Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    19134
    Posts
  2. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    9308
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    31986
    Posts
  4. island

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    1747
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/28/23 in all areas

  1. ஒரு சாதாரண TV போட்டி ஒன்றின் வெற்றியை தலை மேல் வைத்து கொண்டாடி அந்த பிள்ளையின் எதிர்கால வளர்ச்சியை நாசமாக்க போகின்றனர்.
  2. சிப்பிக்குள் முத்து (பித்தத்தில் கல்லு!) கூர்ப்பு ஒரு கோட்பாடு என்பதை விட ஆதாரங்கள் நிறைந்த ஒரு உண்மை எனலாம். கூர்ப்பு நிகழ்ந்தமைக்கான பல ஆதாரங்களில் ஒன்று எங்கள் உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள். சில உறுப்புகள், அவசியமின்மை காரணமாக, குறுகிப் போகின்றன (குடல் வால் -appendix ஒரு உதாரணம்). சில உறுப்புகள், பெரும்பகுதி அவசியமில்லாமல் போனாலும் சில உடற்றொழில்களுக்கு அவசியமாக இருப்பதால், தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கின்றன: இதற்கு உதாரணம் எங்கள் பித்தப் பை. எங்கள் மூதாதையர் வேட்டையாடி, பெருமளவு இறைச்சி, கொழுப்பு என்பவற்றை சந்தர்ப்பம் கிடைக்கும் போது மட்டும் வயிறு புடைக்க உண்ண வேண்டிய ஒரு காலம் இருந்தது. அந்த மூதாதையரில் கொழுப்பை இலகுவாகச் சமிக்கச் செய்ய பித்தப் பை உதவியது. மூன்று வேளையும் அதிக கொழுப்பு அல்லது கொழுப்பை உருவாக்கும் மாப்பொருள் என்பவற்றை உண்ணும் நவீன மனிதனில், பித்தப் பை ஒரு பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. இந்தப் பிரச்சினையின் பிரதான வடிவம், பித்தக் கல் (Gallstones). பித்தப் பையின் தொழில் என்ன? கொழுப்புணவு சமிக்க உதவும் பித்தம் (gall) என்ற சுரப்பை தயாராகச் சேமித்து வைத்துக் கொள்வது தான் பித்தப் பையின் பிரதான தொழில். பித்தம் ஈரலினால் சுரக்கப் படுகிறது. நீர், பித்த உப்புகள், கனியுப்புக்கள், சிறிது கொலஸ்திரோல் வகைக் கொழுப்பு என்பன தான் ஈரல் சுரக்கும் பித்தத்தின் கூறுகள். ஈரலில் இருந்து வரும் இந்த பித்தத்தை பித்தப் பை வாங்கித் தன்னுள் சேமித்து வைத்திருக்கும் போது, அதில் இருக்கும் நீரை உறிஞ்சிக் கொள்வதால் 3 - 4 மடங்குகள் செறிவான பித்தம் உருவாகிறது. பித்தப் பை (பச்சை நிறம்), ஈரல், முன் சிறு குடல், கணையம் ஆகியவற்றின் அமைவிடத்தைக் காட்டும் படம். ஈரலினுள் இருந்து வரும் பித்தம், ஈரல் கான் ஊடாக பித்தப் பையினுள் சேர்கிறது. உணவு உண்டு ஒரு மணி நேரத்தில், முன் சிறு குடலினுள் பித்தப் பையில் இருக்கும் பித்தம், கணையத்தின் சுரப்புகளையும் சேர்த்துக் கொண்டு நுழையும். பித்தம் கொழுப்பைச் சிறுகோளங்களாக மாற்றுவதால் கொழுப்பு சமிபாடடைய உதவும். பித்தப் பையில் சேரும் பித்தத்தில் பித்தக் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் பல காரணிகளால் அதிகரிக்கும். பெரும்பாலானவை கொலஸ்திரோல் கற்களாக இருக்கும். பட உதவி நன்றியுடன்: NIH, USA. சாதாரணமாக 30 முதல் 50 மில்லிலீற்றர்கள் வரையான செறிவான பித்தம் இப்படி பித்தப் பையில் சேமிக்கப் பட்டிருக்கும். உணவை எங்கள் உணவுக் கால்வாய் உணரும் வரை பித்தம் சேமிப்பில் இருக்கும். உணவு உள்ளே வருவதை எங்கள் சிறு குடல் உணரும் போது அது வெளிவிடும் ஓமோன் சுரப்புகளால் தூண்டப் பட்டு, பித்தப் பை சுருங்க ஆரம்பிக்கும். முன் சிறுகுடலினுள் திறக்கும் பித்தக் கால்வாய் திறந்து கொள்ளும். பித்தம் சிறு குடலினுள் நுழைந்து, கொழுப்பை சிறு சிறு கொழுப்புக் கோளங்களாக (micelles) உருமாற்றம் செய்யும். இப்படி உருமாற்றம் செய்யப் பட்ட கொழுப்பை, கொழுப்புடைக்கும் நொதியங்கள் இலகுவாக உடைத்து, குடல் உறிஞ்சிக் கொள்ள இலகுவாக இருக்கும். பித்தம் கொழுப்பு சமி பாட்டை இப்படி இலகுவாக்கா விட்டால், பெரும் பகுதி கொழுப்பு உறிஞ்சப் படாமல் கழிவுடன் வெளியேறும். கொழுப்பை சரியாக உடல் அகத்துறிஞ்சினால் தான் கொழுப்பின் பலன்களான கொழுப்பமிலங்களும், கொழுப்பில் மட்டும் கரையக் கூடிய விற்றமின் ஏ, டி போன்ற போசணைகளும் எங்கள் உடலுக்குக் கிடைக்கும். எனவே, பித்தப் பையும், பித்தமும் நவீன மனிதனுக்கு ஓரளவுக்கு அவசியமான எஞ்சியிருக்கும் உறுப்புகள் தான். ஆனால், நவீன மனிதனுக்கு நோய் தரும் பித்தக் கல் எப்படி ஒரு கூடவே வரும் சூனியமாக வருகிறது? பித்தக் கல் என்பது என்ன? பித்தப் பையில் உருவாகும் திண்மையான படிவுகளே பித்தக் கற்கள். இந்தக் கற்களில் 90% ஆனவை கொலஸ்திரோல் கற்கள். மிகக் குறைந்த வீதமானோரில் பித்தக் கற்கள் பித்தத்தின் நிறமிகளான பிலிருபின் போன்றவற்றால் உருவாக்கப் படுகின்றன. இந்த இரண்டாவது வகைக் கற்கள் உருவாவதற்கு சில நோய்கள் ஏற்கனவே இருப்பது காரணமாக இருக்கலாம் - அதிக குருதிக் கல அழிவுகளை ஏற்படுத்தும் தலசீமியா போன்ற நோய்கள் சிறந்த உதாரணங்கள். ஆனால், பெரும்பான்மையானோரில் உருவாகும் கொலஸ்திரோல் கற்கள் பரம்பரை காரணிகள், வாழ்க்கை முறை என்பவற்றால் உருவாகின்றன. கொழுப்பான கொலஸ்திரோல் எப்படிக் கல்லாகிறது? பித்தத்தில் ஏனைய பொருட்களோடு, ஈரல் சுரக்கும் கொலஸ்திரோலும் கலந்திருக்கிறது எனப் பார்த்தோம். சாதாரணமாக பித்தத்தில் 4% ஆக இருக்கும் கொலஸ்திரோலின் அளவு 8 முதல் 10% ஆக அதிகரிக்கும் தருணங்களில், பித்தத்தில் இருக்கும் கொலஸ்திரோல் பளிங்காகப் படிவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஆனாலும், அதிகரித்த கொலஸ்திரோல் தான் பெரும்பாலான பித்தக் கற்களுக்குக் காரணம் என்று சொல்லி விட முடியாது - பித்தக் கல் உருவாகும் பொறிமுறை அதை விடச் சிக்கலானது. அதிகரித்த கொலஸ்திரோலோடு, வேறு சில காரணிகள் சேரும் போது, கொலஸ்திரோல் பித்தக் கற்களை உருவாக்கும். இந்தக் காரணிகளில் சில மாற்ற இயலாதவை, சில மாற்றக் கூடியவை. மாற்ற இயலாத காரணிகள்: பரம்பரை/ஜீன் வழி மாற்றம் இந்த மாற்ற இயலாத காரணிகளில் முதன்மையானது. சிலரில், பித்தத்தின் கொலஸ்திரோல், ஏனையோரை விட மிக விரைவாகப் பளிங்காகப் படிவடைகின்றன. இதற்கு கொலஸ்திரோல் அளவு மட்டுமன்றி, வேறு சில "கருவாக்கும்" (nucleation) காரணிகளும் பங்களிப்புச் செய்கின்றன. இந்தக் கருவாக்கும் காரணிகள் எல்லாம் அடையாளம் காணப் படவில்லை. எனவே,எங்கள் நெருக்கமான இரத்த உறவுகளில் பித்தக் கல் இருந்திருந்தால், எங்களில் அது ஏற்படும் வாய்ப்பும் சிறிது அதிகரிக்கிறது. இரண்டாவது: பித்தக் கல் ஏற்படும் வாய்ப்புகள் ஆண்களை விடப் பெண்களில் அதிகம். பெண்களின் மாத விடாய் சக்கரம், கர்ப்பமுறும் இயலுமை காரணமாக உருவாகும் ஓமோன் மாற்றங்கள் பித்தப் பையில் இருந்து பித்தம் வெளியேறுவதைப் பாதிக்கின்றன - இதனால் இந்த அதிகரித்த ஆபத்து பெண்களில். மாற்றக் கூடிய காரணிகள்: எங்கள் உணவு, உடலுழைப்பு உட்பட்ட வாழ்க்கை முறை தான் மாற்றக் கூடிய காரணி. எங்கள் வாழ்க்கை முறை காரணமாக கொலஸ்திரோல் பித்தக் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என பல ஆய்வுகள் கண்டறிந்திருக்கின்றன. அதிகரித்த கொலஸ்திரோலை ஈரல் பித்தத்தின் வழியாக சுரப்பதற்கு, அதிக கொழுப்பு, அல்லது அதிக மாப்பொருள் என்பன கொண்ட உணவு முறை ஒரு காரணம். இதனால் உடற்பருமன் அதிகரித்தோர், நீரிழிவு நோய் ஏற்கனவே இருப்போர் ஆகியோரில் கொலஸ்திரோலினால் ஏற்படும் பித்தக் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இந்த இடத்தில் மீண்டும் வலியுறுத்த வேண்டியிருக்கும் ஒரு விடயம்: கொலஸ்திரோலை மட்டும் குறி வைத்து மருந்து எடுத்துக் கொள்வதால் பித்தக் கற்களின் ஆபத்தைக் குறைப்பது சாத்தியமில்லை. உதாரணமாக, கொலஸ்திரோலைக் குறைக்கும் மருந்துகள் பித்தக் கற்கள் உருவாவதைக் குறைக்கின்றனவா என்று தேடிய ஆய்வுகளில் உறுதியான முடிவுகள் கிடைக்கவில்லை. ஈரல் சுரக்கும் கொலஸ்திரோலோடு, வேறு அடையாளம் காணப் படாத காரணிகளும் பித்தக் கற்கள் உருவாவதைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கலாம், அந்தக் காரணிகள் எங்கள் வாழ்க்கை முறையோடு தொடர்புற்றிருக்கலாம். ஆனால், ஒட்டு மொத்தமாக, உடலின் அனுசேபத் தொழிற்பாட்டைச் சீராக வைத்திருக்கும் உணவு முறை, நீரிழிவுக் கட்டுப் பாடு, உடல் பருமன் கட்டுப் பாடு என்பன பித்தக் கல் உருவாகும் ஆபத்தைக் குறைக்கின்றன என்பது தெளிவாகியிருக்கிறது. சில மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வோரிலும் பித்தக் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். நெஞ்செரிவு (heartburn) என (தவறாக) அழைக்கப் படும் இரைப்பை அமில எரிவு (acid reflux) நிலைக்கு நிவாரணியாகப் பாவிக்கப் படும் H2R blocker மருந்துகள் (cimetidine, ranitdine), பித்தக் கற்கள் உருவாக்கும் வாய்ப்பை அதிகரிப்பதாக சில ஆய்வுகள் சொல்கின்றன. பித்தக் கற்களால் தோன்றும் வலியை எப்படிக் கண்டறிவது? எங்கள் வயிற்றை, வெளி மேற்பரப்பில் நான்கு கால் பங்குகளாகப் (quadrants) பிரித்து, அந்தக் கால்பங்குகளில் எந்தப் பங்கில் வலி மையங் கொண்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து எந்த உறுப்புப் பாதிக்கப் பட்டிருக்கிறது எனக் குத்து மதிப்பாகச் சொல்ல முடியும். வயிற்றின் வலது மேல் காற் பங்கில் (upper right quadrant) மையங் கொண்ட தீவிர வலி, பெரும்பாலும் ஈரல், பித்தப் பை ஆகியவற்றின் பாதிப்பினால் உருவாகிறது எனலாம். ஆனாலும், பித்தப் பையின் அமைவிடம் ஆளுக்காள் சிறிது வேறுபடுகிறது. இதனால், பித்தக் கற்களால் ஏற்படும் வலி, மேல் இடது, வலது காற்பங்குகளில் சம அளவில் உணரப் படும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே, தீவிர வயிற்று வலி தொடர்ந்து அல்லது விட்டு விட்டுப் பல தடவைகள் உருவானால், உடனே மருத்துவ உதவி நாட வேண்டும். மருத்துவ மனையில், மீயொலித் தெறிப்புக் (ultra-sound) கருவி மூலம், பெரும்பாலான பித்தக் கற்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும். அவ்வாறு அடையாளம் காண இயலாத கற்களை CT ஸ்கான் மூலம் அடையாளம் காண்பர். சுருக்கமாக, பித்தக் கற்கள் பெரும்பாலும் கொலஸ்திரோல் கற்கள். பெண்களில் தான் அதிகம் உருவாகக் கூடியவையானாலும், இரு பாலாரும் பாதிக்கப் படும் வாய்ப்புகள் இருக்கின்றன. தவிர்க்க இயலாத பரம்பரைக் காரணியை விட்டு விட்டாலும், தவிர்க்கக் கூடிய உடல் அனுசேபத்தோடு தொடர்பான நோய்களைத் தவிர்ப்பதால் பித்தக் கற்களின் ஆபத்தைக் குறைக்கலாம். தொகுப்பு: ஜஸ்ரின் தகவல் மூலங்கள், மேலதிக தகவல்கள்: https://www.niddk.nih.gov/health-information/digestive-diseases/gallstones/definition-facts https://pharmacy.uconn.edu/wp-content/uploads/sites/2740/2023/06/Gallbladder-Disease-YAFI-JUN2023-FINAL.pdf
  3. யாழில் கில்மிசாவிற்கு வரவேற்பு Published By: DIGITAL DESK 3 28 DEC, 2023 | 04:38 PM சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய கில்மிஷாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. கில்மிஷா, தனது பெற்றோருடன் இன்று வியாழக்கிழமை (28) சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து வரவேற்று வாகன தொடரணி மூலம் அரியாலை பகுதிக்கு அழைத்து சென்று , அங்கு கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. https://www.virakesari.lk/article/172648
  4. உரிமைகளைப் பறித்து உயிர்களைப் பலியெடுத்து உயிர்வாழும் உலகு. இதில் சனநாயகமாம்... மனித உரிமையாம்.... மனித உரிமை சபையாம்.. மனித உரிமைக் காவலர்களாம்...
  5. வணக்கம், முதலில் இதில் என்ன இருக்கிறது என இந்த இமாலய பிரகடனத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து, சமஸ்டி தீர்வின் முதல் படி என இதை கருத முடியும் என விளங்கப்படுத்த முடியுமா? இமாலய பிரகடனத்தில் இப்போ இலங்கயில் சட்டத்தில் இல்லாத எதுவும் இல்லை. இருக்கும் இலங்கை சட்டத்தை சரியாக நடைமுறைபடுத்தி, இலங்கையராக அனைவரும் ஒரு புதிய நாட்டை (ஒற்றையாட்சி) நிர்மாணிக்கவே அது அழைக்கிறது. இங்கே ஒரு விடயம் மிக முக்கியமானது இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், தமிழர்கள் இலங்கை நீதி துறையிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்பதை மயிலத்தமடுவும், வெடுக்குநாறியும், கைதடியும், நாவற்குழியும், இன்னும் பலவும் காட்டி நிற்கும் போது - இந்த நிலையை ஒரு நொடியில் மாற்றும் அதிகாரம் இலங்கைக்கு இருந்தும், அரசும், நீதிமன்றும் எதுவும் செய்யாமல் இருக்கும் போது - சும்மா ஒரு பேப்பரில், ஒரு பிரகடனத்தை எழுதி அதை பிக்குகள் ஏற்பதால் என்ன முனேற்றம் வந்து விடப்போகிறது. யோசிக்கவும் - ஒரு விடயத்தை எந்த எதிர்ப்பும் இன்றி ஒட்டு மொத்த இலங்கை பெளத்த சங்கமும் ஏற்கிறது எனில் - அதில் தமிழருக்கு ஒரு சொட்டு நல்லது கூட இல்லை, சிங்களவர் நலன் ஒரு அங்குலம் கூட விட்டு கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை. உதாரணமாக மேலோட்டமாக அதிகாரபரவலாக்கம் என்கிறது பிரகடனம். மாநகரசபையின் குப்பை அள்ளும் அதிகாரம் கூட ஒருவகையில் அதிகார பரவல், பகிர்வுதான். ஆனால் நாம் கோரும் அதிகாரப்பகிர்வு அதுவா? இல்லை. குறைந்தபட்சம் இப்போ இலங்கையின் சட்டத்தில் இருக்கும், காணி, பொலிஸ் அதிகாரம் கொண்ட, இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணசபை (அல்லது வடகிழக்கு தமிழர் பெரும்பான்மை பிரதேசம் இணைக்கப்பட்ட அலகு). இதுதான் எமது ஆக குறைந்த அபிலாசை. இது ஏலவே இலங்கையின் அதி உயர் சட்டமாகிய அரசியல் சட்டத்தில் உள்ளது. இதை தர எந்த பிக்கு ஒப்புகொண்டுள்ளார்? பிக்குகளோடு கதைப்பதால் மட்டுமே தீர்வு வராது. என்ன கதைக்கிறோம்? அவர்கள் எதை தர ஒப்புகொள்கிறார்கள் என்பது முக்கியம். லைக்கா சுபாசும் போய் பிக்குக்கள் காலில் உருண்டார் இல்லையா? சுரேன் காலில் உருளவில்லை - அது மட்டுமே ஒரே வேறுபாடு. முதலில் அழுத்தம் திருத்தமாக பிக்குகள் வடகிழக்கு தமிழர் பகுதிகள் இணைப்பு, காணி, பொலிஸ் அதிகாரம் தமிழருக்கு தரலாம் என்பதில் தமது நிலைப்பாடு என்ன என்பதை சொன்னால் - அதன் பின் பேசுவதால் பயன் உண்டா இல்லையா என தேடலாம். இப்போ சட்டத்தில் உள்ள இதை கூட அவர்களால் தரமுடியாது என்றால்…பேசுவதால் தமிழருக்கு ஒரு பயனும் இல்லை.
  6. இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்! (புதியவன்) இலங்கை நாயகி கில்மிஷா பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று நண்பகல் வேளை கில்மிஷா தனது குடும்பத்துடன் நாடு திரும்பினார். இதன்போது பெருமளவானவர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்து கில்மிஷாவை வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து வரவேற்று வாகன தொடரணி மூலம் அரியாலை பகுதிக்கு அழைத்து சென்று , அங்கு கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது https://newuthayan.com/article/இலங்கை_நாயகி_கில்மிஷா_வந்தடைந்தார்!
  7. அருமையான கேள்வி. காரணிகள் பலவாக இருக்கிறன. ஆனால் அதில் முதன்மையானது…இப்போ இருக்கும் எந்த தலைமைக்கும் இப்படி ஒரு நகர்வை செய்வதில் நாட்டம் இல்லை. நாட்டம் முழுவதும் சுயநலனிலேயே இருக்கிறது என்பதே. இதை நாம் மாற்றி ஒரு நியாயமான தலைமையை உருவாக்க வேணுமா? ஆம். எப்படி? எனது சிற்றறிவுக்கு எட்டிய ஐடியா நான் முன்பே சொன்ன கரி ஆனந்த சங்கரி போன்ற ஒருவர் தலைமையில் உலகளாவிய ஜனநாயக தேர்தலில் வென்ற ஈழத்தமிழர் சம்மேளனனம். இப்படி வேறு ஐடியாக்களும் இருக்கும். ஆனால் நாம் நல்லதாக செய்யவில்லை, செய்ய வேண்டும் என்பதால் - இன்னொரு அரைகுறை முயற்சியை ஏற்க வேண்டுமா?
  8. இவர்கள் என்ன அங்கே வாழும் மக்களின் ஆண்டான்களா? தமிழருடனான நட்புறவான சந்திப்பை அல்லவா சகலதுக்கும் முன் இவர்கள் செய்திருக்க வேண்டும். அதை இவர்கள் செய்யாமல் - அத்தனை கெடுபிடிக்கும் மத்தியில் உறுதியாக போராடும் மக்களை ஒரு சொல் கேட்காமல், அவர்கள் தலைகளுக்கு மேலால் இவர்கள் பேரம் பேசினால் - கோவம் வரத்தான் செய்யும். அங்கே சிவில் சமூகம் உள்ளது. கட்சிகள் உள்ளன. போய் சந்திப்புகளை மேற்கொண்டு விட்டு, ஒருமித்த கருத்தோடு பிக்குகளை போய் சந்திதல்லவா இருக்க வேண்டும். 2009 ற்கு பின்னும் பல தேர்தல்களில் மக்கள் தமது அபிலாசையை தெளிவாக புலப்படுத்திய பின்னும், அதை புறம்தள்ளி நடக்க இவர்களுக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது. இவர்களுக்கு புலம்பெயர் தனிழர் மத்தியிலாவது ஆதரவு உள்ளதா? 2009 இல் யுத்த எதிர்ப்பை ஒருங்கிணைத்த போது இருந்தது - ஆனால் இப்போ? யாரைய்யா இவர்கள், எமது மக்கள் சார்பாக பேச?
  9. மன்னிக்கவும் கோசான்ஜி...இதை யழ்களத்தில் உள்ள.சுரேனின்...பேச்சாளருக்கு சமர்ப்பிக்கலாமா?
  10. சுரேன் சுரேந்திரனுக்காக வக்காலத்து வாங்கவில்லை , அவரின் ஆதரவரலாறும் இல்லை. ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் . இந்தியாவோ அமெரிக்காவோ ஏன் யாராலும் இலங்கையில் பிக்குகளின் சிங்களவாதத்தை நிறுத்த முடியவில்லை ஏனில் சீனா என்ற பெரிய புத்த நாடு இருப்பதால். இதனை தெளிவாக விளங்கவேண்டும் . தலைவரின் கொள்கை தான் எமக்கான சரியான தீர்வு , சமஷடி யும் அல்ல . இப்ப இதனை யாரால் பெற்று தர முடியும் அல்லது சாத்தியமா . சும்மா தேசியம் கதைத்து எங்களின் கோமணமும் புடுங்கிற நிலையில் இருக்கிறோம் . எவராவது முதலில் இறங்கி உண்மையான சிங்கள பேரினவாதிகளான பிக்குகளை ஒரு பாதைக்கு கொண்டு வரவேண்டும் . அந்த முயற்சியில் இறங்குவதில் என்ன தப்பை காண்கிறீர்கள் . இதை தான் சொல்வது தானும் படாது தள்ளியும் படாது என்று. இப்ப உள்ள எல்லா அரசியல் மற்றும் அமைப்புக்கள் எல்லாமே சும்மா கதைக்க மட்டும் உள்ளார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அரித்து படி படியாக தான் எங்களது குறைந்த பட்சம் சம்ஷடி இணை அடைய முடியும். சும்மா வாய்ச்சொல்லில் வீரர்களடி என்ற விதத்தில் இங்கே பதிவினை இடவேண்டாம் . எல்லா யதார்த்தமும் தலைவர் போனவுடன் முடிந்து விட்டது .
  11. நீங்கள் விட்டுக்கொடுத்த இடைவெளியில் சிங்களம் தன்னை சுதாகரித்துக்கொண்டு இனவாதம் எனும் விமானத்தில் பறக்க ஆரம்பித்து விட்டது. இனி அது தான் அடைய வேண்டிய எல்லையை அடைந்தே தீரும். ஆரம்பத்திலேயே(2009) சிங்களத்தை கழுத்து பிடி பிடித்து இருந்திருந்தால் ஓரளவாவது வெற்றி பெற்றிருக்கலாம். மாறாக சிங்களக்கொடியை தூக்கி ஆட்டினீர்கள்.அதன் பலன் இன்று ஈழத்தமிழினமே ஆட்டம் கண்டு விட்டது. சிங்கள இனவாதத்தின் அடுத்த குறிக்கோள் புலம்பெயர் உறவுகளையும் ஈழத்தில் வசிப்பவர்களையும் பிரித்தெடுப்பது. அதையும் செய்து முடிப்பார்களாயின்.........?
  12. இலங்கையில் வயது வேறுபாடின்றி கில்மிசா பங்குபற்றிய போட்டி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகள் வாயிலாக பலரும் பார்ப்பதையும் கில்மிசா மீது கொண்ட அபிமானத்தையும் நான் நேரில் பார்த்தேன். சிறிய வயதில் இந்த சிறுமி மூலம் மக்கள் மனதில் மகிழ்ச்சியை கொடுக்க, இடம்பிடிக்க முடிந்தது. இங்கே பெரியவர்களின் நக்கல்கள், நையாண்டிகள் புரியவில்லை. உங்கள் பிரச்சனைதான் என்ன?
  13. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 20/08/1990 பக்கம்: 1 அதிரடிப்படையுடன் முஸ்லிம் குண்டர் தமிழின அழிப்பு! துறைநீலாவணையில் 60 தமிழர் இரவில் வெட்டியும் சுட்டும் கொலை! (அம்பாறை) அம்பாறை மாவட்டத்திலுள்ள துறைநீலாவணையினுள் அதிரடிப்படை சகிதம் கடந்த பன்னிரெண்டாம் திகதி புகுந்த ஆயுதந் தாங்கிய முஸ்லிம் குண்டர்கள் அறுபது தமிழர்களைத் துடிதுடிக்கக் கூரிய ஆயுதங்களினால் வெட்டியும் குத்தியும் துப்பாக்கிகளால் சுட்டும் கொலை செய்தனர் என்ற தகவல் சிறிது தாமதமாகக் கிடைத்துள்ளது. இப்பகுதிகளில் சிங்கள இராணுவம், அதிரடிப்படை, முஸ்லிம் குண்டர்கள் தமிழின அழிப்பில் ஒன்றுபட்டு ஈடுபடுகின்றனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அம்பாறை மாவட்டத்தில் தமிழர் படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சிறிலங்கா இராணுவத்தினரும், சிங்கள ஊர்காவற்படையினரும், இவர்களுடன் முஸ்லிம் ஊர்காவற்படையினரும் சேர்ந்து தமிழர்களைக் கண்ட இடங்களிலெல்லாம் குத்தியும், வெட்டியும், சுட்டும் கொன்று வருகின்றனர். இதனால் தமிழர்களின் பல குடும்பங்களே முற்றாக அழிக்கப்பட்டு வருகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 12ம் திகதி மாலை ஐந்து மணிக்கு சேனைக்குடியிருப்பிற்குள் புகுந்த முஸ்லிம் ஊர்காவற்படையினர் பத்துத் தமிழர்களைச் சுட்டுக் கொன்றுள்ளனர். அதே தினத்தில் துறைநீலாவணை கிராமத்தில் மாலை 5:30 மணிக்கு துவிச்சக்கர வண்டிகளில் சென்று கொண்டிருந்த ஐந்து தமிழ் இளைஞர்களை சிங்கள இராணுவத்தினர் சுட்டுக்கொன்றுவிட்டு இறந்தவர்களின் உடல்களை டயர் போட்டு எரித்துள்ளனர். நாளேடு: உதயன் திகதி: 20/08/1990 பக்கம்: 4 வீரமுனைச் சம்பவத்தில் தமிழர் வீடுகளும் தீக்கிரை யாழ்ப்பாணம்‌, ஆக. 20 வீரமுனைப்‌ பிள்ளையார்‌ கோவில்‌ பகுதியில்‌ கடந்த வெள்ளியன்று தமிழர்கள்‌ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது தமிழர்களிள்‌ பல வீடுகள்‌ மற்றும்‌ உடைமைகளும்‌ முஸ்லிம்களினால்‌ சூறையாடப்பட்ட பின்னர்‌ தீயிட்டுக்‌ கொழுத்தப்பட்‌டிருக்கின்‌றன. பத்துக்கும்‌ மேற்பட்ட குழந்‌தைகளைக்‌ கொலையாளிகள்‌ காலில் பிடித்து அடித்‌துக்‌ கொன்றதாகவும்‌-- எட்டு வயதுக்கு உட்பட்ட 22 சிறுவர்கள்‌, 16 வயதுக்கும்‌ 18 வயதுக்கும்‌ உட்பட்ட 9 பெண்கள்‌, திருமணமான பெண்கள்‌ 33பேர்‌, மற்றும்‌ வயோதிபர்கள்‌ உட்பட 19 ஆண்கள்‌ இந்தச்‌ சம்பவத்தில்‌ குத்தியும்‌, வெட்டியும்‌, சுட்‌டும் கொல்லப்பட்டிருப்பதாகவும் - விடுதலைப்‌ புலிகள்‌ வட்டாரங்களில்‌ இருந்து தெரியவந்திருக்கிறது. (உ-5) *****
  14. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 19/08/1990 பக்கம்: 1 வீரமுனைப் பகுதியில் 91 தமிழர்கள் சுட்டுக்கொலை! 125 பேர் வரை காயமுற்றனர் அம்பாறை மவட்டம் வீரமுனையில் நேற்று முந்தினம் அப்பாவித் தமிழர்கள் 91 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சுமார் 125 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமுற்றனர். இப்பகுதியில் உள்ள ஊர்காவல் படையினருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு சிலமணி நேரத்துக்குள் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. விடுதலைப் புலிகள் வட்டாரங்களிலிருந்து இத்தகவல் தெரியவந்தது. காயமுற்ற தமிழர்ளை இராணுவத்தினர் அம்பாறைக்கு கொண்டுசென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது (உ- 5) *****
  15. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 18/08/1990 பக்கம்: 1 ஏறாவூரில் அமெரிக்கரான கத்தோலிக்க மதகுருவை முஸ்லிம் குழு கடத்தியது மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப் பகுதியில் இருந்து கத்தோலிக்க மதகுரு ஒருவரை முஸ்லிம் ஆயுதக் குழு ஒன்று கடத்திச் சென்றுவிட்டதாகக் அறிவிக்கப்படுகிறது. அமெரிக்க நாட்டைக் சேர்ந்தவரான அந்த மதகுருவை முஸ்லிம் குழுவிடமிருந்து மீட்பதற்காக, அரசுப்படையில் தனிப் பிரிவு ஒன்று ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்ததாக ஏஜென்சிச் செய்திகள் தெரிவித்தன. (அ-எ) *****
  16. முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்க முயற்சிகள் நடந்தபோது அதில் நானும் அக்கறையுடன் இயங்கினேன். அந்த நேரம் தலைவருடன் பிரான்சில் செயற்பட்ட சில நண்பர்களுடன் நடந்த சந்திப்பில் ஒருவரிடம் எமது தலையெழுத்தை ஒப்படைப்பது ஆபத்தானது என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. அது எனக்கும் சரியாகவே பட்டது. அன்றிலிருந்து அவ்வமைப்பு சார்ந்து சில உதவிகளை செய்வதோடு நிறுத்திக் கொண்டேன். இன்றைய உங்கள் கருத்து என் அன்றைய முடிவை இன்றும் மேலும் சரியாக்கிறது. நன்றி
  17. இந்தியாவுக்கு ஆயிர கணக்கில் இனி பாட சென்று விபச்சார விடுத்துதிகளில் இருந்து மீட்டு வராதவரை ஓகே. கலைதுறை என்பது பொதுகவே உலகம் பூரா ஓரிருவருக்கு அபராத வெற்றியையும் ஆயிரக் கணக்கவனவர்களுக்கு வாழ்வை சீரழித்த கதையாகவே தொடர்கிறது
  18. நாய் குரைக்கும் போது நாங்களும் வேலையை விட்டுட்டு நின்று குரைத்துக் கொண்டா இருக்கிறோம். அதே மாதிரி கடந்து போக வேண்டியது தானே. அப்பவே இதை எதிர்பார்த்து தான் அப்போது எதுவுமே எழுதவில்லை. உங்களைப் போலவே நானும் ஏதும் மந்திரம் தந்திரம் மாஜா ஜாலங்கள் நடக்காதா? எமது இனத்துக்கு ஒரு விடிவு வராதா? என்று ஏங்குகிறேன். 2023 இல் இதெல்லாம் சாத்தியமா என்று எண்ணினாலும் திரும்பதிரும்ப இதையே யோசிக்க தோன்றுகின்றது. எட்டுத் திக்கிலுமிருந்து கரை எதையும் காணவில்லையே.
  19. என்னை உதாரணம் காட்டியதால்..... என் சொல்லுக்கு இருக்கும் பெறுமதியை நான் இயங்குநிலையில் உள்ளபோது அந்த மக்களுக்காக பாவிக்க வேண்டும் என்ற பெருவிருப்பம் உண்டு. அந்த வகையின் கடைசி எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் மாவீரர் நாளில் முடிவுக்கு வந்தது. 😭
  20. தனிப்பட்ட ரீதியில் என்னைத் தாக்காதவரை நான் ஒருவரையும் தனிநபர் தாக்குதலைச் செய்யப்போவதில்லை. மேலே ஒருவர் ஏற்கனவே சிண்டு முடியும் வேலையை செய்திருக்கிறார் கவனியுங்கள்.
  21. பாவம் அல்வாயன் மீது ஏன் இந்த அபாண்டம் 🤣 இப்படி ஒரு முயற்சியை @விசுகு அண்ணா போன்ற ஒருவர் ஒருங்கிணைத்தால் (அவர் போல, அவரே அல்ல) சரிவரலாம். அல்லது அமைபுகளில் உள்ள ஏனையோரும் செய்யலாம். குறைந்த பட்சம் கரி போன்றோர் காதிலாவது போடலாம். நமக்கு மிக முக்கிய தேவை புற சக்திகளுக்கு விலை போகாத ஒரு தலைமை. இப்போதைக்கு ஒரு ஜனநாயக வழி தேர்தலில் மேற்கோ வென்ற கூட்டுத்தலைமையாலேயே இது சாத்தியப்படும்.
  22. இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய முன்னணி, விக்கினேஸ்வரன் தரப்பு, அதை விட டெலோ, ஈபிஆர்எல்எவ், ஆகியவை தனித்தனியாகவோ கூட்டிணைந்தோ செய்யலாம். புலம் பெயர் நாடுகளில் நாடு கடந்த அரசு, தமிழர் ஒருங்கிணைப்பு குழு, மக்களவைகள், மற்றும்முன்னள் புலிகளின் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்யும் அமைப்புக்கள் தனித்தனியாகவோ சேர்ந்தோ செய்யலாம்.
  23. @alvayan @Kapithan ஒரே பாதையில் பயணிக்கும் நீங்கள் பயணத்தை மறந்து ஆளுக்காள் கல்லெறிபடுவது வேதனையளிக்கிறது.
  24. உக்ரேனின் அழிவையும் NATO வின் தோல்வியையும் உங்கள் மனம் ஏற்றுக்கொள்ள மறுப்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஆனால் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள நீங்கள் மறுப்பது ஆச்சரியமாக உள்ளது.
  25. கால நிலை மாற்றங்கள் மற்றும் உணவுகளினால் ஏதாவது பிரச்சனைகள் வந்திருக்கலாம்..அவர்களுக்கு அது புரியாமல் அல்லது தெரியாமல் இருந்திருக்கலாம்..வயது போனவர்கள் பாவங்கள்..
  26. வணக்கம் கோஷான். நான் எழுதுயது சுரேன் போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்க அல்ல. தாயகத்தில் ஆயுதப் போராட்டம் நடந்த காலத்தில் தாயக தலமையுடன் உரிமையுடன் தொடர்புகளை பேணிய இவர்கள் உலக அரசியல் போக்குகள் குறித்த விடயங்கள், பலம் வாய்ந்த நாடுகளின் நிலைப்பாடுகள் போன்ற விடயங்களில் தாயக தலைமைக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி தாயக அரசியல் நிலைப்பாடுகள், தந்திரோங்களை நெறிப்படுத்தி தந்திரோபாய அரசியல் நகர்வுகளை தாயக தலைமை எடுக்க வைக்க வேண்டிய கடப்பாடு இருந்தும் அதைச் செய்யாமல் ஆயுத போரை மட்டுமே நம்பி அதை ஊக்குவித்து மெளனமாக இருந்து இன்றய நிலைக்கு காரணமானதில் இந்த அமைப்புக்கும் பங்கு உள்ளது என்பது எனது கருத்து. ஆனால், இதுவரையான 14 வருடங்களில் தாயகத்தில் மற்றும் புலம் பெயர் நாடுகளில் அரசியல் செய்துவரும், நீங்கள் கூறியது போன்ற மக்கள் ஆதரவுடன் இருக்கும் அமைப்புக்கள்/ கட்சிகள் இந்த பிரச்சனையையை முன்னகர்தத இதை போன்ற முன்மாதிரியை முன்னரே உபயோகித்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் சுரேனின் நடவடிக்கைகளை அரசியல் ரீதியில் தடுத்து நிறுத்தி இருக்கலாம். அதன் பெயர் பேச்சுவார்ததையோ அரசியல் தீர்வோ அல்ல. அது மிக எளிதாக விரைவாக நடக்கும் என்று நினைக்கும் அளவுக்கு எமது அரசியல் நிலை இப்போது இல்லை. அரசியல் தீர்வை காணும் வலு இன்று இயங்கும் எந்த அமைப்புக்கு இல்லை என்பது வெள்ளிடை மலை. இனவாதிகளை விடுங்கள். இரு பக்கதிலும் உள்ள மக்களுக்கு இடையிலான இடைவெளிகள், நம்பிக்கையீனங்களை களைந்து அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தையாவது ஆரம்பித்து வைக்க தாயக, புலம் பெயர் அரசியல் அமைப்புகள் இப்போதாவது ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன்னோடி யாக இந்த தந்திரோபயத்தை நடைமுறை சாத்தியமாக மேம்படுத்தி உபயோகிக்கலாம். சிங்கள மக்கள் அமைப்புகளுடன் நல்லுறவை பேணி சந்திப்புக்களைஆரம்பிக்கலாம் என்பது எனது கருத்து. வெளி நாடுகளில் என்னதான் அரசியல் செய்தாலும் எந்த நாடும் அதை செய்யுமாறே எம்மை வலியுறுத்தும். அவ்வாறான நடவடிக்கைக்கே ஆதரவாக இருக்கும். எமது தமிழ் அரசியலில் நல்ல பிள்ளை பெயரெடுக்க வேண்டுமானால் யோகர் சுவாமி கூறியது போல் “சும்மா இரு” என்பதே உகந்தது. அனால் ஒரு சிறிய மாற்றம், வெற்று வீர வசன அறிக்கைகளை மட்டும் வெளியிடுவதுடன் கூடவே தமிழ் அரசியல் முகநூல், இணையத்தள அரசியல் தாதாகளுக்களுடன் நல்லுறவையும் பேணியபடி “சும்மா இரு” என்ற கோட்பாடே நல்ல பிள்ளை பெயரெடுக்க உகந்த கோட்பாடு.
  27. எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் நாம் இருப்பதால் - எதையும் தின்றுவிடக்கூடாது. சுரேன் செய்வது = இப்போ இருக்கும் நிலையில் இருந்து 1 இஞ்சி கூட முன்நகராத நிலை மட்டும் அல்ல, 1987 இல் தந்ததை கூட பிடுங்கி கொள்ளும் நிலைக்கு இட்டு போகும் என்பதை மிகதெளிவாக உணர்ந்த பின் அதை எப்படி ஆதரிக்க முடியும்? சுரேன் செய்வதை சம்பந்தர் செய்தாலும் தவறுதான். ஆனால் இப்போதும் பேச்சளவிலாவது சம்பந்தரும், சுமந்திரனும் 13+ என்கிரார்கள். சுரேன் அதை கூட கேட்கவில்லை.
  28. ஆஹா.....இதுவும் ஒரு அருமையான கவிதை........வாழ்த்துக்கள் நொச்சி ......! 👍
  29. Factcheck. ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத வார்ததை. அடிக்கடி நினைவுக்கு வந்து என்னை தொந்தரவு செய்யும் வார்ததை. Factcheck ஐ கண்டு பிடித்தவன் என் கண்ணில் பட்டால் அவன் தொலைந்தான்.😂
  30. உலகத் தமிழர் பேரவையின் இந்த முயற்சி ஒரு பேச்சுவார்ததையாகவோ இது தான் இறுதியானதாகவோ இருக்க போவதில்லை. பார்ரக்கும் எவருக்கும் தெளிவாக தெரியும் உண்மை இது. இது ஒரு முன்னோடி நடவடிக்கையாகவே இருக்கும். ஆகவே அவர்களை அங்குள்ள பலவேறு தமிழ்த் தரப்புகளும் கட்சிகளும் ஒரு நட்புறவான சந்திப்பை நிகழ்த்தி அவர்களின் பிரகடனத்தில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டியிருக்கலாம். அவர்களை எமது விரோதிகள் துரோகிகள் என்ற ரேஞ்சுக்குக்கு வெறுப்புப்பிரச்சாரம் செய்து ஏற்கனவே முந்திய தலைமுறை செய்த தவறை தொடர்ந்து செய்ய வேண்டியதில்லை. எனது கருத்து தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் அரசியல் செய்வதாக கூறிக் கொள்ளும் எல்லாத் தமிழ் அமைப்புகளும் இவ்வாறாக சிங்கள மக்களிடையே உள்ள பல்வேறு பொது அமைப்புக்கள், சமூக அமைப்புக்கள், மத அமைப்புகள், பெண்கள் அமைப்புக்கள் கட்சிகள் என அடிக்கடி சந்தித்து தொடர்சசியாக எமது பிரச்சனைகள் குறித்த விளக்கங்களையும் எமது தரப்பின் நியாயங்களையும், பேரினவாத அரசுகளின் நடவடிக்கைகள் குறித்த பட்டறிவுகள், எமது அச்சங்கள் குறித்து எடுத்து கூறுவதும் அவர்களுடன் தொடர்புகளை பேணிக்கொள்வதும் இரு தரப்பு நல்லுறவை அதிகரித்து ஒருவரை ஒருவர் நம்பிக்கை கோள்ளும் நிலையை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் (அது நாம் அனைவரும் இந்த உலகில் வாழாத காலமாகவும் இருக்கலாம்) ஒரு நியாயமான அரசியல் தீர்வை அப்போது வாழப் போகும் இருதரப்பு மக்களும் உருவாக்க உதவியாக இருக்கும். இது ஒன்றே அடுத்த தலைமுறை மக்களுக்கு இப்போது வாழ்பவர்கள் செய்யக்கூடிய ஆகக் கூடிய உதவியாக இருக்கும். அதை கூட செய்யாமல் எமது தனிப்பட்ட பழைய கோபங்கள் , ஈகோ, சுயநலம், அரசியல் வியாபாரம் போன்ற காரணங்களுக்காக வெறுப்பையும் விரோதத்தையும் இலங்கையில் வாழும் இரு மொழி பேசும் மக்களிடமும் விதைப்பதையே செய்வோம் என்றால் அந்த பக்கா அயோக்கியத்தனத்துக்கு பலியாகப் போவது இலங்கையில் வாழப் போகும் குறிப்பாக தமிழ் மக்களே ஆகும்.
  31. கோமாளியை விடுதலை வீரனுக்கு ஈடாகச் சித்தரித்த ஒருவரும் இந்தப்பக்கம் காணோமே 😀 வெல்பவர்கள் பக்கம்தான் நிற்பார்களோ ?
  32. தாங்கள் துடிக்கும் துடிப்பைப் பார்த்தால் தாங்கள் கனடாவில் விபு சார்பாக காசு சேர்த்த ஆளாக இருக்குமோ என்று எனக்கு ஒரு சந்தேகம்,..... ஏனென்றால் தமிழருக்கு யார் யார் எல்லாம் தலைமை தாங்கக் கூடாது என்பதில் அவ்வளவு தீவிரமாக இருக்கிறீர்கள். 😀
  33. நமக்கு முதலில் தேவை நம் தரப்பை சீர்படுத்துவது, ஒருங்கிணைப்பது, ஒற்றுமையாக முன் நகர்வது. எல்லாரும் வாய்சொல்லில் வீரர் என்பதால் - எஜெண்டுகளை தலைவர்களாக ஏற்க முடியாது. பெண்ணுக்கு நல்ல மாப்புள்ளை கிடைக்கவில்லை ஆகவே பிணத்துக்கு கட்டி வைத்தேன் என்பதை போல இருக்கிறது இந்த லொஜிக். எமக்கான தீர்வு - சிங்களத்தை ஆயுத அல்லது மேற்கத்தைய அரசுகளின் ஈடுபாட்டுடன் அரசியல் ரீதியில் அழுத்துவதன் மூலம் மட்டுமே அடையப்படக்கூடும். ஒரு போதும் நாம் நேரடியாக சிங்களதுடன் பேசியோ, அல்லது தனியே இந்திய அனுசரணையிலோ இது நடவாது. பாலா அண்ணை, தலைவர், அமிர், செல்வா, பொன்னர், இராமநாதன் - அத்தனை பேர் காலத்திலும் இதுதான் கள யதார்த்தம். இந்த இமாலய பிரகடனம் இன்னொரு முறை இந்தியாவை இலங்கயில் முன்னிலை படுத்த, பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கையை மீட்க, இலங்கை, இந்தியா சேர்ந்து ஆடும் நாடகம். இதில் தமிழரும் நாமம் 100% உத்தரவாதம்.
  34. இல்லை மிக பிழையான புரிதல். சீனா ஒரு பெளத்த நாடே அல்ல. அதன் அரசியலில் பெளத்தத்துக்கு எந்த இடமும் இல்லை. இலங்கயில் மட்டும் அல்ல சீனாவினுள் கூட சீன அரசு பெளத்தத்தை முன்நிறுத்துவது இல்லை. மாறாக, இஸ்லாம், கிறீஸ்தவம், பலுங் கொங், போல பெளத்தம் மீதும் சீன அரச கட்டமைப்பே கொஞ்சம் சந்தேகத்துடந்தான் இருக்கிறது. சீனாவில் CCP தன் அதிகாரத்துக்கு சவாலான ஒரு கட்டமைப்பாக பெளத்த மதத்தை கண்காணிக்கிறது என்பதே யதார்த்தம். பெளத்தம் காரணமாக பர்மா, தாய்லாந்து இலங்கையை நெருங்கி வரும் அளவு கூட சீனா பெளத்தத்தை தன் இலங்கை, சர்வதேச உறவுகளில் முன் நிறுத்துவதில்லை. அதேபோல், 2000 வரை இலங்கயில் மட்டும் அல்ல, தெற்காசியாவிலே சீனாவின் பிரசன்னம் சொல்லும்படி இருக்கவில்லை. ஆனால் அப்போதும் கூட மேற்கும், இந்தியாவும் இலங்கை சார்பு நிலையையே எடுத்தன. இப்போ சீனாவுக்கு இலங்கையில் ஒரு மறுக்க முடியாத வகிபாகம் உண்டு, ஆனால் இது பெளத்தத்துடன் சம்பந்த பட்டதே இல்லை.
  35. வருடா வருடம் சொல்லப்படும் செய்திதான் இது. ஆனால் நடைமுறையில் இல்லை. அதிகாலையிலேயே இலங்கையில் சத்தங்களால் சுற்றுசூழல் பாதிக்கப்படுகின்றது. சம்பிக்க அமைச்சராக இருந்த பொது இதனை நிறுத்துவதட்கு முயட்சி செய்தார். ஆனாலும் மற்றைய அரசியல்வாதிகள் தடுத்து விடடார்கள். அநேகமான பஸ் வண்டிகள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமானதுதான். எனவே நடவடிக்கை எடுக்க மாடடார்கள். இலங்கையை பொறுத்த வரைக்கும் சட்ட்ங்கள் திட்ட்ங்கள் எல்லாம் சிங்கபூரைபோல. ஆனால் நடைமுறையில் சோமாலியவைபோல . சொல்வார்கள் செய்யமாடடார்கள்.
  36. சர்வகட்சி மாநாட்டு அழைப்பிதழில் ஜெயார் செய்த தில்லுமுள்ளும் அதிலிருந்து அவர் மீள செய்துகொண்ட பகீரதப் பிரயத்தனமும் சர்வகட்சி மாநாட்டிற்கு தனக்கு வந்த அழைப்பிதழில் இரண்டாவது இணைப்பாக வந்திருந்த விடயங்களைப் பார்த்தபோது அமிர்தலிங்கம் வருத்தமடைந்தார். உடனடியாக தில்லியில் இருக்கும் பார்த்தசாரதியுடன் தொடர்பு கொண்டார். அவருடன் சினத்துடன் பேசிய அமிர்தலிங்கம், "கிழட்டு நரி தனது வேலைகளை மறுபடியும் ஆரம்பித்து விட்டது" என்று பார்த்தசாரதியிடம் கூறினார். தனிநாட்டிற்கான கோரிக்கையினைக் கைவிடவேண்டும் என்கிற கோரிக்கையினை முதலாவது கோரிக்கையாக ஜெயார் இட்டிருக்கிறார் என்று அவர் கூறினார். "போராளிகளை எமக்கெதிராகத் திருப்பிவிடவே இதனை அவர் செய்கிறார்" என்று அவர் கூறினார். மேலும், தில்லியில் தன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை சர்வகட்சி மாநாட்டில் பேசப்படப்போகும் விடயங்களின் பட்டியலில் ஜெயார் சேர்க்கவில்லை என்பதையும் அமிர் பார்த்தசாரதியிடம் சுட்டிக் காட்டினார். ஜெயார் புதிய பரிந்துரைகளை தன்பாட்டிற்குப் பட்டியலிட்டிருந்தார். முத்தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை முழுவதுமாக மாற்றி, வலுவிழக்கச் செய்தே தனது புதிய பரிந்துரைகளை ஜெயார் வரைந்திருந்ததை அமிர் கண்டுகொண்டார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இணைப்பது தொடர்பாக தில்லியில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு இரு பகுதிகளைக் கொண்டிருந்தது. முதலாவது பகுதியில் இரு மாவட்ட அபிவிருத்திச் சபைகள், பொதுவாக எவ்வாறு இணைத்து பிராந்திய அலகாக மாற்றிக்கொள்ள முடியும் என்பது பற்றிப் பேசியிருந்தது. இதன்படி சம்பந்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை உறுப்பினர்களின் சம்மதத்தினூடாகவும், அச்சபைகளில் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பினூடாகவும் அவை இணைத்துக்கொள்ளப்படலாம் என்றும் கூறியிருந்தது. ஆனால், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு இச்சரத்தில் விதிவிலக்களிக்கப்பட்டிருந்தது. இந்த மாகாணங்களில் அமையும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளில் உறுப்பினர்கள் பதவி விலகுவதனால் மாவட்ட அபிவிருத்திச் சபைகளில் ஒன்று செயலற்றுப் போகுமிடத்து, அச்சபை அம்மாகாணங்களில் மீதமிருக்கும் சபைகளுடன் இணைத்துக்கொள்ளப்பட முடியும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், முன்னணியினருக்கு ஜெயார் அனுப்பிவைத்த அழைப்பிதழின் இரண்டாவது இணைப்பில் மேற்குறிப்பிட்ட விதிவிலக்கினை முற்றாக அகற்றியிருந்தார். மேலும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையே நாடு முழுவதற்கும் அமுல்ப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தில்லியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை ஜெயார் மறுதலித்து, புதிதாக தனது திட்டங்களை அறிமுகப்படித்தியிருக்கும் சூழ்நிலையில் இதுகுறித்துப் பேசுவதற்காக முன்னணியினரை தில்லிக்கு வருமாறு பார்த்தசாரதி அழைத்தார். அன்று மாலையே தில்லிக்குப் பயணமான அமிரும், சிவசிதம்பரமும் பார்த்தசாரதியையும் நரசிம்மராவையும் மாலை சந்தித்ததுடன் அன்றிரவே இந்திரா காந்தியையும் சந்தித்தனர். ஜெயாரின் சூட்சுமம் பற்றிக் கேள்விப்பட்டபோது இந்திரா மிகுந்த கோபமடைந்தார். தனக்குக் கொடுத்த வாக்கிற்கு எதிராகச் சென்று, தன்னை ஜெயார் அவமானப்படுத்தியிருப்பதாக இந்திரா கருதினார். "நீங்கள் கவலைப்பட வேண்டாம், நான் இதனைப் பார்த்துக்கொள்கிறேன்" என்று அவர் முன்னணியினரிடம் கூறினார். இந்திரா உடனடியாக இரு விடயங்களைச் செய்தார். அன்றிரவே, மார்கழி 30 ஆம் திகதி, ஜெயாரை தொலைபேசியில் அழைத்த இந்திரா ஜெயாரின் மாற்றத்தால் தமிழர்களும் முன்னணியினரும் மிகுந்த கவலை அடைந்திருப்பதாகக் கூறினார். இதனைச் சரிசெய்வதற்கு பார்த்தசாரதியை உடனடியாக கொழும்பிற்கு அனுப்பத் தான் எண்ணியுள்ளதாக அவர் கூறினார். இதுகுறித்து தனது மந்திரி சபையில் பேசிய ஜெயார், பார்த்தசாரதியின் கொழும்பு வருகையினை தான் வரவேற்பதாக இந்திராவிடம் கூறினார். போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்க முடிவெடுத்த இந்திராவும், அலட்டிக்கொள்ளத பிரபாகரனும் மறுநாள், மார்கழி 31 ஆம் திகதி தனது உயர்மட்ட அதிகாரிகளை தில்லியில் கூட்டமொன்றிற்கு அழைத்தார் இந்திரா. வெளிவிவாகர அமைச்சர் நரசிம்மராவ், வெளியுறவுச் செயலாளர் ரஸ்கோத்ரா, பார்த்தசாரதி, இலங்கை தொடர்பான விடயங்களைக் கையாளும் காவோ, சங்கரன் நாயர் மற்றும் சக்ஸேனா ஆகியோர் கூட்டத்தில் பிரசன்னமாகியிருந்தனர். இரு முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன. முதலாவது வெளிவிவகாரத்துறை தொடர்ந்தும் சமரச பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது. இரண்டாவது இலங்கை தொடர்பான தனது நடவடிக்கைகளை ரோ மேலும் விஸ்த்தரிப்பது. இரண்டாவது தீர்மானத்திற்கு அமைவாக ரோவிற்கு மேலதிக நிதி இலங்கை தொடர்பான விடயங்களை விஸ்த்தரிக்க ஒதுக்கப்பட்டது. மேலும், தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்குமாறும் ரோ பணிக்கப்பட்டது. போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்க இந்திரா எடுத்துக்கொண்ட தீர்மானம் பற்றி போராளிகள் அறிந்துகொண்டபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தமது அமைப்புக்களில் பயிற்சிகளுக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்குமாறும் ரோவினால் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். போராளிகளுக்கு முதன்முதலாக இந்திய ஆயுதங்கள் வழங்கப்பட்ட நிகழ்வினை ஈரோஸ் அமைப்பின் அருளர் எனப்படும் அருட்பிரகாசம் இவ்வாறு பகிந்துகொண்டார். "நாம் மிகுந்த மகிழ்சிக்குள்ளானோம். நிலைமை மாறிவருவதை நாம் உணர்ந்துகொண்டோம். எல்லோருமே மிகுந்த மகிழ்ச்சியுடனும் , உற்சாகத்துடனும் காணப்பட்டார்கள்" என்று கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில் ரஸ்ஸியாவில் தயாரிக்கப்பட்ட புத்தம்புதிய துப்பாக்கிகள் பெட்டிகளில் வந்திறங்கியதாகக் கூறினார். புலிகளும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. புலிகளின் மூத்த தலைவர்களும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். குறிப்பாக, கிட்டு மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ஆனால், பிரபாகரனுக்கு இந்த ஆயுத வழங்கல் நிகழ்வு அதிகம் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கவில்லை. "நாம் எமக்கென்று சொந்தமாக ஆயுதங்களை வெளியே வாங்கத் தொடங்கவேண்டும்" என்று அவர் தனது போராளிகளைப் பார்த்துக் கூறினார். "ஏன் வாங்கவேண்டும், இந்தியாதான் எமக்குத் தேவையானளவு ஆயுதங்களைத் தருகிறதே?" என்று கிட்டு பிரபாகரனைப் பார்த்துக் கேட்டார். தனது முடிவிற்கு இரு காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன். "எமக்குத் தரும் ஆயுதங்களின் மூலமாக எம்மைக் கட்டுப்படுத்த இந்தியா முயலும். தனது கொள்கை முடிவுகளை எம்மைப் பாவிப்பதன் மூலம் இந்தியா அடைந்துகொள்ள நிச்சயமாக முயற்சிக்கும். அதாவது, நாம் எமது இலட்சியமான தமிழ் ஈழத்தை அடைவதை இந்தியா தடுத்துவிடும்" என்று பிரபாகரன் கூறினார். இரண்டாவது காரணமாக பிரபாகரன் முன்வைத்த விடயம் தனித்துவமானது. "இந்தியா எல்லாப் போராளி அமைப்புக்களுக்கும் ஒரேவகையான ஆயுதங்களையே கொடுத்து வருகிறது. ஆனால், நாம் தனிச்சிறப்பானவர்களாகவும், மற்றைய அமைப்புக்களைக் காட்டிலும் திறமையானவர்களாகவும் திகழவேண்டுமானால், எமக்கென்று வேறு ஆயுதங்களை நாம் இப்போதே கொள்வனவு செய்துகொள்ளவேண்டும் என்று கூறினார். பிரபாகரனின் வாழ்க்கையில் முக்கிய மைல்க்கல்லாகக் கருதப்படும் 1984 ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட இந்த தீர்மானம் அமைந்திருந்தது. இதுகுறித்து பின்னர் பார்க்கலாம். ஜெயாரின் சூட்சுமம் சர்வகட்சி மாநாட்டிற்கான அழைப்பும், அதனுடனான இணைப்புக்களும் கொழும்பில் வெளிவந்தன. இலத்தரணியல் சாதனங்களும், பத்திரிக்கைகளும் இச்செய்தியை வெளிக்கொண்டுவந்திருந்தன. சர்வகட்சி மாநாட்டின் செயலாளராக நியமிக்கப்பட்ட பீலிக்ஸ் டயஸ் அபயசிங்க மார்கழி 30 ஆம் திகதி பத்திரிக்கை அறிக்கையொன்றினை வெளியிட்டார். "இணைப்பு இரண்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துக்கள் எவையும் அரசாங்கத்தாலோ அல்லது வேறு எந்த அரசியற் கட்சியினாலுமோ முன்மொழியப்பட்டவை அல்ல. சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டு பரிந்துரைக்கப்படும் விடயங்கள் மட்டுமே பின்னர் அரசாங்கத்தினாலும், ஏனைய கட்சிகளினாலும் கருத்தில் எடுக்கப்படும்" என்று அவ்வறிக்கை கூறியது. அபயசிங்கவின் அலுவலகம் கொழும்பிலுள்ள பத்திரிகைக் காரியாலயங்களைத் தொடர்பு கொண்டு தனது அறிக்கையினை பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டது. மேலும், மாநாட்டிற்கான அழைப்பிதழையும், இணைப்புக்களையும் வெளியிட ஜனாதிபதி விரும்புவதாகவும் அலுவலகம் கூறியது. இந்திரா காந்தியின் தொலைபேசி அழைப்பினையடுத்தே தான் வெளியிட்ட இணைப்பின் சரத்துக்களை உடனடியாக இல்லையென்று மறுதலிக்கும் நிலைமைக்கு ஜெயாரையும் அவரது அரசாங்கத்தையும் தள்ளியிருந்தது. தில்லியில் இந்திராவுடனும், பார்த்தசாரதியுடனும் தான் செய்துகொண்ட இணக்கப்பாட்டிலிருந்து தன்னை சாதுரியமாக விலத்திக்கொண்ட ஜெயார், இறுதியில் தன்னிச்சையாக வெளியிட்ட அழைப்பிதழின் இணைப்பில் குறிப்பிட்ட விடயங்களிலிருந்தும் தன்னை அந்நியப்படுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தில்லியில் தான் செய்துகொண்ட இணக்கப்பாட்டிற்கு பெளத்த பிக்குகளிடமிருந்து வந்த கடுமையான எதிர்ப்பினையடுத்து அதிலிருந்து ஜெயார் பின்வாங்கி தன்னை அந்நியப்படுத்தியிருந்தார். தில்லியில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் தான் கையொப்பம் இடாமையினால், அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தனக்குக் கிடையாது என்று பெளத்தர்களிடம் அவர் கூறினார். ஆனால், தில்லி ஆவணத்தில் தானாகவே முன்வந்து கையொப்பம் இட ஜெயார் முயன்ற விடயம் வெளித்தெரிய ஆரம்பித்தபோது, "அது எனது பரிந்துரைகள் அல்ல, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரே அதனை முன்வைத்தனர்" என்று கூறி தப்பிக்க முயன்றார். தனது இரட்டை வேஷத்தை மிகவும் சாதுரியமாக 1984 ஆம் ஆண்டு சித்திரை 30 ஆம் திகதி இந்தியா டுடே சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியிலும் ஜெயார் கையாண்டார். ஜெயாரின் இரட்டை வேசத்தை சர்வகட்சி மாநாட்டில் போட்டுடைத்த அமிர்தலிங்கம் வைகாசி 9 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கையில் ஜெயார் கூறுவதுபோல தில்லியில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தனது கட்சியினால் முன்வைக்கப்படவை அல்ல என்று முற்றாக மறுதலித்தார். முத்தரப்பினாலும் மேற்கொள்ளப்பட விடயங்களை காலக்கிரமமாக விபரித்தார் அமிர்தலிங்கம். ஆடி 28 மற்றும் மார்கழி 30 ஆம் திகதி ஜெயாருடனான இந்திராவின் தொலைபேசி அழைப்புக்கள், பார்த்தசாரதியுடன் ஜெயார் மேற்கொண்ட மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகள் என்று நடந்த விடயங்களை விளக்கியதுடன், தில்லியில் முத்தரப்பினாலும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ஜெயார் முற்றாக ஏற்றுக்கொண்டதை இந்திராவும் பார்த்தசாரதியும் தன்னிடம் உறுதிப்படுத்தியதாகவும் சர்வகட்சி மாநாட்டில் வெளிப்படையாகத் தெரியப்படுத்தினார். தானே தன்னிச்சையாக வெளியிட்ட அழைப்பிதழின் இணைப்புக்களிடமிருந்து தன்னை ஜெயார் அந்நியப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையினை இந்திரா மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தியயிருந்ததை முன்னர் குறிப்பிட்டிருந்தேன். அதே அழைப்பில் இன்னொரு விடயத்தையும் இந்திரா குறிப்பிட்டிருந்தார். அதுதான், இரண்டாவது இணைப்பினை ஜெயார் மீளப்பெற்றுக்கொள்ளாதவிடத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லை என்பது. ஆகவே, இந்த இணைப்பில் குறிப்பிடப்பட்ட விடயங்களை சர்வகட்சி மாநாட்டின் செயலாளரே தனக்குத் தெரியாமல் இணைத்துவிட்டார் என்று கூறி ஜெயார் தப்பிக்க வேண்டியதாயிற்று.
  37. அது தெரிந்து தான் தெளிவாக சொல்லியுள்ளேன் அவர்கள் விரும்பும் தீர்வு எதனையும் தரலாம். ஆனால் நாங்கள் சொல்லும் தீர்வுகள் எப்போதும் அதி உச்ச அதிகாரம்கள் கொண்டவையாகயிருக்கும் இருக்கவேண்டும் அவர்கள் குறைத்து அல்லது நாட்டை பிரிந்தும் தமிழ் ஈழம் தரலாம் ஆனால் புலிகள் இல்லை பலம் இல்லை தரமாட்டார்கள் புக்குகள் எதிர்பார்ப்புகள் சிங்கள மக்கள் விரும்பமாட்டார்கள் எதிர்கட்சி எதிர்க்கும,..............இப்படியான காரணிகளுக்காக. நாங்களே’ வழிய. குறைந்த தீர்வுகள் கேட்க முடியாது இதில் கிடைத்தாலும் கிடைக்கவிட்டாலும் புலிகள் வழி மிக சரியும் உறுதியுமாகும்
  38. https://timesofindia.indiatimes.com/videos/toi-original/cyclone-asani-impact-gold-coloured-chariot-spotted-on-andhra-coast/videoshow/91494076.cms இன்னும் ஒரு படி மேலே போய் தங்கத்தால் செய்தது என்று பொய் கதை .https://www.indiatoday.in/fact-check/story/mysterious-chariot-drifted-andhra-shores-cyclone-asani-made-of-gold-1948182-2022-05-11 எங்கடை ஊடகங்கள் அதுவரை பாயவில்லை என்பது ஆறுதல் வழக்கம்போல் நம்ம யாழ் கள பக்ட்செக் சிங்கம்களை காணவில்லை பார்ட்டி பிசி போல் உள்ளது .
  39. இவை அனைத்தையும் தாண்டி இடைப்பூசாரிகளை தவிர்த்து சாமியுடன் (பிக்குகளின் முடிவே இலங்கையில் இறுதியானது) பேசத் தொடங்கியிருப்பது சரியான பாதையாகவே தெரிகிறது.
  40. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பதினைந்தாம் வட்டாரத்து மாநகரசபை உறுப்பினர் இவர் யாழ் அம்மன் வீதியிலுள்ள விடுதி ஒன்றில் பியூட்டி பார்லர் நடாத்தி அங்கு தென்னிலங்கை யுவதிகளைக் கொண்டுவந்து விபச்சாரம் செய்த்தாகக் குற்றம் சாட்டப்பட்டு பின்பு அவர் மறுப்பு அறிக்கை விட்டவர். அவர் அண்மையில் சி வி கே சிவஞானம் அவர்களது தலைமையில் நல்லூர் சட்டநாதர் கோவிலடியில் உள்ள மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் கிளை நிர்வாகக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார் சிவிகே சிவஞானம் அவர்கள் முன்னர் அல்பிரட் துரையப்பா காலத்தில் மாநகரசபைக் ஆணையாளராகக் கடமையாற்றியவர் இவரது திருமணை தற்போது நல்லூரடியில் உள்ள யாழ் மாநகரசபை மண்டபத்தில் நடந்தது. அப்போது அது கலியான மண்டபம். இப்படியான திருகுதாளக்காரர்களை கூட்டமைப்பின் சிவஞானத்தார் உடன் கொண்டு திரிகிறார். ஆனால் சிவஞானத்தார் ஒரு மாவீரரின் தந்தையார் ஆவார். ஐலண்ட் யுத்தகாலத்தில் எல்லாம் சீரளிஞ்சு போச்சுது எனச்சொல்லுறியள் யுத்தம் முடிந்து இப்போ பதின்நாஙு வருடத்தை அண்மிக்கிறது அங்கு சிறிலங்கா ஜனநாயகக் குடியரசின் அரசியலமைப்புச்சட்டத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கான அரசியல் சட்டங்களின்படி மாநகரசபை நிர்வாகம் நடைபெறவேண்டும் அதில் வரி அறவீடுகள் மற்றும் மராமத்துப்பணிகள் தவிர எதிர்காலத்தில் ஏற்படும் குடிசனக்கொள்ளளவுக்கு ஏற்றதுபோல ஒரு திட்டமிடல் அறிக்கை ஆகியவற்றைத் திறணாளர்கள்மூலம் தயாரித்து அதனை உள்ளூராட்சி அமைச்சுக்கு அனுப்பவேண்டும் சும்மா மணிவண்ணன் சுமந்திரன் கஜேந்திரகுமார் என அலப்பறை செய்யவேண்டாம் இது சாதாரணமான சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட உள்ளூராட்சி நிர்வாகம் இதனுடன் கொண்டுவந்துதமிழ் தேசியத்தை உள்நுளைக்கவேண்டாம். கடந்தமுறை நான் யாழ் சென்றபோது ஒரு காணொளியை எனது யூ ரியூப் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தேன் அதில் கோட்டை முனியப்பர் கோவிலை அண்டியுள்ள முற்றவெளிப்பகுதியும் யாழ் வீரசிங்கம் மணடபத்துக்கு முன்னால் உள்ள தமிழாராச்சி நினைவிடமும் எப்படிக்கோரமாகக் காட்சியளிக்குது என காட்டியிருந்தேன் அதற்கு ஒரு வாரத்துக்குப் பின்பு மணிவண்ணனும் அவரது பரிவாரங்களும் ஒப்புக்குச் சப்பாணியாக சிறிது துப்பரவு வேலை செய்துவிட்டு அப்படியே போட்டது போட்டபடி விட்டாச்சு. ஒரு மாநகரத்தைப் பராமரிப்பது என்பது இன்று கூட்டிக்கழுவிவிட்டு அடுத்த ஆறு மாதத்துக்கு மறப்பது இல்லை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செப்பனிடவேண்டும். யாழ் மாநகரசபையின் "கோல்டன் எரா" என்பது அல்பிரட் துரையப்பா காலமாகும் அவர் தமிழின விரோதியாகட்டும் இல்லை வேறு எதுவாகவும் இருக்கட்டும் அந்த வேளையில் யாழ்ப்பாண நகர்ப்பகுதிக்கு அவர் செய்த சேவை என்பது சொல்லி மாளாது அவரது காலத்திலேயே பல இடங்களில் ஆயுர்வேதச் சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டது.இப்போது யாழ் வைத்திய சாலை சுற்றுச்சுவருக்கு அண்மித்த நடைபாதை மேடை அப்போதுதான் அமைக்கப்பட்டது. அப்போது இருந்ததைவிட இப்போது வாகனப்பெருக்கம் அதிகரித்துவிட்டது ஆனால் அப்போதே பாட்டா சந்திக்கு அண்மிதத கஸ்தூரியார் வீதி வின்ஸர் தெயேட்டர் வரைக்கும் ஒற்றைவழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஆனால் இப்போது அப்படியான ஒழுங்குபடுத்தல் எதுவுமே இல்லை உதாரணமாக யாழ் வைத்தியசாலை வீதி மற்றும் மின்சார நிலையவீதி ஆகியவை கட்டாயமாக ஒருவழிப்பாதையாக மாற்றமடையவேண்டும் யாழ் சிற்றூர்தி நிலையம் புகையிரத நிலையத்துக்குப்பின்னால் உள்ள ஸ்ரான்லிவீதிப்பக்கத்தில் இருக்கும் இரயில்வே காணிக்குள் அமைய வேண்டும் தவிர தற்போதைய பேரூர்து நிலையம் வாகனம் தரித்து நிற்காது உடனடியாகவே புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு குறுகிய நேர நிறுத்தத்துக்குப் பின்பான புறப்படுகயை மேற்கொள்ளவேண்டும். தவிர அங்கு காணப்படும் கழிவுநீர் வடிகால்கள் யாவும் மூள் ஒழுங்கமைக்கப்படல்வேண்டும். இப்படியாக பல வேண்டும்களை உள்ளடக்கி யாழ் மாநகரசைப் பிரதேசம் காத்துக்கிடகுது. இதில் தமிழ் தேசியம் தமிழர் உரிமை யுத்தம் இவைகளைப் பற்றிப்பேச என்ன கிடக்குது. தேவை தமிழர்கள் தலைநிமிர ஒரு சிறந்த நிர்வாகம். ஆனால் எமது பிரதிநிதிகள் அனைவரும் குறுகிய மனம் படைத்த சிறு குள்ளர்கள்.
  41. கடற்படை எடுத்தபடியால் இது ஏதோ புத்தர் தான் அனுப்பியிருப்பதாக கதை விட்டாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
  42. இதை தான் அறியாமை என்று சொல்வது சிலர் பேசுவது எழுதுவது கதைப்பது மூலமாக தங்களுடைய அறியாமையை வெளிப்படுத்தி விடுவார்கள் ஆனால் வேதனை என்னவென்றால் அது அவர்களுக்கு தெரிவதில்லை புரிவதுமில்லை இங்கே சுரேன் சுரேந்திரன். இலங்கையில் எதிர்கட்சிதலைவர சதீஷ் பிரேமதாச உடன் பேசியதைப்பார்த்தால் ...அவர் ஐனதிபதி ஆகும் போது தமிழர்கள் பிரச்சனையை எப்படி தீர்ப்பேன். என்று எந்தவொரு உறுதி மொழியையும் குறைந்த பட்ச முன்மொழிவுகளையும். வழங்கவில்லை இந்த சுரேன் அவரிடம் கோரிக்கைகளை முன் வைக்கவில்லை ஆனால் புலம்பெயர் தமிழர்கள் என்று சொல்லக்கூடாது புலம்பெயர் இலங்கையார். என்று சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள் தமிழன். தன்னை தமிழன் என்று சொல்வதில் இவருக்கு என்ன பிரச்சனை??? தமிழன் என்று சொல்வதை கைவிட்டால் தமிழர்கள் பிரச்சனை பற்றி எப்படி பேச முடியும் ?? ஒரு புலம்பெயர் சிங்கள அமைப்பிடம் இப்படி கோரி இருப்பார்களா?? இல்லை இல்லை இல்லாவே இல்லை இந்த சுரேன் 1983 ஆனி ஆடி ஆவணி மாதங்களில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு [தமிழர்கள் ] நீதி வழங்கமாறு கேட்டுக்கொண்டாரா ?? குற்றவாளிகளை தண்டிக்குமாறு ஏன் கேட்கவில்லை?? 2009 இல் இலட்சக்கணக்கான இலங்கையார். கொல்லப்பட்டதை ஏன் நினைவு ஊட்டவில்லை ?? 30 ஆண்டுகளாக கொல்லப்பட்டார்கள் அவர்கள் இலங்கையார் தானா??? இது போன்ற கேள்விகள் கேட்க முடியாத சுரேனுக்கு பேச்சுவார்த்தை செய்ய என்ன தகுதிகளுண்டு?? புலிகள் போல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
  43. யாராவது அல்ல. இனத்தின் நலனில் இதயசுத்தியான அக்கறை உள்ளவர்கள். அதேபோல் புலத்திலோ, புலம்பெயர் தேசத்திலோ கணிசமான மக்கள் ஆதரவாவது உள்ளவர்கள். ஏஜென்டுகள் எம் இனத்தின் பிரதிநிதிகள் அல்ல. மேலே சொன்ன இரெண்டு தகமைகளில், உலக தமிழர் பேரவைக்கு இரெண்டாவது அறவே இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. முதலாவது - இல்லை என்ற சந்தேகம், வர வர வலுக்கிறது. 1. அவர்களின் proxy யான சுரேனை வைத்து கொண்டு, இவர்களிருவரையும் தவிர்க்க முடியுமா? 2. தாயகத்தில் மிகபெரும் அரசியல் கட்சியின் தலைமைகளான இவர்களை தவிர்க்க கோரும் நீங்கள், எந்த legitimacy அடிப்படையில் சுரேனை எமக்கான பிரதிநிதி என தீர்மானிக்கிறீர்கள்?
  44. ஓ டியர். இப்போ தான் உங்களின் பக்கத்து வீடு வாசிக்க முடிந்தது. நல்ல அயலவர்கள் கிடைப்பதற்கும் கொடுத்து வைக்க வேண்டும். கொசுறு தகவல்: நண்பர் ஒருவர் உறவினர் ஒருவரின் செத்த வீட்டுக்கு சென்றார். வாசலில் பாதுகாப்பு காவலர்(security guard) நின்றார். அவரும் ஆச்சரியப்பட்டு ஏன் செத்த வீட்டில் பாதுகாப்பு காவலர் நிற்கிறார் என கேட்க, ஒருவர் இறந்தவரின் கடைசி ஆசை தனது 4 மருமகள்கள் தனது செத்த வீட்டுக்கு வரக்கூடாது என இறக்க முன் சொல்லி இருந்தாராம்.😄 அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஒழுங்கு செய்யப்பட்டதாம்.😁 அதற்கு பிறகு அந்த மருமகள்களின் ஆட்கள் செத்தவீட்டுக்கு வந்து செத்த வீடு அடிபிடியில் முடிந்து பொலிசும் வந்ததாக கேள்வி. (இடம் : கனடா)
  45. நாம் கற்பனை செய்துபார்க்கமுடியாத அளவில் அண்டவெளியில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்,கிரகங்கள்,கலக்சிகள், நெபியூலாக்கள் நிறைந்திருக்கின்றன.இவையனைத்தும் பெருவெடிப்பின் மூலம் தோன்றியவையே என்பதுதான் இவற்றிற்கிடையிலான தொடர்பாகும்.இவற்றுள் ஒன்றுதான் கருந்துளை பெயரிற்கேற்றாற்போல் கருமையான ஒரு பிரதேசமாக அல்லது புள்ளியாக இது காணப்படுகின்றது. ஏதாவது ஒரு பொருள் நம் கண்ணிற்கு புலப்படவேண்டுமாக இருந்தால் அந்தப்பொருளில் ஒளி பட்டுத்தெறித்து அவ் ஒளி எம்கண்களின் விழித்திரையில் விழவேண்டும்.ஆனால் கருந்துளையினுள் செல்லும் ஒளி மீண்டும் வெளியே வரமுடியாது அந்த அளவிற்கு மிக மிக வலிமையான ஈர்ப்புவிசையை கருந்துளை தன்வசம் கொண்டுள்ளது.இதுதான் கருந்துளை கறுப்பாக இருப்பதற்கான காரணம்.(கட்டுரையின் முடிவில் சரியான காரணம் புரியும்) கருந்துளை எப்படி உருவாகின்றது? ஒரு நட்சத்திரத்தின் ஆயுட்காலம் அண்ணளவாக 10 பில்லியன் வருடங்களாகும்.இந்த 10 பில்லியன் வருடக்காலப்பகுதியிலும் அந்த நட்சத்திரம் எரிந்துகொண்டேயிருக்கும். நட்சத்திரத்தினுள் நடைபெறும் அணுக்கருத்தாக்கங்கள் காரணமாக நட்சத்திரம் எரிந்துகொண்டேயிருக்கும்.இவ்வாறு எரிந்துகொண்டிருக்கும் நட்சத்திரங்கள் ஐதரசன் மற்றும் ஹீலியத்தினால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய வாயுக்கோளங்களாகும். இவ்வாறு தாக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது உருவாகும் அமுக்கம் நட்சத்திரத்தினுள் இருக்கும் வாயுவைவெளியே தள்ளும் ஆனால் நட்சத்திரத்தினில் இருக்கும் மையத்தை நோக்கிய ஈர்ப்புவிசை வாயுவை மையத்தை நோக்கி ஈர்க்கும் நட்சத்திரம் மரணிக்கும்வரை இவ்விரு விசைகளுக்கிடையிலான மோதல் நடந்துகொண்டேயிருக்கும். நட்சத்திரம் மரணிக்கும் தறுவாயில் அதாவது ஐதரசன் அணுக்களில் பெரும்பாலானவை ஹீலியம் அணுக்களாக மாறும்தறுவாயில் ஈர்ப்புவிசை வெற்றிபெற நட்சத்திரம் மையத்தை நோக்கி சுருங்க ஆரம்பித்துவிடும். இவ்வாறு நட்சத்திரம் சுருங்க ஆரம்பித்ததும் நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசை பல மடங்குகளாக அதிகரிக்க ஆரம்பிக்கும்.இவ்வாறு சுருங்க ஆரம்பிக்கும் நட்சத்திரம் ஒரு குறிப்பிட்ட எல்லை வரையுமே சுருங்கும்,நட்சத்திரத்தினுள் எஞ்சியிருக்கும் வாயுக்களில் உள்ள இலத்திரன்களின் தள்ளுவிசை நட்சத்திரத்தின் மையத்தை நோக்கிய ஈர்ப்புவிசையை சமப்படும் அளவுவரையே நட்சத்திரம் சுருங்கும். மிகப்பெரிய நட்சத்திரங்கள் அண்ணளவாக சூரியனைவிட 20 மடங்கு பெரிய நட்சத்திரங்கள் அதன் எரிபொருள் தீர்ந்ததும் நிலைகுலைய ஆரம்பித்துவிடும்.பெருமளவான எருபொருள் தீர்ந்தாலும் பிரமாண்டமான இந்த நட்சத்திரங்களின் மேற்பரப்பில் சிறிய அளவில் எரிபொருள் சற்றுமீதமாக இருக்கும் இவ் எரிபொருளில் அணுத்தாக்கம் நடைபெற ஆரம்பிக்க தொடர்ச்சியான சங்கிலித்தாக்கங்கள் நடைபெற்று மிகப்பெரிய வெடிப்பு நடைபெறுகின்றது.இவ்வெடிப்பி நடைபெற்ற பின்னரும் நட்சத்திரத்தின் மத்தியில் எஞ்சிய திணிவு சூரியனின் திணிவின் 3 மடங்கைவிட அதிகமாக இருக்கும்போது அவ் எஞ்சிய திணிவு கருந்துளையாக உருவெடுக்கின்றது. இதேபோல் மிகப்பெரிய திணிவுகொண்ட நட்சத்திரங்கள் சுருங்கி வெள்ளைக்குள்ளன் (white dwarf) ஆகவும் மாற்றமடைகின்றது.ஆனால் கருந்துளையாக நட்சத்திரம் உருமாறும்போது கருந்துளையின் மையம் ஒருமைத்தன்மையை நோக்கி நகரும்,மையம் ஒரு பரிமாண புள்ளியாக மாற்றமடையும் இதனால் அந்தமையத்தின் திணிவு,அடர்த்தி முடிவிலியை நோக்கி நகரும்,ஸ்பேஸ் ரைம் வளையும் இவற்றின் காரணமாக ஒளியைகூட தன்வசம் உறுஞ்சிக்கொள்ளும் அபரமிதமான ஈர்ப்புக்குழியாக கருந்துளை உருவெடுக்கின்றது. கருந்துStellar, Supermassive, , Miniature black holes. தம்மைத்தாமே சுற்றும் கருந்துளைகளில் மின்னேற்றம் பெரிய அளவில் இருந்தாலும் தொடர்ச்சியாக பொருட்களை உள்ளிழுக்கும்போது அப்பொருட்களில் ஏற்றத்தைப்பகிர்வதன்மூலம் மீண்டும் ஏற்றமற்ற நிலைக்கு கருந்துளை திரும்புவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றார்கள். ளைகள் எல்லாம் ஒரே மாதிரியானவை ஆனால் அவைகொண்டுள்ளதிணிவு,மின்னேற்றம்,சுழற்சி என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு 3 வகையாகப்பிரிக்கப்படுகின்றது. நியூட்டனில் இருந்து ஐன்ஸ்டீன்வரை கருந்துளை.... ஒரு குட்டி ரைம் ரவல் 1868 சேர் ஐசாக் நியூட்டன் புவியீர்ப்பை கண்டறிகின்றார்.இதன் பின்னர் ஈர்ப்புவிசை தொடர்பாக Philosophiæ Naturalis Principia Mathematica என்ற 3 பாகங்களைக்கொண்ட புத்தகமாக வெளியிடுகின்றார் நியூட்டன்.இவர் உருவாக்கிய சமன்பாடுகள் நட்சத்திரங்கள்,கோள்களின் திணிவுகள்,தூரங்களை உய்த்தறிய விஞ்ஞானிகளிக்கு உதவியது. 1783 ஜோன்மைக்கல் என்ற விஞ்ஞானி கறுப்பு நட்சத்திரம் என்ற ஒரு கருத்தை முன்வைக்கின்றார்.சூரியனைப்போன்ற ஒரு மிகப்பெரிய நட்சத்திரம் சிலமைல்ள் ஆரையுரைய நட்சத்திரமாக சுருங்கும்போது அதில் இருந்து ஒளிகூட தப்பிக்கமுடியாது எனக்கூறியதுடன் கறுப்பு நட்சத்திரம் என இதற்குபெயரிட்டார்.அதோடு ஈர்ப்புவிசையை கண்டுபிடிப்பதற்கு கணிதரீதியான கல்குலேசன்ஸ்களையும் செய்துகாட்டினார். 1796 பைரீசைமன் என்ற பிரஞ் கணிதவியளாளர் விண்வெளியில் மிகப்பெரியபிரமாண்டமான நட்சத்திரங்கள் கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம் என்ற கருத்தைக்கூறினார். 1905 ஐன்ஸ்டீன் The Annus mirabilis என்ற விஞ்ஞான சஞ்சிகை ஒன்றிற்கு 4 கட்டுரைகளை எழுதுகின்றார் இதில் ஸ்பேஸ், நேரம்,திணிவு, சக்தி தொடர்பாக விபரித்திருந்தார். ஐன்ஸ்டீனின் இந்தக்கட்டுரை பௌதிகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றது. 1915 ஐன்ஸ்டீன் general relativity theory ஐயும் special relativity theory ஐயும் வெளியிடுகின்றார்.அதுவரை நியூட்டனின் விதிகளுக்கூடாக ஈர்ப்புவிசையை விளங்கிக்கொண்ட உலகத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச்சென்றார் ஐன்ஸ்டீன். 1931 சுப்ரமணியன் சந்திரசேகர் இந்தியாவைச்சேர்ந்த இவர் ஒரு நட்சத்திரம் வெள்ளைக்குள்ளனாவதற்கான அதிகபட்ச திணிவு மற்றும் ஒரு நட்சத்திரம் கருந்துளையாவதற்கு தேவையான குறைந்தபட்ச திணிவை நிர்ணயிக்கும் அலகைக்கண்டறிந்தார்.இது chandrasekhar limit என அழைக்கப்படுகின்றது. 1963 றோய் கிர் என்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் general relativity theory தொடர்பான field equation சமன்பாடுகளுக்கு கேத்திர கணிதரீதியான வடிவம் கொடுத்தார். 1963 பிரபஞ்சத்தின் மிக சக்திவாய்ந்த விண்பொருளான quasar ஐக்கண்டுபிடித்தார்.quasar இன் மத்தியில் மிகப்பிரமாண்டமான கருந்துளை இருக்கும் எனவும் கூறினார். 1967 ஜோன் வீலர் உடைந்த கறுப்பு நட்சத்திரங்கள் என்ற பெயரை மாற்றி கருந்துளை என்ற பெயரை அறிமுகப்படுத்துகின்றார். 1971 X-ray, radio அலைகளையும் தொலைகாட்டியினூடான அவதானத்தினூடாகவும் Cygnus X-1. என்ற கருந்துளை முதன் முதலில் விஞ்ஞானிகளால் அவதானிக்கப்பட்டது. 1974 கருந்துளை உண்மையில் கருந்துளை அல்ல கருந்துளை மின் காந்த அலைகளைக் கதிர்க்கக்கூடியது என்ற கருத்தை stephen hawking வெளியிட்டார். general relativity theory spacetime என்ற ஒரு கருத்தை அறிமுகப்படுத்தினார் ஐன்ஸ்டீன்.spacetime வளைவதனாலேயே ஈர்ப்புவிசை உருவாகின்றது என ஈர்ப்புவிசைக்கு புதிய பரிமாணத்தைக்கொடுத்தார் ஐன்ஸ்டீன்.நமக்கு தெரிந்த முப்பரிமாணத்தையும்,ஒரு பரிமாணத்தையுடைய நேரத்தையும் இணைத்து 4ஆம் பரிமாணமாக spacetime ஐ குறிப்பிட்டிருந்தார் ஐன்ஸ்டீன். spacetime ஆனது பொருள்,ஈர்ப்புவிசை,சக்தி,அசைவு போன்றவற்றினால் வளையக்கூடியது என்று கூறினார் ஐன்ஸ்டீன்.spacetime அனைத்துப்பொருட்களையும் சுற்றியிருக்கின்றது. நேர் கோடு என்று எதுவுமில்லை ஈர்ப்புவிசையுள்ள ஒரு பொருளருகில் செல்லும்போது அன் நேர்கோடுவளையலாம். நாம் கேத்திரகணிதத்தில் இரு சமாந்தரக்கோடுகள் ஒன்றை ஒன்று சந்திக்காது என்று படித்திருப்போம் ஆனால் spacetime வளைவதனால் இவை சந்திக்கலாம் என்றுகூறுகிறார் ஐன்ஸ்டீன்.இப்படித்தான் நாமும்,எம் உலகம்,நட்சத்திரம் எல்லாமுமே spacetime இனால் பாதிக்கப்படுகின்றோம். நியூட்டனின் பார்வையில் ஒளிக்கு திணிவில்லை ஒளி நேர்கோட்டில் செல்லும் ஆனல் ஐன்ஸ்டீன் கூறினார் மிகப்பெரும்திணிவுகளில் spacetime வளைவதனால் ஏற்படும் ஈர்ப்புவிசையினால் ஒளிவளையும் என்றார். இதை 1919 இல் பரிசோதனைமூலம் சரி எனக்கண்டறிந்தார் விஞ்ஞானி Eddington.சூரியகிரகணத்தின்போது சூரியனை தொலை நோக்கிமூலம் அவதானித்த இவர் சூரியனின் பின்னால் இருக்கும் நட்சத்திரங்களும் தொலை நோக்கியில் தெரிவதை அவதானித்தார்.இதன் மூலம் சூரியனின் பின்னால் உள்ள நட்சத்திரத்தில் இருந்துவரும் ஒளிக்கற்றை சூரியனின் திணிவுகாரணமாக வளைந்து பூமியை அடைகின்றது என்பது அவருக்குப்புரிந்தது.இது Gravitational Lensing என அழைக்கப்படுகின்றது.இதன்பின்னர்தான் விஞ்ஞான உலகம் ஐன்ஸ்டீனின் தியரிகளை உற்று நோக்க ஆரம்பித்தது. https://www.manithanfacts.com/2021/10/black-hole.html
  46. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மிஷல் ராபர்ட்ஸ் பதவி, டிஜிட்டல் ஹெல்த் எடிட்டர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உங்களுக்கு 45 வயது இருக்கலாம். அப்போது, உங்கள் உடலில் உள்ள இதயம், மூளை, சிறுநீரகம் ஆகியவற்றுக்கும் 45 வயது தானே ஆக வேண்டும். ஆனால் சிலருக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது, இளம் வயதில் சர்க்கரை நோய், சிறுநீரக செயலிழப்புகூட ஏற்படுகிறது. அதாவது உங்களுக்கு 45 வயதாக இருந்தாலும், உங்கள் சிறுநீரகத்தின் வயது 60 ஆக இருக்கலாம், இருதயத்தின் வயது 65 ஆக இருக்கலாம். உங்கள் உண்மையான வயதைவிட உங்கள் உறுப்புகள் பல்வேறு காரணங்களால் வேகமாக முதிர்வடைந்து வருகின்றன. இது எப்படி நமக்குத் தெரிய வரும்? பொதுவாக உடலில் நோய் அல்லது அதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் தென்படும்போதுதான் நமக்குத் தெரியும். ஆனால் தற்போது நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாத போதே, முன்கூட்டியே என்ன உடல்நலக் கோளாறு ஏற்படக்கூடும் என்று கணிக்க முடியும். எந்தெந்த உறுப்புகளுக்கு என்ன வயதாகிறது என்பதைக் கண்டறிவதன் மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம். உறுப்புகளின் வயதை எப்படி தெரிந்து கொள்வது? பட மூலாதாரம்,GETTY IMAGES ரத்த பரிசோதனை உங்கள் உள்ளுறுப்புகள் எவ்வளவு வேகமாக முதிர்வடைகின்றன என்பதையும், எந்த உறுப்புகள் விரைவில் செயலிழக்கக்கூடும் என்பதையும் கணிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகக் குழு ஒன்று, இதயம், மூளை மற்றும் நுரையீரல் உட்பட 11 முக்கிய உடல் பாகங்களைக் கண்காணிக்க முடியும் எனக் கூறுகிறது. ஆயிரக்கணக்கான நடுத்தர வயதினரிடம் இந்தப் பரிசோதனைகள் ஆய்வின் ஒரு பகுதியாகச் செய்யப்பட்டுள்ளன. ஆரோக்கியமான 50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களில் ஐந்தில் ஒருவருக்கு குறைந்தபட்சம் ஒரு உறுப்பு விரைவாக முதிர்வடைந்து வருவதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. நூற்றுக்கு ஒன்று அல்லது இரண்டு பேருக்குப் பல உறுப்புகள் தங்கள் வயதைவிட முதிர்ந்தவையாக இருக்கின்றன. பரிசோதனை செய்து தெரிந்துகொள்வது பயமுறுத்துவதாக இருந்தாலும், ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்தப் பரிசோதனை ஒரு வாய்ப்பாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எந்த உறுப்புகள் வேகமாக முதிர்ச்சி அடைகின்றன என்பதை அறிவது, எதிர்காலத்தில் எந்த உடல்நல பிரச்னைகள் வரக்கூடும் என்பதை முன்கூட்டியே கணிக்க உதவும் என்று நேச்சர் ஆய்விதழில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடல் உறுப்புகள் - வயது இடைவெளி எவ்வளவு ஆபத்தானது? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருவரின் வயதைவிட முதிர்ந்த இதயம், இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. அதே நேரத்தில் விரைவாக முதிர்வடையும் மூளை, டிமென்ஷியாவால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகள் விரைவாக முதிர்வடைவது அடுத்த 15 ஆண்டுகளில் சில நோய்கள் மற்றும் இறப்பு ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது என ஆய்வு கூறுகிறது. ஆய்வில் சோதிக்கப்பட்ட உடல் உறுப்புகள் மூளை இதயம் கல்லீரல் நுரையீரல் குடல் சிறுநீரகம் கொழுப்பு ரத்த நாளங்கள் (நாடி) நோய் எதிர்ப்பு திசு தசை கணையம் இந்த பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES எந்த உறுப்புகள் எவ்வளவு வேகமாக முதிர்வடைகின்றன என்பதற்கான அறிகுறிகளைக் கண்டறிய, ஆயிரக்கணக்கான புரதங்களின் அளவுகளை ரத்த பரிசோதனை கணக்கிடும். ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்துவமான புரத அமைப்புகள் இருக்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏராளமான ரத்த பரிசோதனை முடிவுகள் மற்றும் நோயாளி தரவுகளைப் பயன்படுத்தி கணிப்புகளைச் செய்யும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர். ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் டோனி வைஸ்-கோரே, "ஒவ்வொரு நபருக்கும் இந்த உறுப்புகளின் ஒவ்வோர் உயிரியல் வயதையும், தீவிர நோய்கள் இல்லாத பெரிய குழுவினருடன் ஒப்பிடும்போது, 50 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களில் 18.4% பேருக்கு குறைந்தபட்சம் ஒரு உறுப்பு சராசரியைக் காட்டிலும் மிக வேகமாக முதிர்வடைந்து வருவதை நாங்கள் கண்டறிந்தோம்,” என்றார். மேலும், “அடுத்த 15 ஆண்டுகளில் குறிப்பிட்ட உறுப்பில் நோய்க்கான அதிக அபாயத்தில் இந்த நபர்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்,” என்று விளக்கினார். பல்கலைக்கழகம் இப்போது சோதனைக்கான காப்புரிமை ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளது. அது எதிர்காலத்தில் பயன்படுத்தப்பட்டு விற்கப்படலாம். உண்மையிலேயே இது எவ்வளவு நன்றாகக் கணிக்கிறது என்பதைச் சரிபார்க்க மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. உயிரியல் முதிர்வு என்பது மெதுவாக காலப்போக்கில் நடைபெறுவது அல்ல, திடீரென குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறக் கூடியது என டாக்டர் வைஸ்-கோரேயின் முந்தைய சில ஆய்வுகள் கூறுகின்றன. உறுப்பு முதிர்வுகள் 30 வயதில், 60களின் ஆரம்பத்தில் மற்றும் 70களின் பிற்பகுதியில் விரைவான ஏற்படுகிறது என்று அவரது ஆய்வு கூறுகிறது. பயோ மார்க்கர்களின் முக்கியத்துவம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் வயது தொடர்பான ஆரோக்கியம் மற்றும் நோய்கள் பற்றிய நிபுணரான பேராசிரியர் ஜேம்ஸ் டிம்மோன்ஸ் ரத்தத்தில் உயிரியல் வயதுக்கான குறிகளை (பயோ மார்கர்) ஆய்வு செய்து வருகிறார். அவரது ஆய்வு மரபணு மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டது. டாக்டர் வைஸ்-கோரேயின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தாலும், மேலும் பல மக்களிடம், குறிப்பாக பல்வேறு இனங்களைச் சேர்ந்த இளம் வயதினரிடம் ஆய்வு செய்வது அவசியம் என்று அவர் கூறினார். டாக்டர் வைஸ்-கோரே, "50,000 அல்லது 1,00,000 ஆரோக்கியமான நபர்களிடம் இந்த ஆய்வை செய்ய முடிந்தால், அவர்களின் தனிப்பட்ட உறுப்புகளின் ஆரோக்கியத்தைக் கண்காணித்து, மக்களின் உடலில் விரைவாக முதிர்ச்சி அடையும் உறுப்புகளைக் கண்டுபிடிக்க முடியும். மேலும் அவர்களது நோய் தீவிரமடைவதற்கு முன்பே, அவர்களைக் காப்பாற்ற முடியும்,” என்கிறார். கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் முதுமை உயிரியல் நிபுணரான பேராசிரியர் பால் ஷீல்ஸ், ஒரு நபரின் உடல் ஆரோக்கியத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள, தனிப்பட்ட உறுப்புகளை மட்டுமல்ல, முழு உடலையும் பார்ப்பது முக்கியமானது என்று கூறினார். நோய்களை முன்கூட்டியே கண்டறிவது உதவிகரமானது என்றாலும், இதனால் ஏற்படும் மன உளைச்சலும் சேர்த்தே கவனிக்கப்பட வேண்டும் என்கிறார் ஏஜ் யுகே என்ற அமைப்பைச் சேர்ந்த கரோலின் ஆப்ரஹாம்ஸ். “தனக்கு ஒரு நோய் ஏற்படப் போகிறது என்று தெரிந்துகொள்ளும் நபர், அந்த உண்மையுடன் எப்படி வாழப் போகிறார் என்பதையும் சேர்த்தே கையாள வேண்டும். அவர்களுக்குத் தேவைப்படும் உணர்வுரீதியான ஆதரவு வழங்கப்பட வேண்டும்,” என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES பயோ மார்கர்கள் குறித்து குவஹாத்தி மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியர் பல்லவி கோஷ், பிபிசியின் அஞ்சலி தாஸிடம் கூறியபோது, “பயோ மார்கர்கள் உடலின் செல்களில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறியும். ஒருவரின் உடல்நலப் பிரச்னைகள் குறித்து சீக்கிரமே எச்சரிக்கை மணி எழுப்பும்,” என்றார். மருத்துவத்தில் ஒரு நோயை முன்கூட்டியே கண்டறியவும் நோயைக் கண்காணிக்கவும் அதற்கு சிகிச்சை அளிக்கவும் என அனைத்து கட்டங்களிலும் பயோ மார்க்கர்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது என்கிறார் அவர். “இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனென்றால் ஒரே நோய்க்கு இருவேறு நபர்களிடம் வெவ்வேறு அறிகுறிகள் இருக்கலாம். பயோ மார்க்கர் அந்த நோயை குறிப்பாகக் கண்டறிந்து அதன் தீவிரத் தன்மையை அறிய உதவுகிறது,” என்றார். ஆயிரக்கணக்கான பயோமார்க்கர்கள் இருப்பதாகவும் அவை 600க்கும் மேற்பட்ட உடல்நல சிக்கல்களைக் கண்டறியக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார். பயோ மார்க்கர்கள் குறித்த ஆய்வு இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறது என்றாலும் எந்த வழியில் செல்ல வேண்டும் என்று ஒரு தெளிவு கிடைத்துள்ளது என்று பேராசிரியர் பல்லவி கூறுகிறார். அதோடு, இதயம், மூளை, சிறுநீரகம், நுரையீரல், எலும்பு ஆகியவற்றின் வயது முதிரும் தன்மை குறித்து மேலும் தெளிவான புரிதல் நமக்குத் தேவை என்றும் சுட்டிக்காட்டுகிறார். https://www.bbc.com/tamil/articles/cg3x2djz53qo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.