுகாப்பு என்பன உருவானது இயற்கையாகவே நிகழவேண்டிய ஒரு சமூக மாற்றம் என்று தான் நான் நினைக்கிறேன்.
-
ட்ரம்ப், புரின் லவ்வர்ஸ் மகிழ்ச்சிக் களிப்பில் இருக்கிறார்களெனத் தெரிகிறது😎. யாரோ இங்கே சுட்டியது போல போலந்து வீழந்தால், இவையள் அனேகமாக நான் முன்னரே ஒரு தடவை குறிப்பிட்டது போல Ramstein Airbase இற்கு ஷொப்பிங் பையோடு போனால் C-17 விமானத்தில் அத்திலாந்திக்கைத் தாண்டி வட அமெரிக்கா வந்து விடலாம். பிறகு இங்கால இருந்து "சீ..இதெல்லாம் ஒரு நாடோ?" என்று புதிதாக ஆரம்பிப்பினம் என நம்புகிறேன்😂. சீரியசாகப் பார்த்தால்: KFC க்கு வாக்குப் போட்ட கோழிகள் நிலை தான். ட்ரம்பும், வான்சும் அன்றாடம் போட்டுத் தாக்கிய இனக்குழுக்கள் பல்வேறு காரணங்கள் சொல்லி ஒன்று வாக்களிக்காமல் விட்டிருக்கிறார்கள், அல்லது டரம்புக்கே வாக்களித்திருக்கிறார்கள். உதாரணமாக, 20 வருடங்களாக முழு நீலமாக இருந்த என் மாநிலம் (கமலா வென்றாலும்) பெருவாரியாக ட்ரம்புக்கு வாக்களித்திருக்கிறது. வாக்களித்தது யார் என்று பார்த்தால் ஸ்பானிய அடி அமெரிக்கக் குடிகள். அனேகமாக, மெக்சிக்கரையும், ஏனைய ஸ்பானிய குடியேறிகளையும் ட்ரம்ப் அள்ளு கொள்ளையாக நாடுக் கடத்தும் போது இவையள் மகிழ்வினம் என நம்புகிறேன். அதே போல, கறுப்பின மக்களில் ஆண்கள் கமலாவுக்கு அவ்வளவு வாக்களிக்கவில்லை. ஏன்? "பெண் எங்களை ஆள்வதா?" என்ற மேலாதிக்க மனநிலை. அத்தோடு "சட்ட விரோதக் குடியேறிகள் உங்கள் தொழில்களைப் பறிக்கீனம்" என்று ட்ரம்ப் சொல்ல நம்பி விட்டார்கள். பகிடி என்னவென்றால் இதை நம்பிய பலர் வேலை வாய்ப்புகள் இருந்தும் வேலைக்குப் போய் உழைக்காமல் தெருமுனையில் நின்று ஈயோட்டிய "குடி மக்கள்"😎. அடுத்த பகிடி: அரபு அமெரிக்கர்கள். "ட்ரம்ப் சமாதானம் தருவார்" என்று நம்பியதாக வெளியே சொல்லிக் கொண்டு தான் இவர்கள் ட்ரம்பை நோக்கிச் சாய்ந்தார்கள். ஆனால், இவர்களின் உண்மையான காரணம், பெண் வெறுப்பு வாதம், ஒரு பால் உறவு, இடைப்பாலினர் மீதான வெறுப்பு என்பதாக இருக்கிறது. மோடி வாலா இந்திய அமெரிக்கர்களும், பலஸ்தீன/அரபு அமெரிக்கர்களும் ட்ரம்போடு ஒரே கட்டிலில்: The strangest bedfellows! தென்னிந்திய/சிறிலங்கா வழி அமெரிக்கர்களின் இலக்கோ பங்கு மார்க்கெட்டில் இப்போது வருவதை விட இன்னும் இலாபம் வர வேண்டும், அதை வைத்துக் கொண்டு ஊர் சுற்றுலா, ரெஸ்லா, மான்ஷன் வீடு என்று ஜாலியாக இருக்க வேண்டும் என்பதாக எனக்குப் புரிகிறது. வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகள், மனைவி, தங்களுடைய மண்ணிறத் தோல் கொண்ட வம்சாவழியினருக்கு, தாம் இறந்த பிறகும் நீடித்திருக்கும் ஆப்பை உருவாக்கியிருக்கிறோம் என்பது புரியாமலே ட்ரம்பை ஆதரித்திருக்கிறார்கள்.
-
நீலன், சுமந்திரன் போன்றோர் அரசியலமைப்பை மாற்றச் செய்த முயற்சிகளில் தனிநாடாக உருவாவது உள்ளடக்கப் படவில்லை. ஆனால், ஒற்றையாட்சிக்குள் சில உரிமைகளைப் பெறும் அம்சங்கள் இருந்தன. தமிழ்நெற் ஆசிரியர் தமிழ் தேசியத்தின் ஆதர்சமான (ideal) விடயங்களை மட்டும் முன்வைத்துப் பேசுவது அதியசமோ, "அதிரடிச் செய்தியோ" அல்ல! ஆனால், ஆதர்சமான விடயங்கள், அப்படியே ஆதர்சமாக மட்டும் தான் இருக்கும். மணிக்கணக்காகப் பேசலாம், பந்தி பந்தியாக எழுதலாம். தாயகத்தில் ஒரு துரும்பையும் இந்த ஆதர்ச நிலைப்பாடுகள் அசைக்க உதவாது. எப்படி ஆதர்ச நிலைப்பாடுகளை தாயகத்தில் தமிழ் மக்கள் அனுபவிக்கக் கூடிய தொட்டுணரக் கூடிய (tangible) விடயங்களாக மாற்றுவது என ஒரு திரியை கோசான் ஆரம்பித்து, இறுதியில் பலருக்கு ஆர்வம் இல்லாமையால் அது அணைந்து போயிருக்கிறது. அந்தத் திரியிலே கூட தீவிர தமிழ் தேசியர்கள் சிலர் வந்து எழுதினார்கள், "இது கடைசியில் எங்கே போகுமென்று தெரியும், எனவே இதில் நாம் பேச ஒன்றுமில்லை" என. பாவனைப் பயனைப் பார்ப்பதை விட மேலாக, பகட்டைப் பார்த்து கார், வீடு, உடை, நகைகள் வாங்குவது போலவே, தீவிர தமிழ் தேசியர்களும் வெளியில் என்ன தோற்றமென்று பார்த்துத் தான் தீர்வை எடை போடுகிறார்கள். உள்ளடக்கம், நடைமுறை நன்மைகள் என்னவென்று யோசிப்பது குறைவு.
-
ஓணாண்டியாருக்கு என்ன ஆயிற்று😂? ஒரு விடயம் மேற்கிலும் கிழக்கிலும் பரவலாக நடக்கிறது என்பதற்காக அந்த முறை தான் "வழமை - convention" என்று வாதிடுகிறீர்கள் போல தெரிகிறது. ஜனநாயகத்தில் தலைமைத்துவம் என்பது இருவழிப்பாதை - மக்கள் தலைவர்களை மாற்ற வேண்டும், தலைவர்களும் மக்களை சில சமயங்களில் வழிக்குக் கொண்டு வர வேண்டும். மக்கள் "பெருவாரியாகக் கைதட்டுகிறார்கள்/லைக் போட்டு வரவேற்கிறார்கள்" என்பதற்காக ஒரு தலைவர் மூன்றாம் பிறை கமலஹாசன் போல குரங்கு வித்தை காட்டுவது தலைமைத்துவம் கிடையாது! இதற்குப் பெயர் ஜனத்திரள்வாதம் - populism. ஹிற்லர் போன்ற கொடிய மனிதர்கள் கூட கைக்கொண்ட நச்சுத் தனமான உத்தி. ஜனத்திரள்வாதம் இல்லாமல், மக்கள் முட்டாள் தனமாக நடந்து கொள்ளாமல் தலைவர்கள் இருக்க வேண்டுமென்றால், கொஞ்சம் கல்வியறிவு, உள்ளக நேர்மை, சரி பிழை எதுவென்று உணரக் கூடிய அறத்திசை காட்டி என்பன தலைவர்களிடம் இருக்க வேண்டும். இந்த அளவு கோல்களை வைத்துப் பார்க்கும் போது தமிழக மக்கள் தங்கள் அனேகமான பிரதிநிதிகளை இது வரை சரியாகத் தான் தேர்ந்திருக்கிறார்கள். ஜனத்திரள்வாதம் மூலம் வாக்குத் திரட்டும் சீமான் போன்றவர்ளுக்கான வாக்குகள் தான் நீங்கள் குறிப்பிடும் "சிந்தனையில்லாத" தமிழக வாக்காளர்களிடமிருந்து வருகின்றது என நான் நினைக்கிறேன். சரியா நான் சொல்வது?
-
நீங்கள் அவரை நோக்கி "தொப்பி பிரட்டி" என்று இஸ்லாமியரைக் குறிக்கும் வசைச் சொல் பாவிப்பதைக் கண்டிருக்கிறேன். "இங்கே நிற்கும் மூவரையும் உற்றுக் கவனித்தால் ஒரு ஒற்றுமை தெரியும் பாருங்கள்" என்று ஒரு இடத்தில் dog whistle விட்டிருந்ததையும் கவனித்திருந்தேன்😂! உங்கள் அளவுக்கு ஏழாம் அறிவு எனக்கு இல்லை! ஆனால், எப்படி அறிந்தீர்கள், எப்படி உறுதிப் படுத்திக் கொண்டீர்கள்? ஒரு பேச்சுக்கு உங்கள் ஊகம் உண்மையாக இருந்தால் கூட, கருத்துகளுக்குப் பதில் எழுதாமல் அவர் சார்ந்த மதக் குழுவைக் குறி வைத்து வசவுகளை எறிவதும் விதி மீறல் அல்லவா?
-
இது நிகழ சாத்தியமில்லை என நினைக்கிறேன். நாசா ரொக்கற் விட்ட விபரத்தையே "யூ ரியூபர் வந்து சொன்னால் தான் நம்புவேன்" என்று இருக்கும் தமிழ் புலம்பெயர் விசிறிகள் இருக்கும் போது எப்படி இந்த வியாபாரம் படுக்கும்? (நாசா உதாரணம், ஏனெனில் நாசா பல ஆண்டுகளாகவே தன் செயல்பாடுகளை தனியாக இணையத் தளம் வைத்து பொது மக்களுக்கு மிகவும் சிறப்பாக பிரபலப் படுத்தி வருகிறது. அதை அறியாமல் யூ ரீயுபர்களின் பொய்களை நம்பி "அமெரிக்கா சந்திரனில் இறங்கவில்லை" என்று நம்புவோர் எம்மிடையே இருக்கிறார்கள்)
-
இங்கே "கூட்டங்கள், குழுக்கள்" தான் அவதாராக யாழில் இருக்கிறார்களா? இது நான் அறியாத விடயம்😎. நான் நினைத்தேன், தனி நபர்கள் தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள், எனவே அந்த தனி நபர் நோக்கி நீங்கள் செய்வது போன்ற வசவுகளை வீசும் போது அது தனி நபர் தாக்குதலாக இருக்கிறதென. இன்னொரு கேள்வி, ஐலண்ட் எந்தக் "கூட்டம்" என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?
-
தான் கேட்டு வீதி திறக்கப் பட்டதாக சுமந்திரனே உரிமை கோரவில்லை இன்னும். ஆனாலும், "சுமந்திரன் லவ்வர்ஸ்"😎 இப்பவே உறுத்தலில் கதையெழுத ஆரம்பித்து விட்டார்கள். இந்த வீதியில் இருந்து ஒரு மைல் தொலைவில் கஜேந்திரன் பற்றைக்குள் பாய் போட்டு படுத்து போராடியிருந்தால், இப்போது வீதி திறக்கப் படும் போது அந்தப் படங்களையெல்லாம் போட்டு புலவர் போன்றோர் இங்கே பிரச்சாரம் தொடங்கியிருப்பர் இப்போது! இப்பவோ #தொண்டையில முள்ளு😂
-
மெய்யழகன்: அரவிந்த்சாமி - கார்த்தி கூட்டணியில் இன்னொரு ‘அன்பே சிவம்’?
Justin replied to ஏராளன்'s topic in வண்ணத் திரை
தியேட்டரில் பார்க்காமல், நெட்fபிலிக்ஸில் பார்த்தேன். தியேட்டரில் ஓடிய வடிவத்தில் இருந்து ஒரு "பெரிய துண்டை" அப்படியே வெட்டியெடுத்திருக்கிறார்கள் போல நெட்fபிலிக்ஸில். படம் ஒரு கட்டத்திற்குப் பின்னர், வடகொரியா விட்ட ஏவுகணை போல சடாரென்று முடிந்து விடுகிறது😂. "மட்பாண்டத்தில் பியர்" என்று சுவாரசியத்தோடு பார்த்தால் ஒரு கட்டத்தில் கமெராக் கோணம் பாத்திரத்தில் மேலேயிருந்து பார்க்கும் போது குவளையில் பளீரேன்று வெண்மையான பால் தெரிகிறது. என்றாலும் அமேசனில் பியர் குடிக்கும் மண்குவளை கிடைக்குமா எனத் தேடுகிறேன். -
இந்த சுவரொட்டிச் செலவு பற்றி நிலாந்தனும் பொது வேட்பாளர் காலத்தில் பேசியிருந்தார். அரசியல் கட்சிகளுக்கு தொண்டர்கள் இல்லாமல் இருப்பதும் ஒரு வகையில் நல்லது தான். அரசியல் வாதிகள் தங்கள் கஜானாவில் கையை விட்டு காசெடுத்து கூலி கொடுத்து வேலை வாய்ப்புகளைக் கூட்டட்டும்😂. ஆனால், நான் அறிந்த வரையில் தங்கள் சொந்தக் காசை தமிழ் வேட்பாளர்கள் செலவு செய்யாமல், நன்கொடைகளைத் தான் பாவிக்கிறார்கள். சுயேட்சையாக நிற்கும் அர்ச்சுனா குழுவுக்கு பல கோடிகள் ஐரோப்பிய நாட்டுத் தமிழர்களிடமிருந்து கிடைத்திருப்பதாக ஒரு தகவல் அறிந்தேன். உண்மை பொய் தெரியவில்லை. கடந்த 2020 பொதுத் தேர்தல் காலத்தில், விக்கி குழுவும், கஜேந்திர குமார் குழுவும் இங்கே காசு சேர்த்தார்கள் என்றும் தெரியும்!
-
ஶ்ரீதரனும், சுமந்திரனும் தோற்க வேண்டும் | K.V. Thavarasa |
Justin replied to புலவர்'s topic in ஊர்ப் புதினம்
இந்தக் காணொலியை ஒருக்கா இணைத்து விடுங்கோ! நான் "படம் பார்" ரீமின் கொப்பி பேஸ்ட்டை மட்டும் தான் பார்த்தேன். உங்களிடம் அதிக தகவல்கள் இருக்கும் போல தெரியுது!