ஏதோ சீமானை நம்பிக்கொண்டு வாய் பார்த்துக் கொண்டிருக்கிற மாதிரி இருக்கு உங்கட பதிவு.. எனக்குத்தெரிந்து யாரும் இங்கு அப்படி இல்லை..
தேனீ வந்து குடிச்சிட்டுப் போகுதே என்று பூ நினைத்தால் அந்த மரத்துக்கு எதிர்காலம் இல்லை.. (தத்துவம் எண் 2378 )
மாறாக, அது குடிச்சிட்டுப் போகட்டும்.. ஆனால் என் சந்ததியும் பெருகட்டும் என்று பூ நினைக்குது பாருங்க.. அங்கதான் பூ நிக்குது..
சீமான் ஈழ அரசியலை பேசுவதால் தமிழகத்தில் இன்று நன்மைகள் அவருக்குக் கிடைக்கலாம்.. ஆனால் ஈழ ஆதரவு என்கிற தண்ணீரை ஊற்றியவர்களுள் அவர் முக்கியமானவர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.. ஆகவே, அவர் நீரூற்றி தேன் எடுக்கிறார். அதே நேரத்தில் அவரது அரசியல் ஈழ ஆதரவு அரசியல் பலத்தைப் பெருக்குகிறது என்பதை நாமும் மறந்துவிடக்கூடாது.. இது பூவாகிய எமக்கு நன்மை..