ஒழுங்காக இயங்கிக் கொண்டிருக்கும் நாடுகளின் அரசுகளுக்கே உள்ளூர் நிகழ்ச்சி நிரல், வெளியுலக நிகழ்ச்சி நிரல் எனப் பல திசைகளில் இழுபடும் "அட்ஜஸ்ட்மென்ற் வாழ்க்கை" எனும் போது, ஒரு உருப்படியான இலக்கும் இல்லாமல் "கொல்,ஒளித்திரு, கொல்" என்றிருக்கும் பயங்கரவாதக் கும்பல்களுக்கு எவ்வளவு தலையிடிகள் இருக்கும்😂?
பலஸ்தீனர்களுக்கு ஒரு நாடு வேண்டுமென்ற அக்கறை உண்மையிலேயே அரபுலகில் இருந்திருந்தால், 1993 இலிருந்தே கப்பலைத் திருப்பியிருக்க முடியுமே இந்த நாடுகளால்? ஏன் முடியவில்லை? சவூதி ஒரு திசை, ஜோர்தான் , எகிப்து இன்னொரு திசை என்று அவர்கள் பாடு தான் அவர்களுக்கு முக்கியம். கிளின்ரனும், ராபினும், நோர்வேயும் பலஸ்தீனருக்குச் செய்த நன்மைகளை விடக் குறைவாகத் தான் அரபு சக்திகள் செய்திருக்கின்றன.
இன்னொரு பக்கம், அமெரிக்கா மறைமுகமாகக் கூட தங்கள் மீது பாய்ந்து விடக் கூடாதென்ற அக்கறையும் இந்தப் பயங்கரவாதக் குழுக்களுக்கு இருக்கிறது. இப்படி தீய வன்முறைச் சக்திகளை ஒடுக்கி வைக்க அமெரிக்கா, நேட்டோ, AUKUS போன்றவை தேவை தான்!