நிர்வாகத்திடம் கேள்வி யாதெனில்இ பாலியல் கவிதைகள் அனுமதிக்க முடியுமெனில்இ பாலியல் கதைகளையும்இ படுக்கையறைக் கதைகளையும் நிர்வாகம் அனுமதிக்குமா?? இரண்டுக்கும் எவ்வாறான வேறுபாடுகள், விதிமுறைகள் வைத்துள்ளீர்கள்??
ஏலவே சொன்னது போல, யாழ்களம் என்பது தேசியமும் அது சார்ந்தே பயணிக்கும் என்றே நான் இத்தனை காலமும் நம்பியிருந்தேனே, தவிர பெண்களின் அங்களை விற்றுத் தான் பிழைப்பினை ஓட்டும் என அனுமானித்திருக்கவில்லை. முன்பு பேசாப் பொருள் என்ற பிரிவினை உருவாக்கி, கவிதை என்ற பெயரில் உடல் அங்கங்களை இரசிக்கும் செயலினைச் சிலர் செய்ய முயன்றனர். அவர்களில் சிலரே இங்கேயும் வடித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அனை்றைக்கு நாம் கொடுத்த சில எதிர்ப்பு அதில் பல கட்டுப்பாட்டு சார்ந்த விதிமுறைகளை நிர்வாகம் அறிவித்தது. அப்போது யாழ் எங்களின் ஒரு அங்கமாக இருந்தது, அதை எங்களின் சொந்த உறவாக, உரிமை கொண்டதாகவும் இருந்தது.
சிலர் இங்கே பழந்தமிழ் இலக்கியங்களைக் காட்டி, அங்கே பெண்களின் அங்கங்களைகப் பற்றிக் கதைத்திருக்கின்றார்களே என்று நிறுவ முயல்கின்றனர். பெண்களின் உடல் உறுப்புக்களை பாலியல் சிந்தையோடு வரைவதையோ, அதையே முதன்மைப்படுத்துவதையோ வேண்டாம் என்கின்றோம்.அதற்கு யாழ் வேண்டாம் என்கின்றோம். அங்கே உள்ள பாடல்களில் பெண்களின் அங்கம் முதன்மை பெறவில்லை. ( அதை ஒப்பீடு செய்கின்றவர்கள், கவிதை என்ற பெயரில் செய்கின்ற வசனநடையை, அக்காலப் பாடல்களின் தரத்தோடு ஒப்பீடு செய்வதில்லை. ஏன்?)
இப்படியான சிந்தனையோட்டங்கள், கருத்துக்களை நிர்வாகம் நன்றாகவே அனுமதிக்கின்றது. நல்லது வாழ்த்துக்கள்... இதை வைத்துத் தான் யாழ்களத்தின் வாசகர் வட்டத்தைக் கூட்ட முடியும் என நீங்கள் நிரப்புங்கள். ஆனால் இந்த வாசகர் கூட்டம், தங்களை தேவைகளுக்காக மட்டும் தான் இங்கே நிரம்பியிருக்கும் என்பதையும் நினைவுறுத்துகின்றேன்.