உங்கடை கன நாள் புடுங்குப்பாடுகளை பாக்க எனக்கு இந்த சீன் தான் ஞாபகத்துக்கு வரும்... 😁
ரதி:- மோகன்....மோகன்
மோகன்:- என்ன மோகன்? ருவன்ரிஃபோர் அவர்ஸ் எனக்கு ரபுள் குடுக்குறே எனக்கு..ஏண்டா யாழ்களத்தை ஆரம்பிச்சன் எண்டு பீல் பண்ணுறன் இப்ப...கொஞ்சம் கூட என்ரை நிலைமை தெரியாமல் கதைக்கிறியள்
ரதி:- என்ன மோகன் எனக்கா உங்கடை நிலமை தெரியேல்லை?????
மோகன்:- அப்ப நான் என்ன பொய்யா சொல்லுறன்? எல்லாரும் சைன் பண்ணி வாங்கோ எண்டால் ஏன் இடக்கு முடக்காய் உள்ளுக்கு வாறியள்? ஒழுங்காய் வந்தால் ஒரு பிரச்சனையும் இருக்காது...உங்களுக்கு சிஸ்டம் தெரியேல்லை...கண்ட கண்ட இடங்களிலை மவுசாலை அமத்துறது....பிறகு மோகன் அது வேலை செய்யேல்லை....இது வேலை செய்யேல்லை எண்டு ஒப்பாரி வைக்கிறது..... இஞ்சை வாற ஆக்கள் எல்லாம் வெறி இன்டலிஜன் ஆக்கள் மிஸ்டர் கோசான்,நாதமுனி,பெருமாள் கிருபன் போல பெரிய ஆக்கள்.....இதுக்குள்ளை அது வேலை செய்யேல்லை இது வேலை செய்யேல்லை எண்டு ஒரே ஓலம்.... அது சரி இப்ப என்ன பிரச்சனை?
ரதி:- அதொண்டுமில்லை மோகன் இந்த யாழ்களத்தை என்ரை பேரிலை எழுதி விட்டியளெண்டால்....இல்லாத பிரச்சனையை தூக்கி புடிச்சுக்கொண்டு வரமாட்டன் எண்டு சொல்ல வாறன்...
மோகன்:- ?????????
மிச்சம் எழுதக்கூடாது🤣