மிக சிறந்த சிந்தனை (Good Idea) பங்கின் விலை இதற்குமேல் இறங்குவதற்கு வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் இது ஒரு சிறப்பான திட்டம்.சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சாதகமாக இருந்தால் மிக பெரிய அள்வில் இலாபம் ஈட்டுவீர்கள்.
எதிர்பாராத வகையில் திட்டம் நிறைவேறாமல் போனால் இழப்பை மட்டுப்படுத்துவதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா? (Hedging)
உங்களது Portfolio இல் Counter Trend திட்டம் அதிகமாக உள்ளதாக உணர்கிறேன் (எனது கணிப்பு தவறாக இருக்கலாம்). உதாரணமாக உல்லாசப்பயணம், பிட் கொயின்.
https://www.youtube.com/watch?v=oXno18pOHgo
பங்கு சந்தை வெற்றிக்கு தேவையான ஆய்வு (Research, Fundamental analysis), திட்டம் (Plan), சரியான நேரத்தில் முதலிடுதல் (Technical analysis), இவற்றுடன் முக்கியமாக உள்வியல் (Trading psychology), பணமுகாமைத்துவம் (Risk Management).
உங்களது இந்த திட்டத்தினை Top down analysis என்பார்கள். நுண்பொருளாதாரத்தில் (Macro Economic) ஏற்படும் மாற்றத்தினைஅடிப்படையாகக்கொண்ட திட்டம்.சிறப்பான திட்டம் என்பதற்கு மாற்று கருத்தில்லை,
கால கணிப்பு தவறான பட்சத்தில் உங்கள் இழப்புகளை தாங்கும் வலு உங்களுக்கிருந்தால் இந்த வர்த்தகத்தில் ஒரு தவறுமில்லை.
மேலே உள்ள காணொளியில் 6 பில்லியனை இழப்பதற்கு காரணம் அவரது திட்டம் தவறானது ஆனாலும் குளிர்காலம் வரும் வரை அவர் பொறுத்திருந்தால் அவருக்கு இன்னொரு சந்த்தர்ப்பம் கிடைத்திருக்கும் ஆனால் அவர் இழப்பை குறைக்க மேலும் வாங்கியமை மூலம் Double down (Beginners mistake). அவராகவே தனக்கான ஆப்பை இழுத்தார்.
அவரது திட்டத்தில் stop loss இல்லை, Double down மூலம் மேலும் ஆபத்தினை அதிகரித்தார் ( no risk management) அதன் மூலம் Margin call ஏற்பட்டது, இதற்கெல்லாம் காரணம் எமது உளவியல் தான் காரணம்.
இவர் அனுபவம் உள்ள Trader ஆக இருந்தாலும் புதிதாக வர்த்தகத்திலீடுபடுபவர்கள் போல் தவறு செய்துள்ளார். பெரும்பாலும் பெரிய வர்த்தகர்கள் மனநிலை வேட்டையாளர்கள் போல் இருக்கும் என்பார்கள், அவர்கள் கூட இறுக்கமான சூழ்நிலையில் சதாரண மனிதர்கள் போலவே சிந்திப்பார்கள்.
இதற்கு உதாரணமாக ஒரு கதை மகா பாரதத்தில் கூறுவார்கள் மனிதர்கள் எல்லாம் ஒரே மாதிரியாகவே சிந்திப்பார்கள்.
அர்யுனன் கர்ணன் மேல் உள்ள கடுப்பில் ஊரான் காசில் (துரியோதனன் காசில்) கர்ணன் படம் காட்டுகிறான் என பார்ப்பவர்களிடம் அவதூறு சொல்லிக்கொண்டிருந்தார், அதனை கேட்ட கிருஸ்ணர் அர்யுனனிடம் 3 மலைகளை கொடுத்து (தங்கம், வெள்ளி, வைரம்) அந்தி சாய்வதற்குள் மக்களுக்கு தானமாக கொடுத்துவிடு என்றார்.
அவர் மக்களை அழைத்து வரிசையாக விட்டு அந்த மலைகளை உடைத்து தானம் வழங்க தொடங்கினார் அந்தி சாயும் நேரம் வந்து விட்டது அவரால் ஒரு சிறு பங்கினைதான் தானமாக வழங்க முடிந்தது, அர்யுனன் சோர்ந்து போய் தன்னால் இயலாது என கிருஸ்ணரிடம் கூறிவிட்டான்.
கிருஸ்ணர் கர்ணணை கூப்பிட்டு அந்தி சாய்வதற்குள் அந்த 3 மலைகளையும் தானம் வழங்க கூறினார்,கர்ணண் மூவரை கூப்பிட்டு தலா ஒவ்வொருவருக்கும் ஒரு மலை தானமாக வழங்கிவிட்டார். அர்யுனன் உண்மையில் மனரீதியாக கொடுப்பதற்கு தயாரில்லை.
இழப்பின் அளவு பெரிதாக இருக்கும் போது என்னால் சிந்திக்க முடிவதில்லை.
முதல் 3 காணொளியில் இரண்டு வார பயிற்சியுடன் (1.Trading Idea, Fundamental analysis, Technical analysis, Risk management, Trading psychology) ஆரம்ப வர்த்தகர்களை மிகவும் கடினமான 2008 காலப்பகுதியில் செயற்பட வைத்துள்ளார்கள்.