Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    8910
    Posts
  2. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    16477
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    87990
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/28/24 in all areas

  1. வணக்கம் அனைவருக்கும் 15 வருடம்கழித்து மீண்டும் யாழ்களத்துக்கு வந்துள்ளேன் 💛❤️
  2. சரி, பயணத்திற்கு வரலாம். வட்டுவாகல்ப் பாலத்தினூடாக முல்லைத்தீவு நோக்கிச் செல்லத் தொடங்கினோம். பாலத்தின் முள்ளிவாய்க்கால் கரையில் பிரபல சிங்கள பெளத்த இனக்கொலையாளியும் போர்க்குற்றவாளியுமான கோத்தாபய ராஜபக்ஷ என்பவனின் பெயரில் அமைக்கப்பட்ட கடற்படை முகாம் காணப்பட்டது. அதன் வாயிலில் ஆக்கிரமிப்பாளர்கள் அகம்பாவத்துடன் நின்றுகொண்டு அப்பாலத்தால் போய்வருவோரை நோட்டம் விட்டபடி இருந்தனர். அப்பகுதியை வாகனத்தில் இருந்தவாறே காணொளி எடுத்துக்கொண்டிருந்த என்னைக் கண்ட சாரதி, "அண்ணை, கமராவை ஒளியுங்கோ, கண்டாங்கள் எண்டால் பிரச்சினை" என்று கூறவும், சடாரென்று கீழே பதித்துக்கொண்டேன். பாலத்தின் மறுகரையில் இன்னொரு சோதனைச் சாவடி. ஆயுதங்களுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாகனங்களை மறித்துக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். எம்மையும் கேட்டார்கள். முல்லைத்தீவிற்குப் போகிறோம், யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறோம் என்று கூறிய பின்னர் போக விட்டார்கள். அப்படியே முல்லைத்தீவு நகரைச் சுற்றி வந்தோம். ஒருகாலத்தில் தமிழர்களின் இராச்சியமாக, பலப்பிரதேசமாக இருந்த எமது தாயகத்தின் முக்கிய நகரம் ஒன்று சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் அகப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தபோது ஆற்றாமையும், கோபமும் ஒருங்கே வந்தது. வரும் வழியில் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் சிங்களப் பேய்கள் கட்டிவைத்திருக்கும் வெற்றிச் சின்னத்தைப் பார்க்க வாகனம் நின்றது. மைத்துனர் படங்களை எடுத்துக்கொண்டு என்னைப் பார்த்து, "அண்ணை, நீங்கள் இதைப் படம் எடுக்கேல்லையோ?" என்று கேட்டார். "ஏன் சுவி, எங்களை அழிச்சு, அடிமைப்படுத்தினதை அவன் சாதனையாகக் கட்டிவைச்சிருக்கிறான், அதை ஏன் நான் பாக்கவேண்டும்?" என்று கேட்டேன். அவர் புரிந்துகொண்டார். "இல்லையண்ணை, வந்ததுக்கு சும்மா எடுத்துவைக்கலாம் எண்டபடியால் கேட்டன்" என்று கூறிச் சமாளித்தார். அப்பக்கமே நான் திரும்பவில்லை. எதற்கு திரும்பவேண்டும், எதற்குப் பார்க்கவேண்டும், எதற்குப் படமெடுக்க வேண்டும்? கொல்லப்பட்டது எனது மக்கள், அழிக்கப்பட்டது எனது போராட்டம், ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது எனது தாயகம், இந்த லட்சணத்தில் எம்மை ஆக்கிரமித்து நிற்பவனின் சாதனையினை எதற்காகக் நான் கொண்டாடவேண்டும்? ஆகவேதான் அந்த மிருகங்களின் அடையாளங்களை எங்கு செல்லினும் நிராகரித்து வருகிறேன். முல்லைத்தீவைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த வழியினால் மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம். வட்டுவாகல்ப் பாலத்தைக் கடந்து முள்ளிவாய்க்காலுக்குள் ஏறி அப்படியே சென்ற வழியில் திரும்பி வந்தோம். போகும்போது இருந்த உற்சாகம் எல்லோரையும் அப்போது கைவிட்டிருந்தது. எவரும் அதிகம் பேசவில்லை. இடையிடையே கடந்துசெல்லும் ஊர்கள் குறித்து எனது கேள்விகளும் அதற்கான மைத்துனரின் பதில்களையும் தவிர அதிகமாகப் பேசவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் நுழைந்தபோது கடும் பசி. எங்காவது வாகனத்தை நிறுத்திச் சாப்பிடலாம் என்று எண்ணியவாறு வீதியின் ஓரத்தில் இருந்த கடைகளைப் பார்த்துக்கொண்டே வந்தோம். சாவகச்சேரிப் பகுதியில் பிரதான வீதியின் வலப்புறத்தில் பழமையான ஆனால் அழகிய வீடொன்றில் வீட்டில் சமைத்த உணவுகளை பரிமாரிவருவதாக முகப்புத்தகத்தில் மைத்துனரின் மகன் பார்த்திருக்கிறார். ஆகவே அங்கு செல்வதாக முடிவெடுத்தோம். அப்பகுதியை அடைந்ததும் வாகனத்தை வீட்டின் முற்றத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். மழை பெய்யத் தொடங்கியிருந்தது. கொத்து ரொட்டி, பிரைட் ரயிஸ் (Fried Rice) என்று ஆளாளுக்கு விரும்பியதை ஓடர் கொடுத்தோம். 15 - 20 நிமிடங்களில் ஆவிபறக்க உணவு கொண்டுவந்து பரிமாறப்பட்டது. சுவையானதாக இருந்தது. ஆனால், யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் இங்கு விலை அதிகமாக இருப்பதாக அவர் கூறினார். பரவாயில்லை, பசிக்கு வயிராற உண்ண, சுவையான உணவு. சற்று அதிகம் என்றாலும் திருப்தியாக இருந்தது. கட்டணத்தைச் செலுத்துவிட்டி மீண்டும் வாகனத்தில் ஏறிக்கொண்டோம். சாதுவான தூறளில் யாழ்ப்பாணம் நோக்கி வாகனத்தைச் செலுத்தத் தொடங்கினார் சாரதி.
  3. சமனற்ற நீதி ? – நிலாந்தன். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் மண்டபத்தில் ஒரு வெளியீட்டு விழா நடந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ஈழத் தமிழராகிய ராஜ் ராஜரத்தினத்தின் “சமனற்ற நீதி” என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் அது. ராஜ் ராஜரத்தினம் அமெரிக்காவில் துலங்கிக் கொண்டு மேலெழுந்த ஒரு பங்குச்சந்தை வர்த்தகர். உலகப் பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் நிற்கும் தமிழர்களில் ஒருவர். அவர் பங்குச்சந்தை வியாபாரத்தில் “இன்சைடர் ரேடிங் ” என்று ஆங்கிலத்தில் கூறப்படும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் தொடர்பான ரகசிய தகவல்களைக் கசியவிடுவதன் மூலம் லாபம் ஈட்டும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர். அவருடைய தண்டனைக் காலத்தின் போது சிறையில் இருந்து எழுதத் தொடங்கிய அந்த நூல் முதலில் ஆங்கிலத்திலும் இப்பொழுது தமிழிலும் வெளி வந்திருக்கிறது. இந்த நூல் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. முதலாவது அது ஒரு தன் வரலாறு.இரண்டாவதாக, அது ஒரு சட்டப் பரிமாணத்தைக் கொண்ட நூல். மூன்றாவதாக, அது பங்குச்சந்தை வாணிபம் தொடர்பான தகவல்களைக் கொண்ட ஒரு நூல். நான்காவதாக, புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் எப்படிப்பட்ட உச்சங்களைத் தொட்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாகக் காணப்படும் ஒரு தமிழ் முதலீட்டாளரின் வாக்குமூலம் அது. இப்பொழுது அந்த நூலைச் சற்று ஆழமாகப் பார்க்கலாம்.ராஜ் ராஜரத்தினத்தின் பூர்வீகம் வடமராட்சியில் உள்ள அல்வாய். அவருடைய தகப்பனின் தொழில் காரணமாக சிறுபிராயத்திலேயே குடும்பம் ஊருக்கு வெளியே பயணம் செய்யத் தொடங்குகின்றது. தன்னுடைய பட்டப்படிப்புகளை மேற்கில் தொடர்கிறார். மிக இளம் வயதிலேயே அமெரிக்க பங்குச் சந்தைக்குள் பிரகாசிக்கத் தொடங்குகிறார். உலகின் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய தமிழ் முதலீட்டாளர்களில் ஒருவராக வெற்றி பெறுகிறார். 2000 ஆவது ஆண்டின் முதல் தசாப்தத்தின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்கா பொருளாதார மந்த நிலைக்குள் சிக்கியது. அந்த பொருளாதார நெருக்கடியின் போது ராஜ் கைது செய்யப்படுகிறார். அமெரிக்காவின் பொருளாதாரத் தோல்விகளுக்கு ஒரு பலியாட்டை முன் நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது என்றும், அதற்கு தன்னைப் போன்றவர்களை அவர்கள் கைது செய்து தண்டித்ததாகவும், ராஜ் குற்றம் சாட்டுகிறார். தன்னை கைது செய்த எஃப்.பி.ஐ அதிகாரிகளுக்கு பங்குச் சந்தை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என்றும், தன்னை விசாரித்தவர்களுக்கும் தெரிந்திருக்கவில்லை என்றும், தனது வழக்கறிஞர்களில் பெரும்பாலானவர்களுக்கு அது தெரிந்திருக்கவில்லை என்றும், தன்னைக் குற்றவாளியாகக் கண்ட ஜூரிகளுக்கும் அது தெரிந்திருக்கவில்லை என்றும், தன் மீது புனைவுகளை அவிழ்த்துவிட்ட அமெரிக்காவின் ஸ்தாபிக்கப்பட்ட ஊடகங்களுக்கும் அது பற்றித் தெரிந்திருக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார். தன்னோடு கூட இருந்து லாபமடைந்தவர்களும், தன்னோடு நெருக்கமாகப் பழகியவர்களும் தனக்குத் துரோகம் செய்ததாக அந்த நூலில் அவர் விவரிக்கின்றார். அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு என்று ஒவ்வொரு அத்தியாயங்களை ஒதுக்கி, அவர்கள் மீது கடுமையான வார்த்தைகளில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். தன்னைக் காட்டிக் கொடுத்தவர்கள் மீது மட்டுமல்ல, அமெரிக்காவின் நீதிபரிபாலானக் கட்டமைப்பையும் அவர் மிகக் கூர்மையான வார்த்தைகளால் விமர்சிக்கின்றார். அந்த அடிப்படையில் இந்த நூல் அமெரிக்காவின் நீதிபதிபாலனக் கட்டமைப்பை, அதன் விசாரணைப் பொறிமுறையை, மிகக் கடுமையாக விமர்சிக்கும் ஒரு நூல் எனலாம். அப்படி ஒரு நூலை அமெரிக்கா எப்படி சகித்துக் கொள்கிறது? அப்படி ஒரு நூல் இலங்கையில் வெளியிடப்பட்டிருந்திருந்தால், அந்த நபர் நீதிமன்ற அவமதிப்பின் கீழே அல்லது வேறு குற்றச்சாட்டுகளின் பெயராலோ மீண்டும் கைது செய்யப்படக்கூடிய ஆபத்து உண்டு. ஆனால் அமெரிக்க ஜனநாயகத்தின் விரிவை அந்த நூல் காட்டுகிறது. ஒருபுறம் அந்த நூல் அமெரிக்க நீதிபரிபாலான கட்டமைப்பின் மீதான மிகக் கூர்மையான கடும் வார்த்தைகளால் ஆன விமர்சனமாக காணப்படுகின்றது. இன்னொரு புறம்,அந்த நூல் அமெரிக்க ஜனநாயகத்தின் செழிப்பையும் நமக்குக் காட்டுகின்றது. ராஜ் ராஜரத்தினம் கூறுகிறார், அமெரிக்க நீதி சமனற்றது என்று. அதற்கு அவர் ஆதாரங்களைத் தொகுத்துக் காட்டுகிறார். இன்சைடர் ட்ரேடிங் என்று அழைக்கப்படும் பங்குச் சந்தை உள் விவரங்களைக் கசிய விடுகின்ற, அல்லது உள் ஆட்களின் மூலம் பங்குச் சந்தை உள் விவரங்களை ரகசியமாக திரட்டுகின்ற நடவடிக்கைகள் அமெரிக்காவில் சட்டவிரோதமானவைகளாக இருந்த ஒரு காலகட்டத்தில் அவர் கைது செய்யப்படுகிறார். ஆனால் அதற்காக அமெரிக்கா கையாண்ட வழிமுறைகள் அநீதியானவை என்று அவர் கூறுகிறார். அதே குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்கள் சிலர் கைது செய்யப்படாததையும் அவர் தொகுத்து காட்டுகின்றார். தன்னைக் கைது செய்வதற்காக அமெரிக்க உள்ளகப் புலனாய்வுத் துறை ஆனது தன்னோடு சேர்ந்து வேலை செய்தவர்கள் அல்லது தனக்கு தெரிந்தவர்கள் போன்றவர்களை எவ்வாறு எனக்கு எதிரான சாட்சிகளாக மாற்றியது என்பதையும் அவர் கூறுகிறார். குற்றமழைத்தவர்களை அக்குற்றத்திலிருந்து விடுவிப்பது என்ற வாக்குறுதியின் பெயரில் அரசுதரப்பு சாட்சிகளாக மாற்றும் நடைமுறையை அவர் அம்பலப்படுத்துகின்றார். தனக்கு வழங்கப்பட்ட நீதி சமனற்றது என்பதனை அவர் அந்த நூல் முழுவதிலும் ஸ்தாபிக்கின்றார். ஒரு உலகப் பேரரசின் நிதியானது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரிவது போல புனிதமானது அல்ல என்று அவர் நிரூபிக்க முற்படுகின்றார். அது ராஜ்ஜுடைய தனிப்பட்ட அனுபவம். பேரரசுகளின் நீதி அல்லது உலக சமூகத்துக்கு ஜனநாயகத்தை, நீதியை அறத்தைப் போதிக்கும் மேற்கத்திய நாடுகளின் நீதியெனப்படுவது எப்படிப்பட்டது என்பதற்கு வரலாறு முழுவதிலும் உதாரணங்கள் உண்டு. கிராம்சி கூறுவது போல மேற்கத்திய நாடுகள் தமது நாட்டின் பிரஜைகளுக்கு ஜனநாயகத்தை வழங்குகின்றன. ஆனால் தாங்கள் ஆக்கிரமித்த நாடுகளில் அவை அவ்வாறு நடந்து கொள்ளவில்லை,அல்லது ஆக்கிரமிப்புத் தேவைகளுக்காக அவை தாங்கள் போதிக்கும் ஜனநாயகம், நீதி, அரசியல் அறம் போன்ற எல்லாவற்றையும் தலைகீழாக வியாக்கியானம் செய்கின்றன. உதாரணமாக ஈராக்கிற்குள் மேற்கு நாடுகள் படையெடுத்தபோது அங்கே மனித குலத்துக்குத் தீங்கான ஆயுதங்கள் இருப்பதாக குற்றம் சாட்டினர். ஆனால் அப்படிப்பட்ட ஆயுதங்கள் அவையும் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அது தொடர்பான உட் தகவல்களை அதில் சம்பந்தப்பட்டவர்களே பின்னாளில் தங்கள் வாக்குமூலங்களின் மூலம் வெளிப்படுத்தினார்கள். ஆனால் ஈராக் சிதைக்கப்பட்டு விட்டது.ஆசியாவின் மிகச் செழிப்பான நாகரிகம் ஒன்று சிதைக்கப்பட்டு விட்டது.அதை சிதைப்பதற்காக கூறப்பட்ட காரணம் உண்மையற்றது.ஆதாரம் அற்றது. இதுதான் மேற்கு நாடுகளின் நீதி. ஏன் அதிகம் போவான்?காசாவில் இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது? இஸ்ரேல் புரியும் இனப்படுகொலையை எல்லாம் மேற்கு நாடுகளும் மௌனமாக அங்கீகரித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கு எதிராக ஆப்பிரிக்க நாடாகிய தென்னாபிரிக்கா உலக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றது.உலக நீதிமன்றத்தை ஸ்தாபித்த பொழுது அமெரிக்காவும் பிரித்தானியாவும் பெரிய பங்களிப்பை நல்கின.ஆனால் தென்னாபிரிக்கா தொடுத்திருக்கும் வழக்கிற்கு எந்த ஒரு மேற்கத்திய நாடும் உத்தியோகபூர்வமாக ஆதரவைக் காட்டவில்லை. இங்கு மேலும் ஒரு உதாரணத்தைக் காட்டலாம். ரஷ்யா உக்ரேனுக்குள் இறங்கிய பொழுது, அதை மேற்கு நாடுகள் எதிர்த்தன. புட்டின் புரிவது இனப்படுகொலை என்று குற்றஞ்சாட்டும் அமெரிக்கா இஸ்ரேல் காசாவில் புரிவது இனப்படுகொலை என்று கூறத் தயார் இல்லை.எனவே இங்கே எது நீதி என்பதனை எது தீர்மானிக்கின்றது? நிச்சயமாக அறநெறிகளோ நீதி நெறிகளோ அல்ல. அரசுகளின் உலகத்தில் தூய நீதி கிடையாது. அது ஈழத் தமிழர்களுக்கு முன்மொழியப்பட்ட நிலைமாறு கால நீதியாகட்டும் அல்லது ஈழத் தமிழர்கள் கேட்கின்ற பரிகார ரீதியாகட்டும், எதுவானாலும் அது அரசுகளின் நீதிதான். அதாவது அது ஒர் அரசியல் தீர்மானம். அரசுகள் தமது ராணுவ அரசியல் பொருளாதார நோக்கு நிலைகளில் இருந்து தீர்மானங்களை எடுக்கின்றன. நிச்சயமாக அறநெறிகளின் அடிப்படையில் அத் தீர்மானங்கள் எடுக்கப்படுவதில்லை. ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் நேற்றோவின் நோக்குநிலையில் இருந்து எடுக்கப்படுகின்றது.அப்படித்தான் ரஷ்யா கிரீமியாவை ஆக்கிரமித்ததும் நீதியின் அடிப்படையில் அல்ல.அங்குள்ள ரஸ்ய மொழியைப் பேசும் மக்களை பாதுகாப்பதற்காக என்று கூறப்பட்டவை எல்லாம் பிரதான காரணங்கள் அல்ல. பிரதான காரணம் உக்ரைனைப் பலவீனப்படுத்துவது. இந்தியா பங்களாதேஷை பிரித்தெடுத்தது. அது பங்களாதேஷின் மீது கொண்ட காதலால் அல்ல. பாகிஸ்தானை உடைக்க வேண்டும் என்ற பாதுகாப்பு நோக்கு நிலையில் இருந்து எடுக்கப்பட்ட முடிவு அது. இங்கே பெரிய நாடு சிறிய நாடு என்ற வேறுபாடு இல்லை. அரசுகள் தங்களுடைய ராணுவ பொருளாதார அரசியல் நோக்குநிலைகளில் இருந்து நீதிகளை வழங்கி வருகின்றன. இப்பொழுது இனப்படுகொலைக்கு உள்ளாகும் பலஸ்தீனம் 2009இல் ஈழத் தமிழர்களின் பக்கம் நின்றதா? இல்லை. போராடி விடுதலை பெற்ற கியூபா ஈழத் தமிழர்களின் பக்கம் நிற்கின்றதா? இல்லை. 1980 களின் பிற்பகுதியில் பலஸ்தீன் அதிகார சபை உருவாக்கப்பட முன்னரான ஒரு காலகட்டத்தில் பலஸ்தீனம் ஈழத் தமிழர்களுக்கு பயிற்சி வழங்கியது. ஆனால் பலஸ்தீன் அதிகார சபை உருவாக்கப்பட்ட பின் அது மஹிந்த ராஜபக்சவுக்குத் தான் நட்பாகக் காணப்படுகின்றது. மஹிந்த ராஜபக்சவுக்கு 2014 ஆம் ஆண்டு அந்நாட்டின் உயர் விருது ஆகிய பலஸ்தீன நட்சத்திரம் விருது வழங்கப்பட்டது. அங்குள்ள வீதி ஒன்றுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது.இவை அனைத்தும் 2009 மே மாதத்துக்குப் பின் நிகழ்ந்தவை. எனவே இப்பொழுது நமக்கு தெளிவான ஒரு சித்திரம் கிடைக்கின்றது. அரசுகளின் நீதி எத்தகையது என்று. ஆனால் ஈழத் தமிழர்கள் அதே அரசுகளிடம்தான் நீதியைக் கேட்டுப் போராடுகிறார்கள். ஐநாவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானங்களைக் கொண்டு வரும் நாடுகள்தான் காசாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராகக் காணப்படுகின்றன. இங்கே யார் யாரை ஆதரிப்பது? எப்பொழுது ஆதரிப்பது? என்பவையெல்லாம் நீதியின் பாற்பட்டு முடிவெடுக்கப்படுவதில்லை. நலன்களின் பாற்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட அரசுகள் அல்லது பேரரசுகள் தனி மனிதர்களுக்கு மட்டும் நீதியை வழங்கும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்? இப்படிப்பட்டதோர் உலக நீதியின் பின்னணியில், ராஜரத்தினம் எங்கே நமக்கு முக்கியமானவராகத் தெரிகிறார்? அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு அதை அவர் அனுபவித்த பின்னர்தான் வெளியே வந்திருகிறார்.ஆனால் தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அந்த நூலை எழுதுகிறார். அது ஒரு உலகப் பேரரசின் நீதிக்கு எதிரான புத்தகம் மட்டுமல்ல, புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நிதி ரீதியாக உச்சத்தை தொட்ட ஒருவர் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார் என்பது இங்கு முக்கியம். இது புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் தாயகத்தில் வசிப்பவர்களுக்கும் ஒரு கூர்மையான செய்தியை வெளிப்படுத்துகின்றது.முதலாவது செய்தி, ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் கடும் உழைப்பின் மூலம் எந்தளவுக்கு முன்னேறலாம் என்பது. இரண்டாவது செய்தி, நீதிக்காகப் போராடுவதற்கும் நிதிப் பலம் இருக்க வேண்டும் என்பது. ராஜ் ஒரு கோடீஸ்வரனாக இருந்த காரணத்தால், தனக்கு வழங்கப்பட்ட நீதியை எதிர்த்துப் போராடினார்.அப்படித்தான் ஈழத் தமிழர்களும் நீதி கேட்டுப் போராடுவது என்று சொன்னால், பொருளாதார ரீதியாக தங்களை பலப்படுத்த வேண்டும்.அப்படிப்பட்ட பலம் இல்லாத காரணத்தால்தான் அண்மை மாதங்களாக தாயகத்தில் இருந்து மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் மக்களின் ஜனத்தொகை படிப்படியாகக் கரைந்து போகின்றது. எனவே தமிழ் மக்கள் நிதி ரீதியாகப் பலமானவர்களாக மாற வேண்டும்.புலம் பெயர்ந்த தரப்பில் இருக்கும் முதலீட்டாளர்கள் தாயகத்தில் முதலீடு செய்ய வேண்டும். அந்த முதலீடுகள் கொழும்பின் நோக்கு நிலையில் இருந்தன்றி, தமிழ் நோக்கு நிலையில் இருந்து, தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து, தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாக, முதலீடு என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும். தேசத்தை நிர்மாணிக்கத் தேவையான கட்டமைப்புகளை புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் கட்டியெழுப்ப வேண்டும். சமனற்ற நீதி நூல் வெளியீட்டின் போது நான் ஆற்றிய உரையில் அதை யூதர்களின் தேசிய நிதியத்யோடு ஒப்பிட்டேன். முதலாவது சியோனிச மாநாடு 1897 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அதிலிருந்து 5 ஆண்டுகளில் அதாவது 1901 ஆம் ஆண்டு “ஜூவிஸ் நஷனல் ஃபண்ட்” என்று அழைக்கப்படும் யூத தேசிய நிதியம் உருவாக்கப்பட்டது. அந்த நிதியம் தான் இப்போதிருக்கும் இஸ்ரேலைக் கட்டி எழுப்பக் காரணம். அந்த நிதியத்தைப்கபயன்படுத்தி பலஸ்தீனர்களின் நிலங்கள் விலைக்கு வாங்கப்பட்டன.அங்கு கொமியூன்கள் என்று அழைக்கத்தக்க கூட்டுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன.அக்கூட்டுப் பண்ணைகளின் விரிவாக்கமே இஸ்ரேல் என்ற நாடு. இந்த விடயத்தில் யூதர்கள் பலஸ்தீன்களை ஏமாற்றினார்கள்;இனப்படுகொலை செய்தார்கள் என்பவையெல்லாம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். இஸ்ரேலை ஒரு முன்னுதாரணமாகக் காட்டுவதன் மூலம் இக்கட்டுரையானது யூதர்கள் பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்வதை நியாயப்படுத்தவில்லை.ஆனால் புலம்பெயர்ந்த சமூகம் ஒன்று தாயகத்தில் எவ்வாறு ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு நிதி ரீதியாகப் பங்களிப்பை நல்க முடியும் என்பதற்கு அது ஒரு முன்னுதாரணம்.ராஜ் ராஜரட்னத்தைப் போன்ற புலம்பெயர்ந்த தமிழர்களை தேசத்தை நிர்மாணிப்பது ஏன்ற அடிப்படையில் எவ்வாறு தாயகத்தில் முதலீடு செய்ய வைப்பது என்று ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.ஏற்கனவே ஒரு தொகுதி புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் வெவ்வேறு தொழில்துறைகளில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டார்கள்.இந்த முதலீடுகளை நெறிப்படுத்தக்கூடிய ஒரு கட்டமைப்பை ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களோடு இணைந்து உருவாக்க வேண்டும். எதையும் கட்டமைப்புக்குள்ளால் சிந்திக்க வேண்டும்.அரூபமாகச் சிந்திப்பதால் பயனில்லை. கற்பனைகளில் மிதப்பதால் பயனில்லை. செயலுக்குப் போக வேண்டும். நீதிமான்களிடம் தான் எழுத்தமிழர்கள் நீதியைக்கேட்கலாம் என்றால் அதற்கு ஒன்றில் யாகங்கள் செய்ய வேண்டும்,அல்லது பரலோக ராஜ்ஜியத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும்.ஓர் ஆபிரிக்கப் பழமொழி கூறுவதுபோல…. “நீ நீதியாக இருக்கிறாய் என்பதற்காக உலகம் உன்னிடம் நீதியாக நடக்கும் என்று எதிர்பார்க்காதே. அப்படி எதிர்பார்ப்பது, நீ சிங்கத்தைச் சாப்பிட மாட்டாய் என்பதற்காக சிங்கம் உன்னைச் சாப்பிடாது என்று நம்புவதைப் போன்றது. https://athavannews.com/2024/1367335
  4. மீனாச்சிபாட்டி(சிறுகதை) பாட்டிக்கு ராத்திரிபூராம் தூக்கம் வரல பொறண்டு பொறண்டுபடுக்குது குளிருவேற வீட்டுல எட்டாவது மகனோடபொண்டாட்டியும் ரெண்டுபேரப்புள்ளைகளும் நாளைக்கி ஆர் ஆரெல்லாம் வருவாக அப்பத்தான்னுகேட்டு தேஜா வருவாளா கோபிவருவானான்னு கேட்டுகளைச்சுப்போயி இப்பத்தான் அசந்து தூங்க ஆரம்பிச்சுதுக மருமக அவ பேத்திதான் அம்மாயி உங்கமகன் அதான் என் வீடுக்காரரு நாளைக்கி வரலயாம் நு சொல்லிட்டு படுக்கப்போனா. ஏம்மா மாவெல்லாம் ஆட்டிவைச்சிட்டயா சட்ணிக்கி சாமானெல்லாம் வாங்கிவைச்சிட்டயான்னு கேட்டுக்கிட்டே இருந்துச்சு மீனாட்சிபாட்டி அதுக்கு உன் பிள்ளக பேரம்பேத்தி அம்புட்டுப்பேரும் வாராகன்னவன்ன ஒன்னபுடிக்கமுடியல வீட்டுல இருக்குற பேரம்பேத்திக எல்லாம் பெருசாத்தெரியலன்னு கிண்டல் பண்ணா மருமககாரி... வெள்ளனா எல்லாரும் வந்துருவாக எந்திரிச்சி காப்பிகீப்பி போட்டுக்குடுக்கனும் சரிசரி போயிப்படுனு சொல்லிச்சி பாட்டி நாளைக்கி ஆராரு என்ன என்ன பண்ணுவாகன்னுன்னு யோசிக்க ஆரம்பிச்சது போனவாரம் பாட்டியோட மூத்தமகன் முத்தையா போன் பண்ணான் அவனோட மூத்தமகன் குலதெய்வத்துக்கு பூசைபோட வரப்போறதா .ரெட்டக்கெடா வெட்டி பூசைபோடவேண்டுதலாம் அவன் ஒலகம்பூராம் கப்பல்ல சுத்துறவன் போனவருசம்தான் கலியாணமாச்சு இன்னும் அவன்பொண்டாட்டி வயத்துல புழுப்பூச்சி தங்கல.பூசைபோட்டாவது சரியாகும்ன்னு நெனச்சான் அப்ப ஆராருக்குசொல்லனும்னு கேட்டான் மகன்.பாட்டி நம்ம சொந்தங்கதான் அதுலயேஅம்பதுபேரு வருது அப்புறம் கோயிலுக்குவாரவுகபோறவுக எல்லாம் சாப்புடுவாக எப்புடியும் நூறநெருங்கும் னுசொல்லிச்சி பாட்டி பாட்டிக்கு ஏழுமகன்க ரெண்டு மகளுக உள்ளூருல மூணுபேரு மெட்ராசில ரெண்டு பக்கத்து ஊருல ஒண்னு கோயம்புத்தூருல ஒருமக பரமக்குடில ஒருமக ன்னு துண்டுதுண்டாக்கெடந்தாக அவுக எல்லாத்தையும் இந்தபூசை ஒண்ணுசேக்கும்ன்னு நெனச்சா பாட்டி எல்லாத்துக்கும் சொல்லிட்டயான்னு கேட்டுச்சு மகன சொன்னேன் பரமக்குடி மக வரலயாம் கோயம்புத்தூரு மகளுக்கு ஒடம்புசரியில்லையாம்னு சொன்னான் சரிவா பாத்துக்கலாம்னுமுத்தையா. சொல்லிச்சி பாட்டி நம்பிக்கையோட எப்பதூங்குனோம்னு தெரியல பாட்டிக்கு ஆரோ காலத்தொட்டமாதிரி இருந்துச்சு முழிச்சிப்பாத்தாமுத்தையாகாலத்தொட்டுகும்புட்டுகிட்டுஇருந்தான் கூட அவன் சம்சாரமும் ரெண்டாவது பேரனும்... .எந்திரிக்க நெனச்சா முடியல எம்பது வயசாச்சே வாப்பான்னு சொன்னா மருமக கும்புட்டா பேரனும்வணக்கம் சொன்னான் எப்ப வந்தீகன்னுகேட்டா பாட்டி காலையில வந்துட்டோம்அங்கயேகுளிச்சிட்டோம்னான்.மகன் பேத்திய எழுப்பிவிட்டுச்சுபாட்டி சீக்கிரம் காப்பிய கீப்பியபோடு முத்து வந்துட்டான் இனி எல்லாரும் வர ஆரம்பிச்சிருவாகன்னா அவ காப்பிபோடபோனா பேரன் எனக்கு வேணாம்னுன்னான் மருமக சக்கரை கம்மியாகுடுன்னா பரமக்குடிதங்கச்சி என்னாசொல்லிச்சின்னு கேட்டுச்சுபாட்டி. அப்புடியே போன போட்டுக்குடுன்னுசொல்லிச்சி போனுல நீ கட்டாயம் வரனும் ஒன்னப்பாக்கனும்போல இருக்கு ஆத்தான்னுசொல்லிச்சி அந்தப்பக்கம் ஏதோசொன்னவன்ன அதெல்லாம் விடு நான் சொல்றேன் வந்தே ஆகனும்னு சொல்லிடுச்சு பாட்டி அடுத்து கோயம்புத்துருக்குப் போனப்பொடுன்னு சொல்லிச்சி போட்டுகுடுத்தவன்ன ஏம்மா பேரம்பேத்திய பாக்கனும் கூட்டிட்டு வரயான்னு கேட்டுச்சு மறுபேச்சில்ல வாரென்னு சொல்லிடுச்சு அதுக்குள்ள ரெண்டாவதுமகனோட மகன் வந்து அப்பத்தா எல்லாரும் வந்துட்டாகளான்னு கேட்டான் முத்தப்பாத்துட்டு வாங்க பெரியப்பான்னான் அவனோட அப்பா இப்ப இல்ல அவனுக்கு மூணு அக்காமாருக அவுகளயும் வரசொல்லியாச்சு வாரென்னாக மூணாவது மகனும் இப்ப இல்ல அவனோட மக மெட்ராசுல வேலபாக்குது அந்தப்பேத்தியும் வாரென்னுசொல்லிருச்சு மீதிபேரனும் பேத்தியும் உள்ளூர்தான் நாளாவதுமகனும் மெட்ராசுதான் அவன் வரலன்னுசொல்லிட்டான் வெளியூர்போறானாம் எப்புடிப்பாத்தாலும் முக்காவாசிப்பேரு வந்துருவாகன்னு சொல்லிச்சி பாட்டி முத்து பூசைக்கிசாமாஞ்சட்டு வாங்க டவுனுக்குப்போயிட்டு சாயந்தரமா வந்தான் அன்னிக்கி அமாவாசை மூணாவது மகன் இல்லாததால அங்க வெரதம் விட்டாகஅன்னிக்கி எல்லாரும் அங்கதான் சாப்பாடு. இதுக்குநடுவுல கெடாப்புடிக்கபோனவன் போன்பண்ணான் கருப்புக்கெடா எங்கயும் கெடைக்கலன்னு மணி சாயங்காலம் ஆறு என்னா பண்ணுறதுன்னு தெரியல கையப்பெசஞ்சான்முத்துபாட்டிசொல்லிச்சி ஒன் மச்சானக்கேட்டுப்பாரு அவனுக்கு இதெல்லாம் பழக்கம்னு. போனபோட்டு வெவரம் சொன்னான் கொஞ்சநேரத்துல அவன் போன் பண்ணான் திருமங்கலத்துக்குப்பக்கத்துல செங்கப்படை கிராமத்துல ரெண்டு கருப்புக்கெடா இருக்குறதா. ஒடனே ஒரு ஆட்டோவப்புடிச்சிக்கிட்டு கெளம்புனான் முத்து அவன்கூட ரெண்டு பேரன்களும் போனாக வழில மச்சான் ஏறிக்கிட்டான் ஒருவழியா செங்கப்படையில கெடாகெடச்சது அப்புடியே கோயில்ல கொண்டுபோயி கட்டிட்டு வந்தாக காலையிலே கெடா வெட்டியாச்சு ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சாக மொதல்லவந்துது கோயம்புத்துரு பேத்திதான் இப்பவும் மாசமா இருந்தா அவளோடபுருசனோட மகனும் வந்திருந்தான் அப்புறமா பரமக்குடி மக வந்துச்சு இதுக்கு நடுவுல ப்பூசபோடுற பேரன் பொண்டாட்டி மச்சானோட வந்தான் அப்புறம் நண்டுஞ்சிண்டுமா பேரன் பேத்திக மகன்க மருமகளுக அக்கா தங்கச்சின்னு கோயிலு நெறைஞ்சிடுச்சு புள்ளைகளுக்கு ஒரே கொண்டாட்டாம் குறுக்க நெடுக்கயுமா ஒடுச்சுக பாத்து புள்ளைகளா கீழ விழுந்துடாதீகன்னு பாட்டிசொல்லிச்சி ஒருபக்கம் கிடா பிரியாணி சக்கரபொங்கல் புளியோதர வெந்துக்கிட்டு இருந்துச்சு இன்னோருபக்கம் நாட்டுக்கோழிஅடச தனியா ஆம்பளைக தயார்பண்ணிக்கிட்டு இருந்தாக அது பொம்பளைக கைப்படக்குடாதுன்னு பழக்கம் மறுபக்கம் மட்டன் குழம்பு சுக்கான்னு தயாராகிட்டு இருக்கு வாசம் மூக்கத்தொளைக்கிது வந்தவுக எல்லாம் கதை பொறணி எல்லாம் பேசிக்கிட்டுஇருந்தாக கோயிலே கலகலப்பா இருந்துச்சு. மறுபக்கம் சாமிகளுக்கு அபிசேகம் அலங்காரம்ன்னு களகட்டிடுச்சு நெருக்கி எல்லாரும் வந்துட்டாக ஆனா கெடாப்புடிச்சிக்குத்த மச்சான் வரல அவுக ஊருல ஒரு கேதமாம் வரலேட்டாகும்ன்னாக மணி 12 ஆயிப்போச்சு இனிமே லேட்டுப்பண்ண முடியாதுன்னு பூஜையபோட்டாக சைவச்சாமிக்கி சைவ பூஜை அசைவச்சாமிகளுக்கு அசைவபூஜைன்னு கோயிலே சாம்பிராணி பத்தி வாசனையோட மட்டன் சிக்கனும் பிரியாணியும் மணத்துச்சுபூசை முடிஞ்சிச்சி.இப்போ எல்லாரும் பாட்டிய சுத்திநின்னாக பாட்டி ஒவ்வொருத்தரா கூப்புட்டு துண்ணூரு குடுத்துச்சு. மூத்தமகனும் மருமகளும் கால்ல விழுந்து வாங்கிக்கிட்டாக அப்புறம் பூசைபோட்ட பேரனும் அவனோட சம்சாரமும் கால்ல விழுந்தாக கொள்ளுப்பெரனோ பேத்தியோ சீக்கிரம் வரனும்ன்னு பாட்டி சொல்லும்போது கண்ணு கசிஞ்சிச்சு ரெண்டாவது மகனோட மகனோட மகன் வந்துகால்லவுழுந்தப்ப செத்துப்பொன மகன் நெனப்புவந்து அழுக ஆரம்பிச்சிடுச்சு. முத்தையா இவனுக்கு நல்ல ஆயுள குடுன்னுஅழுதுகிட்டே சொல்லிச்சி மூணாவதுமகனோட மகன் மகளுக மருமக எல்லாரும் மொத்தமா கால்ல வுழுந்தப மருகளை கட்டிப்புடிச்சி கண்ணீர் விட்டுச்சு அவளும் கண்ணீர்விட்டா போன புருசன நெனச்சு. பக்கத்துல நின்ன எல்லாருக்கும் கண்ணீர் முட்டுச்சு. முந்தானையில தொடச்சிக்கிட்டாக அப்புறம் நாலாவதுவராததை நெனச்சு ஏங்குச்சு அஞ்சாவது ஆறாவது ஏழாவதுன்னு பேரன் பேத்திகளுக்கு துண்ணூரு பூசிவிட்டுச்சு அப்புறமா மூத்தமக பரமகுடிக்காரியும் அவளோட மக மருமகன் வந்திருந்தாக அவுகளுக்கும் பிள்ளயில்ல அதநெனச்சி கண்ணீர்விட்டுச்சு ஒருவழியா எல்லாம் முடிஞ்சி சாப்புடப்போனாக சாப்பாடு திருப்திகரமா இருந்துச்சு. சக்கரபொங்கலும் புளியோதரையும் கிடாபிரியாணியும் சுக்காவும் கொஞ்சூண்டு கருவாட்டுக் கொழம்பும் கலக்கிடுச்சு. கோயிலுக்கு வந்துருந்த எல்லாரும் சாப்புட்டாக வெளில இருந்த பிச்சகாரவுக சாமியாருக எல்லாரும் சாப்புட்டாக அப்ப மச்சான் வந்தான் அவனும் சாப்புட்டுட்டு பேசிகிட்டு இருந்தான் எல்லாரும் கெளம்புறதுக்கு முன்னாடி பாட்டி சொல்லிச்சி எப்பயும் இதுபோல வருசத்துக்கு ஒருதடவையாவது வாங்க மக்கான்னு சொல்லும்பொது பாட்டி அழுதிருச்சு எல்லாரும் கண்ணுகலங்க தொடச்சிக்கிட்டே கெளம்புனாக அந்தகாலத்துல ஒம்போது புள்ளபெத்தமகராசி கண்ணுகலங்க வழியனுப்பிக்கிட்டு இருந்தா இனிமே எல்லாம் வார வாரிசுகளுக்கு இந்தக்குடுப்பின கெடையாது சித்தப்பா சின்னம்மா மாமா மச்சான் பெரியப்பா பெரியம்மா ஒண்ணுவிட்ட சகோதரன் சகோதரின்னு கெடையாது அடுத்த தலமொறல எல்லாரும் தனிதான் கூட்டமே இல்ல ஆரும் ஆலமரமா இருக்க முடியாதுஎல்லாம்ஒத்தப்பனமரம்போலத்தான் ந்னு நெனைக்கும்போதுஅவவிட்ட கண்ணீருல கருப்பசாமியே கண்ணீர் விட்டமாதிரி இருந்துச்சு இந்தக்கூட்டமான பழக்கம் இனிமே இருக்குமான்னு தெரியல நம்ம சொந்தங்கஎல்லாம் இப்புடி ஒண்ணுசேருமா இனிமேன்னு தெரியல இப்புடி எல்லாரும் ஒண்ணா சேந்து நம்மள வழியனுப்பனும் முத்தையான்னு கையெடுத்துக்கும்புடும்போது கண்ணீரால பாட்டியோட சேல நனைஞ்சது. கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்
  5. கடற்கரையினை அண்மித்ததாகச் செல்லும் சிறிய வீதிவழியாக எமது வாகனம் பயணத்தைத் தொடர்ந்தது. வலைஞர்மடம் பகுதியிலிருந்து குறுகிய பாதை வழியாக மீண்டும் பரந்தன் முல்லைத்தீவு பாதைக்கு ஏறி சிறிய தூரம் ஓடியபின்னர் இடதுபுறமாகத் திரும்பி முள்ளிவாய்க்காலை அடைந்தோம். நான் பார்க்க வந்தது இந்த இடத்தைத்தான். என் உறவுகள் பல்லாயிரக்கணக்கில் சிங்கள இராணுவ மிருகங்களால் பலியிடப்பட்டதும் இந்த இடத்தில்த்தான். இந்தவிடத்தை காணொளிகளில் பார்க்கும் ஒவ்வொரு கணமும் மிகுந்த வலியை எனக்கு ஏற்படுத்தும். ஆனாலும், நாம் ஏன் சோர்ந்து வீழ்ந்துவிடக்கூடாது என்பதற்கும் இதே முள்ளிவாய்க்காலே எமக்குக் காரணமாகவும் அமைந்திருக்கும். அதைவிடவும் ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்திற்காகவும் தம்மை அர்ப்பணித்த லட்சக்கணக்கான மக்களினதும் இறுதிவரை தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களினதும் ஆன்மாக்கள் இப்பகுதியின் காற்றில் பரவியிருப்பதாக நான் உணர்கிறேன். ஆகவே தான் அந்த ஆன்மாக்களுக்கு எனது இறுதிவணக்கத்தைச் செலுத்த இங்குசெல்லவேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நாம் வாகனத்தை வீதி முடிவடையும் இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கிக்கொண்டோம். முன்னிரவு பெய்த மழையால் நிலம் சற்று ஈரமாக இருந்தது. மணல் நிறைந்த மைதானம் போன்று காட்சியளித்த அப்பகுதியின் மத்தியில் சீமேந்தினால் கட்டப்பட்ட சிறிய நினைவுச் சின்னம் தெரிந்தது. அதனை நோக்கி நடக்கத் தொடங்கினோம். சுமார் 200 - 300 மீட்டர்கள் பக்க நீளத்தைக் கொண்ட சதுரவடிவ மைதானமாகக் காட்சியளித்தது அப்பகுதி. ஒருபுறம் பற்றைகளும், பனைமரங்களும் காணப்பட, இன்னொரு புறம் சில வீடுகள் தெரிந்தன. மக்கள் இப்போது அங்கு வாழத் தொடங்கியிருக்கலாம். இனம்புரியாத நிசப்தம் அங்கு நிலவியது. எந்தச் சத்தமும் இன்றி அமைதியாகக் கிடந்தது அந்தப் பகுதி. இற்றைக்கு 15 வருடங்களுக்கு முன் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஓலங்களையும், அழுகுரல்களையும் இடைவிடாது கேட்ட அந்தப் பூமி இப்போது அமைதியாகக் கிடந்தது. மணற்றரையூடாக நினைவுச் சின்னம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள். நான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடியிலும் எத்தனை உறவுகள் கொல்லப்பட்டிருக்கலாம்? எத்தனை உறவுகள் போராடி மடிந்திருக்கலாம்? எத்தனை பெண்களை சிங்கள மிருகங்கள் கடித்துக் குதறியிருக்கலாம்? சாவரும் வேளையில் அந்த உறவுகள் முகங்கொடுத்த அவலங்கள் எப்படி இருந்திருக்கும் ? என்று பல கேள்விகள் மனதில் எழ முள்ளிவாய்க்கால் பலிப்பீடத்தின் மத்திநோக்கி நடந்துகொண்டிருந்தோம். மைத்துனரின் மகனுக்கும், சாரதியாக வந்த இளைஞருக்கும் இப்பகுதி குறித்த பிரக்ஞை எவ்வளவு தூரத்திற்கு இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எனக்கும் மைத்துனருக்கும் மனதில் எழுந்த எண்ணங்களைச் சொல்லில் வடித்துவிடமுடியாது. அப்பகுதியில் இறங்கியதுமுதல் மைத்துனர் தனது கையடக்கத் தொலைபேசியில் அப்பகுதியை ஒளிப்படமாக எடுக்கத் தொடங்கினார். அப்பகுதியில் கையில் குழந்தைகளைச் சுமந்துகொண்டு உயிர்காக்க ஓடிக்கொண்டிருந்த பொழுதுகள் அவரது நினைவிற்கு வந்திருக்கலாம். ஆகவே தான் எடுத்துக்கொண்டிருந்த ஒளிப்படத்துடன் பின்னணியில் தனது நினைவுகளையும் அவர் பகிர்ந்துகொண்டிருந்தார். நானும் ஒளிப்படம் எடுக்கத் தொடங்கினேன். இறுதி யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரான காலத்திலும் முள்ளிவாய்காலில் சிங்கள மிருகங்களால் நிகழ்த்தப்பட்ட மனித நாகரீகத்திற்கு முரணான படுகொலைகளை, அட்டூழியங்களை நான் அறிந்துகொண்ட வகையில் அந்த ஒளிப்படத்தில் பின்னணியில் பதிந்துகொண்டேன். ஆனால், எம்மைப்போல பலர் இந்த பகுதியைப் படமாக்கியிருப்பதுடன் அவலங்களையும் பதிந்திருக்கிறார்கள் என்பதால் எனது ஒளிப்படம் குறித்து நான் இங்கு தனியாகப் பதியவேண்டிய தேவையில்லை என்று நினைக்கிறேன். நீண்டநேரம் அப்பகுதியில் நின்றிருந்தோம். சுற்றிச் சுற்றி நடந்து அப்பகுதியினை அண்மித்துக் காணப்பட்ட இடங்களை, பற்றைகளை, பனைமரக் கூடல்களைப் பார்வையிட்டோம். மேல்மணலைத் தட்டிவிட்டுப் பார்த்தால் உடைந்த மட்பாண்டங்கள், அலுமினிய கோப்பைகள், எவர்சில்வர் பாத்திரங்கள், கிழிந்த உடைகள், செருப்புக்கள் என்று பல பொருட்கள் அப்பகுதியெங்கும் இன்னமும் பரவிக் கிடக்கின்றன. இவை எல்லாமே எமது உறவுகளால் அவர்களின் இறுதிக் கணங்களில் பாவிக்கப்பட்டவை. இவற்றுக்கு உணர்வுகளும், பார்வையும் இருந்திருந்தால் எம்மக்கள் பட்ட துன்பங்களை இன்று சாட்சியாகச் சொல்லியிருக்கும். ஆனால், சாட்சியங்கள் எதுவுமற்ற பாரிய இனக்கொலையொன்றினை சிங்கள பெளத்த தேசம் எம்மீது கட்டவிழ்த்து விட்டது என்பதே உண்மை. இறுதியாக முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தினைச் சிலமுறை சுற்றிவந்துவிட்டு அதன் முன்னால் நின்று படமெடுத்தேன். இது எனக்காக நான் எடுத்துக்கொண்டது. அநியாயமாகக் கொல்லப்பட்ட எனது உறவுகளைப் பார்க்கவந்தேன் என்பதை எனக்கு நானே அவ்வபோது சொல்லிக்கொள்ள எடுத்துகொண்டது, எதனையும் விளம்பரப்படுத்தவல்ல.
  6. தங்களின் வாழ்த்துக்கும் ஊக்கமளிக்கும் ஆர்வத்திற்கும் நன்றி, திரு. இணையவன் ! இப்போதைக்கு காவ்யா பதிப்பகம், Commonfolks, Dinamalar books, நெல்லை பாரதி புத்தகாலயம் மற்றும் சில புத்தக நிலையங்களில் மட்டுமே கிடைக்கும். Amazon அல்லது Kindle ல் ஏற்றும் எண்ணம் உள்ளது. அந்த அளவு நான் அறியப்பட்டால், உங்களுக்குத் தெரியப்படுத்துவேன். மீண்டும் நன்றி, ஐயா !
  7. அம்பலவன் பொக்கனையிலிருந்து கடற்கரைச் சாலையூடாக வலைஞர் மடம் பகுதிக்கு வந்தோம். அண்மையில் பெய்த கடும் மழையினால் அப்பகுதியெங்கம் வெள்ளம் தேங்கி நின்றிருந்தது. இப்பகுதியில் பெரும்பாலான வீடுகள் இன்னமும் இடிந்த நிலையிலேயே காணப்படுகின்றன. நிலங்கள் மக்களின் பாவனையின்றி இருப்பதால் பாரிய பற்றைக்காடுகளாக வளர்ந்திருக்கின்றன. வெகு சிலரையே இங்கு காண முடிந்தது. இனக்கொலையாளிகளான சிங்களப் பேரினவாத மிருகங்களின் படங்களைத் தாங்கி நிற்கும் போரின் சாட்சிகளான வலைஞர் மடக் கட்டிடங்கள் இப்பாதையினால் பயணித்து வலைஞர் மடம் (முள்ளிவாய்க்காலுக்கு உட்பட்ட இன்னொரு பகுதி) பகுதியை வந்தடைந்தோம். இப்பகுதியில் காணப்பட்ட இரு கட்டடங்கள் இனக்கொலையில் முக்கிய பாத்திரத்தை வகித்திருக்கின்றன. மைத்துனரின் குடும்பமும் இடப்பெயர்வின்போது இப்பாகுதியில் பனைமரங்களுக்குக் கீழ் மறைப்புக்கட்டி வாழ்ந்திருக்கின்றது. இக்கட்டடங்களில் இருந்து சுமார் 50 மீட்டர்கள் தூரத்திலேயே அவரது குடும்பம் தஞ்சம் அடைந்திருந்தது. அக்காலத்தில் இப்பகுதியெங்கும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டதாக அவர் சொல்கிறார். இப்பகுதியிலும் ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தால் பலியிடப்பட்டனர். தற்காலிக வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டிருந்த இக்கட்டடங்களுக்குள் காயங்களோடு கொண்டுவந்து சேர்க்கப்பட்ட பலர் மருந்தின்றியும், கடுமையான இரத்தப்போக்கினாலும் இறந்துபோயினர். தான் அங்கிருந்த ஓரிரு நாட்களில் மட்டும் இக்கட்டடங்களுக்கு முன்னால் கிடத்திவைக்கப்பட்டிருந்த உடல்களின் எண்ணிக்கை பல நூறுகளைத் தாண்டும் என்று தனது நினைவுகளைப் பகிரும்போது கூறினார். கொல்லப்பட்டவர்களின் பிணங்களிலிருந்து வீசியவாடை அப்பகுதி முழுதையும் ஆக்கிரமித்திருந்தது. கொல்லப்பட்டவர்களைப் பற்றி எவரும் அதிகம் அக்கறை கொண்டிருக்கவில்லை. உயிருடன் மீதமாயிருப்போர் தமதுயிரைக் காத்துக்கொள்வதில் மட்டுமே அக்கறை காட்டினர். மரணம் என்பது மலிந்த பொருளாகிவிட்டிருந்தது என்று அவர் கூறினார்.
  8. ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம் நேற்று ஜோர்தான் சிரியா எல்லையில் நிலைகொண்டிருந்த அமெரிக்கத் இராணுவம் மீது அப்பகுதியில் இயங்கிவரும் ஈரானின் ஆதரவுபெற்ற தீவிரவாத அமைப்பொன்று நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் இன்னும் 30 பேர்வரையில் காயப்பட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டிலிருந்து இப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க இராணுவத்தினர் ஐஸிஸ் பயங்கரவாத அமைப்பிற்கெதிராகவும், போதைவஸ்த்து நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானினால் வழங்கப்பட்ட தற்கொலை ட்ரோன் வகையினைச் சேர்ந்த ட்ரோன் ஒன்று அமெரிக்கப் படையினரின் பிரதான தங்குமிடப் பகுதியில் தரையிறங்கி வெடித்துச் சிதறியதாகவும் இதனாலேயே இவ்விழப்புக்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஹமாஸ் தீவிரவாத அமைப்பு ஐப்பசி 7 ஆம் திகதி நடத்திய பயங்கவாதத் தாக்குதலுக்குப் பின்னர் நேரடியாக யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தினர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்களை விடவும் மேலும் அமெரிக்க சீல் விசேட படைகளின் இரு உறுப்பினர்கள் மத்திய கிழக்கில் கடல் விபத்தொன்றில் அண்மையில் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்தினை காசாவிற்குள் மட்டுப்படுத்திவிட அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளை இவ்வாறான தாக்குதல்கள் பரந்த மத்திய கிழக்குப் போராக மாற்றிவிடக் கூடியன என்று கருதப்படுகிறது. இத்தாக்குதலையடுத்து ஈரான் மீது நேரடியான தாக்குதல்களை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கைகள் அமெரிக்க செனட்டர்களால் முன்வைக்கப்படத் தொடங்கியிருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
  9. வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம் காசாவில் இஸ்ரேலியப் பயங்கரவாதிகள் நடத்திவரும் திட்டமிட்ட இனக்கொலையில் மிக அண்மையில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த , யுத்தத்தில் எவ்விதத்திலும் பங்கேற்றிருக்கத பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். தீவிரவாதக் குழுவான ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான போரில் அகப்பட்டு கடுமையான அவலங்களைச் சந்தித்துவரும் பாலஸ்த்தீன மக்கள் தமதுயிரைக் காத்துக்கொள்ள முடிந்தவகையில் இப்பகுதியிலிருந்து வெளியேற முயன்று வருகிறார்கள். அவ்வாறான ஒரு முயற்சியில் தனது பேரக்குழந்தையின் கைகளைப் பிடித்தவாறு சுமார் 15 முதல் 20 வரையான பெண்கள் சிறுவர்கள் கொண்ட மக்கள் கூட்டமொன்றை இஸ்ரேலின் முன்னரங்கு நோக்கி கைகளில் வெள்ளைக்கொடியினை ஏந்தியவாறு வந்த வயோதிபப் பெண்னொருவரை சுமார் 200 மீட்டர்கள் தூரத்தில் நின்ற இராணுவத் தாங்கியிலிருந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். இன்னொருவிடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமது சகோதரரைப் பார்வையிட இன்னும் மூவரை அழைத்துக்கொண்டு இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியொன்றினுள் வெள்ளைக்கொடியுடன் சென்ற நபரை வெகு அருகில் இருந்து இஸ்ரேலியத் தாங்கி சுட்டுக் கொல்கிறது. அவரது வெள்ளைக்கொடி அவரது குருதியில் முற்றாகத் தோய்ந்திருக்கிறது. இன்னொரு சம்பவத்தில் உங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெள்ளைக்கொடியுடன் வெளியே வாருங்கள் என்று இஸ்ரேலிய இராணுவத்தால் அழைக்கப்பட்டபோது, அதனை உண்மையென்று நம்பி வெள்ளைக்கொடியுடன் வெளியே வந்தவர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்திக் கொல்கிறது. இத்தாக்குதல்களின் ஒளிப்படங்கள் சி.என்.என் தொலைக்காட்சியில் விலாவாரியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொல்லப்பட்ட மக்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருக்கும் இஸ்ரேலிய மிருகங்களின் தாங்கிகளும் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பார்க்கும் போது 2009 இல் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தபோது கொல்லப்பட்ட பலநூற்றுக்கணக்கான புலிகளின் அரசியல்த் துறைப்போராளிகளும், பொதுமக்களும் நினைவிற்கு வருகின்றனர். அன்று நடந்தது அப்பட்டமான போர்க்குற்றமும் இனவழிப்பும் தான் என்பதில் சந்தேகம் இல்லை. இன்று இஸ்ரேலின் இனவழிப்பைச் சரியென்று வாதிடும் குரூரர்களுக்கு இது சமர்ப்பணம். https://edition.cnn.com/2024/01/26/middleeast/hala-khreis-white-flag-shooting-gaza-cmd-intl/index.html#:~:text=The IDF has repeatedly claimed,raising questions about those efforts.
  10. ஈரானின் சக்திவாய்ந்த நட்பு நாடுகளில் இந்தியா எந்தவித உதவியும் செய்ய மாட்டாது. சீனா இராணுவ உதவி செய்யாது. ரஸ்யா இராணுவ உதவி செய்யும் நிலையில் இல்லை. ரஸ்யாவே ஈரானின் ஆயுத உதவியை நாடி நிற்கிறது. எதை ஆதரவாக வைத்து அமெரிக்காவை ஈரான் சீண்டுகிறது என்று புரியவில்லை.
  11. அநேகமாக ஈரானிய ஆதரவு இராணுவக் குழுக்கள் மீதான அமெரிக்காவின் வான் தாக்குதல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.
  12. ராஜ் ராஜரட்னத்தின் கைது என்பது தமிழர் புனர்வாழ்வு கழகத்துடன் தொடர்பு பட்ட ஒரு சம்பவம். அவரும் குடும்பமும் நீண்ட காலமாக தமிழ் தேசியத்துடன் வாழ்ந்தவர்கள். நன்றாக திட்டமிட்டு கைது பண்ணி உள்ளே தள்ளிவிட்டார்கள்.
  13. இப்ப சொந்தபந்தமெல்லாம் ரொம்ப சுருங்கிட்டுது.......முத்துவிஜயனும் உறவுகள் விட்டுப்போவதையிட்டு கவலைப் படுகின்றார்போல .......! நன்றி சகோதரி......!
  14. ஐபிஎல்லில் எடுத்து காயங்கள் வர வைக்கிறாங்களோ தெரியாது.
  15. இந்த இள‌ம் வீர‌ர் ம‌ட்டையாலும் ப‌ந்தை ந‌ல்லா அடிப்பார் அண்ணா..............சிற‌ந்த‌ வீர‌ர் வாழ்த்துக்க‌ள்🥰🙏...................
  16. ஷமர் ஜோசப்(Shamar Joseph): அன்று பாதுகாப்பு ஊழியர் வேலை; இன்று ஆஸ்திரேலியாவை ‘சுருட்டிய’ மேற்கிந்திய நட்சத்திரம்...
  17. அது என்னுடைய அனுபவத்தில் இருந்து வந்த கருத்து. என்னைப் பொறுத்தவரை எமது இனத்தின் ஈடுபாடு இன்மையும் காட்டிக்கொடுப்புமே அவர்களின் அழிவு மற்றும் இன்றைய இந்த இழிநிலைக்கும் காரணம். எமது இனத்தின் பலவீனங்களை விடுத்து மற்றவர்கள் அல்லது யார் மீதோ பழி போட்டு விட்டு நாம் தப்புதல் என்பது எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள மட்டுமே உதவும். நன்றி.
  18. “ராஜ்ராஜரட்னத்தைப் போன்ற புலம்பெயர்ந்த தமிழர்களை தேசத்தை நிர்மாணிப்பது ஏன்ற அடிப்படையில் எவ்வாறு தாயகத்தில் முதலீடு செய்ய வைப்பது என்று ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.ஏற்கனவே ஒரு தொகுதி புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் வெவ்வேறு தொழில்துறைகளில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டார்கள்.இந்த முதலீடுகளை நெறிப்படுத்தக்கூடிய ஒரு கட்டமைப்பை ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களோடு இணைந்து உருவாக்க வேண்டும்.” @alvayan, @kandaiya, @விசுகு
  19. கிரிக்கேட்டில் இந்த உல‌க‌ கோப்பை மிக‌ முக்கிய‌ம் சுவி அண்ணா............இதில‌ திற‌மையை காட்டின வீர‌ர்க‌ளுக்கு கிரிக்கேட்டில் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு.............. அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் அனைத்து விளையாட்டிலும் தோல்வி..........முன்னைய‌ 19வ‌ய‌து உல‌க‌ கோப்பையில் அப்கானிஸ்தான் இள‌ம் வீர‌ர்க‌ள் ந‌ல்லா விளையாடின‌வை அதில் திற‌மையை காட்டின‌ வீர‌ர்கள் தான் அப்கானிஸ்தான் தேசிய‌ அணியிலும் ம‌ற்றும் ஜ‌பிஎல்ல‌ க‌ல‌க்கின‌ம்..............இல‌ங்கை அணியில் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ஒரு த‌மிழ‌ன் இட‌ம் பிடித்து இருக்கிறார்..........விளையாடின‌ மூன்று விளையாட்டில் இர‌ண்டு விளையாட்டில் ந‌ல்லா விளையாடினார்🙏🥰..............
  20. இங்லாந் ப‌டு தோல்வி அடையும் நிலையில் இருந்து வென்று விட்டார்க‌ள்............இங்லாந் அணிக்கு வாழ்த்துக்க‌ள்😁...............
  21. இந்த‌ விளையாட்டு தொட‌ங்க‌ முத‌ல் மேற்கிந்தியத் தீவு அணி இந்த‌ ம‌ச்சை வெல்வார்க‌ள் என்று நினைக்க‌ல‌............ஆனால் மேற்கிந்தியத் தீவு அணி வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் நான்காவ‌து இனிங்சில் ந‌ல்ல‌ போட்டார்க‌ள் அத‌னால் தான் விளையாட்டை 1-1 என‌ ச‌ம‌ நிலையில் முடித்தார்க‌ள்.............
  22. குடும்பம் ஊர் தாயகம் கட்சி எதுவாயினும் முன்னுதாரணமான தலைமை அமையவில்லை என்றால் இப்படித்தான் உலகமே சிரிக்கும். நாம் என்று சிந்திக்காதவரை எந்த விமோசனமும் இல்லை.
  23. ஷமர் ஜோசப்பின் பந்துவீச்சில் அவுஸ்திரேலியாவை அதிரவைத்தது மேற்கிந்தியத் தீவுகள் 28 JAN, 2024 | 02:33 PM (நெவில் அன்தனி) பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (28) நிறைவுபெற்ற மிகவும் பரபரப்பான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் (பகல் இரவு) நடப்பு உலக டெஸ்ட் சம்பயின் அவுஸ்திரேலியாவை 8 ஓட்டங்களால் இளம் வீரர்களைக் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றிகொண்டது. தனது 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷமர் ஜோசப் மிகத் துல்லியமாக அவுஸ்திரேலியாவின் 7 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. ஷமர் ஜோசப் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 1 என மேற்கிந்தியத் தீவுகள் சமப்படுத்திக்கொண்டது. அடிலெய்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அவஸ்திரேலியா 10 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது. 216 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சகல விக்கெட்களையும் இழந்து 207 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அவுஸ்திரேலியாவின் வெற்றிக்காக ஸ்டீவன் ஸ்மித் கடுமையாக முயற்சித்த போதிலும் ஏனையவர்களிடம் இருந்து போதுமான பங்களிப்பு கிடைக்கவில்லை. போட்டியின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தனது 2ஆவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா 3ஆவது விக்கெட்டில் ஸ்டீவன் ஸ்மித், கெமரன் க்றீன் ஆகியோர் பகிர்ந்த 71 ஓட்டங்களின் உதவியுடன் மொத்த எண்ணிக்கையை 113 ஓட்டங்களாக உயர்த்திக்கொண்டது. ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் வீரர்கள் ஆட்டம் இழக்க கடைசி 7 விக்கெட்கள் 94 ஓட்டங்களுக்கு சரிந்தன. ஷம்ரன் ஜோசப் 68 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தியுடன் அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்களையும் ஜஸ்டின் க்றீவ்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். வியாழக்கிழமை (25) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் பெற்ற 311 ஓட்டங்களையே அதிகப்பட்ச மொத்த எண்ணிக்கையாக இருந்தது. எணிக்கை சுருக்கம் மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 311 (ஜொஷுவா டா சில்வா 79, கவெம் ஹொஜ் 71, கெவின் சின்க்ளயா 50, அல்ஸாரி ஜோசப் 32, மிச்செல் 82 க்கு 4 விக்,, ஜொஷ் ஹேஸல்வூட் 38 - 2 விக்., நெதன் லயன் 81 - 2 விக்.) அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 289 - 9 விக். டிக்ளயார்ட் (உஸ்மான் கவாஜா 75, பெட் கமின்ஸ் 64, அலெக்ஸ் கேரி 65, அல்ஸாரி 84 - 4 விக்., கெமர் ரோச் 47 - 3 விக்.,) மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 193 (கேர்க் மேக்கென்ஸி 41, அலிக் அத்தானேஸ் 35, ஜஸ்டின் க்றீவ்ஸ் 33) அவுஸ்திரேலியா 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 216) சகலரும் ஆட்டம் இழந்து 207 (ஸ்டீவன் ஸ்மித் 91 ஆ.இ., கெமரன் க்றீன் 42, மிச்செல் ஸ்டார்க் 21, ஷமர் ஜோசப் 68 - 7 விக், அல்ஸாரி ஜோசப் 62 - 2 விக்.) ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன்: ஷமர் ஜோசப் https://www.virakesari.lk/article/174987
  24. நான் இந்த விளையாட்டை அதிகம் பார்க்கவில்லை.........பையனின் விமர்சனத்தைப் பார்க்கும்போது விளையாட்டு செம்மையாய் இருக்கும் போல் இருக்கின்றது......பார்க்கலாம்......பார்ப்பம்......! 😁
  25. இன்று (24-12-2023) என் குருநாதர் பேரா.தொ.பரமசிவன் அவர்கள் நினைவு நாள். "பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" எனும் கொள்கை வழி நின்றவர் தொ.ப. எனவேதான் தமிழூரில் என்னைப் போன்ற சாமானியரும் அவர் அருகில் செல்ல முடிந்தது; எங்கள் அறிவுக்கு எட்டிய வரை அவரிடம் திரட்ட முடிந்தது; என் குருநாதர் என்று அவரைச் சொல்லிக் கொள்ளும் அளவு தைரியம் வந்தது; ஏன், எழுத்தாணி பிடிக்கும் அளவு மனத்திடமே வந்தது ! எனது முதல் முயற்சி 'என் வானம் என் பூமி' என முகிழ்த்தது. இரண்டாம் முயற்சி 'அதே வானம் அதே பூமி' என விரிந்து நிற்கிறது; என் மனம் கவர்ந்த அதே காவ்யா பதிப்பகத்தில் - வாசகர் வட்டம் அதே என்றில்லாமல் மேலும் விரிந்து அமையும் எனும் ஆவலுடன். தம் சீடன் ஒருவன் தாம் காட்டிய வழியில் எழுதிய நூலொன்றை வெளிக்கொணர்வதை விட ஒரு ஆசானுக்கான சிறந்த நினைவேந்தல் வேறு என்னவாக இருக்க முடியும் ! https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02mMW5ESc8ubZvGyR1EgjGymKrN67rms1E6k87TmCLZyuD7dV5Mkr6bcXpv9YcK5ctl&id=100083780391980&mibextid=Nif5oz
  26. யூதர்கள் அங்கு போய் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்து, குழந்தைகளை வெட்டி கொன்று, அப்பாவிகளை கொலை செய்து , குழந்தைகளை கடத்திக்கொண்டு போய் பணயக்கைதிகளாக வைத்திருக்கவில்லை. அவர்கள் அங்கு வசதியாக வாழந்தார்கள் என்பதுதான் அவர்கள் செய்த குற்றம். இப்போது முஸ்லீம் தேசமாக மாறி இருக்கிறது. இப்போது அவர்களுக்கு அது சந்தோஷம்தானே. அப்படி என்றால் என் இலங்கையில் இனவழிப்பு நடை பெற்றது என்று சர்வதேச நீதி மன்றத்துக்கு கொண்டு செல்லப்படவில்லை? தென் ஆபிரிக்கா இதையும் கொண்டு செல்லலாம்தானே? எல்லாவற்றிட்கும் பணம் வேண்டும். பணம் கொடுத்தால் இனப்படு கொலை, இல்லாவிட்ட்தால் யுத்தத்தில் ஏட்படட இழப்புக்கள்.
  27. கட்சியில்தான். இந்தியாவின் நெருக்குதல் அப்படி.
  28. ஆரம்பத்தில் சுற்றியிருந்த முஸ்லீம் நாடுகளுடன் சேர்ந்து இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து அழிப்பதாகப் பாலஸ்த்தீனர்கள் போரிட்டாலும் கூட இன்று நடப்பது தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள, தாம் முற்றாக ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்துக்கொள்ள நடக்கும் போராட்டம் மட்டுமே என்பதுதான் எனது வாதம். ஈழத்தமிழர்களினதும், பாலஸ்த்தீனர்களினதும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டபோதிருந்த நோக்கங்கள் வேறு வேறாக இருப்பினும்கூட 2009 இல் எம்மீது நடத்தப்பட்ட இனக்கொலைக்கு நிகரான இனக்கொலை இன்று பாலஸ்த்தீனர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.
  29. நூல் வெளியீட்டு விழா சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள் நன்பரே .......!
  30. முல்லைத்தீவு நோக்கிய பயணத்தில் நான் கண்ட இன்னொரு முக்கியமான இடம் புலிகளால் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்த தேக்கங்காடு. காட்டுவளத்தைக் காக்கவும், எதிர்காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்கென்றும் புலிகளால் தாயகத்தின் சிலவிடங்களில் இவ்வாறான காட்டு வளர்ப்பு முன்னெடுக்கப்பட்டு வந்தது. இச்சாலையூடாகப் பயணிக்கும்போது இதனழகைத் தரிசிக்க முடியும். ஆனால், இன்று இத்தேக்கங்காடுகளை வெட்டி விற்பதற்கு தெற்கிலிருந்துந்து வரும் வியாபாரிகளுக்கு அரசாங்கம் அனுமதி கொடுத்திருப்பதாக சாரதி கூறினார். அதன்படி இக்காட்டின் ஒருபகுதி தற்போது வெட்டப்பட்டு வருகிறது. இதன் முழு நீளத்திற்கும் வீடியோப் பதிவொன்றினைச் செய்திருந்தேன். இக்காட்டின் மத்தியில், பரந்தன் முல்லைத்தீவு வீதியில் பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவப்போது இவ்வீதியால் பயணிப்போரை மறித்து விசாரிப்பதும் நடக்கும். எனது ஒளிநாடாவிலிருந்து எடுக்கப்பட்ட படம் கீழே. பரந்தன் முல்லைத்தீவு பாதையிலிருந்து கண்டல் வழியாகக் கடற்கரை நோக்கிச் செல்லும்போது இறுதி யுத்தத்தின் இனக்கொலை நாட்களின் அவலங்களைத் தன்னகத்தே அமிழ்த்தி வைத்திருக்கும் சிலவிடங்கள் வருகின்றன. அவற்றுள் முக்கியமானது புதுமாத்தளன் பகுதி. துரதிஸ்ட்டவசமாக அப்பகுதியில் இடம் பார்க்கும் அவதியில் படமெடுக்கமுடியாது போய்விட்டது. ஆனால் அம்பலவன் பொக்கனைப் பகுதியில் நின்று, நிதானித்து சில படங்களையும், ஒளிப்படங்களையும் பதிவுசெய்துகொண்டோம். அவற்றுள் சில கீழே. அம்பலவன் பொக்கனைப் பகுதியில் கடற்கரையினை அண்மித்ததாக சிறிய பற்றைகள் காணப்படுகின்றன. இப்பகுதியில் அகோர பல்குழல்த் தாக்குதலிலும், விமானக் குண்டுவீச்சிலும் கொல்லப்பட்ட பலரை இவ்வாறான பற்றைக்காடுகளுக்குள் மக்கள் கைகளால் மணலைத் தோண்டிப் புதைத்திருக்கிறார்கள். காயப்பட்டவர்களுக்கு இப்பகுதியில் வைத்தே அறுவைச் சிகிச்சை மயக்கமருந்தின்றி நடைபெற்றிருக்கிறது. இப்பகுதியில்த் தோண்டிப் பார்த்தால் கொல்லப்பட்ட மக்களின் எச்சங்கள் இன்னும் இருக்கும் என்று மைத்துனர் கூறினார்.
  31. மோடிக்கே குத்து விழுந்திருக்கு ராமர் கோவில் பிரதிஸ்டை நிகழ்வில் தமிழர்களை நிம்மதியாக வாழ விட்டால் இந்தியா சிறிலங்கவை விழுங்கி விடும் என்ற பயத்தில் தமிழர்களை விரோதியாக பாவித்து அரசியல் செய்ய வெளிக்கிட்டு இன்று முழு இலங்கையையும் அவர்களுக்கும்,சீனாவுக்கும்,அமெரிக்காவுக்கும் வியாபாரம் பண்ண விட்டுள்ளனர்
  32. 87ஆம் தொடக்கம் 94 ஆம் ஆண்டு வரை சவூதி அரேபியாவில் பணி புரிந்தேன் ..சட்டவிரோதமாக கசிப்பு காச்சுவார்கள் ...அதை சில சவுதி அரேபிய பிரஜைகளும் களவாக வாங்கி அருந்துவார்கள்....மேலும் அரம்கோ என்ற அமேரிக்க நிறுவனத்தில் மது கிடைக்கும் அதை அங்கு பணிபுரிபவர்கள் மட்டும் பாவிக்கலாம்..வெளியே கொண்டு வர முடியாது ..
  33. வாழ்த்துகள். உங்களது நூலை இணையத்தில் வாங்க முடியுமா ?
  34. ஆம். அந்த வரிசையில் நிறைய நாடுகளும் வரும்.
  35. காலையுணவு அருந்தியபின் கிளிநொச்சியிலிருந்து மீண்டும் பரந்தன் நோக்கிப் பயணித்தோம். பரந்தனிலிருந்து வலதுபுறம் திரும்பி, பரந்தன் முல்லைத்தீவு வீதியில் முரசுமோட்டை நோக்கி வண்டி பயணித்தது. எனது மைத்துனர் புலிகளின் கட்டுமாணப் பிரிவில் வீதி வேலைகளில் சம்பளத்திற்கு பணிபுரிந்ததனால் புலிகள் பின்வாங்கிச் சென்ற பகுதிகளுடு மக்களோடு மக்களாக அவரும் தனது குடும்பத்தை இழுத்துக் கொண்டு சென்றார். ஆகவே, இந்த வீதியில் அமைந்திருக்கும் மக்கள் அவலங்களால் நிறைந்த ஊர்கள் ஒவ்வொன்றிலும் அவர் சிலகாலமாவது வாழ்ந்திருக்கிறார். அவலங்களை அனுபவித்திருக்கிறார். அதனால், தாம் ஆங்காங்கு தங்கியிருந்த ஊர்கள் வந்தபோது வாகனத்தை நிறுத்தி அவ்விடங்களைப் பார்வையிடத் தொடங்கினார். நானும் அவருடன் அவ்விடங்களை தரிசித்தேன். போரின் வடுக்கள் சிறிது சிறிதாக மறைந்துப்போய், வாழ்வு மீளவும் சாம்பலில் இருந்து பூக்க ஆரம்பித்திருந்தது. சிலவிடங்கள் அடையாளமே மாறிப்போயிருந்தது அவருக்கு. வீதியின் ஓரத்தில் 15 வருடங்களுக்கு முன்னர் இருந்த சில கட்டடங்களை, அடையாளங்களை அவர் தேடினார், எவையுமே அங்கு இருக்கவில்லை. முரசுமோட்டை, புளியம்பொக்கனை, குமாரசாமிபுரம், உடையார்கட்டு, வல்லிபுனம், புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், கரைய முள்ளிவாய்க்கால் என்று பல இடங்களில் அவரும் அவரது குடும்பமும் இடம்பெயர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். சிலவிடங்களில் ஓரிரு நாட்கள் மட்டுமே தங்கியிருந்து மறுபடியும் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். எங்கெங்கு வெளிகள் காணப்பட்டனவோ அங்கெல்லாம் மக்கள் வெள்ளம் இருந்ததாக அவர் கூறினார். கையில் கிடைத்த தகரம், ஓலை, சீலைகள், பிளாத்திக்குப் பைகள் என்று ஏதோவொன்றை எடுத்து மறைவு வைத்து, கூட்டத்தோடு கூட்டமாக குடும்பங்கள் வாழ்ந்திருக்கின்றன. இவ்வாறு மக்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகள் மீது கடுமையான எறிகணை மற்றும் விமானக் குண்டுவீச்சு, துப்பாக்கிச் சன்னங்கள் என்று தாக்குதல் நடத்தப்பட்டபோது பலர் உயிரிழந்தும், இன்னும் பலர் காயப்பட்டும் இருந்திருக்கின்றனர். கொல்லப்பட்டவர்கள் அவ்விடத்திலேயே கைகளால் மண் தோண்டி புதைக்கப்பட, காயப்பட்டவர்களில் வயதானவர்கள் அவர்களின் சொந்தங்களாலேயே கைவிடப்பட்டு சென்றதை மைத்துனர் கண்ணுற்றிருக்கிறார். வண்டி ஆனந்தபுரத்தைத் தாண்டியதும், பரந்தன் முல்லைத்தீவு வீதியிலிருந்து கடற்கரை நோக்கிச் செல்லும் வழியில் இடதுபுறமாக பயணிக்க ஆரம்பித்தது. ஏனென்றால், கண்டல்த் தாவரங்களும், வெளிகளும் இருக்கும் இப்பிரதேசத்திலேயே பெருமளவு மக்கள் உயிரைக் காக்க அடைக்கலம் புகுந்திருந்தனர். முக்கியமாக இப்பகுதியில் பனக்கூடல்களுக்கு மத்தியில் புதுமாத்தளன் இந்து ஆலயம் அமைந்திருக்கிறது. இப்பகுதியில் பெருமளவு மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர். இவ்வாறு தஞ்சம் அடைந்தவர்களில் மைத்துனரின் குடும்பமும் அடங்கும். மக்கள் இப்பகுதியில் அடைக்கலமாகி இருப்பது தெரிந்ததும் இப்பகுதி நோக்கிக் கடுமையான விமானக் குண்டு வீச்சும், எறிகணைத்தாக்குதலும் நடத்தப்பட்டபோது பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். கொல்லப்பட்டவர்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டெடுக்கும் பணியில் மைத்துனரும் ஈடுபட்டிருக்கிறார். கடற்கரை நோக்கிப் பயணித்த நாம், கரையில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி மணலில் நடந்தோம். தூரத்தே சாலை தெரிந்தது. கடற்புலிகளின் பாரிய முகாம் சாலைப்பகுதியிலேயே இருந்திருக்கிறது. இந்த முகாமைக் கைப்பற்ற இராணுவம் கடுமையாகச் சண்டையிட்டபோதும் பலத்த இழப்புக்களைச் சந்தித்ததாக அவர் கூறினார். ஈற்றில் கடற்புலிகள் இம்முகாமைக் கைவிட்டுப் போக, இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டது. இப்பகுதியில் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டதோடு, இங்கு அவரின் அனுபவங்களையும் அவர் என்னோடு பகிர்ந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து அம்பலவன் பொக்கனை, வலைஞர் மடம், இரட்டை வாய்க்கால் ஆகிய பகுதிகளை கடற்கரைச் சாலையூடாகவே வலம் வந்தோம். அம்பலவன் பொக்கனை பகுதியில் வெற்றுக் கடற்கரை வெளியில் மக்கள் கூடாரங்களை அமைத்து தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். ஒருபுறம் கடலில் இருந்து ஏவப்படும் எறிகணைகள், மறுபுறம் வானிலிருந்து பொழியப்படும் குண்டுகள், இன்னொருபுறம் முல்லைத்தீவுப் பகுதியில் இருந்து கனரக இயந்திரத் துப்பாக்கிகள் உமிழும் ரவைகள் என்பவற்றிற்கு மத்தியில் ஏந்த நம்பிக்கையும் அற்றும் உயிரை மட்டுமே கையில் ஏந்திக்கொண்டு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இப்பகுதியிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதாக அவர் கூறினார். கொல்லப்பட்டவர்களை அருகில் இருந்த பற்றைகளுக்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டு, ஒற்றை அழுகையுடன் கடமை முடித்தோரும் அங்கு இருந்திருக்கிறார்கள். காயப்பட்டவர்களுக்கு மயக்க மருந்தின்றி கடற்கரையிலேயே அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. இரத்தப்போக்கினால் கொல்லப்பட்டவர்களும் அதிகம் இருந்திருக்கிறார்கள்.
  36. காலை 7 மணியளவில் முல்லைத்தீவு நோக்கி எம்மை அழைத்துச் செல்வதற்கான வாகனம் வந்து சேர்ந்தது. வாகனத்தின் சாரதிக்கு அருகில் மைத்துனரின் மகன் அமர்ந்துகொள்ள நானும் மைத்துனரும் பின் இருக்கைகளில் வசதியாக அமர்ந்துகொண்டோம். வாகனம் கண்டிவீதியூடாக கிளிநொச்சி நோக்கிப் பயணித்தது. வழிநெடுகிலும் முள்ளிவாய்க்கால் குறித்த பேச்சுத்தான். உணர்ச்சிகள் கொந்தளிக்கப் பேசுவதும் பின்னர் அமைதியாவதும் மீண்டும் பேசுவதுமாக கண்டிவீதியில் ஓடிக்கொண்டிருந்தோம். வீதியோரங்களில் அவ்வப்போது தவறாமல் கண்களையும் மனதையும் புண்படுத்திய இராணுவ முகாம்களைக் கடந்துசென்றபோது இயல்பாகவே எழும் ஆற்றாமையும், விரக்தியும் பேச்சுக்களில் கோபமாகக் கொப்புளித்தது. இவர்கள் ஏன் இங்கு இருக்கிறார்கள்? எனும் கேள்வி திரும்பத் திரும்ப மனதிற்குள் வந்துபோனது. கொடிகாமத்திலிருந்து பச்சிலைப்பள்ளி வரையான பகுதியில் இராணுவ முகாம்களும் அவற்றோடு அவர்களின் விவசாய நிலங்களும் தெரிந்தன. கொல்லப்பட்டவர்கள் போக, விரட்டியடிக்கப்பட்ட தமிழர்களின் காணிகளில் ஆக்கிரமிப்பு இராணுவம் அடாத்தாகத் தங்கியிருப்பது மட்டுமன்றி தமிழரின் நிலவளத்தைச் சுரண்டிக்கொண்டும் இருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனையிறவை நாம் அடைந்தபோது இடதுபுறத்தில் ராணுவ முகாமை ஒட்டி மண்டபம் போன்றதொரு கட்டடம் காணப்பட்டது. முற்பகுதியில் இராணுவத்தின் சிற்றுண்டிச்சாலை அமைந்திருக்க தென்பகுதியில் இருந்து வந்திருந்த சிங்களவர்கள் பலர் அப்பகுதியில் அமர்ந்திருந்து உணவு உட்கொள்வதும், இன்னும் ஒரு பகுதியினர் தமது இராணுவ வெற்றியின் அடையாளத்தைப் பார்வையிடுவதுமாக இருந்தனர். எமது வண்டியைக் கண்டதும் தடைமுகாமில் வீதியோரத்தில் நின்ற ஆக்கிரமிப்பாளன் மறித்தான். சாரதியிடம் "எங்கே போகிறீர்கள்?" என்று கொச்சைத் தமிழில் கேட்டான். கிளிநொச்சி என்று சொன்னதும் அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பார்த்துக்கொண்டே "எத்தனைபேர் போகிறீர்கள்?" என்று கேட்டான். நால்வர் என்றதும் சரி என்று வழிவிட்டான். "வழமையாகவே மறிப்பார்களோ?" என்று நான் கேட்டபோது, "இல்லை, மாவீரர் நாள் முடிந்த கையோடு கெடுபிடி அதிகமாக இருக்கிறது" என்று சாரதி சொன்னார். ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி நோக்கிய பயணம் மனதிற்கு கடும் அழுத்தத்தைத் தந்தது. இப்பகுதிகளை மீட்டெடுக்க மாவீரர் கொடுத்த உயிர்க்கொடையும், போராளிகளின் இழப்புக்களும் இன்று வீண்போய்விட்டதே என்கிற ஆதங்கம் மனதில் தவிர்க்கமுடியாமல் வந்துபோனது. கிளிநொச்சியை அடையும்போது காலையுணவை அங்கே உட்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். சாரதியும் அம்மாச்சி உணவகத்தினருகே வீதியோரத்தில் வண்டியை நிறுத்தினார். அக்காலை வேளையிலும் உணவகம் மக்களால் நிரம்பியிருந்தது. நியாயமான விலைக்கு தரமான சைவ உணவு. அப்பம், புட்டு, இடியப்பம், தோசை என்று அனைத்து வகை உணவுகளும் உடனுக்குடன் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. சமூகத்தின் அனைத்து மட்டத்திலிருந்தும் மக்கள் அங்கே உணவருந்திக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. அப்பம், புட்டு, இடியப்பம், தோசை என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றாக ஓடர் செய்து உண்டோம். சுடச்சுட பரிமாறப்பட்ட உணவு பசிக்கு அமிர்தமாக இருந்தது. உணவை முடித்துக்கொண்டு இஞ்சி போட்ட தேநீர் அருந்தினோம். பணத்தைச் செலுத்திவிட்டு உணவகத்திற்குள்ளேயே இருக்கும் பனம்பொருள் விற்கும் சிறிய கடையில் சத்துமாவும், ஒடியல்மாவும் வாங்கிக்கொண்டேன். தாயகத்தில் வாழும் பெண்களால் தயாரிக்கப்பட்டவை என்பதால் விசேடமாக இருக்கும் என்பது எனது எண்ணம். அதுமட்டுமல்லாமல் அவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
  37. கார்த்திகை 29. நான் இலங்கைக்கு வந்த காரணங்களில் இரண்டாவது முக்கியமானது. முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம். 2009 வைகாசியிலிருந்து முள்ளிவாய்க்கால் எனும் பெயர் எனது மனதில் மிக ஆளமாகப் பதிந்துவிட்டது. எனது இனத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனக்கொலையும், எமது ஒரே நம்பிக்கையாகவிருந்த போராட்டம் முற்றாக அழிக்கப்பட்டதும், தாயக விடுதலைக்கான கனவு முற்றாகக் கலைந்துபோனதும் இந்த இடத்தில்தான். பல்லாயிரக்கணக்கான எனது சொந்தங்களின் குருதி வழிந்து உறைந்துபோனதும் இந்த மணற்றரையில்த்தான். ஆகவே, முள்ளிவாய்க்கால் என்கிற பெயர் உச்சரிக்கப்படும் ஒவ்வொரு கணமும் மனதில் தாங்கொணாத் துயரும், ஏமாற்றமும், விரக்தியும் வந்துசேர்ந்துவிடும். காணொளிகள் மூலம் முள்ளிவாய்க்காலைப் பார்க்கும்போது அப்பகுதியில் இருந்து காற்றோடு காற்றாகக் கலந்து மாவீரரினதும், மக்களினதும் ஆன்மாக்களை மனம் தேடும். அவர்களின் உயிர் கடற்காற்றோடு கலந்து இன்னும் அங்கேயே இருப்பதாக மனம் நினைக்கும். ஆகவே அந்தவிடத்தைப் போய்ப்பார்த்துவிடவேண்டும் என்பது எனது நெடுநாள்த் தவம். ஆகவேதான் இலங்கை நோக்கிய எனது அண்மைய பயணத்தை அதற்காகத் தேர்ந்தெடுத்தேன். இலங்கைக்கான பயணம் ஓரளவிற்கு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முள்ளிவாய்க்கால் பயணத்தை மைத்துனர் மூலம் ஒழுங்குசெய்திருந்தேன். தனது வேலைக்கு லீவு போட்டுக்கொண்ட அவர் தனது இளைய மகனையும் அப்பயணத்திற்கு அழைத்திருந்தார். இப்பயணத்தில் மைத்துனரும் பங்குகொள்வதற்கு அவருக்கென்றொரு காரணமும் இருந்தது. மைத்துனரும் அவரது குடும்பமும் 2009 ஆம் ஆண்டு வைகாசி 17 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, முகாமில் வதைபட்டு சில மாதங்களின் பின்னர் வெளியே வந்தவர்கள். 2008 இலிருந்து 2009 வரையான படுகொலைகளையும் இறுதி இனக்கொலையினையும் நேரடியாகக் கண்டு மரணத்துள் வாழ்ந்து மீண்டவர்கள். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவந்தபோதும் இனக்கொலையின் ரணங்களும், அவலங்களின் அதிர்வுகளும் அவர்களை மீண்டும் அப்பகுதிக்குச் செல்வதைத் தடுத்தே வந்திருந்தன. ஆனால், நான் இப்பயணம் குறித்து அவரிடம் கேட்டபோது அவரும் வர ஒத்துக்கொண்டார். மேலும், தனது பிள்ளைகளுக்கும் நடத்தப்பட்ட அவலங்கள் குறித்த பதிவுகளை புரியவைப்பதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாகவும் அவர் பாவிக்க நினைத்தார்.
  38. இன்னுமொரு முகநூல் பதிவு: தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவு கூர்மையாக அவதானிக்கப்பட்டதுஇ யார் வெல்லவேண்டும் என்பதற்காகவல்ல மாறாக யார் வெல்லக்கூடாது என்பதற்காக! தமிழ்தேசியம் தற்போதைக்கு தப்பிப்பிழைத்துள்ளது அவ்வள வே! https://www.facebook.com/100000587714856/posts/pfbid02YipufD7nhbVTeF1KPYNQMxWafabHNKKQdDAp9DGWyidWLKjqSd6DFH27nhbu1prwl/
  39. "இண்டைக்கு கார்த்திகை விளக்கீடு மச்சான், வீட்டிலை மரக்கறி, எங்க சாப்பிடப் போகிறாய்?" என்று கேட்டான். "எனக்கு மரக்கறி பிரச்சினையில்லை" என்று நான் கூறவும். "இல்லை, பிள்ளைகளுக்கும் மரக்கறியெண்டால் இறங்காது, வா கொத்து ஏதாவது சாப்பிடுவம், அப்படியே பிள்ளைகளுக்குக் எடுத்துக்கொண்டுவரலாம்" என்று நண்பன் கூறவும், சரியென்றேன். அவனது வீட்டிலிருந்து கச்சேரி நோக்கிப் போகும் வழியில், வைத்தியசாலை வீதியில் யு.எஸ் ஹோட்டல் என்று ஒரு அசைவக உணவகம் இருக்கிறது. சில மாடிகளைக் கொண்ட அக்கட்டிடத்தின் முதலாவது மாடியில் உணவகமும் அதற்கு மேல் நிகழ்வுகளுக்கான மண்டபமும் இருக்கிறது. கட்டடத்தின் முன்னால் வாகனத்தை நிறுத்திவிட்டு, அருகிலிருந்து மற்றைய உணவகங்களைப் பார்த்துக்கொண்டு வரும்போது நண்பனின் அலுவலக மேலாளர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சிங்களவர், யாழ்ப்பாணத்தில் வசிப்பவர். தென்பகுதி அரசியல்வாதிகள், அமைச்சர்களோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர். நண்பனைக் கண்டதும் சத்தமாகச் சிங்களத்தில் பேசினார். நண்பனுடன் அவர் பேசிக்கொண்டிருக்க, அப்பகுதியைச் சுற்றி நோட்டமிட்டேன். அந்த உணவகங்களின் முன்னாலும் பல சிங்களவர்களைக் காணக் கிடைத்தது. வான்கள், கார்கள் என்று ஓரளவிற்கு வசதிபடைத்த தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்கள் என்பது தெரிந்தது. அவரிடம் பேசும்போது, "இப்பகுதியில் ஓரளவிற்கு நல்ல கொத்து எங்கு வாங்கலாம்?" என்று நண்பன் கேட்கவும், "ஏன், யு.எஸ்ஸை முயற்சி செய்து பாருங்கள், அல்லது இன்னும் இரண்டு மூன்று இடங்கள் எனக்குத் தெரியும்" என்று அந்தச் சிங்களவர் கூறினார். நான் திகைத்துப் போனேன். ஒரு சிங்களவர் யாழ்ப்பாணத்தில் நல்ல உணவு கிடைக்கும் இடங்களை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் என்றால், அவர்கள் எவ்வளவு தூரத்திற்கு அங்கு ஒற்றிவிட்டார்கள் என்பது புரிந்தது. அவர் கூறியவாறே யு.எஸ் உணவகத்திற்குச் சென்று ஆட்டுக் கொத்தும், கோழிக்கறியும் கேட்டோம். இடையே குடிப்பதற்கு ஜிஞ்சர் பியரும் கேட்டோம். சாப்பாடு அருமை. குளிர்ந்த சோடாவோடு சேர்த்து உண்ணும்போது அமிர்தமாக இருந்தது. அந்த உணவகத்தில் பணிபுரிந்தவர்கள் யாழ்ப்பாணத்துத் தமிழர்களாக இருக்கலாம், ஆனாலும் பேச்சு வழக்கில் வேறுபாடு தெரிந்தது. மிகவும் மரியாதையாகவும், பணிவாகவும் நடந்துகொண்டார்கள். அடிக்கொருமுறை சேர் என்று அழைத்தார்கள். நண்பன் இக்கடைக்கு அடிக்கடி வந்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். சாப்பிட்டு முடிந்ததும் அதற்கான கட்டணத்தையும், பணியாளருக்கான "சந்தோசப் பணத்தையும்" நண்பனே கொடுத்து (நான் கொடுக்கிறேன் என்று நான் கூறியும் பிடிவாதமாக மறுத்து, உனக்கு செலவுசெய்ய நான் சந்தர்ப்பம் ஒன்றைத் தருவேன், அப்போதுச் செய்தால்ப் போதும் என்று கூறிவிட்டான்) பிள்ளைகளுக்கும் தேவையான உணவினை வாங்கிக்கொண்டு மறுபடியும் வீடு வந்தோம். இரவு ஒன்பதரை ஒன்பதே முக்கால் ஆகுகையில் மீண்டும் என்னை மைத்துனரின் வீட்டின் முன்னால் இறக்கிவிட்டான் நண்பன். நான் உள்ளே போகும்வரை அப்பகுதியிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு காத்து நின்றான். கேட் உட்பகுதியால் பூட்டப்பட்டிருந்தது. வெளியிலிருந்து அதனைத் திறக்க என்னால் முடியவில்லை. பலமாக கேட்டினைத் தட்டிப் பார்த்தேன், எவரும் வீட்டிற்கு வெளியே வரவில்லை. நண்பன் இன்னமும் அங்கு நிற்பது தெரிந்தது, "நீங்கள் போங்கோ, நான் கோல்பண்ணிப் பார்க்கிறேன்" என்று கூறி அவனை அனுப்பிவைத்தேன். ஆனாலும் வீட்டிலிருந்து எவரும் வெளியில் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. நான் தட்டிய சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் தனது கார்த்திகை விளக்கீட்டினை வீதிக்கு வந்துபார்ப்பது போல பாசாங்கு செய்துகொண்டு என்னை யாரென்று நோட்டம் விடுவது எனக்குத் தெரிந்தது. தோளில் பாரிய பையொன்று தொங்க, முன்பின் தெரியாத ஒருவர் பக்கத்து வீட்டின் முன்னால் இரவு 10 மணிக்கு நிற்கிறார் என்றால் சந்தேகம் வரத்தானே செய்யும்? சயன்ஸ் சென்ட்டர் எனும் பிரபல டியுஷன் நிலையத்திற்கு மிக அருகிலேயே மைத்துனரின் வீடு. இரவு வகுப்பு முடிந்து மாணவர்களும் போயாயிற்று. வீதியில் வெளிச்சம் இருந்தாலும் எப்போதாவது அவ்வீதியூடாகச் செல்லும் மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டியைத் தவிர ஆளரவம் மிகவும் குறைவான வீதியது. என்னடா செய்யலாம்? இப்படியே காலை மட்டும் வீதியில் நிற்கவேண்டி வந்துவிடுமோ என்று ஒரு பக்கம் யோசனை. ஆனால், எவராவது சந்தேகத்தின் பேரில் என்னைப் பொலீஸில் போட்டுக்குடுத்தால் என்னசெய்வது என்கிற பயமும் உள்ளுக்குள் இருந்தது. ஆனால் ஒரேயொரு ஆறுதல், மைத்துனர் வேலை முடிந்து 10:30 மணிக்குத்தான் வீடுவருவார். அவர் வரும்வரை காத்திருக்கலாம் என்று அப்படியே வீதியில் நின்றுகொண்டேன். அதிஸ்ட்ட‌வசமாக மைத்துனரின் மனைவி வீட்டின் முன்கதவினைத் திறந்துபார்க்கவும், நான் பலமாக அவரை அழைத்து, "கேட்டை ஒருக்கால் திறவுங்கோ" என்று கேட்டேன். "அடகடவுளே, எவ்வளவு நேரமாய் உதிலை நிக்கிறியள்?" என்று கேட்டார். நானும், "இப்பத்தான், ஒரு அரைமணித்தியாலம் இருக்கும்" என்று கூறிச்சிரித்தேன். "கேட்டைத்திறந்து வந்திருக்கலாமே?" என்று கேட்கவும், திறக்க முயற்சித்தேன் ஆனால் முடியாமற்போய்விட்டது என்று கூறவும் சிரித்துவிட்டார். மறுபடியும் அலங்கார குமுழைத் திருகிக்கொண்டு நின்றிருக்கிறேன் என்பது புரிந்தது. குளித்துவிட்டு மாமியுடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பழைய கதைகள், நீண்டகால தொடர்பில்லாத உறவினர்கள், எவரெவர் இப்போது எங்கிருக்கிறார்கள் என்கிற கேள்விகள் என்று சம்பாஷணை தொடர்ந்தது. மைத்துனர் இரவு 10:30 இக்கு வந்ததும் இரவுணவு அருந்திவிட்டு, வீட்டின் மண்டபத்தில் பாய் தலையணையுடன் படுத்திருந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இரவு 12:30 - 1 மணிக்குத் தூங்கியிருப்போம் என்கிற நினைவு. யாழ்ப்பாணத்தில் எனது முதலாவது நாள் நிறைவிற்கு வந்தது.
  40. பாஷையூரிலிருந்து நாம் படித்த பாடசாலையான பத்திரிசியார் கல்லூரி வழியால் சென்றோம். பழைய நினைவுகள் வந்து போயின. நான் படிக்கும் காலத்தில் இருந்த உயர் வகுப்புக்கள் இருந்த பகுதி முற்றாக காணாமற்போயிருந்தது. பாடசாலையின் மத்திய வகுப்புக்கள் இருந்த பகுதிக்கு அதனை மாற்றியிருப்பதாக நண்பன் சொன்னான். ஒரு சில கட்டடங்களைத்தவிர 80 களில் இருந்ததுபோன்றே அப்பகுதி தெரிந்தது. அப்படியே சேமக்காலை வீதிவழியாக கடற்கரை வீதிக்கு வந்து அங்கிருந்து யாழ்ப்பாணம் பண்ணைப்பகுதி நோக்கிச் சென்றோம். அப்பகுதியில் பாரிய மாற்றம் ஏதும் இல்லை. சின்னக்கடைக்கும் பண்ணைப்பகுதிக்கும் இடையில் இராணுவ முகாம் ஒன்று இருந்தது. சிறியதுதான், ஆனாலும் அவர்களின் பிரசன்னம் நன்றாகவே தெரிந்தது. அப்படியே புதிதாகக் கட்டப்பட்டுவரும் யாழ்ப்பாண மாநகரசபைக் கட்டத்தையும் பார்த்துக்கொண்டே பண்ணைப்பகுதிக்கு வந்தோம். சுற்றுலாத்தளம் போல் மிகவும் சுறுசுறுப்பாகவும் மக்கள் நிறைந்தும் காணப்பட்டது. கோட்டையின் பின்பகுதியில் தெற்கிலிருந்து சிங்கள மக்களை கொண்டுவந்த பஸ்வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்க, அதில் வந்தவர்கள் அப்பகுதியில் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். கொத்துரொட்டிக் கடைகள், சிற்றுண்டிக் கடைகள், ஐஸ் கிறீம் கடைகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட் கடைகள் என்று அப்பகுதியெங்கும் மக்கள் அலைமோதிக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்தவர்களில் தமிழர்களைவிடவும் சிங்களவர்களே அதிகமாகக் காணப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தைச் சென்று பார்ப்பதென்பது அவர்களைப்பொறுத்தவரையில் விருப்பமான ஒரு பொழுதுபோக்கு என்றே நினைக்கிறேன். நான் யாழ்ப்பாணம் வந்த ரயிலில்க் கூட பெருமளவு சிங்களவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்தார்கள். பலவிடங்களில் இவர்களின் பிரசன்னம் இருந்தது. பண்ணையிலிருந்து ஊர்காவற்றுறை நோக்கிச் செல்லும் பாதையில் கடற்படை முகாமிற்கு சற்று முன்னர் வாகனத்தை நிறுத்திக்கொண்டோம். இறங்கி, இருபக்கமும் தெரிந்த இயற்கை அழகை மாலைச் சூரியன் மங்கும் வேளையில் படமெடுத்தேன். ரம்மியமாகவிருந்தது. இதேபகுதியை பலமுறை யூடியூப் தளத்தில் பலர் பதிவேற்றியிருக்கிறார்கள். மிகவும் அழகான‌ பகுதி. என்னைப்போலவே வேறு சிலரும் அப்பகுதியில் நின்று படமெடுப்பது தெரிந்தது. அன்று கார்த்திகை விளக்கீடு. யாழ்நகரெங்கும் வீடுகளின் முன்னால் விளக்குகள் ஏற்றப்பட்டு மிகவும் அழகாகத் தெரிந்தது. நண்பனின் வீட்டிற்குச் சென்றோம். அவனது வீட்டிலும் பிள்ளைகள் விளக்கீடு வைத்திருந்தார்கள். வீட்டின் முன்னால், முற்றத்தில், மதிலின் நீளத்திற்கு என்று பல விளக்குகள். யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த காலத்தில் பார்த்ததற்குப் பின்னர் இன்றுதான் விளக்கீட்டினை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஊரை விட்டு எப்போதுமே நீங்கியதில்லை என்கிற உணர்வு ஒருகணம் வந்துபோனது. ஊரில் வாழ்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.கைலாசபிள்ளையார் கோயிலுக்குப் பின்னால் அவனது வீடு. கோயிலின் சுற்றாடல் என்றால் கேட்கவும் வேண்டுமா? அப்பகுதி விளக்கீட்டில் தெய்வீகமாகக் காட்சியளித்தது. பின்னர் அவனது பிள்ளையை வகுப்பிலிருந்து கூட்டிவர கட்டப்பிராய்ப் பகுதிக்குச் சென்றோம். போகும்போது நல்லூர்க் கோயிலூடாக செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. என்னைப்பொறுத்தவரை நல்லூரே யாழ்ப்பாணத்தின் அடையாளம் என்று எண்ணுவதுண்டு. கோயிலின் கம்பீரமும், அழகும் என்னைக் கவர்ந்தவை. அதனைப் பார்க்கும்போதே மனதிற்கும் இனம்புரியாத சந்தோசமும், பெருமையும் ஒருங்கே வந்துபோகும். இரவு விளக்கு வெளிச்சங்கள் கோயிலை இன்னும் அழகுபடுத்த, காரில் பயணித்தவாறே சில படங்களையெடுத்தேன். நாளை மாவீரர் நாள். நல்லூர் திலீபன் நினைவிடத்தில் பாரிய பந்தல்கள் இடப்பட்டு மக்கள் அப்பகுதியில் கூட்டமாக நின்று மாவீரர் நாள் ஒழுங்குகளைச் செய்துகொண்டிருப்பது தெரிந்தது. பந்தலின் முன்னால் நூற்றுக்கணக்கான மோட்டார்சைக்கிள்கள். இளைஞர்கள் விருப்புடன் வந்து அப்பகுதியில் பணிகளில் ஈடுபட்டிருந்ததைப் பார்க்கும்போது மக்களின் மனோநிலை எப்படியிருக்கிறதென்பது புரிந்தது. கட்டப்பிராயில் பருத்தித்துறை வீதியிலேயே வகுப்பு நடைபெற்றது. வாகனத்தை வீதியோரத்தில் நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் காத்திருந்தோம். அந்த இரவு வேளையிலும் பருத்தித்துறை வீதி மக்களும் வாகனங்களும் நிறைந்து காணப்பட்டது. குறுகலான வீதி, ஆனாலும் இருபுறமும் செல்லும் வாகனங்கள் வேகத்தைக் குறைக்காது, இலாவகமாக வீதியின் இடதுபக்கமும், வலதுபக்கமுமாக மாறி மாறி ஓட்டிக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்கிடையே மோட்டார்சைக்கிள்கள், முச்சக்க வண்டிகள், நடந்துசெல்லும் மனிதர்கள் என்று ஒரே கலேபரம். நண்பனின் பிள்ளை வகுப்பு முடிந்து வந்ததும், அவரை ஏற்றிக்கொண்டு மீண்டும் வீடு வந்தோம்.
  41. புதுமையான நாகூர் கொத்து.. முயற்சி செய்து பார்க்கவும்
  42. மாலை 5:30 இலிருந்து 6 மணிக்குள் பாஷையூரிலிருக்கும் ஓய்வுபெற்ற கன்னியாஸ்த்திரிகளைப் பராமரிக்கும் இல்லத்திற்குச் சென்றோம். பாஷையூர் அந்தோணியார் கோயிலில் இருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில் உயர்ந்த மதில்களாலும் தென்னை மரங்களாலும் சூழப்பட்ட கட்டடம் அது. வாயிற்கதவு பூட்டப்பட்டிருந்தது. திறக்கத் தெரியவில்லை. குமுழியைத் திருகித் திருகிப் பார்க்கிறேன், முடியவில்லை. நண்பன் காரில் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, "கூப்பிட்டுப் பாரடா" என்று சொல்லவும், கொஞ்சம் சத்தமாக கேட்டைத் தட்டினேன். உள்ளிருந்து பெண்ணொருவர் வந்து திறந்துவிட்டார். அலங்காரத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் குமிழையையே இவ்வளவு நேரமும் திருகியிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். "நீங்கள் போட்டு வாங்கோ, நான் ஆட்டொ பிடித்து போய்க்கொள்கிறேன்" என்று நண்பனைப் பார்த்துக் கூறினேன். "இல்லை, நீ முடிச்சுக்கொண்டுவா. நான் நிக்கிறன். இண்டைக்கு உன்னோட யாழ்ப்பாணம் சுத்துறதுதான் வேலை" என்று அன்புடன் கட்டளையிட்டான். சரியென்று கூறிவிட்டு கட்டடத்தினை நோக்கி நடந்தேன். உள்ளே சென்றதும் என்னை அமரச் சொல்லிட்டு யாரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். சித்தியின் பெயரைச் சொன்னேன், சிட்னியில் இருந்து வருகிறேன் என்றும் கூறினேன். இருங்கள், வந்துவிடுவா என்று கூறப்பட்டது. ஒரு சில நிமிடங்கள் போயிருக்கும், சித்தி வந்தார். சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். நான் அவரை ஐந்து வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். உருவமே மாறி, நலிந்து, தோல் சுருங்கி, மிகவும் பலவீனமான நிலையில் இருந்தார். பேசுவதே அவருக்குக் கடிணமாக இருந்தது. சிறிதுநேரம் அவரை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, "எப்படி அன்ரா இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். சிறிய புன்முறுவல், "83 வயதில் இருக்கும் ஒருவர் எந்தளவு சுகநலத்துடன் இருக்கமுடியுமோ, அந்தளவு சுக நலத்துடன் இருக்கிறேன்" என்று சொன்னார். "அப்படித் தெரியவில்லையே?" என்று கேட்டேன். அதற்கும் ஒரு புமுறுவல். பல விடயங்களை அவர் மறந்திருந்தார். அவர் தொடர்பாக நான் கூறிய விடயங்களை அதிசயத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். "அப்படியெல்லாம் நடந்ததா?" என்று அடிக்கடி கேட்டார். எனது அன்னை, தம்பி, அக்கா என்று நெருங்கிய உறவுகள் தொடர்பாக அவருக்கு நினைவு இருக்கிறது. ஏனையவர்கள் தொடர்பாக அவர் அதிகம் பேசவில்லை. ஆனால், நான் பேசுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். இடையிடையே எனது குடும்பம் பற்றி கேட்பார், ஒரே பதிலைச் சொல்லுவேன். ஒருசில நிமிடங்களின் பின்னர் அதே கேள்விகள், நானும் சலிக்காமல் அதே பதில்களைக் கூறுவேன். நான் திருமணம் முடித்ததைக் கூட அவர் மறந்திருந்தார். அடிக்கடி, "முடிச்சிட்டீரா, எத்தனை பிள்ளைகள்?" இதுதான் அவர் அடிக்கடி கேட்ட கேள்விகள். சிறிது நேரம் பேசிவிட்டு அமைதியானார். "என்ன, பேசாமல் இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். "ஒன்றுமில்லை, நீர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன், பல யோசனைகள்" என்று கூறினார். மீண்டும் அதே மெளனம். அவர் வலியினால் அவஸ்த்தைப்படுவது தெரிந்தது. ஒரு 35 - 40 நிமிடங்கள் வரை பேசியிருப்போம். அதன்பின்னர் அவரால் தொடர முடியவில்லை. "கஸ்ட்டமாக இருக்கிறதோ, அறைக்குத் திரும்பப் போகிறீர்களோ?" என்று கேட்டேன். "ஓம், கனநேரம் இதில இருக்க ஏலாது, நாரி நோகுது" என்று சொன்னார். கொண்டுவந்த சில பொருட்களை அவரிடம் கொடுத்துவிட்டு, அவரது சக்கர நாற்காலியை மெது மெதுவாக உருட்டிக் கொண்டு உள்ளேயிருக்கும் மண்டபம் போன்ற பகுதிவரை செல்ல‌, அங்கிருந்த பெண்ணொருவர், "இனி விடுங்கோ அண்ணா, நாங்கள் அவவைக் கூட்டிச் செல்கிறோம்" என்று சொன்னார். நான் சித்தியிடம் விடைபெற்றுத் திரும்ப, அவரிடம் யாரோ, "ஆரது சிஸ்ட்டர்?" என்று கேட்பதும், "அது என் அக்காவின் மகன், அவுஸ்த்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறான்" என்று அவர் கூறுவதும் கேட்டது. வாயிலில் காரில் பொறுமையுடன்ன் காத்திருக்கும் நண்பனை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
  43. கொழும்பு செல்லும் விமானம் சற்றுச் சிறியது. பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள். இந்தியாவிலிருக்கும் பெளத்த யாத்திரீகர் தலம் ஒன்றிற்குச் சென்றுவருகிறார்கள் என்று தெரிந்தது. சில முஸ்லீம்கள், ஒரு சில தமிழர்கள். இரண்டரை மணித்தியாலப் பயணம் என்றாலும், இரவுணவும், குடிக்க மென்பான‌மும் தந்தார்கள். ஓரளவிற்கு மரியாதையுடன் பேசினார்கள். கட்டுநாயக்காவில் இறங்கியதும் பல்வேறு உணர்வுகள். முதலில் பயம், பின்னர் எமக்கு நடந்த அநீதிகள், அதைத் தொடர்ந்து எமது அழிவுகளின் மேல் கட்டப்பட்டிருக்கும் இலங்கையின் கோட்டை கொத்தளங்கள் என்றெல்லாம் நினைவிற்கு வந்துபோனது. இலங்கைக்கு வந்தாயிற்று, அவர்கள் சொல்வதன்படியே ஆடவேண்டும். உணர்வுகளை மூட்டையாகக் கட்டி வைத்துவிடு என்று மனம் சொல்லியது. ஆகவே அப்பாவியாக சுங்க அதிகாரிகளின் பக்கம் சென்றேன். கடவுச்சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு எதுவுமே பேசாமல் பதிந்து தந்தான் ஒருவன். நன்றி என்று சொல்லிவிட்டு பொதியை எடுக்கும் பகுதிக்குச் சென்றேன். சில நிமிடங்களில் பொதி வந்து சேர்ந்தது. எடுத்துக்கொண்டே வெளிச்செல்லும் பகுதி நோக்கிச் செல்கையில் எனக்கு முன்னால் சென்ற இளைஞன் ஒருவனை விமானப்பட வீர‌ன் ஒருவன் விசாரிப்பது தெரிந்தது. ஆகவே, அவன் பின்னால் எனது நேரத்திற்காகக் காத்து நின்றேன். அவனை அனுப்பிவிட்டு என்னைப் பார்த்தான். கடவுச்சீட்டை அவனிடம் கொடுத்தேன், வாங்கிப் பார்த்துவிட்டு நீ போகலாம் என்று சொன்னான். வெளியே வந்தேன். வெளியில் சித்தப்பா. கண்டதும் கைலாகு கொடுத்து வரவேற்றார். அவர் ஒழுங்குசெய்திருந்த வாடகை வண்டியில் பொதிகளை ஏற்றிக்கொண்டு அவரது வீடு அமைந்திருக்கும் கொட்டகேன நோக்கிச் சென்றோம். யாழ்ப்பாணாத்திற்குப் போகுமுன் ஒருநாளை கொழும்பில் கழிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். அதன்படி அக்காவைச் சென்று சந்தித்தேன். மதிய உணவு, ஷொப்பிங் என்று சில மணிநேரங்கள் சென்றது. பின்னர் யாழ்ப்பாணம் செல்வதற்காக சில பொருட்களைக் கொள்வனவு செய்தேன். பற்பசை, பல்துலக்கி, சவர்க்காரம், டியோட்ரண்ட், ஷேவிங் ரேஸர் இப்படி இந்தியாதிகள். பின்னேரம் தூக்கம். காலையில் 4 மணிக்கு எழுந்தாயிற்று. புகையிரதம் 5:45 மணிக்கு புறக்கோட்டையிலிருந்து கிளம்பிவிடும், தவறவிடக் கூடாது என்று சொல்லிக்கொண்டேன். அந்தக் காலை வேளையில் கொழும்பு சுறுசுறுப்பாகவே இருந்தது. இதேவகையான பல காலை வேளைகளில் கொழும்பின் பல தெருக்களில் அலைந்து திரிந்த காலம் ஒன்றிருந்தது. என்னுடன் பிளட்போம் சீட்டை எடுத்துக்கொண்டு சித்தப்பாவும் உள்ளே வந்தார். இன்னும் நேரம் இருந்தது. உள்ளே அலைமோதியது கூட்டம். எங்குதால் செல்கிறார்களோ தெரியவில்லை, கூட்டம் கூட்டமாகச் சிங்களவர்கள் பயணிக்கிறார்கள். எம்மைச் சிங்களவர்கள் என்று எண்ணி சிலர் வந்து தாம் போகவேண்டிய புகையிரதம் எந்த பிளட்போமுக்கு வரும் என்றும் கேட்டார்கள். மேலே தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த அட்டவணையினைப் பார்த்து முடிந்தவரையில் அவர்களுக்குக் கூறினோம். எமது புகையிரதத்தை இன்னும் காண‌வில்லை. ஆனால் இன்னொரு பிளட்போமுக்கு யாழ்ப்பாணம் செல்லும் யாழ்தேவி வந்திருந்தது. பெருத்த கூட்டம் ஒன்று அதனுள் அவசரப்பட்டு ஏறுவது தெரிந்தது. நாம் நிற்பது சரியான பிளட்போம தானா என்று சித்தப்பாவைக் கேட்டேன். எனது பற்றுச் சீட்டை வாங்கிக்கொண்டு ரயில் அதிகாரியொருவரிடம் அவர் வினவினார். நீங்கள் யாழ்தேவிக்கு பணம் செலுத்தியிருக்கிறீர்கள். அது வந்துவிட்டது. இன்டர் சிட்டி மட்டுமே இங்கு வரும், அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று கூறினார். அவசர அவசரமாக பொதிகளை இழுத்துக்கொண்டு படிகளால் ஏறி யாழ்தேவி பிளட்போமிற்குள் இறங்கி புகையிரதத்தினுள் நுழைந்துவிட்டோம். ஒருவாறு இருக்கை தேடி அமர்ந்து, சித்தப்பாவிற்குக் கைகாட்டி அனுப்பிவைத்தேன். புகையிரதம் நகரத் தொடங்கியது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.