வேகுந்தீ ஊடேயும் ஆகு(ம்)தி யானீரே
வேங்கைம கர்க்கென்றும் வீழ்விலை யே!
சாகுந்தீ ஆனாலும் போகும்பு லிக்கென்றும்
சாவில்லை யாமிது சத்திய மே!
தாகம்தீன் தெரியாது தூரம்தான் சலியாது
போகும்தி சைகாணும் சூரியர் ரே!
மோகம்பெண் நாடாது வேள்விக்குக் கோடாது
வேருக்குள் நீராகும் மாவீர ரே!
வீட்டினுள் பெண்களாய் வீழ்ந்துகி டக்காமல்
நாட்டுக்காய் உதிர்ந்த நாரிய ரே!
காட்டிக்கொ டுப்பாரும் கண்டதி சைக்குள்ளும்
கால்கள்ப தித்தவெம் காரிகை யே!
அண்ணன்தி சையோடும் ஆகிப்ப றந்தேகும்
வண்ணக்கி ளியான மாதுக ளே!
மண்ணின்ம டிக்குள்ளே மானப்போர் செய்திட்ட
வஞ்சிக்கு என்றென்றும் சாவிலை யே!
செங்களத் தின்னுயிர் சேரம ரித்திட்ட
எங்களின் பிள்ளைக ளானவ ரே!
இங்குபு லத்தெங்கும் ஈகச்சு டர்ரேற்றி
இறைஞ்சு கின்றோமே மாவீர ரே!
-புனிதன்
http://www.tamillead...3-06-35-30.html