Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. சுவி இன்று தான் முழுமையாக வாசிக்க முடிந்தது. நிர்மலாவின்மேல் ஒரு பாசம் வர வைத்துவிட்டீர்கள்.அதே மாதிரி எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி கதையை நகர்த்தி அவளுக்கு வாழ்வும் கொடுத்துள்ளீர்கள். ஆனாலும் இராசம்மாவுடன் ஒட்டி உறவாடுவது ஏனோ நெருடலாக இருந்தது.
  2. நன்றி சபேஸ். நியூயோர்க்கில் வேலை செய்த காலங்களில் குளிர் -பனிவிழும் நேரங்களில் நிரந்தரமாகவே ஒரு சவலும் உப்பு போத்தலும் வைத்திருப்பேன்.எனக்கு மட்டுமல்ல வேறு யாருக்காவது உதவும் என்று வைத்திருப்பேன்.இது நிறைய பேருக்கு உதவியும் இருக்கு.
  3. நன்றி கொழும்பான். இங்கும் கனடாவும் வைகாசி முடிந்தால் வெய்யில் காலம். நான் வைகாசி இங்கு நிற்கமாட்டேன். ஆனி 1-10 வரை நியூயோர்க்கில் நிற்பேன். 11- 20 வட கரோலினா. ஆனி 20 இல் இருந்து ஏறத்தாள மூன்று மாதத்துக்கு சன்பிரான்சிஸ்கோவில் நிற்பேன்.இடையில் லாஸ் அங்கிலஸ் போவேன்.ஆனால் எப்போ என்று அறுதியாக கூற முடியாது. வரும்போது தொடர்பு கொள்ளுங்கள்.சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திப்போம். வயோதிபர்களுக்கு தத்துவம் சொன்னா தான் விழங்கும். நன்றி உடையார் தொடர் முடிந்துவிட்டது.
  4. இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை. மருது நன்றி. நன்றி நுணா.நீங்கள் இந்த இடத்துக்கு பரிச்சயம் என்றபடியால் நல்லதாக போச்சு.
  5. நன்றி சகோதரி. பனிமழை அழகு தான்.ஆனாலும் ஆபத்தும் உள்ளது. அதெல்லாம் ஒரு கனாக்காலம். அடபாவிகளா மறக்காமல் இருக்கிறீர்களே.
  6. அக்கா இப்படி ஒரு நிலை வருமென்று யாரும் எண்ணியிருக்கவில்லை.அவர்களுக்கும் சிற்றூண்டிசாலையை திறந்துவிட்டால் காலையில் இலவச உணவு கொடுக்க வேண்டுமே என்ற பயம். அத்தோடு அவசரகாலநிலை போட்டிருந்ததால் வீடு திரும்ப வேண்டிய பலர் மீண்டும் அறை எடுத்து தங்கியதால் கொட்டேலிலும் அறை இல்லை.இத்தனை பேருக்கும் காலை சாப்பாடு போட வேண்டும். மிகவும் நன்றி புங்கை. உங்கள் தொடர் ஆதரவுக்கு மிகவும் நன்றி சுவி. எனக்கும் மிகவும் ஆவலாகவே இருந்தது. ஆனாலும் ஏற்கனவே இரண்டு டீஸ்க் சிலிப்பாகி ரொம்பவும் நொந்துவிட்டேன்.எங்கே போனாலும் பாரம் தூக்குவதானாலும் நாரிக்கு பெரிய பட்டி அணிந்து தான் போவேன். சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடுமா? நன்றி ஏராளன்.
  7. மலைப் பகுதியில் 6-7 மைல் போனதும் பெரிய மலையின் உச்சிக்கு ஏற்றிப் போவதற்கு கேபிள் கார்கள் ஓடிக் கொண்டே இருந்தது.மருமகன் சொந்தமாகவே சினோபோட் என்று சொல்லும் காலில் பூட்டி சறுக்கி விளையாடும் பலகை வைத்திருந்தார்.மகள் ஸ்கீனிங் என்று காலில் பூட்டி இரண்டு தடி ஊன்றி சறுக்கி விளையாட வாடகைக்கு எடுத்தா. https://www.facebook.com/100051745984442/posts/pfbid0yrWfidKdNxtry1VWyEt8Ynj8RbJhqmgSVTGNDGLAu9TW2XQZ45DAdzJz8cwUt732l/ நாங்கள் பேரப் பிள்ளைகளுடன் கொஞ்ச நேரம் எல்லோர் விளையாட்டுக்களையும் பார்த்து ரசித்தோம்.பலர் சறுக்கி வரும்போது பலதடவை கரணம் அடித்து விழுந்து எழும்பி திரும்பவும் சறுக்கினார்கள்.சிலரைப் பார்த்தா வேணும் என்று சறுக்கி விழுந்த மாதிரியே இருந்தது.நீண்ட நேரம் நிறக முடியவில்லை.குளிர் காற்று எப்படி மூடிக் கட்டினாலும் குளிரவே செய்தது.குழந்தைகள் வேறு பனிக்குள் விளையாடி ஆளாளுக்கு தலையெல்லாம் பனி அள்ளிக் கொட்டி நனைந்து போனார்கள்.மெதுவாக பக்கத்தில் இருந்த சிற்றுண்டிச்சாலைக்கு போய் பீச்சா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஏறத்தாள 2 மணிநேரம் சறுக்கி விளையாடி முடிந்து களைத்துப் போய்வந்தார்கள்.மீண்டும் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு சுகமாக வீடுவந்து சேர்ந்தோம். முற்றும்.
  8. கடைசி பதிவு. நாளைக் காலை கொட்டேல் விட வேண்டும்.சக்கரத்துக்கு சங்கிலி போட வேண்டும்.பனியில் சறுக்கி விளையாடி முடிந்து சுகமாக வீடு போய் சேரணும். காலையில் வேளைக்கே எழும்பினாலும் 7 மணிவரை சிற்றூண்டிச்சாலை திறக்கும் வரை காத்திருந்து மருமகனும் நானும் முதலாளாய் போய் சாப்பிட்டுவிட்டு சங்கிலி எங்கே போடலாம் என்று விசாரிக்க எண்ணெய் நிரப்பு நிலையத்துக்கு போனோம்.அங்கு சங்கிலி இருந்தது. ஆனாலும் கூட பணம் சொன்னார்கள்.இந்த நேரத்தில் பணத்தை பார்க்க முடியுமா?வாங்கி ஒரு 10 நிமிடத்திலேயே மாட்டிவிட்டோம். மிகவும் சந்தோசத்துடன் கொட்டேலுக்கும் போனோம். ஏற்கனவே பெட்டி படுக்கைகளுடன் புறப்பட தயாராக இருந்தவர்களையும் ஏற்றிக் கொண்டு தெரிவு செய்திருந்த இடத்துக்கு புறப்பட்டோம். அந்த இடத்துக்கு போறதற்கு நெடுஞ்சாலை எடுத்தே போக வேண்டும்.நெடுஞ்சாலையில் வானை ஏற்றினால் பொலிஸ் தடை போட்டு 4 சக்கர பிடிப்புள்ள வாகனம் அல்லது சக்கர சங்கிலி போட்ட வாகனம் மட்டுமே போகலாம் என்று சொன்னார்கள்.எமது வாகனத்தையும் மறித்து பார்த்துவிட்டு மெதுவாக போக சொன்னார்கள். நெடுஞ்சாலையில் இருந்து மலையடிவாரம் போகும் இடமெல்லாம் 8-10 அடி பனி.வீதிகளை துப்பரவாக்கி கரையில் ஒதுக்கிவிட்டிருந்தனர்.வீட்டுக்கு வீடு ரைக்கர் மாதிரி பெரிய பனி அள்ளிக் கொட்டும் இயந்திரங்கள் வைத்திருக்கிறார்கள். மாலை தொடரும்.
  9. நானும் தான். அவவின் இலக்கத்தை எடுத்தால் போட்டுக் கொடுக்கலாம்.
  10. (5) இரவு சாப்பாட்டுக்கு வெளியே போகவும் முடியாது கொண்டுவந்தும் தர மாட்டார்களாம்.சரி இருங்கோ வாறன் என்று சிற்றூண்டிசாலைப் பக்கம் போனால் பூட்டிக்கிடக்கறது. மெதுவாக வரவேற்பறையில் இருந்தவளுடன் கதையைப் போட்டு கொஞ்ச பணமும் கொடுத்தேன்.சரி ஒரு 15-20 நிமிடம் இருந்துகொள் ஏதாவது செய்கிறேன் என்றாள்.சொன்னது போலவே 15வது நிமிடம் தன்னோடு கூட்டிக் கொண்டு சிற்றூண்டிச்சாலைப் பக்கம் போய் கதவைத் திறந்து எல்லாம் நாளை காலைக்காக வைக்கப்பட்டிருக்கு தேவையானதை எடு என்றாள். கூடுதலாக எடுக்காமல் பாண் பழங்கள் பிள்ளைகளுக்கு பட்டர் ஜாம் என்று எடுத்துவிட்டு இன்னும் கொஞ்சபணம் கொடுத்தேன்.சந்தோசமாக வாங்கினாள்.வேறு ஏதாவது தேவை என்றால் வரவேற்பறைக்கு வா என்றாள்.இத்தனையும் தந்ததே கடவுளைக் கண்டமாதிரி.அறையில் இரவுச் சாப்பாடு சரி. பகல் முழுவதும் படுத்தபடியால் இரவு எல்லோருக்கும் நித்திரைக்குப் பிரச்சனை.சரி இப்படியே இருக்க முடியாது சூடாக்கப்பட்ட நீச்சல்தடாகத்தில் குளிக்கப் போகிறேன் யார்யாருக்கு வர விருப்பம் என்றால்.ஆளையாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.நான் துவாயும் எடுத்துக் கொண்டு போய்விட்டேன். எமது அறையில் இருந்து பார்க்க நீச்சல்தடாகம் தெரிந்தது. நான் தைரியத்துடன் போனாலும் வெளியில் இருந்து அறையில் உடுப்புகளை கழற்றிவிட்டு வெறும் காலுடன் பனிக்குள் நடக்க வேண்டுமே என்பதை எண்ண நடுக்கமாகவே இருந்தது.இனி என்ன சொல்லிப் போட்டு வேற வந்துவிட்டேன் திரும்பவும் போகவா முடியும்.திடுதிடென்று போய் தண்ணீரில் இறங்கிவிட்டேன்.யன்னலால் பார்த்துக் கொண்டிருக்க அவர்களுக்கும் இருப்புக் கொள்ளவில்லை.என்ன எண்ணினார்களோ எல்லோரும் வந்துவிட்டனர். ஒருமணி நேரத்துக்கு மேலாக நல்ல சூடான தண்ணீர் குளிக்க நல்ல சுகமாக இருந்தது.வெளியே போகவே மனம் வரவில்லை.முக்கியமாக பிள்ளைகள்.ஒரு மாதிரியாக எல்லோரும் அறைக்குப் போய் நன்றாகவே தூங்கிவிட்டோம். அடுத்தநாள் காலை 11 மணிக்கிடையில் கொட்டேலை விடவேண்டும்.பனியில் சறுக்கி விளையாடாமல் வீடு போகமாட்டோம் என்று மகளும் மருமகனும் வேற அடம்பிடிக்கிறார்கள்.சரி முட்டை முடிச்சுக்களுடன் கிளம்புவோம் அதற்கிடையில் பக்கத்தில் ஏதாவதொரு இடத்தில் சக்கரத்துக்கு சங்கிலியை வாங்கி மாட்டுவோம் என்று முன்னரே பேசிக் கொண்டோம். பனிப் பொழியும்.
  11. இத்தனை நாளுக்கு பின் சுதந்திரம் என்றால் விடவா போகிறார்கள். தொடருங்கோ.
  12. சில பெற்றேர்கள் தாங்கள் எப்படி வளர்ந்தோமோ அதே மாதிரி பிள்ளைகளையும் வளர்க்க முற்படுகிறார்கள். இப்போது ஈத எல்லாம் வேலைக்காகாது. பிள்ளைகள் ரொம்பவும் உசாராகிவிட்டனர். டேற்றிங் என்று தொடங்கினாலே யார் சமைக்கிறது கோப்பை கழுவுகிறது திருமணம் முடிந்த உடனேயே தனிக் குடித்தனம் என்று சகலதும் பேசி முடிக்கிறார்கள். பேசிமுடித்தவையில் இருந்து பிசகும் போது மனக் கசப்புகள் ஏற்பட்டு விவாகரத்து வரை போகிறார்கள்.
  13. மத்தியானம் பார்த்த வாகனத்தையும் பிற்பகல் பார்க்கும் வாகனத்தையும் பார்க்க எவ்வளவு பனி கொட்டியிருக்கிறது என்பதை நீங்களே ஊகிக்கலாம்.
  14. பிழையான சக்கர சங்கிலி கொண்டுவந்தபடியால் இனி வேலைக்காகது மெதுவாக திரும்ப வேண்டியது தான்.ஆனாலும் எப்படி போவது?பிள்ளைகள் விளையாட வைத்திருந்த பனி அள்ளும் சவல் எடுத்து மெதுவாக தோண்டி தோண்டி கொஞ்சம் கொஞ்சமாக அருகில் இருந்த வீட்டு பாதையில் திருப்பிவிட்டோம்.நியூயோர்க்கில் வண்டி ஓட்டும் போது பனி தொடங்கினால் றைக்சன் கொன்றோலை வேலை செய்யாமல் பண்ணிவிடுவேன்.இது ஓரளவுக்கு பனியை கவ்விப் பிடிக்கும்.நீங்களும் முயற்சி செய்யலாம். இதற்கும் அதே மாதிரி றைக்சன் கொன்ரோலை நிற்பாட்டி போட்டு பெரிய கஸ்டப்பட்டு இருபக்கமும் வந்த வாகனங்களை நான் மறிக்க பின்பக்கமாக வெளியே வீதிக்கு வந்துவிட்டது.இனி பள்ளம் என்றபடியால் மெதுவாக போய் சேர்ந்துடலாம். எனக்கும் கால் விறைத்து இயலாத கட்டம்.வானுக்குள் ஏறியவுடன் சப்பாத்து ஒன்று இரண்டு சொக்ஸ் எல்லாம் களட்டி போட்டு சூட்டையும் காலுக்கு படக்கூடிய மாதிரி திருப்பிவிட்டு இருந்தேன்.போன உயிர் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது போல இருந்தது.கொட்டேலுக்கு போய் உடைகளை மாற்றிவிட்டு எல்லோரும் ஒரு குட்டி தூக்கம். எழும்பி பார்த்தால் பெரியபெரிய தடலாக பனி கொட்டோ கொட்டுன்னு கொட்டுது.எல்லா அறைக் கதவுகளிலும் அறிவித்தல் ஒட்டப்பட்டிருக்கிறது. இப்போது முதல் மறு அறிவித்தல்வரை அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.சக்கரத்துக்கு சங்கிலியோ வாகனத்துக்கு நான்கு சக்கரத்துக்கும் பிடிப்புள்ள வாகனம் மட்டுமே வீதியில் ஓடலாம் என்று இருந்தது.மதிய சாப்பாடும் அம்போ தான்.வீட்டிலிருந்து கொண்டு போன ரூணா பாண் வாழைப்பழம் இதை வைத்து ஒருமாதிரி சமாளித்தாகிவிட்டது.இனி என்ன செய்வது திரும்பவும் படுக்கை தான்.பிற்பகல் எழும்பி வாகனத்தை கொஞ்சம் துப்பரவாக்கி வைத்திருந்தால் நாளைக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும் என்று வெளியே போனால் இந்த நிலையில் வாகனம். விடுதியில் இருந்த சவல் தும்புதடியைக் கொண்டு மகளும் மருமகனும் துப்பரவாக்கினர்கள்.எனது சப்பாத்து இன்னமும் ஈரமாக இருந்ததால் என்னால் உதவி செய்ய முடியவில்லை. பனிப் பொழிவுக்கு மத்தியிலும் நீச்சல் தடாகத்தில். பனிப் பொழியும்.
  15. உண்மை தான் அக்கா. அண்மையில் பவலோ நியூயோர்க்கில் கடும் பனிப் பொழிவின் போது 40 பேர்வரை இறந்திருந்தார்கள்.
  16. அடபாவி நீங்க மருமகனைப் பார்த்து நான் என்று ஏமாந்திட்டீங்க. சுவி சுகமா வீடு வந்து சேர்ந்தால் அனுபவம். இவைகளே ஆபத்தாகவும் முடியலாம். உங்கள் அனுபவத்தையும் எழுதலாமே. எழுதுவார் என நம்புவோம்.
  17. உண்மை தான்.ஆனாலும் எமது சந்ததியோட நின்றுவிடும்.
  18. மகள் திரும்ப திரும்ப தண்ணீர் போகாத சப்பாத்து வாங்குவம் என்று சொன்னா. நான் தான் பனிக்குள் போக மாட்டேனே ஏன் வீணாக செலவு செய்வான் என்று மறுத்துவிட்டேன். நியூயோர்க்கில் தண்ணீர் போகாத சப்பாத்து வைத்திருக்கிறேன். மனைவி மகள் பேரப்பிள்ளைகளை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக விறைத்து விழுந்தாலும் பரவாயில்லை என்று சமாளித்து நின்றேன்.
  19. அடுத்த நாள் காலை 6 மணிக்கே எழும்பி ஆளாளுக்கு அதை எடு இதை எடு என்று ஒருமாதிரி தயாராகிவிட்டோம்.இறங்க முதல் வயிறு முட்ட ஒரு பிடிபிடித்தால்த் தானே போற இடங்களில் நிமிர்ந்து நிற்கலாம்.ஆனாலும் 7 மணிக்குத் தான் திறப்போம் என்று அறிவித்தல் வேறு தொங்குது.ஒரு மாதிரி காலைச் சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு லேசான பனிப் பொழிவுக்குள் புறப்பட்டோம். நேரம் போகபோக பனி கொஞ்சம் கூடுதலாக கொட்டத் தொடங்கியது.ஒரு 15-20 நிமிட ஓடிய பின்பு ஒரு சிகப்பு வெளிச்சத்தில் நின்றோம்.அதில் வலது பக்கம் திரும்ப வேண்டும். கொஞ்சம் ஏற்றமாகவும் இருந்தது. பச்சை விளக்கு வந்தவுடன் வலது பக்கம் திருப்பி 25 யார் போகவில்லை சில்லு சுத்த தொடங்கிவிட்டது.மருமகன் தான் சாரதி.நான் இறங்கி பின்னால் நின்ற வாகனங்களை சுற்றிப் போகுமாறு கையைக் காட்டினேன்.பின்னுக்கு நின்ற வாகனங்கள் 4 சில்லும் பிடித்தமான வாகனங்கள் அல்லது சக்கரங்களுக்கு சங்கிலி போட்டிருந்தனர்.எங்களை பரிதாபமாக பார்த்துக் கொண்டு போனார்கள். இயன்றளவு முயற்சிகள் செய்தும் ஒரு சாண் கூட முன்னேற முடியவில்லை.சரி பின்பக்கம் எடுத்தால் சுலபமாக போகும் எனவே முதலில் கொஞ்சம் கரைக்கு எடுத்து விடுவோம் என்று நான் சைகை காட்ட மருமகன் கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்கெடுத்தார். இப்படி எவ்வளவு நேரம் தான் நிற்பது வானுக்குள் சங்கிலி இருக்கிறது எடுத்து போடுவோமா என்று மருமகன் கேட்டு பதிலுக்கு காத்திராமல் தானே இறங்கி சங்கிலியை எடுத்துவந்தார்.ஆனால் இதுவரை அவரோ நானோ வாகனத்துக்கு சங்கிலி போட்ட அனுபவம் இல்லை. அரை மணிநேரமாக சங்கிலியை போட முயன்றும் போட முடியவில்லை.எனது கால் பகுதி முழுவதும் பனிக்குள் நனைந்து விறைக்கத் தொடங்கிவிட்டது.சங்கிலி இந்த வானோடு வந்ததா என்று கேட்க இல்லை இது எமது காருக்கு வாங்கியது என்றார்.அதோடு கதை கந்தல். பனி பொழியும்.
  20. ஓம் அக்கா.மகள் இடம் மாறுகிறா.புதிய இடத்தில் இணைய வசதிகள் இன்னும் இல்லை.இப்ப தான் வேலை நடக்குது.சிலவேளை இன்று சரிவரலாம். தொடர்ந்து பனிக்குள் நின்றால் விறைத்துப் போவீர்கள் தானே.
  21. முதல் ஆள் பாத்திரம் இல்லாததால் சாப்பாடு கொடுக்கப்பட மாட்டாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.