நிழலி தனது இன்றைய பிறந்தநாளை விழாவாக கொண்டாடாமல் மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வாழும் 120 பிள்ளைகளுக்கு சத்துணவு வழங்கியுள்ளார். நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இன்றையநாளை குழந்தைகளுடன் செலவழித்த எங்களது குழுவினர் இரவாகிவிட்டது. அதனால் படங்கள் செய்தி நாளை பதிவிடுவேன்.
இவ்வுதவியை செய்த நிழலிக்கு நன்றிகள்.
ஏற்கனவே கடந்த 3வருடங்களுக்கு மேலாக நிழலியும் அவரது மனைவியம் மாவீரர்களின் பிள்ளைகள் இருவரை மாதாந்து உதவி கொடுத்து பராமரித்து வருகிறார்கள். அத்தோடு மாவீரர்களின் அம்மா ஒருவருக்கு மாதம் உதவி வருகிறார்கள்.
நண்பனே ! இனிமையான 40 வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.