ரகு,
நாம் எல்லோரும் செய்யும் அரசியல் தமிழ் தேசிய அதாவது "அடையாள அரசியல்" identity politics. இந்த "அடையாளத்தின்" அடிப்படையை பற்றி நாம் அனைவரும் இல்லாவிடிலும், அறுதி பெரும்பான்மையனோராவது ஒரு ஒருமை பட்ட நிலைப்பாட்டுக்கு வராது, நாம் எடுக்கும் எந்த முயற்சியும் ஒரு கட்டத்துக்கு மேல் பலந்தராது.
எப்படி பெரிய மாடியை கட்டினாலும் அத்திவாரம் சரியில்லாவிடடால் கவிழ்ந்து கொட்டிவிடும்.
எமது ஒற்றுமையினம், சகோதர சண்டைகள், பிரதேசவாதம் இவை எல்லாமுமே தமிழ் தேசியம் பற்றிய, தமிழர் அடையாளம் பற்றிய சரியான புரிதல் இல்லாமையாலேயே விளைகின்றன.
50,000 பேர் அதி உச்ச தியாகம் புரிந்த, திலீபன் போன்றவர்களை கொண்டிருந்த ஒரு போராட்டம் ஏன்கடைசியில் ஆட்களை வலு கட்டாயமாக பிடிக்கும் நிலைக்குப் போனது?
தியாகம், நேர்மை, அற்புதமான தலைமை சகலதும் இருந்தும் நோக்கை அடைய முடியாமல் போனமைக்கு ஒரு சிலரை தவிர ஏனையோருக்கு சித்தாந்த தெளிவின்மையும் ஒரு பெரிய காரணி.
ரஸ்யா, சைனா, வியடனாம் எங்கினும், சித்தாந்த வாதங்களுக்கு நேரம் ஒதுக்கிய, அதே சமயம் தனியே சித்தாந்தம் மட்டும் பேசாமல் செயலிலும் காட்டிய போராட்டங்களே வென்றுள்ளன.