Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46808
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87997
    Posts
  4. அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    5633
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/20/22 in all areas

  1. அந்த மனசு தான் சார் கடவுள்.👍
  2. நேற்று, நீங்கள் காரிலை போகும் போது... விபத்து நடந்ததாமே, எப்படி? 😂
  3. கண்டிப்பாக........குழம்பு வைக்கும்போதுதான் அப்படி செய்வது......நீங்கள் பச்சை பாகற்காயை துருவி சம்பல் செய்தால், சாலாட் செய்தால் அப்படியே சாப்பிடுகிறோம்தானே........! 😁 ஐந்து நிமிடத்தில் சுவையான ரசம் ரெடி .......! 👍
  4. தமிழீழத்தின் அதிரடிப்படையான சிறுத்தைப்படையின முதல் பாட்டப் பயிற்சி நிறைவு நாளில் தலைவர் மாமாவும் குடும்பத்தினரும் காலம்: 1994
  5. ■ நாவடக்கம் யாதெனில்......... முடி வெட்ட எவ்வளவு..? சவரம் பண்ண எவ்வளவு..? என்றார் குருக்கள்.. அவரும் .. முடிவெட்ட எழுபது ரூபாய்.. சவரம் பண்ண ஐம்பது ரூபாய் சாமி ! என்று பணிவுடன் கூறினார்.. குருக்கள் சிரித்தபடியே, அப்படின்னா..! என் தலையை சவரம் பண்ணு என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார் குருக்கள்.. வயதில் பெரியவர் என்பதால், நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. வேலையை ஆரம்பித்தார் நாவிதர்.. நாவிதர் கோபப்படுவார் என்று எதிர்பார்த்திருந்த குருக்களுக்கு.. சற்று ஏமாற்றந்தான்.. பின்னர், குருக்கள் அடுத்த கணையைத் தொடுத்தார்.. ஏன்டாப்பா.. உன் வேலையோ..! முடி வெட்டுறது.. உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே.. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம.. உன்னை நாக்கோட சம்மந்தப்படுத்தி "நாவிதன்னு" சொல்றாங்க..? இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார் குருக்கள்.. ஆனால், நாவிதர் முகத்திலோ புன்னகை.. நல்ல சந்தேகங்க சாமி.. நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத்தட்டாம இருக்க, "நாவால" இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான்..! நாங்க நாவிதர்கள்.. எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா சாமி..? இந்த அழகான பதில் குருக்களை மேலும் கடுப்பேற்றியது.. அடுத்த முயற்சியைத் துவங்கினார்.. இதென்னப்பா, கத்தரிக்கோல்னு சொல்றீங்க.. கத்தரி மட்டுந்தானே இருக்கு.. கோல் எங்கே போச்சு..? இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிடமிருந்து.. சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க.. என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் நாவிதர்.. இதிலும் குருக்களுக்கு ஏமாற்றம்.. அடுத்து கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்.. எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குறீயே..! ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..? இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது.. அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்.. இதைத்தானே குருக்களும் எதிர்பார்த்தார்.. கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்.. இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்.. குருக்களின் "பிரியமான மீசையைத்" தொட்டுக் காட்டிக் கேட்டார்.. சாமிக்கு இந்த மீசை வேணுங்களா..? குருக்கள் உடனே, ஆமாம் என்றார்.. கண்ணிமைக்கும் நேரத்தில் குருக்களின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து.. மீசை வேணுமுன்னிங்களே சாமி..! இந்தாங்க.. என்றார். பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய் கையில்.. அதிர்ச்சியில் உறைந்து போனார் குருக்கள்.. நாவிதரோ, அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்.. அவரது "அடர்த்தியான புருவத்தில்" கை வைத்தபடிக்கேட்டார், சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா..? இப்போது குருக்கள் சுதாரித்தார்.. _வேணும்னு சொன்னா..! வெட்டிக் கையில குடுத்துடுவான்_ என்ற பயத்தில், உடனே சொன்னார்.. இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்.. என்றார் குருக்கள்.. நாவிதர் உடனே குருக்களின் புருவங்களையும் வழித் தெடுத்தார்.. சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல..? அதைக் குப்பைல போட்டுடுறேன்.. சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது.. என்றபடி கண்ணாடியை குருக்களின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்.. நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்.. முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்.. அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது.. கண்கள் கலங்க, குனிந்த தலை நிமிராமல், ஐம்பது ரூபாயை அவர் கையில் கொடுத்து விட்டு.. விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் குருக்கள். நம்முடைய அறிவும் - ஆற்றலும் - திறமையும் - அதிகாரமும் - அந்தஸ்தும் - பொருளும் - மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர.. மட்டம் தட்ட அல்ல.. இதை உணராதவர்கள் - இப்படித்தான் அவமானப்பட நேரும் ... முகநூலிருந்து......
  6. தினமும் எடுக்க வேண்டிய எண்ணெயின் அளவுகள்.....! 😢
  7. படித்தால் அறிவு வராது......வாரியார் சுவாமிகள்.....! 🌹
  8. இந்திய ராணுவம் இலங்கை சென்றதாக பரவும் வதந்தி! தகவலின் விவரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பிரச்னையை சமாளிக்க இந்திய ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொழும்பில் தரையிறங்கிய மூன்று இந்திய இராணுவ விமானம் நேற்று நள்ளிரவு, ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா அதன் நட்பு நாடான இலங்கையை, பாதுகாக்கும் நோக்கில் டெல்லி இந்திய விமானப் படைத் தளத்தில் இருந்து 180 இந்திய இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும் பஞ்சாப் ரெஜிமெண்டில் இருந்து 215 இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும் தமிழ்நாடு, தாம்பரம் இந்திய இராணுவத் தளத்திலிருந்து மெட்றாஸ் ரெஜிமென்ட் படையை சேர்ந்த 200 இராணுவ வீரர்களும், முதல் கட்டமாக… கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் வந்து இறங்கி உள்ளார்கள். இன்று இரவும் மீண்டும் வன்முறை பெரிய அளவில், தலை தூக்கும் என கருதப் படுவதால் இலங்கையின் வேண்டு கோளுக்கு இணங்க இவ் அவசர உதவி செய்யப் பட்டதாக டெல்லியில் இருந்து தெரிவிக்கப் படுகின்றது. அத்துடன் இன்று மாலை, இந்திய போர் கப்பலான “விக்ரமாதித்யா”,4500 இராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு கொழும்பு துறை முகத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக, இந்திய தூதரகத்தை சேர்ந்த, அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் ஒரே நாளில் ஆறாயிரம் இந்திய இராணுவம், இலங்கைக்கு வந்துள்ளதை இலங்கையின் இறையாண்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்று, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் மிகுந்த கண்டனத்தை அரசுக்கு தெரிவித்ததுடன், கோத்தபாயாவை உடனடியாக பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை குமரி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதைப் பதிவிட்டுள்ளனர். உண்மை அறிவோம்: இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலை அதிகரித்தது விட்டது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை சமாளிக்க இந்திய ராணுவம் இலங்கைக்கு வந்ததாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் எந்த பிரிவிலிருந்து எத்தனை வீரர்கள் என்றார்கள் என்று துல்லியமாகச் சொன்னது போன்று பதிவிடப்பட்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக விமானந்தாங்கி கப்பலான விக்ரமாதித்யா இலங்கை செல்கிறது என்று கூறியது சந்தேகத்தை வலுப்படுத்தியது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பொருளாதார உதவிகளை அந்நாட்டு அரசு கேட்டுள்ளது. ராணுவ உதவி கேட்டதாக கூறியிருப்பது நம்பும் வகையில் இல்லை. எனவே இந்த பதிவு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம். இந்திய ராணுவம் இலங்கையில் தரையிறங்கினால் அது மிகப்பெரிய செய்தியாக வெளியாகி இருக்கும். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இந்திய ராணுவம் இலங்கை என்றது என்று பாதுகாப்புத் துறையிலிருந்து எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. எனவே, நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இலங்கை பிரிவைத் தொடர்புகொண்டு இந்திய ராணுவம் இலங்கைக்கு வந்துள்ளதா என்று விசாரிக்கும் படி கேட்டுக்கொண்டோம். அப்போது அவர்கள், “இந்த தகவல் தவறானது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டு நாங்கள் உறுதி செய்துவிட்டோம். இலங்கைக்கு இந்திய ராணுவம் வந்ததாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அந்த படம் கடந்த ஆண்டு இந்தியா – இலங்கை ராணுவ பயிற்சியின் போது எடுக்கப்பட்டது என்பதும் உறுதி செய்துள்ளோம். மேலும், இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகமும் இந்த தகவலை மறுத்துள்ளது” என்று கூறினர். மேலும், இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட பத்திரிகை செய்தியின் இணைப்பையும் நமக்கு வழங்கினர். உண்மைப் பதிவைக் காண: defence.lk I Archive 1 I army.lk I Archive 2 அதில், “இந்திய இராணுவத்தைச் சேர்ந்த எவரும் நாட்டுக்குள் நுழைய வில்லை எனவும் இது தொடர்பில் சில இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன திட்டவட்டமாக மறுத்துள்ளார். இவ்வாறு பொய்யாக பரப்பப்பட்டு வரும் செய்திகளில் சித்தரிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள், கடந்த ஆண்டு நடைபெற்ற ‘மித்ர சக்தி’ என்று அழைக்கப்படும் இந்திய-இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியின் போது வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புகைப்படங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்” என்று இருந்தது. மித்ர சக்தி என்ற பெயரில் இந்திய – இலங்கை கூட்டு பயிற்சி நடந்தது தொடர்பான செய்தியை தேடினோம். 2021ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இது தொடர்பான செய்தியை இலங்கை தரைப்படை வெளியிட்டிருந்தது. இதன் மூலம் இந்திய ராணுவம் இலங்கை சென்றது என்று பகிரப்படும் செய்தி தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது. முடிவு: இலங்கைக்கு இந்திய ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது என்று பரவும் செய்தி தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். https://tamil.factcrescendo.com/india-not-sent-army-to-sri-lanka/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.