மனிதன் பின்வரும் நான்கு வழிகளில் ஒன்றில்த்தான் மரணிக்க முடியும். அவையாவன, இயற்கைச் சாவு, விபத்து, கொலை அல்லது தற்கொலை. இதன்படி முதல் இரு வழிகளின்மூலம் பிரபாகரன் இறந்திருக்கலாம் என்பது சாத்தியமற்றது. மற்றைய இரு வழிகளில், பிரபாகரன் தம்மாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்று இலங்கை ராணுவம் கூறுகிறது. ஆனால், கிடைக்கும் ஆதாரங்களைக்கொண்டு பார்க்கும்போது பிரபாகரன் தற்கொலைசெய்துகொண்டு இறைந்தார் என்பதே மிகவும் சாத்தியமானதாகத் தெரிகிறது.
ஆர்ஜன்டீனாவில் பிறந்த மருத்துவரும், கெரில்லா தலைவருமான சேகுவராவின் 45 ஆவது நினைவுதினம் ஐப்பசி 9 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வாறே, ஐப்பசி 20 ஆம் நாள் லிபியாவின் நீண்டநாள் தலைவர் முகம்மர் கடாபியின் முதலாவது நினைவுநாளும் அனுட்டிக்கப்படுகிறது. இவர்கள் இருவருமே கைதுசெய்யப்பட்டபின்னர் எதிதிரிகளால் கொல்லப்பட்டவர்கள். இவர்களின் உடல்களின் மேற்பகுதியினை புகைப்படமாகக் காண்பித்து செய்திவெளியிட்டிருந்தார்கள். அவர்களின் உடல்களில் இருந்த காயங்களும், இரத்தப் பெருக்குமே என்னை பிரபாகரனின் மரணம் தொடர்பாக மீளாய்வு செய்யவேண்டிய உந்துதலினைக் கொடுத்தது.
பிரபாகரனின் மரணம் தொடர்பான எனது முதலாவது கட்டுரையினை 2010 இல் எழுதியதன் பின்னர் , மின்னஞ்சல் மூலம் எனக்குத் தெரிந்த, பலவிடயங்கள் தொடர்பான அறிவும், தெளிவான பார்வையும் கொண்ட ஊடகவியலாளர் ஒருவருடன் நான் நடத்திய சம்பாஷணையின் எழுத்துவடிவினை இங்கே பகிர்கிறேன்.
சச்சி : பிரபாகரனின் மரணம் தொடர்பான உங்களின் நிலைப்பாட்டினை நான் அறியலாமா? நீங்கள் அண்மையில் நியூ யோக்கர் பத்திரிக்கையில் ஜொன் லீ அண்டர்சன் அவர்களின் இதுதொடர்பான கட்டுரையினையும், அதற்கான எனது பதிலையும் படித்திருப்பீர்கள். அவர் தனது கட்டுரையில் பிரபாகரனின் உடலின் புகைப்படங்கள் தனக்குக் காண்பிக்கப்பட்டதாகவும், குண்டு அவரின் மண்டையோட்டினை துளைத்து வெளியேறும் "எக்ஸிட் வூண்ட்" காணப்பட்டதாகவும் எழுதியிருந்தார். அவரின் இந்த கூற்று என்னைக் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. இணையத்தில் கிடைக்கப்பெற்ற இப்புகைப்படங்களின்படி அவரின் இரு கைகளிலும் சுருக்கங்கள் தெரிகின்றன. அதாவது தண்ணீரில் பல மணித்தியாலங்கள் தோய்ந்த நிலையில் அவை சுருக்கங்களுடன் காணப்பட்டன. சாதாரண மரணங்களில் இவ்வகையான தோல்ச் சுருக்கங்கள் காணப்படுவது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். என்னைப்பொறுத்தவரை பிரபாகரன் பொட்டாஸியம் சயனைற்றினை உட்கொன்டு முன்னரே மரணித்துவிட்டிருக்க வேண்டும். உயிரற்ற அவரது உடலை எடுத்துவந்த ராணுவத்தினர் தாமே அவரைக் கொன்றதாகக் காட்டுவதற்காக, பின்னரே அவரின் தலையில் துப்பாக்கியினால் சுட்டிருக்க வேண்டும். இவ்விடயம் தீர ஆராயப்படவேண்டிய தேவை இருப்பதாலும், அவரின் உடலை இனிமேல் எம்மால் பார்க்கமுடியாது என்பதாலும், அவரது நெற்றியில் ஏற்பட்ட காயம் அவர் உயிருடன் இருக்கும்போது ஏற்பட்டதா அல்லது மரணம் அடைந்தபின்னர் உருவாக்கப்பட்டதா என்பதை உங்களால் கூறமுடியுமா? என்னைப்போன்றே, உடல்த் தடயவியல் நிபுணரான பேராசிரியர் கீத் சிம்ப்சனும் இதனை நிச்சயம் அவதானித்திருக்கிறார். எனது வாதத்திற்கு வலுச்சேர்க்கும் தடயங்கள் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
1. பிரபா உண்மையாகவே உயிருடன் இருக்கும்போது சுடப்பட்டிருந்தால், அவரைக் குறிபார்த்துச் சுட்டவர் இன்றைக்கும் தனது வீரப்பிரதாபங்களை வெளியே பறை சாற்றிக்கொண்டு இருந்திருப்பார். ஆனால், இதுவரை சிங்கள ராணுவத்தில் ஒருவராவது பிரபாகரனைச் சுட்டது தானே என்று உரிமை கோரவில்லை.
2. பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டிய கருணா வேண்டுமென்றே "அவரது உடலில் சயனைட் வில்லை காணப்படவில்லை" என்று கூறியிருந்தான். இது தனது எஜமானர்களின் கட்டளைப்படியே கருணாவினால் கூறப்பட்டது என்பது தெளிவாவதுடன், கருணா கூறியததற்கு எதிர்மாறாக, பிரபாகரன் சயனைட் உட்கொண்டே மரணித்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விடுகிறது.
அந்த ஊடகவியலாளர் : மரணமானவுடன், நீர்ப்பற்றுக் குறைவதால் தோல் சுருங்கிவிடுகிறது. அதேவேளை, மரணமானபின்னர் உடல் நீரிற்குள் இருந்திருந்தால் தோல் வீங்கியதாகவோ அல்லது நீர் கட்டியது போன்றறே தென்படும். ஒருவர் உயிருடன் இருக்கும்போது ஏற்படுத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கும், இறந்தபின்னர் ஏற்படுத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்குமிடையே வேறுபாட்டினைக் கன்டறிவது சாத்தியமானதே. உயிருடன் இருக்கும் ஒருவர் சுடப்படும்போது சூட்டுக்காயப்பகுதியில் தோலும் அதன் கீழான பகுதிகளும் பாதிக்கப்பட்டிருப்பதுடன், சுடப்பட்டதாகக் கூறப்படும் தலைப்பகுதியின் சிதறல்களும், குருதிக் கசிவும் ஏற்பட்டிருக்கும். இறப்பின் பின்னர் குருதி கசிந்துவிடுவதால் பெரும்பகுதி இரத்தம் கொல்லப்பட்டவரின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடுகிறது. பெரும்பகுதி இரத்தம் கட்டியாகிவிடுவதால், வேறு பகுதிகளுக்கு இரத்தம் செல்வதும் தடைப்பட்டு விடுகிறது. ஆனால், இது எவற்றையுமே எம்மால் இப்போது உறுதிப்படுத்த முடியாது.
சச்சி : நான் முன்னர் உங்களுக்குக் கூறியதன்படி, இலங்கை ராணுவத்தால் வெளியிடப்பட்டிருக்கும் பிரபாகரனின் இரு புகைப்படங்களை அனுப்பி வைக்கிறேன். இப்படங்களில் பிரபாகரனின் கைகளிலும் கால்களிலும் காணப்படும் வெண்ணிறத்தன்மை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : மரணத்துடன், உடலின் பகுதிகளுக்கான ரத்த ஓட்டத்தை இதயம் நிறுத்திவிடுகிறது. இரத்தம் இறந்தவரின் உடலின் சில பகுதிகளில் தேங்கிவிட்டபின்னர் கட்டியாகிவிடுகிறது. உடல் அண்ணாந்து கிடக்குமாயின் இந்த இரத்தச் சேர்ப்பு பெரும்பாலும் அடிப்பகுதியிலேயே நடக்க வாய்ப்பிருக்கிறது. படத்தின்படி, மேற்சட்டைக்கும், காற்சட்டைக்கும் இடையிலான பகுதியில் ஊதா நிறத்திலான பகுதியொன்றினை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதேவகையான ஊதா - நீல நிற பகுதி அவரின் தலைப்பகுதியிலும், காதுக்கு அருகிலும் காணப்படுகிறது. அதேவேளை, உடலின் அவசியமற்ற பகுதிகளான கை கால்களிலிருந்து இரத்தம் வெளியேறிவிடுவதாலேயே அவை வெண்ணிறத்தன்மையுடையனவாகக் காணப்பட்டிருக்கலாம். மரணத்தின் பின்னர் இப்படி நடப்பது இயல்பானது. உயிருடன் இருக்கும்போது சுடப்பட்டிருந்தால், மரணம் உடனடியாக நடந்திருக்கும், இரத்தக் கசிவும் அதிகம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், மேலே படத்தில் காணப்படும் காயங்களைப் பார்க்கும்போது அவர் மரணமடைந்தபின்னரே சுடப்பட்டதாகத் தோன்றுகிறது. எப்படியிருந்தாலும் சில நேரத்தின்பின்னர் உடல் ஒரேவிதமாகவே தென்பட்டிருக்கும். உடலில் இருந்து ரத்தம் வெளியேறிவிடுவதனால் உடலின் சில பகுதிகள் வெண்மையாகக் காட்சிதருவது இயல்பானது.
சச்சி : உடலின் அனைத்துப் பாகங்களும் வெண்மையாக இருப்பதற்கும், உயிருடன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும் தொடர்பிருப்பதாக நினைக்கிறீர்களா? உடலின் சில இடங்களில் காணப்பட்ட ஊதா - நீல நிறப் பகுதிகள் கூறும் விடயம் சயனைட் உட்கொண்டதன் விளைவுதான் என்று நம்புகிறீர்களா?
பதில் : தடயவியல் பரிசோதனையிலிருந்து தோலின் தோற்றத்தினைப் பயன்படுத்தி மரணம் இயற்கையானதா அல்லது கொலையா என்பது கண்டறிவது கடிணமானது. சில இடங்களில் இரத்தம் தேங்கிவிடுவதாலேயே ஊதா நிறத் தோல்கள் தெரிகின்றன. சிலவேளை இரத்தத்தில் ஒக்சிஜன் குறைபாட்டினால் இது ஏற்பட்டிருக்கலாம். ஆனால், சயனைட் உட்கொண்டால் கடும் சிவப்பு நிறத்திலேயே இப்பகுதிகள் இருந்திருக்கும்.
உடலில் ரத்தம் முற்றாக ஓடிவிடுவதால் அவை வெண்மையாகக் காட்சியளிக்கும் என்று நான் கூறினாலும், சிலவிடங்களில் இரத்தம் தேங்கி நீல நிறமாகக் காட்சியளிப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள். ஆகவே, நான் அவதானித்தவை நிச்சயமாக நடந்திருக்கும் என்று என்னால் உறுதிப்படுத்த முடியாது.
சச்சி : உங்களின் விளக்கத்திற்கு நன்றி. உண்மையாக நடந்ததைக் கண்டறிய முடியாதிருப்பது துரதிஷ்ட்டமே.