கட்டுநாயக்க சிறிலங்கா வான்படைத் தளத்தில் சிறிலங்கா படைத்தரப்பிற்கு பேரழிவுகளை ஏற்படுத்தி வீரவரலாறு படைத்து காவியமான 14 நிழற்கரும்புலிகளின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
24.07.2001 அன்று அதிகாலை கட்டுநாயக்க வான்படைத் தளத்திற்குள் ஊடுருவிய கரும்புலிகளின் சிறப்பு தாக்குதல் அணி வான்படைத்தளத்திலும் அதனோடு இணைந்திருந்த பன்னாட்டு வானூர்தித் தளத்திலும் பல வானூர்திகளை அழித்து பலவற்றைச் சேதப்படுத்தியும் சிறிலங்கா அரசிற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது.
கட்டுநாயக்க வான்படைத்தளத்தில் வைத்து தமிழின அழிப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வந்த கிபிர் மற்றும் மிக் - 27 குண்டு வீச்சு வானூர்திகள் உட்பட 8 வான்படை வான்கலங்கள் அழிக்கப்பட்டன் 12ற்கும் மேற்பட்ட வான்படை வான்கலங்கள் தேசமாக்கப்பட்டன.
வான்படைத் தளத்தில் சிறிலங்கா படைத்தரப்பிற்கு பேரிழிவுகளை ஏற்படுத்திய கரும்புலிகளால், கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தித் தளத்திற்கு ஊடுருவி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எயார் பஸ் ரக வானூர்திகள் இரண்டு அழிக்கப்பட்டு மூன்று சேதப்படுத்தப்பட்டன.
சிறிலங்கா அரசிற்கும், அதன் படைகளிற்கும் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய இந்த வெற்றிகர நடவடிக்கையின்போது 14 கரும்புலிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது முகம் மறைத்து, முகவரி மறைத்து விழிமூடிய இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.