1947 இல் சுதந்திரம் அடைந்தபின்னர் இலங்கையில் தமிழர்கள் இருவகையான ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும் என்று தந்தை செல்வா எச்சரித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் பேசிய தந்தை செல்வா அவர்கள் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலமும், ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் ஊடாகவும் இலங்கையில் தமிழர்களின் இருப்பிற்கு பாரிய அச்சுருத்தால் ஏற்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்களை "நில அபகரிப்பு" என்றும், ஒற்றையாட்சிக் கோட்பாட்டினை "தமிழருக்கான அதிகாரங்களைக் கொள்ளையிடல்" என்றும் அவர் விழித்துப் பேசினார். இவையிரண்டின் மூலம் தமிழர்கள் வெகு விரைவில் சிங்களவர்களுக்கு அடிமையாக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பறிப்பு இலங்கையிலிருந்து தமிழினத்தை முற்றாக அழித்துவிடும் முயற்சியின் ஒரு அங்கம்தான் என்றும் அவர் முழுமையாக நம்பியிருந்தார், அதையே மக்களிடம் கூறிவந்தார்.
சமஷ்ட்டி அடிப்படையிலான அரசியல்த் தீர்வொன்றே இலங்கையில் தமிழர்களின் சுதந்திரத்திற்கும் அவர்களைன் அடையாளத்திற்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் முழுமையாக நம்பினார். தனது இந்தக் கண்ணோட்டத்தை மக்களிடையே பரப்புவதற்காக சமஷ்ட்டிக் கட்சியென்று புதியதொரு அரசியல்க் கட்சியை அவர் ஆரம்பித்தார். தனது புதிய கட்சியினை 1949, மார்கழி 18 இல் ஆரம்பித்து வைத்துப் பேசிய தந்தை செல்வா அவர்கள் பல்லின, பல்கலாசார மக்கள் வாழும் இலங்கை போன்ற நாட்டிற்கு ஒற்றையாட்சி ஒருபோதுமே தீர்வாக அமையாதென்றும், இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு சமஷ்ட்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே மிகவும் சிறந்தது என்று அவர் கூறினார்.
அவர் மேலும் பேசுகையில், "ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் கீழ் நாம் முதலில் அரசில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பங்கினை இழந்தோம். அடுத்ததாக தேர்தலில் எமது வாக்குப் பலத்தினைக் குறைப்பதற்காக இந்தியத் தமிழ்ச் சகோதரர்களின் பிரஜாவுரிமையினை அவர்கள் பறித்தார்கள். தமிழரின் பூர்வீக தாயகத்தைச் சிதைக்கும் நோக்குடன் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்களை முடுக்கி விட்டிருக்கிறார்கள். ஆகவே, சமஷ்ட்டி அடிப்படையிலான அரசியல்த் தீர்வு தமிழருக்கு சட்டபூர்வமாகக் கிடைக்கவேண்டிய அரச அதிகாரத்தினைப் பெற்றுக்கொடுக்கும். இதன்மூலம், கட்டுபாடின்றி சட்டத்திற்குப் புறம்பான முறையில் தமிழர் தாயகத்தின் மேல் நடத்தப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்கள் முடிவிற்குக் கொண்டுவரப்படும்" என்று அவர் கூறினார்.
திட்டமிட்ட முறையில் அபகரிக்கப்பட்டு வந்த தமிழர் தாயகத்தைப் பாதுகாப்பதே தந்தை செல்வாவின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. அதனால், "சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரைய முடியும்" எனும் சுலோகத்தினை அவர் முன்வைத்து வந்தார். தமிழர் தாயகம் அவர்களின் கைகளில் இருந்தால் மட்டுமே இனத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்க முடியும் என்று அவர் தொடர்ச்சியாக வாதாடி வந்தார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பிரதேசமான பட்டிப்பளை கல்லோயா எனும் சிங்களக் குடியேற்றமாக அரசினால் கபளீகரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தந்தை செல்வா மிகத் தீவிரமாக தமிழர் தாயகம் காக்கப்படல் வேண்டும் என்கிற கோரிக்கையினை முன்வைத்து பேசத் தொடங்கினார். இலங்கையின் இரு பிரதமர்களுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கைகளின் கருப்பொருளாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துவதே அமைந்திருந்தது.
1957, ஆடி 25 இல் பிரதமர் பண்டாரனாயக்கவுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி, தமிழர் தாயகத்தில் இடம்பெறும் குடியேற்றங்களை நிர்வகிக்கும் அதிகாரம் பிரதேச சபைகளுக்கே வழங்கப்படவேண்டும் என்று அவர் கோரினார்.
அவ்வுடன்படிக்கையின் சரத்து "பி" இவ்வாறு கூறுகிறது,
"புதிதாக மேற்கொள்ளப்பட்டும் குடியேற்றத் திட்டங்கள் அப்பிராந்திய அதிகார சபைகள் ஊடாகவே நிர்வகிக்கப்படவேண்டும் என்பது ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த குடியேற்றங்களை யார் யாருக்கு வழங்குவதென்கிற அல்லது யார் யார் இத்திட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவர் என்கிற தீர்மானத்தினை இந்த பிராந்திய நிர்வாகங்களே தீர்மானிக்கும். தற்போது கல்லோயா திட்டத்தை நிர்வகிக்கும் கல்லோயா சபையின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கப்படல் அவசியம்".
அதேபோல 1965 , பங்குனி 24 இல் தந்தை செல்வா அவர்கள் அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்கவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தமிழரின் தாயகம் தமிழர்களினால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுவதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று கோரியிருந்தார். அவ்வொப்பந்தம் பின்வருமாறு கூறுகிறது,
சரத்து 4 ) நிலங்களை அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரச் சட்டம் சீர்திருத்தப்பட்டு இலங்கையின் குடிமக்கள் நிலங்களை உரிமையாக்கிக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்படும். மேலும் தந்தை செல்வாவின் கோரிக்கைகளுக்கு இணங்கிய டட்லி, குடியேற்றத் திட்டங்களின் மூலம் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படும்பொழுது பின்வரும் விடயங்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கவனிக்கப்படுதல் அவசியம் என்றும் ஏற்றுக்கொண்டார்.
1) வடக்குக் கிழக்கில் பகிர்ந்தளிக்கப்படும் நிலங்கள், இம்மாவட்டங்களில் வாழும் மக்களுக்கே முதலில் வழங்கப்பட வேண்டும்.
2) இந்நிலங்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
3) வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் ஏனைய தமிழ் பேசும் மக்களுக்கு அடுத்ததாக முன்னுரிமை வழங்கப்படுதல் அவசியம்.
ஆனால், தமிழரின் தாயகத்தை காக்கவேண்டும் என்கிற நோக்கில் தந்தை செல்வா அவர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் இந்த இரு ஒப்பந்தங்களையும் சிங்களவர்கள் தூக்கியெறிந்ததன் மூலம் உருக்குலைந்து போயின. இவ்வொப்பந்தங்களின் தோல்வியே சிங்களத் தலைவர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வடக்குக் கிழக்கில் தமிழரின் நிலங்களை கூறுபோட்டு அபகரிக்கவும், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கவும் வழியமைத்துக் கொடுத்தன. இதன்மூலம் இப்பிரதேசங்களில் இருந்த தமிழருக்கான தேர்தல் பலமும் மிகப் பலவீனமான நிலைக்கு இழுத்து வீழ்த்தப்பட்டு, இப்பகுதிகள் சிங்களத் தேர்தல்த் தொகுதிகளாக மாற்றப்பட்டன.
1881 இலிருந்து 1981 வரையான நூற்றாண்டுக் காலத்தில் தமிழர் தாயகம் எவ்வாறு இனப்பரம்பல் மாற்றத்தை எதிர்கொண்டது என்பதை பின்வரும் அட்டவணை காட்டுகிறது. இதன்படி கிளிநொச்சி மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் அடங்கியிருந்தது. அத்துடன் 1965 இல் உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகத் தனியே காட்டப்பட்டிருக்கிறது. அம்பாறை மாவட்டம் என்பது தமிழ்பேசும் மாவட்டமான மட்டக்களப்பிலிருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்டு சிங்கள மாவட்டமாக உருவாக்கப்பட்டதென்பது குறிப்பிடத் தக்கது.
Table-1 Demographic Change in the North-East Province 1881- 1981
Year
1881
1946
1981
District
Sinhalese
Tamils
Muslims
Sinhalese
Tamils
Muslims
Sinhalese
Tamils
Muslims
Jaffna
0.3
98.3
1.0
1.07
96.3
1.3
0.60
95.3
1.7
Mannar
0.67
61.5
31.1
3.76
55.1
33.0
8.10
50.6
26.6
Vavuniya
7.4
80.9
7.3
16.6
69.3
9.3
16.6
59.9
6.9
Batticoloa
0.4
57.5
30.7
4.0
69.0
27.0
3.2
70.8
24.0
Ampara
18.24
30.0
50.4
16.7
28.3
54.9
37.6
20.1
41.5
Trincomalee
4.2
63.6
25.9
20.7
40.1
30.6
33.6
33.8
29.0
The most significant change was in the Amparai District.
Table 2- Demographic Change in the Amparai District – 1911- 1981
Year
Sinhalese
Tamils
Muslims
1911
4762
7.0%
24733
37%
36843
55%
1921
7285
25203
31943
1953
26459
39985
37901
1963
62160
29%
49220
23.5%
97990
45.6%
1971
82280
30.%
60519
22%
126365
47%
1981
146371
38.01%
78315
20%
126365
47%
Next comes the Trincomalee district.
Table 3- Demographic change in the Trincomalee district 1901-1981
Year
Tamils
Muslims
Sinhalese
Others
1901
17069
60%
8258
29.90%
1203
4.2%
1921
6.8%
1911
17233
57.8%
9714
32.6%
1138
3.8%
1700
5.7%
1921
18556
54.5%
12846
37.7%
1501
4.4%
1179
3.5%
1946
33795
44.1%
23219
30.6%
15706
20.7%
3501
4.7%
1953
37517
44.7%
28616
34.1%
15296
18.2%
2488
3%
1963
54050
39.1%
42560
30.8%
39950
28.9%
1600
1.2%
1971
71749
38.1%
59924
31.8%
54744
29.1%
1828
1.0%
1981
93510
36.4%
74403
29.2%
86341
33.4%
2536
1.10%