படம் : குமாரவிஜயம் (1976)
வரிகள்: பூவை.செங்குட்டுவன்
இசை: G.தேவராஜன்
பாடியோர் : K.J ஜேசுதாஸ் & P.சுசீலா
கன்னி ராசி என் ராசி
காளை ராசி என் ராசி...
ஆ...
ரிஷப காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி - அது
பொறுந்தாவிட்டால் சன்யாசி
கன்னி ராசி என் ராசி - ரிஷப
காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி - அது
பொறுந்தாவிட்டால் சன்யாசி
.
ஒரு பக்க காதல் இல்லை இது
என் உள்ளம் அறிந்த உண்மை இது
உள்ளம் எத்தனை சொன்னாலும்
உன் உண்மை அறிந்த பெண்மை இது
பெண்மை இது
.
கன்னி ராசி என் ராசி - ரிஷப
காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி - அது
பொறுந்தாவிட்டால் சன்யாசி
.
உந்தன் சாகசம் என்னிடமா
அது உலகம் தெரிந்த பெண்ணிடமா
கொஞ்சும் சரசம் சாகசமா
நாம் கூடி இருப்போம் சமரசமா
சமரசமா
.
கன்னி ராசி என் ராசி - ரிஷப
காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி - அது
பொறுந்தாவிட்டால் சன்யாசி
.
மந்திரம் போடடி மயங்குகிறேன்
ஒரு மஞ்சம் போடடி உறங்குகிறேன்
மங்கள மேளம் முழங்க விடு
உன் மடியினில் என்னை மயங்க விடு
மயங்க விடு
கன்னி ராசி என் ராசி - ரிஷப
காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி - அது
பொறுந்தாவிட்டால் சன்யாசி
பொறுந்தாவிட்டால் சன்யாசி.