Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46797
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8910
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87990
    Posts
  4. MEERA

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    5418
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/22/24 in Posts

  1. காலை 8 மணியிருக்கும். தான் கூறியதுபோலவே மைத்துனரின் வீட்டு வாயிலில் நண்பனது கார் வந்து நின்றது. "வெளிக்கிட்டியாடா?" என்று நண்பன் தொலைபேசியில் கேட்டான். "ஓம், வாறன்" என்று சொல்லிவிட்டு மைத்துனரின் வீட்டிலும் விடைபெற்று கிளம்பினேன். ஆனைப்பந்தியூடாக, பலாலி வீதியை குறுக்கறுத்து பருத்தித்துறை வீதியில் ஏறினோம். பருத்தித்துறை வீதியில் நல்லூருக்கு அண்மையில் ஒரு அசைவக உணவகம். காலைச்சாப்பட்டிற்காக வண்டியை நிறுத்தி வாங்கிக்கொண்டோம். சுடச்சுட பட்டீஸும், ரோல்ஸும். அருமை. ஒரு பை நிறைய வாங்கிக்கொண்டு வந்தான். பயணம் முழுதற்கும் என்று யோசித்திருக்கலாம். மீண்டும் பலாலி வீதியில் வண்டி ஏறியது. தின்னைவேலி, பாமர்ஸ் ஸ்கூல், கோண்டாவில்ச் சந்தி, டிப்போவடி என்று நான் சிறுவயதில் தவழ்ந்து திரிந்த வீதிகளும் ஊர்களும் நண்பனது வாகனத்தில் பயணிக்கும்போது சடுதியாகத் தோன்றி மறைந்தது போலவும், வீதிகள் சுருங்கிவிட்டது போலவும் ஒர் உணர்வு. இந்தவிடங்கள் எல்லாவற்றிலும் நிறையவே நினைவுகள் கலந்திருக்கின்றன. பசுமரத்தாணி போல என்று சொல்வார்களே? அதுபோல. என்றும் பசுமையான நினைவுகள். எளிதில் எழுத்தில் வடித்துவிடமுடியாதவை. ஆதலால் தொடர்ந்து செல்கிறேன். சிட்னியிலிருக்கும் நண்பர் ஒருவரது தகப்பனாரைப் பார்ப்பதே உரும்பிராய்ப் பயணத்தின் நோக்கம். ஊரில் பிரபல வர்த்தகரான அவர் அண்மைக்காலமாகச் சற்று சுகயீனமற்று இருந்தார். அவரது உடல்நிலை குறித்த கவலைகள் நண்பருக்கு இருந்து வருகின்றன‌. ஆகவே நான் யாழ்ப்பாணம் போகிறேன் என்று கேள்விப்பட்டதும், "ஒருக்கால்ப்போய் அப்பாவையும் பார்த்துவிட்டு வரமுடியுமா?" என்று கேட்டபோது ஆமென்றேன். டிப்போவடி தாண்டியதும் வரும் சிற்றொழுங்கையில் வீடு. விசாலமான இரண்டுமாடிக் கட்டடம். ஒழுங்கையினிரு மரங்கிலும் கமுக மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்க, வீட்டைச் சுற்றி சோலைபோன்று மரங்கள் நடப்பட்டிருந்த அமைதியான அழகான வீடு. நண்பன் தான் வாகனத்திலேயெ இருப்பதாகக்கூறிவிட நான் உள்ளே சென்றேன். என்னை முதன்முதலாகப்பார்ப்பதால் அவர் அதிகம் பேசவில்லை. பலவீனமாகத் தெரிந்தார். சிறிதுநேரம் மட்டுமே அவரால் வெளியில் வந்து அமர்ந்துகொள்ள முடிந்தது. "தம்பி, எனக்கு இப்படி கனநேரம் இருக்கேலாது, நான் உள்ளுக்கை போகப்போகிறேன், இருந்து தேத்தண்ணி ஏதாச்சும் குடிச்சுப்போட்டு போம்" என்று சொன்னார். "இல்லை அங்கிள் உங்களை பார்க்கத்தான் வந்தேன். நீங்கள் உள்ளுக்கைபோங்கோ, முடிந்தால் கொழும்பு போகுமுன் இன்னொருமுறை வந்து சந்திக்கிறேன்" என்று கூறிவிட்டுக் கிளம்பினேன். உரும்பிராயிலிருந்து பலாலி வீதியூடாக கோண்டாவில்ச் சந்திநோக்கிச் சென்றோம். அங்கிருந்து இடதுபுறம் திரும்பி இருபாலை, பின்னர் செம்மணிப் பகுதியூடாகச் சென்று கண்டிவீதியில் ஏறினோம். செம்மணி பற்றி 80 களிலும் 1995 இலும் நாம் கேள்விப்பாடிருக்கிறோம். புளொட் அமைப்பின் ஆரம்பகால உள்வீட்டுப்பிரச்சினைகளின்போதும் பின்னர் கிருசாந்தி குமாரசாமி மற்றும் அவரது தாய், சகோதரர், உறவினர் ஆகியோரின் படுகொலைகளின் போதும் இப்பெயர் தமிழர்களுக்கு மிகுந்த பரீட்சயமாகிப்போனது. செம்மணிச் சுடலையூடாக வரும்போது, "இதுதான் மச்சான் செம்மணிச் சுடலை, இங்கதான் கிருசாந்தியையும் மற்ற ஆக்களையும் கொண்டு புதைத்தவங்கள்" என்று நண்பன் கூறிக்கொண்டு வந்தான். கண்டிவீதிவழியாக பூநகரி நோக்கித் திரும்பி பயணிக்கத் தொடங்கியது நண்பனின் வாகனம். பூநகரி என்று கேள்விப்படும்போதெல்லாம் 1993 இல் புலிகள் நடத்திய தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையும் நாகதேவந்துறை என்கிற பெயரும் என்னால் தவிர்க்கமுடியாமல் மனதில் வந்துபோகிறது. பூநகரியின் புதிய பாலத்தினூடு வரும்போது இருவகையான உணர்வுகள். முதலாவது தமிழ்மக்களின் பயணம் இப்பகுதியில் சற்று இலகுவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது, எம்மீதான இனக்கொலை புரிந்தவர்கள் கட்டியிருக்கும் இப்பாலத்தில் நாம் பயணிக்கிறோம் என்பது. மக்களுக்கு இப்போது எது தேவையானதோ, அது இருந்தால்ப் போதும் என்று மனதை ஆறுதல்ப்படுத்திக்கொண்டேன். மப்பும் மந்தாரமுமாக இருந்த அந்த முற்பகல் வேளையில், சனநடமாட்டம் இல்லாத அப்பாதையில் நண்பன் 130 - 140 வேகத்தில் வாகனத்தைச் செலுத்திக்கொண்டு சென்றான். சிறுவயதில் இருந்தே காரோட்டுவதில் நன்கு பரீட்சயமானவன். ஆகவே, அவனது திறமையில் முழு நம்பிக்கை வைத்து இருக்கையில் அட்டை போல ஒட்டிக்கொண்டேன். பாலம் கடந்து இருமருங்கிலும் அண்மையில் பெய்த வெள்ளத்தில் வழிந்தோடாது இன்னும் மிச்சமாய் இருக்கும் நீர் வீதியின் ஓரங்களில் தரித்து நிற்க, பனை வடலிகளும், பற்றைகளும் செழித்து வளர்ந்து நிற்க, நன் இதுவரை வந்திராத தாயகத்தின் ஒரு பகுதியூடாகச் சென்றுகொண்டிருந்தேன், நண்பனின் அனுக்கிரகத்தில். யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த 7 வருடங்களில் குடாநாட்டைத் தவிர வேறு எந்தப் பகுதிகளுக்கும் சென்றது கிடையாது. அதற்கான தேவையும் அப்போது இருந்ததில்லை. ஆகவே, தாயகத்தில் கிட்டத்தட்ட 90 வீதமான பகுதிகள் நான் வாழ்நாளில் பார்க்காதவை. எனவேதான் அக்கராயன் நோக்கிய பயணத்தில் எல்லாமே புதிய இடங்களாக எனக்குத் தெரிந்தது. நாவற்குழி - கேரதீவு - மன்னார் வீதியிலிருந்து விலகி கிளிநொச்சி நோக்கிப் பயணித்தோம். இந்த வீதியின் இருமருங்கிலும் தெரிந்த இயற்கை அழகு அபரிமிதமானது. சிட்னியில் சில இடங்கள் பார்க்கும்போது அழகாக இருப்பதாகத் தோன்றும். ஆகா ஓகோ என்று செயற்கையாகப் புகழ்ந்துந்துகொள்கிறோம் என்றுகூட நினைப்பதுண்டு. ஆனால், தாயகத்தில் இருக்குமிந்த அழகையெல்லாம் பார்க்க மறந்துவிட்டோமே என்று பெரிய ஏக்கம் வந்துபோனது. அத்துடன் நான் இங்கு இருக்கப்போவது ஓரிரு நாட்களுக்கு மட்டுமே என்று நினைத்தபோது ஏக்கமும் சேர்ந்துகொண்டது. தாயகத்தில் வாழும் மக்கள்பேறுபெற்றவர்கள் என்று நான் நினைப்பதற்கு இந்த இயற்கை அழகும் இன்னொரு காரணம். ஒருவாறு கிளிநொச்சி நகரை அடைந்தோம். நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று மாவீரர் நாள். கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியிலும், அவ்வீதியிலிருந்து கனகபுரம், அக்கராயன் நோக்கிச் செல்லும் வீதியிலும், வீதியின் மேலாகக் கம்பீரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த வளைவுத் தோரணம் "மாவீரர் நாள் 2023" என்று சொல்லிற்று. ஆக்கிரமிப்பாளனின் ஏதோவொரு படைத் தலைமையகம் முன்னால் இருக்க, மாவீரர் நாள் அனுஷ்ட்டிக்கப்படும் கொட்டகைகளும், வளைவுகளும், தோரணங்களும் அப்பகுதியெங்கிலும் சிவப்பு மஞ்சள் வர்ணத்தை அள்ளித் தெளித்திருந்தன‌. எமது விடுதலை வீரர்களை அழித்துவிட்டோம், எச்சங்களையும் தோண்டி எறிந்துவிட்டோம் என்று ஆக்கிரமிப்பாளன் கொக்கரித்து வந்தபோதும் மக்களின் மனங்களில் அவர்கள் இன்னும் வாழ்கிறார்கள் என்பதற்கு நான் அன்று பார்த்த காட்சிகள் சாட்சியம். மாவீரர் நாள் வளைவுகளூடாக நாம் பயணிக்கும்போது அவற்றை முடிந்தளவு படமாக்கிகொண்டேன். "மச்சான் , கவனம், பாத்தெடு. உன்ர போனை நோண்டினாங்கள் என்டால் பிரச்சினை வரலாம்" என்று நண்பன் கூறவும், "உவ்வளவு சனம் நிண்டு அவனுக்கு முன்னாலை உதைச் செய்யுது?" என்று கேட்டேன். "ஆருக்குத் தெரியும், பிரச்சினை குடுக்கிறதெண்டால் குடுப்பாங்களடா" என்று பதில் வந்தது. கிளிநொச்சியிலிருந்து அக்கராயன் போகும் வீதியில்த்தான் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் வருகிறது. நாம் அவ்விடத்தை அடையும்போது மாலையாகிவிட்டிருந்தது. மாவீரர் துயிலும் இல்லம் ஆக்கிரமிப்பாளனினால் அழிக்கப்பட்டபோது மாவீரர் கல்லறைகள் தோண்டப்பட்டு, நடுகற்கள் உடைத்தெறியப்பட்டிருந்தன. ஆனால், தொடர்ந்து வந்த வருடங்களில் அப்பகுதி மக்கள் துயிலும் இல்லத்தைப் புணரமைத்து, நடுகற்களைச் சேகரித்து ஒரு மலைபோல குவித்து வைத்திருந்தார்கள். அக்குவியலின் அடிவாரத்திலிருக்கும் இன்னும் முற்றாக உடையாத நடுகற்களில் மாவீரரது பெய‌ர்கள் உச்சரித்துக்கோன்டிருந்தன. இவற்றோடு அந்தத் துயிலும் இல்லம் எங்கும் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கவென தென்னங்கன்றுகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. அப்பகுதியெங்கும் வீதிகளும், வளைவுகள் மஞ்சள் சிவக்கு நிறக் கொடிகளில் அலங்கரிக்கப்பட்டிருக்க, தேசம் எழுச்சி பெற்று நின்ற‌து போன்ற உணர்வு. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல வாயிலில் பெருத்த சனக்கூட்டம். நிகழ்வுள் ஆரம்பிக்கப்பட இன்னும் பல மணித்தியாலங்கள் இருக்கவே மக்கள் பெருவாரியாக அப்பகுதிக்கு வந்துகொண்டிருந்தார்கள். மழை தூரத் தொடங்கியிருந்தது. ஆனால் மக்கள் வெள்ளமும் குறையவில்லை. அக்கூட்டத்தைப் படமெடுக்கவென ஒரு சிலர் வீதியின் எதிர்க்கரையில் நின்றுகொண்டிருந்ததைக் காணக்கூடியதாய் இருந்தது. அவர்கள் எமது மக்களில்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது. எனது தம்பியின் பூதவுடலும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலேயே விதைக்கப்பட்டதாக அறிந்தேன். துயிலும் இல்லத்தைக்கடந்து கார் மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும்போது அவனுக்காகவும் இன்னும் மரணித்த ஆயிரமாயிரம் மாவீரகளுக்காகவும் மனம் வேண்டிக்கொண்டது. இப்போதைக்கு இதைத்தவிர வேறு என்னதான் செய்ய முடியும் என்னைப்போன்றவர்களா? உங்கள் கனவுகள் வீண்போகாது என்று மனதிற்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன். வீண்போகக்கூடாது.
  2. இன மானம் காத்த அரணே போற்றி! பெண் மாண்பு காத்த மாண்பாளனே போற்றி! பன்முகத்தன்மை கொண்ட பன்முகனே போற்றி! ஆரிய குடி கெடுத்த தமிழ் மகனே போற்றி போற்றி!! போற்றி போற்றி!!
  3. 8 பக்கத்துக்கு நீட்டி, நீட்டி எழுதியதில் இருந்து சறுக்கி முதல் பக்கத்துக்கு வந்துள்ளீர்கள் . நல்ல மாற்றம்.
  4. வாழ்த்துக்கள் சிறிதரன்...இருவரும் அரசியல் தெரிந்த மேதைகள் ... யார் ஊடக பேச்சாளர்? சம்பந்தன் சுமத்திரனை உள்வாங்கி தமிழ்தேசியத்தை ஆட்டம் காண வைத்தது போல.... சிறிதரன் நம்பிக்கையான உண்மையான தமிழ் தேசிய பற்று உள்ள இளைஞர்களை உள்வாங்கி தனக்கு அடுத்த கட்ட செயல் வீரர்களை உருவாக்க வேண்டும்... இன்றைய இக்கட்டான் நேரத்தில் தமிழ் தேசியத்தை நீக்க பல கோணங்களிலிருந்து செயல் படுகின்றனர். சர்வதேசமும் தமிழ் தேசிய நீக்கத்தை விரும்புகிறது .இந்தியா ஒருபடி மேலே சென்று இந்து அடையாள அரசியலை திணிக்க முயல்கிறது..இவை யாவற்றையும் சுளிச்சு வெட்டி ஒடி தமிழ் தேசியத்தை தக்க வைப்பார்களா இவர்கள்?
  5. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பொதுச்சபைக் கூட்டம் இன்று தமிழர் தலைநகர் திருகோணமலையில் இடம்பெற்றது. இந்தநிலையில், 184 வாக்குகளைப் பெற்று சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்த்துப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.
  6. காலேல 12 இடியப்பம், 11 மணிக்கு tea வடை, மத்தியானம் மலை மாதிரி சோறு, இரண்டு மணிக்கு வெயில் சூட்டுக்கு fanta சோடா. பின்னரம் மிக்ஸ்ர் கொண்டல் கடலை and Tea. இரவைக்கு beer with கொத்து ரொட்டி இப்பிடி சாப்பிட்டுகொண்டு சனம் 35 வயசுக்கு மேல் வாழுதே.. அதே பெரிய விஷயம்
  7. நீ என் கைக்கு விலங்கிடுவாய் என்றால் ஆயுளுக்கும் நான் குற்றவாளியாக தயார்....😍
  8. ஒருவரை சந்திக்கும் போது வணக்கம் தெரிவிப்பது வழமை…
  9. முதலில் ஒற்றுமையை இந்தாள் கதைக்கிறரர் , 150000 மக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்த கொலையாளி . இவரை அம்மான் என்று தயவு செய்து எழுத வேண்டாம் . அந்த தகுதியை இழந்து ரொம்ப நாளாகிவிட்டது .
  10. நான் ஒருபோதும் சிறீதரனை ஆதரித்தோ அல்லது சுமந்திரனை எதிர்த்தோ இந்த திரியில் எழுதவில்லை. மேலும் ஆரம்பத்தில் இருந்து என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை வாசித்து கிரகித்துக் கொள்ளுங்கள். அது எனக்கு தேவையற்றது…. பிகு : ஒரே பெயரில் வாருங்கள்…
  11. கூத்தமைப்பானுகளுக்கு வாழ்த்து வேற ஒரு கேடு. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது தமிழ் தேசியம் என்றாலே என்னவென்று தெரியாமல் அடிமட்ட உறுப்பினர்களுக்கெல்லாம் கல்தா கொடுத்து தலைவர் போட்டிக்கு போட்டியிடும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் சுத்துமாத்தின் உழைப்பு சாதாரணமானதல்ல. கூத்தமைப்பு ஒரு இலங்கை தி.மு.க
  12. நிர்வாகத்தினர், இந்தத் திரியில் முன்வைக்கப்பட்ட கடைந்தெடுத்த இழிந்த மதவாதக் கருத்துக்களை நீக்கிமாறு கோரிக்கை வைக்கிறேன்.
  13. தயவு செய்து இது போன்ற சொற் பிரயோகங்களை தவிருங்கள். கடைசியில் அது தமிழ் கிறிஸ்தவர்களை தமிழ் சைவர்களில் இருந்து தூர விலகி நிற்கவே இது போன்ற பதிவுகள் உதவும். தமிழ் கிறிஸ்தவர்கள் + தமிழ் சோனாகர்கள் என்ற நிலை ஏற்படாமல் தவிர்ப்பதே எங்கள் எல்லோருக்கும் நன்மை பயக்கும். ( அப்படி ஒரு நிலைமை ஏற்பட தமிழ் கிறிஸ்தவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டினம் என்பது எனது நிலைப்பாடு ) இல்லையேல் இங்கே தமிழ் சைவர்கள் சிறுபான்மை ஆகி விடுவோம்
  14. உங்களுக்கு சொல்லுறதுக்கு என்ன.....😂 ஒரு சிலதுகள் சினிமாப்பாட்டுக்களிலை இருந்து இடையால உருவினதுகள். 😎
  15. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, அயோத்தியில் கடவுள் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு ஜனவரி 22ஆம் தேதி நடக்கவுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், அமரேந்திர யார்லகட்டா பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அயோத்தியில் கடவுள் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு இன்று நடக்கும் நிலையில் அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துறவிகள் மற்றும் விருந்தினர்கள் அயோத்திக்கு வந்தடைந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்காக தீர்த்த க்ஷேத்ர புரம் என்ற பெயரில் தற்காலிக நகரம் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளது ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை. இந்த தீர்த்த க்ஷேத்ர புரத்திற்கு விஷ்வ இந்து பரிஷத்தின் இணை செயலாளர் கோடீஸ்வர ஷர்மா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முப்பது வருடங்களுக்கும் மேலாக அயோத்தியுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் ராமர் கோவில் பணிகளை மிக நெருக்கமாக கவனித்து வருவதாகவும், தற்போது ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் ராமர் கோவில் கட்டுமானங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள், ராமர் சிலை தேர்வு குறித்து பிபிசியிடம் பேசியுள்ளார் கோடீஸ்வர ஷர்மா. பட மூலாதாரம்,SHRI RAM JANMBHOOMI TEERTH KSHETRA படக்குறிப்பு, சோம்நாத் கோவிலை வடிவமைத்த ஸ்தபதி சோம்புராவின் பேரன்தான் அயோத்தி கோவிலை வடிவமைத்தவர். கேள்வி : அயோத்தி ராமர் கோவிலின் கட்டிடக்கலை வடிவமைப்பின் சிறப்பம்சங்கள் குறித்து விவரிக்க முடியுமா? கோடீஸ்வர ஷர்மா : ராமர் கோவில் கட்டுமான பணிகள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மத்திய அரசால் அமைக்கப்பட்ட அறக்கட்டளையால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த அறக்கட்டளையே கட்டுமான பணிகளுக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் பொறுப்பு. கோவில் வடஇந்திய பாணியில்(style) கட்டப்பட்டுள்ளது. சோம்நாத் மற்றும் துவாரகா ஆகிய கோவில்களும் இதே பாணியில்தான் கட்டப்பட்டுள்ளன. சோம்நாத் கோவிலை வடிவமைத்த ஸ்தபதி சோம்புராவின் பேரன்தான் அயோத்தி கோவிலை வடிவமைத்தவர். 1991 ஆம் ஆண்டு விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வழிகாட்டுதலின் பேரில், இந்த கோவிலின் மாதிரி உருவாக்கப்பட்டது. அதன் படியே சிற்பங்கள் செதுக்கப்பட்டன. அதற்கு பிறகு, அறக்கட்டளை பொறுப்பேற்று, முதலில் உருவாக்கப்பட மாதிரியில் சிறிய மாற்றங்கள் செய்து கோவிலை கட்டியுள்ளது. மேலும், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமர் பிறந்த இடத்திற்கு அருகில் சராயு நதி ஓடியது. அந்த நதி இன்றும் பூமிக்கு அடியில் பாய்ந்து கொண்டிருக்கிறது. நிலநடுக்கங்களை தாங்கும் வகையிலும், 1000 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் அளவிலும் இந்த கோவிலின் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு, 8000 விருந்தினர்கள் மட்டுமே இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்னர். கும்பாபிஷேக நிகழ்வில் எத்தனை மக்கள் பங்கேற்பார்கள்? அதற்கான ஏற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளது? கோடீஸ்வர ஷர்மா : அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள். இன்னமும் கோவில் கட்டுமானம் முழுமையடையாததால், இங்கு இருக்கும் இடத்திற்கு ஏற்ப 8000 விருந்தினர்கள் மட்டுமே இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்னர். அதில் 4000 துறவிகளும் அடங்குவர். கோவில் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களோடு சேர்த்து, நாடு முழுவதும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் இந்நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். துறவிகள் மற்றும் அவர்களோடு வருபவர்களுக்கென்று கூடார நகரம் என்ற பெயரில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரபலங்கள் தங்குவதற்கு அயோத்தி மற்றும் ஃபைசாபாத் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், ஆசிரமங்கள் மற்றும் விருந்தினர் இல்லங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு 30 - 35 உணவு மற்றும் தங்குமிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள கோவிலில் 19ஆம் தேதி மாலையோடு தரிசனம் நிறுத்தப்பட்டு சிலைகளை அங்கிருந்து புதிய கோவிலுக்கு மாற்றுவதற்கான சடங்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் 20, 21, 22 ஆகிய தேதிகள் தரிசனம் கிடையாது. 22ஆம் தேதி சிலை பிரதிஷ்டை செய்த பிறகு, விருந்தினர்களுக்கு மட்டும் தரிசனம் அனுமதிக்கப்படும். 23ஆம் தேதி காலை முதல் பொது பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பட மூலாதாரம்,CHAMPAT RAI படக்குறிப்பு, 72 ஏக்கரில் தென்மேற்கு திசையில் கடவுள் ராமர் பிறந்ததாக கூறப்படுகிறது. ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையிடம் 72 ஏக்கர் இருந்தபோதிலும், கோவில் 2.7 ஏக்கரில் ஒரு மூலையில் கட்டப்பட்டுள்ளது ஏன்? கோடீஸ்வர ஷர்மா : ஒட்டுமொத்த காலியிடத்தில் கட்டுமான பணி நடக்கவில்லை. இந்த 72 ஏக்கரில் தென்மேற்கு திசையில் கடவுள் ராமர் பிறந்ததாக கூறப்படுகிறது. அங்கு கோவில் கட்டப்படுகிறது. அதோடு சேர்த்து பிற கோவில்கள் மற்றும் உபகோவில்களும் இங்கு கட்டப்படும். முதலில் கோவிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன. மீதி இருக்கும் இடத்தில் யாத்திரைக்கான அமைப்புகள், அன்னதான மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை அறக்கட்டளையின் மூலம் கட்டப்படும். சிலை பிரதிஷ்டைக்கான தினமாக ஜனவரி 22 தேர்வு செய்யப்பட்டது ஏன்? கோடீஸ்வர ஷர்மா : ஜோதிடம் மற்றும் ஆகம சாஸ்திரங்களின் படி சிறந்த முகூர்த்தம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 22ஆம் தேதி 12.22 முதல் 12. 40 வரை நல்ல நேரம் என்பதை நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, தரைத்தளத்தில் 5 வயது பால ராமரின் சிலை நிறுவப்படுகிறது. பால ராமரின் சிலையை நிறுவது ஏன்? கோடீஸ்வர ஷர்மா : முற்காலத்தில் இருந்தே பால ராமரின் சிலை உள்ளது. அயோத்தி ராமர் பிறந்த பகுதியாக கருதப்படுவதால், அங்கு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. தரைத்தளத்தில் 5 வயது பால ராமரின் சிலை நிறுவப்படுகிறது. அந்த சிலையின் தோராயமான உயரம் நான்கரை அடி இருக்கும். முன்பு வழிபாடு செய்யப்பட்டு வந்த ராமர் மற்றும் அன்னதம்முவின் சிலைகளும் இங்கு உள்ளன. முதல்தளத்தில் ராம்தர்பார் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நாம் வழிபடும் படங்களில் இருப்பது போன்று ராமர், சீதா, லக்ஷ்மணன், ஹனுமான், பரதன் மற்றும் சத்ருகன் ஆகியோரை வழிபடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூரிய திலகத்தை கருத்தில்கொண்டு, ராம நவமி நாளில் குழந்தை ராமரின் நெற்றியில் சூரியனின் கதிர்கள் படும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் சிமெண்ட் மற்றும் இரும்பு பயன்படுத்தப்படாமல் கட்டப்பட்டுள்ளதாக அறக்கட்டளை சொல்கிறதே, அதற்கான காரணங்கள் என்ன? கோடீஸ்வர ஷர்மா : அனைத்து புராதன கோவில்களும் கற்களால் தான் கட்டப்பட்டுள்ளன. 1,000, 1,200, 1,500 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட கோவில்கள் கூட இன்றும் உறுதியாக நின்று கொண்டிருக்கின்றன. ஸ்ரீரங்கம், ஸ்ரீசைலம் மற்றும் ராமப்பா ஆகிய கோவில்களும் கற்களால் தான் உருவாக்கப்பட்டுள்ளன. கற்களின் ஆயுள் நீடித்து கொண்டே இருக்கும். இரும்பு துருப்பிடித்து கெட்டு போய்விடும். இதனால், கோவில் கட்டுமானத்தில் சிமென்ட், இரும்பு பயன்படுத்தக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கேற்றவாறு கட்டப்பட்டுள்ளது. சோம்நாத், துவாரகா மற்றும் ராமேஸ்வரம் கோவில்களும் கூட கல்லால் ஆனவை. கட்டுமானம் முடிக்கப்படுவதற்கு முன்பே கோவில் திறக்கப்படுவதாக விமர்சனம் எழுகிறதே, விஎச்பியின் சார்பில் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? கோடீஸ்வர ஷர்மா : 1951ஆம் ஆண்டு கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே சோம்நாத் கோவிலை ராஜேந்திர பிரசாத் திறந்து வைத்தார். நமது நாட்டில் இவை அனைத்தும் வாஸ்து மற்றும் கோயில் சாஸ்திரங்களின்படியே நடக்கிறது. எதுவும் அறிவியலற்ற முறையில் செய்யப்படுவதில்லை. அனைத்துமே முறைப்படி மட்டுமே செய்யப்படுகிறது. இந்த விமர்சனங்களுக்கு கோவில் தொடர்பானவர்கள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர். https://www.bbc.com/tamil/articles/cv27rddn21do
  16. இதென்ன பிரமாதம்??????? மேற்கத்தைய அரசியல்வாதிகளின் சொத்து விபரங்களையும் வெளியிலை விட்டால் இன்னும் பிரமாதமாக இருக்குமே.......😋 ஆனால் ஒண்டு புட்டின் சார் சொத்துக்கள் சேர்த்தது உண்மை பொய்களுக்கப்பால் வெளிநாடுகளுக்கு படையெடுத்து சொத்துக்களை கொள்ளையடிக்கவில்லை. 😎
  17. இந்தியா சிறிலங்காவின் தலமையை, மற்றும் ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் அளவுக்கு நாட்டில் செல்வாக்கு செலுத்துகின்றது இந்த நிலையில் நாம் எம்மாத்திரம்...மாலைதீவு இந்தியாவின் கை விட்டு அகன்றதின் பின் மேலும் மேலும் சிறிலங்காவை இறுக பற்றிகொள்ள இந்தியா நிச்சயம் முயற்சி செய்யும்...
  18. மாவீரர் துயிலுமில்லத்தில் புதிய தலைவர் சிறிதரன் 2024 ஜனவரி 22 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரான சிறிதரன் எம்.பி தனது பயணத்தை கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திலிருந்து இன்று ஆரம்பித்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துக்கோரிய பயணத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக எனக்குரித்தாக்கப்பட்ட பொறுப்புகளை உணர்ந்து, கொள்கைரீதியில் ஒருமித்திருப்போரை ஒன்றிணைத்து மேற்கொள்ளவுள்ள பலம் மிக்க பயணத்தை கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திலிருந்து இன்று ஆரம்பித்தோம்.” R https://www.tamilmirror.lk/வன்னி/மாவீரர்-துயிலுமில்லத்தில்-புதிய-தலைவர்-சிறிதரன்/72-331933
  19. ஜூடோ - ப.தெய்வீகன் அமெரிக்காவின் அரிசோனா சிறை வளாகத்தில் கைதிகளுக்கான கிறிஸ்துமஸ் நிகழ்வுகள் ஏற்பாடாயிருந்தன. அன்றைய தினம்தான் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட ஈழத்தமிழ் கைதியான ரொக்ஸி சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அதிகாரிகளின் கட்டளைப்படி கிறிஸ்துமஸ் உணவுக்கான வரிசையில் நின்றான். பல வகையான உணவுகள் பரிமாறப்பட்ட மேசைக்கு அருகில் சென்றபோது, ரொக்ஸிக்கு முன்னால் சென்றவன் கடதாசித் தட்டை எடுத்துக் கொடுத்தான். வறுத்த சோற்றையும் அதற்கு மேல் வார்க்கப்பட்ட குழம்பையும் எடுத்துக்கொண்டு, அவன் பின்னாலேயே ரொக்ஸியும் நடந்தான். வேறு கைதிகள் இல்லாத இடத்தில் இருவரும் குந்தினார்கள். பாதி வறண்ட வழிகள், பள்ளத்தில் வற்றிப்போன கன்னங்கள், தடித்த உதடுகள். தனது பெயர் ஜூடோ என்று கூறினான். ரொக்ஸி அவனிடம் கேட்டான். “உன்னுடைய வழக்கு என்ன, எத்தனை வருஷ தண்டனை?” ஜூடோவின் முகம் அமைதியாயிற்று. ரொக்ஸியின் கேள்வியால் அவன் சினமடையவில்லை. மாறாக இத்தனை வருடங்களில் சக கைதியொருவனின் நெருக்கத்தை மனத்தளவில் உணர்ந்தான். குற்றங்களுக்கு அப்பால் அவர்களைப் பிணைக்கும் ஒரு நேசமிருப்பதாக உணர்ந்தான். “என் முழுக்கதையையும் சொல்வதற்கு உனக்கு விதிக்கப்பட்ட ஏழு வருடங்களே போதாது” என்று புன்னகை புரிந்த ஜூடோ தன் கதையைச் சொல்லத் தொடங்கினான். 2 ஆஸ்திரேலியாவை ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் துண்டுதுண்டாகத் தின்றுகொண்டிருந்த காலம். வடமுனையிலுள்ள கரமில பெருநகரம் முடிந்தளவு எதிர்த்துப் போரிட்டபோதும், ஈற்றில் ஆக்கிரமிப்பாளர்களிடம் வீழ்ந்தது. கரமில நகரின் தொல்குடிகள் அனைவரும் முழுநிலா இரவன்று ஒதுக்குப்புறக் கிராமத்திற்கு வேட்டை நாய்களின் உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டனர். கற்றைகளாக வெட்டி எரிக்கப்பட்ட வலபிப் புற்களைச் சுற்றித் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டனர். லோகன் என்ற பெருங்காட்டின் வழிகாட்டி, தனது மனைவி பாபராவுடனும் ஒரு வயது மகனோடும் அச்சத்தில் தன் செவ்விழிகளை உருட்டியபடி கூட்டத்தில் நடுவிலிருந்தான். ஊற்றுப்பாளையில் செய்த குடுவையில் எடுத்துவந்த தண்ணீரை, பாபரா களைத்திருந்த மகனுக்குப் பருக்கிவிட்டாள். தீ ஒளியில் தெரிந்தன முகங்கள். தொல்குடிகள் அச்சத்தில் தங்கள் குல மிம்மி தெய்வத்தைத் தடித்த உதடுகளால் உச்சரிப்பது ஆக்கிரமிப்பாளர்களுக்குக் கேட்டது. இருளிலும் வெள்ளை நாகம்போலத் தெரிந்த உயரமான ஒருவன் நீண்ட கடதாசியுடன் எல்லோருக்கும் முன் வந்துநின்றான். ‘கலப்படமற்ற குருதி பாயும் கரியவர்களே! இந்த இருட்டில் உங்களை இனம் காண்பதே பேரிடராயுள்ளது. அதிகம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். இந்த விலங்கு நிலத்தைச் சுத்திகரிப்பதற்கும் உங்கள் வருங்காலத் தலைமுறையை எங்களைப் போல உருவாக்குவதற்கும் இங்கு நாம் வந்திருப்பதை நீங்கள் பூரணமாய் அறிவீர்கள். காடுறை வாழ்வும் கரியதோலும் கொண்ட உங்களின் மீது ஒட்டியுள்ள அழுக்குகள் இனியாவது ஒழியவேண்டும். அவை உங்கள் அடுத்தத் தலைமுறைகளுக்கு வேண்டாம். இந்தத் திருமுழக்கத்தை உங்களின் முன்னால் கூறி, இறைச் சத்தியமான எங்களது காரியத்தை ஆரம்பிக்கிறோம். உங்கள் குழந்தைகளை நிரந்தரமாய் எங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்கிறோம். அவர்கள் இனி எங்கள் பண்ணைகளில் பணிபுரியட்டும். மானிடம் போற்றும் வெண்சரும மேனியர்களாக வளரட்டும்” என்று படித்து முடித்தான். வாகனங்களிலிருந்து இறங்கிய சீருடைக்காரர்கள் கூட்டத்துக்குள் நுழைந்து, எல்லோருடைய குழந்தைகளையும் வேக வேகமாக இழுத்துப் பறித்தனர். தொலைவில் நின்றுகொண்டிருந்த பச்சைப் படங்கு போர்த்திய நீண்ட வாகனத்துக்குள் கொண்டுசென்றனர். தாய்மார் பாய்ந்து தடுத்தபோது, உதைத்து வீழ்த்தப்பட்டார்கள். ஆண்கள் சிலர் ஆவேசத்துடன் தங்களது குழந்தைகளைப் பறிக்க முற்பட்டபோது, துப்பாக்கிப் பிடிகளால் தரையில் சரிக்கப்பட்டார்கள். சிலர் ஓடிச்சென்று எரிதணலை எடுத்து வீசி, ஆக்கிரமிப்பாளர்களைத் தாக்கினார்கள். குழந்தையை இறுகப் பற்றியபடி தரையோடு மடிந்திருந்த பாபரை இழுத்துக்கொண்டு காட்டுக்குள் பாய்ந்த லோகன், இருள் காட்டிய திசையில் பறந்தான். பல மாதங்களாகக் காடுகளில் பதுங்கி அலைந்து நெடும்பயணத்தைத் தின்று செமித்தனர். நியூ சவுத் வேல்ஸ் மாநில கிஞ்சலா நதிப்பக்கமாக வந்துசேர்ந்தபோது, மூவரும் உருமாறிப் போயிருந்தனர். லோகன் குடும்பத்திற்கு சுஸானா என்ற வெள்ளைப் பெண்ணொருத்தி தஞ்சமளித்தாள். 3 சுஸானா இங்கிலாந்திலிருந்து பொலீஸ் உத்தியோகத்திற்காகக் கணவரோடு ஆஸ்திரேலியா வந்தவள். வேட்டையில் மிகுந்த ஆர்வமுடைய சுஸானா, கங்காருகளைத் தேடிக் காட்டுக்குள் சென்றபோது, அவளது கணவர் சர்ப்பம் தீண்டி இறந்துபோனான். சுஸானா கிஞ்சலா பகுதியில் தனியாக வசித்தாள். தன் வீட்டுப்பக்கமாக ஒதுங்கிய லோகன் குடும்பத்தினை சுஸானா பிரியத்துடன் அணைத்தாள். லோகன் – பாபரா தம்பதிகளின் மகனுக்கு சுஸானா தானே பெயரைச் சூட்டினாள். பாபராவின் முதுகில் குழந்தையை இறுக்கமான துணியில் கட்டியபடி, பகல் நேரத்தில் மூவரும் காட்டுக்குள் நெடும்பயணம் போய் வந்தார்கள். லோகனும் பாபராவும் காண்பித்த ஆழ்வனத்தின் அதரங்கள் சுஸானாவுக்குள் பல உலகங்களாய் விரிந்தது. மனிதர்களைவிட மரங்களை அதிகம் தெரிந்திருந்த லோகனின் கால் தடங்களைப் பற்றியபடி வேட்டைத் துப்பாக்கியோடு அலைந்தாள் சுஸானா. குட்டிப்பையன் முதல் தடவையாகக் காட்டுக்குள்தான் நடை பயின்றான். பாபரா அவன் விரல்களைப் பற்றியபடி – குழந்தைக் குரலில் பாடுவாள். சிறு கணங்களையும் மகிழ்வோடு கொண்டாடும் அவர்களைப் பார்த்து சுஸானா பரவசமடைந்தாள். இருண்ட வனத்தின் ஆழத்தில எதிர்ப்படும் குளிர்ச்சுனைகளில் நீராடினாள். இயற்கையோடு குழந்தையை வளர்ப்பதில் சுஸானாவும் அதிகப் பிரியம் கொண்டாள். கிஞ்சலாக் காடுகளுக்குள் திரிந்த புதியவர்களின் சத்தம், காடுகளைத் தாண்டிப் பல காதுகளை எட்டியது. பூர்வகுடிப் பெற்றோர்களிடம் குழந்தைகளைப் பறிக்கின்ற துப்பாக்கிகள் கிஞ்சலா பகுதியை வந்தடைந்தன. விடிகாலைப் பொழுதொன்றில் வேட்டைக்குப் போவதற்கு முன் சுஸானாவின் வீடு ராணுவ வாகனங்களால் சூழப்பட்டது. பேரச்சத்தின் கருகிய வாசனை வீட்டுக்குள் எட்டியது. லோகனும் பாபராவும் மகனைத் தூக்கிக்கொண்டு பின் வளவினால் பாய்ந்தார்கள். மூன்று நான்கு வேட்டொலிகள் அதிகாலையை உலுப்பியது. லோகனும் பாபராவும் முறிந்து விழுந்தார்கள். மகன் எழுந்து நின்று வானத்தைப் பார்த்தான். பின்னர், தரையில் விழுந்துகிடந்த தாயைப் பார்த்தான். அவன் பார்த்த முதல் குருதி. பின் கதவைத் திறந்து ஓடிவந்த சுஸானா சடலங்களுக்கு நடுவில் விழுந்து குழறினாள். இருளின் பாதைகளையெல்லாம் மின்னலாக ஓடிக்கடந்த லோகன், வெளிச்சத்தின் பொறியில் சிக்கிச் சாய்ந்து கிடந்ததைக் கண்டு கதறியழுதாள். திறந்திருந்த அவன் கண்கள் பாபராவைப் பார்த்தபடியிருந்தன. சப்பாத்தொலிகள் சூழ்ந்தன. ஒருவன் எஞ்சியிருந்த சிறுவனைத் தூக்கினான். அவனோ பிடியிலிருந்து திமிறி அலறினான். சினத்தோடு எழுந்த சுஸானா துப்பாக்கியோடு நின்றுகொண்டிருந்தவர்களின் நெஞ்சில் ஒங்கி அறைந்தாள். “நானும் ஒரு வெள்ளைக்காரிதானே, என்னிடம் அந்தச் சிறுவனை தாருங்களேன்.” “இவர்களுக்கு நாங்களே பயிற்சி கொடுக்கவேண்டியுள்ளது சுஸானா. உன் கணவரைப்போல நாங்களும் அரசு உத்தரவுகளைத்தான் நிறைவேற்றுகிறோம். குறுக்கே வராமல், தள்ளு.” அதிகாரி ஒருவன் சொன்னான். சீருடைக்காரர்களின் கால்களைக் கட்டியபடி சுஸானா கதறிக்கொண்டிருக்க, அந்தச் சிறுவனை ஜீப்பின் முன்னால் ஏற்றினார்கள். வாகனம் விரைந்தது. சுஸானா காடதிர அவனதுப் பெயரைச் சொல்லி அழைத்தாள் – “ஜூடோ…” 4 பல நூற்றுக்கணக்கான தொல்குடிச் சிறுவர்களை அடைத்து வைத்திருந்த தொழுவமொன்றில் ஜூடோ சேர்க்கப்பட்டான். தடிகளால் அமைக்கப்பட்ட தனிக்கூடுகளில் அவர்கள் வெளியே பார்த்தபடி ஏக்கத்தோடு நின்றார்கள். எல்லோர் கன்னங்களும் கண்ணீரால் நொதித்திருந்தன. தொழுவத்திற்குள் வந்த வாகனங்கள், சிறுவர்களைத் தரம் பிரித்து ஏற்றிச்சென்றன. நீண்ட துப்பாக்கிகளும் வட்டத்தொப்பிகளும் அணிந்த பொலீஸார் பாதுகாப்பிற்காக நின்றுகொண்டிருந்தார்கள். தடிக்கூடுகளுக்கு வெளியே கூட்டிச்செல்லப்பட்ட உயரமான சிறுவர்களை வைத்து, அந்த வளவுக்குள்ளேயே பொலீஸார் ஒரு விளையாட்டை நடத்தினார்கள். ஒரு சிறுவனைத் தொழுவத்தின் வெளி மைதானத்தில் நிறுத்திவைத்து, பத்து சிறுவர்களை வரிசையில் சென்று அவனது முகத்தில் ஒருதடவை குத்தச் சொன்னார்கள். பத்து குத்துகளையும் சளைக்காமல் வாங்கிக்கொண்டு வலி பொறுத்த சிறுவர்கள், பாறை பிளக்கும் வேலைக்கு அனுப்பப்பட்டார்கள். தொழுவத்தின் பாதுகாப்பிலிருந்த தடித்த தொப்பை விழுந்த மரியோ என்ற பொலீஸ்காரன், அன்று இருள் கவிழ்ந்ததும் ஜூடோவைத் தனது ஜீப்பில் கூட்டிச்சென்றான். இரண்டு மரங்களுக்கு மத்தியில் உயரமாக அமைக்கப்பட்டிருந்த தனது தனி வீட்டிற்கு ஏணி வழியாக ஜூடோவை ஏற்றிப்போனான். ஜூடோவைப் பிரம்புக் கதிரையொன்றில் இருக்க உத்தரவிட்டான். தொழுவத்திலிருந்து மீண்டுவந்த திருப்தி ஜூடோவுக்குக் கண்களில் தெரிந்தது. தனது அறைக்குள் சென்று எடுத்துவந்த சிவப்புநிறக் குளிர்பானத்தை மரியோ, குடுவையொன்றில் ஊற்றி ஜூடோவுக்குக் கொடுத்தான். இதுவரை சுவைத்திராத இனிமையும் குளிர்மையும் சேர்ந்த அப்பானம் ஜூடோவின் தொண்டையின் வழியாகச் சிலிர்த்தபடி இறங்கியது. ஜூடோவின் கண்களில் தெரிந்த திருப்தியை மரியோ ரசித்தான். அவனது கண்களைப் பார்த்து புன்னகை செய்தான். ஜூடோவின் குளிர்ந்த உதடுகளை வருடினான். பின்னர், ஜூடோவின் முன்னால் மரியோ நிர்வாணமாய் எழுந்து நின்றான். அந்த வீட்டிற்குள்ளும் தொழுவத்தைப் போன்ற தடிகளாலான கூடிருந்தது. அது இலைகுழைகளால் மூடிக்கட்டப்பட்ட இருள் கரப்பு. பகலில் வெளியே போகும் மரியோ, ஜூடோவை அந்தக் கூட்டுக்குள் தள்ளிப் பூட்டிவிட்டான். மாலை வேளைகளில் வந்து ஜூடோவுக்குக் குளிர்பானத்தைக் கொடுத்தான். அவன் முன்னால் எழுந்து நின்றான். ஜூடோவின் குறியைத் திருகி, அவன் கதறியபடி கெஞ்சுகின்ற கண்களைப் பார்த்து ரசித்தான் மரியோ. ஒருநாள் காலை மரியோ எழுந்திருக்கவில்லை. இருண்ட கூட்டுக்குள் அங்குமிங்கும் தனது உடலைப் புரட்டி ஒலியெழுப்பிய ஜூடோவுக்கு எதுவும் புரியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு வெளியே வாகனச் சத்தங்கள் கேட்டன. படுக்கையில் பிரேதமான மரியோவின் உடலைப் பொலீஸார் எடுத்துப்போனார்கள். கூட்டுக்குள்ளிருந்து சத்தமிட்ட ஜூடோவை அச்சத்தோடு திறந்து பார்த்த பொலீஸார் அதிர்ச்சியானார்கள். துப்பாக்கிப் பிடியால் அடித்து வெளியில் இழுத்துப் போட்டார்கள். அவனை விலங்கிட்டுத் தங்களது ஜீப்பில் தூக்கி ஏற்றினார்கள். மரியோவைப் புதைக்கும்போது அதனை ஜூடோ நேரில் கண்டான். அந்தப் பிரேதக்காட்டில் பணிபுரிபவனிடம் ஜூடோவை விட்டுச்சென்ற பொலீஸார், பிறகு வந்து வேறிடத்துக்கு மாற்றுவதாகச் சொன்னார்கள். ஜூடோ அங்கு எட்டு வயதுவரை பிரேதங்களைப் புதைக்கும் தொழிலைச் செய்தான். காட்டின் வேலியைத் தாண்டுவதற்கு அவன் எக்கணமும் எண்ணியதில்லை. பிரேதங்களோடு வருகின்ற பொலீஸார் கொடுக்கின்ற பழங்களையும் கிழங்குகளையும் தனது ஓலைக்கொட்டிலில் உள்ள பெட்டியில் போட்டுவைத்துத் தின்றான். ஒருநாள் தனது கணவரின் பிரேதத்தைப் புதைப்பதற்காக உயர் பொலீஸ் அதிகாரி ஒருவரின் மனைவி பிரேதக்காட்டுக்கு வந்தாள். அவளைப் பார்த்த ஜூடோ மிரண்டான். நீண்ட ஆடையோடு வந்த வெள்ளைத்தோலுடைய அந்தப் பெண்மணி கையுறைகள் அணிந்திருந்தாள். இதுவரை பார்த்திராத அந்த உருவம் ஜூடோவைத் தொந்தரவு செய்தது. பிரேதக்குழிக்கு அருகில் நின்று ஜூடோ அவளையே பார்த்தான். அவள் விம்மிய சத்தம், ஜூடோ இதுவரை கேட்டிராத புதிய ஒலியாக அவன் காதுகளில் ஒழுகி நுழைந்தது. அந்தப் பெண், தன்னை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் யாரென்று பொலீஸாரிடம் கேட்டாள். பிறகு, தன் கணவரின் நினைவாக ஜூடோவைத் தன்னோடு அமெரிக்காவுக்குக் கொண்டுவந்தாள். 5 தனது இரண்டு குழந்தைகளோடும் ஜூடோவைப் பாடசாலைக்கு அனுப்பினாள் ஒலிவியா. ஜூடோவின் மனம் நிச்சயம் மாறும் என்று நம்பினாள். அவனது கடந்தகாலங்களில் கணிசமானவற்றை மறக்கச் செய்தாள். ஜூடோ ஒழுங்காகத் தூங்கி எழுந்தான். மாத்திரைகளின் வழியாகப் பழைய நினைவுகளின் வேர்கள் அறுக்கப்பட்ட ஜூடோ, பாடசாலை சென்று வந்தான். ஒலிவியாவின் அன்பும் அரவணைப்பும் அவனைப் பரிதாபத்தின் வழியாகவே தீண்டிக்கொண்டிருந்ததால் வருடங்கள் போகப் போக அந்த அன்பு அவனை மேலும் சிதைத்தது. அவனது தலைதாழ்ந்த பாடசாலை வாழ்க்கையைப் போதைப்பொருட்கள் மீட்டன. அவனுக்குள் கேட்ட கூச்சல்களுக்கு அது விடையளித்தது. நிமிர்ந்து நடந்தான். வீடு அவனுக்கு அந்நியமானது. அச்சத்தில் ஒலிவியா தனது இரண்டு பிள்ளைகளோடு வேறொரு நகரில் சென்று குடியேறினாள். போதைச் சரைகளுக்குப் பணமில்லாத ஜூடோ, திசைக்கொரு திருட்டுக்களில் ஈடுபடுவது பொலீஸாருக்குத் தெரியவந்தது. தேடுவதற்குச் சிறப்புப் படையமைக்குமளவுக்கு ஜூடோ நியூயோர்க் வீதிகளில் பிரபல குற்றவாளியாக மிளிர்ந்தான். சுற்றி வளைக்கும்போதெல்லாம், பொலீஸிடமிருந்து தப்பியோடுவதில் ஜூடோ மிகத் தேர்ந்தவனாக, நகரின் எல்லாப் பாதைகளையும் கால்நுனியில் அணிந்திருந்தான். திடமேறிய ஜூடோவுக்குப் புறநகரிலுள்ள “ஸ்னெய்ல்ஸ்” களியாட்ட விடுதி பல தேவைகளுக்கு இரவில் நிழல் கொடுத்தது. வயதான பெண்கள் அதிகம் வருகின்ற அந்த விடுதி, வார இறுதிகளில் போதையில் தள்ளாடும். அங்கு வந்த பெண்களுக்கு ஜூடோவின் சரீரம் இளமையை மீட்டுக்கொடுத்தது. அங்கு ஜூடோவின் நடமாட்டத்தை அறிந்த பொலீஸார் ஒருநாள் அவனைக் காரொன்றுக்குள் நிர்வாணமாக வைத்து மடக்கினார்கள். விலங்கிட்டுக் கொண்டுசென்றபோது, ஜூடோ பொலீஸ் துப்பாக்கியைப் பறித்து ஒருவனைச் சுட்டுவிட்டு இருட்டுக்குள் பாய்ந்து மறைந்தான். பொலீஸ் கொலையாளி ஜூடோவின் படங்கள் நியூயோர்க் நகரெங்கும் விநியோகிக்கப்பட்டன. கண்டவுடன் தகவல் தரும்படி பொதுமக்களிடம் உதவி கோரப்பட்டது. ஜூடோவின் பின்னணியைப் படிக்கத் தொடங்கிய அமெரிக்கப் பொலீஸ், ஒலிவியாவிடம் சென்று விசாரணை செய்தது. ஆஸ்திரேலிய பொலீஸாருக்கும் தகவல் அனுப்பியது. ஒரு விடிகாலை வேளை “ஸ்னெய்ல்ஸ்” விடுதிப்பக்கமாக உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் சிகரெட்டு வாங்குவதற்கு, தலையில் குல்லா அணிந்தபடி வந்த ஜூடோவைக் காலில் சுட்டுப்பிடித்தார்கள் பொலீஸார். கொலைக்குற்றசாட்டுடன் சிறையில் அடைக்கப்பட்டான். பதினைந்து வருடங்களாக அரிசோனா நீதிமன்றில் நடைபெற்ற ஜூடோ மீதான வழக்கில், இறுதியில் அவனைக் குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி, மரணத் தண்டனை வழங்கித் தீர்ப்பெழுதினார். 6 கிறிஸ்துமஸ் இரவுணவின்போது ரொக்ஸியிடம் தனது கதையைக் கூறிய நான்காவது நாள், ஜூடோவுக்குரிய மரணத் தண்டனை உறுதியானது. கைதிகள் அனைவரும் அவரவர் அறைகளில் பூட்டப்பட்டிருந்த நள்ளிரவு நேரம், ஐந்தாறு அதிகாரிகள் ஜூடோவின் அறைக்கதவைத் தட்டி எழுப்பினார்கள். சாவு தன்னை நெருங்கிவிட்டதை உணர்ந்துகொண்ட ஜூடோ திருப்தியோடு எழுந்து கதவைத் திறந்தான். அதிகாரிகள் அவனது கை கால்களுக்கு விலங்கிட்டு அழைத்துப்போனார்கள். தரையில் விலங்கு ஊர்கின்ற ஒலி கேட்ட கைதிகள், இருளின் சத்தத்தை கிழித்துக்கொண்டு கத்தினார்கள். அறைக்கதவில் ஓங்கி உதைத்தார்கள். தங்களில் ஒருவனைச் சாவின் மேடைக்கு இழுத்துச் செல்பவர்களை நோக்கிக் கொதிச் சொற்களை உமிழ்ந்தார்கள். கண்ணாடி அறையொன்றிற்குள் அழைத்துச் செல்லப்பட்ட ஜூடோவை மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்தார். அவனைச்சுற்றி நின்றுகொண்டிருந்த அத்தனை அதிகாரிகளுக்கும் அச்சத்தில் விழிகள் சரிந்திருந்தன. சாவை ஏற்றுக்கொள்பவனின் கண்களை உலகில் எவரால்தான் எதிர்கொள்ள முடிந்தது! அந்தக் கணம் ஜூடோவின் அருகில் நின்றுகொண்டிருந்த அத்தனை அதிகாரிகளும் அவனது கைதிகள்போல உணர்ந்தனர். விருப்பமான கடைசி உணவை சிறைச்சாலை அதிகாரிகள் கேட்டார்கள். சிவப்புநிறக் குளிர்பானம் மாத்திரம் ஒரு குவளையில் தந்தால் போதும் என்றான் ஜூடோ. திடீரெனத் தூக்கத்திலிருந்து எழுந்த ரொக்ஸி தடித்த சிறைக்கண்ணாடிகளுக்கு வெளியே செந்நிறப் புதிய ஒளிக்கோளமொன்றைச் சில கணங்கள் கண்டான். அது வீசிய கசங்கிய ஒளி, விட்டுவிட்டுத் தன் அறைக்குள்ளே வெளிச்சம் சிந்திவிட்டு அணைவதை உணர்ந்தான். இறுக்கிக் கட்டப்பட்ட படுக்கையில் ஜூடோவுக்கு நச்சு ஊசி செலுத்தப்பட்டது. செவிகளை வருடிய ஆதிக்குரலொன்று தாலாட்டாய் தொடர்ந்து. ஜூடோவின் விழிகள் சிவந்து தழும்பியது. வலபிப் புற்களுக்கு நடுவிலிருந்து ஜூடோவை அவனது அன்னை அணைத்தெடுத்தாள். வானமில்லாப் பெருவெளியில் எறிந்து பிடித்தாள். ஜூடோ சிரித்தபடி அவள் கைகளில் விழுந்தான். அவனது தடித்த கன்னமெங்கும் மெல்லக் கடித்து முத்தம் வைத்தாள். ஜூடோ மெய்கூசிப் பெரிதாகச் சிரித்தான். பாபரா தன் கைகளெங்கும் குருதிகொட்ட ஜூடோவை மீண்டும் தன் கருவறையில் புதைத்தாள். எங்கும் இருள். கரிய மலர்க் கிடங்குகளில் ஜூடோ எடையற்றுப் புரண்டான். நிர்மலமான புதிய காற்று. தனக்கு மேல் இன்னொரு இதயம் துடிக்க ஜூடோ துயிலடைந்தான். இன்னொரு தொல்குடியை அவர்கள் கொன்றார்கள். https://tamizhini.in/2024/01/17/ஜூடோ/
  20. ஆ... ஆ... ஆ.... அஸ்கு புஸ்கு அமால் டுமால்!! நீங்க 9ஆவது பக்கத்துக்கு ட்ரை பண்ணுறீங்க!!! இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை பாஸ். இதை கேட்டு சந்தோசமா இருப்போம் பாஸ்.
  21. நேற்று சிம்பாவே அணிக்கு எதிரா விளையாடின‌ த‌மிழ‌ன் ஷ‌ருய‌ன் ச‌ன்முக‌னாத‌ன் மிக‌ சிற‌ப்பாக‌ விளையாடினார் பெடிய‌னுக்கு கிரிக்கேட்டில் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு இன்னும் சிற‌ப்பாக‌ விளையாட‌ வாழ்த்துக்க‌ள்.............. ......
  22. அழகான படம். வாழ்த்து தெரிவிக்கிறார்களா இல்லை ஆளை ஆள் கும்பிடுகிறார்களா?
  23. நான் பிறந்து தவழ்ந்து வளர்ந்த இடம். இதைப் பற்றி கேட்க வேண்டும் என எண்ணிக் கொண்டு கீழே வாசிக்க தம்பியைப் பற்றி எழுதியுள்ளீர்கள். அந்தநேரம் என்ன மனநிலையில் இருந்திருப்பீர்கள் என்பது புரிகிறது.
  24. அப்படி எல்லாம் சும்மா விட்டிடு போக முடியாது பாருங்கோ. இது யாருடையும் அப்பன் வீட்டு சொத்து இல்லை பாருங்கோ. இனி நடக்கபோறதை பார்க்கத்தான் இருக்குது. 😜
  25. அப்ப தமிழனுக்கு விடிவு இல்லை தேர்தலில் தோத்தால் அரசியலை விட்டு விலகி இருப்பது தான் நியாயம் சுமத்திரன் பேய் இன்னும் கட்சிக்குள் இருக்குமாம் நல்லது நடக்க வாய்ப்பே இல்லை.மறுபடியும் குழப்ப அரசியல்தான். பின்னால் நின்று ரணில் சொல்ல சொல்ல சுமத்திரன் நாட்டியம் ஆடுவார் .கடைசியில் தமிழ் தேசியத்தை உடைப்பார் .
  26. முகநூல் கருத்துக்களை யாழ் ஆதராமாக எடுத்துகொள்வது இல்லை . எனது கோரிக்கையும் அதுதான் .
  27. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலை கை விடும் என நான் நினைக்கவில்லை.மனிதாபிமானம் இல்லாமல் சுய மரியாதைக்காக ஆயுதங்களை கையிலெடுப்பவர்கள் இவர்கள். எனது கணிப்பில் நடிக்கின்றார்கள் அவ்வளவுதான். ஏனெனில் போகும் வரும் இடமெல்லாம் தோல்வியில் துவண்டு போயுள்ளனர் அதனால் தான் ஏதோ ஒரு மாற்று வழியை தேடுகின்றனர். இந்தா அடுத்த அமெரிக்க ஜெனாதிபதி டொனால்ட் ரம்ப் எண்டு இப்பவே புறு புறுக்க வெளிக்கிட்டுட்டாங்கள்.... அந்த மனிசனும் இந்தா 24 மணித்தியாலத்திலை பிரச்சனையளை முடிக்கிறன் எண்டு சவால் வேற விடுறார்....😂 காசா போரும் அமெரிக்க தேர்தல் வெற்றியை தீர்மானிக்கப்போகின்றது. எனவே இன்னும் பல நாடகங்கள் மேடையேறும்.
  28. யாழ்கள உறுப்பினர்கள் out of touch ஆக இருக்கினம்! ஆனால் எல்லாம் தெரிந்தவர்களாக காட்டுவதில் விண்ணர்கள்!😜
  29. ஆள் தான் மாறியுள்ளதே ஒழிய அங்கை எந்தக் கொப்பையும் வெட்டி விழுத்தப் போவதில்லை. அதே பழைய பல்லவி தான் இவரும் பாடப் போறார்.
  30. வாழ்த்துக்கள் சிறிதரன் அவர்களே. தமிழ் மக்களின் இக்கட்டான நிலையில் தமிழ் மக்களையும் ஏனைய கட்சிகளையும் ஒற்றுமையாக்க கடுமையாக உழைக்க வேண்டிய தருணம் இது. சுமந்திரன் அவர்கள் தொடர்ந்தும் தமிழரசு கட்சியுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இந்தியாவை விட்டு சுயமாக செயற்பட்டால் தமிழ் மக்களுக்கு வாழ்வுண்டு.
  31. இன்று ரணில் செய்வதை பார்த்தும் நீங்கள் திருந்தவில்லை. நாட்டின் தலைவரே IMF இன் சொல் கேட்டு ஆடும் நிலையில் மக்கள் எம்மாத்திரம்? ஆனால் நாடு இந்த நிலைக்கு வந்ததற்கு காரணமானவர்களை நீதிமன்றம் அறிவித்தும் ஒன்றும் செய்யாது உள்ளார்.
  32. அதனை இந்தியாதான் தீர்மானிக்கும். யாப்பு எல்லாம் ஒரு பிரச்சினை இல்லை.
  33. காயும் பழமுமாய் கண்கவர் வண்ணங்களுடன் கண்சிமிட்டும் காதலி.......! 😂
  34. சீனியின் சிறப்பியல்புகளில் ஒன்று அது எதனுடன் கூட்டுச் சேர்ந்தாலும் மூலப்பொருளின் சுவையை மாற்றுவதில்லை என நினைக்கிறேன். இந்தச் சிறப்பியல்பு பிற சுவையூட்டிகளுக்கு இல்லை. . விற்பன்னர்கள் மேடைக்கு வரவும்.
  35. அது சரி இலங்கை காண்ப்பித்த. இராசதந்திரம் யாது ?? பண்டா- செல்வா டல்லி -செல்வா என்பன கிழித்து எறிந்தா?? அல்லது இலங்கை -இந்தியா ஒப்பந்தம் அமுல் செய்யாமல் விட்டதா?? சொன்ன சொல் தவறியவர்களுடன் எப்படி இராசதந்திரம். செய்யலாம் இராசதந்திரத்துக்கு முதல் தேவை நம்பிக்கை நம்பிக்கை அற்ற. இலங்கை உடன். இராசதந்திரம். கடைபிடிக்க முடியாது உலகில் 23 முஸ்லிம் நாடுகள் உண்டு ??? ஆனால் உலகில்…………… எத்தனை தமிழ்நாடுகள் உண்டு” ஒன்றுமில்லை எனவே… முஸ்லிம் போல் தமிழர்கள் இலங்கையில் நடந்து கொள்ள முடியாது காரணம் பாதுகாப்பு இல்லை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு உண்டு”
  36. யாழ்ப்பாணத்துக்கான எனது பயணத்தின் ஒற்றை நோக்கமே சித்தியைப் பார்ப்பதும், அவருடன் ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்களைச் செலவிடுவதும் தான். ஆனால், அது சாத்தியப்படாது என்பது அவருடனான முதலாவது சந்திப்பிலேயே என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவரால் அதிகம் பேச முடியவில்லை. அவரது உடல்நிலை அதற்கு இடம்கொடுக்கவில்லை. அதற்கு மேலாக, அவரை அவரது அறையிலிருந்து வெளியே அழைத்துவருவதற்கு அவருக்கு உதவி தேவைப்பட்டது. பிறரை எந்தவிதத்திலும் சிரமப்படுத்தக் கூடாது என்று நினைப்பவர் அவர், ஆகவே தன்னைப் பார்க்க வருவோரிடத்தில் நீங்கள் அலைக்கழிய வேண்டாம், இடைக்கிடை வந்தால்ப் போதும் என்று கூறியிருக்கிறார். அடுத்தது, மிகுந்த பலவீனமான நிலையில் இருப்பதால் அவரால் ஓரளவிற்கு மேல் சக்கர‌நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்துகொள்ளவும் முடியாது. 30 - 40 நிமிடங்களுக்கு மேல் அவரால் அங்கிருப்பதே கஸ்ட்டமாகத் தெரிந்தது. அவரைப் பார்ப்பதற்காகவே நான்கு நாட்கள் யாழ்ப்பாணத்தில் நிற்க முடிவெடுத்திருந்தேன். எனது மொத்தப் பயணத்தினதும் காலம் வெறும் 7 நாட்கள்தான். ஒவ்வொருநாளும் போய் அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாதென்று நினைத்தேன். இடையில் இருக்கும் இரண்டு நாளில் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று ஒரு ஆசை. 1988 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முதலாக யாழ்ப்பாணத்தின் தெருக்களில் யாழ்ப்பாணத்தவர்களில் ஒருவனாகச் சுற்றப்போகிறேன் என்பதே மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன் என்று தெரியவில்லை, திடீரென்று முழிப்பு வந்தது. நேரம் 5 மணிதான். இனித் தூங்க முடியாது, மைத்துனரோ நல்ல நித்திரை. அக்குடும்பத்தில் ஆறுபேர். பாடசாலைக்குச் செல்வோர், வேலைக்குச் செல்வோர் என்று அனைவருமே காலை வேளையில் அவசரப்பட்டு ஆயத்தப்படுவார்கள். ஆகவே, அவர்களின் நேரத்தை வீணடிக்காது, சிரமம் கொடுக்காது எனது காலைக் கடன்களை முடிக்க எண்ணினேன். அதன்படி 5:30 மணிக்கு குளித்து முடித்து வீட்டின் வரவேற்பறையில் இருந்த கதிரையில் அமர்ந்தபடி நேற்றைய உதயனைப் படிக்கத் தொடங்கினேன். மைத்துனரின் வீட்டில் இருந்த ஒரு சில நாட்களில் என்னைக் கவர்ந்த இன்னொரு விடயமும் இருக்கிறது. அருகில் இருக்கும் சிறிய கோயிலில் இருந்து காலை 5:45 மணிக்கு மணியோசையும் அதனைத் தொடர்ந்து ஒலிக்கும் சுப்ரபாதமும். அமைதியான அந்தக் காலை வேளையில், மனதிற்கு ஆறுதலைத் தரும் அந்த இசையயைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். இருந்த மூன்று நான்கு நாட்களில் அதனை முற்றாக அனுபவித்தேன். இந்த அமைதியும், பரவசமும் எங்கும் இல்லை. ஏனையவர்கள் ஒருவர் பின் ஒருவராக எழத் தொடங்கினார்கள். மைத்துனரின் மனைவி சுடச் சுட கோப்பி கொடுத்தார். அருந்திவிட்டு மாமியோடும் மைத்துனரோடும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருக்க காலையுணவு வந்தது. அவர்கள் என்னைக் கவனித்துக்கொண்ட விதம் அருமை. தமது வீட்டில் ஒருவனாக என்னையும் நடத்தியது பிடித்துக்கொண்டது. நிற்க, முதலாவது நாளில் நான் சந்தித்த முக்கியமான இன்னொருவரைப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன். நண்பனுடன் யாழ்ப்பாணத்தைச் சுற்றி வந்துகொண்டிருக்கும்போது, ராசா அண்ணையைப் (நண்பனின் மூத்த சகோதரர், எனக்கும் நெருங்கிய நண்பர்) பற்றிக் கேட்டேன். "இருக்கிறாரடா, பாக்கப்போறியோ?" என்று கேட்டான். "உங்களுக்கு நேரமொருந்தால்ப் போகலாம்" என்று நான் கூறவும், ராசா அண்ணையைப் பார்க்க ஆரியகுளத்திற்கு வாகனத்தை ஓட்டினான். ராசா அண்ணை சற்று மெலிந்து காணப்பட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரிலும் சிறிய மாற்றங்கள். ஆனால் அதே புன்சிரிப்பும், அன்பான வார்த்தைகளும். சில நிமிடங்கள் ஆளையாள் சுகம் விசாரித்துக்கொண்டோம். "உங்களைப்பற்றிச் சிறிய கதையே எழுதினேன் அண்ணை" என்று நான் கூறியபோது, "என்னைப்பற்றி எழுத என்ன இருக்கிறது?" என்று கூறிச் சிரித்தார். சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தார். உரும்பிராயில் இருக்கும் சபரிமலை ஆலயத்திற்கு தனது வேலைத்தளத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனுடன் போகவிருந்தவரை நாம் நிறுத்திவைத்துப் பேசிக்கொண்டிருந்தோம். சுடச்சுட கோப்பியும் வடையும் கொடுத்தார். அதிகநேரம் அவரைக் காத்திருக்க வைக்க விரும்பவில்லை. "நான்கு நாட்கள் நிற்கிறேன், இன்னொருநாள் வந்து ஆறுதலாகப் பேசலாம்" என்று கிளம்பி வந்துவிட்டோம். சரி, பழையபடி இன்றைய நாளுக்கு வரலாம், ஒரு 7:30 - 8 மணியிருக்கும். நண்பன் தொலைபேசியில் வந்தான். "மச்சான், இண்டைக்கு என்ன பிளான் உனக்கு?" என்று கேட்டான். "ஒண்டுமில்லை, சில நண்பர்களைப் பார்க்க வேண்டும். உரும்பிராயில் எனது நண்பர் ஒருவரின் தகப்பனாரைச் சென்று சந்திக்க வேண்டும். இப்போதைக்கு அவ்வளவுதான்" என்று கூறினேன். "சரி, பின்ன வா அக்கராயனுக்குப் போவம். நானும் கமத்துக்குப் போய் ஒரு மாசமாகுது, ஒண்டு இரண்டு மாத்து உடுப்பும் கொண்டுவா, அங்க இண்டைக்கு இரவு நிண்டு வருவம்" என்று கூறினான். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. நண்பன் அடிக்கடி அக்கராயனில் உள்ள கமம் பற்றிப் பேசியிருக்கிறான். கொழும்பில் இருந்த காலங்களில் கமத்திலிருந்து வருவோரைக் கண்டு நான் பேசியிருக்கிறேன். ராசா அண்ணையும், நண்பனும் அக்கராயன் பற்றி அந்நாட்களில் பேசும்போது நானும் அங்கிருந்திருக்கலாம் என்றும் எண்ணியிருக்கிறேன். அந்த அக்கராயனைக் காணச் சந்தர்ப்பம் இப்போது வந்திருக்கிறதென்றால் எனது மகிழ்ச்சிபற்றிக் கேட்கவும் வேண்டுமா? இந்த அக்கராயன் பற்றிக் கூறவேண்டும். வன்னியில் இருக்கும் பச்சைப் பசேல் என்கிற விவசாயக் கிராமங்களில் ஒன்று அக்கராயன். 13 ஆம் நூற்றாண்டில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களைக் கலைத்துவிட்டு இப்பகுதியை தமிழ் மன்னனான அக்கராயன் ராசன் ஆண்டுவந்ததால் இதனை அக்கராயன் என்று அழைக்கிறார்கள். 70 ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் தங்கி நின்று விவசாயம் செய்வதற்கு பொதுமக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. கமம் செய்வதற்கு 10 ஏக்கர்களும், வீடுகட்டி தோட்டம் செய்வதற்கு 5 ஏக்கர்களும் என்று மொத்தமாக 15 ஏக்கர்கள் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தன. அக்காலத்தில் இலங்கையிலிருந்து மலேசியாவுக்கு வேலை நிமித்தம் சென்று வாழ்ந்தவர்கள் நாடுதிரும்பத் தொடங்கியிருந்தார்கள். அவ்வாறு மலேசியாவிலிருந்து நாடுதிரும்பிய நூறுபேருக்கும் அக்கராயனில் இந்த 15 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. அப்படி மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பங்களில் ஒன்று எனது நண்பன் ஜெயரட்ணத்தின் குடும்பமும். அவர்கள் பிற்காலத்தில் இன்னும் பல நிலங்களைப் பணம் கொடுத்தும் வாங்கியிருந்தார்கள். அவர்களின் குடும்பத்திற்கு மட்டுமே இப்பகுதியில் கிட்டத்தட்ட 90 ஏக்கர்கள் நிலம் சொந்தமாக இருக்கிறது. அக்கராயனில் ஜெயரட்ணத்தின் குடும்பத்தாரின் காணிகள் இருக்கும் பகுதியை ஊடறுத்து ஒரு அழகான சாலை செல்கிறது. வன்னியில் இருக்கும் மிகவும் ரம்மியமான சாலைகளில் முதன்மையானது அது. அப்பகுதிக்குச் சென்று அதனைக் காட்சிப்படுத்தாத யூடியூப் பதிவாளர்கள் இல்லையென்று சொல்லுமளவிற்கு மிகவும் பிரபலமானது. அதற்கான காரணம் இந்தச் சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்து பாதையினை மூடிக் குடைபோல காத்துநிற்கும் மரங்களும், சாலையின் ஒருபுறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் தெரியும் பச்சைப் பசேல் என்ற வயற்காணிகளும் மறுபுறம் தெரியும் தென்னை மற்றும் கமுகு மரத் தோட்டங்களும்தான். இச்சாலையினைப் பலர் சொர்க்கத்தின் வாசற்படி என்று கூறவும் கேட்டிருக்கிறேன். இதில் விசேசம் என்னவென்றால், சாலையை அணைத்து வளர்ந்து நிற்கும் மரங்களை வைத்தது வேறு யாருமல்ல, அதே ராசா அண்ணைதான். சுமார் 600 மீட்டர்கள் தூரத்திற்கு சாலையின் இருபக்கமும் இந்த மரங்களை அவர் நட்டிருக்கிறார். 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானபோது, நாட்டிற்கு அமைதி திரும்பிவிட்டதாக நினைத்து பலர் நற்காரியங்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். அப்படி இறங்கியவர்களில் ஒருவர் ராசா அண்ணை. அக்கராயனில் தமது கமம் இருந்த பகுதியூடாகச் செல்லும் சாலையின் இரு பக்கத்திலும் மரங்களை அவர் நட்டார். அவ்வாறு நட்டுக்கொண்டுவருகையில் இந்தியா ராணுவம் எம்மீதான தாக்குதலைத் தொடங்கியிருந்தது. இந்திய வல்லாதிக்கம் வன்னியை ஆக்கிரமித்த காலத்திலும் ராசா அண்ணையின் மர நடுகை தொடர்ந்து நடந்துவந்தது. அப்படியான‌ ஒரு நாளில் ராசா அண்ணையை இந்திய ராணுவம் தாக்கியது. புலிகள்மீதான ஆத்திரம் வீதியில் மரம் நட்டவர் மீது பாய்ந்தது. ஆனால், அவர் அன்று செய்த இந்த நற்காரியத்தின் பலனை இன்று அப்பகுதி மக்களும், அப்பகுதிக்கு வருவோரும் அனுபவிக்கிறார்கள். தனது நோக்கம் கனகபுரத்திலிருந்து அக்கராயன் முழுவதற்குமான வீதியின் இரு புறத்திலும் மரங்களை நடுவதுதான் என்று அண்மையில் கூறியிருந்தார். அவரது முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.
  37. பெண்மைக்கு மரியாதை தந்த காளை .......என்னா ஒரு அறிவு......! 🙏
  38. அம்பிகா அக்கா தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக இருக்கின்றாரா என்று தெரியவில்லை! அவர் மனிதாபிமானப் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபடுகின்றார். இப்போது சிறிலங்காவின் யுக்திய நடவடிக்கைக்கு எதிராக தினமும் X (ருவிற்றரில்) பொங்கிக்கொண்டு இருக்கின்றார்.! அம்பிகா அக்கா தமிழரசுக் கட்சியின் தலைவராக வரும்போது நானும் வேலையில் இருந்து நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு தமிழர் பகுதிகளில் போஸ்ரர் ஒட்டுகின்ற வேலையாவது செய்வேன்😃
  39. Life on planet earth · Suivre · Un chêne âgé de 800 ans
  40. இவன் யாரை தனது எதிரியென்று சொல்கிறான்? தமிழ் மக்களையோ? தமிழினத்திற்குத் துரோகம் இழைத்து, எதிரியுடன் நின்று தமிழர்களையே ஆயிரக் கணக்கில் கொன்றாயே, அந்தத் தமிழர்களையா சொல்கிறாய்? இன்னுமாடா உன்னை தமிழ்ச் சனம் நம்பும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?
  41. உங்கள் ஒப்புவமை நன்றாக இருந்தது ஐயா.
  42. அகதியாகப் புலம்பெயர்ந்த பெற்றோர், தமது பண்பாட்டு வாழ்வியலை இழந்த சூழலிற் பிள்ளைகளை ஆளாக்கி எடுக்கப்படும்பாடு புலத்திலே வாழும் அனைவரும் அறிந்ததே. மனித வாழ்வில் காதல் ஒரு அர்த்தமுள்ளதாகவும், அன்பின் வழிப்பட்டதாகவும் இருந்தகாலம் ஒன்று இருந்தது. இன்று அந்தநிலை இருப்பதாகத் தெரியவில்லை. காதலிக்கும்போதே, அன்பு ஒரு கட்டத்தில் அடக்குமுறையாக மாறுகிறது. சில காதல் திருமணம்வரை போய்ப் பின்னர் அது மணமுறிவில் போய் நிற்கிறது.(தற்கொiயாளி) அவர் முன்பே சில காதல் முறிவுகளுக்குட்பட்டவர் என்பதாற் கொல்லப்பட்டவர் விரும்பாது கூறிவிட்டு விலத்தி நடந்துள்ளார். அதனை ஏற்காது தொடர்சியாகப் பின்தொடர, அது காவற்றுறைவரை சென்று தண்டனையும் பெற்றிருக்கிறார் என அறியமுடிகிறது. இங்கே காதலால், காதல் முறிவால் நடந்திருப்பது ஒரு கொலையும், தற்கொலையுமாகும். (பெண்ணின்) கொலையுண்டவரின் முறைப்பாட்டாற் தற்கொலை செய்துகொண்டவர் நீதித்துறையால் தண்டிக்கப்பட்டுள்ளார். தற்கொலையாளி வெளியே வந்தகாலத்தில் ராகவி வீட்டில் குடும்ப நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது. அவ்வேளை தொடர்புகொண்டு இதுதான் உனது கடைசிக்கொண்டாட்டம் என்றும் எச்சரித்துள்ளார். காதல் முறிவை ஏற்காத மனநிலையில், அது பழிவாங்கும் மனநிலையாக மாறிக் கொலையிலும்,தற்கொலையிலும் போய்முடிந்திருக்கிறது. இரண்டு குடும்பங்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன என்பது எவளவு துயரமானது என்பதை மனங்கொள்ள வேண்டியது அவசியமாகும். குமுகாய நோக்கு நிலையில் இது ஒரு பெரும் அவலமான சூழல். புலத்திலே தமிழர் நிறுவனங்கள் விடுதலை மற்றும் தமிழ் கற்பித்தலுக்கப்பால் குமுகாயம் தொடர்பான ஊடாட்டமின்மையும் இந்தத் தேய்வுநிலைக்குக் கரணியமாகும். ஒருபுறம் திருமணத்தில் ஆர்வமின்மை மறுபுறம் மாற்றுபால் திருமண வளர்ச்சி வீத அதிகரிப்பு. அத்தோடு, அதன் மீதான ஒருவகைப் புதுமைக் கவர்ச்சியும் உள்ளமை நோக்குதற்குரியதாகும். மனித வளர்ச்சியும், அறிவியல் வளர்ச்சியும் உலகை இன்று பல்வேறு வகைமைகளுள் நகர்த்திவருகின்ற சூழல் அது இயற்கையா, செயற்கையா என்பதற்கப்பால் தவிர்க்க முடியாத நிலையை உலகம் எட்டிவிட்டது. இதிலே ஒருபால் விருப்போ, இருபால் விருப்போ, முப்பால் விருப்போ நாடுகளும்; மக்களும் படிபடிப்படியாக மாற்றம் பெற்று வருகின்றனர். மேலைநாடுகளில் மட்டுமல்ல, பண்பாட்டில் மேலோங்கிய நாடெனப்படும் இந்தியாவிலும்(மறைமுகமாக)குழுநிலைப் பாலியல் செயற்பாடுகள் அரங்கேறுகின்றன. நாளை இதுகூடச் சட்டமாகலாம். பின் வெளியே போன கணவனோ, மனைவியோ வரும்வரை காத்திருக்கும் நிலை தோன்றினாலும் ஆச்சரியப்பட முடியாது. சட்டங்களுக்குள் உடல் கட்டுப்படுகின்ற நிலையில் இல்லைத்தானே. ஆனால், அவர்களது வாழ்வியல் மற்றும் பண்பாட்டு நெறிமுறைகளின் வழியாகவும், அரசுகள் மற்றும் அரச நிறுவனங்கள் சட்டமெனும் சட்டகங்கள் வழியே வழிநடாத்தப்படுதல் வழியாக மனிதர்கள் கட்டுப்படுகிறார்கள் என்பதே உண்மை. ஒருபாலினச் சேர்க்கையை உலகம் நாடுகளெதும் தாமாக முன்வந்து அறிமுகப்படுத்திய பொறிமுறையல்ல. மக்களிடையே ஆங்காங்கே மறைவாக நடைபெற்ற விடயத்தைத் தடுத்தபோது எழுந்த கொந்தளிப்புகளே பின்னாளில், அங்கீகாரமாகிச் சட்டமாக்கி அதற்கொரு குமுகாய ஏற்புநிலையைப் பெறவைக்கப்பட்டது. ஐ.நா. சபையில் அங்கத்துவம் வகிக்கும் 193இற்கு மேற்பட்ட நாடுகளைக் கொண்ட உலகில், 35நாடுகள் மட்டுமே ஒருபாலினச் சேர்க்கையை அங்கீகரித்துள்ளன. எனவே இது உலகம் தானாக முன்வந்து கொண்டு வந்த பொறிமுறையென்றோ அல்லது உலகம் தோன்றியது முதல் உள்ளதாகவோ கருதமுடியாது. குமுகாய நோக்கு நிலையிற் பார்த்தால் ஓருபாற் திருமணங்கள் இனத்துவ அழிவுக்கும், மனிதர்களின் சுயவிருப்பின் நிறைவுக்கும்(உலகினது தனிமனித சுதந்திரத்தை அனுபவித்தல்) பாலியற் துணைப்பொருள் உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் துணைபுரியலாம். இந்த நிறுவனங்களே ஊக்குவிக்கும் நிலையும் உள்ளது. இரு தமிழ்க் குடும்பங்களின் அவலமான சூழலை, அதனது அர்த்தபரிமாணத்தில் நோக்குதலே பொருத்தமானது. காதல் ஏற்பும் மறுப்பும் உயிரிழப்புகளில் முடிந்கிறது என்பது நோர்வே போன்ற வளர்ந்த நாட்டின் கல்விப்புலத்திலே பயின்றவர்களில் ஒருவர் கொலைவரை சென்றிருப்பது எப்படி? குழந்தைகளைக் கண்டித்தாலே வந்து காவிச்சென்றுவிடும் நோர்வே அரச நிறுவனங்கள் இந்த அவலங்களைத் தடுக்கவும் முயல வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.