Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  1. இவர்களுக்கு... வயது போய் விட்டது என்பதால், பக்தைகளின் பாதுகாப்புக்கு, "கியாரண்டி" கொடுக்கலாம். 🤣
  2. சுவியர், குமாரசாமி அண்ணைக்கு.. கொழும்பில் நிறைய, நிழல் உலக தாதாக்களை தெரியும். ஆதலால்... அவர் அடி வாங்க சந்தர்ப்பமே இல்லை. 😂
  3. மூன்றாம் இடத்தைப் பிடித்த முஸ்லீம் பெண் யூசூப் சபீனாவுக்கு வாழ்த்துகள். இவர் மொட்டாக்கு போடவில்லை என்று, இலங்கை தலிபான்கள் கதறப் போகிறார்கள். 😁
  4. ஓ…. அப்ப நல்லதாய் போச்சு குமாரசாமி அண்ணை. அப்பிடியே அந்த ரீச்சர்மாரின், கணவர்களை நேரில் சந்தித்து… நாலு ஆறுதல் வார்த்தை சொல்லி விட்டு வாங்கோ. 🤣
  5. காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம். தமிழகத்தை உலகளாவிய காலணி உற்பத்தியின் மிக முக்கிய மையமாக மாற்றும் நோக்கில், இத்தாலி பல்கலைக்கழகத்துடன் கோத்தாரி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. காலணி உற்பத்தியில் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இத்தாலியின் புகழ்பெற்ற ‘இத்தாலியன் யுனிவர்சிட்டி ஆஃப் ஆர்ட் அண்ட் டிசைன்’ பல்கலைக்கழகத்துடன், கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் ஜின்னா ரஃபீக் அகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா இடையே கையெழுத்தாகியுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாகும். இதன்மூலம் தோல் அல்லாத காலணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 17 சதவீத வரி தற்போது பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளதால், ஏற்றுமதி வளர்ச்சி அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, கடந்த 6 மாதங்களில் அமெரிக்க வரி விதிப்புக்கு பின் இந்தியாவுக்கு வரவேண்டிய ஏராளமான முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இந்தோனேஷியாவுக்கு சென்றுவிட்டன. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தால் மீண்டும் பிரபல நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன. தற்போது கோத்தாரி நிறுவனம் பெரம்பலூரில் ‘கிராக்ஸ்’ பிராண்டு காலணிகளை தயாரித்து வரும் நிலையில், கரூரில் ‘அடிடாஸ்’ பிராண்டுக்கான பிரம்மாண்ட உற்பத்தி ஆலையை கட்டி வருகிறது. மேலும், கோவையைச் சேர்ந்த ‘ஜோடிஸ்’ மற்றும் ‘சீட்லோ’ பிராண்டுகளை கையகப்படுத்தியுள்ள கோத்தாரி நிறுவனம், அடுத்தகட்டமாக 70 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள சர்வதேச பிராண்டான ‘கிக்கர்ஸ்’ நிறுவனத்தையும் கையகப்படுத்தவுள்ளது.ஒரு இந்திய நிறுவனம் சர்வதேச பிராண்டின் உரிமையை மட்டும் பெறாமல், அந்த நிறுவனத்தையே உரிமையாளராக முழுமையாக கையகப்படுத்துவது இதுவே முதல் முறை. மேலும், காலணி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை தயாரிப்பதற்காக உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து பெரம்பலூரில் ஒரு பிரத்யேக மூலப்பொருள் பூங்காவும் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் சில்லறை வர்த்தகத்தில் உள்ள 2,500 விற்பனை நிலையங்களை 6 ஆயிரமாகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இப்பணிகளின் மூலம், அடுத்த 2 ஆண்டுகளில் தமிழகம் உலக அளவில் காலணி உற்பத்திக்கான பெரிய இடமாக மாறியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் கோத்தாரி நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்.முத்துமோகன் உடனிருந்தார். https://athavannews.com/2026/1462271
  6. கியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் எந்தவொரு நாட்டிற்கும் வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை! கியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (29) அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதன் மூலம் கம்யூனிஸ்ட்களால் நடத்தப்படும் நாடுகளுக்கு எதிரான தனது அழுத்தப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார். தேசிய அவசரகால பிரகடனத்தின் கீழ் நிர்வாக உத்தரவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, எந்தவொரு கட்டண விகிதங்களையும் குறிப்பிடவில்லை. இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க இராணுவம் பதவி நீக்கம் செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை ஒரு கொடிய தாக்குதலுடன் கைது செய்தது. இந்த துணிச்சலுடன் ட்ரம்ப், கியூபாவிற்கு எதிராக செயல்படுவது மற்றும் அதன் தலைமைக்கு அழுத்தம் கொடுப்பது குறித்து பலமுறை பேசியுள்ளார். கம்யூனிஸ்டுகளால் நடத்தப்படும் தீவு அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, கியூபா மீது ஒரு ஒப்பந்தத்தை கட்டாயப்படுத்த வொஷிங்டனுக்கு எந்த தார்மீக அதிகாரமும் இல்லை என்று கியூபாவின் ஜனாதிபதி இந்த மாதம் கூறினார். ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் வெளியுறவுக் கொள்கை கருவியாக வரி அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1462256
  7. பிரிட்டிஷ் குடிமக்களுக்கான விசா விதிகளை தளர்த்திய சீனா! இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், பிரிட்டிஷ் குடிமக்களுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் விதிகளை தளர்த்த சீனா ஒப்புக்கொண்டது. இது லண்டன் தனது சேவைத் துறையை விரிவுபடுத்த உதவும் என்று நம்பும் ஒரு கூட்டாண்மை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். பிரிட்டிஷ் குடிமக்கள் 30 நாட்களுக்குள் பயணம் செய்தால் விசா இல்லாமல் சீனாவிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஸ்டார்மர் கூறினார். இது வணிகத்திற்கு கிடைத்த வெற்றியாக அவர் வர்ணித்தார். விசா ஒப்பந்தம் எப்போது அமலுக்கு வரும் என்பதற்கான திகதி எதுவும் உறுதியாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் இது விரைவில் நடக்கும் என்று இங்கிலாந்து அரசாங்கம் நம்புகிறது. தேசிய புள்ளிவிவர அலுவலக தகவலின்படி, 2024 ஆம் ஆண்டில் சுமார் 620,000 பேர் சீனாவுக்குப் பயணம் செய்துள்ளதால், இலட்சக்கணக்கான பிரிட்டிஷ் மக்கள் இந்த மாற்றத்தால் பயனடையக்கூடும். இதேவேளை, பிரதமர் ஸ்டார்மரின் இந்தப் பயணத்தின் போது, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பெய்ஜிங்குடன் நெருக்கமான வர்த்தக உறவுகளை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதால், இங்கிலாந்து விஸ்கி மீதான இறக்குமதி வரிகளை 10% இலிருந்து 5% ஆகக் குறைப்பதற்கான ஒப்பந்தமும் ஏற்பட்டது. எவ்வாறெனினும், தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் மனித உரிமைகள் பதிவுக்கு ஆபத்து இருப்பதால், சீனாவுடன் இங்கிலாந்து மிகவும் எச்சரிக்கையான உறவைக் கொண்டிருக்க வேண்டும் என்று விமர்சகர்கள் வாதிட்டனர். https://athavannews.com/2026/1462249
  8. சமீபத்தில் கொழும்பின் ஒரு பிரபல பாடசாலையில் இடம்பெற்ற விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், வெறும் ஒரு செய்தியாக மட்டும் இதைப் பார்த்துவிட்டு கடந்து போய்விட முடியாது. ஒரு பாடசாலையின் 'தலைமை மாணவன்' மற்றும் 'ஆசிரியைகள்' சம்பந்தப்பட்ட இந்தச் சம்பவம், நம் நாட்டு கல்வித் துறையில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பாரிய ஒழுக்கச் சீரழிவின் 'Tip of the iceberg’ மட்டுமே. இப்படியான சம்பவங்கள் இன்று நேற்று நடப்பவை அல்ல. 90-களில் நாம் கல்வி கற்ற காலத்திலும் இவ்வாறான வக்கிரங்கள் அரங்கேறின. ஆனால், அவை பாடசாலை கௌரவம் என்ற பெயரில் மூடி மறைக்கப்பட்டன. ஆசிரியை - மாணவன் துஷ்பிரயோகம். ஆசிரியர் - மாணவி துஷ்பிரயோகம். ஆசிரியர் - மாணவன் துஷபிரயோகம். ஆசிரியை - மாணவி துஷபிரயோகம். பாடசாலை பணியாளர்களால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள். இவை அனைத்தும் இலங்கையின் ஏதோ ஒரு மூலையில் இப்போதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அரசாங்கமும் கல்வி அமைச்சும் இந்தச் சூழ்நிலையின் தீவிரத்தை இன்னும் முழுமையாக உணரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. பிரித்தானியா (UK) போன்ற நாடுகளில், ஒரு ஆசிரியர் மாணவருடன் பாலியல் ரீதியான தொடர்பை வைத்திருப்பது 'Abuse of Position of Trust' (வழங்கப்பட்ட அதிகாரத்தையும் நம்பிக்கையையும் தவறாகப் பயன்படுத்துதல்) என்ற சட்டத்தின் கீழ் பாரிய குற்றமாகக் கருதப்படுகிறது. அங்கு 'சம்மதத்தோடுதான் நடந்தது” என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்தப் பதவிக்கான பொறுப்பே முக்கியமானது. ஆனால் இலங்கையில், இவ்வாறான சம்பவங்களின் போது சட்டத்தின் ஓட்டைகள் குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுக்கின்றன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவது, அவர்கள் அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக வருவார்கள் என்ற நம்பிக்கையில்தான். ஆசிரியர்களைத் தங்களின் பிள்ளைகளுக்கு அடுத்த பெற்றோராகவே பார்க்கிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கையைச் சிதைத்து, பிள்ளைகளைத் தமது காமவலைக்குள் வீழ்த்தும் ஆசிரியர்கள், எதிர்காலச் சந்ததியையே அழிப்பவர்கள் ஆவர். இவர்கள் மீதான தண்டனை வெறுமனே பணியிட மாற்றமாகவோ அல்லது தற்காலிகப் பணிநீக்கமாகவோ இருக்கக் கூடாது. அவர்கள் மீண்டும் ஒருபோதும் ஆசிரியர் தொழிலைச் செய்ய முடியாதபடி கடுமையான சட்டங்கள் பாய வேண்டும். மக்களாகிய நாம் சில கோரிக்கைகளை முன் வைக்க விரும்புகிறோம். Position of Trust' என்பதைத் துஷ்பிரயோகம் செய்யும் ஆசிரியர்களுக்கு எதிராக விசேட கடுமையான சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். பாடசாலை நிர்வாகத்தின் தலையீடு இல்லாத, மாணவர்களும் பெற்றோரும் அச்சமின்றிப் புகார் அளிக்கக்கூடிய ஒரு மத்திய முறைப்பாட்டுப் பிரிவு (Reporting Unit) அவசரமாக உருவாக்கப்பட வேண்டும். ஆசிரியர்களின் கல்வித் தகுதியைத் தாண்டி, அவர்களின் மனநலம் மற்றும் ஒழுக்க நெறிகள் குறித்து தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் கற்கை நெறிகள் அவசியமாக அறிமுகப்படுத்த வேண்டும். நாலந்தா கல்லூரிச் சம்பவம் ஒரு எச்சரிக்கை மணி. கல்விக்கூடங்கள் காமக் கூடங்களாக மாறுவதை அனுமதிக்க முடியாது. அரசாங்கம் இனியாவது உறக்கத்திலிருந்து விழித்து, இந்த "நம்பிக்கை துரோகத்திற்கு" முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில், எதிர்காலச் சந்ததி எவரையும் நம்பத் துணியாத ஒரு சமூகமாக மாறிவிடும். Mukinthan Thurairajasingham
  9. சாதாரணமாக இப்படியான செய்திகளுக்கு... @விசுகு , @குமாரசாமி , @தனிக்காட்டு ராஜா போன்றவர்கள் பாய்ந்தடித்து வருகின்றவர்கள். இப்போ அவர்களுக்கு... வயது போய் விட்டது போலுள்ளது. கோயில், குளம் என்று... திரிகிறார்கள் என நினைக்கின்றேன். 😂 🤣
  10. தங்கத்தின் விலை $5,500 தாண்டியது; இலங்கையில் ஒரு பவுண் 420,000 ரூபா! புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் வியாழக்கிழமை (29) தங்கம் அதன் அனல் பறக்கும் விலை ஏற்றத்தை நீடித்தது. அதன்படி, வியாழக்கிழமை காலை ஆரம்ப வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 5,600 அமெரிக்க டொலர்கள் என்ற சாதனையை எட்டியது. அதே நேரத்தில் வெள்ளி 120 அமெரிக்க டொலர்களை தாண்டியது. திங்களன்று முதல் முறையாக தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலர்களை விஞ்சியது, மேலும் இந்த வாரம் இதுவரை 10% க்கும் அதிகமாக விலை உயர்ந்துள்ளது. வலுவான பாதுகாப்பான புகலிட தேவை, உறுதியான அமெரிக்க மத்திய வங்கி கொள்முதல் மற்றும் பலவீனமான டொலர் உள்ளிட்ட பல காரணிகளால் இந்த விலை ஏற்றத்துக்கு வழிவகுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2025 ஆம் ஆண்டில் 64% ஏற்றத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு தங்கம் 27% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இலங்கை நிலவரம்; கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (29) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 420,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 386,400 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1462139
  11. தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் உளவாளிகள் ஊடுருவல். தமிழரசுக் கட்சியின் இறுதிப் பொதுக்குழு கூட்டப்பட்ட போது சாணக்கியன் எம்.பி எமது கட்சியிலேயே இல்லை. தற்போது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவுக்குள் உள் நுழைக்கப்பட்டுள்ளார்கள் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் சுமந்திரன் ஆதரவாளர்கள் தான் அதிகம் உள்ளனர். அவர்களால் புகுத்தப்பட்டவர்கள் தான் அங்கே அதிகம் உள்ளனர். பதில் செயலாளராக இருந்தவர் அந்தப் பதவியில் இருந்ததால் அரசியல் குழுவில் உள்வாங்கப்பட்டார். அதேபோல் சாணக்கியன் எம்.பி எப்படி உள்வாங்கப்பட்டவர் என்று தெரியாமல் உள்வாங்கப்பட்டு விட்டார். உண்மையில் இறுதிப் பொதுக்குழு கூடிய போது சாணக்கியன் எமது கட்சியில் இல்லை. எப்படி அரசியல் குழுவில் உள்வாங்கப்பட்டார் என்பது எனக்கு தெரியது. அது மர்மமாகவே இருக்கிறது. இது உளவாளிகளின் ஊடுருவல். திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் உள் நுழைக்கப்பட்டுள்ளது. பதவி ஆசையில் ஒருவர். கேவலம் கெட்ட தேசியபபட்டியலில் ஒருவர். இன்னொரு ஆள் பெட்டி வாங்கி எல்லோரையும் உள்வாங்கி, எல்லோரும் உள்ளுக்கு வந்து இன்றைக்கு கட்சியை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு துணிவிருந்தால் இந்த மக்களுக்கு முன்னால் பொதுக்குழுவை கூட்டுங்கள். நீங்களே தலைவராக வர முடியுமாக இருந்தால் பரீட்சித்துப் பாருங்கள் எனத் தெரிவித்தார். https://athavannews.com/2026/1462091
  12. 2025 ஆம் ஆண்டில் 9 சிறுவர் திருமணங்கள், 79 பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவு! 2025 ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 10,455 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் (NCPA) பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவான முறைப்பாடுகளில் 545 பாலியல் துன்புறுத்தல் தொடர்பானவை, 231 கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை. இதேவேளை, கடந்த ஆண்டு 79 பதின்ம வயது கர்ப்பங்கள் மற்றும் மூன்று கருக்கலைப்புகளையும் அதிகார சபை பதிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் ஒன்பது சிறுவர் திருமணங்கள், 38 பாலியல் வன்கொடுமை வழக்குகள், சிறுவர்களை குறிவைத்து 150 சைபர் துஷ்பிரயோக சம்பவங்கள் மற்றும் 20 சிறுவர் தற்கொலை முயற்சிகள் பதிவாகியுள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் தொடர்பாக 42 முறைப்பாடுகளும், பெற்றோர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பின்தங்கியதாக ஒன்பது முறைப்பாடுகளும் பெறப்பட்டுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்த தொடர்ச்சியான கவலைகளை எடுத்துக்காட்டுகின்றன. இது தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் தலையீட்டின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2026/1462121

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.