Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    20019
    Posts
  2. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    4043
    Posts
  3. Cruso

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1887
    Posts
  4. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    9308
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/04/24 in all areas

  1. இவர் படிக்கும் போது ஒரே வகுப்பில் நானும் பின் வாங்கில் இருந்தேன். மிகவும் பெருமையாக உள்ளது. இவரது பெயர் சிவானந்தன் என்றே இன்னமும் ஞாபகம் உள்ளது. சிங்களம் எப்டியெல்லாம் சுழியோடுகிறது.
  2. அப்போதெல்லாம் “பெடியள், இங்கே கண்ணி வெடி வைச்சிருக்கிறாங்கள் அங்கே கண்ணி வெடி வைச்சிருக்கிறாங்கள்” என்று செய்திகள் வந்து போகும். எதிர்பார்த்த இலக்கு வந்தால் பெடியள்களின் கண்ணி வெடிக்கும். அதுவே நீண்ட காத்திருப்பாக இருந்தால் கண்ணியை எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். இப்போ எல்லாமே மாறிப் போயிருக்கின்றன. “ பிக்குகள் அங்கே புத்தர் சிலை வைச்சிருக்கிறாங்கள். இங்கே புத்தர் சிலை வைச்சிருக்கிறாங்கள்” என்று செய்திகள்தான் வந்து கொண்டிருக்கின்றன. பிக்குகள் வைத்ததை எடுப்பார்களா? இல்லை இதற்கு மேலேயும் வைப்பார்களா? தெரியவில்லை. நான் விடயத்துக்கு வருகிறேன். கடந்த வருடம் தாயகம் போயிருந்தேன். பண்டாரவளை, அப்புத்தளை போய் ‘ஏலா’ நீர்வீழ்ச்சியைப் பார்த்து விட்டு கண்டி நோக்கிப் பயணிக்கும் போது சாரதி லோகேஸ் ஒரு கோயிலுக்கு அருகில் வாகனத்தை நிறுத்தினார். “சீதை அம்மன் கோயிலை இந்திய அரசின் உதவியுடன் கொஞ்சக் காலத்துக்கு முன்னர் புதுசாக்கி இருக்கினம். கும்பிட்டு விட்டு வாறன்” என்று சொன்னவர் கோயிலுக்குள் சென்று விட்டார். என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காக நானும் கோயிலுக்குள் சென்றேன். இராமாயணத்தை சுருக்கமாக சுவரில் எழுதி வைத்திருந்தார்கள். குரங்குகள் ஆங்காங்கே காணக் கிடைத்தன. பக்தர்கள் உடைக்கும் தேங்காய்கள் அவைகளுக்கு உணவாக இருந்தன. கோவிலுக்கு வெளியே நதி ஓடிக் கொண்டிருந்து. நதிக்குப் பக்கத்தில் இருந்த கற்களில் ஆங்காங்கே பள்ளங்கள் இருந்தன. அதில் ஒன்றை தங்க நிறத்தில் வட்டமாக ஏறக்குறைய ஒரு பாதம் போல் உரு மாற்றி இருந்தார்கள். மரம் ஒன்றில் பக்தர்களின் வேண்டுதல்கள் முடிச்சுகளாகத் தொங்கிக் கொண்டிருந்தன. “இந்த மரத்தின் கீழ்தான் சீதை(அம்மன்) தங்கினவ. வேண்டுதல்களை எழுதி இந்த சீதை அம்மன் மரத்தில் கட்டினால் அது பலிக்கும்” என்னருகே வந்த லோகேஸ் பக்தியோடு சொன்னார். “நீங்கள் கட்டவில்லையா? “ என்றேன். “பொதுவா பிள்ளை வரம் வேண்டித்தான் முடிச்சுகளைக் கட்டுறவையள். எனக்கு இன்னும் கல்யாணமே நடக்க இல்லையே” லோகேஸ் சொன்னபோது, பிள்ளை வரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று சிலருக்கு இன்னும் தெரியவில்லை என்று ஆச்சரியமாக இருந்தது.’ “அந்த நதியிலேதான் சீதை குளித்தவ. அந்தப் பள்ளங்களைப் பாத்தீங்களே? அது அனுமாரின் காலடிகள்” “அனுமார் காலடி ஒன்றுதானே இருக்கு” “அனுமார் பறந்து வந்து அந்த இடத்தில் குதிச்சதாலை தான் அங்கே பள்ளம் வந்திட்டுது” நான் மேற்கொண்டு லோகேஸிடம் எதுவும் கேட்கவில்லை. மீண்டும் கண்டி நோக்கிப் பயணம். “இந்தச் சீதை அம்மன் கோவிலை முத்திரையா சிறீலங்கா வெளியிட்டிருக்கு. இங்கை இருந்து கல் எடுத்து இராமர் கோயிலில் பதிக்க அயோத்திக்கு அனுப்பி இருக்கினம்…..” வழி நெடுக லோகேஸ் சீதை அம்மன் கோயிலைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தான். ‘சலசல என அமைதியாக நீர் ஓடிக் கொண்டிருந்த ஒரு அழகான இடத்தை அசோக வனமாக்கி அதை பின்னர் கோயிலாக மாற்றி பலருக்கு மூளைச் சலவை செய்து பணம் பார்க்கிறார்கள்’ இப்படி ஒரு நினைப்பு எனக்குள் வந்தது. - கவி அருணாசலம்
  3. அக்காவின் அக்கறை அன்பாய் என்னை அருகிலிருத்தி வலிக்காமல் தலைவாரி வகிடெடுத்த பின்னாலே சித்திரமாய் திலகமிட்டுடுவாள் தந்தையே தடியெடுத்திடினும் தானோடி வந்து தாவியெடுத்தென்னை தன்னோடணைத்து தான் அடிவாங்கி என்துயர் போக்கிடுவாள் முழுபாவாடையை முன் இடுப்பில் சொருகி எட்டுக்கால் கோட்டில் எம்பி எம்பி ஆடுகையில் பின் எல்லோரையும் தள்ளி விட்டு எஞ்ஞான்றும் அவளே ஜெயித்திடுவாள் கபடி விளையாடுகையில் கிளிபோலப் பறந்து பறந்து காலாலே கலங்கடித்து காளையரையும் விரட்டிடுவாள் எதிர் வீட்டு முகுந்தனிடம் மட்டும் எப்போதும் சண்டையும் சச்சரவும் கேலிசெய்து கொண்டு அவன் ஓட ஓட கோலிகுண்டால் எறிந்து கொண்டு பின்னாலே ஓடுவாள் முற்றத்து மாமரத்தில் கொக்கத்டியெடுத்து முற்றிய மாங்காய்களை நான் பறிக்கையில் முன்னால் வந்த அக்காளும் தடியெடுத்து தனக்கும் ரெண்டு பிஞ்சு பறித்துக்கொண்டாள் அக்காளும் முன்போல் இல்லை குறும்புத்தனமும் குறைஞ்சு போச்சு தடியெடுத்த தந்தையும் "யாரடி அவன்" என்று தளராமல் அடிக்கின்றார் அக்காளை அன்று என்னைப் பொத்திக் காத்தவளை அருகில் நெருங்கவும் என்னால் முடியவில்லை குறுக்கேவந்த அம்மாவுக்கும் குறைவின்றி அடிவிழுது வாடிய மலர்க்குவியலாய் மண்ணில் புரளும் அக்காள் படலையை தள்ளியே பதற்றமாய் வந்தாள் மாமி தந்தையிடம் தடியைப் பிடுங்கி எறிந்தாள் உன்ர பிள்ளையை நீ அடி அல்லது கொல் -ஆனால் என்ர வாரிசை வம்சத்தை அழிக்க உனக்கேது உரிமை விக்கித்து நின்ற அப்பாவை விலக்கிவிட்டு -அக்காளை அணைத்தெடுக்கையில் அருகே வருகின்றான் முகுந்தனும் இரு இறக்கைக்குள் குஞ்சுபோல் கூடவே அக்காள் செல்ல அம்மாவின் முகத்தில் நிம்மதி, அண்ணாந்து ஆகாசம் பார்க்கிறாள்......! ஆக்கம் சுவி ......! யாழ் அகவை 26 க்காக ........!
  4. சிவலிங்கம் மாஸ்ரரின்ர மகன்..! பெயர் சிவானந்தன். இவர் குடும்பமே ஈழ ஆதரவாளர்கள். எதிரிகளை நாமே எனக்குள் உருவாக்க வேண்டாமே..!
  5. உண்மை. ராஜபக்சேக்களின் அழுக்குகளை எல்லாம் அந்த நாட்களில் நன்றாக சவர்க்காரம் போட்டு கழுவினார். இன்று அவருடைய அழுக்குகளை கழுவுவதட்கு யாருமே இல்லை. பாவம் மனுஷன். இதைத்தான் ஊழ் வினையென்பதோ? உப்பு திண்டவன் தண்ணீர் குடிப்பான். எப்படி இருந்தாலும் இந்த ஆளை உள்ளே தள்ளுவதட்கு போராடியவர்களை பாராட்ட வேண்டும்.
  6. விஜய் அரசியலுக்கு பின்னணியில் பாஜகவா? தமிழக வெற்றிக் கழகமாம்! கட்சியின் பெயரிலேயே ஒரு செய்தி இருக்க வேண்டாமா? விஜய் அரசியலில் இறங்குகிறாரா? அல்லது இறக்கப்படுகிறாரா? ஆனால், அரசியலில் ஈடுபடுவதற்கான அடிப்படைத் தகுதிகள் விஜய்க்கு இருக்கிறதா? அவருடைய வருகையால் பயன் யாருக்கு? பாதிப்புகள் யாருக்கு? அதென்ன தமிழகம்? தமிழ்நாடு என ஏன் குறிப்பிட முடியவில்லை..? குறிப்பிட்டால் உங்க பின்னணியில் இருப்பவர்களுக்கு பிடிக்காதோ..? ஆனால், ஒன்று! இது சரியான தருணம் தான்! அவரே குறிப்பிடுவதைப் போல மக்கள் ஒரு நல்ல அரசியல் கட்சிக்கு காத்திருக்கின்றனர் என்பது உண்மை தான்! விஜய் தன் அறிக்கையில், தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.’’ எனக் கூறியுள்ளார்! ஐயா விஜய் அவர்களே, உங்களால் இப்படி எல்லாம் சிந்திக்க முடிகிறதா? அல்லது யாரேனும் இதை எழுதி தந்தார்களா? ஏனென்றால், இது வரையிலான உங்கள் கனத்த மெளனம் அல்லது கள்ள மெளனம் சொல்லிய செய்திகள் வேறல்லவா? விஜய் தன் அறிக்கையில் என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும்.என்கிறார். ஆனால், தன் தாய், தகப்பனிடம் இருந்தே அண்மை காலமாக அவர் விலகி உள்ளார்! சாதராணமான பேச்சுவார்த்தை கூட இல்லாத நிலை! அவருடைய அரசியல் அவரது குடும்பத்தையே பிளந்துள்ளது. அரசியலில் ஈடுபட சில அடிப்படை பண்புகள் வேண்டும். அது தங்களிடம் இருக்கிறதா விஜய் அவர்களே? # முதலாவது துணிச்சல்! # இரண்டாவது யார் எதிரி? யார் நண்பன் என்ற தெளிவு! # மூன்றாவது வெளிப்படைத் தன்மை! இது தான் பாதை! இது தான் பயணம் எனச் சொல்ல வேண்டும். # நான்காவது நாட்டு நிலவரங்களில் ஒரு தொடர்ச்சியான அக்கறையும், அதனை ஒட்டி அபிப்ராயமும் வெளிப்பட வேண்டும். # ஐந்தாவது மக்கள் செல்வாக்கு! மேற்படி ஐந்து அம்சங்களில் கடைசி ஒன்றில் மட்டும் தான் அபரிதமான மதிப்பெண் பெறுகிறார்! மற்ற நான்கிலும் அவருக்கு என்ன மதிபெண் போடலாம் என பார்க்கலாமா..? துணிச்சல்: எம்.ஜி.ஆர் அரசியல் கட்சி ஆரம்பிச்ச போது கருணாநிதி தான் தன் பிரதான எதிரி என ஒரு பலமான எதிரியோடு மோதினார்! அவருடைய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை திரையிடவிடாமல் தடுத்தனர். பிலிம் ரோலை எரிக்கப் பார்த்தனர். எம்.ஜி.ஆர் தொண்டர்கள் ஆங்காங்கே திமுகவினரால் தாக்கப்பட்டனர். எம்.ஜி.ஆர், ‘மலையாளி’ என்றும், ‘அறிவில்லாதவர்’ எனவும் அவமானப்படுத்தப்பட்டார். எல்லாவற்றையும் எதிர்கொண்டு தான் எம்.ஜி.ஆர் முன்னேறினார்! ஆனா, விஜய்யின் துணிச்சல் பற்றி சொல்ல வேண்டும் என்றால், 2002-20011 திமுக ஆட்சி காலத்தில் சன்பிக்சர்ஸ் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் உங்கள் காவலன் படம் பாதிக்கப்பட்ட போது அமைதி காத்தீர்கள். 2011 தேர்தலில் ஜெயலலிதா கேட்காமலே அதிமுகவிற்கு ஆதரவு தந்து, அதிமுக வெற்றி பெற்ற பின், ”அந்த வெற்றியில் அணிலாய் என் பங்களிப்பும் இருந்தது” என சொன்னதற்காக ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்ட போதும், அமைதி காத்தீர்! தலைவா படத்தில் டைம் டூ லீட் என்ற வாசகத்தை பேனரில் வைத்தீர்கள்! படத்தை திரையிட ஜெயலலிதா அனுமதிக்கவில்லை. தியேட்டர்காரர்கள் பயந்தனர்! நீங்க கொட நாடு ஓடிச் சென்று கும்பீடு போட்டு ஜெயலலிதா காலில் விழப் போனீரீர்கள். ஜெயலலிதா பார்க்கவே விரும்பாத நிலையில் அவமானப்பட்டு திரும்பி வந்து அம்மா அவர்கள் தலைவா படம் வெளியீட்டிற்கு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, பேனரில் உள்ள வாசகத்தை அகற்றி படத்தை வெளியிட்டீர்கள்! உங்கள் கருத்து சுதந்திரத்தை காக்கவே நீங்கள் போராடவில்லையே! சர்க்கார் படத்தில் ஜி.எஸ்.டி பற்றி துணிச்சலாக வசனம் பேசினீர்கள்! பாஜகவினரின் கோபத்திற்கு ஆளானீர்கள்! ஹெச்.ராஜா போன்றவர்கள் உங்களின் கிறிஸ்த்துவ குடும்ப பின்னணியை இழிவுபடுத்தி பேசினர். ரெய்டுகள் நடத்தப்பட்டன! அதை சமாளிக்க மோடியை நேரில் சந்தித்தீர்கள். அதன் பிறகு கப்சிப் தான்! மோடியிடம் பேசப்பட்டது என்ன? அதன் பிறகு பாஜக தரப்பில் உங்களுக்கு இணக்கம் ஏற்பட்டது எவ்வாறு? தினமலர் உள்ளிட்ட இந்துத்துவ பத்திரிகைகள் உங்களை மிக மென்மையாக கையாளுவதன் ரகசியம் என்ன? உங்கள் தந்தையை விலக்கி வைக்கச் சொல்லி உங்களை நிர்பந்தித்தது யார்? யார் எதிரி? யார் நண்பன்? மோடியும் நண்பர், ஸ்டாலினும் நண்பர், எடப்பாடியும் எதிரியல்ல..என்கிற ரீதியான அரசியல் தான் விஜய் அரசியலாக உள்ளது! காரணம், தெளிவான கொள்கை இல்லை! மதவெறி அரசியல் கூடாது என்றால், பாஜக தான் எதிரி! ஊழல், குடும்ப அரசியல் கூடாது என்றால் திமுக எதிரி! அதிமுகவும் ஊழல் கட்சி என்பதால் எதிரி தான்! சாதி அரசியல் கூடாது என்றால், பாமக, கொ.ம.க ஆகியவை எதிரி! எதிரியைத் தீர்மானிக்காமல் அரசியல் செய்ய முடியாது. நாட்டு நிலவரங்களில் அக்கறை; 2009 லேயே ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிவிட்டீர்கள். எனவே, மக்களை பாதிக்கும் விவகாரங்களில் உங்கள் கருத்தை நீங்கள் தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் இது வரை உங்கள் எதிரி யார் எனச் சொல்லவேயில்லை. தமிழ் நாட்டில் சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது! இளைஞர்கள், பிஞ்சு மாணவர்கள் கூட மது பழக்கத்தில் சீரழிகின்றனர்! தமிழக ஆட்சியாளர்களின் பேராசை இதற்கு பின்புலம். நீங்கள் இது வரை இது குறித்து கவலைப்பட்டு உள்ளீர்களா? ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் இங்கு ஓட்டுக்கு பணப்பட்டுவாடா கனஜோராக நடக்கிறது. ”பணத்தை வாங்காதீர்கள்…” என்று உரத்து உங்கள் குரல் ஒலித்திருக்க வேண்டாமா? தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலை சூறையாடிய நிலையில்,மக்கள் அமைதி போராட்டம் நடத்தும் போது குருவி போல் சுட்டுக் கொல்ல்லப்பட்டனர். நீங்கள் அதற்கு என்ன எதிர்வினை ஆற்றினீர்கள்? சினிமாவில் சுற்றுச் சூழல் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது குறித்து கொந்தளித்து வசனம் பேசிவிட்டு, தினசரி தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான லாரிகளில் ஆற்று மணல்களும், மலைகளை தரைமட்டமாக்கி என்சாண்ட் எடுக்கப்பட்டு இயற்கை வளம் கொள்ளை போவது குறித்தும் அமைதி காத்து வருவதில் என்ன பலன் இருக்கிறது..? மெர்சல்’ படத்தில் மருத்துவ கொள்ளைகள் குறித்து தோளுரித்து பேசினால் போதுமா? சம்பாதித்த பணத்தில் நான்கு மருத்துவமனைகளைக் கட்டி மருத்துவ சேவை என்றால் என்ன? என்பதை நிருபித்து காட்டி இருக்கலாமே! மேற்படி விவகாரங்களில் ஏன் உங்களால் கருத்து சொல்ல முடியவில்லை. காரணம், உங்கள் படத்தின் டிக்கெட்டுகளை ஆயிரம்,இரண்டாயிரம் என சட்டத்திற்கு புறம்பாக விலை வைத்து விற்பதில் ஆட்சியாளர்கள் மெளனம் காட்டுகிறார்கள்! பதிலுக்கு நீங்களும் அமைதி காக்கிறீர்கள் என புரிந்து கொள்ளலாமா..? வெளிப்படைத் தன்மை: மக்கள் இயக்கம் கண்ட பிறகு இந்த 15 ஆண்டுகளில் நீங்கள் எந்த ஒரு பொது விஷயத்திற்கும் வாய் திறப்பதில்லை. உங்கள் சம்பாத்தியம் என்ன? சொத்து மதிப்பு என்ன? பொதுச் சேவைக்கு உங்கள் சம்பாத்தியத்தில் எத்தனை சதவிகிதம் தருகிறீர்கள்..எதிலாவது வெளிப்படைத் தன்மை இருக்கிறதா? பாருங்கள்! கர்நாடகத்தில் பிரகாஷ்ராஜ் எப்படி சுதந்திரமாக அரசியல் கருத்துகளை மனம் திறந்து பேசுகிறார்! பாஜகவை துணிச்சலாக எதிர்க்கிறார். அநீதியை எதிர்க்க முடிந்தவர்களால் மட்டுமே மக்கள் நம்பிக்கையை பெற முடியும்.இனிமேலாவது துணிந்து அநீதியை எதிர்ப்பீர்களா? எனில், உங்களை நீங்கள் தூய்மையாக வைத்துக் கொண்டால் தான் அப்படி எதிர்க்க முடியும் என்பதை நினைவில் வையுங்கள்! 2026-க்கு தான் தேர்தலில் பங்கு பெறுவீர்கள் என்றால், அதற்கு இந்த தேர்தலையே ஒரு டிரைலராக நீங்க பார்க்கணும்! எடுத்த எடுப்பில் பெரிய வெற்றியை ஈட்டி நேரடியாக முதல்வராக முடியாது! இனியும் காலம் தாழ்த்தாது களத்திற்கு வாங்க. நீங்க என்ன பேசுறீங்க, என்ன செய்யிறீங்க என்பதைக் கொண்டு தான் உங்கள் பின்னணியில் பாஜக இருக்குதா? இல்லையா? என்ற முடிவுக்கு வர முடியும். ஏனென்றால், விஜய்க்கு தானாக அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் துணிச்சல் கிடையாது என்பதே உண்மை! இரண்டு திராவிட இயங்கங்கள் இங்கு மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்ற நிலையில், ‘அவர்களின் வாக்கு வங்கியை தான் ஒரு போதும் அள்ள முடியாது’ என்ற நிலையில் உங்களை இறக்கி ஆழம் பார்க்கிறதா பாஜக? என்ற சந்தேகத்திற்கு விரைவில் விடை கிடைத்துவிடும். எப்படி இருந்தாலும் விஜய் வருகையால் இரு திராவிடக் கட்சிகளுக்கு சற்று வாக்கு வங்கி பலவீனப்படும். விஜய் பாஜகவின் நிழலாக இயங்க நினைத்தால், அவரைப் பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை! சாவித்திரி கண்ணன் https://aramonline.in/16521/actor-vijay-politics/
  7. சிவானந்தன் சிவநாதன் இப்படி இருக்கலாமென நினைக்கிறேன் அண்ணா. தகப்பன் வல்வையை சேர்ந்தவர் . Sivananthan was born in Madduvil South near Chavakachcheri in northern Ceylon.[1] His father was a Tamil scholar from Valvettithurai and his mother was teacher of religion and science.[1] He was educated at Saraswathi Maha Vidyalayam, Drieberg College and Jaffna Hindu College (1968–75).[1][2][3] After school he joined the University of Peradeniya's Science Faculty in 1976, graduating in 1980 with a BS degree in physics.[1][3][ எனது ஞாபக சக்தி சரியாகத் தான் உள்ளது. இதுக்காகவாவது என்னை நினைத்து நானே சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கிறேன். செயயேஸ்.
  8. கேஸ் பை கேஸ் ஆக யாரும் ஆலோசனை கொடுக்க முடியாது. ஒரு கொள்கையில் இருந்து ஒருவர் மாறுகிறார் என்பதற்காக ஒருவர் மீது வன்முறையை அவிழ்த்து விடுவது சட்ட ரீதியிலும் தவறு, அதே நேரம் கொள்கையையும் வளர்க்காது (மேலே சொல்லியிருக்கிறேன் ஏன் என்று). எனவே, இதைச் செய்தோர் சாதாரண றௌடிகள் அல்ல, முட்டாப் பீசு றௌடிகள் என்பது என் அபிப்பிராயம் - இவர்களுக்கு வழி காட்டல் சட்டத்திடமிருந்து மட்டும் தான் கிடைக்க முடியும், ஏனையோர் நேரம் செலழிப்பது வீண் வேலை. இந்த தாக்குதலில் தீ மூட்டல் சம்பந்தப் பட்டிருக்கிறதென நினைக்கிறேன். அது எப்படி எதிரே நிற்பவரை உணர்ச்சி மயப்பட்டுத் தாக்குவது போல ஆகும் என்கிறீர்கள்? மேற்கு நாட்டு சட்டங்களில், தீ முட்டலுக்கு கடுமையான தண்டனை ஏன் இருக்கிறது என நினைக்கிறீர்கள்? ஏனெனில், simple arson எனப்படும் சிறிய தீ மூட்டல் கூட ஒரு திட்டமிட்டு, நேரமெடுத்துச் செய்யும் செயல். எனவே, "உணர்ச்சி மயப்பட்ட சூழலில் செய்தது" என்று யாருக்கும் விளங்கப் படுத்தித் தப்ப இயலாது. ஆனால், தீ மூட்டல் மட்டுமல்ல. தமிழ் தேசியத்தின் பெயரால் "கொள்கைப் பற்றில் செய்கிறோம்" என்று செய்யும் மிரட்டல்கள், புகைக் குண்டெறிதல், கூட்டம், குழப்புதல் எல்லாமே தமிழ் தேசியத்திற்கு வைக்கிற ஆப்புத் தான்! இதை கண்டிக்காமல், தடவிக் கொடுக்கும் எவருக்கும் அந்த ஆப்பில் பங்கிருக்கிறதென நம்புகிறேன்!
  9. அதெல்லாம் தெரியாது.. அந்தளவுக்கு சிந்திக்க நமக்கு அறிவும் இல்ல.. ஆள் சிங்களவன் கூப்பிட்டு வந்திருக்கு.. வார்டன்னா அடிப்பம்.. ஆள் துரோகிதான்.. மூடிட்டு கிளம்புங்க நீங்கள்..
  10. 1 - அவர் அமைச்சரின் அழைப்பில் வந்திருப்பது... 2- அமைச்சரின் அழைப்பில் வந்திருப்பதால் எம் இனத்தை நோக்கிய உங்களது நளினம் 3- துரையப்பா என்று அவர் பெயர் வைத்து இருப்பதால் தான் அவர் சிங்களத்தால் முன்னுரிமை கொடுத்து வரவேற்கப்பட்டார் 4- எவர் தமிழருக்காக தமது பொன்னான நேரத்தை ஒதுக்கி எதையாவது செய்தால் எனது வாக்கு அவர்களுக்கு தான். சுரேனுடைய செயற்பாட்டை கூட யார் குற்றியும் அரிசியானால் சரி என்று இங்கே எழுதியவன் நான் தான். இன்றும் உங்களுக்கு ஒரு மைனஸ் போட்டிருக்கிறேன். படிப்பு பள்ளிக்கூடம் பற்றி சக கருத்தாளரை சுட்டுவிரல் நீட்டாதீர்கள்.
  11. இதையெல்லாம் ஆங்கலத்திலும் வெளியிட்டால் வெளிநாடுகளில் உள்ளவர்களும் வாசித்து மாணவர் அமைப்புகள் மூலம் மீள்வெளியீடு செய்ய வசதியாக இருக்கும்.
  12. வன்முறைகளை ஆதரிக்கவில்லை மாறாக வன்முறைக்கான காரணங்களை ஆதரிககிறோம். மிக தீவிரமாக ஆதரிக்கிறோம் இந்த கனடா தமிழ் பேரவையில் உள்ள மிகச்சிலர். அதிகாரமிக்க சிலர் பேரவையின் இலக்குகள். இலஞ்சியம்களுக்கு மாறாக தன்னிச்சையாக செயல்படுகிறதை எப்படி தடுக்க முடியும் அல்லது தடுக்கும் வழிவகைகளையும் தயவுசெய்து சொல்லுங்கள் அவர்கள் வன்முறைகளை பின்பற்றமால் உங்கள் ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் பின்பற்ற முடியும்
  13. கட்டிடங்களை எரிப்பது மட்டுமல்ல வன்முறையின் வெளிப்பாடு. புலம் பெயர் அமைப்புகளின் சகியாத்தன்மை, வன்முறை ஆதரவுப் போக்கு என்பவற்றைக் காட்டும் சம்பவங்கள் சில ஐரோப்பாவிலும், குறைந்தது ஒரு தடவை அவுசிலும் நடந்திருக்கின்றன: 25 வருடங்கள் முன்பு அல்ல, கடந்த 15 வருடங்களுக்குள்! யாழில் இவை பற்றி உரையாடப் பட்ட போதெல்லாம், வன்முறையை செல்லமாகத் தட்டிக் கொடுக்கும் கருத்துகளும் வெளிப்பட்டிருக்கின்றன. இந்தத் திரியிலும் இது போன்ற தட்டிக் கொடுத்தல் நீங்கள் உட்பட சிலர் செய்வது புதுமையல்ல! இப்படி வன்முறையை பூடகமாக ஆதரிப்பதன் விளைவுகள், சட்ட ரீதியாக இருக்கா விட்டாலும் சமூக ரீதியாக இருக்கும். இளையோர், வன்முறைப் போக்கு காரணமாக, தமிழ் தேசிய செயல்பாடுகளை விலக்கி வைத்து விடும் ஆபத்து இருக்கிறது. அடுத்த தலைமுறையை அன்னியப் படுத்தி விட்டால், சிங்களவர்கள் எதிர்பார்க்கும் விளைவை நாமே வெள்ளித் தட்டில் வைத்து அவர்களுக்குக் கொடுத்து விடுவோம்!
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெங்கி ராமகிருஷ்ணனுக்கு 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், கார்லோஸ் செரானோ பதவி, பிபிசி நியூஸ் 28 ஜனவரி 2024 முதுமை அடைவதும், இறப்பதும் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் சந்திக்கும் நிலை. பலர் மரணத்திற்கு பயப்படுகிறார்கள். ஆனால் நாம் ஒவ்வொருவரும் ஏன் வயதாகி இறக்க வேண்டும்? வயதாவதை நிறுத்த முடியுமா அல்லது மரணத்தைத் தவிர்க்க முடியுமா? இந்தியாவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி மூலக்கூறு உயிரியலாளரான வெங்கி ராமகிருஷ்ணன் தனது முழு வாழ்க்கையையும் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காகவே செலவிட்டிருக்கிறார். ராமகிருஷ்ணன் தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தில் 1952 இல் பிறந்தார். தாமஸ் ஏ. ஸ்டைட்ஸ், அடா ஈ யோனத்துடன் இணைந்து 2009 ஆம் ஆண்டு ராமகிருஷ்ணன் நோபல் பரிசு பெற்றார். ராமகிருஷ்ணன் எழுதிய வொய் வீ டை: தி நியூ சைன்ஸ் ஆஃப் ஏஜிங் அண்டு தி க்வெஸ்ட் ஃபார் இம்மோர்ட்டாலிட்டி (Why We Die: The New Science of Aging and the Quest for Immortality) என்ற புத்தகம் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆங்கிலத்தில் வெளியிடப்படுகிறது. ராமகிருஷ்ணனிடம் இந்த விஷயங்களைப் பற்றிப் பேசியபோது, மனிதர்கள் நீண்ட காலம் வாழப் பயன்படும் செல்கள் சுருங்குவதற்குக் காரணமான ரசாயன எதிர்வினைகள் அனைத்தையும் விளக்கினார். பிபிசி: முதுமை என்றால் என்ன? மனிதர்களின் உடலில் இந்த செயல்முறை எப்படி நடைபெறுகிறது? வெங்கி ராமகிருஷ்ணன்: முதுமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று நமது டிஎன்ஏவில் உள்ள மரபணுக்கள் சேதமடைவது. மரபணு மட்டத்தில், புரதங்கள் ஆயிரக்கணக்கான ரசாயன எதிர்வினைகளை இணைக்கின்றன. இந்த செயல்களால் தான் நாம் உயிர்வாழ்கிறோம். இவை நமது உடலுக்கு வலிமையையும் வடிவத்தையும் தருகின்றன. புரதங்கள் மரபணுக்களுக்கு இடையே தொடர்பு கொள்ள உதவுகின்றன. நமது நரம்பு மண்டலம் அவற்றைச் சார்ந்து செயல்படுகிறது. மூளையில் உள்ள பல காரணிகள் சேமிப்பிற்கு பங்களிக்கின்றன. வைட்டமின்கள், ஹார்மோன்கள், என்சைம்கள், ஆன்டிபாடிகள், ஹீமோகுளோபின் போன்றவையும் புரதங்களே. முதுமை என்பது உயிரணுக்களில் புரதங்களை உற்பத்தி செய்யும் திறனை நம் உடல் இழப்பதே ஆகும். நமது திசுக்கள், செல்கள், உயிர் மூலக்கூறுகள் மற்றும் இறுதியில் உடலும் சேதமடைவதை நாம் காணலாம். இது நாம் பிறந்தது முதல் படிப்படியாக நடக்கும் ஒரு செயல். குழந்தை பருவத்திலிருந்தே நம் வயது அதிகரிப்பதைக் காண்கிறோம். ஆனால், அந்த காலகட்டத்தில் நாம் வயதாவது பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் அப்போதும் நாம் வளர்கிறோம்... இளமைப் பருவத்தை அடைகிறோம்.... அது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. ஆனால் ஆண்டுகள் செல்லச்செல்ல, இந்த அறிகுறிகள் தீவிரமடைகின்றன. உடலில் உள்ள முக்கியமான அமைப்புகள் தோல்வியடையும் போது, உடல் முழுவதுமாக செயல்படாது. அதுவே மரணத்திற்கு வழிவகுக்கும் விளைவு. ஆனால் மரணத்தில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நாம் இறந்த பிறகும் குறிப்பிட்ட நேரத்திற்கு, உடலில் உள்ள சில செல்கள் உயிர்வாழ்கின்றன. அதனால்தான் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகின்றன. ஆனால், உடலில் எந்த உறுப்பும் செயலிழந்தால் மரணம்தான் நிகழும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வயதாவதைத் தடுத்து இறப்பை நிறுத்திவைக்கமுடியுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க உலகம் முழுவதும் ஏராளமான முதலீடுகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிபிசி: உயிரியலில் ஒவ்வொரு மரபணு வரிசையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதாக உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். மரபணு ரீதியாக நாம் ஏன் வயதாகிறோம்? ஏன் இறக்க வேண்டும்? வெங்கி ராமகிருஷ்ணன்: ஏனென்றால் மரபணு பரிணாமம் என்ற மாற்றம் நம்மை தனிநபர்களாக பார்க்கவில்லை. அது எல்லா இடங்களிலும் அதுவாகவே நடந்து கொண்டிருக்கிறது. மரபணு பரிணாமம் என்பது மரபணுக்களின் பரிமாற்றம். நம் உடல்களில் பெரும்பாலானவை வயதானதைத் தடுக்க முயற்சிப்பது உண்மைதான். சிறந்த செயல்களின் மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்ள அவை முயல்கின்றன. வேட்டையாடுபவர்களால் கொல்லப்படும் அபாயத்தில் உள்ள உயிரினங்களில், மிக நீண்ட காலம் வாழும் உயிரினமாக இருந்தாலும் இந்த பரிணாமம் தடைபடுவதில்லை. இருப்பினும், மிக நீண்ட காலம் உயிர் வாழும் தன்மையும் அதுபோன்ற உயிரினங்களுக்கு எந்தப் பயனையும் அளிப்பதில்லை. ஏனென்றால் அவை ஒரு கட்டத்தில் மற்ற உயிரினங்களின் கைகளில் சிக்கி உயிரிழக்கின்றன. சிறிய உயிரினங்களுடன் ஒப்பிடுகையில், நடைமுறையில் பெரிய உயிரினங்கள் நீண்ட காலம் வாழ்கின்றன. எலிகளும் வெளவால்களும் ஒரே எடையில் இருந்தாலும், வெளவால்களே நீண்ட காலம் வாழ்கின்றன. ஏனென்றால் அவை பறக்கின்றன. அதனால் பிற உயிர்களின் கைகளில் சிக்கி அவை உயிரிழப்பதில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உயிர்களின் உருவ அமைப்புக்கும், அவை உயிர் வாழும் காலத்திற்கும் நேரடித் தொடர்பில்லாவிட்டாலும், சிறிய உயிர்கள் குறைந்த காலமே உயிர் வாழ்கின்றன. பிபிசி: கடந்த 150 ஆண்டுகளில் மனித ஆயுள் காலம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் மக்களின் ஆயுட்காலம் மேலும் அதிகரிக்குமா? அல்லது நமது உயிரினங்கள் வாழக்கூடிய அதிகபட்ச ஆயுட்காலத்தை நாம் ஏற்கனவே அடைந்துவிட்டோமா? இது விஞ்ஞானிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாதத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வெங்கி ராமகிருஷ்ணன்: மேம்பட்ட ஆரோக்கியம் மற்றும் மருத்துவ முறைகளுடன் இன்று நாம் நீண்ட காலம் வாழ்கிறோம். அப்படிப்பட்ட காலங்களில் நாம் 120 ஆண்டுகள் வாழலாம். இந்த வயதிற்கு மேல் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. 100 வயதை எட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, ஆனால் 110 வயதை எட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்று அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நீண்ட ஆயுட்காலம் குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானி டாம் பேர்ல்ஸ் தெரிவித்துள்ளார். 110 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் இயற்கையாகவே உயிரியல் வரம்புகளை எதிர்கொள்வோம் என்று அவர் உணர்ந்தார். மரபணு காரணிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறைகளுடன் 110 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் மக்கள் உள்ளனர் என்பது உண்மைதான். ஆனால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. அதாவது, இயற்கையாகவே இந்த வயதைத் தாண்டிய பிறகு ஒரு எல்லை இருப்பதாகத் தோன்றுகிறது. புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடிந்தால்தான் சராசரி ஆயுளை இன்னும் சில ஆண்டுகள் அதிகரிக்க முடியும். வயதாவதற்கான காரணங்களை திறம்பட எதிர்த்துப் போராடினால், ஒருவேளை இந்த வரம்பை மீறலாம். ஆனால், அதைச் செய்வது எவ்வளவு எளிது என்று எனக்குத் தெரியவில்லை. இது பற்றி சிந்திக்க வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடிந்தால்தான் சராசரி ஆயுளை இன்னும் சில ஆண்டுகள் அதிகரிக்க முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பிபிசி: முதுமை ஒரு நோயா என்பதும் விவாதத்திற்குரியது... வெங்கி ராமகிருஷ்ணன்: புற்றுநோய், ஞாபக மறதி, உடல் உறுப்புகளில் வீக்கம், மூட்டுவலி, இதயம் தொடர்பான நோய்களும் வயதுக்கு ஏற்ப வருகின்றன. அதனால்தான் இந்த நோய்களுக்கு முதுமையே காரணம் என்று கூறப்படுகிறது. முதுமை ஒரு நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால், முதுமை என்பது ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டிய இயற்கையான நிகழ்வு. இந்த தவிர்க்க முடியாத, பொதுவான செயல்முறையை எப்படி நோய் என்று அழைக்க முடியும் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சமீபத்தில் உலக சுகாதார நிறுவனமும் முதுமை ஒரு நோய் அல்ல என்று கூறியுள்ளது. முதுமையை ஒரு நோயாகக் கருதும் அழுத்தம் அதிகரித்ததால், ஆராய்ச்சிக்காகப் பெரும் தொகை செலவிடப்பட்டது. பிபிசி: எதிர் காலத்தில் வயதாவதற்கு எதிரான சிகிச்சையில் எந்தெந்த பகுதிகளில் மேலும் முன்னேற்றங்களைக் காண எதிர்பார்க்கிறீர்கள்? வெங்கி ராமகிருஷ்ணன்: ''இதில் எதையும் எளிதாகக் கணிக்க முடியாது. குறிப்பாக எதிர்காலத்தைப் பற்றி...’’ என்று கிண்டல் செய்தார் பேஸ்பால் வீரர் யோகி பெர்ரா. அந்த சிகிச்சைகள் எவ்வளவு மேம்பட்டவையாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், முதுமையை குறைக்க பல நடைமுறைகள் உள்ளன. உதாரணமாக, கலோரிகளை கட்டுக்குள் வைத்திருப்பது வயதாகும் ஆபத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளம் வயதில் இப்படிச் செய்வதால் பிரச்னைகள் ஏற்படும் என்பதால், கலோரிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க இதேபோன்ற மருந்து தேடப்படுகிறது. ஆனால், ஐஸ்க்ரீமுடன் கேக் சாப்பிட்டுவிட்டு, எந்தக் கவலையும் இல்லாமல் மருந்து சாப்பிட்டால் போதுமா..? ராபமைசின் என்ற மருந்தில் பலர் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அதிக அளவு எடுத்துக் கொண்டால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை நசுக்கி, கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்று கூற்றுகள் உள்ளன. மற்றொரு செயல்முறை..பரபியோசிஸ். ஒரு இளம் விலங்கிலிருந்து இரத்தம் எடுக்கப்பட்டு ஒரு வயதான விலங்குக்கு செலுத்தப்படுகிறது. அந்த இரத்தத்தைப் பெறும் விலங்கு அதன் உடல் உறுப்புகளில் புத்துணர்ச்சி பெறுகிறது. முதுமையை ஏற்படுத்தும் பெரும்பாலான காரணிகள் இரத்தத்தில் உள்ளன. அவற்றை அடையாளம் காண பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு சில முதிர்ந்த செல்கள் வயதுக்கு ஏற்ப வளரும். வீக்கமும் இதன் அறிகுறியாகும். வயதான செல்கள் அழிக்கப்பட வேண்டுமா? இதை அடைய முடிந்தால், சில ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற வயதான சில விளைவுகளை மாற்றியமைக்க முடியும் என்று கூறுகிறார்கள். மற்றொரு சுவாரசியமான ஆராய்ச்சி... செல்லுலார் ரீப்ரோகிராமிங். இதில், செல்கள் அவற்றின் அசல் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களை சமாளிக்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. இந்த செயல்முறை சற்று ஆபத்தானது. ஏனெனில் சில நேரங்களில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இருப்பினும், விலங்குகள் மீதான இந்த சோதனைகள் நம்பிக்கைக்குரிய முடிவுகளை அளித்துள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வயதாவதைத் தடுத்து, இறப்பைத் தவிர்க்கமுடியும் என்பது குறித்து உலகம் முழுவதும் ஏராளமான கதைகள் இருந்துவருகின்றன. பிபிசி: இவை தவிர, அறிவியல் கட்டுக்கதைகளும் உள்ளன. அது போன்ற கதைகளுக்கு நிறைய விளம்பரங்கள் கிடைக்கின்றன. வெங்கி ராமகிருஷ்ணன்: ஆமாம். முற்றிலும் அறிவியலுக்கு ஏற்பில்லாத, தவறான கருத்துகளும் உள்ளன. மக்கள் நம்பும் விஷயங்களில் ஒன்று கிரையோனிக்ஸ். இதன் பொருள் ஒருவர் இறந்தால், அவரது உடல் திரவ நைட்ரஜனில் பாதுகாக்கப்படுகிறது. எனவே அவர்கள் மரணத்தை வெல்ல முயல்கிறார்கள். ஆனால், அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் உயிர்ப்பிக்கக் கூடிய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் கிடைக்குமா என்பது தெரியவில்லை. இப்போதைக்கு இது வெறும் கட்டுக்கதை தான். இது மக்களின் மரண பயத்தை சுரண்டுவதற்கான ஒரு வழியாகும். கிரையோனிக்ஸ் மீது நம்பிக்கை வைத்து பணத்தைச் செலவழிப்பவர்களும் உண்டு. எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கலாம். ஆனால், இளமையை வாங்க முடியாது. நான் இந்தியாவில் வளர்ந்தவன். ஆப்ரிக்கா மற்றும் அனைத்து பகுதிகளில் இருந்து வரும் பலரை நான் அறிவேன். கிரையோனிக்ஸ் பற்றி யாரும் யோசிக்கவே இல்லை. பிபிசி: முதுமைப் பயம் பலரிடையே அதிகரித்துள்ளது. அதனால்தான் போடோக்ஸ் பயன்படுத்துகிறோம். அதாவது நரைத்த முடிக்கு கலர் அடிப்பது போல. இப்படிப்பட்டவற்றால் நமக்கு வயதாகிறது என்ற பயம் குறையும் என்று நினைக்கிறீர்களா? வெங்கி ராமகிருஷ்ணன்: வயது வித்தியாசமின்றி ஒருவருக்கு பல அழுத்தங்கள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு அதிக அழுத்தம் உள்ளது. ஆனால் முதுமையை தடுக்கும் ஆராய்ச்சி முதுமை பயத்தை குறைக்கும் என்று நான் நினைக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வயதாவதைத் தடுக்கும் எந்த மருந்தும் சந்தையில் இல்லை என்ற நிலையில், நல்ல தூக்கம், நல்ல உணவு, உடற்பயிற்சி போன்றவை அவசியத் தேவையாக உள்ளன. பிபிசி: முதுமையை தாமதப்படுத்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. நிறைய பணம் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால், உங்கள் புத்தகத்தில் ஆரோக்கியமாக இருக்க மற்ற வழிகளை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். அவற்றைப் பற்றி விளக்க முடியுமா? வெங்கி ராமகிருஷ்ணன்: நல்ல தூக்கம், நல்ல உணவு, உடற்பயிற்சி போன்றவை அவசிய தேவை. வயதாவதைத் தடுக்கும் எந்த மருந்தும் சந்தையில் இல்லை. நமது பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. எந்த பக்க விளைவுகளும் இதில் இல்லை. நமது உயிரியல் பரிணாமம் சார்பு மற்றும் வேட்டையாடலில் தொடங்கியது. அந்தக் காலத்தில் மக்கள் சீரான முறையில் சாப்பிட்டு வந்தனர். இயற்கையாகவே அவர்கள் மிகச்சரியாக சாப்பிட்டு, நன்றாக உறங்கி வந்த நிலையில், நான் முன்பே குறிப்பிட்டது போல அவை கலோரிகளையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. ஆனால் இப்போது பசி இல்லாவிட்டாலும் சாப்பிடுகிறோம். மேற்கில் உடல் பருமன் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. நம் முன்னோர்களை ஒப்பிடும்போது நாம் வயிற்றில் எப்போதும் எதையாவது வைத்திருக்கிறோம். உடற்பயிற்சியையும் போதுமான அளவு நாம் செய்வதில்லை. மேலும் தூக்கம் வரும்போது, அதன் முக்கியத்துவம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. நன்றாகத் தூங்குவது நமது உடலின் மறுசீரமைப்பு அமைப்புகளில் மிக முக்கியமான பகுதி என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இப்போது நம் முன்னோர்களின் நடைமுறைகளைப் பின்பற்றினால், தசை, மைட்டோகாண்ட்ரியல் செயல்பாடு, இரத்த அழுத்தம், மன அழுத்தம், நினைவாற்றல் இழப்பு போன்ற அபாயங்களைக் குறைக்கலாம். இவற்றை எப்போதும் பின்பற்றுவது எளிதாக இருக்காது. சில நேரங்களில் மக்கள் ஒரு மாத்திரையை எடுத்துக் கொண்டு அவர்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆனால், அதைக் கடக்க வேண்டும். பிபிசி: நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்கள் என்பதல்ல முக்கியம்... எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியம் என்ற பழமொழி உங்களுக்கு பிடிக்குமா? வெங்கி ராமகிருஷ்ணன்: ஆம், நல்ல வார்த்தை. இதற்கு நான் உடன்படுகிறேன். அதுதான் தேவை. வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று தெரிந்து கொண்டால்.. நெஞ்சு வலி அபாயங்கள் குறையும். மனநிலையையும் அது நன்றாக மேம்படுத்துகிறது. முடிந்தவரை நாம் விரும்பும் வரை வாழ விரும்புகிறோம். அது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நாம் தனிப்பட்ட முறையில் விரும்புவது இந்த சமுதாயத்திற்கோ அல்லது இந்தச் சூழலிற்கோ சிறந்ததாக இருக்காது. புதைபடிவ எரிபொருள் பயன்பாடு மற்றும் புவி வெப்பமடைதல் காரணமாக பல்லுயிர்ப் பெருக்கத்தின் பாதிப்பை நாம் காண்கிறோம். தனி மனிதனாக நாம் எடுக்கும் முடிவுகள் சமூகத்திற்கு கேடாக அமைகின்றன. அதைக் கடக்க நமக்கு ஒரு உண்மையான உணர்வு தேவை. https://www.bbc.com/tamil/articles/ckd47vx780xo
  15. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகெங்கிலும் உள்ள பெண்களில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இந்த நோயால், ஒவ்வொரு ஆண்டும் 3,00,000 க்கும் அதிகமானோர் இறக்கிறார்கள். ஹெச்பிவி தடுப்பூசியில் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பை கிட்டத்தட்ட 90% குறைக்கும் என ஆராய்ச்சி கூறுகிறது. ஹெச்பிவி என்றால் என்ன? ஹெச்பிவி(human papillomavirus(HPV)) என்பது மிகவும் பொதுவான வைரஸ்களின் குழுப் பெயர். இங்கு 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான ஹெச்பிவி வைரஸ்கள் உள்ளன. இவற்றால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் பொதுவாக எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. சில வைரஸ்கள் நம் உடலில் மருக்களை ஏற்படுத்தும். அவை நம் கை, கால், பிறப்புறுப்பு அல்லது வாயில் தோன்றலாம். இருப்பினும், பெரும்பாலான மக்கள், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணர மாட்டார்கள். அவர்களின் உடல்கள் சிகிச்சையின்றியே வைரஸை அகற்றும். மறுபுறம், அதிக ஆபத்து உள்ள ஹெச்பிவி வைரஸ் வகைகள், அசாதாரண திசு வளர்ச்சியை ஏற்படுத்தும். இவை புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும். புற்றுநோயிலிருந்து ஹெச்பிவி தடுப்பூசி எவ்வாறு பாதுகாக்கிறது? ஹெச்பிவி தடுப்பூசி ஒன்பது வகையான ஹெச்பிவி வைரஸ்களின் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது. குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு ஹெச்பிவி தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பாதுகாக்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், அதற்கும் மேல் நீண்ட காலம் பாதுகாக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின்பாதிப்பை கிட்டத்தட்ட 90% குறைப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது. ஹெச்பிவி தடுப்பூசி யாருக்கு? ஹெச்பிவி தடுப்பூசியை பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஹெச்பிவி பாதிப்பிற்கு முன் எடுத்துக்கொண்டால் அது சிறப்பாகச் செயல்படும். ஏனெனில், தடுப்பூசிகளால் தற்காக்க மட்டுமே முடியும், அவை உடலில் பாதிப்பை ஏற்படுத்திய பின்னர், அவற்றை வெளியேற்ற முடியாது. தடுப்பூசி ஒன்று அல்லது இரண்டு டோஸ்களாக கொடுக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவுறுத்தியுள்ளது. குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இரண்டு அல்லது மூன்று டோஸ்களைப் பெற வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. யாருக்கு ஹெச்பிவி ஏற்படுகிறது ? இவை எளிதில் பரவக் கூடியது. இது தோல் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. பெரும்பாலான மக்கள் தங்களின் 25 வயதிற்குள்ளாகவே ஹெச்பிவி பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான நேரங்களில் மக்கள் 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை பாதிக்கப்படுகின்றனர். இது பாலியல் ரீதியாக பரவும் நோய் அல்ல. இது பாலியல் திரவங்களாலும் பரவுவதில்லை. ஆனால், இது தொடுதல் உள்ளிட்ட பாலியல் தொடர்புகளின் போது இது அடிக்கடி பரவுகிறது. உலகம் முழுவதும் ஹெச்பிவி தடுப்பூசி எவ்வளவு பரவலாக உள்ளது? பட மூலாதாரம்,GETTY IMAGES உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில், 90% குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ளன. இந்த நாடுகளில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது தீவிரமான அறிகுறிகள் தென்படும் வரை பெரும்பாலும் கண்டறியப்படுவதில்லை. 2030 ஆம் ஆண்டளவில் ஹெச்பிவி தடுப்பூசி 90% மக்களை சென்றடைவதன் மூலம் அடுத்த நூற்றாண்டுக்குள் இந்த நோயை மக்களிடமிருந்து அகற்றுவதை இலக்காகக் கொண்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. தற்போது, சுமார் 140 நாடுகள் ஹெச்பிவி தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளன. சப்-சஹாரா ஆப்பிரிக்கா (24%), லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் (16%), கிழக்கு ஐரோப்பா (14%), மற்றும் தென்கிழக்கு ஆசியா (14%) ஆகிய நாடுகளில் பெண்களிடையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரவலாக காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஆப்பிரிக்காவில் தடுப்பூசி தாெடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய நாடுகளில் முதல் நாடு ருவாண்டா ஆகும். இது 2011 இல் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் பரிசோதனையை அறிமுகப்படுத்துவதற்கும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. முதல் ஆண்டில் இது தடுப்பூசிக்கு செலுத்துவதற்கு தகுதியான 10 பெண்களில் ஒன்பது பேரை சென்றடைந்தது. இதன் காரணமாக, மற்ற நாடுகளுக்கு இது ஒரு முன்மாதிரி என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். தடுப்பூசி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புகளை குறைப்பதாகத் தோன்றினாலும், இது அனைத்து வகையான ஹெச்பிவி வைரஸ்களுக்கும் எதிராக பாதுகாப்பைத் தராது. நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்டதாக நேற்று செய்தி பரவியது. இந்த நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cn0njqnde39o
  16. அவ்வளவு அறிவு இருக்குமாயின் உங்கள் கேள்விகளுக்கு பதில்கள் எழுதி கொண்டிருக்க மாட்டேன் 🤣
  17. சி.டி.சி தொடங்கும்போதூ..கனடாவில் நீங்கள் இருந்ததீர்களா .. என்பதில்தான் என்பதில் வரும்... ஏன் ..என்னுடைய பிள்ளைகளயும்.. போட்டுக்கொடுக்கிற எண்ணமோ...உங்கள் கேள்விகளில் உள்ள சூட்சுமம் நான் அறியாததல்ல ...நான் அல்வாயான்... புரிந்து கொள்க..
  18. கனேடியத் தமிழ்க் குழந்தைகள் வன்முறையை ஆதரிப்பார்களா ? இதற்கான பதிலில் எல்லாமே அடங்கியிருக்கிறது. 1) அவர்கள் செய்வது CTC யின் கொள்கைக்கு முரணானது என்றால் அவர்களை அமைப்பை விட்டு வெளியேற்றலாம். 2) CTC யை எரித்தது அந்த தனி நபர்களை பயமுறுத்துவதற்காகவா அல்லது CTC யை மிரட்டவா ? 3) அந்தத் தனிநபர்களை மிரட்டுவதற்கென்றால் அது மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொழுத்திய கதையாகவல்லோ இருக்கிறது ?
  19. ஒருவர் இல்லை கனடா தமிழ் பேரவை என்ற அமைப்பை சேர்ந்த சிலர் அந்த அமைப்பில் நூற்றுக்கணக்கானவர் அங்கத்துவம் வகிக்கிறார்கள் எனவேதான் இலகுவாக கொள்கை மாற முடியாது தனிநபர் ஒருவர் கொள்கை மாறலாம் அது பிரச்சனை இல்லை வாருங்கள்… சேர்ந்து இயங்குவோம். இலங்கை தமிழருக்குகாக உழைப்போம். போராடுவோம் என்று பலரும் இணைந்து கனடா தமிழர் பேரவை என்ற பெயரில் இயங்கி வளர்ந்து போய் கொண்டிருக்கும் போது ஒரு சிலர் தன்னிச்சையாக கொள்கை மாற முடியாது அதுவும் நேர் எதிராக
  20. யாழ்கள கருத்துக்கள் எதை நோக்கி போகின்றன என்பதுக்கு இந்த திரியே சாட்சி . அந்த மனுசன் சொல்லவருவதையாவது புரிந்துகொள்ள முயற்சிக்காமல் ................. தகப்பன் வல்வையை சேர்ந்தவர் . Sivananthan was born in Madduvil South near Chavakachcheri in northern Ceylon.[1] His father was a Tamil scholar from Valvettithurai and his mother was teacher of religion and science.[1] He was educated at Saraswathi Maha Vidyalayam, Drieberg College and Jaffna Hindu College (1968–75).[1][2][3] After school he joined the University of Peradeniya's Science Faculty in 1976, graduating in 1980 with a BS degree in physics.[1][3][ https://en.wikipedia.org/wiki/Siva_Sivananthan
  21. தாங்கள் குடியேறிய நாடுகளை போன்று மனித உரிமைகளை மதித்து சிங்கலவர்கள் நடக்க மாட்டார்கள் என்று குற்றம் சாட்டி கொண்டு தமிழர்களில் யரராவது இவர்களது கடும் போக்கு கோட்பாடுகளுக்கு எதிராக மாற வெளிகிட்டால் அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை கையில் எடுப்பார்களாம் ஆனால் இவர்கள் பயங்கரவதத்தை ஆதரிக்கவில்லை😂
  22. வன்முறையை ஆதரிக்கவில்லை ஆனால் அதற்கான காரணங்களை ஆதரிக்கிறோம். ஆகாகா,... என்ன ஒடு புத்திசாலித்தனம் 😩
  23. 1) அது சிங்களத்தின் சாணக்கியம்,. அவர் போன்ற ஆழுமைகளைப் பயன்படுத்த முடியாமல் வைத்திருப்பது எங்கள் சாபக்கேடு. 2) எனது நளினம் எனது இனத்தைப் பார்த்து அல்ல. துரோகி முத்திரை குத்தும் ********* பார்த்து. 3) ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு 4) ✅ உங்கள் சிந்தனை பிறருக்கும் பரவ வாழ்த்துக்கள். 🙏 5) உங்கள் -1 க்கான காரணம் நியாயமானது. . ஆனாலும், நிலத்தில் நன்மை நடைபெறுவதற்கு குறுக்கே நிற்கும் எல்லோரையும் மிகக் கடுமையாக எதிர்ப்பதென்று முடிவெடுத்துள்ளேன்.
  24. @Justin வருடங்கள் முன்பு அல்ல, கடந்த 15 வருடங்களுக்குள்! யாழில் இவை பற்றி உரையாடப் பட்ட போதெல்லாம், வன்முறையை செல்லமாகத் தட்டிக் கொடுக்கும் கருத்துகளும் வெளிப்பட்டிருக்கின்றன. இந்தத் திரியிலும் இது போன்ற தட்டிக் கொடுத்தல் நீங்கள் உட்பட சிலர் செய்வது புதுமையல்ல! இங்கு எழுதும் கருத்துகளை வைத்து வன்முறையாளர் என எடைபோடுவது வருந்தத் தக்கது.. புலம் பெயர் தமிழன் வானத்தில் இருந்து வந்தவன் அல்ல..அதனைவிட தனது தேசத்தில் எத்தனை ,துன்பம் அனுபவித்தபின்பே...புலம் பெயர்ந்து இ ருப்பான்... உதாரணம் ..யாழில் ரஞ்ஜித் எழுதிய இரண்டாவது பயண ம் என்ற தொட்ரை வாசித்துப் பாருங்கள்... ஒருமனிதனின் இன உணர்வும் ஆதங்கமு ..எவ்வளவு அழ்காக சொல்லப் பட்டிருக்கிற்து...அவர்ல் ஆற்றாமையை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பது புரியும்.... இதுபோல்தான் யாழ் களத்தில் உள்ள பலரும் ...இன உணர்வால் பாதிக்கப்பட்டவர் , தூண்டப் பட்டவர்... இவர்களாள் தெரிவு செய்யப்பட்ட பொது அமைப்பு பிழை விடும்போது..அறியாமலே ..கோபம் ஏற்படுவது ..தவிற்க முடியாதுதானே..இதற்காக இவர்கள்தான் எரித்தார்கள் ..தூண்டினார்கள்..என்பதெல்லாம் அபத்தம்...என்னைப் பொறுத்தவரை ரஞ்சித் போல எழுத்தாற்றல் இல்லைய்யே என்றும் கவலை யடைகின்றேன்..ஏனெனில் என்னிடமும் பல சோகங்கள் உண்டு..எனினும் யாழ்கள இப்போதைய னிலமையில் உண்மைகளைகொட்டி சிக்கலில் மாட்டுப்படவும் .. வ்ரும்பவில்லை.. இதுத்ஹன் உண்மை எனவே உணர்வு அத்துமீறிப் போகும்போது ..எழுத்தில் ..கொட்டுபவன் வன்முறையளனல்ல...உங்கள் கருத்துக்களை .ஆழமாகப்படித்து... அதை ஏற்றுக்கொள்பவனில் நானும் ஒருவன்...நன்றி
  25. இல்லையே !தைரியம் இருந்தால் நிறுவுங்கள் அல்லது உறுதிப்படுத்தவும்’ இப்போது போய் கொண்டிருக்கிறேன் 🤣
  26. 1) எனது கருத்தைக் கூறுவதும் இன்னொருவருக்குக் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் விடையளிப்பதும் ஒன்றல்ல என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு அது தெரியாவிட்டால் நீங்கள் பள்ளிக்கூடம் செல்வது உசிதமான யோசனையாக எனக்குத் தோன்றுகிறது.. 2) இதுவரை அதைத்தான் செய்தீர்கள். இப்போது இல்லையென்றால் எப்படி?
  27. இவரும் இவர் சொல்பவர்களும் இலங்கையில் சாதிக்க முடியவில்லை என்பது சாக்க்கேடு அமெரிக்காவில் உள்ள ஆட்சிமுறையை அனுபவித்து கொண்டு அடிமைபட்டு கிடக்கும் தன்னின மக்களைப பார்த்து மேலும் அடிமைப்பட ஆலோசனைகளை வழங்குவது நாங்கள் செயல் வீரன் சொல் வீரன் அங்கே போய்யிருந்து செய்து காட்டுங்கள் கனடாவின் சுயாட்சி முறை உங்கள் கண்களை மறைத்து விட்டது அடிமைப்பட்ட மக்களை பார்த்து நக்கல் நளினம் தேவையா?? ராதிகா சிற்பநேசன் சொல்லி கொண்டிருக்கிறார்கள் நிச்சயமாக அதில் என்ன சந்தேகம்?? உங்களுக்கு விளங்காது என்பது தெரிந்த விடயம் 🤣
  28. அதிகாரம் அற்ற இனத்தின் சாபக்கேடு இது. உங்களுக்கு அவை சிரிப்பை வரவழைக்கும். ஆனால் யாருடைய அழைப்பில் வந்தார் அல்லது வருகிறார் என்பது முக்கியம் இல்லை அவர் என்ன செய்கிறார் அல்லது செய்யப்போகிறார் என்பது தான் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  29. பாவம் திருமா. அவர் தூக்கிப்பிடித்த அரசியல் பொய்த்துப் போவது அவருக்கு புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தாலும் அதை அப்பட்டமாக தனது சாதி மக்களிடம் கூற முடியாது தவிக்கிறார். அதனால் பழியை எங்காவது போட்டுத்தானே ஆக வேண்டும். அதிமுக, திமுக வரிசையில் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பலமிழந்து போவது கண்கூடாகத் தெரிகிறது.
  30. இர‌ண்டாவ‌து ரெஸ்ரில் ப‌ல‌ கோளாறுக‌ள் ந‌ட‌ந்த‌து ஏராள‌ன் அண்ணா ஜ‌ந்து நாள் தொட‌ரில் 90ஓவ‌ர் ம‌ட்டும் தான் போட‌னும்...........ம‌ழை இடையில் வ‌ந்து விளையாட்டு ப‌ல‌ ம‌ணி நேர‌ம் த‌டை ப‌ட்டால் அடுத்த‌ ம‌ச் விளையாடும் போது 90ஓவ‌ருக்கு ப‌தில் 7ஓவ‌ர் கூட்டி 97 கொடுப்பின‌ம் விளையாட ஆனால் இந்த‌ விளையாட்டின் முத‌ல் நாளே 93ஓவ‌ர் வ‌ரை விளையாடின‌வை...........இதில ஏதோ உள் குத்து இருக்கு.............. இந்தியாவில் கிரிக்கேட் விதிமுறைக‌ளை ம‌திப்ப‌து கிடையாது அவ‌ங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு விளையாடுவாங்க‌ள்..............உல‌க‌ கோப்பை என்றால் ஒட்டு மொத்த‌ உல‌க‌ ர‌கிக‌ர்க‌ள் பார்ப்ப‌தால் அதை நேர்மையாய் ந‌ட‌த்துவாங்க‌ள்...........ஆனால் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இந்தியா விதிமுறைக‌ளை பின் ப‌ற்றுவ‌து கிடையாது.........அதும் ந‌டுவ‌ர் இந்தியாவை சேர்ந்த‌வ‌ர்க‌ள் என்றால் சொல்லாவா வேனும்.................
  31. ஏதாவது பல்கலைக்கழகங்கள் டக்ளசுக்கு டாக்டர் பட்டம் கொடுத்திருக்கலாம். 😂 பத்தோடை பதினொன்றாய்.... அவரும் டாக்டராக இருந்திட்டு போகட்டுமன். உங்களை அவரிட்ட வைத்தியம் பார்க்க போகச் சொன்ன மாதிரி ஏன் ரென்சன் ஆகுறீங்க. 🤣
  32. திருமால் வளவன் தன் சுயத்தை இப்படி தான் இழந்து வருகிறார். திமுக பொறுப்பில் இருந்தது. ஆனால் அதன் தலைவர் படம் காட்டி ஏமாற்றினார் அந்த வலி எமக்கு மட்டுமே புரியும்.
  33. இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிச்சை எடுக்கும் சிங்கம்.
  34. எந்த ஒரு யுத்தத்திலும் இழப்புக்கள் ஏட்படத்தான் செய்யும். இலங்கை போன்ற சிறிய நாட்டிலேயே ஏட்படட இழப்புக்கள் (இரு பக்கத்திலும்) அளவு எல்லோருக்குமே தெரியும். எனவே நிச்சயமாக அமெரிக்கா இழப்புக்களையும் சந்திக்க வேண்டும். அதட்காக குத்தி, இரான் போன்ற நாடுகள் செய்யும் அடடாகாசங்களை பார்த்து கொண்டு இருக்க முடியாது. அப்படி இல்லாமல் ஒதுங்கி இருந்தால் அவர்களால் உலக போலீஸ் காரனாக இருக்க முடியாது.
  35. அதனை யார் செய்வார்கள் என்பதும் பிரச்சினை. எந்த ஒரு வெளி நாடும் அப்படி தயாரக இருப்பதாக தெரியவில்லை. இதட்கு நிறைய பணம் தேவைப்படும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக இலங்கையில் உள்ள தமிழர்களால் அதனை முன்னெடுக்க முடியாது.
  36. நீங்கள் அப்படி உணர்வது உங்கள் பார்வை. ஆனால் அப்படி தமிழர்கள் தமக்குள் மோத யாரோ அடுத்தவர் செயல்படத் தேவையில்லை. அரசியலில் சகிப்பு தன்மை அறவே இல்லாமல் போராடப் போன நோக்கத்தையே மறந்து தமக்குள்ளேயே ஆளையாள் போட்டுத்தள்ளிய, கும்பல்கும்பலாக கொலை செய்த அரசியல் பாரம்பரியத்தை எமக்குள்ளேயே உருவாக்கிய வரலாற்றை கொண்ட தமிழர்களை மோத விட வெளியார் செயற்படத் தேவையில்லை என்பது எனது கருத்து.
  37. வியட்நாம் போரின் விளைவாக அமெரிக்கா தனது தங்க மதிப்பிலான முழுப்பெறுமதி பணக்கொள்கையிலிருந்து முகப்பெறுமதி பணக்கொள்கைக்கு மாறவேண்டிய நிலை ஏற்பட்டது, ஈராக் போரின் போது பல உலகநாடுகளின் பொருள், படை உதவியினூடாக நிகழ்த்தப்பட்டது, அது போல ஒரு முழு அளவிலான யுத்தம் ஒன்றினை இன்னொரு கண்டத்தில் நிகழ்த்துவது தற்போதுள்ள நிலையில் அமெரிக்காவினால் முடியாது என உறுதியாக கூறலாம், ஒரு சிறிய மட்டுப்படுத்தப்பட்ட தேர்ந்த இலக்குகளில் மட்டுமே அமெரிக்காவினால் தற்போது தாக்குதல் நடாத்தும் தகமையுள்ளது, அதனை கூட தவிர்ப்பது அமெரிக்க நலனுக்கு நல்லது, பேச்சுவாத்தையினூடாக பிரச்சினையினை தீர்க்க வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதரவு நிலைகள் பல இருந்தாலும் அமெரிக்க அடியாளக உள்ள இஸ்ரேலின் நிலைப்பாடு, அதனால் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை என அமெரிக்காவிற்கு ஒரு பாதகநிலை அந்த பிராந்தியத்தில் நிலவுகிறது இதனையெல்லாம் புரிந்து கொண்டுதான் ஈரான் சண்டித்தனம் செய்கிறது, அமெரிக்காவும் வேறுவழியின்றி பொறுத்து கொள்கிறது. எதிர்காலத்தில் ஈரானின் பொருளாதார தடையினை நீக்குவதனை ஒரு பேச்சுவார்த்தையின் பேரம் பேசும் உத்தியாக அமெரிக்கா பயன்படுத்த விரும்பலாம்.
  38. அரசியல் படுத்தப்படாத ஒரு 50 வீத மக்கள் தமிழ் நாட்டில் உண்டு. அந்த ஐம்பது வீதத்தில் முக்கால் வாசி அதிமுகவிடம் உள்ளது. அது ஆர் எஸ் எஸ் சித்தாந்ததை நோக்கி இலகுவில் திருப்பப்படலாம். அதை தடுப்பது முக்கியம். இல்லாவிட்டால் தமிழ் மொழியும் இனமும் வாழ்வியலும் நிலமும் போய்விடும். விஜய்க்கு பின்னால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டுக்காக யோசிக்கும் தீவிர திராவிட சித்தாந்தவாதிகள் இருக்கலாம். ஏன் ஸ்டாலின் கூட இருக்கலாம். விஜய் vs உதை என்று வருவது திமுகவுக்கும் நல்லது.
  39. 2024 -1994=30 ஆண்டுகள் கடந்து விட்டது…… மேலே சொல்லியது கடந்த 25 ஆண்டுகள் எனவே தகவல்கள் சரியானது இல்லையா?? இந்த சரிநிகர் பத்திரிகை யாரால் நடத்தப்பட்டது ?? எங்கிருந்து வெளியீடு செய்தார்கள்?? அருமை மிகத் தெளிவான பார்வை மற்றும் விளக்கங்கள்
  40. ஈழத் தமிழ் அமைப்புகளுக்குள் தமிழர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி தெரியாமல் இருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் செவ்வாய்க் கிரகத்தில் இருந்து இப்போது தான் வந்துள்ளீர்கள் போல் இருக்கிறது. 😂 https://noolaham.net/project/55/5493/5493.pdf
  41. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த 20 வயது இளைஞருக்கு பிறக்கும் போதே தாடையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவரால் உணவு ஏதும் உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிறந்தது முதலே பால் மட்டுமே குடித்து உயிர் வாழ்கிறார் அவர். பிறந்தவுடன் அவரைப் பார்த்த மருத்துவர்கள், அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறியிருந்தனர். ஆனால், இரவும் பகலும் தூக்கமில்லாமல் தன் குழந்தைக்கு பால் கொடுத்து வளர்த்து வந்துள்ளார் அவரது தாய் தேவி. அவரால் 100 மில்லி லிட்டர் குடிக்கவே இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் ஆகும் என்கிறார் தேவி. ஐந்து வயதில் அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகே, அவரால் தானாக பால் குடிக்க முடிந்தது. அவரது முக அமைப்பை பார்த்து அக்கம் பக்கத்தினர் எரிச்சலையும் பயத்தையும் வெளிப்படுத்தினர். ஆனால் இத்தனை ஆண்டுகளில் அவரை புரிந்து கொண்ட சமூகம், அவருடன் உரையாடி நட்பு பாராட்டுவதாக அவரது தந்தை சந்தோசமாக பகிர்ந்து கொள்கிறார்.
  42. இப்பவே திமுக ஆதரவு ஊடகவியலாளர்கள் கதறத் தொடங்கிவிட்டனர். தமிழக முதல்வர் பதவி திமுகவின் குடும்பச் சொத்து அல்ல. சின்னக் கலைஞர் உதய்ணாவை முதல்வராக வரலாம் என்றால் விஜய் ஏன் முதல்வராகக் கூடாது! பாவம் செந்தமிழன் அண்ணா!😞
  43. எப்படி,......? சவூதியின் குண்டு டும் என்று வெடிக்கும் US UK யின் குண்டுகள் டம் என்று வெடிக்கும் என்கிறீர்களா? 🤣
  44. ""கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அழைப்புக்கு அமைய இலங்கைக்கு வருகை தந்துள்ள சிவா சிவநாதன்"" அடுத்த துரோகி பட்டம் ஆயத்தம் செய்யலாம்,......🤣 சிங்களம் தனது மூளையை தனது நலனுக்காக பாவிக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.