Everything posted by ஈழப்பிரியன்
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
நன்றி சகோதரி. பனிமழை அழகு தான்.ஆனாலும் ஆபத்தும் உள்ளது. அதெல்லாம் ஒரு கனாக்காலம். அடபாவிகளா மறக்காமல் இருக்கிறீர்களே.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
அக்கா இப்படி ஒரு நிலை வருமென்று யாரும் எண்ணியிருக்கவில்லை.அவர்களுக்கும் சிற்றூண்டிசாலையை திறந்துவிட்டால் காலையில் இலவச உணவு கொடுக்க வேண்டுமே என்ற பயம். அத்தோடு அவசரகாலநிலை போட்டிருந்ததால் வீடு திரும்ப வேண்டிய பலர் மீண்டும் அறை எடுத்து தங்கியதால் கொட்டேலிலும் அறை இல்லை.இத்தனை பேருக்கும் காலை சாப்பாடு போட வேண்டும். மிகவும் நன்றி புங்கை. உங்கள் தொடர் ஆதரவுக்கு மிகவும் நன்றி சுவி. எனக்கும் மிகவும் ஆவலாகவே இருந்தது. ஆனாலும் ஏற்கனவே இரண்டு டீஸ்க் சிலிப்பாகி ரொம்பவும் நொந்துவிட்டேன்.எங்கே போனாலும் பாரம் தூக்குவதானாலும் நாரிக்கு பெரிய பட்டி அணிந்து தான் போவேன். சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடுமா? நன்றி ஏராளன்.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
மலைப் பகுதியில் 6-7 மைல் போனதும் பெரிய மலையின் உச்சிக்கு ஏற்றிப் போவதற்கு கேபிள் கார்கள் ஓடிக் கொண்டே இருந்தது.மருமகன் சொந்தமாகவே சினோபோட் என்று சொல்லும் காலில் பூட்டி சறுக்கி விளையாடும் பலகை வைத்திருந்தார்.மகள் ஸ்கீனிங் என்று காலில் பூட்டி இரண்டு தடி ஊன்றி சறுக்கி விளையாட வாடகைக்கு எடுத்தா. https://www.facebook.com/100051745984442/posts/pfbid0yrWfidKdNxtry1VWyEt8Ynj8RbJhqmgSVTGNDGLAu9TW2XQZ45DAdzJz8cwUt732l/ நாங்கள் பேரப் பிள்ளைகளுடன் கொஞ்ச நேரம் எல்லோர் விளையாட்டுக்களையும் பார்த்து ரசித்தோம்.பலர் சறுக்கி வரும்போது பலதடவை கரணம் அடித்து விழுந்து எழும்பி திரும்பவும் சறுக்கினார்கள்.சிலரைப் பார்த்தா வேணும் என்று சறுக்கி விழுந்த மாதிரியே இருந்தது.நீண்ட நேரம் நிறக முடியவில்லை.குளிர் காற்று எப்படி மூடிக் கட்டினாலும் குளிரவே செய்தது.குழந்தைகள் வேறு பனிக்குள் விளையாடி ஆளாளுக்கு தலையெல்லாம் பனி அள்ளிக் கொட்டி நனைந்து போனார்கள்.மெதுவாக பக்கத்தில் இருந்த சிற்றுண்டிச்சாலைக்கு போய் பீச்சா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஏறத்தாள 2 மணிநேரம் சறுக்கி விளையாடி முடிந்து களைத்துப் போய்வந்தார்கள்.மீண்டும் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு சுகமாக வீடுவந்து சேர்ந்தோம். முற்றும்.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
கடைசி பதிவு. நாளைக் காலை கொட்டேல் விட வேண்டும்.சக்கரத்துக்கு சங்கிலி போட வேண்டும்.பனியில் சறுக்கி விளையாடி முடிந்து சுகமாக வீடு போய் சேரணும். காலையில் வேளைக்கே எழும்பினாலும் 7 மணிவரை சிற்றூண்டிச்சாலை திறக்கும் வரை காத்திருந்து மருமகனும் நானும் முதலாளாய் போய் சாப்பிட்டுவிட்டு சங்கிலி எங்கே போடலாம் என்று விசாரிக்க எண்ணெய் நிரப்பு நிலையத்துக்கு போனோம்.அங்கு சங்கிலி இருந்தது. ஆனாலும் கூட பணம் சொன்னார்கள்.இந்த நேரத்தில் பணத்தை பார்க்க முடியுமா?வாங்கி ஒரு 10 நிமிடத்திலேயே மாட்டிவிட்டோம். மிகவும் சந்தோசத்துடன் கொட்டேலுக்கும் போனோம். ஏற்கனவே பெட்டி படுக்கைகளுடன் புறப்பட தயாராக இருந்தவர்களையும் ஏற்றிக் கொண்டு தெரிவு செய்திருந்த இடத்துக்கு புறப்பட்டோம். அந்த இடத்துக்கு போறதற்கு நெடுஞ்சாலை எடுத்தே போக வேண்டும்.நெடுஞ்சாலையில் வானை ஏற்றினால் பொலிஸ் தடை போட்டு 4 சக்கர பிடிப்புள்ள வாகனம் அல்லது சக்கர சங்கிலி போட்ட வாகனம் மட்டுமே போகலாம் என்று சொன்னார்கள்.எமது வாகனத்தையும் மறித்து பார்த்துவிட்டு மெதுவாக போக சொன்னார்கள். நெடுஞ்சாலையில் இருந்து மலையடிவாரம் போகும் இடமெல்லாம் 8-10 அடி பனி.வீதிகளை துப்பரவாக்கி கரையில் ஒதுக்கிவிட்டிருந்தனர்.வீட்டுக்கு வீடு ரைக்கர் மாதிரி பெரிய பனி அள்ளிக் கொட்டும் இயந்திரங்கள் வைத்திருக்கிறார்கள். மாலை தொடரும்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
எங்கே போனாலும் தனித்துவம் கூடவே போகும்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
நானும் தான். அவவின் இலக்கத்தை எடுத்தால் போட்டுக் கொடுக்கலாம்.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
(5) இரவு சாப்பாட்டுக்கு வெளியே போகவும் முடியாது கொண்டுவந்தும் தர மாட்டார்களாம்.சரி இருங்கோ வாறன் என்று சிற்றூண்டிசாலைப் பக்கம் போனால் பூட்டிக்கிடக்கறது. மெதுவாக வரவேற்பறையில் இருந்தவளுடன் கதையைப் போட்டு கொஞ்ச பணமும் கொடுத்தேன்.சரி ஒரு 15-20 நிமிடம் இருந்துகொள் ஏதாவது செய்கிறேன் என்றாள்.சொன்னது போலவே 15வது நிமிடம் தன்னோடு கூட்டிக் கொண்டு சிற்றூண்டிச்சாலைப் பக்கம் போய் கதவைத் திறந்து எல்லாம் நாளை காலைக்காக வைக்கப்பட்டிருக்கு தேவையானதை எடு என்றாள். கூடுதலாக எடுக்காமல் பாண் பழங்கள் பிள்ளைகளுக்கு பட்டர் ஜாம் என்று எடுத்துவிட்டு இன்னும் கொஞ்சபணம் கொடுத்தேன்.சந்தோசமாக வாங்கினாள்.வேறு ஏதாவது தேவை என்றால் வரவேற்பறைக்கு வா என்றாள்.இத்தனையும் தந்ததே கடவுளைக் கண்டமாதிரி.அறையில் இரவுச் சாப்பாடு சரி. பகல் முழுவதும் படுத்தபடியால் இரவு எல்லோருக்கும் நித்திரைக்குப் பிரச்சனை.சரி இப்படியே இருக்க முடியாது சூடாக்கப்பட்ட நீச்சல்தடாகத்தில் குளிக்கப் போகிறேன் யார்யாருக்கு வர விருப்பம் என்றால்.ஆளையாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.நான் துவாயும் எடுத்துக் கொண்டு போய்விட்டேன். எமது அறையில் இருந்து பார்க்க நீச்சல்தடாகம் தெரிந்தது. நான் தைரியத்துடன் போனாலும் வெளியில் இருந்து அறையில் உடுப்புகளை கழற்றிவிட்டு வெறும் காலுடன் பனிக்குள் நடக்க வேண்டுமே என்பதை எண்ண நடுக்கமாகவே இருந்தது.இனி என்ன சொல்லிப் போட்டு வேற வந்துவிட்டேன் திரும்பவும் போகவா முடியும்.திடுதிடென்று போய் தண்ணீரில் இறங்கிவிட்டேன்.யன்னலால் பார்த்துக் கொண்டிருக்க அவர்களுக்கும் இருப்புக் கொள்ளவில்லை.என்ன எண்ணினார்களோ எல்லோரும் வந்துவிட்டனர். ஒருமணி நேரத்துக்கு மேலாக நல்ல சூடான தண்ணீர் குளிக்க நல்ல சுகமாக இருந்தது.வெளியே போகவே மனம் வரவில்லை.முக்கியமாக பிள்ளைகள்.ஒரு மாதிரியாக எல்லோரும் அறைக்குப் போய் நன்றாகவே தூங்கிவிட்டோம். அடுத்தநாள் காலை 11 மணிக்கிடையில் கொட்டேலை விடவேண்டும்.பனியில் சறுக்கி விளையாடாமல் வீடு போகமாட்டோம் என்று மகளும் மருமகனும் வேற அடம்பிடிக்கிறார்கள்.சரி முட்டை முடிச்சுக்களுடன் கிளம்புவோம் அதற்கிடையில் பக்கத்தில் ஏதாவதொரு இடத்தில் சக்கரத்துக்கு சங்கிலியை வாங்கி மாட்டுவோம் என்று முன்னரே பேசிக் கொண்டோம். பனிப் பொழியும்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
இத்தனை நாளுக்கு பின் சுதந்திரம் என்றால் விடவா போகிறார்கள். தொடருங்கோ.
-
அவர்களை வாழவிடுங்கள்.
சில பெற்றேர்கள் தாங்கள் எப்படி வளர்ந்தோமோ அதே மாதிரி பிள்ளைகளையும் வளர்க்க முற்படுகிறார்கள். இப்போது ஈத எல்லாம் வேலைக்காகாது. பிள்ளைகள் ரொம்பவும் உசாராகிவிட்டனர். டேற்றிங் என்று தொடங்கினாலே யார் சமைக்கிறது கோப்பை கழுவுகிறது திருமணம் முடிந்த உடனேயே தனிக் குடித்தனம் என்று சகலதும் பேசி முடிக்கிறார்கள். பேசிமுடித்தவையில் இருந்து பிசகும் போது மனக் கசப்புகள் ஏற்பட்டு விவாகரத்து வரை போகிறார்கள்.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
மத்தியானம் பார்த்த வாகனத்தையும் பிற்பகல் பார்க்கும் வாகனத்தையும் பார்க்க எவ்வளவு பனி கொட்டியிருக்கிறது என்பதை நீங்களே ஊகிக்கலாம்.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
பிழையான சக்கர சங்கிலி கொண்டுவந்தபடியால் இனி வேலைக்காகது மெதுவாக திரும்ப வேண்டியது தான்.ஆனாலும் எப்படி போவது?பிள்ளைகள் விளையாட வைத்திருந்த பனி அள்ளும் சவல் எடுத்து மெதுவாக தோண்டி தோண்டி கொஞ்சம் கொஞ்சமாக அருகில் இருந்த வீட்டு பாதையில் திருப்பிவிட்டோம்.நியூயோர்க்கில் வண்டி ஓட்டும் போது பனி தொடங்கினால் றைக்சன் கொன்றோலை வேலை செய்யாமல் பண்ணிவிடுவேன்.இது ஓரளவுக்கு பனியை கவ்விப் பிடிக்கும்.நீங்களும் முயற்சி செய்யலாம். இதற்கும் அதே மாதிரி றைக்சன் கொன்ரோலை நிற்பாட்டி போட்டு பெரிய கஸ்டப்பட்டு இருபக்கமும் வந்த வாகனங்களை நான் மறிக்க பின்பக்கமாக வெளியே வீதிக்கு வந்துவிட்டது.இனி பள்ளம் என்றபடியால் மெதுவாக போய் சேர்ந்துடலாம். எனக்கும் கால் விறைத்து இயலாத கட்டம்.வானுக்குள் ஏறியவுடன் சப்பாத்து ஒன்று இரண்டு சொக்ஸ் எல்லாம் களட்டி போட்டு சூட்டையும் காலுக்கு படக்கூடிய மாதிரி திருப்பிவிட்டு இருந்தேன்.போன உயிர் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது போல இருந்தது.கொட்டேலுக்கு போய் உடைகளை மாற்றிவிட்டு எல்லோரும் ஒரு குட்டி தூக்கம். எழும்பி பார்த்தால் பெரியபெரிய தடலாக பனி கொட்டோ கொட்டுன்னு கொட்டுது.எல்லா அறைக் கதவுகளிலும் அறிவித்தல் ஒட்டப்பட்டிருக்கிறது. இப்போது முதல் மறு அறிவித்தல்வரை அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.சக்கரத்துக்கு சங்கிலியோ வாகனத்துக்கு நான்கு சக்கரத்துக்கும் பிடிப்புள்ள வாகனம் மட்டுமே வீதியில் ஓடலாம் என்று இருந்தது.மதிய சாப்பாடும் அம்போ தான்.வீட்டிலிருந்து கொண்டு போன ரூணா பாண் வாழைப்பழம் இதை வைத்து ஒருமாதிரி சமாளித்தாகிவிட்டது.இனி என்ன செய்வது திரும்பவும் படுக்கை தான்.பிற்பகல் எழும்பி வாகனத்தை கொஞ்சம் துப்பரவாக்கி வைத்திருந்தால் நாளைக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும் என்று வெளியே போனால் இந்த நிலையில் வாகனம். விடுதியில் இருந்த சவல் தும்புதடியைக் கொண்டு மகளும் மருமகனும் துப்பரவாக்கினர்கள்.எனது சப்பாத்து இன்னமும் ஈரமாக இருந்ததால் என்னால் உதவி செய்ய முடியவில்லை. பனிப் பொழிவுக்கு மத்தியிலும் நீச்சல் தடாகத்தில். பனிப் பொழியும்.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
உண்மை தான் அக்கா. அண்மையில் பவலோ நியூயோர்க்கில் கடும் பனிப் பொழிவின் போது 40 பேர்வரை இறந்திருந்தார்கள்.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
அடபாவி நீங்க மருமகனைப் பார்த்து நான் என்று ஏமாந்திட்டீங்க. சுவி சுகமா வீடு வந்து சேர்ந்தால் அனுபவம். இவைகளே ஆபத்தாகவும் முடியலாம். உங்கள் அனுபவத்தையும் எழுதலாமே. எழுதுவார் என நம்புவோம்.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
உண்மை தான்.ஆனாலும் எமது சந்ததியோட நின்றுவிடும்.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
மகள் திரும்ப திரும்ப தண்ணீர் போகாத சப்பாத்து வாங்குவம் என்று சொன்னா. நான் தான் பனிக்குள் போக மாட்டேனே ஏன் வீணாக செலவு செய்வான் என்று மறுத்துவிட்டேன். நியூயோர்க்கில் தண்ணீர் போகாத சப்பாத்து வைத்திருக்கிறேன். மனைவி மகள் பேரப்பிள்ளைகளை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக விறைத்து விழுந்தாலும் பரவாயில்லை என்று சமாளித்து நின்றேன்.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
இப்ப தான் கிணற்றடியில் நிக்கிறன்.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
அடுத்த நாள் காலை 6 மணிக்கே எழும்பி ஆளாளுக்கு அதை எடு இதை எடு என்று ஒருமாதிரி தயாராகிவிட்டோம்.இறங்க முதல் வயிறு முட்ட ஒரு பிடிபிடித்தால்த் தானே போற இடங்களில் நிமிர்ந்து நிற்கலாம்.ஆனாலும் 7 மணிக்குத் தான் திறப்போம் என்று அறிவித்தல் வேறு தொங்குது.ஒரு மாதிரி காலைச் சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு லேசான பனிப் பொழிவுக்குள் புறப்பட்டோம். நேரம் போகபோக பனி கொஞ்சம் கூடுதலாக கொட்டத் தொடங்கியது.ஒரு 15-20 நிமிட ஓடிய பின்பு ஒரு சிகப்பு வெளிச்சத்தில் நின்றோம்.அதில் வலது பக்கம் திரும்ப வேண்டும். கொஞ்சம் ஏற்றமாகவும் இருந்தது. பச்சை விளக்கு வந்தவுடன் வலது பக்கம் திருப்பி 25 யார் போகவில்லை சில்லு சுத்த தொடங்கிவிட்டது.மருமகன் தான் சாரதி.நான் இறங்கி பின்னால் நின்ற வாகனங்களை சுற்றிப் போகுமாறு கையைக் காட்டினேன்.பின்னுக்கு நின்ற வாகனங்கள் 4 சில்லும் பிடித்தமான வாகனங்கள் அல்லது சக்கரங்களுக்கு சங்கிலி போட்டிருந்தனர்.எங்களை பரிதாபமாக பார்த்துக் கொண்டு போனார்கள். இயன்றளவு முயற்சிகள் செய்தும் ஒரு சாண் கூட முன்னேற முடியவில்லை.சரி பின்பக்கம் எடுத்தால் சுலபமாக போகும் எனவே முதலில் கொஞ்சம் கரைக்கு எடுத்து விடுவோம் என்று நான் சைகை காட்ட மருமகன் கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்கெடுத்தார். இப்படி எவ்வளவு நேரம் தான் நிற்பது வானுக்குள் சங்கிலி இருக்கிறது எடுத்து போடுவோமா என்று மருமகன் கேட்டு பதிலுக்கு காத்திராமல் தானே இறங்கி சங்கிலியை எடுத்துவந்தார்.ஆனால் இதுவரை அவரோ நானோ வாகனத்துக்கு சங்கிலி போட்ட அனுபவம் இல்லை. அரை மணிநேரமாக சங்கிலியை போட முயன்றும் போட முடியவில்லை.எனது கால் பகுதி முழுவதும் பனிக்குள் நனைந்து விறைக்கத் தொடங்கிவிட்டது.சங்கிலி இந்த வானோடு வந்ததா என்று கேட்க இல்லை இது எமது காருக்கு வாங்கியது என்றார்.அதோடு கதை கந்தல். பனி பொழியும்.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
ஓம் அக்கா.மகள் இடம் மாறுகிறா.புதிய இடத்தில் இணைய வசதிகள் இன்னும் இல்லை.இப்ப தான் வேலை நடக்குது.சிலவேளை இன்று சரிவரலாம். தொடர்ந்து பனிக்குள் நின்றால் விறைத்துப் போவீர்கள் தானே.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
முதல் ஆள் பாத்திரம் இல்லாததால் சாப்பாடு கொடுக்கப்பட மாட்டாது.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மேலே இணைத்த பாடல்கள் அருமை.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
பனிப் பொழிவு 2 காலை 8 மணிக்கு இறங்க வேண்டும் என்று சொன்னாலும் 10 மணிக்குத் தான் இறங்க முடிந்தது. ஏறத்தாள 3 மணிநேர பயணம்.பிள்ளைகளுடன் போவதால் நின்றுநின்று போக வேண்டும்.மதியம் சாப்பாட்டுக்கு வேறு நிற்க வேண்டும். புறப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே பேத்திக்கு பம்பஸ் மாற்ற வேண்டும் என்று ஒரு கோப்பிக் கடையில் நிற்பாட்டினார்கள்.கோப்பிக் கடையில் பிள்ளைகளுக்கு டோநட்டும் கோப்பியும் வாங்கினார்கள்.எனக்கு எப்போதும் கோன்மபின் சாப்பிடவே விருப்பம்.எந்தநாளும் என்றில்லை இப்படி எங்காவது போனால் விரும்பி சாப்பிடுவது இதைத் தான். அங்கிருந்து புறப்பட்டு சக்கரமன்ரோ பகுதியில் மதியம் சாப்பாடு.நிறைய கூட்டமாக இருந்தது.இவர்கள் கொஞ்சம் முதலே முன்பதிவு செய்தபடியால் சுலபமாக உள்ளே போய்விட்டோம்.சாப்பாடு கொண்டுவர தாமதமாகி விட்டது. கூட்டத்தைப் பார்த்து இதை எதிர்பார்த்தது தான்.சாப்பாடு திறமாக இருந்தது. சக்கரமன்ரோவில் காலநிலையும் நன்றாகவே இருந்தது.இன்னும் ஒன்றரை மணிநேரம் ஓடினால் கொட்டேலுக்கு போய்விடலாம் என்றார்கள்.போகப் போக வழி நெடுகலும் ஏற்கனவே பனி கொட்டிக் கிடக்கிறது.இரு பக்கங்களிலும் பெரிய மலைகள்.அனேகமானவை பனி படிந்து போயிருந்தது. ஒருசில இடங்களில் மக்கள் பனியில் சறுக்கி விளையாடுவதையும் கேபிள் கார்கள் மக்களை சுமந்து மேலே கூட்டிச் செல்வதையும் தூரத்தே காண முடிந்தது.இப்படி தான் நாங்களும் நாளைக்கு போகப் போகிறோம் என்று சொன்னார்கள்.நாளை நடக்க போவதை தெரியாமல் ரசித்துக் கொண்டே வந்தோம். நாங்கள் போனநேரம் ஏற்கனவே விளையாடி முடிந்து மூட்டை முடிச்சுக்களுடன் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.எமக்காக ஒதுக்கப்பட்ட அறையில் எமது சாமான்களை வைத்துவிட்டு மகளும் மருமகனும் வெளியே போய் சுற்றி பார்க்க போனார்கள்.பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்களுடன் நாமும் படுத்து தூங்கவிட்டோம். பிற்பகல் 5 மணி போல் இரவு சாப்பாட்டுக்காக நடந்தே போனோம்.சாப்பாடு மதிய சாப்பாடு போல இருக்கவில்லை.மனைவியும் நானும் வேளைக்கே சாப்பாட்டை முடித்து பக்கத்தில் இருந்த கடையில் நொறுக்குத்தீனி என்று சிப்ஸ் பிஸ்கட் என்று கூடுலாகவே வாங்கி வந்தோம்.அடுத்த நாள் இது தான் சாப்பாடு என்று யாருக்கு தெரியும். மீண்டும் கொட்டேலுக்கு வர 8 மணி ஆகிவிட்டது.நாளைக்கு நிறைய பனி பொழியப் போகுது.அதற்கு முதல் போய் விளையாடிப் போட்டு வர வேண்டும்.7 மணிக்காவது இறங்க வேண்டும் என்று அடுத்த நாள் போடுற உடுப்புகள் எல்லாம் இப்பவே எடுத்து வையுங்கோ என்று அவரவர் உடுப்புகளை எடுத்து வைத்துவிட்டு 9 மணிக்கே படுக்கைக்கு போய்விட்டோம். பனி பொழியும். இப்ப இந்த உடைக்காரருக்கும் இடைஇடை அடி விழுகுது. இது தேவையா? பனியில் நனைய தயாராகுங்கள். இதுவும் ஒரு அனுபவம் தான்.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
பாம்பின் கால் பாம்பறியும்.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
குளிர் காலங்களில் இந்த இடத்து மலைகளில் படிந்திருக்கும் பனிகள் தான் போடை காலத்தில் கரைந்து காய்ந்து போயிருக்கும் இடங்களுக்கு உயிரூட்டுவதாக சொல்கிறார்கள். கோடை காலத்தில் பனிகள் கரைந்த பின்பு மலை ஏறுவதற்கென்றே பலர் வருவதாக சொல்கிறார்கள். மொத்தத்தில் 365 நாளும் இந்தப் பகுதி ஒரே கொண்டாட்டம் தான். நுணா நீங்களும் இங்கு கும்மாளம் அடித்திருக்கிறீங்க போல. அக்கா காய்ச்சல் தடிமன் வரப்போகுது. புங்கை இந்த படத்தைப் பார்த்த மகன் என்ன ஜெயிலில் இருந்து தப்பி வந்த மாதிரி இருக்கு என்றான்.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
கடந்த மார்கழியில் மகள் குடும்பத்தை பார்க்க சன்பிரான்சிஸ்கோ போயிருந்தோம். வழமையை விட கூடுதலான மழையாக இருந்தது.கலிபோர்ணியா மழை இல்லாமல் தண்ணீர் இல்லாமல் அழியப் போகுது என்று தொலைக்காட்சி பத்திரிகை செய்திகள் பல மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். இங்கு கூடுதல் மழை பெய்தால் மண்சரிவு ஏற்பட்டு அதனால் உயிர்ச் சேதம் பொருள் சேதம் என்று பல அழிவுகளை சந்திக்க வேண்டும். கலிபோர்ணியாவின் புவியியல் அமைப்பே சற்று வித்தியாசமானது.சமசீரான நிலங்களைக் காண்பது மிகவும் அரிது.மலைப் பிரதேசங்களை கூடுதலாக உள்ளடக்கியதே இந்த மாநிலம். இந்த புது வருடத்துக்கு பனிமலையில் சறுக்கி விளையாடப் போகிறோம் என்று மகள் சொன்னா.மகளும் கணவரும் ஒவ்வொரு வருடமும் பனியில் சறுக்கி விளையாட போவார்கள்.நீங்களும் சறுக்கி விளையாட போறீங்களோ என்று எம்மையும் கேட்டா.வேண்டாம் வேண்டாம் நாங்கள் பிள்ளைகளை பார்க்கிறோம் நீங்கள் விளையாடிப் போட்டு வாங்கோ என்று மறுத்துவிட்டோம். அவர்கள் வருடாவருடம் Tahoe என்ற இடத்துக்கு பனியில் சறுக்கி விளையாட போவதால் அதற்கேற்ற உடுப்புகள்,தண்ணீர் போகாத சப்பாத்து ,கையுறை என்று எல்லாமே வைத்திருக்கிறார்கள்.இப்போ நாங்களும் சேர்ந்து கொண்டபடியால் எங்களுக்கும் குளிருக்கு உடைகளும் தண்ணீர் போகாத கையுறையும் வாங்கினார்கள்.பின் விபரீதம் தெரியாமல் சப்பாத்தை ஏன் வீண்காசு என்று மறுத்துவிட்டேன். இந்த உடுப்பு பார்வைக்கு சாதாரணமாக இருந்தாலும் மிகவும் பாரமானதும் தடிப்பம் கூடியதும் ஆகும்.எவ்வளவு குளிரிலும் நம்பி போட்டுக் கொண்டு போகலாம். மூன்று நாள் கொட்டாட்டம் என்று புதுவருடத்துக்கு முதல்முதல் நாள் பெட்டி படுக்கைகளுடன் ஏற்கனவே பதிவு செய்த கொட்டேலை நோக்கி பயணம் தொடங்கினோம்.மகளும் கணவரும் சகலதையும் பொறுப்பெடுத்து செய்ததால் நான் எங்கு போகிறோம் காலநிலை என்ன எதுவுமே பார்க்கவில்லை.வழமையில் இப்படியான பயணங்கள் என்றால் அதுவும் குழந்தைகளுடன் போவதென்றால் போகிற வழியில் இருந்து நாங்கள் போய் நின்று திரும்ப வரும்வரை காலநிலை பாதுகாப்பு எங்கெங்கே வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று அட்டவணையே போட்டுவிடுவேன். இந்த தடவை அப்படி எதுவும் செய்யாததன் விளைவை பின்னர் அனுபவிக்க நேரும்போது தான் உணர்ந்தேன். பனி பொழியும்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
பெண் குரலில் பேசினால்த் தான் அலுவல் நடக்கும் போல.