Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    7054
    Posts
  3. அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    5633
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/01/23 in all areas

  1. உருட்டாதீங்க, உருட்டாதீங்க... என்று சொன்னால், கேட்டீங்களா... 😜 இப்ப பாருங்க, பூமியே வேகமா சுத்துதாம். 🤣
  2. சஷ்டியை நோக்க சரவணபவனார். கந்த சஷ்டி கவசம். நேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலனருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. குறள் வெண்பா அமரரிடர் தீர வமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட மையல் நடம் செய்யும் மயில்வாகனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வர வர வேலாயுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவணபவனார் சடுதியில் வருக ரகணபவச ரரரர ரரர ரிகண பவச ரிரிரி ரிரிரி விணபவ சரவண வீராநமோ நம நிபவ சரவண நிற நிற நிறென் வசர ஹணபவ வருக வருக என்னையாளும் இளையோன் கையில் பன்னிரண்டாயுதம் பாசங்குசமும் பரந்த விழிகள் பன்னிர ண்டிலங்க விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக ஐயம் கிலியும் அடைவுடன் சௌவும் உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும் கிலியும் சௌவும் கிளரொளி யையும் நிலைபெற் றென் முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலியாம் சிவகுகன் தினம் வருக ஆறுமுகமும் அணிமுடியாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலங்கு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்தினமாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழகுடைய திருவயிறுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீராவும் இருதொடை யழகும் இணைமுழந்தாளும் திருவடியதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொக மொக மொகமொக மொக மொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுகுண டிகுகுண டிகுண ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முரகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதனென்றும் உன் திருவடியை உறுதியென்றெண்ணும் என் தலைவைத்துன் இணையடி காக்க என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவியிரண்டும் வேலவர் காக்க நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத்திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவை செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க மார்பை ரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவேலிருதோள் வளம் பெறக்காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதினாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடையழகுற செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண் குறியிரண்டும் அயில் வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரலடியினை அருள் வேல் காக்க கை களிரண்டும் கருணை வேல் காக்க முன் கையிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க நாவிற் சரஸ்வதி நற்றுணையாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வஜ்ஜரவேல் காக்க அரையிருள் தன்னில் அணையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியினில் நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லல் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும் கொள்ளிவாற் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரம்மராட்ச தரும் அடியனைக் கண்டால் அலறிக கலங்கிட இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலு மிருட்டிரும் எதிர்ப்படு மன்னரும் கனபூசை கொள்ளும் காளியோட னைவரும் விட்டாங்காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட ஆனையடியினில் அரும்பாவைகளும் பூனை மயிரும் பிள்ளைகளென்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகலசத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும் காசும் பணமும் காவுடன் சோறும் ஓதுமஞ் சனமும் ஒருவழிப்போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலதூ தாள்ளெனைக் கண்டால் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய் விட்டலறி மதிகெட்டோடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடனங்கம் கதறிடக் கட்டு கட்டியுருட்டு கை கால் முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர் வடிவேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலதுவாக விடு விடு வேலை வெருண்டது ஓட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுழுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம் சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப்பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்தரணை பருஅரையாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லாதோட நீயெனக்கு அருள்வாய் ஈரேழுலகமும் எனக்குறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எ னக்காய் மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாக உன்னைத் துதித்த உன்திருநாமம் சரவணபவனே சைலொளிபவனே திரிபுரபவனே திகழொளிபவனே பரிபுரபவனே பவமொழிபவனே அரிதிருமுருகா அமராபதியைக் காத்துத் தேவர்கள் கடும் சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வேலவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை அழித்த இனியவேல் முருகா தணிகாசலனே சங்கரன் புதல்வா கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாள் பாலகுமரா ஆவினன் குடிவாள் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா சமரா புரிவாழ் சண்முகத்தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்னா விருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முரகனைப் பாடினே னாடினேன் பரவசமாக ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை நேசமுடன் யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடனிரஷி அன்னமும் சொன்னமும் மெத்த மெத்தாக வேலா யுதனார் சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன் வாழ்க வாழ்க வாரணத்துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன் பெற்றவள் குறமகள் பெற்றவளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரியமளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென்றடியார் தழைத்திட வருள் செய் கந்தசஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவராயன் பகர்ந்ததை காலையில் மாலையில் கருத்துடனாளும் ஆசாரத்துடன் அங்கம் துலக்கி நேச முடனொரு நினைவதுமாகி கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு ஓதியே செபித்து உகந்து நீறணிய அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய் திசைமன்ன ரென்மர் செயலதருள்வர் மாற்றலாரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும் நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீரெட்டாய் வாழ்வர் கந்தர் கை வேலாம் கவசத்தடியை வழியாய் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வசத்துரு சங்காரத்தடி அறிந்தெனதுள்ளம் அஷ்டலெக்சுமிகளில் வீரலட்சுமிக்கு விருந்துணவாக சூரபத்மாவைத் துணித்தகையதனால் இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத் தடுத்தாட் கொள் என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி தேவர்கள் சேனாபதியே போற்றி குறமகள் மனமகள் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பாயுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெற்றி புனையும் வேலே போற்றி உயர்கிரி கனகசபைக்கோர் அரசே மயில் நடமிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவணபவஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்
  3. இன்னும் நிறைய இருக்கு அக்கா ஆனால் களைத்துவிட்டது எழுதி. கடல் வற்றாதுதான். ஆனால் நாங்கள் நதி. ஆதலால் வற்றும்.😂 இதுக்கு மிஞ்சி எழுதி ஆர்வம் இல்லை.
  4. வேறு இடம் தேடிப் போவாளோ ...........! 😢
  5. முருகன் முருகன் முத்தமிழ் குமரன் முன்னே வந்தான் மூவிரு வதனன் கந்தன் கந்தன் கருணை வள்ளல் கலியுக வரதன் கார்த்திகை குமரன்
  6. மாவிட்டபுரம் என்னும் ஊரினிலே மயிலேறும் முருகனின் அரசாட்ச்சி மாவிட்டபுரம் என்னும் ஊரினிலே மயிலேறும் முருகனின் அரசாட்ச்சி வரலாறு கொண்ட மண்ணினிலே வரவேண்டும் குமரன் அருளாட்ச்சி வரலாறு கொண்ட மண்ணினிலே வரவேண்டும் குமரன் அருளாட்ச்சி
  7. வெள்ளை நாவல் அமர்ந்திருந்த வெற்றி வேலா பல வேடர் கண்டு வியந்து நின்ற வேலாயுதா வெள்ளை நாவல் அமர்ந்திருந்த வெற்றி வேலா பல வேடர் கண்டு வியந்து நின்ற வேலாயுதா கொள்ளை அழகு நாகர்முனை கடலோரத்தில் உனக்கு கொத்து பந்தல் அமைக்க நீயும் ஏற்றுக்கொண்டாய் **** திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில், திருக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு முருகன் ஆலயமாகும். திருக்கோவில்" என்ற பெயர், சாதாரண வழக்கில், சைவ -வைணவத் தமிழரால், தம் வழிபாட்டிடத்தைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாடல் ஆகும். மட்டக்களப்புப் பகுதியில் ஆகமவிதிப்படி எழுந்த முதலாவது இறைகோட்டம் என்ற பொருளிலேயே, இ்க்கோவிலுக்குத் திருக்கோவில்" என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது. கோவிலின் சிறப்பால், அது அமைந்த தலமும் பிற்காலத்தில் 'திருக்கோவில்' என்ற பெயரைப் பெற்றது. கோவில் மட்டுமன்றி, இங்கு ஊரே திருக்கோவில்" என்று அழைக்கப்படுவது, இந்தியத் திருத்தலங்களுக்குக் கூட இல்லாத பெருமையாகவும் புனிதமாகவும் கருதப்படுகின்றது. இவ்வாலயம் மூன்று கோபுரங்களைக் கொண்டிருந்ததால், "திரிகோவில்" என்று தமிழில் அழைக்கப்பட்டதாக இன்னொரு குறிப்புச் சொல்கின்றது. திருக்கோவில் எனப் பெயர்சூட்டப்பட முன்பு, இத்தலத்தின் பெயர், "நாகர்முனை" என்பதாகும். கிழக்கிலங்கைச் சரித்திர நூலாகக் கொள்ளப்படும் மட்டக்களப்பு மான்மியம் கூட, இக்கோவிலை, "நாகர்முனை" என்றும், "கண்டபாணத்துறை" அல்லது "கந்தபாணத்துறை" என்றும் அழைக்கின்றது. ஈழத்துப் பழங்குடிகளான இயக்கர், நாகர் என்போரில், நாகர்கள் பெருமளவு வசித்துவந்ததால், இப்பகுதி "நாகர்முனை" எனப் பெயர்பெற்றிருக்கின்றது. கந்தபாணத்துறை என்பது, கந்தனின் பாணமான (ஆயுதம்) வேல் கோயில் கொண்ட துறைமுகம் ஆகலாம். இக்கோயில் எப்போது அமைக்கப்பட்டது என்பதற்கான சரியான விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும், வாய்மொழி மரபுரைகள், திருக்கோவில், மண்டூர், உகந்தை ஆகிய மூன்று ஆலயங்களையும் சமகாலத்தவையாகக் காட்டுவதுடன், சூரபதுமனுடனும், இராவணனுடனும் இக்கோவிலைத் தொடர்புறுத்துவதுண்டு. சூரபதுமனை வதைத்தபின், மாணிக்க கங்கையில் மூழ்கியெழுந்த வேலிலிருந்து, மூன்று ஒளிக்கதிர்கள் சிந்தியதாகவும், அவை மேற்கூறிய மூன்று கோயில்களிலும் அமர்ந்ததாகவும் சொல்லப்படுகின்றது. அதைக்கண்ட அப்பகுதியில் வாழ்ந்த வேடர்கள் அவ்வேலுக்குக் கொத்துப்பந்தரிட்டு வழிபட்டு வந்ததாகவும், பின் "மனுராசா" எனும் அரசன் இன்றைய கோயிலைக் கட்டியதாகவும் அம்மரபுரை நீள்கின்றது. வேடர்களால், மிகப்பழங்காலந்தொட்டே வேல் வழிபாடு இடம்பெற்று வந்த தலம் இது என்பது மேற்கூறிய மரபுரையால் பெறப்படுகின்றது. நாகர்முனை சுப்பிரமணியர் கோவிலை, "மநுநேய கயவாகு" எனும் மன்னனே முதலில் கற்கோயிலாகக் கட்டியதாக மட்டக்களப்பு மான்மியமும் கூறுவதால், மனுராசா பற்றிய மூதிகமும் உண்மை ஆகலாம். பெரும்பாலும், இலங்கை, சோழராட்சியின் கீழிருந்த 10ஆம் அல்லது 11ஆம் நூற்றாண்டிலேயே, இக்கோவில் கற்றளியாகக் கட்டப்பட்டிருக்கின்றது எனக்கொண்டால் அது தவறாகாது. சோழரை அடுத்து வந்த மாகோன், பாண்டியர் போன்றோருடன் இவ்வாலயம் அதிகளவு சேர்த்தே சொல்லப்படுவதால், இது உண்மையே என உறுதிகூறலாம்.திருக்கோவில் விமானத்தில், பாண்டியர் கலை மரபைக் காணமுடிவதும், இவ்வாதத்துக்கு வலுச்சேர்க்கின்றது. பின், மட்டக்களப்புச் சிற்றரசர்களாலும், இலங்கையைப் பிற்காலத்தில் ஆண்ட கண்டி மன்னர்கள், கோட்டை மன்னர்கள் இக்கோவிலுக்குத் திருப்பணிகள் செய்து வந்திருக்கின்றனர். கோட்டை மன்னர்களில் ஒருவனான ஏழாம் விஜயபாகுவால் (1513–1521) அவனது பத்தாம் ஆட்சியாண்டில் வழங்கப்பட்ட சிதைந்த கல்வெட்டொன்று, இக்கோவிலில் உள்ளது. இதே மன்னனால் நீர்ப்பாசனத்துக்கு "வோவில்" எனும் ஏரி வழங்கப்பட்டதைக் குறிப்பிடும் தம்பிலுவில் கல்வெட்டும், இதே ஆலயத்தில் வைத்துப் பேணப்படுகின்றது. கடலோரத்தில் கம்பீரமாக அமைந்திருந்த இக்கோவில், இலங்கையைக் காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்த ஒல்லாந்தரையும் போர்த்துக்கேயரையும் வெகுவாகக் கவர்ந்திருக்கின்றது. ஒல்லாந்து வரைபடங்களும், ஆங்கிலேயப் பயணக் குறிப்புகளும் இக்கோவிலை "ட்ரிங்கோலி பெகோடா", "பெகோடா ட்ரிகோய்" என்றெல்லாம் குறிப்பிடுகின்றன.1610-20களில், போர்த்துக்கேய தளபதி ஜெரனிமோ டி.அசவீடோவால் ஆலயப் பூசகர்கள் கொன்றழிக்கப்பட்டு, இவ்வாலயம் இடித்துக் கொள்ளையிடப்பட்டிருக்கின்றது. எனினும், கற்றளிக் கருவறை, இன்றும் பெருஞ்சேதாரமின்றிக் காணப்படுவதால், முன்பு குறிப்பிட்ட புகழ்பெற்ற மூன்று கோபுரங்களுமே இடித்துத் தகர்க்கப்பட்டிருக்கின்றன என்று கொள்ளமுடியும். முழு மட்டக்களப்புத் தேசமுமே உரிமைகொண்டாடிய கோவில் என்பதால், இது ""தேசத்துக்கோவில்" என்று அழைக்கப்பட்டது. இவ்வாலயத்தில் பூசனை புரியும் உரிமை பெற்ற மக்கள், தெற்கே பாணமையிலிருந்து, வடக்கே கல்லடி நாவற்குடா வரை வாழ்ந்து வந்ததை பழைய குறிப்புகள் சொல்கின்றன.[9] மட்டக்களப்பின் இன்னொரு தேசத்துக் கோவிலாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் கருதப்படுகின்றது. தேசத்துக் கோவில் மாத்திரமன்றி, திருக்கோவில் "திருப்படைக் கோவில்"களிலும் ஒன்றாகும். திருப்படைக் கோவில் என்பது, மட்டக்களப்புச் சிற்றரசரின் மானியம் பெற்று வந்த பழம்பெருமை வாய்ந்த ஆலயங்களாகும். தான்தோன்றீச்சரம், சித்தாண்டி, மண்டூர், உகந்தை, கோவில் போரதீவு, வெருகல், திருக்கோவில் ஆகிய ஏ்ழு ஆலயங்களும், மட்டக்களப்பின் ஏழு திருப்படைக்கோயில்களாகக் கொள்ளப்பட்டுகின்றன. இவற்றில் தான்தோன்றீச்சரம் தவிர்ந்த ஆறும் முருகன் கோவில்கள் என்பது சிறப்பு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.