Everything posted by ஈழப்பிரியன்
-
குறுங்கதை 11 -- கடைசி எட்டு நாட்கள்
ஓ இதுக்கு தான் 8 நாட்களாக இருந்து திட்டி அனுப்புகிறார்களா?
-
பிரதமர் மோதியின் ரஷ்யப் பயணம் அமெரிக்காவைக் கோபமடையச் செய்யுமா?
நான் இன்னமும் பார்க்கலை.
-
பிரதமர் மோதியின் ரஷ்யப் பயணம் அமெரிக்காவைக் கோபமடையச் செய்யுமா?
மத்திய கிழக்குக்கு ஏஜென்சி மூலமாக போகிற மாதிரி இவர்களை ஒரு ஏஜென்சி அனுப்பி பணம் பார்த்திருப்பார்கள். மத்திய கிழக்கை விட கூடுலாக பணம் சம்பாதிக்கலாம். அங்கேயும் விழுந்து முறிந்து சாகிறார்கள். இங்கே சண்டையில் சாகலாம்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
நல்ல செய்தி நடக்கும் ஆனால் நடக்காது.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
புலிக்கு பிறந்தது! யார் இந்த வைத்தியர்? இத்தனை துணிச்சல் இவருக்கு எங்கிருந்து வந்தது? மருத்துவ மாபியாவுக்கு எதிராய் போராடும் அம்பு தொடுக்கும் போர்க்குணம் ஒரு தனி மனிதனுக்கு எப்படி வந்தது? என "DR அர்ச்சுனா"வின் வேரை தேடினால் கிடைக்கும் தகவல்கள் எல்லாம் பிரமிக்கவைக்கின்றது! இவரது தந்தை எங்கள் தமிழீழ காவல் துறை முதன்மை ஆய்வாளர் இராமநாதன் என்பதோடு இறுதியுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்! அவரின் குடும்பபின்னணி,வளர்ந்த சூழ்நிலை,வளர்க்கப்பட்ட விதம் அவரது கல்லூரிக்காலம்,பல்கலைகழச் செயற்பாடுகள் என்பன இனஉணர்வு தாண்டியும் உண்மையில் புல்லரிக்க வைக்கின்றது! வீரமும்,அஞ்சாமையும்,போராட்டகுணமும் அவரது இரத்தத்திலேயே ஊறிப்போயிருக்கிறது! இனமானமும்,மனிதநேயமும்,தேசநலனும், மக்கள் தொண்டும், அவரது இயல்பிலேயே கலந்து இருக்கிறது!! அதுசரி,ஒரு புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன? What’s app இல் வந்தது.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
Day 17 Life as Medical Administrator Base Hospital, Chavakacheri First baby born at New Gynecology and Obstetrics ward at Base Hospital Chavakacheri on 29.6.2024 I'm so proud of sharing this with all of you and my heartfelt thanks for the staff. The baby and mother are doing well. Thank you for sharing in advance. Thank you Dr. Ram Archchuna For the public from the public. ❤️ https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0PrSACfbzr6GxTg9wZtfbGTZWH7oapwUCGEBibXesVUR2nKve3Jfu9fjfNhgqesaPl&id=100030148033723&mibextid=cr9u03 படங்களுடன் பார்க்க மேலுள்ள சுட்டியை அழுத்தவும்.
-
திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிறாா் குகதாசன்
ஏன் வாலி?
- மினி மெஸ்ஸி
-
'என் மனச திருப்பிக் கொடு'
கவிதை அருமையாக இருக்கிறது.
-
மினி மெஸ்ஸி
பெரிய மெஸ்சியை விட சின்ன மெஸ்சி நல்லாயிருக்கு.
-
குறுங்கதை 10 -- அமீபா குளம்
இது வீட்டுக்காரி தானே? வீட்டுக்கு வீடு வாசல்படி. இறங்கி அமீபாவுக்கு ஒரு காய் சொல்லிப் போட்டு வந்திருக்கலாமே?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
என்ன மாதிரியெல்லாம் யோசிக்கிறாங்க.
-
படித்ததில் பிடித்தது.
அந்த தட்டுக்கதை சிறு வயதில் எத்தனையோ பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். எமக்கும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பிள்ளைகளை படிபடி என்று படிப்பித்த பின்பு வேலை அவர்கள் குடும்பம் இவைகளையே பார்க்கவே கஸ்டப்படுகிறார்கள். நியூயோர்க்கில் எமது குடும்ப நண்பர்கள் நாம் பிள்ளைகளுடன் வாழ்ந்த வாழ்க்கையை சொல்லி எமது எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகுது என்பதை ஆவலாக எதிர்பார்த்திருக்கிறார்கள்.
-
படித்ததில் பிடித்தது.
தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் . மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார். மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார். வருடங்கள் கடந்தன. ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது. மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார். தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள். “உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “ இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை. காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன். இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன். எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார். மகன் ஆச்சரியப்பட்டான். “பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன். ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை. இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார். “மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன். இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் உனது குழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன். அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றார். வாழ்க்கையில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன. படிக்கும் போதே நெகிழ்ந்து போனேன். https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02xtCM2Az9CT8Khim3zHzSLN6UQ9L3XDiBTzhnSBGVk4D3vfB2CxjGE2CJma2MXuiyl&id=100072434235939&mibextid=cr9u03
-
பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வுகாண இரா. சம்பந்தனும் நானும் எப்போதும் பணியாற்றினோம் - ஜனாதிபதி
சந்திரிகா கொண்டுவந்த தீர்வையே நடு பாராளுமன்றில் நின்று கிழித்தெறிந்து சன்னதமாடியராச்சே.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சகோதரி நில்மினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ எனது குடும்பத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்.
-
"இன்று 07/07/2024 உலகளாவிய மன்னிப்பு தினம் / National Global Forgiveness Day"
இலங்கையைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு அநிஞாயங்கள் செய்து கொண்டே இருக்கும். தமிழர்கள் தான் மறப்போம் மன்னிப்போம் என்னும் சிந்தனையில் இருக்கிறார்கள்.
- சம்பந்தன் எப்போதோ இறந்துவிட்டார்: சி.அ.யோதிலிங்கம்.
-
சிங்களவர்களிடம் தோற்ற தமிழ் தலைவர் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்.
- சம்பந்தன் எப்போதோ இறந்துவிட்டார்: சி.அ.யோதிலிங்கம்.
உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை, இலங்கை தமிழரசு கட்சி நீதிமன்ற படி ஏறியபோதே இறந்துவிட்டார் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது வாராந்த அரசியல் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 15 வருடங்கள் தமிழரசியலுக்கு தலைமை தாங்கி வழி நடாத்திய சம்பந்தன் காலமாகிவிட்டார். சம்பந்தனைப் போல பலத்த விமர்சனங்களுக்கு உள்ளான தமிழ்த்தலைவர் வேறு எவரும் இல்லை என்று கூறலாம். மரபு வழி தமிழ் அரசியலை விடுத்து இன்னோர் அரசியலை நகர்த்த முனைந்தமையே இந்த விமர்சனங்களுக்கு காரணமாகும். அரசியல் போராட்டங்கள் தமிழர் அரசியலின் செல்நெறியை தீர்மானிப்பதற்கு இவரது தலைமைத்துவ காலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். சம்பந்தன் ஒருபோதும் தன்னை தமிழ்த்தேசியவாதியாக இனங்காட்டியதில்லை. போராட்ட அரசியல்வாதியாகவும் அவர் இருக்கவில்லை. தமிழ்த்தேசிய அரசியலிலோ அல்லது போராட்ட அரசியலிலோ நம்பிக்கை கொண்டவர் என்றும் அவரை கூறி விட முடியாது. தமிழ் மக்கள் முன்னெடுத்த அரசியல் போராட்டங்களிலும் இவர் கலந்து கொண்ட வரலாறு கிடையாது. 1961ஆம் ஆண்டு கச்சேரிகளுக்கு முன்னால் தமிழரசுக்கட்சி தந்தை செல்வா தலைமையில் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுத்தது. சம்பந்தன் அப்போது ஓர் இளம் சட்டத்தரணியாக கலந்துகொண்டார். போராட்டத்தின் ஒரு கட்டத்தில் படையினர் போராட்டத்தை நசுக்கி அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்தனர். சம்பந்தனும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள்ளேயே “தனக்கும் இப் போராட்டத்திற்கும் ஒரு தொடர்புமில்லை” என கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார். எனினும், சம்பந்தனிடம் ஒரு பழக்கம் இருந்தது. தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் சூழலுடன் இசைந்து செல்லும் போக்கை அவர் கடைப்பிடிப்பார். தலைமை பொறுப்பு 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழீழத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் 1977 தேர்தலை தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு என பிரகடனப்படுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்டது. சம்பந்தன் தமிழீழத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டவர் அல்ல. அதை அவர் நேரடியாகவே பலரிடம் கூறியிருந்தார். குறிப்பாக கிழக்கின் சூழ்நிலைக்கு தமிழீழத் தீர்மானம் பொருத்தமற்றது என்பது அவரது கருத்தாக இருந்தது. எனினும், சூழலுடன் இசைவுற்று 1977ஆம் ஆண்டு தேர்தலில் அவர் முதன் முதலாக திருகோணமலையில் போட்டியிட்டார். வெற்றியும் அடைந்தார். புலிகள் இயக்கத்தையோ, ஆயுதப் போராட்டத்தையோ சம்பந்தன் ஏற்றுக்கொண்டவர் அல்ல. இருந்தபோதும் புலிகளுடன் இணைந்தும் அரசியல் செய்ய தயாரானார். சமாதான காலத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமை பொறுப்பையும் ஏற்றார். புலிகள் இயக்கம் சம்பந்தனை விரும்பி இருந்தது என்றும் கூறி விட முடியாது. இயக்கம் ஜோசப்பரராசசிங்கத்தையே தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி வேண்டியது. ஜோசப்பரராசசிங்கம் சம்பந்தனை நியமியுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே சம்பந்தன் தலைவராக்கப்பட்டார். இங்கு தான் ஆனந்தசங்கரிக்கும் சம்பந்தனுக்கும் இடையில் வேறுபாடு இருந்தது. ஆனந்தசங்கரி சூழலுடன் இசைந்து போகின்ற ஒருவர் அல்லர். புலிகள் இயக்கத்தோடு அவரால் ஒத்துப் போக முடியவில்லை. ஆனந்தசங்கரி இதனால் தூக்கி வீசப்பட்டார். உண்மையில் அமிர்தலிங்கம் சிவசிதம்பரத்திற்கு பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை ஆனந்தசங்கரியிடமே சென்றது. அடுத்த மூத்த தலைவர் அவராகத்தான் இருந்தார். 1970ஆம் ஆண்டு தொடக்கம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். புலிகள் இயக்கத்துடன் ஒத்துப்போகாததன் காரணமாகவே சம்பந்தனிடம் தலைமை பாத்திரம் சென்றது. இதனால் தான் ஆனந்தசங்கரி அதிஸ்டம் இல்லாத மனிதர் என்று கூறுவதுண்டு. தன்னிடமிருந்த தலைமை பாத்திரத்தை பறித்தவர் சம்பந்தன் என்ற கோபம் ஆனந்தசங்கரியிடம் இன்று வரை உண்டு. சம்பந்தன் 1977ஆம் ஆண்டு தொடக்கம் அரசியலில் செயற்பாட்டாலும் சுமார் 32 வருடங்கள் துணை பாத்திரத்தையே ஆற்ற முடிந்தது. தலைமை பாத்திரத்தை ஆற்ற முடியவில்லை. அதற்கான வாய்ப்பு 2009ஆம் ஆண்டே அவருக்கு கிடைத்தது. தலைமை பாத்திரம் தனக்கு கிடைத்தவுடன் தனக்கேயுரிய அரசியலை அவர் முன்னெடுக்க தொடங்கினார். சுதந்திர தினம் அந்த அரசியல் என்பது இணக்க அரசியலே. இந்த அரசியல் தமிழ் அரசியலின் மரபு வழி பாரம்பரியத்திற்கு முரணானது. ஆனாலும், சந்தர்ப்பம் அறிந்து துணிந்து அதனை முன்னெடுத்தார். அவரது இணக்க அரசியலும் கட்டம் கட்டமாக இடம்பெற்றது. முதலில் தான் இணக்க அரசியலுக்கு தயார் என்பதை சைகைகள் மூலம் வெளிப்படுத்தினார். தமிழ் அரசியல் பாரம்பரியத்திற்கு முரணாக யாழ்ப்பாணத்தில் வைத்தே சிங்கக் கொடியை அசைத்துக் காட்டினார். சிங்கக் கொடி தொடர்பான தமிழரசு கட்சியின் நிராகரிப்பு சிங்கக் கொடி உருவான காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்தது. தமிழ் மக்களை அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்து புறக்கணித்த கொடி என்பது இதற்கு காரணமாக அமைந்தது. தமிழ் தேசியவாதம் முனைப்படைந்த 70களில் தமிழ் பிரதேசங்களில் சிங்கக் கொடி ஏற்றுவதே துரோகமாக கருதப்பட்டது. சுதந்திர தினத்தை பொறுத்தவரையிலும் இதே நிலைதான் பின்பற்றப்பட்டது. தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு அரசிற்கு கிடைத்த லைசன்சே சுதந்திரம் என கருதப்பட்டது. இதனால் சுதந்திர தினம் வருடம் தோறும் கரிநாளாகவே அனுஸ்டிக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டு சம்பந்தனின் சொந்தத் தொகுதியான திருகோணமலையில் சுதந்திர தினத்தன்று கறுப்புக்கொடி கட்ட முற்பட்டமையினாலேயே திருமலை நடராசன் சுட்டுக் கொல்லப்பட்டார். மைத்திரிக்கு ஆதரவு தமிழ் அரசியல் மரபுக்கு மாறாக சம்பந்தன் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். இதுவும் இணக்க அரசியலுக்கான ஒரு சைகை தான். பிரிக்கப்பட முடியாத இலங்கை என்ற கோசத்தையும் முன்வைத்து பிரிவினைக்கு எதிரானவன் என்ற தோற்றத்தையும் வெளிப்படுத்தினார். நல்லாட்சி காலத்தில் நிபந்தனை அற்ற ஆதரவை வழங்க முனைந்தார். இது விடயத்தில் குறைந்த பிசாசுடன் கூட்டுச் சேருதல் என்பது அவரது கொள்கையாக இருந்தது. மைத்திரியை ஜனாதிபதியாக்குவதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினார். இதன்போது ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட சந்திரிகா முன்வந்த போதும் அதனை நிராகரித்தார். “மனரீதியான ஒப்பந்தமாக இருக்கட்டும்” என கூறினார். சந்திரிகா “இவ்வளவு காலமும் ஏமாற்றப்பட்டபடியால் தான் ஒப்பந்தத்தை நிராகரிக்கின்றீர்களா?” என கேட்டபோது “மனரீதியாக இசைவு தான் முக்கியம” என குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கம் இவரது ஒத்துழைப்புக்கு பிரதி உபகாரமாக எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை வழங்கியது. அரசாங்கத்திற்கு விசுவாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக நடைமுறையில் இவர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கம் ஆளும் கட்சியின் தலைவராகவே இருந்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வலிந்து தோள் கொடுத்து அரசாங்கத்தை பாதுகாத்தார். பொறுப்பு கூறல் விடயத்திலும் அரசாங்கத்தை பிணையெடுக்க முற்பட்டார். ஜெனிவாவில் அரசை பாதுகாக்கும் செயற்பாட்டையே அன்றைய காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்தது. “சர்வதேச விசாரணை முடிந்து விட்டது” என்கின்ற சுமந்திரனின் புகழ்பெற்ற வாசகமும் இக்காலத்திலேயே வெளிவந்தது. அரசியல் யாப்பு மூலமாக தீர்வு என்பதிலும் சம்பந்தன் நம்பிக்கை கொண்டிருந்தார். நல்லாட்சி கால புதிய யாப்பு முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். வடக்கு - கிழக்கு பிரிக்கப்பட்ட ஒற்றை ஆட்சிக்குட்பட்ட தீர்வு யோசனைக்கும் இணக்கம் தெரிவித்தார். தீபாவளிக்கு தீர்வு வந்துவிடும். பொங்கலுக்கு தீர்வு வந்துவிடும் எனவும் கூறிக் கொண்டிருந்தார். நல்லிணக்க அரசியலின் இரண்டாம் கட்டத்தில் கட்சியை அதற்கேற்ற வகையில் மாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த முதலாவது அம்பு தான் புலி நீக்க அரசியல். இணக்க அரசியல் புலி நீக்க அரசியலை செய்யாமல் தென்னிலங்கை தரப்பை திருப்திபடுத்த முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இதன் அடிப்படையில் புலிசார்பு அரசியல்வாதிகள் என கருதப்பட்ட புலிகளினால் கூட்டமைப்புக்கு அனுப்பப்பட்ட கஜேந்திரனையும், பத்மினி சிதம்பரநாதனையும் கூட்டமைப்பிலிருந்து நீக்கினார். இது விடயத்தில் கஜேந்திரகுமாரை நீக்குவது சம்பந்தனின் நோக்கமாக இருக்கவில்லை. சர்வதேச விவகாரங்களை கையாள்வதற்கு கஜேந்திரகுமார் பொருத்தமாக இருப்பார் என்பதே அவரது கருத்தாக இருந்தது. காங்கிரஸ் கட்சியை ஒதுக்குவது தன்னை பலவீனமாக்கும் எனவும் அவர் கருதி இருக்கலாம். ஆனால் சம்பந்தனின் இணக்க அரசியலோடு கஜேந்திரகுமாருக்கு உடன்பாடு இருக்காததினால் அவர் கூட்டமைப்பை விட்டு வெளியேறினார். சம்பந்தனின் நிகழ்ச்சி நிரலுக்கான முதல் அடி கஜேந்திரகுமாரின் வெளியேற்றத்தினாலேயே நிகழ்ந்தது. இணக்க அரசியலை எதிர்க்கும் தரப்பிற்கு ஒரு தலைமை கிடைத்தது. எனினும், அத்தலைமை தனக்குரிய இடத்தை பிடிக்க 10 வருடங்கள் கடுமையாக போராட வேண்டியிருந்தது என்பது வேறு கதை. கஜேந்திரகுமார் இல்லாததினால் அவ்விடத்திற்கு சுமந்திரன் இறக்குமதி செய்யப்பட்டார். உண்மையில் சம்பந்தனின் அசல்வாரிசு சுமந்திரன் தான். விக்னேஸ்வரனும் இதன் அடிப்படையிலேயே இறக்கப்பட்டார். எனினும், அவர் சம்பந்தனோடு ஒத்துழைக்கவில்லை. சுமந்திரன் சம்பந்தனின் இணக்க அரசியலில் ஒரு படி மேலானவர் என கூறலாம். தென்னிலங்கை அரசியல் சம்பந்தன் இணக்க அரசியலை முன்னெடுத்தாலும் அதற்கு மேலாக தென்னிலங்கை அரசியலை முன்னெடுக்க முனையவில்லை. சுமந்திரன் தென்னிலங்கை அரசியலை முன்னெடுப்பதையே தனது பிரதான அரசியல் செயற்பாடாக வரித்துக் கொண்டார். இதனால், சம்பந்தன் பெருந்தேசியவாதத்தின் முதுகு தடவும் அரசியலை தேர்ந்தெடுத்தார் என கூறிவிட முடியாது. அதேவேளை, மலையக அரசியல், முஸ்லிம் அரசியல் போல பெருந்தேசியவாத அரசியலுக்குள் தமிழ் அரசியலை கரைக்கவும் முற்படவில்லை. ஒருவகையில் சம்பந்தன் பின்பற்றிய இணக்க அரசியலை கனவான் இணக்க அரசியல் என கூறலாம். சம்பந்தன் தனது அரசியலில் மிகவும் உறுதியாக இருந்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும் தனது சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியினதும் ஜனநாயக கட்டமைப்புகள் தனது அரசியலுக்கு இடைஞ்சலாக இருக்கும் என கருதியமையால் அதையெல்லாம் மீறினார். எல்லாவற்றிலும் தனி ஓட்டத்தையே மேற்கொண்டார். கூட்டமைப்பாகவோ, தமிழரசு கட்சியாகவோ ஓட முன் வரவில்லை. பல சந்தர்ப்பங்களில் கூட்டு முடிவுகளை நிராகரித்து தனித்தே முடிவுகளை எடுத்தார். மூத்த தலைவர் என்ற வகையில் அவருக்கு பெரிய எதிர்ப்புகள் ஆரம்பத்தில் வராதது அவரது தனி ஓட்டத்திற்கு சாதகமாக அமைந்தது. பிற்காலத்தில் சுமந்திரன் தனி ஓட்டம் ஓடுவதற்கு இவரே வழிகளை திறந்து விட்டார் என கூறலாம். மோடியின் அழைப்பு இணக்க அரசியலின் அடுத்த கட்ட வளர்ச்சி தான் தமிழ் தேசிய நீக்க அரசியல். சிங்கக் கொடி அசைப்பு, சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளல், எதிர்ப்பு அரசியலை கைவிடல், தாயகம் , தேசியம் , சுய நிர்ணயம் என்கின்ற அடிப்படை கோசங்களை கைவிடல் என்பன இதன் அடிப்படையிலேயே எழுச்சி அடைந்தன. மொத்தத்தில் தமிழ் அரசியலில் பாரம்பரியத்தையே மாற்றி அமைக்க முற்பட்டார் எனலாம். இதன் ஒரு வெளிப்பாடாக இந்தியாவுடனான உறவுகளையும் கைவிட்டார். இந்திய பிரதமர் மோடி அழைத்தும் இந்தியாவிற்கு செல்ல அவர் முன் வரவில்லை. இந்திய சார்பு நிலை பெருந்தேசியவாதத்தை சினப்படுத்தும் என அவர் கருதி இருக்கலாம். பெருந்தேசியவாதம் மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு , தமிழின எதிர்ப்பு என்கின்ற தூண்களில் கட்டமைக்கப்பட்டது என்பது அவருக்கு நன்றாக தெரியும். தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக இந்தியா எதுவும் செய்யும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருக்கவில்லை. இந்தியாவில் தங்கி இருப்பதை முழுமையாகவே தவிர்த்துக் கொண்டார். 13ஆவது திருத்தம் தனது வசிப்பிடத்தையும் முழுமையாகவே இலங்கைக்கு மாற்றினார். இணக்க அரசியல் என்பது பரஸ்பரம் இரு பக்கம் சார்ந்த அரசியல். அது பரஸ்பரம் வெற்றி என்ற கோட்பாட்டை கொண்டது. பரஸ்பர முயற்சிகளையும் விட்டுக் கொடுப்புகளையும் வேண்டி நிற்பது. இங்குதான் சம்பந்தனின் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. தென்னிலங்கை தரப்பு அவரது முயற்சிகளுக்கு எந்தவித ஒத்துழைப்புகளையும் வழங்கவில்லை. அது தொடர்பான ஆத்மார்த்தமான அரசியல் விருப்பம் தென்னிலங்கையிடம் இருக்கவில்லை. குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விருப்பு கூட அதனிடம் இருக்கவில்லை. மறுபக்கத்தில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன. தனது சொந்த மாவட்டத்திலேயே ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த சம்பந்தனால் முடியவில்லை. கன்னியா வெந்நீரூற்றில் ஆக்கிரமிப்பு இடம்பெற்ற போது மௌனமாக பார்த்துக் கொண்டிருந்ததை தவிர வேறு எவற்றையும் செய்ய அவரால் முடியவில்லை. இறுதியில் விளைவுகள் அகமட்டத்தில் பாரதூரமாக இருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரது கண்ணுக்கு முன்னாலேயே சிதைவடைந்தது. இந்த சோகம் காய்வதற்கு முன்னர் சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியும் சிதைவுற்றது. பெருந்தலைவராக இருந்தும் சொந்த கட்சி நீதிமன்ற படி ஏறுவதை இவரால் தடுக்க முடியவில்லை. அவர் பல தடவை மன்றாடிக் கேட்ட போதும் அவரால் வளர்க்கப்பட்ட சுமந்திரன் அவரது மார்பிலேயே குத்தினார். உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை. தனது சொந்த கட்சி நீதிமன்றப் படி ஏறியபோதே இறந்துவிட்டார். அவர் தோல்வியடைந்த தலைவராக இறக்க நேரிட்டது தான் மாபெரும் சோகம்” என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/yodhilingam-spoke-about-sampanthan-1720254684?itm_source=article- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் சுகவீனம்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன்.- குறுங்கதை 9 -- லவ் பேர்ட்ஸ்
அதுசரி பார்க்க வந்த ஊர்மக்களை எந்தப் பொறுப்பாளர் சமாளித்தார். அப்ப அது பொய்யா கோப்பாலு.- கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் 08 பில்லியன் டொலர் நிவாரணம்
எப்ப பார்த்தாலும் கடன் கடன் கடன் நாய் காலைத் தூக்கியது போல எந்த நாட்டவரைக் கண்டாலும் பிச்சைப் பாத்திரம் தான்.- தமிழ்நாடு: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
மாநில தலைவரானது எப்படி என்பதை விட எப்படி கொல்லப்பட்டார் என்று ஆராயலாமே?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வல்லவனுக்கு வல்லவன். - சம்பந்தன் எப்போதோ இறந்துவிட்டார்: சி.அ.யோதிலிங்கம்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.