Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    34974
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    7054
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    5
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/08/23 in Posts

  1. முகத்தார் வீடு நாடகம் வாசித்ததில் இருந்து நானும் ஒன்று எழுத வேண்டும் என்று எண்ணினேன். அதுதான்........... சாத்தர் : முனியம்மா, முனியம்மா முனியம்மா : என்ன இழவுக்கு இப்பிடிக் கத்திறியள். எத்தின தரம் சொல்லிப் போட்டன் முனியம்மா எண்டு கூப்பிட வேண்டாம் எண்டு. நான் மினி எண்டு என்ர பேரை மாத்தி எவ்வளவு நாளாச்சு. சாத்தர் : நீ என்ன தான் மாத்தினாலும் எனக்கு நீ முனிதான். இன்னும் நீ வெளிக்கிடேல்லையே ? முனியம்மா : பொறுங்கோ வாறன் கொஞ்சம் வடிவா வெளிக்கிட்டுக் கொண்டு வரவேண்டாமே. சாத்தர் : அதுசரி. என்ன கலியாணத்துக்கே போறம். கார் வாங்கப் போறமப்பா. முனியம்மா : கொஞ்சம் வடிவா வெளிக்கிட்டுப் போனால் என்னைப் பாத்திட்டாவது காசைக் கொஞ்சம் குறைச்சுசொல்லுவான். சாத்தர்: நீ அடிச்சிருக்கிற லிப்ச்டிக்கைப் பாத்திட்டு அவன் கூடச் சொல்லப்போறன். முனியம்மா : உங்களுக்கு எப்பவும் பகிடிதான். சாத்தர்: மனதுக்குள் ( உண்மையச் சொன்னாலும் பகிடியா நினைக்கிறியே ) நான் உன்னோட பகிடி விடாம ஆரோட விடுறது. முனியம்மா : சரி அப்பா முதல்ல எந்தக் கடைக்குப் போவம். சாத்தர்: என்ன நீ எதோ உடுப்புக் கடைக்குப் போற மாதிரிக் கேட்கிறாய். இது காரப்பா கார். முனியம்மா : உடுப்பே நாலுகடை ஏறி இறங்கி வாங்கிறம். காரை இன்னும் எத்தினை கடை ஏறி இறங்கி வாங்.கவேணும் சாத்தர்: என்னதான் ஏறியிறங்கி வாங்கினாலும் கடைசியில எனக்கு வந்த கதிதானே அதுக்கும். முனியம்மா : என்னப்பா முணுமுணுக்கிறியள். கொஞ்சம் பிலத்துச் சொல்லுங்கோ. சாத்தர்: ஒண்டுமில்லையப்பா சும்மா என்னுக்குள்ள கதைச்சனான். முனியம்மா : வரவர நீங்கள் உங்களுக்குள்ளயே தனியக் கதைக்கிறியள். ஒருக்கா டாக்டர் இட்டை உங்களைக் கூட்டிக் கொண்டு போக வேணும். முனியம்மா காருக்குள் ஏறி கதவை அடித்துச் சாற்றுகிறார். சாத்தர்: மெதுவாச் சாத்தப்பா. நீ அடிக்கிற அடியில கார் கதவு களரப் போகுது. முனியம்மா : அடிச்சுச் சாத்தினால்தான் நான் விழாமல் இருக்கலாம். எப்ப கதவு திறக்கும் எப்ப டிக்கி திறக்கும் எண்டு உங்களுக்கே தெரியாது. எதுக்கும் வடிவாக் காரை ஓடுங்கோ. சாத்தர்: நீ சத்தம் போடாமல் வந்தாலே கார் ஒழுங்காப் போகும். வாய் திறக்காமல் வா. முனியம்மா : எந்த இடத்துக்குப் போறியள் எண்டு சொல்லுங்கோ. அந்த இடம் வரும் வரை நான் கதைக்கேல்லை. சாத்தர் : அதுதான் லண்டனிலேயே பெரிய கார் கொம்பனி. வயிற் சிற்றியில இருக்கிறது. முனியம்மா : அதோ அப்பா! இண்டைக்குத் தான் நீங்கள் உருப்படியா ஒண்டு செய்யிறியள். சாத்தர்: உனக்கேத்ததெண்டா உந்த வசனத்தை எத்தினை தரம் எண்டாலும் சொல்லுவாய். முனியம்மா : தேவையில்லாமல் கதைக்காமல் ரோட்டைப் பாத்துக் காரை ஓட்டுங்கோ. சாத்தர்: இந்தக் காருக்கு என்னப்பா குறை. அஞ்சு வருசமா வச்சிருக்கன். முனியம்மா : நீங்கள் அஞ்சு வருசமா வச்சிருக்கிரியள். கார் பத்து வரிசப் பழசு. சாத்தர்: நீயும்தான் பத்துவரியப் பழசு. அதுக்காக நான் மாத்திப் போட்டனே? கார் ரோட்டில ஓடுதுதானே. பிறகென்ன?? முனியம்மா : நானும் காரும் உங்களுக்கு ஒண்டாப் போட்டமே ஆ..... ஓடுதுதான். உதிலும் பாக்க சிலோனில இருந்து ஒரு மாட்டு வண்டில் வாங்கிக்கொண்டு வந்து ஓட்டியிருக்கலாம். வாறவன் போறவன் எல்லாம் ஓவடேக் செய்துகொண்டு போறாங்கள். சாத்தர்: இப்ப உன்ர அரியண்டத்தாலதான் வேற கார் எடுக்க ஓமெண்டனான்.எனக்கு இந்தக் கார் காணும். முனியம்மா : அவளவள் கோவிலுக்கு பென்சிலையும், BMW விலையும் வந்திறங்க, நான் மட்டும் இந்த டப்பாக் கார்ல போறனான். சாத்தர்: எந்தக் கார்ல போனா என்ன உனக்கு அவை வீட்டுச் சாப்பாடே. ஒழுங்கா உழைச்சு உந்தக் காருகள் ஓடுறவை குறைவு. கள்ளக்காட் போடுறவனும், கவுன்சில் க்ளைமில இருக்கிறவங்களும் தான் சும்மா வாற காசைச் சேத்துவச்சு உப்பிடியான காறுகள் வாங்கிறது . முனியம்மா : கள்ளக்காட் போடவும் துணிவு வேணுமெல்லோ. சாத்தர்: என்னை உள்ள தள்ளிறதிலேயே குறியா இரு. நல்லதுக்கு இப்ப காலமில்லை. முனியம்மா : என்னும் எவ்வளவு நேரமப்பா??? சாத்தர்: வந்திட்டம் இன்னும் நாலு மைல் தான். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ முனியம்மா: ஐயோ இவ்வளவு காருகள் நிக்கிது. சாத்தர்: எடி எடி ஆத்தா, காரைப் பாக் பண்ணின பிறகு இறங்கு. பிறகு உன்னை வேணுமெண்டு கொலை செய்யப் பாத்ததெண்டு நான்தான் உள்ளுக்குப் போகவேண்டி வரும். முனியம்மா : கெதியா வாங்கோப்பா. சாத்தர்: அவசரப்பட்டு ஓடி என்ன செய்யப் போறாய்? ஆறுதலா ஒவ்வொண்டாப் பாப்பம். முனியம்மா : இன்சரப்பா இது நல்ல வடிவா இருக்கப்பா. இதை எடுப்பமே? சாத்தர்: உது நாலாயிரம் போட்டிருக்கிறான்.உந்த விலை எங்களுக்குச் சரி வராது. அங்கால வா. முனியம்மா : இது இன்னும் நல்லா இருக்கப்பா இதை வாங்குவம். சாத்தர்: கொஞ்சம் பொறப்பா. எல்லாத்தையும் பாத்திட்டு முடிவு செய்வம். முனியம்மா : இன்சரப்பா இந்தக்கார் எவ்வளவு பெரிசு ஓடினா இப்பிடிக் காறேல்லோ ஓடவேணும். சாத்தர்: காரே ஓடத் தெரியாது அதுக்குள்ளே நினைப்பை பார். முனியம்மா : உந்தக் கார் ஓடத் தெரியாத கதை இனிமேல் கதைக்கக் கூடாதெண்டு அண்டைக்குச் சொன்னனான் எல்லே. சாத்தர்: ஒண்டில்ல இரண்டில்ல எட்டுத் தரமெல்லெ பெயில் விட்டனி. முனியம்மா : நான் ஒண்டும் செய்ய மாட்டன் எண்ட தயிரியம் உங்களுக்கு. சாத்தர்: பின்ன, இஞ்ச சட்டி பானை ஒண்டும் இல்லை. காரும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் வாங்கோ போவம் எண்டு சொல்லு பாப்பம். முனியம்மா : எனக்கென்ன விசரே. எப்பிடியும் வீட்டில வந்துதானே இருக்கப் போறியள். பிறகு பாத்துக் கொள்ளுறன். சாத்தர்: சரியப்பா கோவிக்காதை உன்னோட பகிடி விடாமல் நான் ஆரோட விடுறது. முனியம்மா : இது நல்ல வடிவான காரப்பா இதைத்தான் கட்டாயம் எடுக்கிறம். சாத்தர்: போடி இவளே. காரின்ர விலையைப் பாத்தனியே? வடிவாம் வடிவு. வடிவை வச்சு என்ன செய்யிறது. முனியம்மா : ரோட்டில ஓடிக்கொண்டு போகேக்க நாலுபேர் பாப்பினமெல்லெ. சாத்தர்: ஓ பாப்பினம். பாத்திட்டு வந்து அவதான் பெற்றோல் அடிக்கப் போயினம் உன்ர காருக்கு. இந்தக் காருக்கு பெற்றோல் அடிச்சுக் கட்டுமே. அதோட நான் ரேசே ஓடப் போறன் இந்தக் காரை வாங்கி. முனியம்மா : உங்களுக்கு உந்தக் கஞ்சத்தனம் போகவே போகாது. சாத்தர்: மூவாயிரம் பவுன்ஸ் கொண்டு கார் எடுக்க வந்திருக்கிறன். என்னைக் கஞ்சன் எண்ணிறாய். முனியம்மா : இஞ்ச ஒரு காரையும் மூவாயிரத்துக்குள்ள காணேல்லையே அப்பா. சாத்தர் :அதுதான் நானும் யோசிக்கிறன். வேற கடைக்குப் போவம் வா முனி. முனியம்மா : இத்தன காருகள் இருக்கு. இத விட்டிட்டு வேறை கடையோ. இண்டைக்கு இங்கதான் கார் எடுக்கிறது. சாத்தர் : காசில்லாமல் என்னண்டப்பா கார் தருவாங்கள் ? முனியம்மா : காட் குடுத்தாலும் தருவாங்கள். சாத்தர் : நான் காட்டைக் கொண்டு வரேல்லை. முனியம்மா : நீங்கள் உப்பிடிச் சொல்லுவியள் எண்டுதான் உங்கட காட்டை நான் எடுத்துக் கொண்டு வந்தனான். சாத்தர் : மனதுள் (இவளுக்குத் தெரியாமல் ஒளிச்செல்லோ வச்சனான். என்னண்டு எடுத்தவள்) நானே காட்டைக் காணேல்லை எண்டு தேடினனான். எங்க இருந்ததப்பா. முனியம்மா : என்ர உடுப்பு அலுமாரிக்குள்ளேயே எனக்குத் தெரியாமல் ஒளிச்சு வைக்கிரியள் என்ன? சாத்தர் : நான் ஏனப்பா ஒளிச்சு வைக்கிறான். கை தடுமாறி வச்சிருப்பன். முனியம்மா : அப்பிடி வச்சதும் நல்லதாப் போச்சுப் பாத்தியளே. சாத்தர் : இவளின்ர உடுப்புக்குக் கீழ வச்சால் எடுக்க மாட்டாள் எண்டு நினைச்சா. கோதாரி என்ர கேடுகாலம் போயும் போயும் கார் வாங்க வாற நேரமே இவளின்ர கையில காட் கிடைக்க வேணும். முனியம்மா : திரும்ப என்னப்பா முனுமுனுப்பு? சாத்தர்: ஒண்டும் இல்ல இண்டைக்கு ஆற்ற கண்ணில முளிச்சனான் எண்டு யோசிக்கிறான். முனியம்மா : வீட்டில இருக்கிறது நானும் நீங்களும்தான். இதில ஒண்டில் என்னில முழிச்சிருக்க வேணும். அல்லது சுவரிலையோ முகட்டிலயோதான் முளிச்சிருப்பியள் . சாத்தர் : இண்டைக்கு எதோ நினைப்பில உன்னில முழிச்சிட்டன் போல கிடக்கு. முனியம்மா : என்னில முளிச்சபடியாத்தான் இண்டைக்கு புதுக் கார் வரப்போகுது. சாத்தர்: கூடவே கடனும் ஏறப்போகுது. முனியம்மா : உயிரோட இருக்கேக்க ஆசைப்பட்டதை அனுபவிச்சுப் போடவேனுமப்பா. சாத்தர் : உதச் சொல்லிச் சொல்லி நீயே எல்லாத்தையும் அனுபவிக்கிறாய். நான் உழைச்சு உழைச்சு ஒடாத் தேயிறன். முனியம்மா : உடன உங்கட புராணம் பாட வெளிக்கிடாதைங்கோ. வாங்கோ அங்காலையும் போய்ப் பாப்பம். சாத்தர் : இதோட நிப்பாட்டுவம். அங்கால சரியான விலை கூடின காருகள் தான் இருக்கு. முனியம்மா : நெடுகவே அப்பா எடுக்கப் போறம். இங்க இதைப் பாருங்கோ. நீங்கள் சொன்ன மாதிரி டீசல் கார். எனக்குப் பிடிச்ச கறுப்புக் கலர். பிறகென்ன ? சாத்தர்: விலையைப் பாத்தனியே? ஐயாயிரத்தி எழுநூற்றி ஐம்பது முனியம்மா : அதுக்கென்ன. எனக்கு இந்தக் கார்தான் வேணும். சாத்தர் : மினி சின்னப் பிள்ளை மாதிரி அடம் பிடிக்காதை. உந்தக் காசுக்கு எடுத்துப் போட்டு வட்டி கட்டவே எக்கச்சக்கம் வந்திடும். முனியம்மா : மினி எண்டு கூப்பிட்டா நான் உடன நீங்கள் சொல்லுறதுக்குத் தலை ஆட்டுவன் எண்டு நினைச்சியளே. இந்தக் கார்தான் வேணும். சாத்தர் : இதுக்கு மாதா மாதம் தீனி போட்டுக் கட்டாதெடியப்பா. முனியம்மா : நான் ஆசைப்பட்டது எதைத்தான் ஒழுங்கா வாங்கித் தந்தனியள். முனியம்மா கண்ணைக் கசக்குகிறார். சாத்தர் : ஆக்கள் பாக்கினம் அழாதை. எதோ நான் உன்னைக் கொடுமைப் படுத்திறதெண்டுநினைக்கப் போறாங்கள். அழுதழுது உன்ர ஆசை எல்லாத்தையும் நிறைவேத்திப் போடுறாய். ( நீண்ட பெருமூச்சு விடுகிறார் சாத்தர்) முனியம்மா : நான் உங்களை விட்டா ஆரிட்டையப்பா கேக்கிறது? சாத்தர் : இண்டைக்கு வர முதல் என்ர பலனைப் பாத்துப் போட்டு வெளிக்கிட்டிருக்க வேணும். ம் ........... தொடரலாம் ...........
  2. கவியரசர் கண்ணதாசன் (காற்றில் கலந்த கீதங்கள்) · Rejoindre Viji · · வயலின் கலைஞர் திரு. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் நினைவு நாள் சிறப்பு பதிவு. கவியரசர் கண்ணதாசன் எழுதிய மிக அருமையான ஆன்மீக பாடல்களுள், "மருதமலை மாமணியே முருகையா" என்ற பாடலில், அவரின் அசத்தலான வார்த்தை ஜாலத்தினை அழகாய் சொல்லும் ஒரு சம்பவம்.... "மருதமலை மாமணியே" என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார். அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கவியரசர் அதற்கு பாட்டு எழுத வேண்டும். இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கவியரசர் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம். அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல். ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலினில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்".... குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்.. கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று "மலையது,நதியது, கடலது சகலமும் உனதுரு கருணையில் எழுவது", என்ற வார்த்தைகளை எழுதியவுடன் வயலினை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா ,என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்... கவிஞரே உங்கள் பாதம் பணிகிறோம்...... கவிஞரின் ஞானத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது... காலத்தை வென்ற பாடல்களை தந்த மாமேதை கவிஞர் கண்ணதாசன். கவியரசரின் சிறப்பான வரிகளும், குன்னக்குடி வைத்தியநாதனின் அருமையான இசையும், இந்த பாடலில் இருவரின் பேராற்றலும் வெளிப்படும்! "தெய்வம்" திரைப்படத்தில், குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் அருமையான இசையில், கவியரசரின் அற்புதமான வரிகளில், கணீரென ஒலிக்கும் மதுரை சோமு அவர்களின் குரலில் மலர்ந்த தெய்வீக பாடல்! Voir la traduction Toutes les réactions : 9090
  3. இலையை குடை பிடிக்கும் குருவி,,🐦🐦🐦 ஒரு முன் எச்சரிக்கையா 🤯மழை வருவது மயிலுக்கு தெரியும்,,என்ற பாடலுக்கமைய..⛱️இந்த குருவிக்கும் தெரிந்திருக்கும் 🐦🐦🐦 👍🔔

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.