மாவீரர் வாரம் தொடங்கிவிட்டது.
மாவீரர்நாள் வருகிறது.
ஒவ்வொரு வருடமும் வந்து போகிறது.
தெய்வங்களாக வணங்குவோரும்
தூற்றுவோரும்
துண்டாடுவோரும் ஒரு வைபவமாக கடந்து செல்கின்றோம்
ஒரு முறையாவது சிந்தித்தோமா?
2009க்கும் தற்பொழுதும் எமது பலம் எவ்வாறுள்ளது?
தாயகத்தை தற்போதைக்கு விடுவோம்.
புலத்தில் எமது அமைப்புக்கள் வலுவாக உள்ளனவா?
வலுவிழக்க யார் காணரம்??
நாமே தான். இதை உணருவோமா??
2009 இலிருந்து எழுதி வருகின்றேன்
அமைப்புக்களை பலமிளக்க செய்யாதீர்கள். மீண்டும் கட்டியமைப்பதென்பது????
அமைப்புக்கள்
பாடசாலைகள்
விளையாட்டுப்பகுதிகள்
கலைப்பிரிவுகள்
என தூர நோக்கோடு அவை கட்டியமைக்கப்பட்டன
அவை எல்லாம் ஒழுங்காக சரியாக இயங்குகின்றனவா என்ற கேள்விக்கு
எது தான் சரியாக இயங்குகிறது என தட்டிச்செல்லத்தேவையில்லை
ஆனால் நாமும் உள்ளிருந்து துடைக்கணும் கழிக்கணும் கூட்டணும்
அதுவே தேவை
அதுவே மாவீரரின் கனவை நனவாக்க ஆகக்குறைந்த அணுகுமுறை.
செயல்முறை.
செய்வோமா???