Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    38777
    Posts
  3. P.S.பிரபா

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1866
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/15/23 in Posts

  1. எனக்கும் ஒரு ஆசை எப்படியாவது இந்த முறை யாழ் அகவை 25ற்கு ஏதாவது எழுதவேண்டும் என்று.. ஆனா எனக்கு கதை கவிதை எழுத தெரியாது அவற்றை வாசிக்க மட்டுமே விருப்பம்.. அரசியல் பற்றி எழுதுமளவிற்கு அதில் விருப்பம் இல்லை.. தெரிந்ததெல்லாம் இந்த மாதிரி படங்கள் எடுப்பதுதான்.. நான் இலங்கைக்குக் (அதிலும் வடக்கு கிழக்குப் பகுதிகள் மாத்திரம் தான்) சென்ற சமயங்களில் என் கண்ணில் பட்டு கருத்தை கவர்ந்தவற்றை படம் எடுத்து சேர்த்து வைப்பது ஒரு பொழுதுபோக்கு!!!! அப்படி எடுத்தவைகளில் சிலதை இங்கே பதிகிறேன்..நீங்கள் அங்கே நடந்த சம்பவங்களை நான்கு ஐந்து வரிகளில் எழுதுங்கள்.. ஏனெனில் மட்டுறுப்பினருக்கு நிறைய கஷ்டம் கொடுக்கக்கூடாது. உங்களுக்கு தெரிந்தது மற்றவர்களுக்கு சில சமயம் தெரிந்திருக்காது.. தனிப்பட்ட நினைவுகள் இருந்து எழுதினால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை😊 முதலில் இரு படங்களை இன்று இணைக்கிறேன்.. இது ஆலடிச் சந்தி - வல்வெட்டித்துறை.. முதல் படத்தைப் பார்த்து உங்களது மனதில் தோன்றுவதை இங்கே எழுதுங்கள்.. படங்களை நான் இணைக்கிறேன்.. அவற்றின் கருத்தை/எண்ணத்தை நீங்கள் கூறுங்கள். நன்றி..
  2. கொழும்பில எல்லோருக்கும் தெரிந்த ஒரு இடம் அல்லது விடயம் அங்கொட. அதோட அங்க போற இபோச BUS இலக்கம் 134 என்றதும் தெரியும். காரணம் என்ன? எதுக்கு கொழும்பில இவ்வளவு இடம் இருக்க இந்த இடமும் BUS இலக்கமும் நமக்கு பாடம் என்று கொஞ்சம் மண்டைய சுத்தினால் நமக்கே உறைக்கும் மற்றவரை பைத்தியம் அல்லது மட்டம் தட்ட நமக்கு இருக்கும் ஆர்வம் தான் காரணம் என்று. தம்பி 134 இல் ஏறியே வருகிறீர் என்பதும் இவனை 134 இல் ஏற்றி விடுங்கோ என்பதும் பெரிய பகிடி அப்ப. ஏன் இப்பவும் தான். அதாவது ஒருவருடைய மனதில் ஏற்படும் சிறு பிசகை அல்லது சிறியதொரு மன அழுத்தத்தை நாம் ஏளனமாக அல்லது விளையாட்டாக எடுத்துக்கொள்கின்றோம்? நான் பிரான்சுக்கு வந்தும் இந்த மனநிலை தான். நான் இருக்கும் வீட்டிலிருந்து ஒரு 100 மீற்றரில் மனநிலை வைத்தியசாலை இருக்கிறது. மனைவி மக்களுடன் சிரிப்பதுண்டு. உங்களை அடிக்கடி கொண்டு திரிய முடியாது என்று தான் பக்கத்தில் வீடு எடுத்தனான் என்று. ஆனால் இது பற்றி கொஞ்சம் ஆளமாக அல்லது தற்போதைய சூழ்நிலைப்படி பார்த்தால் மனநிலை வைத்தியரைப்பார்ப்பது என்பது சிறியவர் தொடக்கம் பெரியவர்கள் வரை இன்று சாதாரணமாகிவிட்டது நித்திரை வராததிலிருந்து வேலை மற்றும் படிக்க ஆர்வமில்லாதவர் வரை சர்வசாதாரணமாக மனநிலை சார்ந்த வைத்தியர்களின் ஆலோசனைகளைக்கேட்பது அவர்களுடன் தொடர்பில் இருப்பது நாளாந்த நிகழ்வாகிவிட்டது. இன்றைய இயந்திர வாழ்வு காரணமாக அதற்கு அடுத்த கட்டமாக அதற்கு தேவையான மாத்திரைகளை பாவிப்பதும் சாதாரண நிகழ்வுகள். ஆனால் தமிழர்கள் நாம் இன்றும் இவை கொஞ்சம் குறைவான ஆட்கள் என்ற மனநிலையுடன்??? அவர்களை ஒதுக்கியபடி??? நமது குடும்பத்தில் கூட அவ்வாறு யாருக்கும் இவ்வாறான வைத்திய தேவைகள் இருப்பின் சமூதாய பயத்தைக்காட்டி நாம் எதை விதைத்தோமோ அதையே இந்த சமூகம் பரிசாக நமக்கு தந்துவிடக்கூடும் என்ற தேவையற்ற பயம் மற்றும் குறுகிற மனப்பான்மையுடன் எவ்வளவு நாளைக்கு இன்னும்??? 25வது சுய ஆக்கத்திற்காக விசுகு...
  3. பைத்தியம் U mad bro பாகம் I நதியே…நதியே காதல் நதியே நீயும் பெண்தானே…. அடி நீயும் பெண்தானே …. நிசப்தமான இரவை குலைத்தபடி சங்கர் மகாதேவன் போனில் பாடத்தொடங்கி இருந்தார். சை…இந்த அலாம் டோனை மாத்த வேணும். பழைய நொக்கியா மாரி இல்லை, இந்த போனில் புதிதா ஒரு டோன் போடுறதுகுள்ளா போதும் போதும் எண்டாயீடும். நினைத்து கொண்டே கட்டிலில் இருந்து பிரண்டு, போனின் அலார்மை அணைத்தான் அவன். அலாம் அடிக்கிறது என்றால் அது ஒரு கிழமை நாள், காலை ஆறரை மணியாக இருக்க வேண்டும். அவன்……. அப்படி ஒன்றும் கதாநாயகன் களை எல்லாம் இல்லாவிடிலும் இந்த கதையின் நாயகர்களில் ஒருவன். ஒரு பெண்ணின் கணவன். ஒரு மகனின் தந்தை. கட்டிலில் திரும்பி பிரண்டபோதுதான் அருகில் மனைவி இல்லை என்பது உறைத்தது. நேற்றே சொல்லி இருந்தாள் “நாளைக்கு காலமை அப்பாவுக்கு ஹொஸ்பிட்டல் அப்பொயிண்ட்மெண்ட், ஸ்கூல் ரன் உங்கள் பாடு”. கட்டிலால் எழுந்து பல்லை விளக்கி விட்டு வந்து மகனை எழுப்பி, மகனுடன் பள்ளிக்கு வெளிக்கிடசொல்லி தேவாரம் பாடி, இடையில் உணவும் தயார் செய்து, அதை உண்ணவும் வைத்து, வெளியே ரத்தம் உறையும் குளிரில் நிண்டபடி காரில் படிந்திருக்கும் பனியை சுரண்டி……. நினைக்கவே அலுப்பாக இருந்தது அவனுக்கு. ஆனாலும் செய்யதான் வேண்டும். சோம்பலாய் எழுந்து போனை பார்த்தால் - இவன் மிஸ்டுகால் என காட்டியது. இவன்…….. இந்த கதையின் இன்னுமொரு நாயகன். கொழும்பில் நல்ல வசதியாக வாழும் ஒருவன். மூன்று மாடியில் ஏழு அறை வீடு, டிரரைவர், சமமையல்காரன், தோட்டகாரன் என சகல செளபாக்கியமுமான வாழ்க்கை வாழ்பவன். சரி ஏதோ ஸ்கூல் விசயமாக்கும். பிறகு அடிப்பம். என நினைத்தபடி வேலையில் மூழ்கிப்போனான் அவன். காரில் இருந்து மகன் இறங்கி போகும் போது, urgent. Plz call…..plz அவனின் போனில் இவன் அனுப்பிய குறுஞ்செய்தி மின்னியது. (தொடரும்) (யாவும் கற்பனை அல்ல) ——————————————-
  4. சமோசா கடைக்காரர் மிகவும் சரியாகவே சொல்லியுள்ளார்.
  5. Raghu Ramசிரிப்போம்😍😍. சிந்திப்போம். 😬😄 Raghu Ram · · டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார். அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்.... ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே.... "நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க.... தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க... இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்.... பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்... "இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்", "எப்படி?" "பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க... அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா... உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்... நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க... மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க.... இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு... இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு... நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்.... நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்... அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்... நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்... ஆனால் உங்களுக்கு அப்படியில்லை... உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது... உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்.... உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்... நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்.... உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க.... ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்.... மேனேஜர் சமொசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்... நீதி: "தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது".........!
  6. 2500 ஆண்டுகள் பழமையான ஆலிவ் மரம்!
  7. Variety of images · Rejoindre Sriram Govind · · நாங்க இதை பொடி பிஸ்கட்னு சொல்லுவோம்... அஞ்சி காசுக்கு மூனு.... 90 காலகட்டத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு இது தான் அன்றைக்கு பேவரிட் ஸ்நேக்ஸ்... செட்டியாரின் பலசரக்கு கடையில் தகர டப்பாவில் இந்த பிஸ்கட் மூடி வைத்திருப்பார். ஒத்த பைசா பிஸ்கட், 5 பைசாக்கு 5 பிஸ்கட், பத்து பைசாக்கோ, இருபது பைசாக்கோ பிஸ்கட் வாங்கி யூனிபார்ம் பாக்கெட்டில் போட்டு பள்ளிக்கூடத்திற்கு போகும் வழியில் ஒவ்வொரு பிஸ்கட்டாக வாயில் போடுவோம், வாயில் போட்ட ஒத்த பிஸ்கட்டை தின்னுவது இல்லை. உமிழ்நீரில் அந்த பிஸ்கட் கொவுந்து போகும் பிறகு அப்படியே நுனைத்தபடி சுவையுடன் ருசித்து விழுங்குவது தான் இந்த பிஸ்கட் தின்னும் முறை, என எழுதபடாத சட்டம் உண்டு.. சில நேரங்களில் பள்ளிக்கு வந்த பிறகு மீதம் பிஸ்கட் டவுசர் பாக்கெட்டில் இருந்தால், அதை சக பள்ளி தோழனுக்கு கொடுப்போம்.. சும்மா இல்லை.? பண்ட மாற்று முறையில்... நான் பிஸ்கட் தந்தால் நீ, சிலேட் குச்சி, சிலேட் அழிக்கும் பச்சிலை, அல்லது சின்ன கச்சி (சின்ன கோலி) இதில் ஏதாவது ஒன்று தரவேண்டும்... பர்கர், ஷவர்மா, சிக்கன் ரோல் , லேஸ் ஆகியவை இன்றைக்கு பேவரிட் ஸ்நேக்ஸின் ஆளுமை, ஒத்த பைசா பிஸ்கட் மறக்கபட்டும், மறைக்கபட்டும் உள்ளது. ( இந்த பிஸ்கட் ஒரு சில இடங்களில் இப்போதும் உள்ளது) ஒத்த பைச பிஸ்கட்டை ருசித்து தின்ற கடைசி தலைமுறையும் நாம் தான்........!
  8. இந்த பயணம் மிகவும் தனித்துவமான ஒரு சுற்றுலாவாக இருந்ததற்கு முக்கிய காரணங்கள் ஆய்வு நிமித்தமாக ஒரு உலக அமைப்பினர் எமது பயணத்தை ஒழுங்கு செய்து மடகஸ்காரில் உள்ள அவர்களது கிளை உறுப்பினர்கள் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு முக்கியமான இடங்களுக்கு அழைத்து சென்றமைதான். அங்கிருந்த 12 நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து நள்ளிரவு வரை காடு மேடு வனாந்திரம் எல்லாம் ஒரே ஹைக்கிங் தான். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு போவதானல், கிட்டஎன்றால் van அல்லது நேரத்தை வீணாக்காமல் சிறிய ரக விமானத்தில்தான் பயணித்தோம். ஒரு ஆபத்தான விலங்குகளும் மடகஸ்காரில் இல்லாதால் இரவிரவாக காடுகளில் நடமாட பயப்படத்தேவை இல்லை. பாம்புகள் இருக்கு ஆனால் நச்சுப்பாம்புகள் அல்ல. உலகில் சிங்கம், புலி, யானை, கரடி, மலைப்பாம்பு மாதிரி மிருகங்கள் கூர்ப்பு அடைந்து தோன்ற முன்னமே, மடகாஸ்கர் ஆபிரிக்க பெரும் நிலப்பரப்பில் இருந்து பூமித்தட்டுகளின் அசைவு காரணமாக தனியே விலகி சென்றுவிட்டது. அதனால் தான் உலகின் மற்ற இடங்களில் இருந்த லெமூர் மாற்று ராட்சத பச்சோந்திகள், பறவைகள் எல்லாவற்றையும் பின்பு தோன்றிய வேட்டையாடும் விலங்குகள் கொன்றழித்து விட்டன. மற்ற மிருகங்களை காட்டிலும், மிகுந்த அழிவை தரும் மனித விலங்குகளால் தான் பல விலங்கினங்களும் அழிந்து போய்விட்டன. மடகாஸ்கரும் அதற்கு விலக்கல்ல. ஆனால் அங்கு மனிதர்கள் குறைவாக இருந்ததாலும், குடியேறச்சென்ற மனிதர்கள் புலி, சிங்கங்களை கொண்டு போகாமல் நாய் பூனைகளை கொண்டு சென்றதால் ஓரளவுக்கு இந்த லெமூர் உற்பட மிகப்பழைய விலங்கினங்கள் இன்னமும் அழியாமல் இருக்கின்றன. ஆனாலும் நாய்கள் பெருகி காட்டுக்குள் சென்று இந்த அரிய வகை மிருகங்களை கொல்வதும், மடகஸ்காரின் அரசியல், பஞ்சம் என்பவற்றால் நிறைய அழிவுகளை சந்தித்திக்கொண்டு இருக்கிறது. காடுகளை சட்ட விரோதமாக அழித்து எரிபொருள், கட்டடம் கட்ட என்றும் ஒரு பக்கத்தால் அழிவு. பொதுவாக அமெரிக்கர்களை ஒருவருக்கும் பிடிக்காது. ஒன்றில் பொறாமை அல்லது அவர்கள் எல்லோரிடமும் சண்டை போடுபவர்கள் என்பதால். அது அவர்களுக்கும் தெரியும். தாம் உலகில் எங்கு சென்றாலும் ஒருவித சந்தேகத்துடன் தான் பயணிப்பார்கள். ஆனால் மடகஸ்காரில் அமெரிக்கர்களுக்கு அப்படி ஒரு வரவேற்பு. ஏனென்றால் பட்ரிசியா ரைட் என்னும் பெண் விஞ்ஞானி 1960 ஆண்டுப்பகுதியில் அங்கு சென்று இந்த லெமூர் மற்றும் விலங்குகளை பாதுகாக்க பெரும் பாடு பட்டு, அங்கு ஒரு ஆய்வு நிலையமும் அமைத்து இன்று அது மிகப்பெரும் உதவிகளை செய்து வருகிறது. https://www.stonybrook.edu/commcms/centre-valbio/. அதானல் எமது குழுவினருக்கு பெருமிதமும் மகிழ்ச்சியும். இன்னும் தொடரும்……
  9. இரண்டுமே நினைவிற்கான குறியீடாக காட்டி ஒற்றுமையாக இருந்தாலும் கசகசாவைப் போற்றுபவர்கள் காந்தளினையும் போற்றும் காலம் வராதா! என நினைப்பதுண்டு.. வருகைக்கும் கவிதைக்கும் நன்றி Goshan.. காகிதப்பூக்கள் என்றாலும் கூட அவர்கள் அவற்றை பேணிப் பாதுகாக்கும் நிலை எங்களைவிட வித்தியாசமானதே.... கண்ணீர்ப் பூக்களாகிய காந்தளை நாங்கள் எப்படி நினைவூறுகின்றோம்? நன்றி அண்ணா வருகைக்கும் கருத்திற்கும் கொஞ்ச காலத்திற்கு முன்பு Canberraவில் உள்ள Australian War Memorial Museumத்திற்கு சென்றிருந்த பொழுது அங்கே சுவரில் பதிக்கப்பட்டிருந்த காதிக கசகசா பூக்களைப் பார்த்தவுடன் எனக்கு காட்டில் பூத்திருக்கும் எங்களது காந்தளே நினைவுற்கு வந்தது.. நன்றி அங்கிள் வருகைக்கும் கருத்திற்கும்.. அண்மையில் முள்ளிவாய்க்கலிற்கு போயிருந்த பொழுது வீதியோரத்தில் காந்தள் கொடி ஒன்றை வளர்ந்துவரும் பனையின் ஓலைகள் மூடி மறைத்து இருந்த காட்சி..
  10. முல்லைத்தீவு - ஒரு காட்டுப் பாதையில்.. கன்பரா - ஒரு கட்டிடத்தில் இந்த இரு மலர்களையும் பார்க்கும் பொழுது உங்கள் மனதில் தோன்றுவதென்ன.. எனக்கு இன்னமும் பழம் றோட் எது என்றது கூட குழப்பமாக உள்ளது..
  11. பாகம் IV ஐ தவிர்த்து பாகம் III இருந்து நேரடியாக பாகம் V ஐ வாசிக்கவும். பாகம் V ஹைபோகிளைசீமியா ஒரு பொல்லாத விசயம். சாதாரணமாக இருப்பது போல் இருக்கும், ஆனால் உணவையும் மருந்தையும் கிரமமாக எடுக்காது போனால் குருதியில் குளுகோசின் அளவு திடீரென்று, ஹிடின்பேர்க்கின் அறிக்கைக்கு பின்னான அதானியின் நிகர மதிப்பு போல கிடுகிடு என இறங்க தொடங்கி விடும். உடல் வியர்க்கும், நடுங்கும், கடும் கோபம் வரும், ஏன் ஆக ரத்த குளுகோசின் அளவு குறைந்தால் கொலை வெறி கூட வரும். இன்னும் குறைந்தால் கோமாக்கு கொண்டுபோய் ஆளின் கதையையே முடித்து விடும். இதை எல்லாம் தவிர்க்கவேண்டும் என்றுதான் அவன் கோப்பி கடைக்குள் நுழைகிறான். ஆனால் அவனின் லக் அப்படி, கோப்பி கடையில் ஒரு கூட்டம் சனமாக இருந்தது. அந்த நெரிசலில் நிற்க தலையை சுத்தி கொண்டு வந்தது அவனுக்கு. பிரித்தானியரில் என்ன கெட்ட பழக்கம் இருந்தாலும் வரிசையில் நிற்கும் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. ஆனால் இப்போ அந்த நல்ல பழக்கமே அவனுக்கு எமனாக வந்து விடும் போல் இருந்தது. ஒரு வழியாக வரிசையில் முன்னுக்கு நின்றவனிடம் தன் நிலையை சொல்லி, அனுமதி பெற்று இரெண்டு சீனி தூவிய டோநட்களையும் ஒரு கோக் கானையும் வாங்கி கொண்டு மேசையில் போய் அமர்ந்தான் அவன். கோக் குடியாதேங்கோ எண்டு சொல்லுறது இதுக்குத்தான். குளுகோஸ் தண்ணிக்கு அடுத்து ரத்தத்தில் சீனியின் அளவை உடனடியாக கூட்ட கோக்கை விட்டால் வேறு பானம் இல்லை. ….இதைதான் வருத்தம் ஏதும் இல்லாத பிள்ளையள் கூட வாங்கி குடிக்குதுகள். பின்ன ஏன் டயபிடிஸ் வராது….. நினைத்தபடியே…கோக் கானை “டொப்” என மூடி உடைத்து பருக தொடங்கினான் அவன். கோப்பி கடையில் கல்லாவில் நின்றவனை நினைக்க நினைக்க அவனுக்கு கோவம் பற்றி கொண்டு வந்தது. என்ன அசிரத்தை இது? ஏதோ இலவசமாக தருவது போல் இருந்தது அவனின் பாவனையும் நடந்து கொண்ட முறையும். முந்தி எல்லாம் இந்த நாட்டில் இப்படி இல்லை. முன்பு யூகேயில் கஸ்டமர் சேர்விஸ் நன்றாக இருக்கும். இப்போ?…பச்…. அவனை பார்த்தால் உக்ரேன் காரன் போல இருந்ததது. உக்ரேன்காரர் உக்கல் சனம், நிறவெறி பிடித்தவர் என யாழ்களத்தில் முருகர்சாமி அண்ணை எழுதியது ஏனோ அவனுக்கு நியாபகம் வந்தது. கிட்டதட்ட ஒரு இருபது நிமிடம் ஆகி இருக்கும். கோக் கான் முக்கால்வாசி தீர்ந்து விட்டிருந்தது. ஆனாலும் ஓடர் பண்ணிய டோநட்டை இன்னும் காணவில்லை. “ஹலோ ஆம் ஐ கெட்டிங் மை டோ நட் டுடே, ஓர் டுமோரோ”? கொஞ்சம் சத்தமாகவே உக்ரேன்காரனை டோநட் இன்றா அல்லது நாளையா கிடைக்கும்? கேட்டான் அவன். ஆனால் அந்த உக்ரேனியனோ (முடிவே கட்டிவிட்டான்) கோப்பி மெசின் அருகில் எதையும் கேளாதவன் போல் நின்று எதையோ கழுவிக்கொண்டிருந்தான். திடீரென திரும்பி பார்த்தால் அந்த உக்ரேனியன் அவனை நோக்கி ஒரு பெரிய கத்தியோடு ஓடி வந்து கொண்டிருந்தான்…….. கண்களில் நிறவெறி ஜொலி ஜொலித்தது…….. ”என்ர பிள்ளையாரே, முருகர்சாமி அண்ணை உவங்களை உக்கல் எண்டு சொன்னது சரிதான்” என ஒரு கணம் அவன் திகைத்து நின்றாலும்……. மறுகணமே அவனின் உடலில் அதிரீனலீனின் “தப்பியோடு அல்லது சண்டையிடு” பொறிமுறை வேலை செய்ய தொடங்கி இருந்தது. உக்ரேனியன் கொண்டு வரும் கத்தியோ பெரிது…வேறு வழியில்லை, ஒரு நல்ல கனமான மரக்கதிரையை தூக்கி கொண்டு அந்த உக்ரேனியனை நோக்கி பாய்ந்தான் அவன். —————————————— அப்போதுதான் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ், அவனின் பிரான்சில் இருந்து வருவிக்கபட்டிருந்த தம்பிக்கும், டாக்டர் பிரணவணுக்கும் சீசீடிவி படங்களை போட்டு காட்டி முடித்திருந்தார். தம்பிக்கு ஏதோ விளங்கியது போலவும் இருந்தது ஆனால் விளங்காதது போலவும் இருந்தது. கேள்வி குறியோடு டாக்டரின் முகத்தை பார்த்தான் தம்பி. மொழி பிரச்சனையை விளங்கி கொண்ட டாக்டர், ”ஐ வில் எக்ஸ்பிளைன் டு ஹிம் இன் ஹிஸ் ஓன் லாங்குவேஜ்”…….. என பிலிப்சுக்கு சொல்லியபடி தம்பியிடம் தனது புலம்பெயர் கொச்சை தமிழில் பேச தொடங்கினார். சீசீடிவி பார்தனிங்கள்தானே…சும்மா டோநட் எடுத்து கொண்டிருந்த அவர போட்டு நல்லா அடிச்சு வச்சிருக்கிறார். இதுக்கு ஒரு ரீசனும் இல்லை. பொலிஸ் அன் புரொவோக்ட் அட்டாக் எண்டு சொல்லினம்….. அதுக்கு முதல் மூண்டு அவர்ஸ் காரில இருந்து…போனில கதைச்சிருக்கிறார்…. ஆனால் போனை செக் பண்ணி பார்த்தா அந்த மூண்டு அவர்ஸ்சும் எந்த ஒரு கோலும் கூட வரலேல்ல உங்கட அண்ணாக்கு…. அதுமாரி….சில மாசமா…. ஒவ்வொரு நாள் காலமையிலும், பின்னேரமும் ஒப்பசிட்டா இருக்கிறா ஸ்கூல் வாசலில் வந்து நிண்டிருக்கிறார்….. ஆனா நாங்கள் செக் பண்ணி பார்த்தா உங்கட அண்ணாக்கு பிள்ளையோ, வைவ்வோ கூட இல்லை. எல்லாம் சேர்த்து பார்த்தா எனக்கு இது ஒரு மனசு சரியில்லாத வருத்தம் எண்டுதான் விளங்குது…. இத நான், தொடர்ந்து வெளிநாட்டில தனியாவே இருந்ததால வந்த ஒரு மெண்டல் ஹெல்த் பிரச்சனை என சஸ்பெட்க் பண்ணுறன்…. அதால… உங்கட அண்ணையை செக்சன் பண்ணுற முடிவை எடுக்கப்போறம்…. செக்சன் எண்டால்…? புரியாதவனாக கேட்டான் தம்பி. செக்சன் எண்டால்…. வந்த வருத்தம் மாறும் வரைக்கும் அவரை ஒரு சைகியாடிரிக் கொஸ்பிடலை தடுத்து வச்சிருப்பம். உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி நீங்கள் அப்பீல் பண்ணலாம். நாளைக்கு ஒரு இண்டர்பிரிட்டரை வச்சு எல்லாத்தையும் வடிவா சொல்லுறன். அவன் இப்போதைக்கு வெளியில் வர வாய்ப்பில்லை என்பதை முடிந்தளவு தன்மையாக சொன்னார் டாக்டர் பிரணவன். என்ன செய்தாலும்….. அண்ணையை பழையபடி மாத்தி தாங்கோ டொக்டர்…. எங்களை எல்லாம் வெளிநாட்டுக்கு எடுத்து ஆளாக்கினது அவர்தான்…. கண்ணீர் புரண்டோட…கை கூப்பினான் அவனின் தம்பி. அப்ப கூட்டத்தை முடிக்கலாம்…… என்ற தோரணையில்……. கையை திருப்பி….. மணிக்கூட்டை வெறித்துப்பார்த்தார் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ். (யாவும் கற்பனை) முற்றும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபா. ஐந்தாம் பாகம் பற்றிய பார்வையையும் எழுதுங்கள்.🙏🏾 நன்றி சுவை அண்ணா. இப்ப எழுதியதை வாசிதால் சேது விக்ரம் நியாபகம் வருவாரோ?😀
  12. யாழ்ப்பாண townற்கு அருகில் உள்ள பகுதி(நகர்ப்புறம்) முல்லைத்தீவில் ஒரு கிராமம் இந்தப்படங்களைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு தோன்றுவது என்ன?
  13. இந்த ஊரின் பெயர் மணற்காடு.. அங்கேதான் இந்த St.Peter’s Churchம் உள்ளது.. இந்த தேவாலயத்தினைக் கடந்துதான் மணற்காடு கடற்கரைக்குப் போகவேண்டும்.. இந்தக் கடற்கரைக்குப் போகும் வழியில்தான் பாழடைந்த டச்சு தேவாலயம் ஒன்றும் சவுக்குத் தோப்பும் உள்ளது. சிறுவயதில் பார்த்தபொழுது இந்த தேவாலயத்தை சூழ அதிகளவான மணற்மேடுகள் இருந்தது போன்ற நினைவு இப்பொழுது தேவாலயத்தின் இடிபாடுகள் அதிகளவில் வெளியே தெரிகிறது.. காலப்போக்கில் மணற்மேடுகள் இன்னமும் குறையலாம்.. இந்த கடற்கரையும் அழகானதுதான்.. போகும் ஒவ்வொருமுறையும் சில இடங்களுக்குப் போகாமல் வந்ததில்லை அதில் இந்த கடற்கரையும் ஒன்று..
  14. முன் குறிப்பு பாகம் IV ம் V ம் இக்கதையின் இரு வேறுபட்ட முடிவுகள் (கிளைமாக்ஸ்). ———————————————— பாகம் IV இன்று ஒரு மிக முக்கியமான நாள். அவனுக்கும் இவனுக்குமான அந்த சம்பாசணை நிகழ்ந்து கிட்டத்தட்ட பதின்மூன்று மாதங்கள் உருண்டோடி விட்டிருந்தன. அதன் பின் வைத்திய நண்பனின் ஆலோசனையின் பெயரில் அவன் இவனுடன் தொடர்பு ஏற்படுத்துவதை அறவே தவிர்த்து விட்டிருந்தான். பதின்மூன்று மாதங்கள் முன்னதாக நடந்த அன்றைய சம்பாசணையின் போது இவனுக்கு… நீ கட்டாயம் ஒரு சைக்கியாடிரிஸ்டை பார்க்க வேண்டும் மச்சான்…. உடல் காயம் போலத்தான், மனக்காயமும். இரெண்டுக்கும் ஒரு அளவுக்கு மேல் மருந்து அவசியம்….. என தயங்கி, தயங்கி அவன் சொல்லி இருந்தான். இவனும் கூட சற்றே மனம் நிதானப்பட்ட ஒரு நிமிடத்தில்… நீ சொல்றது சரிதான் மச்சான்…. எனக்கு ஏதோ பிசகீட்டுது எண்டு விளங்குது…கெதியா காட்டோணும்…மருந்து எடுக்கோணும்…. இல்லாட்டில் முழு விசராக்கிப்போடும்… என சொல்லியும் இருந்தான். ஆனால் அடுத்த நொடியே, போரிஸ், ஏலியன், மனைவி என வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறிவிட்டது. இதை எல்லாம் கருத்தில் எடுத்த வைத்திய நண்பன் அவனுக்கும், இவனுக்கும் மட்டுமான உறவை மட்டும் அல்ல, இத்தனை மாதகாலமும் இவனுக்கும் அவனின் வட்டத்தில் மனைவியை தவிர மிகுதி அனைவருக்குமான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்தே சிகிச்சையை தொடர்ந்தான். இந்த ஏற்பாட்டின் பலனாக, தன்னையும், மனைவியையும், வைத்தியரையும் தவிர வேறு எவருக்கும் இந்த பிரச்சனையின் ஆழம் தெரியாது என்ற நம்பிக்கையோடு இத்தனை மாதகாலமாக இவனும் தொடர்ந்து சிகிச்சையை எடுத்து வந்தான். இவனோடு தொடர்பில் இல்லாதபோதும் வைத்திய நண்பனோடும், திருமதி இவனோடும் அவன் தொடர்பில் இருந்து, இவனுக்கு வழங்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள் பற்றி முழுவதுமாக அறிந்தே இருந்தான். நேற்று வைத்திய நண்பன் பேசும் போது இவன் கிட்டதட்ட முழுவதுமாக தேறி விட்டான் எனவும். அன்றைய சம்பாசணையை பற்றி இவனுக்கு அதிகம் நியாபகம் இல்லை எனவும். அதை பற்றி கதைப்பதை தவிர்த்து, வழமை போல் உரையாடலை தொடரும் படியும் அவனுக்கு கூறி இருந்தான். இதோ…நெஞ்சம் நிறைந்த படபடப்போடு அவன் மொபலை எடுத்து இவனின் வாட்சப் நம்பரை அழுத்த தயாராகி விட்டான்……. அழைப்பை எடுக்க முதல், வைத்திய நண்பன் கடைசியாக சொன்னதை மீண்டும் ஒரு முறை அவன் நினைவு படுத்தி கொண்டான். மச்சான்…மறந்தும் வாயை விட்டுடாதயடா…இவனுக்கு தனக்கு வந்த பிரச்சனை எவ்வளவு பெரிசு…தான் என்ன குழிசையள் எடுத்தது…இனியும் என்ன குழிசையள் எடுக்க வேணும்…எல்லாம் வடிவா தெரியுமடா. ஆனால் இவனை பொறுத்தவரை…இது எதுவும் உனக்கு தெரியாது…அதை நீ மறந்துடாத… ——————————— இவனுடனான தொலைபேசி அழைப்பு நினைத்தததை விட சகஜமாகவே போய் கொண்டிருந்தது. ஆனால் உறவு முன்னர் போல் அந்நியோனியமாக இல்லை என்பதாக அவனுக்கு தோன்றியது. தொடர்பு விட்டு போனமைக்கு பரஸ்பரம் மன்னிப்புகள், குடும்பத்தினர் நலம் விசாரிப்புகள் என வழமையான விடயங்கள் பேசித்தீர்ந்த பின் உருவான அந்த அசெளகரியமான நிசப்தத்தை கலைத்து கொண்டு…இவன் தானாகவே பேசினான். மச்சான்…அண்டைக்கு நான் கதைக்கேக்க கொஞ்சம் அப்செட்டா இருந்தனாண்டா… ஒரு சின்ன ஸ்டிரெஸ்…நித்திரை கொண்டு எழும்பினதும் அது சரியாப் போச்சு…. என்ன சொல்வது என தெரியாத அவன்…ம்ம்…என்று சொல்லி விட்டு இதை எப்படி கையாள்வது என யோசித்து கொண்டிருக்கும் போதே…இவன் தொடர்ந்தான்…. நல்ல காலம் மச்சான்…. உண்ட பேய் கதையை கேட்டு நான் டொக்டரிட்ட போய் இருந்தா என்னை பைத்தியம் எண்டே முடிவு கட்டி இருப்பாங்கள்…. இனிமேலாவது கண்டதையிம் வாசிச்சு போட்டு…அட்வைஸ் பண்ணுறன் பேர்வழி எண்டு மற்றவனுக்கு விசர்பட்டம் கட்டாத மச்சான்……. அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாத அவன்…கதையை மேலும் வளர்க்க விரும்பாதவனாக…… ம்……ம்…ம் கொட்டினான். #stigma #கேடிசூழ் #கறை #வடு (யாவும் கற்பனை) பாகம் IV முற்றும்.
  15. பாகம் III அவனின் காருக்குள் மூச்சுக்காற்று புகாராகி, கண்ணாடியிலும் பதிந்து ஒரு திரைச்சீலை போல் ஆகி இருந்தது. அநேகமாக மூன்று அல்லது மூன்றரை மணி நேரம் அவன் இப்படி காரில் இருந்தபடியே பேசி கொண்டிருந்திருக்க வேண்டும். எஞ்சினை ஆன்பண்ணி புகார் நீக்கியை தட்டி விடவோ, அல்லது கண்ணாடியை இறக்கி விடவோ கூட அவனுக்குத் தோணவில்லை. பேச்சின் பொருள் அத்தகையது. காரினை ஸ்டார் செய்தபோது வெளியே வெப்பநிலை -2 எனக்காட்டியது டாஷ்போர்ட். ஆனால் அவனின் உடலோ தெப்பமாக வியர்வையில் நனைந்திருந்தது. இவனுடன் போனில் கதைத்து கொண்டே வேலைக்கு இன்று அவசர லீவு என ஒரு இமெயிலை தட்டிவிட்டிருந்தான் அவன். இனி இந்த நாள் முழுவதும் அவனுக்கு ஓய்வுதான். வேலையில் இருந்து போனிலும், இமெயிலிலும் நொய் நொய் என்று யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். இவன் போனில் சொன்னதை முதல் ஐந்து நிமிடம் வரை கூட அவன் பகிடி என்றே நினைத்தான். தன்னை ஏலியன்கள் பிந்தொடர்வதாயும். பெப்ரவரி 2023 இல் தன்னை கடத்திப் போக அவர்கள் திட்டமிட்டிருப்பதாயும். தனது மனைவியை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் காதலிப்பதாயும். அவளை கவர திட்டமிடுவதாயும். பொரிசும் ஒரு ஏலியன் என்றும் இவன் சொல்ல, சொல்லத்தான், அவனுக்கு கொஞ்சம், கொஞ்சமாக இது வழமையான பிராங்க் இல்லை என்பது புரிய தொடங்கி இருந்தது. படி… பொரிஸ் வாண்ட்ஸ் டு டேக் ஹேர் ப்ரொம் மீ படி… பிளீஸ் ஹெல்ப் மீ… ஐ ஒன்லி ஹாவ் யூ… என தன் ஆருயிர் நண்பன் உடைந்து அழுத போது…..அவனுக்கு முள்ளம் தண்டில் உள்ளிருக்கும் முன்ணானின் அடியில் இருந்து, மூளை வரை, சில்லிட்டது போல ஒரு உணர்வு பரவியது. ஒரு வழியாக இவனை சமாதானப்படுத்தி போனை வைத்து விட்டு, கொழும்பில் பெயர் போன இன்னொரு மன நல வைத்தியர் நண்பனுக்கு போன் பண்ணி, விபரம் சொல்லி, அவனை உடனடியாக இவன் வீட்டுக்கே போய் வைத்தியம் பார்க்கும் ஏற்பாட்டை செய்து விட்டு அதை இவனின் மனைவிக்கும் எடுத்து சொல்லி ஒருவழியாக இந்த பிரச்சனையின் தீர்வை நோக்கி ஒரு அடியை எடுத்து வைத்தபோதுதான்…. சுகர் வருத்தகாரனான அவன் நேற்று முன்னிரவில் இருந்து எதையும் சாப்பிடவில்லை என்பதும்….ஹைபோ கிளைசீமியா எனும் ரத்தத்தில் குளுகோசின் அளவு குறையும் நிலைக்கான அறிகுறிகள் அவனில் தோன்ற ஆரம்பித்துள்ளமையையும் அவன் அவதானித்தான். ஆன் செய்த வாகனத்தை அப்படியே ஆப் செய்து விட்டு…டெஸ்கோவில் இருக்கும் கோஸ்டா கோப்பிக்கடை நோக்கி நடக்கத்தொடங்கினான் அவன். தொடரும்…. (யாவும் கற்பனை)
  16. இந்த இடம் வடமராச்சியில்தான் உள்ளது.. பிரேசிலில் அல்ல எந்த இடம் என கூறுங்கள் பார்ப்போம் இவரைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு தோன்றுவது என்ன?
  17. பாகம் II அவனுக்கும் இவனுக்குமான நட்பு அலாதியானது. வாழ்க்கைமுறை, சமயம், பிரதேசம், தெரிவுப்பாடங்கள் என பலதிலும் வேறுபட்டிருந்தாலும் தமிழும், கவிதையும், நாடகமும், புத்தகங்களும் அந்த இடைவெளியை இட்டு நிரப்பி, மேலதிகமாகவும் ஒரு பிணைப்பை ஏற்படுத்த போதுமாயிருந்தன. இருவரும் கிண்டல் அடிப்பதில் ஆளை ஆள் சளைத்தவர்கள் இல்லை என்பது மேலும் அவர்கள் நட்பை எப்போதும் கலகலப்பான உறவாக வைத்திருந்தது. இவனின் மெசேஜை பார்த்ததில் இருந்து, அவனுக்கு கொஞ்சம் கலக்கலாமகவே இருந்தது. அவர்களுக்கு இடையில் இப்படியான pranks செய்வதும் வழமைதான். அதுபோல் இதுவும் இவனின் குழப்படிகளில் ஒன்றாக இருக்கலாம். போன கிழமை கூட வாட்சப்பில் மாவீரர் நாளுக்கு இவன் எழுதியதை வாசித்து விட்டு, அவன் ஒரு தெரியாத நம்பரில் இருந்து கோல் எடுத்து சிங்களத்தில் “மாத்தையா டக்சி ஓடர் பண்ணீர்கள், வீட்டுக்கு வெள்ளை வான் ஒன்று அனுப்பவா” என கேட்டு கலாய்திருந்தான். இதுவும் அதுக்கான இவனின் பதிலடியாக இருக்கலாம். ஆனால் அவனின் உள்ளுணர்வு இது ஏதோ வேறு பிசகு என கூறியது. பரவாயில்லை இன்றைக்கு வேர்க் புரொம் ஹோம்தான், நல்ல வேளையாக வேலை போனையும் கையோடு எடுத்து வந்தது வசதியாக போய்விட்டது. வேர்க் புரொம் ஹோம் என்றாலே வேலையை தவிர மிச்சம் எல்லாம் செய்யும் நாள் என்பது எழுதப்படாத சட்டம் ஆகி விட்ட நாட்டில் அவன் மட்டும் என்ன விதி விலக்கா? கார் கழுவுவது, உடுப்பு தோய்ப்பது, ஆருக்கும் சம்பளம் வாங்காமல் அட்வைஸ் கொடுப்பது, யாழிலும் வட்சாப்பிலும் உழட்டுவது, இடைக்கிடையே, முதலாளி பாவம் எண்டு கொஞ்சம் வேலையும் செய்வது. இதுதான் அவனின் இந்த வேர்க் புரொம் ஹோம் நாட்களின் ரூட்டின். ஆகவே அருகில் இருக்கும் டெஸ்கோவில் காரை விட்டு விட்டு என்ன எண்டு கேட்போம் என நினைத்தவாறே காரை டெஸ்கோ கார்பார்க்குக்குள் விரட்டினான் அவன். என்ன மச்சான் ஓகேயா? அவனின் கேள்விக்கு பதில் வர தாமதித்தது…. மச்சான்…டேய்…என்னடா மெசேஜ் போட்டிருந்தாய்…என்ன ஏர்ஜெண்ட் மட்டர்? தொண்டையை கனத்தபடி இவன் பேசத்தொடங்கினான்….. ஐ’ ம் குட் படி. ஐ டு ஹாவ் எ குவஸ்யன் போர் யூ…. டேய் லூஸ் விளையாட்டு விளாடாத…வேலை கடுப்பில நிக்கிறன் பிறகு அடிக்கிறன்…. நோ..நோ…லிசின் மேட்… ஐயம் சீரியஸ் எபவுட் திஸ்… அட்சரம் பிசகாத லண்டன் உழைக்கும் வர்க்க ஆங்கில உச்சரிப்பில்…. தன் பிரச்சனையை எடுத்து சொல்ல ஆரம்பித்து இருந்தான்…. வாழ்வில் என்றுமே இங்கிலாந்துக்கு வந்தே இராத, பிரித்தானியாவுடன் எந்தவித பரிச்சயமும் இல்லாத இவன். (தொடரும்) (யாவும் கற்பனை அல்ல) ——————————————-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.