Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    8910
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46808
    Posts
  3. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    13720
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/30/21 in Posts

  1. ராஜீவ் காந்தியைக் கொன்றதிலிருந்தே பிரபாகரனின் அழிவுகாலம் தொடங்கியது. அவர் ஒரு சுயநலம் மிக்க கோழை - பி பி ஸி 4 சேவையில் பேட்டியளித்த கருணா காலம் : வைகாசி 18, 2009 மூலம் : வோல்ட்டர் ஜெயவர்டென பயங்கரவாத புலிகள் இயக்கித்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக ஒருகாலத்தில் இருந்தவரும், தற்போது அரசின் பிரதியமைச்சராக இருப்பவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் பி பி ஸி யின் 4 ஆம் சேவைக்கு வழங்கிய செவ்வியில் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தலைவரான பிரபாகரனின் அழிவுகாலம் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை தற்கொலைக் குண்டுதாரியொருவரின் மூலம் கொன்றதையடுத்தே ஆரம்பமானது என்று கூறினார். காந்தியின் கொலைபற்றிக் கூறும்போது, "அது ஒரு மிகப்பெரிய தவறு. இதன்பின்னர் குறைந்தது 20 நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தன. அதற்கு முன்னர் இந்த நாடுகள் எல்லாம் திரைமறைவில் புலிகளுக்கு ஆதரவளித்து வந்தன". என்று கூறினார். ஆனால், எந்தெந்த நாடுகள் புலிகள் இயக்கத்திற்குத் திரைமறைவில் உதவின என்பதை கருணா குறிப்பிடவில்லை. தமிழ்நாட்டின் சிறிபெரும்புதூரில் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியின் கொலைக்குக் காரணமானவர்கள் என்று கருதப்படும் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், அவ்வியக்கத்தின் புலநாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மானும் சில தினங்களுக்கு முன்னர் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். புலிகளின் முன்னாள் தத்துவ ஆசிரியர் அன்டன் பாலசிங்கம் கூட ராஜீவின் மரணத்தை பாரிய தவறு என்று ஒப்புக்கொண்டிருந்தபோதும் பின்னர் புலிகள் அந்தக் கூற்றிலிருந்து விலகிவிட்டனர். இன்றைய நிகழ்ச்சியில் பி பி ஸியின் தொகுப்பாளர் அன்ட்ரே ஹொக்ஸன் பின்வருமாறு கூறினார், " கருணாவைப் பொறுத்தவரை பிரபாகரனின் மிகப்பெரிய தவறு மே மாதம் 1991 ஆம் ஆண்டு ராஜீவின் கொலையுடன் ஏற்படுத்தப்பட்டது. அன்று கிழக்கு மாகாணத்திற்கான புலிகளின் தளபதியாகவிருந்த கருணா இந்த கொலைமுயற்சி தொடர்பாக தான் எதனையும் அறிந்திருக்கவில்லையென்றும், ஆனால் ராஜீவ் கொல்லப்பட்டவுடனேயே அக்கொலை பிரபாகரனினாலும், பொட்டம்மானினாலும் தான் நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்பதை அறிந்துகொண்டதாகவும் கூறினார். புலிகள் வழமையாகப் பாவிக்கும் தாக்குதல் உத்தியான தற்கொலைத் தாக்குதல் மூலமே ராஜீவ் கொல்லப்பட்டதனால், இதனை அவர்கள் இருவருமே செய்திருக்கவேண்டும் என்று தான் சந்தேகித்ததாகக் கூறினார்". "நான் பிரபாகரனிடம் நீங்கள் மிகப்பெரிய தவறொன்றைச் செய்துவிட்டீர்கள் என்று கூறினேன். அவரோ அதனை மறுத்தார், ஆனால் அதனைச் செய்தது அவர்தான் என்பது எனக்குத் தெரியும்". "அது ஒரு மிகப்பெரிய தவறு. அக்கொலையின் பின்னர் 20 நாடுகள் எம்மை பயங்கரவாத அமைப்பென்று தடை செய்தன. இதற்கு முன்னர் பல அரசாங்கங்கள் எமக்கு ஆதரவாகத் திரைமறைவில் செயற்பட்டன". இலங்கையின் தமிழர் பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்காகப் பழிவாங்கவே ராஜீவைப் பிரபாகரன் கொன்றார் என்று நம்பப்படுகிறது. ஆனால் நீண்டகால நோக்கில் இந்தப்படுகொலை புலிகளின் இலட்சியத்தை மிகக் கடுமையாகப் பாதித்திருந்தது. கருணா தொடர்ந்தும் பேசுகையில் "பிரபாகரன் ஒருபோதுமே எதிரியுடன் நேருக்கு நேர் நின்று போர் செய்யவில்லை. அதே போன்றதொரு நிகழ்வே பிரபாகரனின் இறுதிக் கணத்திலும் நடந்ததது. எதிரியுடன் இறுதிவரை சண்டை பிடிக்கவோ அல்லது தனது சகாக்களுக்குக் கூறுவதுபோல சயனைட் உட்கொண்டு மரணிக்கவோ எத்தனிக்காது குண்டுதுளைக்கமுடியாத வாகனமொன்றில் ஏறித் தன்னைக் காப்பற்றிக்கொள்ளவே அவர் இறுதிவரை முயன்றார். ஆனால் அவர் தப்பிச் சென்ற வாகனம் ராணுவத்தின் ரொக்கெட் தாக்குதலில் சிதைந்துவிட்டது" என்று அவர் கூறினார். அன்ட்ரே ஹொக்ஸனிடம் பேசிய கருணா தொடர்ந்தும் கூறும்போது, "பிரபாகரனுடனான எனது 22 வருட அனுபவத்தில் அவர் தொடர்பாக ஆரம்பத்தில் நான் வைத்திருந்த மரியாதையினை இழந்துவிட்டிருந்தேன். என்னைப்பொறுத்தவரை அவர் அவமதிப்பிற்குரியவராகவே தெரிந்தார். அவர் ஒருபோதுமே போர்க்களத்திற்கு வந்ததில்லை. எமது அணிகளுக்குப் பின்னல் மிகப் பாதுகாப்பான இடம் ஒன்றில் அவர் நின்றுவிடுவார். எல்லோரும் பிரபாகரனை இரும்பு மனிதர் என்றும் பிறப்பால் வந்த தலைவன் என்றும், பெரிய மனிதன் என்றும் கூறுகிறார்கள். ஆனால் என்னைப்பொறுத்தவரை அவர் ஒரு கோழை" என்று அவர் மேலும் கூறினார். கருணா இப்பேட்டியில் இன்னொரு விடயத்தையும் கூறினார், " தனது குற்றங்களை பிரபாகரன் நன்கு தெரிந்தே வைத்திருந்ததனால், ராணுவத்திடம் பிடிபட்டால் தனக்கு என்ன நிகழும் என்பதை நன்கு உணர்ந்தேயிருந்தார். ஆனால், அவர் தன்னைத்தானே கொன்றாலோ அல்லது ராணுவத்தினரால் கொல்லப்பட்டாலோ, அவை இரண்டுமே இலங்கை மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விடயங்களே " என்றும் அவர் கூறினார். http://www.lankaweb.com/news/items/2009/05/18/in-a-bbc-radio-4-programme-karuna-amman-says-prabhakaran’s-downfall-started-after-he-got-rajiv-gandhi-assassinated/
  2. பிரபாகரன் உயிருடன் பிடிபட்டதாக நான் கூறவில்லை - தனது முன்னைய கூற்றினை மறுதலிக்கும் கருணா காலம் : ஆடி 24, 2015 மூலம் : அத தெரன முன்னாள் பிரதியமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் பிடிபட்டார் என்றும், அவரை ராணுவத்தினர் கடுமையான சித்திரவதைகளின்பின்னர் படுகொலை செய்ததாகவும் தான் ஒருபோதும் கூறவில்லை என்று மறுத்திருக்கிறார். சில இணையத்தளங்களும், முகப்புத்தகத்தில் சிலரும் கருணா அம்மானை மேற்கோள் காட்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டார் என்றும் பின்னர் அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டு கடுமையான சித்திரவதைகளின் பின்னர் கொல்லப்பட்டதாகவும் செய்திவெளியிட்டிருந்தன. ஆனால், தற்போது இதனை மறுத்திருக்கும் கருணா தனது நற்பெயரைக் களங்கப்படுத்தவும், அரசியல் ஆதாயத்திற்குமாகவே சிலர் இதனைச் செய்வதாகக் கூறியிருக்கிறார். "இன்றைய நாட்களில் என்னைப்பற்றி பல வதந்திகள் முகப்புத்தகத்திலும், இனம் தெரியாத இணையத்தளங்களிலும் மிகவும் தவறான செய்திகள் வெளிவருகின்றன. பிரபாகரனை ராணுவத்தினர் உயிருடன் பிடித்ததாகவும், பின்னர் கெளரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் அவர் கையளிக்கப்பட்டதாகவும், அவரின்மேல் கடுமையான சித்திரவதைகள் புரியப்பட்டு இறுதியில் கொல்லப்பட்டதாகவும் நான் கூறியதாக இச்செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், இவை எல்லாவற்றையும் நான் அடியோடு மறுக்கிறேன்" என்று அவர் கூறினார். "நான் எந்தவொரு இணையத் தளத்திற்கோ, ஊடகத்திற்கோ இவ்வாறு கூறவில்லை. எனது நற்பெயரைக் களங்கப்படுத்தி தமது அரசியல் லாபத்திற்காகச் சிலர் இதனைச் செய்கிறார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.
  3. யுத்தத்தில் கொல்லப்பட்ட பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டிய கருணாவும், தயா மாஸ்ட்டரும் காலம் : 19, வைகாசி 2009 மூலம் : வோல்ட்டர் ஜயவர்டென இங்கிலாந்தில் புலி ஆதராவாளர்கள் பலர் தமது தலைவன் பிரபாகரன் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ள மறுத்துவரும் நிலையில், பிரபாகரனுடன் பல்லாண்டுகள் நெருங்கிப் பழகி, அவரை அறிந்திருந்த இருவர்களான கருணா அம்மானும், தயா மாஸ்ட்டரும் கொல்லப்பட்டது பிரபாகரன் தான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றனர். கருணா அம்மான் புலிகள் எனும் பயங்கரவாத இயக்கத்தின் உதவித் தலைவராக இருந்ததுடன், தயா மாஸ்ட்டர் அப்பயங்கரவாத அமைப்பின் ஊடகப் பேச்சாளராக பணியாற்றி வந்தவர். தமக்கு மிகவும் பரீச்சயமான பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்கு இவர்கள் இருவரும் போர்க்களத்திற்குச் சென்றிருந்தனர். கடந்த 19 ஆம் திகதி செவ்வாயன்று பிரபாகரனின் உடல் 53 ஆம் பிரிவின் தளபதி கமால் குணரட்ணவின் வீரர்களால் கண்டெடுக்கப்பட்டதாக இலங்கையின் ராணுவத்தளபதி சரத் பொன்சேக்கா தனது அறிக்கையில் கூறியிருந்தார். அரச தொலைக்காட்சிச் சேவையான ஐ டி என் இல் பேட்டியளித்த கருணா அம்மான் கொல்லப்பட்டது பிரபாகரன் தான் என்பதை மீளவும் உறுதிப்படுத்தினார். அவர் மேலும் கூறுகையில், "பிரபாகரனின் பயங்கரவாதத்தினால் கடந்த 30 வருடங்களாக அவலப்பட்ட தமிழர்களின் வாழ்வினை மீட்டுக் கொடுப்பதற்காக இலங்கை ராணுவத்திஒனர் தமது உயிரையும், உடல் அவயங்களையும் தியாகம் செய்திருக்கின்றனர்" என்று அவர் கூறினார். பல சர்வதேச நிறுவனங்கள் மக்கள் ராணுவத்தால் கொல்லப்படுவதாக விமர்சித்த போதிலும்கூட, தற்போது கருணா அம்மான் கூறுவதில் உள்ள நியாயத்தன்மையினை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். "ஒன்றுபட்ட புதிய இலங்கைத் திருநாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முழு இலங்கையர்களும் கெளரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பின்னால் அணிதிரளவேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முல்லைத்தீவு மாவட்டத்தின், நந்திக்கடல் ஏரியின் சதுப்புநிலப் பகுதியில் இருந்து பல குண்டுதுளைத்த காயங்களுடன் பிரபாகரனது உடல் கண்டெடுக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. அதேவேளை கடற்புலிகளின் தளபதி சூசையின் உடல் கரயமுள்ளிவாய்க்கால் பகுதியில் குண்டு துளைத்த காயங்களுடன் ராணுவக் கொமாண்டோ அணியொன்றினால் அதேநாள் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
  4. எனது அன்பிற்குரிய ராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா அவர்களே ! இலங்கை சுதந்திரம் அடைந்த 1948 ஆம் ஆண்டிலிருந்து பல ராணுவத் தளபதிகளைக் கண்டிருக்கிறது. பிரிகேடியர் ஜேம்ஸ் சின்கிளெயர், அன்டன் முத்துகுமாரு, மேஜர் ஜெனரல் உடுகம, மேஜர் அன்டனி ஜஸ்டின் குணசேகர, ஜெனரல் ஆட்டிகல என்று பலரை நாம் பார்த்திருக்கிறோம், இவர்கள் எல்லாரையும் நாம் நேசிக்கிறோம். ஜெனரல் உடுகமவின் காலத்தில் இருந்தே யாழ்ப்பாண தமிழர்களை அடக்கி அவர்களின் பயங்கரவாதத்தை நாம் அழித்து வந்திருக்கிறோம். அவருக்கு காலஞ்சென்ற மேஜர் ஏ ஜே குணசேக்கர யாழ்ப்பாண மக்களை அடக்குவதற்கான ஒத்தாசைகளை வழங்கி வந்திருக்கிறார். ஆகவே, இன்றைய எமது வெற்றியில் எமது அன்பிற்குரிய கருணா அம்மான் செய்த பங்களிப்பினை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் எனது அன்பிற்குரிய தளபதியே. நீங்கள் சந்திரிக்காவுடனும், ரணிலுடனும், மங்களவுடனும், சோமவன்ச அமரசிங்கவுடனும் கூட்டுச் சேர்ந்தால் ஒரு ஒப்பற்ற ராணுவத் தளபதி என்கிற ஸ்த்தானத்திலிருந்து வரலாற்றின் துரோகியாக மாறிவிடுவீர்கள். இறுதியும், முடிவுமாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்த ஒப்பற்ற , மகத்தான வெற்றியின் உண்மையான காரணகர்த்தாக்கள் கருணா முரளீதரனும், மகிந்த ராஜபக்ஷவும், கோட்டாபய ராஜபக்ஷவும், சரத் பொன்சேக்காவும், ஹரி குணத்திலக்கவும், வசந்த கரன்னகொடவும் ஆகிய அனைவரும் தான். மாறாக நீங்கள் இன்று கூட்டுச் சேர்ந்திருக்கும் சந்திரிக்காவோ, ரணிலோ, மங்கள சமரவீரவோ, சோமவன்ச அமரசிங்கவோ அல்ல. எது எப்படியாயினும் நான் உங்களை நேசிக்கிறேன் எனது அன்பிற்குரிய ராணுவத் தளபதியே. புத்தரின் ஆசீர் உங்களுடன் இருப்பதாக !!! இப்படிக்கு பேராசிரியர் எம் டி பி திஸாநாயக்க முற்றும் http://www.lankaweb.com/news/items/2009/10/30/karuna-mahinda-gotabhaya-army-commander-sarath-fonseka-air-chief-marshall-karuna-muralitharan-admiral-wasantha-karrannagoda-vs-chandrika-ranil-avamangala-somawansa/
  5. முன்னாள் ராணுவத் தளபதி சிறில் ரணதுங்கவில் காலத்தில் சரத் பொன்சேக்கா ஒழுக்கயீனமாக நடந்துகொண்டதற்காகத் தண்டிக்கப்பட்டார் என்றும், முடிந்தால் இதனை அவரால் மறுக்கமுடியுமா என்றும் மங்கள சமரவீர சரத் பொன்சேக்காவிடம் சவால் விட்டிருந்தார். ராணுவத்தின் ஒழுக்கத்தினை நிலைநாட்டும்படி சரத்திடம் அறிவுரை கூறிய மங்கள, ராணுவ வீரர்களின் சார்பாக மட்டுமே பேசும்படியும் கூறியிருந்தார். ராணுவ வீரர்களுக்கான அத்தியாவசிய சேவைகளுக்குச் செலவழிக்கும் பணத்தில் 45 மில்லியன் பெறுமதியான பென்ஸ் காரினை சரத் பொன்சேக்கா வாங்கவேண்டிய தேவையென்ன என்றும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார். ஒரு நாணயத்தின் இரு பாக்கங்கள் பற்றியும் நாம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். ஏனென்றால், எனது ஜனாதிபதி மகிந்தவை நேசிப்பதைப் போலவே எனது ராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவையும் நான் நேசிக்கிறேன். நான் இந்தக் கட்டுரையினை எழுதுவதன் நோக்கம் எனது அன்பிற்குரிய ராணுவத் தளபதியை அரசியலிலிருந்து ஒதுங்கும்படி கேட்பதற்காக அல்ல. மாறாக இலங்கையினை உண்மையாக நேசிக்கும் மனிதர்களை ஆதரிக்கும்படி கேட்டு மட்டுமே. எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இல்லையென்றால், சரத் பொன்சேக்கா என்பவர் யாரென்றே எமக்குத் தெரியாமலிருந்திருக்கும். எமது ஜனாதிபதி உங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார், உங்களை மற்றைய எல்லா ராணுவ தளபதிகளிடமிருந்து மேல்நோக்கி உயர்த்தினார், கோட்டாபயவுடன் சேர்ந்து உங்களுக்கான அனைத்து அதிகாரங்களையும் தந்தார், ஹரி குணத்திலக்கவுடனும், வசந்த கரன்னகொடவுடனும் சேர்ந்து நீங்கள் உங்கள் மதிநுட்பத்தாலும், திறமையினாலும் போரில் வெற்றியீட்டினீர்கள். இவை எதுவுமேயில்லாமல், ஒற்றை மனிதனாக உங்களால் இந்தப் போரினை வென்றிருக்க முடியும் என்று நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா?
  6. நாம் இதுவரையில் பல ஜனாதிபதிகளைக் கண்டிருக்கிறோம், அவர்கள் எல்லாருமே எமது பணத்தினை விரயமாக்கியது மட்டுமல்லாமல் போரிலும் வெற்றிகொள்ளமுடியாமல்ப் போய்விட்டார்கள். ஆனால் எமது விருப்பத்திற்குரிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவோ மிகக் குறுகிய காலத்திலேயே பயங்கரவாதிகளை முற்றாக அழித்து போரில் ஒப்பற்ற , மகத்தான வெற்றியினை ஈட்டினார். ஆயுத மற்றும் போருக்கான வளங்கள் தொடர்பாக எமது முப்படைகளும் மிகச் சிறப்பாகச் செயலாற்றியிருந்தன. பயங்கரவாதிகளின் தலைவனான பிரபாவின் மறைவிடங்கள், ரகசிய ஒன்றுகூடல் தளங்கள் தொடர்பாக கருணாவினால் எமக்கு வழங்கப்பட்ட துல்லியமான தகவல்களையடுத்து துரித கதியில் களத்தில் இறங்கிய எமது பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவும் ஜனாதிபதி மகிந்தவும் எமது தளபதிகளான சரத் பொன்சேக்கா, ஹரி குணதிலக்க, வசந்த கரண்ண்கொடவிற்கு முற்றான அதிகாரத்தினையும், ஆசீரையும் வழங்கியதன் மூலம் அவர்கள் மூவரும் எமது படைவீரர்களைச் சிறப்பாக வழிநடத்தி இந்த மகத்தான வெற்றியை எமதாக்கினர். எதிரணி அரசியல்வாதியான மங்கள சமரவீர எமது தளபதியைப் பார்த்து, "இவர் சல்வேஷன் ஆமிக்குக் கூட லாயக்கற்றவர்" என்று ஒருமுறை இகழ்ந்திருந்தார். எமது தளபதிக்கு போர் பற்றிய நுணுக்கங்களை ஆராயவோ, அறிந்துகொள்ளவோ தகுதியில்லையென்றும் அவரின் இயலாமைக்காக அவரை தண்டிக்கவேண்டும் என்றுக் கூறியிருந்தார். "உலகில் எந்த ராணுவத் தளபதியுமே அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதில்லை. மற்றைய அரசியல்வாதிகள் மேல் சேறள்ளிப் பூசுவதில்லை. எதிரணித் தலைவரை வெளிப்படையாக பத்திரிக்கையில் விமர்சிப்பதில்லை. ராணுவத்தின் ஒழுக்கமே அரசியலில் ஈடுபடுவதில்லையென்பதும், அரசியல் ரீதியாக நடுநிலைமை வகிப்பதும் தான். ஆனால் சரத் ட்பொன்சேக்காவோ இவை எல்லாவற்றையும் உதாசீனம் செய்து அரசியல் பேசுகிறார்" என்று மங்கள சமரவீர கூறியிருந்தார். சமரவீரவின் கூற்றுப்படி 2004 இல் இருந்து 2005 வரை தன்னை ராணுவத் தளபதியாக்கும்படி சரத் பொன்சேக்கா தன்னிடம் இறைஞ்சி வந்ததாகவும் , அவருக்கு அந்தத் தகுதியில்லை என்பதை அறிந்தபின்னர் தான் அவரின் வேண்டுகோளினை நிராகரித்து விட்டதாகவும் கூறுகிறார். 1970 இல் ராணுவத்தில் இணைந்துகொண்ட சரத் பொன்சேக்கா பல தளபதிகளின் கீழ் சேவையாற்றியதாகவும், ஆனால் ஒரு தடவையேனும் ராணுவத்தின் வீர தீரச் செயல்களுக்கான "விஷிஷ்ட்ட சேவா விபூஷண" எனும் பட்டத்தை அவரால் பெற்றுக்கொள்ள முடியவில்லையென்றும் மங்கள சமரவீர சரத் பொன்சேக்காவை ஏளனம் செய்திருந்தார். ராஜபக்ஷேக்களின் ஆட்சியில் ராணுவத்தளபதியாக பதவியில் அமர்த்தப்பட்டு, விஷிஷ்ட்ட சேவா விபூஷண எனும் பட்டத்திற்கு சரத் பொன்சேக்கா பரிந்துரைக்கப்பட்டபோது கருத்துத் தெரிவித்த மங்கள சமரவீர, "ராஜபக்ஷேக்களுக்காக சட்டவிரோதக் கொலைக் குழுக்களை இயக்கிவரும் ஒரு நபரே சரத் பொன்சேக்கா" என்று வெளிப்படையாகக் கூறியிருந்தார்.
  7. தமது அரசியல் ராணுவத் தலைமைப் பீடத்திற்கு நிகராக கருணாவை அலங்கரித்து அழகுபார்க்கும் சிங்களப் பேரினவாதம். தி ஐலண்ட் பத்திரிக்கையில் சிங்கள பெளத்த கலாநிதி எம் டி பி திஸாநாயக்கவினால் எழுதப்பட்ட கட்டுரை காலம் : புரட்டாதி 30, 2009 கருணா, மகிந்த, கோட்டாபய, ராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா, விமானப்படைத் தளபதி ஹரி குணதிலக்க, கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட் எதிர் சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர, சோமவன்ச பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்து 6 மாதங்களே ஆகின்றது. எமது ஜனநாயகத்தை அழித்துவிடப் பயங்கரவாதிகள் திடசங்கற்பம் பூண்டிருந்தனர். ஆனால், அவர்களை அழித்து வெற்றிகொண்டபின்னர் எமக்குள் சிறு பூசல்கள் உருவாகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. எமது ராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவின் அமெரிக்க பேச்சினை நான் செவிமடுத்தேன். ஆனால், இவ்வாறான பேச்சுக்கள் எமது விமானப்படைத் தளபதி ஹரி குணத்திலக்கவிடமிருந்தோ அல்லது கடற்படைத் தளபதி வசந்த கரன்னஙொடவிடமிருந்தோ இதுவரை வரவில்லை. "எமது ஜனாதிபதிக்கு மிக முக்கியமான புலநாய்வுத் தகவல்களை வழங்கிய மனிதரை நாம் மறக்கக் கூடாது. பிரபாகரன் எங்கே வாழ்ந்தார் என்பதை நோர்வே துல்லியமாக அறிந்தே வைத்திருந்தது. ஆனால், அவர்கள் இதனை எமது ஜனாதிபதியிடம் கூறியிருப்பார்களா? அப்படியானால் பிரபாவின் மறைவிடம்பற்றிய தகவல்களை எமது ஜனாதிபதியிடம் கூறியது யார்? அது வேறு யாருமல்ல, அவர் எமது விருப்பத்திற்குரிய கருணா முரளீதரன் தான்". பிரபாகரனுக்கு மிகவும் நெருங்கிய தளபதியாகவிருந்து, பிரபா செல்லும் இடங்கள், பதுங்கிக்கொள்ளும் இடங்கள் என்று அனைத்தையுமே அறிந்துவைத்து எமது ஜனாதிபதியிடன் அவற்றைக் கூறியது எமது கருணாதான். நோர்வேயின் அமைச்சர்கள் பிரபாகரனைப் பலமுறை சந்தித்து அவரின் பல்வேறு ரகசிய இடங்கள் பற்றிய வரைபடங்கள், ரகசிய இடங்கள் பற்றிய புலநாய்வுத் தகவல்கள் என்று அனைத்தையுமே அறிந்து வைத்திருந்தனர். ஆனால், அவர்கள் அந்தத் தகவல்களை எமக்குத் தரவில்லை. கருணா அம்மானினால் எமக்கு வழங்கப்பட்ட இந்த விலைமதிக்கமுடியாத தகவல்களைக் கொண்டே நாம் போரினை வென்றோம். கருணா இல்லாமல் எம்மால் இந்தப் போரினை நிச்சயமாக வென்றிருக்கவே முடியாது. இதற்காக எமது முழுச் சிங்கள தேசமுமே கருணாவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. அவருக்கான தகுந்த சன்மானத்தை நாம் வழங்க வேண்டும், அவருக்கு உரிய மரியாதையினை நாம் வழங்க வேண்டும், அவரை எம் உயிருனும் மேலாகப் பாதுகாக்க வேண்டும்".
  8. இலங்கை ராணுவத்தினரிடமிருந்து வரும் தகவல்களின்படி, பேச்சுவார்த்தைக் காலத்தில் ராணுவப் புலநாய்வுத்துறை இயக்குனருக்கும் கருணாவுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வினையடுத்து புலிகளிடமிருந்து 2004 பங்குனியில் வெளியேறிய கருணா கிழக்கின் சில பகுதிகளில் ராணுவத்தின் புலநாய்வுத்துறையினருடன் சேர்ந்து இயங்கத் தொடங்கினார் என்று தெரியவருகிறது. ஆனால், பிளேக்கினால் கூறப்படுவதுபோல கருணாவும் டக்கிளஸும் கிழக்கில் இணைந்து செயற்படுவதென்பது சாத்தியத்திற்கு அப்பாற்பட்டதென்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, கருணாவின் அன்றைய நடவடிக்கைகள் தொடர்பாக ராணுவத்தின் பிரதான தளபதிகளில் சிலரிடமிருந்தே தமக்கு நம்பந்த்தகுந்த ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றதாக பிளேக்கின் அறிக்கை கூறியிருந்தது. ஆனால், இதே தளபதிகள் பிளேக் உட்பட இன்னும் கொழும்பில் இயங்கிவந்த ஏனைய சர்வதேச நாடுகளின் தூதர்களுக்கும் தவறான தகவல்களைக் கொடுத்திருக்கவும் வாய்ப்பிருப்பதாக கருணா கூறுகிறார். அதேபோல, தானோ அல்லது டக்கிளஸின் துணைராணுவக் குழுவோ விபச்சார விடுதிகளை நடத்துவதாகவும், தமிழ்ச் சிறுமிகளைக் கடத்திவந்து இலங்கை ராணுவத்தினருக்காக விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாகவும் ரொபேட் பிளேக் கூறுவதுகூட இவ்வாறான தகவல்களின் அடிப்படையில்த்தான் என்று கருணா கூறுகிறார். இலங்கையின் பாதுகாப்பிற்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கக் கூடிய வகையில் தூதுவர் ரொபேட் ஓ பிளேக் அமெரிக்காவுக்கு தான் பற்றியும், ராணுவத்தின் தந்திரோபாய நடவடிக்கைகள் பற்றியும் தவறான தகவல்களை அனுப்பிவருவது கவலையளிக்கிறது என்று கருணா அம்மான் கூறுகிறார். ஆனால், ராணுவ உயர்பீடத்தின் தகவல்களின் படி கருணா அம்மான் உட்பட அரசின் முக்கிய தலைவர்கள் பற்றியும், ராணுவத்தினரின் நடவடிக்கைகள் பற்றியும் அமெரிக்கா வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்து வந்தாலும்கூட, புலிகளை அழிக்கும் இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்குத் தொடர்ச்சியான ஆதரவினை அமெரிக்கா வழங்கிவருவதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதன் ஒரு படியாகத்தான் சர்வதேசக் கடற்பரப்பில் பயணிக்கும் புலிகளின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்கள் பற்றிய தகவல்களை இலங்கை இந்திய அரசுகளுக்குத் தொடர்ச்சியாக வழங்கிவந்ததன்மூலம், அவற்றினை அழித்து புலிகளை பலவீனப்படுத்த அமெரிக்கா உதவியதற்காக ஜனாதிபதி மகிந்த ராகபக்ஷ வெளிப்படையாகவே அமெரிக்காவுக்கு நன்றிகூறியதும் நடந்தது. அரசின் உயர் மட்டத்திலுள்ளவர்களின் கருத்துப்படி கொழும்பில் இருக்கும் சர்வதேச தூதரகங்கள் தமது நாடுகளுக்கு அனுப்பிவைத்த போர் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகளின் அடிப்படையிலேயே இலங்கைக்கெதிரான சர்வதேச பொறுப்புக் கூறல் நிர்ப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரியவருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையிலேயே இலங்கைக்கான ஜி எஸ் பி வரிச்சலுகைகளை ரத்துச் செய்ய அவ்வொன்றியம் முடிவெடுத்திருக்கிறது. மேலும் கருணா உட்பட்ட அரச உயர்மட்டத்திலிருப்பவர்களின் கருத்துப்படி புலிகளுக்குச் சார்பாக இயங்கும் பல சர்வதேச நாடுகளின் ராஜதந்திரிகள் தமது நாடுகளுக்கு அனுப்பிவரும் தவறான தகவல்கள் புலிகளுக்கெதிரான யுத்தத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்றும் கூறியிருக்கின்றனர். முற்றும்
  9. சற்று நேரம் துன்பங்கள் மறந்து சிரிக்கலாமே .........! 😁
  10. பாலைப்பழம் தேடி ஒரு பயணம்.......! 😁
  11. ரயில் போனால் தான் தண்டவாளம் தெரியும் அதே போல் சிலருடன் பழகி பார்த்தால் தான் தெரியும் அவர்கள் வண்டவாளங்கள். 🌹
  12. களப்படப்பிடிப்பாளர் பயிற்சியின் போது கிளிநொச்சி, 2002 பெண் போராளிகள் நான்காம் ஈழபோர்
  13. 100 வருடங்களுக்கு முன்பு நடந்ததை மீண்டும் தேடிப்போய், தங்களுக்கு நடந்தவற்றை, வரலாற்றை மறையவிடாமல் ஆவணப்படுத்துகிறார்கள் ஆபிரிக்க அமெரிக்கர்கள்.. அதே போல இவையும் பாதுகாக்கப்படவேண்டும்
  14. விசாலகன் சிறப்புப் படையணி, வினோதன் படையணி, மதனா படையணி, அன்பரசி படையணி, மாருதியன் படையணி ஆகியவற்றின் போராளிகள் 2004-2007 "மாவீரன் வினோதன் படைத்ததைக் கேளு திடமென முழங்கும் விசாலகன் அணியும் இரண்டுமே போரென ஒலிக்கட்டுமாடு ........................ ....................... மாருதியன் படையது ரெடியானது" கீழே மூன்று விதமான சீருடை அணிந்தோர் நிற்கின்றனர்: (பச்சை, பச்சை வரிப்புலி, ஒருவித Olive/sap பச்சை) 'Two different colours of uniform' 'Two different colours of uniform'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.