Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87993
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    38771
    Posts
  4. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33035
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/16/23 in Posts

  1. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய் பெண் : துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்.......! ---காற்றே என் வாசல் வந்தாய்---
  2. கருத்திற்கு நன்றி! ஆனால், இது மொழிபெயர்ப்பல்ல, தொகுப்பு (synthesis) என்பதே சரி (தரப்பட்ட மூலங்களை வாசித்து நீங்களே புரிந்து கொள்ளலாம்!). உங்கள் கேள்விக்கான பதில் சில பாகங்களில் சரிவெழுத்துகளால் தரப்பட்டிருக்கிறது. அவை நுனியிலும் அடியிலும் இல்லை, நடுவில் இருக்கின்றன.
  3. அதுசரி .....சிஷ்யனுக்கு எத்தனை வயதிருக்கும்......70 க்கு மேல் என்றால் க்ரீன் டீ சரியாய் இருக்கும்......! 😂
  4. துளசியும், "கிரீன் டீயும்".... குளிருக்கு நல்லதாம். 🤣
  5. நல்லதொரு வரலாற்று மொழி பெயர்ப்பு கட்டுரை இரத்தின சுருக்கமாக, வரலாற்றைப்பற்றி தெரியாத சிலருக்கு நன்றாக உதவும் விளங்கிகொள்ள, பாராட்டுக்கள். இந்த கட்டுரையின் தலைப்பிற்கும் முடிவிற்கும் தொடர்பை காணவில்லையே - எப்படி வரலாறு திரும்புகின்றது "அமெரிக்கா அணுவாயுதத்தை பயன்படுத்தி ஐப்பானை அடிபணிய வைத்தபின்பு இரு நாடுகளும் சுமூகமாக முன்னர்நகர்ந்துவிட்டனர்", அதே மாதிரி வரலாறு திரும்புமா, எந்தநாட்டிற்கு இப்படி நடக்கும் எப்படி சொல்கின்றீர்கள், ஐப்பானின் தோல்விக்குபின் எந்த நாடு தோல்விகண்டிச்சு அணுவாயுதத்தால் தோல்விகண்ட நாடு தற்போது அமெரிக்காதான் வடகொரியா, ஈரான், ரசியா சீனா ஒன்றும் செய்யமுடியவில்லை, என்ன இறங்கிவந்து வடகொரியாவிற்கு கைகொடுத்த துதான் மிச்சம் அமெரிக்க ஐனாதிபதியால், இப்ப உள்ள ஐனாதிபதியால் தன் நாட்டு பிரச்சனைகளேயே சமாளிக்க முடியவில்லை இனி அமெரிக்காவால் எந்த பூச்சாண்டியும் காண்ட முடியாது வரலாறு திரும்ப, கோழைத்தனமான தாக்குதல்களை வேணுமென்றால் வீரமாக நடத்தலாம் இந்தா ரசியாவை பிடிக்கபோகின்றேன் என போன நெப்போலியன் ஹிட்லருக்கு நடந்த வரலாறு வேணுமென்றால் திரும்பலாம் நீங்கள் ஆரம்பித்த திரி என்பதால் எப்படி எங்கே வரலாறு திரும்புமென்று சொல்ல முடியுமா, தயவு செய்து மற்ற திரிகளில் நீங்கள் பாவிக்கும் நளினமற்ற வார்த்தைகளை தவிர்த்துவிட்டு பதிலிட்டால் நன்று, அல்லது நாமும் அதே வார்த்தைகளை உங்களை நோக்கி பாவிக்க முடியும், நீங்கள் பாவிக்கும் போது வராதவர்கள் நாங்கள் பாவித்தபின் வரித்துகண்டி வந்துவிடுவார்கள் உங்கள் நளின வார்த்தைகளை விளங்காமல். அத்துடன் உங்கள் முழு பதிவையும் வாசித்துவிட்டுதான் கேள்வி கேட்கின்றேன், மீண்டும் நுனி, அடி, ... என பதியவேண்டாம் அமெரிக்கா வியாட்னாமில் படித்த வரலாற்றை மறந்து, ஈராக்கில் கற்றார்கள், பின் ஆப்பகானிஸ்தானில் - அங்கு ஆயதங்கள் தளபாடங்கள், வாகனங்கள், வானூர்திகளை அழிக்க போன தாலிபான்களிடமே கொடுத்து திரும்பிஓடியதுதான் வரலாறு. அமெரிக்காதான் வரலாற்றை திரும்ப திரும்ப படிக்க வேண்டும், மற்ற உலக நாடுகள் அல்ல திரும்பும் வரலாறு எந்த நாட்டிற்கு எப்படி, எதனால் , யாரால், எதற்கு என விபரமாக தரமுடியுமா???
  6. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புங்கை .......! 😁 எனது மாமனார் அரசமரக்கூட்டுத்தாபன ஒப்பந்தக்காரராய் இருந்தபோது நான் அந்த மடுக்காடுகளில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக சுற்றித் திரிந்திருக்கிறேன். தினமும் அந்த மடுக்கோயில் கிணற்றில் இருந்துதான் வாடிக்கு குடிதண்ணீர் எடுத்து வாறது வழக்கம். அதேபோல் வவுனியாவிலும் தேக்கங் காட்டில் 8/9 மாதங்கள் வேலை செய்திருக்கிறேன்.( வவுனியாவில் உள்ள ஒரு குளத்தில்தான் எனது தந்தையும் மரணமானார். 1951ல்). அங்கு நிறைய உறவினர்களும் இருக்கின்றனர்......! 😁
  7. நொச்சி, நன்றி வாசித்துக் கருத்துப் பகிர்ந்தமைக்கு. 1. இறையாண்மை, தெளிவான பௌதீக எல்லை என்பன கொண்ட நாடுகள் யுத்தம் முடிந்த பின்னர் முன்னோக்கி நகர்வது இலகுவானது. இதில் தோல்வி கண்ட நாடு முன்னோக்கி நகர அந்த நாட்டின் ஒருமித்த தேசிய அடையாளம் (national identity) பலமாக இருந்தால் முன்னோக்கி நகர்வது இன்னும் இலகு. உதாரணம் ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி. 2. ஆனால், இப்படி ஒருமித்த அடையாளம் இல்லா விட்டால் இறையாண்மை கொண்ட நாடுகள் கூட சிதைந்து போகும்: உதாரணம், ஈராக் (சுனி, ஷியா, குர்து, கிறிஸ்தவர்), லிபியா (லிபிய தேசிய அடையாளம் என்ற ஒன்று இல்லை), ஆப்கானிஸ்தான் (தாஜிக், பஷ்ரூன், இன்ன பிற அடையாளங்கள், ஆப்கான் தேசிய அடையாளம் மிகவும் நொய்மையானது!). 3. இப்ப, எங்கள் பிரச்சினை சட்டரீதியாக (de jure) தமிழர் தரப்பு இறையாண்மை கொண்ட நாடாக இருக்கவில்லை, எனவே எல்லோருக்கும் அது உள் நாட்டு யுத்தம். உள் நாட்டு யுத்தத்தில் வெல்லும் தரப்பின் மனநிலை தான் தோற்ற தரப்பின் முன்னோக்கிய நகர்வைத் தீர்மானிக்கும். சிங்கள மனநிலை என்னவென்று நான் விளக்க வேண்டியதில்லை, எனவே முட்டுப் பட்டு நிற்கிறோம். ஆனால், நாம் சர்வதேசத்தை எதிர்பார்ப்பதற்கு முன்னர் நாம் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து விட்டா சர்வதேசத்தின் முகத்தைப் பார்க்கிறோம்? இல்லையென்று தான் நினைக்கிறேன். உதாரணமாக: ஈழத்தமிழருக்கு இப்போது தேவையான 5 விடயங்களை, ஒரு முக்கியத்துவ (priority)அடிப்படையிலான பட்டியலாக ஈழத்தில் இருக்கும் தமிழ்க்கட்சிகள் எல்லாம் ஒருமித்து தயாரித்திருக்கின்றனவா? அந்தப் பட்டியலோடு, சிங்களவரிடம் பேசப் போயிருக்கின்றனரா? எங்கள் தரப்பிலிருக்கும் இந்தப் பெரிய ஓட்டையை சாமான்யன் நானே அடையாளம் கண்டு கொண்டிருக்கும் போது, சிங்களவருக்கும், சர்வதேசத்திற்கும் இது தெரியாமலிருக்குமா?
  8. பிற்குறிப்புகள் தொடர்ந்து வாசித்துக் கருத்துச் சொன்ன அனைவருக்கும் - முக்கியமாக சுவி, புங்கையூரான் ஆகியோருக்கு - நன்றிகள்! பயன்படுத்தப் பட்ட நூல்கள்: 1. In the Garden of Beasts (2011), Erik Larson. இது நாசிகளின் 1933 ஜேர்மனியின் நாளாந்த சம்பவங்களை விபரிக்கும் ஒரு நூல். 2. The Splendid and the Vile (2020), Erik Larson. இது 1939 முதல் 1940 வரை சேர்ச்சிலின் இங்கிலாந்து, ஹிற்லரின் நாசி ஜேர்மனி ஆகியன பற்றிய அருமையான நூல். 3. Stalingrad, The Fateful Siege:1942-1943. Antony Beevor (1998). இது 1942 இல் நிகழ்ந்த ஸ்ராலின்கிராட் முற்றுகை பற்றியதெனினும், அனைத்து சோவியத் முனைகள் பற்றிய முதல் நிலைத்தரவுகள் (primary source) அடிப்படையிலான வரலாற்று நூல். 4. Einstein: His Life and Universe, Walter Isaacson (2008). ஐன்ஸ்ரைனின் வாழ்க்கை வரலாறு, இதன் ஒரு அத்தியாயம் அணுகுண்டு தயாரிப்பு முயற்சிகள் பற்றிய விபரங்களைத் தருகிறது. 5. Killing the Rising Sun: How America Vanquished World War II Japan, by Bill O’ Reilly & Martin Dugard (2016). பேர்ள் துறைமுகத் தாக்குதல், அமெரிக்க அணுவாயுதப் பரிசோதனைகள், ஜப்பான் மீதான அணுவாயுதத் தாக்குதல் என்பன பற்றிய நூல். இணையவழி ஆவணக்காப்பகங்கள்: 1. The US National Archives. 2. Imperial War Museum, UK.
  9. நான் உங்கள் தொடரை குழப்ப வரவில்லை. மறு பக்க நியாயங்களையும் சொல்ல வந்தேன். 30 வருடங்களுக்கு மேலாக ஜேர்மனிய மக்களுடன் பழகுவதால் வரலாற்று புத்தகங்களில் வராத பல நிகழ்வுகளையும் அறிய சந்தர்ப்பம் கிடைத்தது.நானே நான் பழகுபவர்களோ ஹிட்லரின் படுகொலைகளையும் படையெடுப்புகளையும் ஆதரிப்பவர்கள் அல்லர். ஆனால் ஹிட்லர் செய்த பல்லாயிரக்கணக்கான விடயங்களை இந்த நாட்டுக்காக செய்தவற்றை வரலாற்று புனைவாளர்கள் சொல்ல தவறுகின்றனர். நான் வசிக்கும் இடத்தில் அழிந்த நாஷிகளின் ஆயுத தொழிற்சாலையும் உண்டு. அருகில் மக்கள் பாவிக்க முடியாத அளவிற்கு பெரியதொரு ஏரியும் உண்டு. மக்கள் ஹிட்லரின் படுகொலைகளையும் படையெடுப்புகளையும் வெறுத்தாலும்....... ஹிட்லரின் அதி உன்னத அபிவிருத்திகளை இன்றும் வெறுக்கவில்லை. நன்றி இத்துடன் இத் திரியிலிருந்து விடை பெறுகின்றேன்.🙏🏼 ஒரு சில எழுத்து பிழைகள் உண்டு. திருத்தி வாசிக்கவும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.