பக்கத்து வீட்டு அல்சேசன் நாய் குரைக்கிறதை கேட்டு எங்கவீட்டு பெட்டை நாயும் போட்டிக்கு குரைத்தது!
இதுதான் இலங்கையின் சர்வல்லமை படைத்த ஜனாதிபதிக்கும் பிரதம நீதியரசர் சிராணிக்கும் இடையில் நடக்கும் பலப் பரீடசை. மேற்கு நாடுகள் இலங்கையில் உள்ளே வர கதவை திறவென்றபோது அதை திறக்க முயன்று தோற்றிருக்கிறது உயர்நீதிமன்று.
சிராணி பதவிக்கு வந்த கதை வழமையான இலங்கையின் அரசியலில் ஒருபாகம்தான். அதில் அவர் "நான் ராஜபக்சா குடும்பத்தை விட படித்தானான்" என்ற மிடுக்கு நினைப்புக்கு இடமளித்தது தவறு. சிராணிக்கு ஒன்று தெளிவாக விளங்க வேண்டும்; "தான் மட்டும் அல்ல ,தேவையாய் இருந்தால் சட்டக் கல்லூரியில் சோதனை எழுதாமலே பாஸ் பண்ணிய நாமல் வரைக்கும் இலங்கையின் பிரதம நீதி அரசர் பதவில் வந்து அமரமுடியும்" என்பது. இந்த பதவிக்கு தேவையானது அறிவும், அனுபவமும் அல்ல. உயரத்தூக்கிப்பிடிக்க ஒரு அரசியல் பந்தமே. இதில் அவ தன்னை பெரிதாக காட்ட முயல்வது பேதமை. 1948க்கு பின்னர் அதை அலங்கரித்த வெள்ளையர், தமிழ்ர், பறங்கியர் வரைக்கும்தான் அதில் தரம் இருந்தது. அதன் பின்னர் உயர் நீதிமன்றக்கட்டிடம், பாராளுமன்ற மேளத்திற்கு காண்டியன் டாண்ஸ் நடக்கும் இன்னொரு தெருக்கூத்தாடிகளின் கொட்டகையாகிவிட்டது. நீதி அரசர் பதவியும் ceremonial post மட்டுமென்றாகிவிட்டது.
சிராணி வந்த அதே அரசியல் கதவைவே திறந்து அரசு, அவவை வெளியே போ என்று சொன்ன போது போய் இருந்தால், குடும்பம், சொத்து, கௌரவம் நிம்மதி பலவற்றை சிராணி காப்பாற்றியிருக்கலாம். இனி அவற்றில் பல நடுத்தெருவில்தான். பிரதீப் காரியவாசத்தை காக்க சிராணி நீதிமன்றை பாவித்து திவி நெகும்ப சட்டமூடாக சவால் விடுத்தது தவறு. இதில் சிராணி தனக்கு பதவி போட்டுத்தந்தவர்களின் நலத்தை மறந்து, சுயநலம் காரணமாக, அவ ஆடியிருக்க வேண்டிய கண்டியன் டான்ஸை ஆடாமல், இடையில் வந்த மேற்கு நாடுகளின் தளத்திற்கு பலே டான்ஸ் ஆடியிருந்தா.
இலங்கையில் சமாதனத்தை காப்பாற்ற தவறிய தலைமைகளான D.S.சேனநாயக்கா, S.W.R.D. பண்டாராநாயக்கா போன்றோர் இலங்கையின் சுதந்திரத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டார்கள். "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி". அந்த வகையில் இலங்கையில் இந்தியா வந்திறங்கத்தக்கதாக, தலையால் அல்லாமல் வாயால் மட்டும், இலங்கை தலைவர்கள் தொடர்ந்து அரசியல் செய்தார்கள். அன்று அதை கண்டு பிடித்து அன்றே திருத்தாமல், சீனாவின் சீலைக்கு கீழ்ப் போய் ஒழிந்தர்கள். இதனால் இன்று சரவதேசமும் அரசியல் செய்யும் தனித்தீவாக இலங்கைத் தீவை மாற்றிவிட்டார்கள்.
மேற்கு நாடுகள் இலங்கை அரசியலில் புகுவதற்காக, சுதந்திரம் தேடிய புலிகளை தோற்கடித்தார்கள். அதில் பெரிய பலன் ஒன்றும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. பொன்சேக்காவை தூண்டினார்கள். ஆனால் அந்த பந்தயத்தில் சறுக்கி விழுந்த பொன்சேக்காவை காப்பாற்ற அவர்களேதான் ஓடிவரவேண்டியிருந்தது. இன்று சிராணியையும், உச்ச நீதிமன்றத்தையும் தூண்டிவிட்டிருக்கிறார்கள். பொன்சேக்கா மாதிரியே கண்ணை மூடிக்கொண்டு மேற்கு நாடுகளின் இசைக்கு ஆடிய நீதி மன்றம், தெரிவுக்குழு விவகாரத்தில் என்ன பிழையை கண்டது என்பது தெரியவில்லை. ஒரு நாட்டு நீதி மன்றும், பராளுமன்றமும் பலப்பரிசையில் போவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. அரசியல் அமைப்பு சட்டங்கள், அவை ஒன்றை ஒன்று, தேவையாயின், கண்டிக்கத்தக்க முறையில் தான் வழமையில் வரையப்படும். ஆனால் அதற்கென ஒரு விதி இல்லாமல், இலங்கை உச்சநீதிமன்றம், போட்டியில் இறங்கியதுதான் வீட்டுக்குலிருந்து பெட்டைநாய் குரைத்தது மாதிரி இருந்தது.
நீதிமன்றம் இலங்கை பாராளுமன்றத்தின் கீழ் இருக்க வேண்டும் என்றுதான் கோடிஸ்வரன் வழக்கின் பின்னர் இலங்கை குடியரசாக்கப்பட்டு அரசியல் அமைப்பு மாற்றி எழுதப்பட்டது. இன்று வரை அது இரண்டு அமைப்புக்களாலும் ஒற்றுமையாகவே பின் பற்றப்பட்டும் வந்தது. இதில் தனி ஒரு நீதி அரசர் தனது கணவருடன் அரசு முரணுகின்றது எனபதற்காக தான் நீதித்தீர்பை அரசுக்கு எதிராக வழங்கிவிடமுடியும் என்று நப்பாசை வைத்தது தவறு. சிராணி கொடுத்த திவி நிவிகும்ப சட்டத்திற்கெதிரான தீர்ப்புக்கு சிங்கள மக்களிடமிருந்து ஆதரவு வரப்போவதில்லை. இதை மீறி பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட தெரிவு குழுவை நீதிமன்றம் கட்டுப்படுத்த முயன்ற போது தனது கட்சி மீதான ஆணையை மதித்து எதிர் கட்சி தலைவரே நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க மறுத்துவிட்டார். மேற்கு நாடுகளின் தூண்டுதலால் ஆடும் நீதிமன்றம் பாரளுமன்றத்தை கட்டுப்படுத்த முயல்வதை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.
எந்த ஜனநாயக நாட்டிலிலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கு மேல் வந்தால் சட்டத்தை மாற்ற முடியும். இது இலங்கையில் ஒவ்வொரு அடுத்த தேர்தலிலும் சிங்கள கட்சிகளுக்கு கிடைக்கிறது. பதவியை பிடிக்க வேண்டுமாயின் தமிழரை எதிர்த்து ஒரு மேடையில் பேச வேண்டியது மட்டும்தான் என்ற நிலை இலங்கையில் இருக்கிறது. இந்த யதார்த்தை மறந்த சிராணி தனது கணவரை காப்பாற்ற நீதிமன்ற பதவியை பாவித்து தமிழருக்கு ஆதரவான 13ம் திருத்தை எதிர்த்த திவி நிகும்ப சட்டத்தை கையில் எடுத்தார். அதில் ஆரம்பித்த நாடகம் மேற்கு நாடுகளின் தலையீட்டால் இன்றுஅவரையே காப்பாற வேண்டிய நிலைக்கு இட்டு சென்றுவிட்டது.
இது நாடகத்தின் முடிவு மாதிரி தெரியவில்லை. ஏன் எனில் மேற்குநாடு தமக்கு இலங்கையில் கிடைக்க வேண்டிய பங்குக்கு ராஜபக்சா கதவை திறப்பார் என்றுதான் அவர்கள் அவருக்காக புலிகளை தோற்கடித்தார்கள். ஆனால் அவர் உடனே கதை மூடிவிட்டதுமல்ல, இருக்கத்தக்க பின்கதவுகளான பொன்சேக்கா, சிராணி போன்றவற்றையும் தாள்ப்பாள் போட்டு மூடிவிடுகிறார். எக்கொனொமிஸ்ட் எழுதிருந்த கட்டுரையை படித்தால் வேறு எதாவது யன்னல்களாவது திறந்திருக்கா என்றுதான் மேற்கு நாடுகள் தேடுவது போல இருக்கு. இது மேற்குநாடுகளும் ராஜபக்சாவும் இடையிலான கள்ளன் பொலிஸ் விளையாட்டின் ஆரம்பம் போலத்தான் படுகிறது.