Everything posted by ஈழப்பிரியன்
-
'கைலாசா' பற்றி நித்தியானந்தா வெளியிட்டிருக்கும் புதிய தகவல்கள்
அங்கு போனால் இளமை திரும்பிவிடும்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
கடந்த தேர்தலில் ரம் எங்கு பிரச்சாரத்துக்கு போனாலும் Lock her up lock her up என்று கத்துவார்கள்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
ரம்பின் தேர்தல்நேரம் கில்லாரியை உள்ளே போடு என்ற கோசம் எழுந்தது.ஆனாலும் தவறவிட்டு விட்டார். இந்த தடவை வென்றால் ஜனநாயகக் கட்சியினரை கண்ணுக்குள் விரல்விட்டு ஆட்டுகிறாரோ தெரியவில்லை. அனேகமாக கில்லாரியைத் தூக்கலாம்
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
இப்போ பைடன் சொன்னவுடன் நேரடியாக கமலா போட்டியிடலாமென்றில்லை. வேறு யாரும் போட்டிபோடாது கட்சியால் கமலா கரீசை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
அப்படித் தான் நாமும் கில்லாரி போட்டி போடும்போது எண்ணினோம். ஆனாலும் ரம்பைவிட எத்தனையோ லட்சக் கணக்கான கூடுதல் வாக்குகளைப் பெற்றார். இருந்தும் சில சிறிய மாநிலங்களில் தோற்றுப் போனார்.துவேசத்தை தூண்டிவிட்டதும் ரம்புக்கு ஒரு சாதகமாகிவிட்டது. நீங்கள் சொல்லும் எல்லா பயங்கரவாதிகளையும் தோற்றுவித்தது யார் என்று தெரியும் தானே. எனவே அவர்களைக் கையாள்வது பெரிய பிரச்சனை இருக்காது.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
கில்லாரி சில ஊழல் குற்றச்சாட்டுக்கும் மின்னஞ்சல்களை தவறாக கையாண்டதாகவும் சுமத்திய குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்ப முடியவில்லை.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
பைடன் இப்போது நின்றாலும் 47 வீதம் ரம்பும் 41 வீதம் பைடனும் தான். இது கமலா எடுக்கும் அடுத்த தனது 4 வருட தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உப ஜனாதிபதியை தெரிவு செய்வதிலும் இருந்து பெரிய மாற்றமே வரும். ரம் ஒரு பெண்ணை உப ஜனாதிபதியாக தெரிவு செய்திருந்தால் பெண்களின் வாக்குகளைக் கவர்ந்திருக்லாம். இப்போ குறைவான பெண்களின் வாக்குகளே ரம்புக்கு கிடைக்கலாம்.
-
குறுங்கதை 19 -- கள்ளப்பந்து
7-8 வருடங்களாக எனது வாழ்வும் இந்த கரப்பந்தாட்டத்தில் பெரிய பங்காக இருந்தது.இதே மாதிரி ஆரம்பத்தில் கட்டுப்பந்து.பின்னர் கட்டில்லாத பந்து. ஊருக்குள்ளும் அயல் ஊர்களிலும் பெயர் சொல்லக் கூடியளவுக்கு விளையாடினோம். ஊரிலிருக்கும் போது இரவு மின்வெளிச்சத்தில் பல போட்டிகள் விளையாடினோம். அசைபோட வைத்ததற்கு நன்றி.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
அவரைத் தான் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளார். இருக்கும் குறுகிய காலத்தில் உப ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்ய வேண்டும். பைடனின் கோரிக்கையை கமலா கரீஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏன் தேர்தலில் நிற்கவில்லை என்பதை அறிவிக்கவே வேண்டும். அதை எப்படி அறிவிக்கப் போகிறார் என்று யோசிக்க நீங்கள் எழுதியதைத் தவிர வேறு என்ன தான் சொல்லப் போகிறார்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார். 81 வயதான ஜனாதிபதியின் சகிப்புத்தன்மை மற்றும் மன திறன்கள் குறித்து பல வாரங்களாக கவலைப்பட்ட பின்னர் ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக திறம்பட பிரச்சாரம் செய்வதற்கும் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நாட்டை ஆளுவதற்கும் அவரது திறன் குறித்தும் பல சந்தேகங்கள் உள்ளன. பிடனின் முடிவு, அவரது எஞ்சிய காலத்திற்கான ஜனாதிபதியின் கடமைகளை நிறைவேற்றுவதற்கான அவரது திறனைப் பற்றிய கேள்விகளை எழுப்பக்கூடும். பல தசாப்தங்களில் ஒரு அமெரிக்க ஜனாதிபதி மறுதேர்தல் ஓட்டத்தில் இருந்து வெளியேறுவது இதுவே முதல் முறை, ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் 1968 இல் இரண்டாவது முழு பதவிக்காலத்தை நாடுவதற்கு எதிராக முடிவு செய்ததை நினைவு கூர்ந்தார் - இருப்பினும் பிடனின் முடிவு ஜான்சனின் அறிவிப்பை விட சில மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்தில் வந்தது. இது ட்ரம்பின் உயிருக்கு எதிரான முயற்சியை உள்ளடக்கிய ஒரு மிக அதிகமான அரசியல் பிரச்சாரத்தின் சமீபத்திய அதிர்ச்சியூட்டும் வளர்ச்சியாகும். ஆனால் படுகொலை முயற்சி மற்றும் பந்தயத்தில் அதன் கொந்தளிப்பான விளைவு கூட காங்கிரஸ் ஜனநாயகக் கட்சியினரிடையே பிடென் எதிர்கொள்ளும் ஆதரவின் இழப்பை இடைநிறுத்த முடியாது, அவர்கள் நவம்பரில் ஒரு துடைப்பம் தங்கள் வாக்குச் சீட்டுப் போட்டிகளையும் மூழ்கடிக்கும் என்று பெருகிய முறையில் உறுதியாக நம்பினர். https://www.cnn.com/politics/live-news/biden-trump-election-07-21-24/index.html
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பலகாரங்களை எப்படி ஆட்டையைப் போடுவது என்பதைப் பற்றியும் ஒரு காணொளி போடவும் ஐயா. எதிர்காலத்தில் முயற்சி பண்ணத் தான். இங்கே வரியைக் காணலையே? கப்பமாகவே தெரிகிறது. இது நம்ம இலங்கை அரசு போலவல்லவா இருக்கிறது.
-
பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!
நேற்று ஐயா விக்கி அவர்கள் முதலாவது வாக்கை பொதுவேட்பாளருக்கும் இரண்டாவதை மக்கள் தாம் விரும்பியவர்களுக்கும் வாக்களிக்கலாம் என்றார். இந்ததடவை தேர்தலில் இரண்டாவது வாக்குத் தான் முக்கியமானது என்கிறார்கள். அப்ப இதனூடாக சொல்லப்படும் செய்தி தான் என்ன?
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் ஒரு வருடத்துக்கு ஒத்திவைப்பது தான் நல்லதென்று பழைய உயர்நீதிமன்ற நீதிபதி சொல்லியிருந்தாரே? ரணிலுக்கு வெற்றிவாய்ப்பு இல்லாமல் போனால் பிற்போடலாம்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
ஏனய்யா இந்த வன்மம்? வைத்திய மாபியாக்களுடன் சேர்ந்துவிட்டீர்களா? டாக்ரர் அர்சுனா எழுதிய குற்றச்சாட்டுக்களை விட்டுவிட்டு அவரை அங்கொடைக்கு அனுப்பினால் பிரச்சனை முடிந்ததா? இதைத் தானே வைத்திய மாபியாக்களும் விரும்புகிறார்கள்.
-
அதிகாரம்
டாக்ரர் ஜெயகுமாரன் யாழிலிருந்து யாரால் ஏன் எப்படி துரத்தப்பட்டார்?
-
நாட்டில் இன்னுமொரு சர்வதேச விமான நிலையம்
கல்லோ கல்லோ கல்லோ யாழ்ப்பாண விமானநிலையமும் சர்வதேச விமானநிலைமென்றே சொல்லுகிறார்கள். எப்படி ஐயா யாழ்ப்பாணத்தை மறந்தீர்கள்?
-
சுமந்திரன் தமிழ் தேசிய உணர்வற்றவர் : சிறிதரனே மீண்டும் தலைவராக வேண்டும்.
தேர்தலை எப்படி பிற்போடலாம் என்றதையும் சொல்லுகிறார். தமிழ்சிங்கள கலவரத்தை உண்டாக்கி அதைக்காட்டி தேர்தலை பிற்போடலாம் என்று ஐயாவே அவர்களுக்கு நல்ல காரணத்தை சொல்லுகிறார்.
-
சுமந்திரன் தமிழ் தேசிய உணர்வற்றவர் : சிறிதரனே மீண்டும் தலைவராக வேண்டும்.
ஐயா அடுத்த ஒரு வருடத்துக்கு ஜனாதிபதி தேர்தலை பிற்போட பச்சைக்கொடி காட்டுகிறார்.
-
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்திடம் இறுதி முடிவு.
- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
- தமிழீழ ராணுவம் (TEA)இயக்கத்தின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் மரணமடைந்துள்ளார்
ஆழ்ந்த அனுதாபங்கள்.- உதவி தேவை: விடுதலைக்கு வலுச்சேர்த்த தமிழ்நாட்டுத் திரைப்படப் பாடல்கள்
விடைகொடு எந்தன் நாடே- ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
இந்த 22வது அரசியலமைப்பு திருத்த விபரம் பற்றி யாருக்காவது தெரியுமா?- கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
இந்த மனித புதைகுழியைப் பற்றி எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மெளனமாக இருப்பது வேதனை தருகிறது.- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
பல வருடங்களாக பதவியில் இருந்து கொண்டு தமிழ் மக்களுக்கு நன்மை செய்யாத ஊழல் மலிந்த அரச துறைகளை தட்டிக் கேட்காத இந்த தலைவர்கள் எங்களுக்கு தேவையா ஒரு வைத்தியசாலைக்கு மாறுதலாகி போன ஒரு மருத்துவ அதிகாரி 14 நாட்களில் அங்கு அதாவது சாவகச்சேரி மருத்துவமனையில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற ஊழல்கள், போதைப் பொருள் விற்பனை, மருத்துவம் பார்க்க வரும் மக்களை தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பி விடுதல், போன்ற இன்னும் பல ஊழல்களை 14 நாட்களில் வெளிக்கொண்டு வர முடியுமானால், ஏன் அரசாங்கத்தால், மத்திய அமைச்சர்களால், முன்பிருந்த மாகாணசபை அமைச்சர்களால், அரசாங்க அதிபரால், வட மாகாண ஆளுநரால், மக்கள் அதிகாரம் பெற்று வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏன் ஏன் இந்த ஊழலை தடுத்து நிறுத்த முடியவில்லை. விடுதலைப் போராட்டம் தொடங்கிய ஆரம்ப காலங்களில் மக்களை ஊழல் செய்யவிடாமல் ஆயுதம் தூக்கிய இயக்கங்களே ஆயுத முனையில் விடுதலை என்ற பெயரில் எல்லா ஊழல்கள் போன்ற எல்லா நாச வேலைகளையும் மக்களுக்கு செய்தார்கள். 2009 க்கு பின் முன்பு தமிழ் மக்களுக்கு உரிமை பெற்றுக் கொடுக்க புறப்பட்ட மிஞ்சி இருந்த தமிழ் இயக்கங்களின் தலைவர்கள் இலங்கையின் மந்திரிகள் ஆனார்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள், பதவிப் பெற முடியாதவர்கள் கட்சித் தலைவர்கள் ஆனார்கள். அவர்கள் இன்றும் தமிழ் தேசியம் தமிழ் மண்ணுக்காக போராடுகிறோம் என்று தான் கூறி வருகிறார்கள். 2009 முதல் இன்று வரை அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் தமிழ் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு சேவை செய்யும் அரசாங்க துறைகளில் நடக்கும் மிக பாரதூரமான ஊழல்கள் குற்றங்களை தமது பதவிகளைக் கொண்டு தடுக்கவோ அம்பலப்படுத்தவோ இல்லை, ஏன் அவர்கள் அதை செய்யவில்லை. அந்த ஊழல் பணம் இவர்களுக்கும் பங்கு போகிறதா? மருத்துவத்துறையில் ஒரு மருத்துவர் அர்ச்சனா 14 நாளில் ஊழலுக்காக ஒரு போராட்டத்தை நடத்த முடியும் என்றால், பல வருடங்களாக அமைச்சராக இருப்பவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்க துறைகளில் நடக்கும் ஊழல்கள் தெரியாதா. மருத்துவர் அர்ச்சனா ஊழல் பற்றி போராட தொடங்கியதும், ஊழல் பற்றி வாய்மூடி மௌனியாக இருந்த மக்கள் முதல் முறையாக வழியில் வந்து போராடத் தொடங்கினார்கள். . .. மக்கள் போராடத் தொடங்கியதும் அரசாங்கமும் மந்திரியும் ஓடோடி வருகிறார்கள். ஊழலை ஒழிப்பதற்காக அல்லது ஊழலை மறைப்பதற்காகவா. வரும் செய்திகளை பார்க்கும்போது எல்லா அரசாங்கத் துறைகளிலும் மிகப்பெரும் ஊழல்கள் நடப்பதாகவே தெரிகிறது. மருத்துவ துறையில் அர்ச்சனா செய்தது போல், மற்ற துறைகளிலும் யாரும் நல்லவர்கள் வல்லவர்கள் பொது வழியில் தெரியக்கூடியதாக போராட்டங்களை தொடங்கினால் தான் அரசாங்கமும் அமைச்சரும் வருவார்களா. அவர்கள் வந்தாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வர மாட்டார்கள். அவர்களுக்கு பதவி வேண்டும் தங்களுக்கு மட்டும் அரசாங்கத்தின் உதவி வேண்டும் என்று தமிழ் மக்களை ஏமாற்றி திரிகிறார்கள். .... தமிழ் அமைச்சரும் அரசாங்க அதிபரும், வட மாகாண ஆளுநரும் தங்கள் பதவியையும் செல்வாக்கையும் பயன்படுத்தி எல்லா அரசுத் துறைகளிலும் உள்ள முறைகேடுகளை களைந்து மக்களுக்கான சேவைகளை செய்து தாங்களே உண்மையான மக்கள் சேவகர்கள் என்று நற்பெயர் எடுக்க வேண்டும். தமிழ் அமைச்சரும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சி வேறுபாடு இன்றி அழைத்து சிறு சிறு குழுக்களாக போட்டு எல்லா அரசு துறைகளிலும் ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டு குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மருத்துவர் அர்ஜுனா போல் மற்ற துறைகளிலும் யாரும் போராடினால் தான் மற்ற நிகழும் என்றால் தமிழ் மக்களுக்கு அமைச்சரும் வேண்டாம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம். ஆளுநர் அரசாங்க அதிபர்களும் வேண்டாம் இனியாவது உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக செயல்பட முடிவு செய்யுங்கள். https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0341331Yx66fziabTEM4vuLTivjo6UXeMuRNJtQ4tygbL21bJ3GPa56hHQbyPoL1PEl&id=100000253836437&mibextid=cr9u03 - சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.