Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    8910
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts
  3. விளங்க நினைப்பவன்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    4336
    Posts
  4. பசுவூர்க்கோபி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    505
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/25/24 in all areas

  1. வல்லை வெளியிலிருந்து நெல்லியடி நோக்கி ஓடிக்கொண்டிருந்தது மினிபஸ். வழியெங்கிலும் நான் சைக்கிளில் ஓடித்திருந்த இடங்கள். அன்றைய தென்னோலையினாலும், பனையோலையினாலும் வேயப்பட்ட பதிவான கூரைகளைக்கொண்ட பழைய பலசரக்குக் கடைகளும், சைக்கிள் திருத்தும் நிலையங்களும் மறைந்துவிட்டன. வீதியின் இருமரங்கிலும் சீமேந்தினால் கட்டப்பட்ட கடைகள் முளைக்கத் தொடங்கியிருந்தன. மூத்தவிநாயகர் கோயில் புதிய வர்ணத்தால் பூசப்பட்டு அழகாகக் காட்சியளித்தது. நாவலர் மடத்திலிருந்து நெல்லியடிச் சந்திவரையான பகுதி நன்றாக அபிவிருத்தியடைந்திருந்தது. புதிய கடைகள், வங்கிகள் என்று சுறுசுறுப்பான பகுதியாக மாறியிருந்தது. நெல்லியடிச் சந்தியில் என்னை இறக்கிவிட்டார்கள். "இறங்கின உடனே ஓட்டோவில ஏறிப்போடாதை, கனக்கக் காசு சொல்லுவாங்கள். மகாத்மா தியெட்டர் மட்டும் நடந்துவந்து அங்கையிருந்து ஓட்டோ பிடி" என்று சித்தி கூறியது நினைவிற்கு வரவே நடக்கத் தொடங்கினேன். கடைவீதிகளில் சனம் அலைமோதியது. யாழ்ப்பாணத்திற்குப் பிறகு அதிக சனநடமாட்டம் உள்ள பகுதிகளில் நெல்லியடியும் ஒன்றென்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு ஐந்து அல்லது ஆறு நிமிட நடையில் மகாத்மா தியெட்டருக்கு அருகில் வந்தாயிற்று. வரிசையாக நின்ற மூன்று ஓட்டோக்களில் முதலாவதாக நின்றவரிடம் "உச்சில் அம்மண் கோயிலடிக்குப் போக எவ்வளவு எடுப்பீங்கள்" என்று கேட்டேன். சாரதிக்கு 35 வயதிருக்கும். வலதுகை மணிக்கட்டுடன் வெட்டப்பட்டிருந்தது. இடதுகையினால் ஓட்டோவைச் செலுத்திவருகிறார் போலும். "உச்சில் அம்மண் கோயிலுக்குக்கிட்டவோ அல்லது அதுக்கு முதலோ?" என்று கேட்டார். சித்தியின் பெயரைச் சொன்னபோது புரிந்துகொண்டார். "ஏறுங்கோ அண்ணை, 400 ரூபா தாங்கோ" என்றார். வழியில் பேசிக்கொண்டே போனோம். கையில் என்ன நடந்தது என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே, "நான் முன்னாள்ப் போராளியண்ணை, தீபன் அண்ணையின்ர குறூப்பில இருந்தனான். சண்டையில் கை போட்டுது. முகாமில இருந்து வெளியில வந்துட்டன். உங்கட தம்பி (சித்தியின் மகன்) எங்களோட‌ கொஞ்சக்காலம் இருந்தவர்" என்று கூறினார். இறுதிப்போர்க்கால நிகழ்வுகள் சிலவற்றை அவர் சொன்னபோது வலித்தது. மிகுந்த அன்புடன் அவர் பேசியது பிடித்துப்போயிற்று. என்னைப்பற்றிக் கேட்டார். 2018 இற்குப்பிறகு இப்போதுதான் வருகிறேன் என்று கூறினேன். பேசிக்கொண்டே வீடு வந்தோம். ஆயிரம் ரூபாயைக் கொடுத்தேன். "சில்லறை இல்லையோ அண்ணை?" என்று கேட்க‌, "மிச்சம் வேண்டாம், வைச்சுக்கொள்ளும்" என்று சொன்னபோது, நன்றியண்ணை என்று சொன்னார். அவரின் கதையினைக் கேட்கும்போது அழுகை வந்தது. இவ்வாறானவர்களையல்லவா நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்? என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். இவர்போல் இன்னும் எத்தனைபேர் எமது சமூகத்தில் இருக்கிறார்கள்? எம்மை நம்பியல்லவா எமக்காகப் போராடப் போனார்கள்? இன்று அவர்களின் நிலையென்ன? அவரை வழியனுப்பி வைத்துவிட்டு அம்மம்மாவின் வீட்டினுள் நுழைந்தேன். எனது வருகையைப் பார்த்துக்கொண்டிருந்த சித்தி, "ஓட்டோவுக்கு எவ்வளவு குடுத்தனீ?" என்று கேட்டார். "நானூறு கேட்டு ஆயிரம் குடுத்தேன்" என்று கூறினேன். "உனக்கென்ன வருத்தமே? ஏன் அவ்வளவு குடுத்தனீ?" என்று கேட்க, "இல்லை, அவர் முன்னாள்ப் போராளி சித்தி, கையும் இல்லை, பாவமாக் கிடக்கு" என்று கூறவும் அவர் அடங்கிவிட்டார். அம்மாவின் வீட்டின் பெயர் இராணி இல்லம். அதற்கொரு காரணம் இருக்கிறது. எனது அம்மாவுடன் சேர்த்து ஆறு பெண்களும் இரண்டு ஆண்களும் குடும்பத்திலிருந்தனர். எல்லாப்பெண்களுக்கும் இராணி என்ற சொல்லில்த் தான் பெயர் முடிவடையும். அன்னராணி, செல்வராணி, புஷ்ப்பராணி, யோகராணி, இதயராணி, கலாராணி என்று ஆறு ராணிகள். அதனால், ஐய்யா (அம்மாவின் தகப்பனார்) 1960 இல் அவ்வீட்டைக் கட்டும்போது இராணி இல்லம் என்று பெயர் வைத்துவிட்டார். அந்நாட்களில் அப்பகுதியில் கட்டப்பட்ட வீடுகளில் விசாலமானதும் அழகானதுமாக அவ்வீடு இருந்தது. கொழும்பில் எனது குடும்பம் வாழ்ந்த காலத்தில் மார்கழி விடுமுறைக்கு அங்கு வந்து தங்குவோம். எம்மைப்போன்றே யாழ்ப்பாணத்திற்கு வெளியே வாழ்ந்துவந்த அம்மாவின் சகோதரர்களும் அதேகாலப்பகுதியில் விடுமுறைக்கு வருவார்கள் அம்மம்மாவின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று பெரும் பட்டாளமே அவ்வீட்டில் நிற்கும். அம்மம்மாதான் எல்லோருக்கும் கட்டளை வழங்குவது. பாடசாலை ஆசிரியரான அவர் இயல்பாகவே கண்டிப்பானவர். ஆனால், அன்பானவர். வீட்டில் உள்ள சின்னக் கிணற்றில் துலாமரத்தினால் அள்ளிக் குளிப்பது ஒரு சுகம். மாமா எல்லாச் சிறுவர்களையும் வரிசையில் இருத்திவைத்து குளிக்கவைப்பார். "உனக்கு மூண்டு வாளி, எனக்கு நாலு வாளி" என்று போட்டி போட்டு மாமாவிடம் வாங்கிக் குளிப்போம். கடைசி வாளியை வார்க்கும்போது "சுகம், சுகம், சுகம்" என்று சொல்லிக்கொண்டே வார்ப்பார். ஏனென்றால், குளிர்தண்ணியில் குளிப்பதால் வருத்தம் ஏதும் வந்துவிடக்கூடாதென்பதற்காக அப்படிச் சொல்வது வழமையாம். அப்படியிருந்த வீட்டில் இப்போது சித்தி மட்டும் ஒற்றை ஆளாக வாழ்ந்துவருகிறார். அன்றிருந்த கலகலப்பும், மக்கள் கூட்டமும் அற்றுப்போய் வெறிச்சோடி அமைதியாகக் கிடந்தது எங்கள் அம்மாமாவின் வீடு. சிறுவயதில் வீட்டின் விறாந்தையில் இருந்து விளையாடிய இடங்களை ஆசையுடன் தொட்டுப்பார்த்தேன். மழைகாலத்தில் கப்பல்விட்டு விளையாடிய முன் விறாந்தை, பின்முற்றத்தில் பரந்து விரிந்து வளர்ந்து அப்பகுதியெங்கும் இலைகளையும் மாம்பிஞ்சுகளையும் கொட்டும் கிளிச்சொண்டு மாமரம் என்று ஒவ்வொரு இடத்தையும் மனம் தேடிப் பார்த்துக்கொண்டது. விறாந்தையில் போடப்படிருந்த வாங்கில் அமர்ந்தபடியே சித்தியுடன் பேசினேன். அவரை இறுதியாக 2022 புரட்டாதியில் அவுஸ்த்திரேலியாவில் பார்த்தேன். திருமண நிகழ்வொன்றிற்காக வந்திருந்தார். ஆகவே, சிட்னியில் இருக்கும் குடும்பங்கள் குறித்து நலம் விசாரித்தார். பின்னர் ஊர்க்கதைகள் மேடைக்கு வந்தன. ஒரு இரண்டு மணிநேரமாவது பேசியிருப்போம், "குளிச்சுப்போட்டு வா சாப்பிடுவம்" என்று கூறவும் பழைய நினைப்பில் கிணற்றில் துலாவினால் அள்ளிக் குளிக்கலாம் என்று போனால் துலாவைக் காணோம். "எங்கே சித்தி துலா?" என்று நான்கேட்க, "இந்தவயசில என்னால துலாவில அள்ளிக் குளிக்க ஏலுமே? உள்ளுக்கை வக்குக்கட்டியிருக்கிறன், மோட்டர் போட்டால் தண்ணிவரும், அங்கை போய்க்குளி" என்று சொன்னார். அங்கிருந்த வெய்யில்ச் சூட்டிற்கும், வியர்வைக்கும் குளிரான நீரில் அள்ளிக் குளித்தது உடலுக்கு மிகுந்த புத்துணர்ச்சியைத் தந்தது. ஆசைதீரக் குளித்தேன். குளித்து முடிந்து வந்ததும், அருகில் வசிக்கும் இன்னொரு சித்தியும் இணைந்துகொள்ள மதிய உணவு உட்கொண்டோம். சித்தியின் சமையல் அசத்தலாக இருக்கும். கோழி, ஆடு, கத்தரிப்பொரியல், இறால்ப்பொரியல், பருப்பு என்று அட்டகாசப்படுத்தி வைத்திருந்தார். பசியொரு புறம், அவரது சமையலின் சுவை இன்னொருபுறம் என்று ஆகிவிட இருமுறை போட்டுச் சாப்பிடாயிற்று. மாம்பழம் வெட்டிவைத்திருந்தார். அதையும் ருசித்தாயிற்று. தொடர்ந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். "இண்டைக்கு இங்கதானே நிற்கிறாய்?" என்று சித்தி கேட்கவும், "இல்லைச் சித்தி உங்களையும் மற்றச் சித்தியையும் கூட்டிக்கொண்டு சிஸ்ட்டர் அன்ராவைப் பாக்கப் போயிட்டு, நீங்கள் திரும்பி வாங்கோ, நான் யாழ்ப்பாணத்திலை நிற்கிறன்" என்று சொன்னேன். அவருக்கு அது அவ்வளவாக மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. "ஏன், நிக்கிறன் எண்டுதானே சொன்னனீ? இப்ப ஏன் இல்லையெண்டுறாய்?" என்று மீண்டும் கேட்டார். "இல்லைச் சித்தி, நாளைக்கு வன்னிக்குப் போறதெண்டு நெய்ச்சிருக்கிறன். இங்க நிண்டுட்டு நாளைக்குக் காலையில யாழ்ப்பாணம் போய் பிறகு வன்னிக்குப் போறதெண்டால் நேரம் காணாது. அடுத்த‌நாள் கொழும்புக்கும் போறன், குறை நெய்க்காதேங்கோ" என்று கூறினேன். அதன்பிறகு, "உன்ர" விருப்பம் என்று விட்டுவிட்டார். மாலை 4:30 மணிக்கு சித்தியின் வீட்டிற்கு அருகில் சொந்தப் பாவனைக்கென்று ஓட்டோ ஒன்றினை வைத்திருக்கும் நண்பர் ஒருவரை எம்மை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டோம். நண்பர் ஆதலால் யாழ்ப்பாணம் போய்வர 3500 ரூபாய்கள் மட்டுமே கேட்டார். நியாயமான விலைதான். கடும் மழை பெய்யத் தொடங்கியது. முன்னால் செல்லும் வாகனத்தைப் பார்க்க முடியாதளவிற்கு மழை. ஓட்டோவின் இருபக்கத்திலும் இருந்த ரப்பர் சீலையினை சாரதி இறக்கிவிட்டார். மெதுமெதுவாக யாழ்ப்பாணம் நோக்கிய எமது ஓட்டோப் பயணம் ஆரம்பித்தது. வழிநெடுகிலும் அவருடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டு வந்தேன். நான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்பதால் இடங்கள் குறித்து எனக்கு அவ்வளவாகத் தெரியாது என்று நினைத்திருக்கலாம். ஆகவே, வழியில் பலவிடங்களின் பெயர்களைக் கூறிக்கொண்டு வந்தார், நானும் தெரியாவர் போல்க் கேட்டுக்கொண்டு வந்தேன். ஊரில் உள்ள பிரச்சினைகள், அரசாங்கம், இளைஞர்கள் என்று பலவிடயங்கள் குறித்துக் கூறினார். கலியாணக் கொண்டாட்டங்கள், வெளிநாட்டுக் காசு படுத்தும் பாடு என்றும் அலசப்பட்டன. சித்திமார் இருவரும் அமைதியாக இருக்க நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே வந்தோம்.
  2. வாழ்வு தந்தவள் இவளே! ***************************** எழில் கொஞ்சும் மலைகள் தந்தாய் ஏர் பூட்ட வயல்கள் தந்தாய் பயிர் வளர மழையும் தந்தாய் பார் சிறக்க பல்லுயிர்கள் தந்தாய். அழகான அருவி தந்தாய் அகிலம் சுற்றி கடலும் தந்தாய் எரிகின்ற தீயும் தந்தாய் இளவேனிற் காற்றும் தந்தாய். உயர்வான வானம் தந்தாய் உருண்டோடும் மேகம் தந்தாய் வளமான காடு தந்தாய் வலிமைமிகு மரங்கள் தந்தாய். சூரியன்,மதியும் தந்தாய் சுதந்திர பறவைகள் தந்தாய் கடல் நிறைந்த உயிர்கள் தந்தாய் கரையோரம் காட்சிகள் தந்தாய். கலர்,கலராய் மலர்கல் தந்தாய் கண்குளிர பலவும் தந்தாய் இரவு பகல் எமக்குத் தந்தாய் எம் வாழ்வு சிறக்கத் தந்தாய். இத்தனையும் தந்த உன்னை மறக்கலாமோ? இடையில் வந்த பணத்தின்பின் ஓடலாமோ? செத்தபின்பும் செயற்கை என்றும் வருவதில்லை சிறந்த இந்த இயற்கை எம்மைப் பிரிவதில்லை. அன்புடன் -பசுவூர்க்கோபி. 17.01.2024
  3. 5:30 மணியளவில் பாசையூரை அடைந்தோம். ஆட்டோச் சாரதியை வீதியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு சிஸ்ட்டர் அன்ராவை பார்க்க கட்டடத்தின் உள்ளே நுழைந்தோம். எங்களை விருந்தினரை வரவேற்கும் அறையில் அமரச் சொல்லிவிட்டு அவரை சில நிமிடங்களின் பின்னர் அழைத்து வந்தார்கள். என்னுடன் வந்த மற்றைய இரு சித்திகளும்கூட சிஸ்ட்டர் அன்ராவை பல மாதங்களுக்குப் பிறகுதான் காண்கிறார்கள். ஆகவே, அவருடன் இருந்து பேச ஆரம்பித்தோம். ஒவ்வொருவராக எங்களிடம் விபரங்களைக் கேட்கத் தொடங்கினார் அவர். சில விடயங்களைப் பற்றிப் பேசியபோது அவருக்கு அதுகுறித்த நினைவுகள் எதுவும் இருக்கவில்லை. ஆகவே, முதன்முறையாகக் கேள்விப்படுவதுபோல‌ நாம் கூறியவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர பேச்சில் ஈடுபடும் ஆர்வம் நேரம் செல்லச் செல்ல குறைவடைவது தெரிந்தது. சிறிது நேரத்திற்குப் பின்னர் என்னுடன் வந்த சித்திமாருடன் நான் பேசிக்கொள்ள சிஸ்ட்டர் அன்ரா அமைதியாக எங்கள் மூவரையும் பார்த்துக்கொண்டிருந்தார். ஏன் அமைதியாகவிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சிரிப்பைத் தவிர வேறு பதில் இல்லை. எனக்குப் புரிந்தது. அவரால் தொடர்ந்து அங்கே இருக்க முடியவில்லை. சரி, அவருக்கு இனிச் சிரமத்தைக் கொடுக்கக் கூடாது என்று எண்ணிவிட்டு, "உங்களை நாளைக்கு வந்து சந்திக்கலாமா?" என்று கேட்டேன். "ஏன், இண்டைக்குத்தானே வந்தனீர், ஏன் நாளைக்கும்?" என்று அவர் கேட்கவும், "அவன் நாளண்டைக்கு அவுஸ்த்திரேலியாவுக்குப் போயிடுவான் , இனி எப்ப வாறானோ தெரியாது. வந்து ஒருக்கால் பயணம் சொல்லிப்போட்டுப் போகட்டுமன், ஏன் வேணாம் எண்டுறீங்கள்?" என்று ஒரு சித்தி கூறவும், "அப்ப சரி, பின்னேரம் 5 மணிக்குப்பிறகு வாருமன்" என்று சொன்னார். அவரது நிலை எனக்குப்புரிந்தது. கன்னியாஸ்த்திரியாக இருந்த காலத்தில் க.பொ.த சாதாரண‌ தரம் வரை கணித ஆசிரியராக பல பாடசாலைகளில் பணிபுரிந்தவர். கற்பித்தல் முடிவடைந்த காலத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணம் திருக்குடும்பக் கன்னியாஸ்த்திரிகள் மடத்திற்குப் பொறுப்பாக இருந்தவர். மத நிகழ்வுகள், மக்கள் பணிகள், உளநலச் சேவைகள் என்று மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றியவர்.தேசியத்தின்பால் மிகுந்த பற்றுக்கொண்ட அவர் வன்னியில் போயிருந்து பல கிராமங்களில் புலிகளின் மருத்துவப் பிரிவு மற்றும் பொதுமக்கள் மனோவியல் சேவைகள் போன்றவற்றில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டவர். சி - 90 எனப்படும் மோட்டார் சைக்கிளில் எப்போதும் சுறுசுறுப்பாக வலம்வரும் அவர் தன்னால் நடக்க இயலாது போகும்வரை சமூகத் தொண்டில் ஈடுபட்டவர். 2002 இல் புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையே இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது ஏ- 9 பாதை திறப்பு நிகழ்விற்காக இவரும் சென்றிருந்தார். ஆக, சமூகத்திற்காக இடைவிடாது தொண்டாற்றி, பலருக்கும் உதவிய தன்னால் இன்று தன்னைத்தானே பார்த்துக்கொள்ள முடியாமல் இருப்பதென்பது கவலையளிப்பதாகவே எனக்குப் பட்டது. தனது சாதாரண கடமைகளைச் செய்யவே இன்னொருவரின் உதவி தேவைப்படும் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீழ்ந்து ஏற்பட்ட காயத்தினையடுத்து பிறரின் உதவியுடனேயே கட்டிலில் அமரவும், எழுந்துகொள்ளவும், சக்கர நாற்காலியில் தன்னை ஏற்றி இறக்கவும் முடிகிறது என்றகிவிட்டபோது, தன்னைப் பார்க்க வருபவர்களை அடிக்கடி வரவேண்டாம் என்று அவர் கோருகிறார் என்பதும் புரிந்தது. ஆகவேதான் இன்று மாலையும் வந்துவிட்டு நாளையும் வரப்போகிறேன் என்று நான் சொன்னபோது அவரை அறியாமல் "ஏன்" என்று கேட்டுவிட்டார் என்பதையும் புரிந்துகொண்டேன், ஆகவே, முடிந்தால் வருகிறேன், இல்லையென்றால் தொலைபேசியில் அழைக்கிறேன் என்று கூறிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்று கிளம்பினோம். வெளியில் இன்னமும் மழை பெய்துகொண்டிருந்தது. எமக்காகக் காத்துநின்ற ஓட்டோச் சாரதியுடன் மீண்டும் பேச்சுக்கொடுத்துக்கொண்டே ஆரியகுளம் நோக்கிப் பயணமானோம். ஆரியகுளத்தை அடைந்ததும் சித்திமார் இருவருக்கும் பயணம் சொல்லி வழியனுப்பி வைத்துவிட்டு கண்ணாதிட்டியில் அஅமைந்திருக்கும் மைத்துனர் வீட்டிற்கு நடக்கத் தொடங்கினேன். மழை இன்னும் மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. நாளை வன்னிநோக்கிய பயணம் என்று மனம் சொல்லிக்கொண்டது.
  4. பனிக்குளிரின் நடுவே தனது உடற்சூட்டை முட்டைகளுக்கு கொடுத்து உபவாசம் இருக்கும் தாய்மை ........! 🙏
  5. திட்டமிட்டு கொலை செய்யும் கொடூர கொலையாளிகளுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும், குழந்தைகள் மீது பாலியல் வல்லுறவு செய்யும் மிருகங்களுக்கும், ஒரு தலைமுறையையே சீரழிக்கும் போதை வியாபாரிகளுக்கும் கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்கப்படல் வேண்டும். இதில் எந்த கருணையும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
  6. அது தான் உண்மையும். புட்டின் கொள்ளையடித்து சொத்து சேர்த்ததை மறைத்து தன்னை ஒரு ரஷ்ய மக்களின் பாதுகாப்பாளராக நடகமாடி தனது நாட்டு ரஷ்ய மக்களை ஏமாற்றுகின்றார். அவர்களில் ஒரு பகுதியினரும் மேற்குலக தீய சக்திகளிடம் இருந்து தங்களை காப்பாற்றி பாதுகாக்கும் அற்புதமான புட்டின் என்று நம்பி ஏமாறலாம், ஆனால் இந்த ஈழதமிழர்க்கு எதிராக இலங்கையின் நண்பன் இந்த புட்டினை மேற்குலகில் மேன்மையான வாழ்க்கை அமைத்து கொண்டவர்கள் புட்டினின் ஊழல் சொத்து குவிப்பை நியாயபடுத்துவது உலக பேரதிசயம். பில்லியன் கணக்கில் கொள்ளையடித்து சொத்து சேர்த்த புட்டினை நியாயபடுத்துவதற்காக ஒவ்வொரு தனிமனிதன் கூட அவர் போன்று செய்வதாக சொல்கின்றனர்.
  7. மாவீரர் நாள் வளைவு கிளிநொச்சி மாவீரர் நாள் நினைவு இடம் அக்கராயன் மாவீரர் கொட்டகை கிளிநொச்சி உயர்ந்த மரம், அக்கராயன் ஜெயரட்ணத்தின் விருந்தினர் வீட்டின் வாய்க்காலின் மேலான சீமேந்துக் கட்டு
  8. படம் 1,2 & 3 : அக்கராயன் சாலையும் ஓரத்தில் சோலையும் படம் 4 : அக்கராயம் கமம் படம் 5 : அக்கராயன் தென்னந்தோட்டம்
  9. படம் 1 ‍& 2 பண்ணைப் பாலத்தின் கரை படம் 2 : நல்லூர் முருகன் கோவில் இரவு வெளிச்சத்தில் படம் 3 & 4 : நாவற்குழி கேரதீவு மன்னார் வீதி படம் 5 : மாவீரர் நாள் அலங்காரம் படம் 6: கார்த்திகை விளக்கீடு ஜெயாவின் வீட்டில் படம் 7 : வெள்ள‌டியான் சண்டை சேவல் படம் 8 :அக்கராயன் விருந்தினர் விடுதி படம் 9 : கரவெட்டியில் அம்மம்மா வீடு
  10. நான் இறுதியாக ஊருக்குச் சென்றது 2018 இல். எனது சித்தியைப் பார்ப்பதற்காக அன்று சென்றிருந்தேன், கூடவே குடும்பமும். சித்தியைப் பற்றி முதல் ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். 1988 இல் எனது தகப்பனாரின் கொடுங்கரங்களிலிருந்து என்னை மீட்டு மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றவர். தன்னால் முடிந்தவரையில் எனக்கு உணவும், உறையுளும், கல்வியும் தந்தவர். அன்னைக்கு அடுத்த தானத்தில் இருப்பவர். என்மேல் உண்மையான அக்கறை கொண்டவர். ஆகவே, அவரது உடல்நிலை ஓரளவிற்கேனும் நல்லநிலையில் இருக்கும்போது பார்த்துவிட்டு வரலாம் என்கிற எண்ணத்தில், அதுவரை எனது 16 ஆண்டுகள் அஞ்ஞாதவாசத்தைக் கலைந்து சென்று வந்தேன். அந்தப் பயணம் பற்றி அதிகம் கூற எதுவும் என்னிடத்தில் இல்லை. சித்தியை ஊர்காவற்றுறையில் இருந்து அவர் இருந்த யாழ்ப்பாணம் கன்னியாஸ்த்திரிகள் மடத்தில் இருமுறை சென்று சந்தித்தோம். ஒரு சில நினைவுகளைத் தவிர பல நினைவுகளை அவர் தொலைத்திருந்தார். ஆனால், உடல் ஓரளவிற்குத் தாக்குப் பிடித்துக்கொண்டிருந்தது. அதிகம் பேசவில்லை. என்னையும் குடும்பத்தையும் நீண்டநேரம் பேச்சின்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரைச் சென்று சந்தித்ததைத் தவிர அப்பயணத்தில் குறிப்பிடும்படியாக பல விடயங்கள் இருக்கவில்லை. எனது அன்னையின் இன்னும் மூன்று தங்கைகளை யாழ்ப்பாணத்தின் கரவெட்டி மற்றும் கொழும்பின் கம்பஹ ஆகியவிடங்களில் சென்று பார்த்தேன். எவருமே அதிகம் பேசவில்லை. சிலவேளை எனது குடும்பத்தை முதன்முதலில் பார்ப்பதால் வந்த சங்கோஷமாக இருக்கலாம். அவர்களை விடவும் நான் சந்தித்த வெகு சிலரில் எனது நண்பன் ஜெயரட்ணமும் அவனது சகோதரர் ராசா அண்ணையும் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்கள் பற்றியும் முன்னர் எழுதிவிட்டேன். அங்கிருந்த இரு வாரங்களில் மன்னாருக்கு ஒருநாள் சென்றுவந்தோம். இன்னொருநாள் காங்கேசந்துறைக்கும் கரவெட்டிக்கும் பயணம் இருந்தது. இடையில் நுவரெலியாவுக்குப் போனோம். குளிர், இதனைத்தவிர வேறு எதுவும் மனதில்ப் பதியவில்லை. நான் விரும்பிய இடங்களையும், மனிதர்கள் அனைவரையும் சந்திக்கும் சுதந்திரம் எனக்கு இருக்கவில்லை. பிள்ளைகளை விட்டு வெளியே செல்ல முடியாது, அவர்களும் வெளியே வரப்போவதில்லை. சித்திரை வெய்யில் காய்த்தெடுக்க வீட்டிலேயே இருந்துவிட்டார்கள். மேற்குநாட்டு வளர்ப்பு என்று கூறுவீர்கள், இருக்கலாம். என்னைப்போன்று இங்கிருந்து செல்லும் அனைத்துப் பெற்றொரும் முகம்கொடுக்கும் கேள்விகள் இவை, அதில் தவறுமில்லை.
  11. யாழ்ப்பாணம் வந்தாராம் ரணிலார் சோக்கான கதை எல்லாம் சொன்னாராம் சேர்ந்து பல பேருடன் நின்று செல்பியும் எடுத்தாராம் நல்லவன் போல நடிப்பார் நாம் நினைப்பது போல அவர் இருக்கார் அது தருவன் இது தருவன் என்றாராம் அவர் அருகோட நின்று தலை ஆட்டிப் பொம்மைகள் தாளங்கள் போட்டாராம் அவர் சொன்னதை செய்வார் என்றும் சொன்னாராம் போன சுதந்திரத்துக்கு முன் ஏதோ தருவன் என்றாராம் இந்த சுதந்திரத்தோட என்னதான் தருவாராம் எல்லாமே மறந்தாராம் எதுகுமே பேசாராம் நம்புங்கள் ரணிலை நல்லது நடக்கும் என்றாராம் சேர்ந்து தாளம் போடும் சில சில்லறை மனிதர் தந்திரக்கார ரணிலார் தான் ஒரு சமாதான காரன் போல் காட்டியும் நடிப்பார் புலம் பெயர் தமிழரை கூப்பிடப் பார்ப்பார் குள்ள நரி போல கள்ளத் தனமாக காரியம் முடிப்பார் அபிவிருத்தி என்றெல்லாம் பேசி அரசியல் தீர்வை மறக்கவும் செய்வார் அறிவோட தமிழ் இனம் இப்போ ஆழமாய் சிந்திக்க வேண்டும் பேரினவாதத்தில் என்றும் இப்போ பெரிதாய் மாற்றங்கள் வராது இந்தியா சொன்ன 13 ம் தீர்வுக்கும் எந்தப் பதிலும் இதுவரை இல்லை இதக் கூட தராத ரணிலார் பின்ன எதக் கூடத் தருவார் வடக்கு கிழக்கு என்று இனி வலம் வருவார் தேர்தல் வருகிறது திரும்பவும் வருவார் தீர்வு வரும் ஆனால் வராது என்றனர் மக்கள். பா.உதயன்✍️
  12. செல்லம்மாப்பாட்டி. (சிறுகதை) செல்லம்மா பாட்டிக்கு வாடிக்கை யாளர்கள்ரஎல்லாம் சின்னப் புள்ளைங்க தான் காலங்காத்தால அஞ்சுமணிக்கி அடுப்புப்பத்தவைச்சி குழிப்பணியாரம் இட்லி சூடா பாசிப்பருப்பு சாம்பார் தேங்காசட்ணி காரச்சட்டிணியோட தெருவோரத்துல கடைபோட்டுருக்கும் சின்னபுள்ளக கொடுவாய் கூடக்கழுவாம தூக்குபோணியும் காசுமா வந்து நிக்கும் அப்பத்தா எனக்கு ரெண்டு இட்லி மூணுபணியாரம்ன்னு. அவுகளோட அம்மா மாருக செலபேரு கூட வருவாக செலபேரு புள்ளகிட்ட குடுத்து விட்டுருவாக. பல்லக் கூடவெளக்காம பிள்ளக பணியாரம் வாங்க வந்துடும். சின்னபுள்ளகளுக்காகவே காரமில்லாத சாம்பார் சட்டிணி இருக்கும் காரசாரமா வேணுங்குறவுக காரச்சட்டிணி சுள்ளுன்னு தனியா இருக்கும் வாங்கிக்கலாம். அம்புட்டும் அம்புட்டு ருசியா இருக்கும் வீட்டுல எல்லாராலயும் தெனம் இட்லி சுடமுடியாது. பச்ச புள்ளகளுக்கு செல்லம்மா இட்லிக்கடைதான் கைகொடுக்கும். அதேமாதிரி வயசானவுகளும் வந்து பக்கத்துல ஒக்காந்து சுடச்சுட வாங்கிச்சாப்புடுவாக ரம்சான் மாசத்துல மாத்திரம் சாயங்காலமும் கடை தெறக்கும் பாட்டி. நோம்பு தொறக்குற நேரத்துல இட்லி பணியாரம் மொத்த மொத்தமா வாங்கிட்டுப்போவாக பாய் மாருக அதேபோல மசூதிக்கும் வாங்கிட்டுப்போயி எல்லாருக்கும் வாசல்ல தானமாக் குடுப்பாகஅப்ப எல்லாம் நல்ல வருமானம் பாட்டிக்கு ஆனா என்ன மாவாட்டி இடுப்பு ஒடஞ்சுபோயிடும். அப்பெல்லாம் கிரைண்டர் வரல . எல்லாம் கைலதான் ஆட்டனும் பாய்மாருக விசேசத்துக்குக் கூட வீட்டுல போயி இட்லி வடை பணியாரம் செஞ்சுகுடுக்கும். நல்லா கவனிப்பாக சேல துணிமணி காசெல்லாம் நல்லா குடுப்பாக. காலையில பத்துமணிக்கு வியாபாரம் முடிச்சிட்டு காசக் கொண்டுபோயி நாடார்கடைல மொதநா வாங்குன அரிசி பருப்பு உளுந்து காய்கறிக்கெல்லாம் காசக்குடுத்துட்டு அன்னிக்கி வேணுங்குறத வாங்கிட்டு வரும் பாட்டி. அப்புறம் ஊரைவைச்சிட்டு சாயங்காலமா மாவாட்டும். கடையிலயே நெலவரத்தைபாத்துட்டு சோறுவடிக்கும் இட்லி பணியாரம் மீந்துபோச்சுன்னா அதுதான் அன்னிக்கிசாப்பாடு பாட்டிக்குக் மகனுக்கும் பாட்டி அவரோட புருசன் போனதில இருந்து இதை வைச்சித்தான் பொழப்பு ஓட்டுச்சு அவ்வளவு செரமத்துலயும் மகன மாவாட்ட விடாது. அதுதான் ஆட்டும். ஒடம்பு கிடம்பு அதுக்கு சரியில்லாமபோச்சுன்னா கடை தொறக்காது. சின்னபுள்ளக சாப்புடுறது ஒட்டுவாரொட்டி மாதிரி புள்ளைகளுக்கு நோவு ஒட்டிக்கிடும்னு சொல்லும் . பாட்டி கடதொறக்கலைன்னா சின்ன புள்ளகள அவுக அம்மா மார்களால சமாதானப்படுத்த முடியாது இந்தகஸ்டத்துலயும் மகன நல்லாப் படிக்கவைச்சாங்க பாட்டி. அவனும் நல்லாபடிச்சி நல்ல வேலைக்கிப்போனான் வேலைக்கிபோனதும் அவன் செஞ்ச மொதவேலை கடையமூடும்மா. நீ கஸ்டப்பட்டது போதும்ன்னு சொன்னான். அதுக்கு பாட்டிசொல்லிச்சி வருமானத்துக்காக கடை வைச்சோம்தான். ஆனா அதைவிட முக்கியமானது அந்த சின்னபுள்ளக வயிறு ரொம்புறது. அந்த பாக்கியம் எல்லாருக்கும் கெடைக்காதுன்னு சொல்லுச்சு. அவனும் வேறவழியில்லாம கிரைண்டர் மிக்ஸி யெல்லாம் வாங்கிக்குடுத்தான். கடை ஓடிச்சி. அப்பத்தான் கலியாணம் பேசுச்சு பாட்டி மகனுக்கு. ந்ல்ல இடம் கெடச்சது. அவங்கபோட்ட ஒரே கண்டிசன் இட்லிக்கடைய மூடனும்றது இப்ப பாட்டியால ஒண்ணும் சொல்ல முடியல ஒத்துகிச்சி. கலியாணத்துக்கு மொதநாளு பெரிய விருந்து . விருப்பம்போல உணவு அதான் பப்பெட் சாப்பாடு . பொண்ணுவீட்டுல இருந்து ஏற்பாடு பண்ணிருந்தாக. பாட்டி மகன் கிட்ட ஒண்ணே ஒண்ணு கேட்டுச்சு. அந்த விருந்துல ஓரமா இட்லியும் பணியாரமும் வைக்கனும் அத நாந்தான் செய்வேண்ணு சொல்லிடுச்சு. அவனும் வேற வழியில்லாம ஒத்துக்கிட்டான் விருந்தும் ஆரம்பிச்சிச்சு. விருந்துக்கு வந்த இவன் கூட வேலபாக்குறவுக சாம்பிளுக்கு சாப்பிட ஆரம்பிச்சு. அடாடா விருந்து அப்ப அப்ப நடக்குறதுதான் . பாட்டி இட்லி பணியாரம் வித்யாசமா .ரொம்ப நல்லாருக்கேன்னு சாப்பிட ஆரம்பிச்சு....வந்தவுகல்ல பாதிப்பேருக்குமேல இட்லி பணியாரம் பக்கம் வந்துட்டாக சீக்கிரமே தீந்துபோச்சு. விருந்துக்கு வந்தவுகளெல்லாம் இதைப்பத்தியே பேசுனாக பாட்டிக்கு ரொம்பச்சந்தோசமாஆச்சு. அங்க வந்திருந்த ஒரு முக்கிய பிரமுகர் சொன்னாரு. செஞ்ச தொழில மறக்காம இருக்குறது பெரிய விசயம். ஏன்னா செய்யிற தொழில்ல ரொம்ப புண்ணியம் தாரது இதுதான் அதுல கவுரவக்கொறச்சல் ஏதுமில்ல. மனசாறப் பாராட்டுறேன்னாரு. இதை ஒருத்தரு யூடுயூப்ல எடுத்து அப்லோடு பண்ணாரு. லைக்கும் கமெண்டும் குவிஞ்சிச்சி. பாட்டிக்கு ரொம்பசந்தோசமா ஆயிடுச்சி. இப்ப சம்பந்திக சொன்னாங்க பாட்டி தாரளமா கடை வச்சிக்கட்டும்னு. சீக்கிரமே பாட்டி இட்லிக்கடை தொறந்துச்சு அப்புடி கொஞ்சநாளு ஓடுச்சு ஒருநா செல்லம்மாப் பாட்டி செத்துபோச்சு அன்னிக்கி கடைதெறக்கல அப்பயும் ரெண்டு சின்னப்புள்ளக தூக்குப்போணியோட கடைக்கிட்ட நின்னுக்கிட்டு இருந்துச்சுக ஒரு அம்மா வந்துசொல்லிச்சு பாட்டி இனிமே கடதொறக்காதுன்னு அதுகளுக்குப்புரியல அதுல ஒண்ணு வீட்டுக்கேபோயிடுச்சு. அங்க எல்லாரும் அழுதுகிட்டு இருந்தாக. எதுக்குன்னு அதுக்குப்புரியல. அதுபாட்டுக்கு பாட்டிகிட்டபோயி பாட்டி எந்திரிச்சி வா வந்து இட்லிகுடு பசிக்குத்துன்னு சொல்லி அழுதுச்சு பாத்தவுக கண்ணு கலங்கிடுச்சு] கவிச்சிகரம் அ.முத்துவிஜயன் சந்திரோதயம் ·
  13. இன்றைய நாட்களில் உலகில் நடந்து கொண்டிருக்கும் கலவரங்களும் மனித இழப்புகளும் விசுகருக்கு அமைதி பூங்காவாக தெரிகின்றதோ?
  14. ஆயுர் வேத சிகிச்சைக்கு வந்ததாகவும் ஒரு செய்தி
  15. நெஞ்சார்ந்த நன்றிகள் அக்கா வரமுடியாமல் போனதிற்கு நானும் வருந்துகிறேன். இலங்கை இந்தியா போய்வந்தேன். நெஞ்சார்ந்த நன்றிகள்.
  16. 1) மோடி பிராமணியத்தை வெட்டி ஒட முயல்கின்றார் ஆனால் அதை பிராமணியம் இப்ப புரிந்து விட்டது....ராமன் சத்திரியன் என்ற வகையில அவரை கடவுளாக காட்ட முயல்கின்றனர் ...ஆனால் ராமரின் சிலையை மோடி தொடமுடியாமல் பண்ணி விட்டனர் ....நாட்டின் பிரதமர் நினைத்தாலும் பிராமணியத்தின் சூழ்ச்சிக்கு தாக்கு பிடிக்க முடியாது.... 2)வலதுசாரிகளும் அதிகாரத்திற்கு வந்த பின்பு இப்ப இடதுசாரிகள் செய்வதைதான் செய்ய போகிறார்கள் .. 3)இரண்டாம் உலக போரின் முடிவில் ஆசியாவின் உள்ள நாடுகளை மத அடிபடையில் பிரித்து அங்கு உள்ள தேசிய இனங்களிடையே இருந்த பூர்வீக மதங்களுக்கு இடையில் வேறு மதங்களை பரவ விட்டு தேசிய இனங்களின் தனித்துவதை சிதைத்து தொடர்ந்து சிதைக்கும் வகையில் காய்களை நகர்த்தி சென்றுள்ளனர் /நகர்த்துகின்றனர். 4)வட ஆபிரிக்கா முதல் இந்தோனேசியா வரை உள்ள இஸ்லாமிய நாடுகள் ஒர் அதிகார சக்தியாக வர முயல்கின்றனர் .....அவர்கள் இஸ்லாத்தை முன்னிறுத்தி துடிக்கின்றனர் .... வரலாறு நம்ம வழிகாட்டி
  17. இளையராஜா முதலில் மனைவியை இழந்தார், இப்போ மகளை இழந்துள்ளார். இந்தத் துயரை தாங்கும் சக்தியை, இறைவன் அவருக்கு கொடுக்க வேண்டும். ஆழ்ந்த இரங்கல்கள். 🙏
  18. எப்படித் தான் விலையேற்றங்கள் ஏற்பட்டாலும் வெளி நாடுகளில் உள்ளவர்களை விட ஊரில் இருப்பவர்கள் விருப்ப பட்டதை அவ்வப்போது செய்து கொண்டே இருக்கிறார்கள்.ஊருக்கு போய் வந்தவர்களிடம் அங்குள்ளவர்களின் வாழ்வு முறை பற்றி கேட்டால் அந்த நாடே வேணாம், இருந்தது போல் நாம் இருக்கும் நாடுகளிலயே வாழ்ந்து விட்டு போவோம் என்ற நிலைப் பாடு தான் மனதில் இருக்கிறது..முதல் நாள் சமைத்த உணவையே மறு நாள் வைத்து சாப்பிட மறுக்கிறார்களாம்.நாம் இங்கு முடிந்தவரை கொட்டுவதை தவிர்க்கிறோம்.சூடாக்கி உண்பதையே நடை முறையில் வைத்திருக்கிறோம்..அப்படி இருக்கையில் ஊரில் செலவீனங்கள் கூடுவதை தவிர்க்க இயலாது தானே.
  19. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ் லின்டோட் பதவி, விண் இயற்பியலாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் நேரம் எல்லோருக்கும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக தான் கடந்து செல்கிறதா? பூமியில் இருக்கும் ஒருவர் விண்வெளிக்கு சென்று ஆறு மாதங்கள் கழித்து திரும்பி வந்தால், அவருக்கு வயது கூடியிருக்குமா? குறைந்திருக்குமா? அல்லது மாற்றமே இருக்காதா? இது போன்ற கேள்விகளுக்கு விடை இல்லாவிட்டாலும், சில விளக்கங்களை அளிக்கிறது ஐன்ஸ்டீனின் சார்பியல் (relativity) கோட்பாடு. அந்த கோட்பாட்டின் படி நேரம் உலகளாவியது அல்ல. அதாவது நேரம் என்பது நிலையான ஒன்று இல்லை, அதில் முன்னும் பின்னும் செல்லக்கூடும், சூழல்களை பொருத்து நேரம் வேகமாகவும், மெதுவாகவும் செல்லக் கூடும். நீங்கள் வேகமாக செல்லும் போது நேரம் மெதுவாக செல்லும் என்று ஐன்ஸ்டீன் சரியாக கூறுகிறார். ஆனால் அதை சிறப்பாக உணர நீங்கள் கருந்துளைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் விண் இயற்பியலாளர் கிறிஸ் லின்டோட். கடிகார சோதனை எனக்கு பிடித்த அறிவியல் சோதனைகளில் ஒன்று உலகத்தை இருமுறை சுற்றி நான்கு கடிகாரங்களை பறக்க விடுவது. (வேகமாக பயணிக்கும் போதும் நேரம் அதே மாதிரி தான் இருக்கிறதா, அல்லது வேகமாகவோ மெதுவாகவோ கடக்கிறதா என கண்டறிய துல்லியமாக மணி சொல்லும் நான்கு கடிகாரங்கள் விமானங்களில் உலகில் கிழக்கிலிருந்து மேற்கும், மேற்கிலிருந்து கிழக்கும் பறக்கவிடப்பட்டன) 1971 ஆம் ஆண்டில், இயற்பியலாளர்கள் ஜோசப் ஹஃபேல் மற்றும் ரிச்சார்ட் கீட்டிங் ஆகியோர் அணு கடிகாரங்களை எடுத்துக் கொண்டனர் - ஒவ்வொரு 30 மில்லியன் ஆண்டுகளுக்கும் ஒரு நொடிக்கும் குறைவாக இழக்கக்கூடியவை , அவ்வளவு துல்லியமான கடிகாரங்கள் அவை. ஒரு வணிக ஜெட் விமானத்தில், முதலில் மேற்கு நோக்கி பின்னர் கிழக்கு நோக்கி உலகம் முழுவதும் சுற்றிப் பயணம் செய்து, பின்னர் வாஷிங்டன் டிசிக்கு அவர்களின் ஆய்வகத்திற்குத் திரும்பினர். அங்கு, அவர்கள் தங்கள் நன்கு பயணம் செய்த நேரக்கடிகாரங்களின் நேரத்தை ஸ்திரமாக இருந்த கடிகாரங்களின் நேரத்துடன் ஒப்பிட்டனர். கடிகார நேரங்கள் ஒத்துப்போகவில்லை: பயணம் செய்வது நேரம் கடந்து செல்லும் வேகத்தை மாற்றியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES 'நேரம் உலகளாவியது அல்ல' நேரம் உலகளாவியது அல்ல என்ற ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டின் ஒரு முக்கிய கொள்கையை சோதிப்பதே இந்த சோதனையின் நோக்கமாகும். நீங்கள் வேகமாக பயணம் செய்தால், நேரம் உங்களுக்கு மெதுவாக கடந்து செல்லும். விளைவு சிறியது தான் - லண்டனிலிருந்து நியூயார்க்கிற்கு கடல் கடந்த விமானத்தில் செல்லும் போது, உங்கள் கடிகாரம் தரையில் இருப்பதை விட, பத்து மைக்ரோநொடிகள் (ஒரு நொடியின் மிக மிக சிறிய அளவு) பின்தங்கியிருக்கும். ஆனால் நீங்கள் வீட்டில் இருப்பதை விட ஒரு பகுதி மெதுவாக வயதாகியிருப்பீர்கள். ஹஃபேல் மற்றும் கீட்டிங் கடிகாரங்களால் நீங்கள் எவ்வளவு வயதாகியுள்ளீர்கள் என்பதை கணிக்க முடியும். வேறு ஒரு கணிப்பு ஈர்ப்பு விசையின் விளைவையும் கூறுகிறது. பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விலகினால், நேரம் வேகமாக செல்லும் என்று அந்த கணிப்பு கூறுகிறது. இது நம் உடல்களையும் பாதிக்கிறது: உங்கள் தலை உங்கள் கால்களை விட சற்று வயதானதாக இருக்கலாம். இதன் விளைவும் மிகவும் சிறியது தான். ஆனால் பூமியிலிருந்து அதிக தூரம் செல்லும்போது, அதன் தாக்கங்களை புரிந்து கொள்ள முடியும். நம் அனைவரையும் வழிநடத்தும் GPS அமைப்பு, அதன் செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 20,000 கிமீ (12,400 மைல்கள்) உயரத்தில், இதை சரியாக செயல்பட கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நிகழ்வுகளையும் மீறி, பூமி ஒரு பெரிய பிரபஞ்சத்தில் ஒரு சிறிய கிரகம்தான். எந்த கிரகத்தின் ஈர்ப்பு விசையையும் விட அதிகமான ஈர்ப்பு விசையை பெற்றிருக்கும் பெரிய பொருள்கள் உள்ளன. அவற்றை கொண்டுள்ள கருந்துளைகளை சுற்றி, இந்த சார்பியல் விளைவுகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. பட மூலாதாரம்,ALAMY கருந்துளைக்குள் பயணம் செல்லலாம் இது ஏன் நடக்கிறது என்று புரிந்து கொள்ள, கருந்துளைக்கு விழுவது போல் கற்பனை செய்துக் கொள்ளுங்கள். (கருந்துளைக்கு அருகில் செல்லும் போது அதன் அதீத ஈர்ப்பு விசை காரணமாக பொருட்கள் ஒரு பக்கமாக நீட்டப்படும். ஆனால், நீங்கள் அப்படி நடைபெறாத வகையில் ஒரு அதிசய விண்கலத்தில் இருப்பதாக கற்பனை செய்துக் கொள்ளலாம்) நீங்கள் விழும் போது, உங்களுக்கோ அல்லது உங்கள் அருகிலுள்ள சூழலுக்கோ நேரத்தில் எந்த வித்தியாசமும் கவனிக்க மாட்டீர்கள். உங்கள் கடிகாரத்தைப் பார்த்து அல்லது உங்கள் இதயத் துடிப்பைப் பார்த்து, நேரம் அதே போல் ஓடிக் கொண்டிருக்கிறது என கருதலாம். ஆனால் உங்கள் விண்கலத்திலிருந்து நீங்கள் பின்னால் திரும்பி கருந்துளைக்கு வெளியே உள்ள பிரபஞ்சத்தைக் கவனிக்க முடியும் என்றால், நீங்கள் விசித்திரமான ஒன்றைக் கவனிக்கலாம் - அங்கே நிகழ்வுகள் உங்களுக்கு வேக வேகமாக தென்படும். நீங்கள் தொலைநோக்கி மூலம் பூமியைக் கவனித்தால், நீங்கள் நமது கிரகம் மற்றும் இனத்தின் எதிர்காலத்தை கண்டு ரசிக்கலாம். ஒரு வேகப்படுத்தப்பட்ட படம் ஓடுவது போல இருக்கும். உங்களுக்கு தொலைக்காட்சி சிக்னல் கிடைத்தால், மீதமுள்ள பிக் பாஸ் சீசனை பார்த்து முடித்து விடுவீர்கள். ஆனால் வேக வேகமாக. இப்போது கண்ணோட்டத்தை மாற்றுங்கள். கருந்துளைக்கு வெளியே ஒரு பாதுகாப்பான தூரத்தில் சுழன்று கொண்டிருக்கும் விண்கலத்தில் நீங்கள் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள், உங்கள் தைரியமான அல்லது அதிர்ஷ்டமற்ற நண்பர் விழுந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். கருந்துளையின் நிகழ்வு எல்லை கருந்துளையின் விளிம்பு தான் நிகழ்வு எல்லை. ஒளி வேகத்தில் பயணிக்கும் பொருட்களாலும் கூட தப்பிக்க முடியாத புள்ளி இதுவே ஆகும். எனவே கீழே விழுந்து கொண்டிருக்கும் நமது நண்பரும் இந்த புள்ளியை அடைந்து பின்னர் மறைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் நீங்கள் பார்ப்பது விசித்திரமானது - அவர்கள் நம்மை பார்த்து கைகளை அசைத்தால், அவர்கள் கருந்துளையின் ஈர்ப்புப் பள்ளத்தில் ஆழமாக விழ விழ, நமக்கு அவர்கள் மெதுவாக கைகளை அசைப்பது போல் தெரியும். அவர்கள் விண்கலத்தின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்ட ஒரு கடிகாரம் நம் நிலையத்தில் பாதுகாப்பாக நிறுவப்பட்ட ஒன்றை விட மெதுவாக இயங்குவதைப் போலத் தெரியும். இந்த நிகழ்வை Interstellar திரைப்படம் தெளிவாக விளக்குகிறது. கருந்துளைக்கு அருகிலுள்ள கிரகத்தில் ஆய்வு செய்த விண்வெளி வீரர்கள், பணி முடித்து வரும் போது, தங்கள் பிரபஞ்சம் அவர்களை விட்டு முன்னேறி சென்று விட்டதை பார்த்து அதிசயித்து போவார்கள். அந்தப் படம் கூறுவது போல, கருந்துளைக்கு அருகில் அல்லது தொலைவில் கடந்து செல்லும் நேரம்- எது "சரியான" நேரம் என்று கேட்பதில் அர்த்தமில்லை; ஏனென்றால் சார்பியல் அப்படி சரியான நேரம் என்று எதுவும் இல்லை என சொல்கிறது. எந்த ஒளியும், பொருளும் இந்தப் புள்ளியை கடக்க முடியாத கருந்துளையின் நிகழ்வு எல்லையை நமது நண்பர் அடைவார். எனினும், நாம் அதை வெளியிலிருந்து பார்க்க முடியாது. இந்த எல்லைக்கு சென்றால் மீண்டும் திரும்ப முடியாது, இந்த எல்லையை கடந்தால், நமது நண்பர் கருந்துளையின் மைய பகுதி நோக்கி அனுப்பப்படுவார். அதன் அர்த்தம் அவர்களின் நேர அனுபவம் முற்றிலும் மாறியிருக்கும். அவர்கள் நேரத்தில் முன்னும் பின்னும் கூட செல்ல முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES கருந்துளை ஒரு கால இயந்திரம் அது ஏன்? நமது அன்றாட வாழ்வில், கருந்துளைக்கு வெளியே பாதுகாப்பாக, நாம் எப்படி வேண்டுமானாலும் இடத்தின் மூன்று பரிமாணங்களில் நகரலாம், ஆனால் நான்காவது பரிமாணத்தில்: அதாவது நேரத்தில், தொடர்ந்து முன்னோக்கியே பயணம் செய்ய வேண்டும். ஆனால் கருந்துளையின் நிகழ்வு எல்லைக்குள் விஷயங்கள் பின்னோக்கி செல்கின்றன. உள்ளே, ஒரு விண்வெளி வீரர் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பார் - கருந்துளையின் மையத்தை நோக்கி - அவர்கள் நேரத்தில் முன்னும் பின்னும் நகர முடியும் என்று நினைக்கிறார்கள். அப்படி பார்த்தால், ஒரு கருந்துளை ஒரு கால இயந்திரம் போல செயல்பட முடியும், நிகழ்வு எல்லைக்குள் நுழையும் துணிச்சலான எவரும், கருந்துளை உருவானதிலிருந்துஅவர்கள் நிகழ்வு எல்லைக்குள் நுழைந்த நேரம் வரை, திரும்பிச் செல்ல அனுமதிக்கிறது. ஒரே ஒரு அம்சம் என்னவென்றால், கருந்துளையை விட்டு வெளியேற எந்த வழியும் இருக்காத. எனவே எதிர்காலத்திலிருந்து வரும் எந்த நேர பயணியும் இந்த தந்திரத்தைப் பயன்படுத்தி புவி மேற்பரப்பில் நம்மை வந்து பார்க்க முடியாது. ஆனால் என்ன சாத்தியம் என்பதைப் புரிந்துகொள்வது - கருந்துளைகள் அவற்றைச் சுற்றியுள்ள இடம் மற்றும் நேரத்தை எவ்வாறு கையாளுகின்றன என்பதைப் பற்றி சிந்திப்பது - இயற்பியலாளர்களுக்கு ஐன்ஸ்டீன் கோட்பாடுகளின் மிக துல்லியமான சோதனைகளை வழங்க முடியும். மேலும் நாம் நேரம் என்று அழைக்கும் இந்த விஷயத்தைப் பற்றி ஆழமாக புரிந்து கொள்ள வழிவகுக்கும். அருகே இயக்கப்பட்ட அணு கடிகாரத்துடன் உலகத்தைச் சுற்றிப் பறப்பதை விட இது சிறப்பாக இருக்கும். https://www.bbc.com/tamil/articles/c4n478xjxl0o
  20. மெக்கானிக்கல் clocks வேகம் கூடும்போது மாறுவது ஒன்றும் விந்தை இல்லை.. அவை விசைகளின் அடிப்படையில் செயல்படுபவை.. ஆனால் வேகம் அதிகரிக்கும்போது உடல் கலங்களின் Biological clock எப்படி மாறுகிறது என்பதை பற்றிய தெளிவான விளக்கங்களுடன் விஞ்ஞானிகள் யாராவது எழுதிய கட்டுரை யாராவது வாசித்திருக்கிறீர்களா..? அப்படி உங்களில் யாராவது வாசித்தால் இங்கு பகிர முடியுமா அல்லது அதை சுருக்கமாக விளக்கி எழுத முடியுமா..? ஏனெனில் உடல் கலங்கள் தமக்கே உரிய ஒரு own காலச்சக்கரத்தின் அடிப்படையில் உருவாகி அழிகின்றன.. வயது குறைகிறது எனில் கலங்கள் அழிய மிக நீண்டகாலம் எடுக்கிறது என அர்த்தம்.. அது எப்படி biological clock இந்த வேகம் போன்ற புற விசைகளின் தாக்கத்தில் மாறுகின்றது என அறிய ஆவல்.. இறப்பை கூட வெல்லும் விந்தை அதில் மறைந்திருக்கலாம்..
  21. இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டு வரும்பொழுது எனக்கு முதலில் தோன்றியது Interstellar படத்தின் கதை போல இருக்கிறதே என்று. நல்லதொரு படம். விண்வெளி, கருந்துளை பற்றி இங்கே எழுதியதை படத்தில் பார்க்கும் பொழுது உணரமுடியும்
  22. புஸ்சை எத்தனை முறை தூக்கில் போட்டிருக்க வேண்டும் மரண தண்டனை குற்றம் செய்தவர்களுக்கு பொதுவெனில். ஒரு கொலை குற்றவாளியில் வரும் கோபம் ஏன் ஒரு நாட்டு மக்களை அழித்த, அழிக்கும் ஒருவரில் வரவில்லை?
  23. இலங்கைக்கு வருகை தந்த இசைஞானி இளையராஜா. இசை நிகழ்வு இந்நிலையில், இளையராஜா உள்ளிட்ட குழுவினருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்போது விமான நிலையத்தில் இசைஞானி இளையராஜா, ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,''நான் இசையோடு தான் இலங்கை வந்திருக்கின்றேன்.எங்கு சென்றாலும் என்னிசை இல்லாமல் உங்களால் இருக்கவே முடியாது. இலங்கை தமிழர்களில் எனக்கு இரசிகரில்லாமல் யாராவது இருக்கிறார்களா? எல்லோரும் எனக்கு இரசிகர்கள் தானே.அதுவே எனக்கு போதும்.இது கடவுள் கொடுத்த வரம்.'' என கூறியுள்ளார். https://tamilwin.com/article/music-director-ilaiyaraja-sri-lanka-visit-1706143883
  24. அது பிரச்சனையில்லை மக்களின் உழைப்பை ஏன் சுரண்ட வேண்டும் அதுவும் ஒரு அளவு கணக்கு இல்லாமல் மக்களை மூடநம்பிக்கைகள். உள்ளார்களாக. பேணி கொண்டு இப்படி செய்வதை பாராட்டப்பட முடியாது
  25. இலங்கை நாட்டில் ஏற்கனவே உள்ள சட்டங்கள் தமது கருத்துக்கு மாறுபாடான கருத்தை கூறுபவர்களின் தொண்டையை அரசு நசுக்குவதற்கு போதாது என்று மேலதிகமாக இப்படி ஒரு சட்டம் வந்துள்ளதோ. இந்த சட்டம் நடைமுறையில் பிரயோகம் செய்யப்படும் போதே பலருக்கு இதன் தாற்பரியம் புரியக்கூடும். இணைய தகவல் பரிமாற்றம் சம்மந்தப்பட்ட இந்த இலங்கை அரசின் சட்டம் பற்றி இங்குள்ள (யாழ்) கருத்தாளர்கள் கருத்து கூற ஆர்வப்படவில்லையோ.
  26. அப்படி இல்லை என்றுதான் நினைக்கிறேன். அவர்கள் இலங்கை அரசின் சடட திட்ட்ங்களின் அடிப்படையில் அமைக்கும் பொது பிரச்சினை இருக்காது. அப்படியான நிறைய கல்லூரிகள் இலங்கையில் எட்கேனவே நிறைய இருக்கின்றன. அந்த கல்லூரிகளின் பாட திடடம் சர்வதேசத்தில் அங்கீகரிக்க படடதாக இருக்குமாகஇருந்தால் நாட்டுக்கு நல்லதுதானே. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் நிறைய கல்லூரிகள் அவ்வாறுதான் காணப்படுகின்றன. இதனால் அந்தந்த நாடுகள் அந்நிய செலாவணியை மிச்சப்படுத்துவதால் பொருளாதார ரீதியாக அபிவிருத்தியடைய சந்தர்ப்பமும் அதிகம்.
  27. நான் அறிந்த வரைக்கும் கொர்பசோவின் காலத்துக்கு பின்னர் ருசியா கூட்ட்டமைப்பு உடைந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பிரிந்த பின்னர் உள்ள நிலைமை அவரை பாதித்திருக்க வேண்டும். அமெரிவாவின் அலாஸ்கா பிராந்தியமும் கூட ரசியாவுடன் இருந்த பகுதிதான். புட்டின் தன்னை ஒரு ராணுவ தலைவராக, பலமுள்ள தலைவராக காண்பிக்க விரும்புகிறார். பலவீனமான தலைவர்கள் ரசியாவை ஆளுவது தமது நாட்டுக்கு ஆபத்தை வருவிக்கலாம் என்ற எண்ணமும் உண்டு. இப்போது சீனாவும்கூட ரசியாவின் சில பகுதிகளை உரிமை கோருகின்றது. இரண்டு நாடுகளும் நடபு நாடுகளாக இருந்த போதிலும் உள்ளுக்குள் புகைச்சல் இருக்கின்றது. எனவே புட்டின் உயிரோடு இருக்கும் வரைக்கும் ஆட்சியில் இருப்பதுதான் அவரது நோக்கம்.
  28. பிரான்சிலும் இப்படித்தான். அரசியலில் ஒருவர் நுளைந்துவிட்டால் அவரது சொத்துக்கள் அனைத்தையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அரசியல் வாழ்க்கைக் காலத்தில் சுத்துமார்ருச் செய்து சொத்தைப் பெருக்காமல் இருக்க இந்த ஏற்பாடு.
  29. ஜேர்மனியில் அரசியல்வாதிகள் இப்படி கொள்ளை அடித்து சொத்து சேர்ப்பது இல்லை அப்படி நடந்து கண்டு பிடித்தால் உள்ள சொத்தையும். இழக்க நேரிடும்
  30. சனங்களை நாய்களாக என்னும் சனநாயக நாடாம் அமேரிக்கா. மரணதண்டனையைக்கூடச் சரியாக நிறைவேற்றத்தெரியாமல் சித்ததிரவதை செய்துகொல்லுதல், எவளவு அநியாயமனது.
  31. ரஷ்யாவின் Ukraine மீதான போருக்கு பின் இருப்பது அங்குள்ள Orthodox church. இந்தியாவை சீழ் படுத்திக்கொண்டு இருப்பது ஹிந்துத்துவா பைத்தியங்கள் இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் பௌதம் இங்கே வட அமெரிக்காவில் Trumb பின் திரள்பவர்கள் பெத்திக்கோஸ்ட் சபையை சேர்ந்தவர்கள் தென் அமெரிக்க நாடுகளில் அரசியலை தீர்மானிப்பது கத்தோலிக்கம் மத்திய கிழக்கில் யூதர் vs இஸ்லாம். உலகப் பொருளாதாரம் மிக வலுவிழந்த நிலையில் உலகம் முழுவதும் இந்த மத ஸ்தாபனங்கள் வைத்திருக்கும் சொத்துக்களின் மதிப்பு மதிப்பிட முடியாதது, இவர்கள் Tax கட்டுவதில்லை உலகில் வலது சாரிக்களுக்கு அடி விழும் பொழுது இந்த மதங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நாள் அடி வாங்கலாம். ஐ நா அதை நோக்கித் தான் போகின்றது
  32. ஓம். மேற்குலகில் வசிக்கின்ற ஈழதமிழர்கள் சிலரும் ஈழதமிழ் அரசியல் ஆய்வாளர்கள்?ளும் அதற்க்கு கை கொடுப்பார்கள் ☹️
  33. சாதாரண வேவு அதிகாரியாகப் பணியாற்றி இன்றுவரை பத்தாயிரம் யூரோ சம்பளம் எடுக்கும் புதின் எவ்வாறு 2023 இல் உலகில் மிகப் பெரிய பணக்காரராக ஆக முடிந்தது ? உக்ரெயின் போர் தொடங்கியதிலிருந்து பலர் படியால் தடுக்கியும் ஜன்னலால் விடுந்தும் தூக்கு மாட்டிக் கொண்டும் இறந்தனர். இவர்களில் பலர் சாதாரணமானவர்கள் கிடையாது. ரஸ்யாவின் Gazprom மற்றும Gazprombank நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் உள்ளவர்களும் முதலீட்டாளர்களும். பெரும் கோடீஸ்வரர்கள். ஒருவர் தனது குடும்பத்தோடு அழுந்து போனார். இவர்களது சொத்துகளுக்கு என்ன நடந்த்தது என்று தெரியாது. புதின் பற்றி எழுதியவுடனேயே அவன் முதுகைப் பார்த்தாயா இவன் முதுகைப் பார்த்தாயா என்று முண்டியடித்துக் கொண்டு வந்து புதினுக்கு வெள்ளையடிப்போருக்கு ஒருவன் அயோக்கியனாக இருந்தால் அதனை ஏற்கும் பக்குவம் கிடையாது. வசி ஏற்கனவே தந்த இணைப்பில் சென்று வாசித்தால் கோடிக்கு எத்தனை இலக்கம் உண்டு என்று தெரிந்து கொள்ளலாம். 👇 👆 செலன்ஸ்கி மட்டுமல்ல பிரெஞ்சு அதிபரும் இந்தப் பட்டியலில் உண்டு.
  34. இல‌ங்கை அணி தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் நிலைத்து நின்று விளையாடின‌ம் இல்லை அண்ணா...........இத‌னால் ந‌டு த‌ர‌ வீர‌ர்க‌ள் ஆமை வேக‌த்தில் விளையாடி மெது மெதுவாய் ர‌ன் எடுக்கின‌ம்.............இனி தான் ப‌ல‌மான‌ அணிக‌ளை ச‌ந்திக்க‌ போகின‌ம்................ கிரிக்கேட்டில் இல‌ங்கை அணி தூக்காத‌ ஒரே ஒரு க‌ப் அது 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பை...........இந்த‌ முறை தூக்க‌ வாய்ப்பு மிக‌ மிக‌ குறைவு..........வ‌ழ‌மை போல இந்தியா தான் தூக்கும்🙏.................
  35. தற்பொழுதைய உலக ஒழுங்கை மாற்றி சீனா,ரஸ்யா,இந்தியா போன்ற நாடுகள் கூட்டு தலமைத்துவத்தை எடுக்க முயற்சி செய்கின்றன ...இந்த சைக்கிள் கப்பில் இஸ்லாமிய நாடுகள் தங்களது மத அடிப்படை வாதத்தை உலகம் பூராவும் பரப்ப வேலை செய்கின்றனர் .இனிமேல் வரும் போரில் இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக நின்று இந்தியாவை பலம் இழக்க பண்ண முயல்வார்கள் ...இந்தியாவை வீழ்த்த சீனா இஸ்லாமிய நாடுகளுக்கு கை கொடுக்கும் ... தொடரும் போர் தேசிய இனங்களுக்கு இடையே இல்லாமல் ...மதங்களுக்கு இடையேயான போர் ஆக இருக்கும்
  36. ஜேர்மனியில் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றின், ஒரு நாள் அறை வாடகை 80 ஐரோ. கண்டியில் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றின் ஒரு நாள் வாடகை 200 ஐரோ.... என அண்மையில் ஸ்ரீலங்கா சென்ற ஜேர்மன்காரர் கூறினார்.
  37. செலன்ஸ்கியும் கிட்ட முட்ட வந்திருப்பார் என நினைக்கிறேன்.🙃
  38. உலகை தலைகீழாக மாற்ற போகும் புதிய கருவி.. செல்போனுக்கு பதில் இனி மேல் எல்லார் கையிலும் இதுதான் இருக்க போகுது..
  39. சரிந்து விழுந்தது வீடுமட்டுமல்ல அவர்களது முழு சேமிப்பும் தான். எதிர் கால நம்பிக்கையே கேள்விக்குறியாக ? உயிர் தப்பியது இறைவன் செயல்.
  40. காலேல 12 இடியப்பம், 11 மணிக்கு tea வடை, மத்தியானம் மலை மாதிரி சோறு, இரண்டு மணிக்கு வெயில் சூட்டுக்கு fanta சோடா. பின்னரம் மிக்ஸ்ர் கொண்டல் கடலை and Tea. இரவைக்கு beer with கொத்து ரொட்டி இப்பிடி சாப்பிட்டுகொண்டு சனம் 35 வயசுக்கு மேல் வாழுதே.. அதே பெரிய விஷயம்
  41. 2018 இன் பயணம் அதிக கனதிகளின்றி, குறைவான மனப்பதிவுகளுடன் முடிந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஆனால் எனது கடந்த கார்த்திகை மாத இறுதிநாட்களின் பயணம் அப்படிப்பட்டதல்ல. எனது சித்தியின் உடல்நிலை கவலைக்கிடகமாக மாறிப்போனது. நினைவுக‌ள் குழம்பிப் போய், ஒரு சில விடயங்கள் மட்டுமே மனதில் இன்னும் எஞ்சி நிற்க, உடலாளும், மனதாலும் அவர் பலவீனமான நிலையில் இருந்தார். இருமுறை கால்தவறி வீழ்ந்துவிட்டதால் வயதான அவர் உடலில் சத்திரசிகிச்சை மூலம் தகடுகள் பொறுத்தப்பட்டு முறிவுகள் சரிசெய்யப்பட்டிருந்தது. நடக்கப்பதற்கான உடல்வலுவின்றி சக்கர நாற்காலியில் அவரைப் பராமரித்து வருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். பார்த்துவந்தவர்களில் ஒருசிலர் "உன்னைப்பற்றித்தான் அடிக்கடி கேட்கிறா, ஒருக்கால்ப் போய் பார்த்துவிட்டு வா" என்று கூறினார்கள். ஆகவே, போவதென்று முடிவெடுத்தேன், தனியாக ! அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. "கண்டறியாத அரசியல் எழுதுறியள், உந்த லட்சணத்தில ஊருக்குப் போகப்போறியளோ? போதாக்குறைக்கு பேர் வேறை போட்டு எழுதுறியள், அவங்கள் பிடிச்சால் என்ன செய்வியள்?" என்று கேள்விகளுடன் ஆரம்பித்து, "நீங்கள் தனியாக உல்லாசமாக ஊர் சுத்தப் போறியள், பச்சுலர்ஸ் பாட்டிக்குத்தானே போறியள்? அதுதான் எங்கள்மேல அக்கறை இல்லாமல், விட்டுப்போட்டுப் போறியள், நீங்கள் ஒரு சுயநலவாதி" என்பதுவரை பல தடங்கல்களும் நான் போகக்கூடாது என்பதற்கான காரணங்களும் முன்வைக்கப்பட்டன. நான் பிடிவாதமாக இருந்துவிட்டேன். "இல்லை, நான் போகத்தான் போகிறேன், பிள்ளைகளை நீங்கள் பாத்துக்கொள்ளுங்கோ" என்பதே எனது முடிவான பதில். அதன்பின் எவருமே எதுவும் பேசவில்லை. வீட்டில் அமைதி, சில நாட்களுக்கு. அவ்வப்போது மீண்டும் இதே சம்பாஷணை வரும், அதே கேள்விகள், அதே விளக்கங்கள், முடிவான எனது பதில். இப்படியே சில வாரங்கள் கரைந்துவிட்டன. இறுதியாக ஒரு சமரசம், "சரி, நீங்கள் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு வீட்டை நிற்கவேணும், அதுக்கு ஓமெண்டால் நீங்கள் போய்வரலாம்" என்று அனுமதி கிடைத்தது. எனக்கும் அது சரியாகப் பட்டது. ஆகவே சரி என்றேன்.
  42. 'யுக்திய' நடவடிக்கை : தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் உட்பட மூவர் காத்தான்குடியில் கைது 25 JAN, 2024 | 04:10 PM தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் உட்பட இருவர் யுக்திய போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 5 கிராம் 440 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, அதே பிரதேசத்தில் மற்றுமொருவர் 860 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதாகியுள்ளார். தற்போது நாடு முழுவதும் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரையின் கீழ், 'யுக்திய' போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையிலேயே இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் 2 கிராம் 960 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடி அமானுல்லா வீதியில் வைத்து 32 வயதுடைய இளைஞர் ஒருவரும், 2 கிராம் 480 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் புதிய காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து மற்றொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, கர்பலா பிரதேசத்தில் வைத்து 860 மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் 48 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்க குறிப்பிட்டார். கைதான மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதான மூவரில் புதிய காத்தான்குடியை சேர்ந்த சந்தேக நபர் மட்டக்களப்பு நீதிமன்ற உத்தரவுக்கமைய, ஏழு நாட்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். ஏனைய இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/174786
  43. கொலையாளி அதிலும் பணத்திற்காக திட்டமிட்டு? வச்சு செய்யணும் இவன்களை.... தண்ணீர் சாப்பாடு மருத்துவத்தை நிறுத்தி விட்டால் போதும். அனுபவித்து போய் சேரும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.