Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. எனது பிள்ளைகளுக்கு லெமன் பொவ் பிஸ்கட் என்றால் இப்போதும் அடிபட்டு சாப்பிடுவார்கள். படங்கள் இணைப்புக்கு நன்றி.
  2. அது 1935 ஆண்டு , தென்மாகாணத்தில் இருந்து பிழைப்புக்கும் , உழைப்புக்குமாக கொழும்பு நோக்கி வருகிறான் ஒரு இளைஞன் பல்வேறுப்பட்ட சிரமம் , அலைச்சல் , தேடல் , தியாகம் அனைத்தையும் அனுபவித்தான் அந்த இளைஞன் . பல வகையான மனிதர்கள், பல்வேறு போராட்டங்கள் அனைத்தையும் கடந்து கொழும்பில் உள்ள முதலாம் குறுக்கு தெருவில் தேநீர் கடை ஒன்றை நிறுவுகிறான். அந்த இளைஞனின்முழுப்பெயர் பெயர் அங்கல்காஹ கமகே ஹினி அப்புமுஹாமி என்பதாகும் . கடினமான உழைப்பு , ஓய்வில்லாத முயற்சி , தூக்கமில்லாத வேலை , இப்படியே ஓட்டுகிறான் தேநீர் கடையை. . சொற்ப வருடத்திலேயே அந்த இளைஞனின் கடினமான முயற்சிகளுக்கு பலன் கிட்டியது , விரைவிலேயே தேநீர் கடை , ஒரு ஹோட்டலாக மாற்றம் பெற்றது . கொழும்பின் மலிபன் தெருவிலே அந்த ஹோட்டல் திறக்கப்பட்டதால் , அந்த ஹோட்டலுக்கும் மலிபன் ஹோட்டல் என்ற பெயரையே சூட்டினார் திருவாளர் அப்புஹாமி அவர்கள் . அவரது உதவி ஒத்தாசைக்கென்ன தங்களின் சகோதரர்களான A.G.விக்ரமபால மற்றும் A.G.ஜினதாச ஆகியோரையும் இணைத்து கொண்டார் . கூட்டு முயற்சியாலும் , கடின உழைப்பாலும் அவரின் வர்த்தகம் வேகமாக வளர்ந்ததோடு , அது பல கிளைகளையும் பரப்பியது . மலிபன் ஹோட்டலுக்கு மக்களின் அபிமானமும் , வரவேற்பும் பல மடங்கு பெருகுகிறது. அதை அப்படியே தக்கவைத்துக்கொண்ட அப்புஹாமி அவர்கள் அடுத்த கட்ட முயற்சிகளை சிந்தித்து , செயலாற்ற தொடங்குகிறார் . அந்த முயற்சியிலே குதிக்கிறார் . அந்த சிந்தனையும் முயற்சியும் , அப்புஹாமி அவர்களை கொழும்பு கொட்டாஞ்சேனையில் , ஒரு பேக்கரி தொடங்கி , வியாபாரத்தை விரிவுபடுத்த வைக்கிறது . . பேக்கரியும் தொடங்கியாயிற்று , அங்கே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த தரம் மற்றும் சுவை கொண்ட தயாரிப்புகளின் மதிப்பும் அதிகரிக்கிறது . இதனால் , ஹோட்டலுக்கு போலவே , பேக்கரிக்கும் மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பும் , நற்பெயரும் கிடைக்கிறது . அப்புஹாமி வழங்கிய நல்ல வியாபாரமே , வாடிக்கையாளர்களிடம் இருந்து அவருக்கு நல்ல மதிப்பை கொடுத்தது . வியாபாரத்தின் தாரக மந்திரம் வாடிக்கையாளர்கள் என்றால் , அந்த வாடிக்கையாளர்களுக்கு நாம் கொடுப்பதும் சிறப்பானதாய் இருக்க வேண்டும். அப்படி சிறப்பானதை கொடுத்தால் தான் , வாடிக்கையாளர்களையும் நாம் தக்க வைக்க முடியும். இதனை செவ்வனவே செய்தார் அப்புஹாமி , விளைவு நல்ல வாடிக்கையாளர்கள் தக்க வைக்கப்பட்டனர் , அந்த வாடிக்கையாளர்கள் தக்க வைக்கப்பட்டதால் , இவரின் வர்த்தக பெயரும் மக்கள் மனதில் பதிந்தது . வாடிக்கையாளர்களும் உள்ளனர் , நல்ல பெயரும் இருக்கிறது , இது ஒரு வரமல்லவா ? இப்போது அடுத்த கட்டத்தை பற்றி யோசித்தார் அப்புஹாமி . ஒரு இயந்திரமயமாக்கல் மூலமான உணவு உற்பத்தி செயல்முறையை ஆரம்பிக்க முடிவெடுக்கிறார் . அந்த முடிவே , 1954 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் , நாட்டின் முதலாவது இயந்திரம் மூலம் தயாரிக்கப்பட்ட பிஸ்கட் உற்பத்தியை இலங்கை தீவுக்கு அறிமுகம் செய்கிறது . அப்புஹாமி முதல் வியாபாரம் பழகிய இடத்தின் பெயரையே , தனது பிஸ்கட் நிறுவனத்திற்கும் வைக்கிறார் - அதுவே மலிபன் என்பதாகும் . 1935 ம் ஆண்டு தொடக்கம் 1954 ம் ஆண்டு வரையான , வெறும் 19 ஆண்டுக்குள் ஒரு இமாலாய சாதனையே இதுவாகும் . இன்று மலிபன் நிறுவனமானது பிஸ்கட் துறையில் மட்டுமல்ல , பால்மா வியாபாரத்திலும் தனக்கென தனியிடம் பிடித்துள்ளது . சிறிய ஆரம்பமே பெரிய அடைவுகள் என்பதற்கு அப்புஹாமி மெலிபன் வீதியில் ஆரம்பம் செய்த மெலிபன் ஹோட்டலும் , இன்றைய அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் சிறந்த எடுத்துக்காட்டு . முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு அப்புஹாமி நல்லதொரு உதாரணம் . அது போல , கம்பீரமாய் வளர்ந்து நிற்கும் மலிபன் நிறுவனம் ஒரு சான்று . படித்ததில் பிடித்தது Copied from : Hafy Abdeen https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0N4hCg53DXZ5xmsoZEyYozSLAkkSA2kGzrfZ88qJNtoxGfS8DDadftdLBUu8h856Cl&id=100068724064386&mibextid=cr9u03
  3. இவர் பேராதனை பட்டதாரி. படிக்கும் போதே ஒரு விளையாட்டு வீரராக (Basket ball)இருந்திருக்கிறார்.
  4. வைக்கோவின் அரசியல் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக போய்க் கொண்டிருக்கிறது. அண்மையில் வந்த செய்தியில் இவர்கள் கட்சியிலிருந்து வேறுவேறு கட்சிகளுக்கு இவருக்கு மிகவும் நெருக்கமானவர்களே தாவிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த மனிதர். புலிகளின் தடையை காங்கிரசால்த் தான் ஏதாவது செய்யலாம் என்று சொல்கிறார்கள்.
  5. சொந்தக் கதையை எழுதினால் நாங்களும் பார்க்கலாமில்ல.
  6. https://www.cnn.com/2024/07/23/science/video/whale-capsizes-boat-new-hampshire-digvid பெரிய திமிங்கிலத்தின் தாக்குதலுக்கு உள்ளான படகு. பக்கத்தில் நின்ற படகு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட தயாராகிறார்கள்.
  7. சிறியர் இன்னும் தூக்கம் போல.
  8. தமிழ்கலவனுக்கு போகாமல் விட்டுவிட்டேனே என்று கவலை போல கிடக்கு.
  9. பிள்ளைகள் பேரப்பிள்ளைகளாவது அனுப்புங்கள். அவர்களை நாசாவில் உயர்ந்த இடத்தில் காணலாம். சாரத்துக்கு இன்னொரு பெருமை இருக்கிறது. எவ்வளவு குளிராக இருந்தாலும் கேள்விக்குறி போல வளைந்து தலை முதல் கால்வரை போர்த்திக் கொண்டே படுக்கலாம்.
  10. இது இந்திய தூதுவர் டிக்சித் சொன்னதாகவே எண்ணியிருந்தேன்.
  11. தமிழ்கலவனில் படித்த கலாம் இஸ்ரோவுக்கு தலைவரானார். தமிழ்கலவனில் படித்த ஈழப்பிரியன் நாசாவின் தலைவர். இதுகளை வெளியில சொன்னதில்லை.கேட்டதால் சொன்னேன். உங்க வீட்டுக்காரர் போனால் விமானப்படை போனமாதிரி எல்லோரும் ஒரே நிறத்தில் பார்க்க நன்றாகத் தான் இருக்கும்.
  12. வல்வெட்டிப் பகுதியில் கிப்ஸ் சாரங்கள் இந்தியாவிலிருந்து ஊருக்கூர் விற்பார்கள். அதேமாதிரி மட்டக்களப்பிலும் அடித்து ஏமாற்றி விற்பார்கள்.
  13. இந்த இடத்தில்த் தான் எனக்கு மிகுந்த எரிச்சலை ஊட்டும். புதிய உடுப்பு எதுவானாலும் ஒருதடவை தண்ணீரில் போட்டெடுத்தாலே மனதுக்கு இதமாக இருக்கும். நாங்க பாடசாலை போகும்போது யூனிபோம் பிரச்சனை இருக்கவில்லை. இன்றுவரை அதன் தாக்கம் தெரியாது. இந்தப் பாட்டோடு சரத்தோடு வீதிக்கே இறங்கிவிட்டீர்களோ?
  14. மங்குசனி பொங்குசனி மரணசனி. டாக்ரருக்கு இனித்தான் பொங்குசனி. ஆனபடியால் பயப்படத் தேலையில்லை.
  15. அதே மாதிரி அந்தக் கட்சிக்கு ஆதரவும் கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் நம்மவர்களும் இந்தியர்களும் இருக்கிறார்கள்.
  16. இத்தனை ஆண்டுகளாக அடித்தாலும் தமிழன் வலிக்காத மாதிரி இருக்கிறானே?
  17. பாவி போன இமெல்லாம் பள்ளமும் திட்டியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.