Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 07/31/23 in all areas
-
மெய்தான் //எமது தாயகமும், இருப்பும் தக்கவைக்கப்பட வேண்டுமென்றால் நாம் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதை எப்படிச் செய்யவேண்டும் என்பதுபற்றியும், வெற்றிகரமாக அதனை நடத்துவது எப்படி என்று சிந்திப்பதுமே எமக்கு முன்னால் உள்ள தேவை. // நான் எதிரப்பா... இனிப் போராடுவதற்கு எம்மிடம் மனிதவலு இல்லை. மற்றது வெளிநாடுகளில் இருப்பவர்கள் (முதல் தலைமுறை மற்றும் பிறந்த பிள்ளைகள்) எல்லாம் இங்கு வந்து போராடப்போவதில்லை. எங்கேனும் வெகு அரிதிலும் அரிதாக கடந்த ஈழப்போர் போன்று வந்து போரிடலாம். மற்றும்படி வெளிநாட்டிலிருந்து யாரும் வரப்போவதில்லை. உள்நாட்டில் இன்னொரு ஆயுதப் போராட்டதிற்கு பங்களிக்கும் வகையில் மனிதவலு இல்லை. அதைவிட ஆயுதப் போராட்டம் தலையெடுப்பதற்கான ஏலுமான வழிகளோ இல்லை அதைக் கொண்டு செல்வதற்கான வழிகளோ இல்லை; ஏழ்மையாலும் கடந்த காலங்களில் பட்ட வலிகளாலும் (ஆயுதப்போரால் எற்பட்ட இழப்புகள்) அந்தளவிற்கு புல்லுருவித்தனம் புரையோடியுள்ளது. எனவே ஆயுதப் போராட்டம் இல்லாமல் அறிவை வைத்து ஏதேனும் செய்ய முயற்சிக்கலாம். இதுவே என்னுடைய நிலைப்பாடு. சரி, உங்கட பிள்ளைகளை வெளிநாட்டிலை இருந்து கொண்டுவந்து நீங்களே ஒப்படைப்பீங்களோ, ஆயுதப் போராட்டத்திற்கு? இல்லை நீங்களே வீடுவீடாகச் சென்று உங்கள் பிள்ளைகளைப் போராட்டத்திற்கு தாருங்கள் என்று கேட்பீர்களா? (வாதத்திற்கு ஓமெனப்படாது!)3 points
-
போராட்ட காலமுழுவதும் இலங்கை தீவுக்கு வெளியே, குறிப்பாக இந்தியாவில் அரச விருந்தாளியாக இருந்த “அங்கிளுக்கு” - துரோகம் என்ற வார்த்தையை உச்சரிக்கும் அருகதையே இல்லை. இவர் வசதியாக பிள்ளைகளை சிங்கபூரில் செட்டில் பண்ண, குருமார்களையும், தங்கள் குமாரர், குமாரத்திகளையும் போராட அனுப்பி, தமது எண்ணிக்கைக்கும் அதிகமாக போராட்டத்துக்கு விலை கொடுத்த தமிழ் கிறிஸ்தவ சமூகத்தை பற்றி வாய் திறக்கவே அருகதை அற்ற மனிதர் இவர். 100% உண்மை2 points
-
மிக்க நன்றி இருவருக்கும் அன்றைய நாள் படகு ஓரத்தில் பொலித்தீனினால் ஒரு மறைப்பு கட்டப்பட்டது காலைக்கடன் கழிக்க படகும் நகர்கிறது சர்வதேச கடலுக்குள் நுழைந்து விட்டோம்........ கவலை இல்லை இனிமே என்கிறார்கள் படகை செலுத்துபவர்கள். ஆனால் வாந்தியும் தலைசுற்றும் நின்றபாடிலில்லை மதியம் வரை ஓடிய படகை நிறுத்திவிட்டு சமைக்க ஆயத்தமானார்கள் நங்கூரத்திற்கு சீ அங்கர்( Sea Anchor) என்றூ சொல்லப்படுகின்ற பரசூட் வடிவிலான ஓர் பொருளை (படங்கினால் ஆன ஒன்றை) கடலிலில் மிதக்க விட படகு ஆடாமல் அசையாமல் இருந்தது. படகு எஞ்சினும் தனது சூட்டை மெதுவாக குறைத்துக்கொள்கிறது. சோறும் கறியும் சமைத்தார்கள் ஆனால் சாப்பிட யாருக்கும் மனதில்லை காரணம் வாந்தி. இருந்தாலும் சாப்பிட்டே ஆகவேண்டும் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக சாப்பாட்டை சாப்பிட தொண்டை நோவு அனைவரையும் தடுத்தது நீரே அதிகம் தேவைப்பட்டது ஆனால் நீரை அதிகம் பாவிக்க வேண்டாம் என சொன்னார்கள் குளிப்பு இல்லை பல் துலக்கல் இல்லை வறண்ட உதடு உப்புக்காற்றில் பிசுபிசுத்துப்போன உடல்கள் மரத்துப்போன தலைமுடி இறந்து கொண்டிருக்கும் நம்பிக்கையற்ற மனது இப்படி கடல் பயணம் தொடர்கிறது எல்லோர் மனதிலும் ஏன் வந்தோம்? இலங்கையில் இருந்து செத்து இருக்கலாம் என்ற மனநிலை தோன்றியது. இப்படி பகல் இரவு படகு ஓட்டமாகவே எங்களுக்கு நகர்ந்தது நாட்களும் நகர்கிறது. என்னை தவிர மற்றவர்களை கூட்டி வந்த ஏஜன்சிக்கும் வந்தவர்களுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது அதாவது 15 நாட்களில் செல்லலாம் என சொல்லியே கூட்டி வந்திருக்கிறார். ஆனால் கடல் பயணத்தை சொல்ல முடியாதல்லவா முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் கடல் வாழ்க்கையும். நானும் அப்போதுதான் கடலில் இறங்கி தங்கி நின்று மீன் பிடிக்கும் மீனவர்களின் வாழ்க்கையையும் எண்ணிப்பார்க்கிறேன் எத்தனை கப்பல்கள் குறுக்கே செல்கிறது அதிலிருந்து பாதுகாப்பாக வலை, வள்ளங்களை காப்பாற்ற வேண்டும் காற்று , மழை புயல் என எத்தனை சாவால்களை கடந்து அவர்கள் மீன்பிடிக்க செல்கிறார்கள் சிலவேளை புயலில் சிக்கி , படகு பழுதாகி காணாமலும் போகிறார்கள். குறுக்கே எத்தனை கப்பலகள் போனாலும் சைகை காட்டியும் அவர்களும் காணாதவர்கள் போல கடந்து விடுகிறார்கள் . நாட்கள் செல்ல செல்ல உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது .எஞ்சினும் அடிக்கடி பழுதாகி விடுகிறது எந்த நேரமும் இயங்கிக்கொண்டிருப்பதால். அப்போது படகில் இருக்கும் அனைவருக்கும் அறிவுறுத்தல் கொடுக்கப்படுகிறது இனிமேல் ஒரு நேரக்கஞ்சிதான் கிடைக்கும் தண்ணீரும் அதிகம் இல்லை அதனால் தண்ணீரை இன்னும் சிக்கமாக பாவியுங்கள் என. படகும் அடிக்கடி பழுதாகி விட எங்களுக்குள் ஏதாவது நாட்டுக்கு செல்லலாம் என நினைத்திருந்த கனவு மெதுவாக கலைகிறது எங்கோ காடோ அல்லது மணல் மேடோ தெரிந்தால் அங்கே இறங்கி இறந்தாலே போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டோம். (கோபம் மட்டும் கொந்தளிக்கிறது கடல் போல) தொடரும் ................................2 points
-
தமிழர்தாயகத்திலே, குறிப்பாக யாழ்க்குடா நாட்டிலே பௌத்தமும் இந்துதீவிரவாதமும் கூட்டு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகவே தோன்றுகிறது.ஏற்கனவே கிழக்கின்நிலை எதிரிகளுக்குச் சாதகமாக மாற்றப்பட்டுவிட்டது. இதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் கணிசமான பங்களிப்பும் ஒத்துழைப்பும் துணை செய்துவருகின்றன. தமிழர் தாயகத்தில் மத முரண்கள் தலைகாட்டியது இல்லை. சாதியாகவும் மதமாகவும் நிற்காது ஒரு இனமாக, ஒரு தேசியமாக நின்றதன் விளைவாக ஒரு நடைமுறைஅரசை எவரது தயவுமின்றித் தமது சொந்தப்பலத்தில் மிகக் குறுகியகாலத்தில் ஈழத்தமிழரால் அடைய முடிந்தததை சிறிலங்காவைவிட, இந்தியாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழினம் வீழ்ச்சியில் இருந்து எழுந்துவிடாதிருக்க இந்தச் சக்திகளுக்குப் பிரதேசம்,சாதி,மதம் போன்ற கொலைவாட்களை கூர்மைப்படுத்தவேண்டிய தேவையுள்ளது. தமிழினம் விழிப்போடும், தெளிவான சிந்தனையோடும் கையாளவேண்டிய காலமாகும்.2 points
-
தயாமோகனின் பதவி பறிப்பின் பின்னணி என்ன? July 24, 2023 — அழகு குணசீலன் — தயாமோகன் ! தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர். நந்திக்கடல் இறுதியுத்தத்தின் போது மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர். இருந்தவர் என்பதைவிடவும், கிழக்கு மாகாண முன்னாள் புலிகளின் கருத்தில் ”தலைவரால்/ அண்ணேயால் நியமிக்கப்பட்ட அரசியல் துறை உயர் நியமனம் இது. இது விடுதலைப்புலிகளின் தலைமையின் ஏக அதிகாரத்திற்கு உட்பட்டது. இறுதியுத்தத்தின் போது உயிர் தப்பி , புலம்பெயர்ந்து வாழும் விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய பதவிகளில் இருந்தவர்களுள் தயாமோகன் முக்கியமானவர். குறிப்பாக புலிகளின் பிளவுக்குப்பின்னர் கிழக்கில் மட்டக்களப்பு- அம்பாறையில் தயாமோகனதும் மற்றும் ரமேஷ், கௌசல்யன், கரிகாலன் போன்றவர்களின் பங்கு கிழக்கை புலிகள் மீண்டும் மீட்பதில் முக்கியமானது. இந்த அணியினரின் வாகரைத்தாக்குதல் – படுகொலைகளே கருணா அணியை சிதைத்து, புலிகளை மீட்டவை. இதனால் இன்று இருப்பவர்களில் கிழக்கில் மட்டுமன்றி, வடக்கிலும், புலம்பெயர்ந்த சூழலிலும் தயாமோகனின் வகிபாகம் புலிகளுக்கு முக்கியமானது. இந்த நிலையில் புலம்பெயர்ந்த நாடுகளில் உதிரியாக சிதறிக்கிடந்த முன்னாள் புலி உறுப்பினர்களை ஒருங்கிணைத்து அரசியல் பிரிவாக செயற்பட வைத்ததில் தயாமோகன் முக்கியமானவர். பிரபாகரனால் நியமிக்கப்பட்ட அரசியல் துறை பொறுப்பாளர் அந்தஸ்த்தின் அடிப்படையில் தயாமோகனே மீளுருவாக்கம் செய்யப்பட்ட அரசியல் பிரிவுக்கும், மறுவாட்டில் இலங்கையில் ஜனநாயகப்போராளிகள் கட்சியின் செயற்பாடுகளுக்கும் ஒருங்கிணைப்புக்கும் பொறுப்பாக இருந்துள்ளார். யுத்தத்தின் பின்னர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயற்திறன் அற்றிருந்த புலம்பெயர்ந்த புலிகளுக்கு உருவேற்றியவர் தயாமோகன் அண்ணன் என்று கூறுகிறார்கள் புலம்பெயர்ந்த கிழக்குப்புலிகள். இப்போது தயாமோகனின் இந்த அரசியல் துறைப்பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது பிரபாகரனால் வழங்கப்பட்ட நியமனம் அதை மீறுவதற்கு எந்தப்புலிக்கு அதிகாரம் இருக்கிறது? ஆகவே பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார் அவரின் உத்தரவில் தான் இது நடந்திருக்கிறது என்று சிலருக்கு எண்ணத்தோன்றும் . அதுதான் இல்லை.” பிரபாகரன் உயிருடன் இல்லை” என்ற தயாமோகனின் அறிவிப்பே அவரின் பதவிக்கு காலனாக அமைந்து விட்டது. பதவி பறிப்பின் பின்னணியில்……! ——————————- இந்தப் பதவி நீக்கம் தொடர்பாக பல்வேறு ஊகங்களும், கருத்து மோதல்களும் , விமர்சனங்களும், கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. எப்போதும் தமிழ்த்தேசிய சண்டைகளை தமது “ஊடக தர்மம்” சார்ந்து ஊதிப்பெருப்பிப்பதும், அல்லது கண்டும் காணாததுமாக – இனம்தெரியாதவையாக இருந்துவிடுவதும் அந்த ஊடகங்களின் பாணி. இந்த வகையில் தயாமோகனின் விடயத்தில் கண்டும் காணாத இரண்டாவது தெரிவையே பிரதான தமிழ்த்தேசிய ஆதரவு ஊடகங்கள் கடைப்பிடிக்கின்றன. இந்த போக்கு பதவி பறிப்பின் பின்னணியில் உள்ள சந்தேகங்களை மக்கள் மத்தியில் குறிப்பாக கிழக்குமாகாண மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள கிழக்குமாகாண முன்னாள் போராளிகள் பலரும் இது குறித்து தமக்குள் விசனமடைந்துள்ளதை அறியமுடிகிறது. அண்மையில் புலம்பெயர்ந்த சமூகத்தில் செயற்படும் ஊடகம் ஒன்றுக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பேச்சாளர் என்று கூறப்படும் கீதன் என்பவர் தயாமோகனின் பதவி நீக்க முடிவு அதற்குப் பொறுப்பான குழுவின் தீர்மானம் என்றும், இவ்வாறான பதவி “மாற்றங்களும்”, புதிய நியமனங்களும் வழமையானவை என்றும் தெரிவித்துள்ளார். அது பிரபாகரனின் இராணுவ தலைமை காலத்தில் வழமையாக இருக்கலாம். இன்று ஜனநாயக வழிக்கு திரும்பியுள்ளோம் என்ற கூற்றின் பின்னணியில்……. இந்த வார்த்தைகளுக்குள் மறைந்து கிடக்கின்ற உண்மைகள் எவை?. இந்தக் குழுவின் பெரும்பான்மை ஜனநாயக முடிவாக இதைக் காட்டமுயற்சிக்கப்படுகிறது. ஆனால் இந்தப் பெரும்பான்மையை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? அந்தக் குழுவில் ஜனநாயக ரீதியாக வடக்குக்கும், கிழக்குக்கும் பங்கிடப்பட்டுள்ள அங்கத்துவம் 50:50 என்றால் சரி. இல்லையேல் நீங்கள் பேசுகின்ற அதே பெரும்பான்மை ஜனநாயகத்தைதானே சிங்களதேசியவாதம் பேசுகின்றது. இங்கு அதிகாரமும், மேலாண்மையும் உண்மையான ஜனநாயகத்தை பிரதிபலிப்பதில்லை. இது புலிகளிடம் மட்டும் அல்ல வடக்கு அரசியல் தலைமைகள் அனைத்திற்குமான பொதுப்பண்பாடு. 1. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு மீள் உருவாக்கத்தை அரசியல் துறை பொறுப்பாளர் என்ற வகையில் தயாமோகன் ஊடகவாயிலாக அறிவித்திருந்தார். அப்போது மேலைத்தேய ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் தாம் செயற்பட இருப்பதாகவும் , ஏற்கனவே புலிகளின் தடைகளுக்கு காரணமான அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்பதும் அவரின் கருத்தின் சாராம்சமாக அமைந்தது. இதில் ஆரம்பத்தில் இருந்தே சிலருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. 2. சுவிஸில் விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கம் என்றும், கட்டாய நிதி சேகரிப்பு குறித்தும் தொடுக்கப்பட்டிருந்த வழக்கில், நீதிமன்றம் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு இல்லை என்றும், நிதியை மக்கள் சுயவிருப்பின் பேரிலேயே வழங்கினார்கள் என்றும் தீர்ப்பளித்திருந்தது. இதன் உண்மைத்தன்மை தெரிந்தவர்களுக்கு தெரியும் . சட்டம் ஒரு இருட்டறை என்ற வகையில் இந்த தீர்ப்பு அரசியல் பிரிவு ஆழச்சுவாசிக்க அனுசரணையாக அமைந்ததுடன் சுவிஸில் இந்தியதூதரகத்தினுடனான உறவுக்கும் வழிவிட்டது. சுவிஸில் முரளி காலத்து “அடாவடித்தனங்கள்” மீண்டும் ஏற்படக்கூடாது என்ற நிலைப்பாட்டுடன், இறுதிப்போரில் இந்தியாவின் வகிபாகத்தையும் தயாமோகன் வெளிப்படையாக பேசி வந்துள்ளார். இதுவும் அவர்மீது மற்றவர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தியுள்ளது. 3. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபோது தமிழ்த்தேசிய அரசியல் கனவிலும் நினைத்துப்பார்க்காத ஒரு நிகழ்வு எதிரும் புதிருமாக இடம்பெற்றது. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவின் கீழ் இயங்கும் ஜனநாயக போராளிகள் கட்சி இன்னும் வாழ்த்துவதற்கு வார்த்தைகள் உண்டா? என்று கேட்கும் அளவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வாயார வாழ்த்தி அறிக்கை விட்டிருந்தது. இந்த அறிக்கைக்கு பின்னால் தயாமோகன் இருந்தார் என்று நம்பப்படுகிறது. இதற்கு அந்த அறிக்கை மட்டக்களப்பு பாலையடிவட்டை, வெல்லாவெளி முகவரியில் இருந்து வெளியிடப்பட்டிருந்ததும் ஒரு காரணம். தயாமோகன் இந்த பிரதேசத்தை சேர்ந்தவர். மட்டக்களப்பில் இருந்து முகவரியிட்டு புலிகளின் அறிக்கை ஒன்று வெளிவந்ததும் தயாமோகன் மீது விமர்சனங்கள் எழுவதற்கு காரணமாக இருந்துள்ளது. இதன் மூலம் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைமையும், தலைமையகமும் மட்டக்களப்பிலா? என்ற கேள்விக்கு அவலாக அமைந்தது. 4. இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவை கையாளும் பொறுப்பு லண்டனில் உள்ள இந்தியத்தூதரகத்தின் கைக்கு மாறியது. அண்ணாமலையின் அண்மைய லண்டன் வரவு கூட இந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே. மத்திய ஐரோப்பாவில் புலம் பெயர்ந்த தமிழர்கள் உள்ள அனைத்து நாடுகளைவிடவும் இந்துத்துவாவை முன்நிலைப்படுத்தக்கூடிய வட இந்திய, வட இலங்கை மடங்களை கொண்ட லண்டன் களம் மிகவும் பொருத்தமானதாக இந்தியாவால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் பொறுப்பில் மாற்றம் ஒன்றை செய்யவேண்டிய தேவை இந்த மடங்களுக்கு இருந்தது. இதை துரிதப்படுத்திய உடனடிக்காரணமே ” பிரபாகரன் உயிர்த்தெழுந்த கதை”. 5. இந்திய இந்துத்துவ மடங்களும், யாழ் மையவாத லண்டன் மடங்களும், அதற்கு துணைபோக பழ.நெடுமாறன், காசி. ஆனந்தன் அன் கோ கம்பனியும் போட்டதிட்டத்திற்கு தயாமோகன் பலியாகி இருக்கிறார். ஒரு தரப்பு துணைபோகிறது மறு தரப்பு பயன் படுத்துகிறது. ஓடுமீன் ஓடி உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு…..! ———————————————————————————————————————- விடுதலைப்புலிகளின் வரலாற்றில் ஒருவரைத் “தட்ட” நினைத்தால் முதலில் செய்யப்படுவது அவர்மீதான தவறுகளை(?) பட்டியல் இடுவதும் , பொருத்தமான கனதியான காரணம் ஒன்று கிடைக்கும் வரையும்- மக்களை நம்பவைக்கும் உறுமீன் காரணம் வரும்வரையும் காத்திருப்பதும் .இப்போது அந்தக் காலம் கனிந்திருக்கிறது, தயாமோகனின் அரசியல் பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அந்த உறுமீன் தான் உடனடிக்காரணம் . அது பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற மாயை. இறுதியுத்தத்தின் போது களத்தில் நின்ற முக்கிய போராளி – பொறுப்பாளர் என்ற வகையில் பிரபாகரனின் மரணத்தை தயாமோகன் ஒன்றுக்கு பலமுறை அறிவித்திருக்கிறார். 2009 மே 16 ம் திகதிவரையும் தனக்கு இலக்கியன் என்பவருடன் தகவல் பரிமாற்றம் இருந்தது என்று கூறுகிறார் தயாமோகன். அதேவேளை “மே 7ம், 8ம் திகதி களில் தலைவரின் மகளும், சோதியா படையணியின் வைத்தியப்பிரிவு போராளியுமான துவாரகாவும் , அண்ணியும் வீரச்சாவடைந்து அவர்களின் உடல்கள் உரிய இடங்களில் முறையாக விதைக்கப்பட்டுவிட்டன. அவர்களின் உடல்கள் எதிரியின் கைகளில் சிக்கவில்லை, இதனால் அவர்கள் பற்றிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை”. என்று தர்க்கரீதியாக அவர் நிறுவுகிறார். “மே 17 இல் தலைவர் வீரச்சாவடைந்தார் என்பதை உறுதிப்படுத்தியபின் , மே 18 க்கும் மே 27 க்கும் இடையில் தலைவரின் வீரச்சாவை அறிவிப்பதா? இல்லையா? என்று டெலிபோன் உரையாடல்களை நடாத்தி எடுக்கப்பட்ட முடிவின்படியும், அரசியல் துறைப் போராளி என்றவகையில் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பின் படியும் நான் அதனை அறிவித்தேன். இந்த விடயங்களை பழ.நெடுமாறன் , காசி. ஆனந்தன் உள்ளிட்டவர்களும் அறிந்திருந்தார்கள், ஏற்றுக்கொண்டார்கள் ” என்று விலாவாரியாக விளக்குகிறார் தயாமோகன். தயாமோகன் கூறும் இந்த உண்மையை முதலில் ஏற்பதுபோல் நடித்தவர்கள் இப்போது குத்துக்கரணம் அடிக்கிறார்கள். இவர்கள் “பணமுதலைகள்” நிதி சேகரிப்பதற்காக இந்தப் பொய்யை கட்டவிழ்த்துவிடுகிறார்கள் என்று சாடுகிறார் தயாமோகன். இவர்களின் ஏற்பாட்டில் தான் மதிவதனியும், துவாரகாவும் லண்டனில் முக்காட்டுடன் காரில் பயணிக்கிறார்கள், சில வீடுகளுக்கு வந்தார்கள் என்றெல்லாம் ஐரோப்பாவில் “FINANCE NEWS” வெளியிட்டு சில ஊடகங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தின. இந்திய ஊடகங்கள் இந்தச் செய்தியை மறுகா, மறுகா ஊழையிட்டு இன்னும் உழைத்துக் கொண்டிருக்கின்றன. எது எப்படியோ தயாமோகன் உண்மைக்கு கொடுத்தவிலை அரசியல் பொறுப்பாளர் பதவி. இது கிழக்கிலும்,புலம்பெயர்ந்த தேசங்களிலும் ஏற்படுத்தப்போகும் தாக்கத்திற்கான பதில் காலத்தின் கரங்களில் இருக்கிறது. https://arangamnews.com/?p=98571 point
-
நாம் எம் கையில் இல்லாதா மாகாண பொலிஸ்சுக்கு கையில் துவக்கு வேண்டும் என கூச்சல் போட்டபடி இருக்க, சிங்களவன் எப்போதும் எமது கையில் இருந்த யாழ் பல்கலைகழகத்தையே உருவி விடுவான். பெரும் சிங்கள இனவாதி எஸ் எல் குணசேகர ஒரு தடவை டீவி பேட்டியில் சொன்னார் 1. முன்பு ஒட்டு மொத்த நாட்டிற்கும் 50:50 சிறுபான்மை அதிகாரம் கோரினீர்கள் (ஜீ ஜீ கேட்டது) 2. பின்னர் மாகாண அதிகாரம் காணாது என இந்தியாவிடம் போராடினீர்கள் 3. அதே போல் தனிநாடு கேட்டு போராடுகிறீர்கள் தமிழர்கள் நீங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் எது சாத்தியம் இல்லையோ அதையே கேட்டு நிற்கிறீர்கள். இது உண்மைக்கு புறம்பான, ஒரு பொய்யான, பல வரலாற்று நிகழ்வுகளை (தமிழரின் செல்வா தலைமையிலான விட்டு கொடுப்புக்களை) மறைத்து சொல்லப்படும் கருதாகினும். ஜி ஜி பொன்னம்பலத்தின் அரசியல், அதேபோல் திம்பு-2023 வரையான தமிழ் அரசியல் அணுகுமுறையை பற்றிய ஒரு இழையோடிய உண்மை இதில் உள்ளது. அது: தமிழர்கள் பறக்கும் கனவுடன் சிறகுகள் வேண்டும் என அடிபட, சிங்களவர் மிக தந்திரமாக தமிழர்களின் கால்களையே வெட்டி எடுத்து விடுகிறார்கள்.1 point
-
கூரையேறி கோழிபிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போவேனென்றானாம். இந்தியாவும் இப்படித்தான் சொல்ல முயல்கின்றது. இந்திய ராஜதந்திரம் தோற்றுப் போய்விட்டது. இனியெதுவும் நடக்கப்போவதில்லை. ஈழத்தமிழர் தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்ள முயல்வதே உள்ள ஒரே வழி.1 point
-
பாடசாலை காலங்களை மீட்டி வருடுகின்றது உங்களின் கதை......."அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" எனக்கு கொஞ்சம் அதிகமாய் அடித்து விட்டார்கள் போலிருக்கு, எந்தப்பாடத்திலும் "s " ஐத் தாண்ட முடியல்ல.......! 😢1 point
-
படக்குறிப்பு, கழுகுமலை வெட்டுவான் குடைவரைக் கோவில் கட்டுரை தகவல் எழுதியவர், மு. சுப கோமதி பதவி, பிபிசி தமிழுக்காக 31 ஜூலை 2023, 05:07 GMT புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர் கழுகுமலை வெட்டுவான் கோவில். பெரும் பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இந்தக் கோவில் 'தென்னிந்தியாவின் எல்லோரா' என்று அழைக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இருக்கும் இந்தக் கோவில், கி.பி. 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் மாறஞ்சடையன் என்பவரால் கட்டத் தொடங்கி முற்று பெறாமல் விடப்பட்டது. இந்த கலை சின்னங்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கழுகுமலையின் பண்டைய காலத்து பெயர் 'அரைமலை'. கழுகுமலையில் கிழக்குப் பக்கத்தில் வெட்டுவான் கோவில் அமைந்திருக்கிறது. கி.பி. 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டு மன்னர்கள் மதுரையை தலைநகராகக் கொண்டு, புதுக்கோட்டையில் இருந்து கன்னியாகுமாரி வரை ஆட்சி செய்துள்ளனர். எனவே வெட்டுவான் கோவிலை 8ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பண்டைய மன்னர்களால் கட்டி இருக்கக்கூடும் என்கின்றார் தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம். படக்குறிப்பு, கழுகுமலையின் பண்டைய காலத்துப் பெயர் 'அரைமலை'. கழுகுமலையில் கிழக்குப் பக்கத்தில் வெட்டுவான் கோவில் அமைந்திருக்கிறது. “இந்த மலையில் குடைவரைக் கோவில் மட்டுமல்லாமல் அதிக அளவிலான சமணர்களின் புடைப்பு சிற்பங்களையும் பார்க்க முடியும். தமிழகத்தில் வேறு எந்த இடங்களிலும் இந்தளவு சமணர்களின் சிற்பங்களைப் பார்க்க முடியாது,” என அவர் கூறுகிறார். பராந்தக நெடுஞ்சடையான் அல்லது முதல் வரகுணபாண்டியன் காலத்தில் இங்கு சமணர் பள்ளி உருவாக்கப்பட்டதாக கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. தென்னிந்தியாவின் எல்லோரா என்று அழைக்கப்பட காரணம் என்ன? மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் நகரில் அமைந்திருக்கும் கைலாசநாதர் கோவில் மற்றும் எல்லோரா குகைகளின் மாதிரி போல கழுகுமலை வெட்டுவான் கோவில் அமைந்துள்ளது. ஆகவே, இதை தென்னிந்தியாவின் எல்லோரா என்று அழைக்கின்றனர். மேலும், வெட்டுவான் கோவில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட குடைவரைக் கோவில். தென்னிந்தியாவில் வேறு எந்தக் கோவிலிலும் இதைப் போன்று ஒரே கல்லில் குடைவரைக் கோவில் அமைக்கப்படவில்லை. மற்ற குடைவரைக் கோவில்களில் இல்லாத தனி சிறப்பு பொதுவாக கட்டடங்களைக் கட்டும்போது முதலில் அஸ்திவாரம் அமைத்து கீழ் இருந்து மேலாக கட்ட தொடங்குவார்கள். ஆனால், கழுகுமலை வெட்டுவான் கோவிலோ மேல் இருந்து கீழாக கட்டப்பட்டுள்ளது. அஸ்திவாரம் எதுவும் இல்லாமல் பாறையை 'பா' வடிவத்தில் 7.50 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டியெடுத்து அதன் நடுப்பகுதியை கலசமாகக் கொண்டு, சிகரம், தளம், கூரை, பின்பு சுவர்கள் என மேல் இருந்து கீழ் நோக்கி குடையப்பட்டு உள்ளது. மேலும் இந்த கோபுரத்தில் அமைந்திருக்கும் சிலைகள் அனைத்தும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டவை. வேறு எந்தவித செதுக்கப்பட்ட சிற்பங்களும் இதில் பொருத்தப்படவில்லை. இது பார்ப்பதற்கு அகழ்வாராய்ச்சி செய்து கண்டெடுக்கப்பட்ட கோவில் போல் அமைந்திருக்கிறது. படக்குறிப்பு, இந்த கோபுரத்தில் அமைந்திருக்கும் சிலைகள் அனைத்தும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டவை மினி கைலாச வெட்டுவான் கோவில் சிவனை முதன்மை கடவுளாகக் கொண்டு பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் கட்டப்பட்டன. அதில் மிக முக்கிய கோவில்களில் ஒன்றுதான் மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் நகரிலிருந்து உள்ள கைலாசநாதர் கோவில். இதற்கு 'எல்லோரா குகைகள்' என்று மற்றோரு பெயரும் உண்டு. ராஷ்டிரகூட மன்னர் கிருஷ்ணா என்பவரால் 8ஆம் நூற்றாண்டில் கைலாசா கோவில் கட்டப்பட்டது. மேலும் இது கைலாசா மலையை ஒட்டியவாறு அமைந்திருக்கும். இந்த கோவிலும் மேலிருந்து செங்குத்தாக ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த கைலாசா கோவிலை கட்ட 20 ஆண்டுகளில் சுமார் 40,00,000 டன் பெரிய பாறைகள் வெளியேற்றப்பட்டன என ஆய்வில் தெரிய வருகிறது. அதேபோன்ற அமைப்பில் செதுக்கத் தொடங்கி, முற்றுபெறாத கோவில்தான் வெட்டுவான் கோவில். அதனால் இதை 'தென்னகத்தின் எல்லோரா' என்று அழைக்கின்றனர். மேலும் இந்தக் கோவிலிலும் சிவனையே முதன்மைக் கடவுளாக வைத்து கட்டப்பட்டது என்பதால் இது 'மினி கைலாசா' என்றும் அழைக்கப்படுகிறது. கைலாசநாதர் கோவிலில் அமர்ந்திருப்பது போலவே இங்கும் கிழக்கு நோக்கி சிகரத்தில் சிவன் மற்றும் பார்வதியின் சிலை செதுக்கப்பட்டிருக்கும். சிவனும் பார்வதியும் உரையாடுவது போன்ற அமைப்பில் செதுக்கப்பட்டிருக்கும். படக்குறிப்பு, பொதுவாக கட்டடங்களைக் கட்டும்போழுது முதலில் அஸ்திவாரம் அமைத்து கீழிருந்து மேலாக கட்டத் தொடங்குவார்கள். ஆனால், கழுகுமலை வெட்டுவான் கோவிலோ மேலிருந்து கீழாக கட்டப்பட்டுள்ளது. கோவிலின் சிற்பங்களும் அதிசயங்களும் வெட்டுவான் கோவில் மேல் இருந்து கீழ் செதுக்கப்பட்ட கோவில் என்பதால் அதிக நுட்பமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் வெட்டுவான் கோவில் ஒரே பாறையில் குடையப்பட்ட குடைவரைக் கோவில். பொதுவாக குடைவரைக் கோவில்கள் என்றால் மலை அல்லது பாறையின் பக்கவாட்டிலிருந்துதான் குடைய தொடங்குவார்கள். ஆனால், வெட்டுவான் கோவிலில் செங்குத்தாக இருக்கும் மலையின் உச்சியில் மேல் இருந்து கீழாக தலைகீழாக கலசம், சிகரம், தளம், கூரை என குடைந்து செதுக்கப்பட்டுள்ளது. வெட்டுவான் கோவிலில் சிகரம், கருவறை, அர்ந்த மண்டபமும் உள்ளன. ஆனால் இந்தக் கோவில் முழுமையாக கட்டப்படவில்லை. இது முற்றுப்பெறாத கோவில். சிகரம் மட்டுமே முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் அமைத்திருக்கும் கருவரையில் இருக்கும் விநாயகரின் சிலை பிற்காலத்தில் வைக்கப்பட்டது. படக்குறிப்பு, வெட்டுவான் கோவில் சிகரத்தில் திசை காவலர்கள், வனராக மகளிர் மற்றும் திசை பெண்கள் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பாதி முற்று பெறாமலும், ஒருசில பிற்காலங்களில் சேதமானதாகவும் காணப்படுகின்றன சிகரமும் சிற்பமும் ஒரே கல்லில் மேலிருந்து கீழாகச் செதுக்கப்பட்ட சிகரத்தில் நுட்பமான சிலை வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வெட்டுவான் கோவிலில் உமாமகேஸ்வரன், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகியோரின் சிலைகள் சிற்ப வடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் விமானத்தின் நான்கு திசைகளின் மூலையிலும் நந்தி சிலைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் அதற்குக் கீழாக யாளி மற்றும் கபோதமும் அமைந்துள்ளன. கபோதம் கருவறைச் சுவரின் வெளிப்பகுதியில் மழைநீரானது படாமலிருப்பதற்காக அமைக்கப்படுவது. சிகரத்தில் மேற்குத் திசையில் விஷ்ணு, வடக்குத் திசையில் பிரம்மா, தெற்குப் பக்கத்தில் தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் அமைந்துள்ளன. மிருதங்கத்துடன் தட்சிணாமூர்த்தி தட்சிணம் என்றால் தெற்கு என்று ஒரு பொருள் உண்டு. அதைக் குறிக்கும் விதத்தில் வெட்டுவான் கோவிலின் சிகரத்தில் தெற்கு திசையில் தட்சிணாமூர்த்தியின் சிலை செதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக தட்சிணாமூர்த்தி சிவன் கோவில்களின் தெற்கு திசையில் வியாக்யான முத்திரையை காட்டியப்படி அமர்ந்திருப்பார். ஆனால் வெட்டுவான் கோவிலில் மிருதங்க தட்சிணாமூர்த்தி அமைந்திருப்பது தனிச் சிறப்பு. இது குறித்து ஆய்வாளர் வேதாச்சலம் கூறும்போது, “தென் திசை கடவுளான தட்சிணாமூர்த்தி ரிஷிகளுக்கு யோகத்தையும், ஞானத்தையும் குருவாக அமர்ந்து உபதேசிக்கும் வடிவமாக கருதப்படுகிறார். ஜடாதாங்க முனிவர் போன்றோருக்கும் ஆசிரியராக தட்சிணாமூர்த்தி இருந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சிவாலயங்களில் மகாராஜலீலாசனம், அர்த்தபத்மாசனம், யோகாசனம், உத்குடிக்காசனம் போன்ற யோக ஆசனங்களில் அமர்ந்து, வியாக்யான முத்திரையை காட்டியப்படி அமர்ந்திருப்பார். தட்சிணா மூர்த்தி யோகம், ஞானம், கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர். தட்சிணா மூர்த்தி ஓர் இசை பிரியர். தமிழ்நாட்டில் பக்தியை வளர்ப்பதில் இசை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் தட்சிணாமூர்த்தி கையில் ‘மிருதங்கம்’ வைத்தபடி உலக உண்மைகளை உணர்த்தும் பொருட்டு இந்த வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் லால்குடியில், வீணையை ஏந்தியவாறு தட்சிணாமூர்த்தி அமர்ந்திருப்பார்,” என்றார். படக்குறிப்பு, ஒரே கல்லில் மேலிருந்து கீழாக செதுக்கப்பட்ட சிகரத்தில் நுட்பமான சிலை வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திசைகளின் காவலர்கள் திசைகளை ஆளும் தெய்வங்களை திசை காவலர்கள் என்று குறிப்பிடுவர். பண்டைய காலத்தில் கோவில்களின் சுவர்கள் மற்றும் கூரைகளில் திசை காவலர்களின் உருவத்தைச் செதுக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். வெட்டுவான் கோவில் சிகரத்தில் திசை காவலர்கள், வனராக மகளிர் மற்றும் திசை பெண்களின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பாதி முற்று பெறாமலும், ஒருசில பிற்காலங்களில் சேதமானதாகவும் காணப்படுகின்றன. பூதகணங்கள் சிற்ப வரிசை பொதுவாக சிவாலயங்களில் பூதகணங்களின் சிற்பங்கள் தனி வரிசையாகச் செதுக்கப்பட்டிருக்கும். பூத கணங்களின் தலைவராக கணபதி குறிப்பிடப்படுகிறார். அனைத்து சிவ ஆலயங்களிலும் கூரையைத் தாங்கியபடி பூத கணங்கள் அமைக்கப்பட்டிருக்கும். பூதகணங்கள் வெவ்வேறு முகபாவங்களுடன் இடம்பெற்றிருக்கும். மனித முகம், வானர முகம், விலங்கு முகம், இசை கருவிகளை வசித்தவாறு, நடனமாடியவாறு, பாம்பைக் கொண்டு விளையாடுவதுபோல பல்வேறு அமைப்புடன் வெட்டுவான் கோவிலின் சிகரத்தில் பூதகணங்கள் செதுக்கப்பட்டிருக்கும். படக்குறிப்பு, வெட்டுவான் கோவிலுக்கு அருகில் அதிக அளவிலான பண்டைய காலத்து சமணர்களின் புடைப்புச் சிற்பங்களைப் பார்க்க முடியும் தமிழ்நாட்டில் மிக முக்கிய சமணர் பள்ளி வெட்டுவான் கோவிலுக்கு அருகில் அதிக அளவிலான பண்டைய காலத்து சமணர்களின் புடைப்புச் சிற்பங்களைப் பார்க்கமுடியும். தமிழ்நாட்டில் அதிக அளவிலான சமணர்களின் சிற்பங்களை ஒரே இடத்தில் இங்கு காணலாம். மலையின் சரிவில் சமணத் திர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு சமண சித்தாந்தம் போதிக்கப்பட்டது. இந்த சிற்பங்கள் பண்டைய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றிவிக்கப்பட்டவை என்றும் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது. மாமல்லபுரம் பஞ்ச ரதங்கள் பாணியில் பல்லவர்களின் கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இடம் தான் மாமல்லபுரம் என்று அழைக்கப்படும் கடற்கரைக் கோவில். பல்லவர்களின் நுட்பமான கட்டட கலைகளில் ஒன்று பஞ்ச ரதங்கள். மகாபாரதத்தில் ஐந்து பாண்டவர்களான தர்மன் (யுதிஷ்டிரன்), பீமன், அர்சுனன், நகுலன், சகாதேவன் மற்றும் அவர்களின் மனைவி திரௌபதியின் ரதங்கள் ஒவ்வொன்றும் ஒரே கிரானைட் பாறையிலிருந்து ரதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. அதைப் போல வெட்டுவான் கோவிலில் ஒரே பாறையில் இருந்து சிகரம் செதுக்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர் வேதாச்சலம் குறிப்பிடுகின்றார். https://www.bbc.com/tamil/articles/c2x5kx32n5do1 point
-
ஆஹா........சிறப்பான தகவல்கள்.........! நன்றி ஏராளன் .......!1 point
-
மிகச்ச சரியான கருத்து.மகுதி இருப்பவர்களையும் வெளி நாடு வர உதவி செய்தால் பிரச்சனை முடிந்து விடும்.1 point
-
யுத்தம் முடிவடைந்து இத்தனை ஆண்டுகள் நாம் எங்கு நிற்கிறோம் ? ஏதாவது பெரிய மாற்றம் நிகழ்ந்து இருக்கிறதா ? எ ப்போது எம் மக்களுக்கான போராட்டம் முடிவுற்றதோ அன்றிலிருந்து எனது நாடு , எமது நாடு என்ற சிந்தனை எனக்கு இல்லை மாறாக இங்கே பிறந்து இருக்கிறேன் இறக்கும் வரைக்கும் வாழ்ந்துவிட்டு போகலாம் வாடகைக்கு இருப்பது போலவே இப்ப நான் ஊருல காதால் கேட்க முடிந்தது தற்போது அநேக தாதியராக இருக்கும் பலர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் . வெளிநாட்டில் வயோதிபர்களை பாராமரிப்பதாக கேள்வியும் பட்டேன் காரணம் எம் (பிள்ளைகள்) இளைய சமுதாயமாவது உலகில் எங்கோ ஓர் மூலையில் நல்ல பழக்கங்களையும் நல்ல பிரஜைகளாகவும் ஆகட்டும் அவர்கள் எதிர்காலமாவாது நன்றாக இருக்கட்டும் என சொல்கிறார்கள் இப்படி பலர் சிந்தனையும் இப்ப வெளிநாடுகளுக்கு செல்ல முயல்பவர்கள் லிஸ்ட் எம்பசிக்களிக்களில் நிற்பவர்களை நீங்கள் பார்த்தால் புரியும். நீங்க சொன்ன நம்ம நாடு அதெல்லாம் போய்விட்டது வீடு வளவு காணிகளை இழந்தால் இங்கே அகதிதான் இது இன்னும் பல யுகங்கள் போகும் அதுவரைக்கும் என்ன செய்ய முடியும்1 point
-
1 point
-
தகவலுக்கு நன்றி. அக்கா ஒரு தடி எடுத்து இரண்டு போட்டு சொல்லி கொடுங்கோ.1 point
-
எலிகப்ரல். விபத்தில் இளம் வயதில் இறந்துபோனான். ?😀 Helicopter ,..ஹெலிகாப்டர் ?1 point
-
கொலம்பியாவின் லிண்டா கைசெடோ ஒரு சாதனையாளர் தான். புற்றுநோய் வந்து அதன் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி பின்பு , புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சையும் பெற்று விளையாட வந்திருக்கிறார். போட்டியில் அவர் களமிறங்கி 52 நிமிடத்தில் முதலாவது கோலை யேர்மனிக்கு எதிராக அடித்தார்.1 point
-
உடையார் ஐம்பதிலும் ஆசை வரும். இவரும் திருமணம் செய்து பிள்ளைகள் இல்லாவிட்டால் நேரு பரம்பரையே இவருடன் முடிந்துவிடுமா?1 point
-
பலபத்து ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவுடன் சேர்ந்து தமிழர்கள் சிங்களவர்களையும் இலங்கையையும் ஆக்கிரமித்துவிடுவார்கள் என்ற சந்தேகமே சிங்களவர் தமிழர்களிடையேயான மன கசப்பின் ஆரம்பபுள்ளி என்கிறார்கள். பல காலமாக இலங்கை தமிழர்களுக்கென்று ஒரு நாடு கிடைத்தால் தமிழகமும் தனிநாடு கேட்டு இந்தியாவிலிருந்து பிரிந்துவிடும் என்ற இந்திய மத்திய ஆட்சியாளர்களின் அச்சமே இலங்கையில் தமிழருக்கென்று ஒரு நாடு கிடைக்கவிடாமல் இந்தியா தலது பலத்தை பிரயோகித்து எம் போராட்ட சக்திகளை அடியோடு அழித்தது என்பது வரலாறு. இப்படி இருநாட்டு அரசுகளும் சந்தேகப்பட்டபடி எதுவும் நடக்கவில்லை ஆனால் இந்த சந்தேகங்களினால் சில லட்சம் உயிர்களை நாம் இழந்ததுதான் மிச்சம். இது யாருக்கு தெரியுதோ இல்லையோ செல்வம் போன்ற பல தசாப்தங்களாய் ஆயுத அரசியல் போராட்ட அமைப்பில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும், அப்படியிருந்தும் நடைமுறை சாத்தியமில்லாத உசுப்பேத்தல் கருத்துக்களை கூறுவது, சிங்களவன் இன்னும் எந்தவித தடுப்பாயுதங்களும் இல்லாது வெறும் கைகளுடன் நிற்கும் எம்மீது கொலைவெறி கொள்ள மட்டுமே வழிவகுக்கும். இந்தியாவுடன் இணைக்கவேண்டி கோரிக்கை வைப்போம் என்கிறாரே இந்தியாவுடன் ஒருவேளை வடகிழக்கு இணைந்துவிட்டால் ஹிந்திய ஆட்சியாளர்கள் எம்மை தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்குவார்களா? ஏற்கனவே வடக்கு கிழக்கை சிங்களவன் ஆக்கிரமிப்பதுபோல, இந்திய மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழகத்தில் இந்தி திணிப்பு, வங்கி ரயில்வே துறையிலிருந்து கூலி தொழிலாளர்கள்வரை வட இந்தியர்கள் ஆக்கிரமித்துவிட்டார்கள், போதாகுறைக்கு அங்கிருந்து வந்து கொலை கொள்ளை என்று தமிழகத்திலேயே பல எதிர்ப்பு குரல்கள் எழுவதை இவர் கவனித்ததே இல்லையா? தமிழக மீனவர்கள் பலநூறுபேர் இலங்கை கடற்படையால் கொன்று குவிக்கப்பட்டும் இன்றுவரை பெரிதாக அலட்டி கொள்ளாமல் இருக்கும் மத்திய அரசு சிங்களவன் நமக்கு பண்ணுவதுபோல் தமிழகத்தை மாற்றாந்தாய் மனபான்மையுடன் வைத்து இருப்பதை இவர் கவனித்ததே இல்லையா? வட இந்தியர்களை இலங்கை கடற்படை கொன்றதுபோல் நூற்றுக்கணக்கில் யாரும் கொன்றிருந்தால் ஹிந்தி ஆட்சியாளர்கள் அமைதியாக இருந்திருப்பார்களா? இவர்களுடன் எம் வடக்கு கிழக்கு சேர்ந்தால் சிங்களவனைவிட சுதந்திரம் அதிகம் கிடைக்கும் என்ற சிந்தனையை என்ன சொல்ல? தற்கால உலகில் தமக்கென அரசியல் எல்லைகளை வரைந்துகொண்டு இயங்கும் நாடுகளில் ஒன்றை பிரித்து இன்னொன்றுடன் சேர கேட்போம் என்பது நடைமுறை சாத்தியமில்லாத நகைச்சுவை கருத்துக்கள் மட்டுமே.1 point
-
1 point
-
குருசோ இரண்டை விட்டுவிட்டீர்கள் உங்களையும் போட்டுத்தள்ளப்போகிறார்கள், 72 ஹூருலீன்கள் (கண்ணழகிகள்) கணக்கில் கறாராக இருக்கவேண்டும். அதுமட்டுமல்ல விறைப்படங்காத ஆண்குறி நிரந்தரமாக ஆண்களுக்கு தரப்படும். 24*7*365*infinity நகிர்தனா...தினனானா தான். இன்னுமொரு மூலம் இந்த ஹூரிகள் எப்போதுமே கன்னித்தன்மை உடையவர்களாக இருப்பார்கள் என்று சொல்லறது. அதாவது மேட்டர் முடிந்ததும் மீண்டும் கன்னிகள் ஆகிவிடுவார்களாம், சின்ராசு ஒவ்வொரு நாளும் 72 பூட்டை திறந்துகொண்டே இருக்கலாமாம்1 point
-
இதுதான் நடக்கிறது. இதிலிருந்து சிங்களவர் விடுபடப்போவதில்லை. அவர்கள் நினைத்தாலும் திரிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட வரலாற்றை இனவாதம் மீண்டும் மீண்டும் ஊட்டும். நல்லிணக்க செயல் பொறிமுறையை இலங்கை இழுத்தடிப்பதன் நோக்கம் இதுவென உலகுக்கு மீண்டும் மீண்டும் எடுத்துரைக்க வேண்டும்.1 point
-
எத்தனை தரம் சுற்றினாலும் ஒரே ஒரு கேள்விதான் என்னை சுற்றுகிறது விசுகர், நான் என்ன செய்ய? வயிற்றுக்கு போடேக்கை, காதிலையும் கொஞ்சம் சேர்த்து போட்டிருக்கலாம், இப்படி ஒரு சந்தர்ப்பம் எல்லோருக்கும் வாராது. அவராவது போகேக்கை வீட்டில எல்லோரும் சுகமா என்று பேச்சுக்கு கேட்டிருக்கலாம். இவர் உணவு கொடுத்த திருப்தி, அவர் சாப்பிட்ட திருப்தி. இதுதானே தமிழன்! விருந்து கொடுத்து பாத்து மகிழ்வது. ஒரு தடவை, தென்னாபிரிக்க கிறிக்கற் வீரர் ஒருவர், வேறொரு நாட்டுக்கு விளையாட சென்றபோது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தன்நாட்டில் நடக்கும் நிற ஒடுக்குமுறையை வெளிப்படுத்தியிருந்தார். திணிப்பு தாங்க முடியாவிட்டால் பீறிட்டுக்கொண்டு வெளியே வரும். காலம், இடம், நேரம் பாக்காது!1 point
-
இந்தாளோட கட்சி (பழைய அமைப்பு) பெயர்: தமிழீழ விடுதலை இயக்கம் ஆனால், சொல்வதோ வட-கிழக்கை இந்தியாவோட சேர்க்க வேண்டும் என்று... அமைப்போடா பெயருமோ கொள்கையுமோ வேறு வேறு! இதிலை இவங்கள் எங்களுக்கு விடுதலை வேண்டிக்குடுக்க வெளிக்கிட்ட ஒரு அமைப்பாம்! இந்தியாவோடா சேர்வதற்கு சிங்களவனோடையே இருக்கலாம். அது மேலானது.1 point
-
இவர் அப்பப்ப இப்படிதான் உணர்ச்சிவசப்பட்டு உளரிடுவார், கண்டுக்காம நகர்ந்து போங்க. காந்தி(?) மண்டையை போட்டு ரொம்ப நாளாயிட்டுது சார்.1 point
-
மணிப்பூர் மாதிரி வர வேண்டும் என செல்வம் ஆசைப்படுகிறார் போல.1 point
-
இந்தியாவின் விருப்பபடி அகன்ற இந்தியாவை இவர் அமைக்க தான் போகிறார். அப்படி இவர் அமைத்தால் தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பிஜேபி இவரை நியமிக்கும்.1 point
-
விடுதலைப் புலிகளுடன் இருந்த அல்லது அவர்களின் கலை பண்பாட்டுக் கழகம் வெளியிட்ட வெளிச்சம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் பணிப்பாளராகவும் இருந்த, இப்பொழுது கிளிநொச்சியில் வசிக்கும் கருணாகரனது கட்டுரை ஒன்று அண்மையில் தமிழக இதழான காலச்சுவட்டில் வெளிவந்ததை வாசித்தீர்களோ தெரியாது. இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு முக்கிய காரணமாக புலிகளை சாடியிருந்தார். இராணுவம் செய்த குற்றங்களை விட, புலிகளே குற்றங்கள் செய்ததாக அந்தக் கட்டுரையின் சாரம்சம் இருந்தது (இந்தக் கட்டுரை யாழில் எவராவது பகிர்ந்தனரோ தெரியவில்லை) இந்தக் கட்டுரையை தட்டச்சு செய்து கொடுத்து உதவியது தீபச்செல்வன். எல்லா புற்றுகளுக்குள்ளும் பாம்புகள் வசிக்கும் காலம் இது,1 point
-
வாருங்கள் பேசுவோம் ! இன்றைய கால கடடத்தில் நம் சமுதாயம் தாயகத்தில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பல அதில் இதுவும் மிக முக்கியமான ஒன்று . "போதை காடடும்பாதை ". நம் இளைய சமுதாயம் சீர் கெட்டுப்போகிறது. வெளி நாட்டுக்கு காசு ...பெற்றோரின் கவனிப்பு இன்மை . உடல் உழைப்பின்மை அரச இயந்திரத்தின் திட்ட் மிட்ட் சதி ..போதையூட்டும் மருந்துகளின் தாராளா வரவு. என்பன ,. இதை தடுக்க என்ன செய்யலாம். உளவள ஆற்றுப்படுத்தலின் மையங்கள் ஒரு சில தான் உள்ளன. பணம் இதில் பெரும்பங்கு வகிக்கிறது.0 points
-
சட்டியில் இருந்து ஆடுப்புக்குள் இணையும் தமிழீழ விடுதலை இயக்க தலைவரின் திட்டத்திற்கு வெளிநாட்டில் உள்ள ஒருவரின் ஆதரவு கிடைத்துவிட்டது. நடைமுறையாக சிந்தித்துள்ளீர்கள் 👍0 points