சில விடயங்களை நிக்சன் மிகவும் எளிமைப்படுத்துகிறார்.
தமது இந்தோபசிபிக் பிராந்திய நலனே மேற்கு நாடுகளுக்கு முக்கியம் என நிக்சன் சொல்வது சரியே.
ஆனால் நிக்சன் சொல்வது போல் மேற்குக்கு இலங்கை மேல் ஒரு பாசமும் இல்லை. இலங்கயில் ஒரு சுயநிர்ணய தமிழ் மாநிலம் அமையகூடாது (தமது நலனுக்கு தீங்கு ஏற்படாவண்ணம்) என்பதிலும் அவர்கள் உறுதியாக இல்லை.
ஒஸ்லோ பிரகடனம் மேற்கு அனுசரணையில் வந்ததுதான். இந்தியாவோ, சீனாவோ, ரஸ்யாவோ அப்படி ஒரு தீர்வை இலங்கையில் கனவிலும் நினைக்காது.
ஆனால் அது நாம் வலிமையாக இருந்த போது இலங்கையும், மேற்கும், வேறு வழி இன்றி இந்தியாவும் இறங்கி வந்த நிலை.
அதன் பின் இலங்கை+இந்தியா தந்திரமாக செயல்பட்டு, மேற்கின் நலனுக்கு புலிகள் அழிப்பு இன்றி அமையாதது என்ற முடிவுக்கு மேற்கை வரப்பண்ணினார்கள். புலிகளின் அனுகுமுறையும் இந்த முடிவுக்கு வருவதை இலகுவாக்கியது.
காஸா வில், தமது நலனுக்கு ஹமாஸ் அழியவேண்டும், அதற்காக மக்கள் அழிவதும் ஏற்புடையதே என்ற மேற்கின் அணுகுமுறையை காணும் நமக்கு, 2009 இல் அவர்கள் எடுத்ததும் இதுவே என்பதை புரியமுடியும்.
புலிகளின் அழிவுக்கு பின், நாம் பலமற்று போன நிலையில் - அவர்களுக்கு எம்மை நோக்கி வர எந்த தேவையும் இல்லை.
ஆனால் இலங்கை கிட்டத்தட்ட சகல துருப்பு சீட்டையும் தன்னகத்தே வைத்திருந்தது. தொடர்ந்தும் சீன பூச்சாண்டி காட்டுகிறது. இந்த நிலையில்தான் கொவிட், ஏனைய காரணிகள் + கொவிட்டால் நெருக்கடி அதன் வழியே அறகளை என மேற்கு இலங்கையில் இறங்கி ஆடுகிறது.
ஒன்றுபட்ட இலங்கை என்பது எப்போதும் மேற்கு வலியுறுத்தியதே. பாலா அண்ணைக்கு கூட இது விளங்கியது. எமது விடயத்தில் மேற்கு ஒருபோதும் ஒரு பிரிந்துபோகும் வாக்கெடுப்பை முன் மொழியவோ, ஆதரரிக்கவோ இல்லை.
ஆனால் உள்ளக சுயநிர்ணயத்தை ஏற்க மேற்கு தயாராக இருந்தது.
இப்போ எம்மை மேற்கு அதை கூட கைவிட நிர்பந்திக்கிறது என்றால் - அதற்கு எமது 2009 பின்னான பலமில்லா நிலையே காரணம்.
2009 ற்கு பின் நாம் ஆயுதம் இல்லா வழிகளில் எமது கூட்டு பேரம் பேசும் வலுவை அதிகரிக்க என்ன செய்தோம்?
எதுவுமில்லை.
என்ன செய்யலாம்?
1. எம்மில் எம்பிகள் உள்ள ஒரு கட்சியாவது சீனாவை அணுகியே ஆக வேண்டும். இது இலங்கைக்கு தேள் கொட்டிய நிலையை கொடுக்கும். மேற்குக்கும், இந்தியாவுக்கும் இலங்கையை வழிக்கு கொண்டு வந்து எமக்கு ஒரு நியாமான தீர்வை தர வேண்டிய நிர்பந்தத்தை கொடுக்கும்.
2. புலம்பெயர் நாட்டில் ஏனை நாட்டு உளவு அமைபுகளுக்கு விலை போகாத தலைமைகளை, அடி மட்டத்தில் இருந்து உருவாக்கி (இப்போ உள்ளோர் அனைவரையும் தூக்கி அடித்து விட்டு) அடிப்படைகளை விட்டு கொடாமல் பேரம் பேசலாம். லாபி பண்ணலாம்.
3. மேற்கின் பாராளுமன்ற, நிர்வாக, அரச, இராஜதந்திர, பொருளாதார கட்டமைப்பில் தனி நபர்களாக உள்ளிட்டு மேலே வந்து அழுத்தம் கொடுக்கலாம்.
இவற்றை செய்ய புலத்திலும், மேற்கிலும் நமது தலைவர்கள், பிரமுகர்களாக கொள்கை பிடிப்புள்ள, விலை போகாதோர் தேவை.
அதை நாம் செய்யும் வரை நாம் எல்லோருக்கும் கிள்ளுகீரைகள்தான்.
எமக்கான நியாயமான தீர்வு ஒரு கட்டிடம் என்றால் - அதன் அத்திவாரமாக அமையப்போவது எமது புலம், புலம்பெயர் அரசியலை இனத்துக்கு நேர்மையான மனிதர்கள், வெளிப்படைத்தன்மையுடன் முன்நகர்துவது.
அத்திவாரத்தையே நாம் போடாமல், மேற்கு யன்னலை தர மறுக்கிறது, சீனா கூரையை தரவில்லை, இந்தியா சுவரை இடிக்கிறது என்பதில் ஒரு பயனும் இல்லை.
மேற்கிற்கு வேண்டப்பட்டவர்களாவதும், ஆகாமல் விடுவதும் எமது கையில்தான் இருக்கிறது. இந்த அத்திவாரத்தை நாம் சரியாக போட்டால், மேற்கே வீட்டை கட்டித்தரும் நிலையை காலம் உருவாக்கும்.