தாயகக் கனவுகளுடன் ....... [18] "தர்மத்தின் வழி தழுவி,ஒரு சத்திய இலட்சியத்திற்காகச்
செய்யப்படும் தியாகங்கள் என்றுமே வீண்போவதில்லை.
எமது தேசத்தின் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை
ஒப்பற்றது.உலகவிடுதலை வரலாற்றில் நிகரற்றது.இந்த
அளப்பரிய ஈகத்தின் ஆன்மீகசக்தி இன்று உலகத்தின்
மனச்சாட்சியை உலுப்பிவிட்டிருக்கிறது.எமது மாவீரர்களின்
சுதந்திரதாகம் சாவுடன் தணிந்துபோகவில்லை.அது எமது
இனத்தின் வீரவிடுதலைக் குரலாக உலககெங்கும் ஒலித்துக்
கொண்டிருக்கிறது.
சாதி,மதம்,வர்க்கம், என்ற வேறுபாடுகளுக்கு அப்பால்,ஒரு
விடுதலை இயக்கத்தின்கீழ்,ஒரு விடுதலை இலட்சியத்தின்
கீழ், ஒன்றுபட்ட சமூகமாக எமது மக்கள் இன்று அணிதிரண்டு
நிற்கிறார்கள்.வீரம் செறிந்த எமது விடுதலைப் போராட்டமும்
அந்த விடுதலைப்போராட்டத்தில் எமது போராளிகள் ஈட்டிய
அபாரமான சாதனைகளும், அவர்கள் புரிந்த அற்புதமான
தியாகங்களுமே எமது மக்களை எழுச்சியூட்டி,உணர்வூட்டி,
ஒரே அணியில்,ஒரே இனமாக,ஒரே தேசமாக ஒன்றுதிரள
வைத்திருக்கின்றன. எமது மாவீரர்களின் மகத்தான
தியாகங்களும் அர்ப்பணிப்புகளுமே எமது தேசத்தின்
ஒருமைப்பாட்டிற்கு ஆதாரசக்தியாக விளங்குகின்றன."
--- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்