Everything posted by ஈழப்பிரியன்
-
அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது.
இந்த வரிகளை உயர்த்தினால் இதைக் கட்டப் போவது மக்கள் தானே?
-
அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது.
DUBAI, United Arab Emirates (AP) — Saudi Arabia’s crown prince said the kingdom wants to invest $600 billion in the United States over the next four years, comments that came after President Donald Trump put a price tag on returning to the kingdom as his first foreign trip. https://apnews.com/article/saudi-arabia-us-investment-trump-6730a89f93b44ed8d705638f95700cbb எப்படி? ஐப்பான் வங்கி 100 பில்லியன் சவுதியும் எத்தனையோ பில்லியன் என்று சிகப்பு கட்சி ஒரே கொண்டாட்டமாக இருக்கிறார்களே. Japanese tech conglomerate SoftBank plans to invest $100 billion in the U.S. and create 100,000 jobs in artificial intelligence and technology, President-elect Donald Trump announced Monday at Mar-a-Lago alongside SoftBank CEO Masayoshi Son https://www.cbsnews.com/news/trump-says-japanese-softbank-to-invest-100-billion-in-us/ இத்தனைக்கும் யப்பான் படுமேசமாக போய்க் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.
-
அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது.
குடியேற்றவாசிகளைத் திருப்பி வெனிசூலாவுக்கு அனுப்பிய விமானத்தை வெனிசூலா தரையிறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது. The president announced ‘emergency 25% tariffs’ after planes of undocumented migrants were not allowed to land in the country ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் விமானங்கள் நாட்டில் தரையிறங்க அனுமதிக்கப்படாததை அடுத்து ஜனாதிபதி ‘அவசரகால 25% கட்டணங்களை’ அறிவித்தார். ntவெனிசூலாவுக்கு ஆப்பு இருக்கு.
-
ஒன்ராறியோ வாழ் உறவுகளே 200$ கிடைத்ததா?
பையா 200 டாலரை அமெரிக்கா கொடுக்கவில்லை. ஒன்ராறியோ அரசே கொடுக்கிறது.
-
யாழ்ப்பாணத்தின் மிகஉயரமான கட்டிடத்தின் பெயரை ஏன் மாற்றினார்கள்? நிலாந்தன்.
இன்றுவரை இந்த பெயர் மாற்றத்துக்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்று மர்மமாகவே இருக்கிறது. இதுவரை சகல அரசியல்வாதிகளும் பெயர் சொல்லக் கூடியவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்று அனுரா சொன்ன ஞாபகம். ஒருவேளை இவர்களுக்கான கொடுப்பனவுகளை சுமந்திரனே செய்கிறாரோ?
-
பலாலியில் உள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்தில் அஞ்சலி!
பாகிஸ்தானுடனான போரில் இறந்த இந்திய ராணுவத்தினரை விட புலிகளுடனான சண்டையில் இறந்த இந்திய ராணுவத்தினர் அதிகம் என்கிறார்கள்.
-
பாட்டுக் கதைகள்
எனக்கும் இப்படியான எண்ணம் வந்தது. ரசோதரன் யாழுக்கு கிடைத் பொக்கிசம்.
-
பாட்டுக் கதைகள்
"சித்திர செவ்வானம் சிரிக்கக் கண்டேன்" 78 இல் வந்த பாட்டு.அந்தநேரம் வெளிநாடு போகவென்று யாழும் கொழும்புமாக அலைந்த நேரம். மனைவி வீட்டுக்கு போய் எல்லோருக்கும் சேர்த்து போய்வருகிறேன் என்று சொல்ல போவேன். சிலவேளைகளில் இந்த பாட்டை ஒலிபரப்புவார்கள். எனக்காகவே ஒலிபரப்புவது போல ஒரு பிரமை.
- பாட்டுக் கதைகள்
-
இலங்கையில் செல்போன் வாங்க புதிய விதிகள் - பதிவு செய்யப்படாத போன்கள் 28ஆம் தேதிக்குப் பிறகு என்ன ஆகும்?
தகவலுக்கு மிகவும் நன்றி ஏராளன். இலங்கை போகிறவர்களுக்கு இது மிகவும் தேவையான பதிவு.
-
அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது.
The Trump administration has deported fewer overall people than were deported under former President Obama despite the ongoing crackdown on immigrants without legal status, according to the Washington Post. While the Obama administration deported 1.18 million people in his first three years, the number of deportations has been a little under 800,000 so far under Trump, according to the Post. The Obama administration also deported 409,849 people in 2012 alone, while the Trump administration has yet to deport more than 260,000 people in a year, the Post reported. The Post noted it was unclear why there have been fewer deportations under Trump ஒபாமா சத்தமில்லாமல் லட்சக் கணக்கான குடியேறிகளை திருப்பி அனுப்பியள்ளார். ரம் கோழி மாதிரி ஒரு முட்டுவிட்டு கொக்கரித்து உலகத்துக்கே தெரியப்படுத்தும். https://docs.house.gov/meetings/GO/GO00/20200109/110349/HHRG-116-GO00-20200109-SD007.pdf
-
பணயக் கைதிகளாகயிருந்த 4 இஸ்ரேலிய இராணு வீராங்கனைகளை விடுதலை செய்தது ஹமாஸ்
இவர்களைப் பார்த்தா பணயக்கைதிகள் மாதிரி தெரியலையே. ஒலிம்பிக் மெடல் வென்றவர்கள் போலல்லவா இருக்கிறார்கள். வாடிவதங்கிப் போய் வருவார்கள் என்று தான் எண்ணியிருந்தேன்.
-
"கால மாற்றத்தில் காணாத புள்ளினம்"
அருமையான கவிதை தில்லை.
-
அமெரிக்காவில் தீவிர பனிப்புயல்: 13 பேர் உயிரிழப்பு
தெற்கு மாநிலங்களில் இப்போது சிறிது காலமாக குளிர் பனி என்று கஸடப்படுகிறார்கள். இங்குள்ள பல பழைய வீடுகள் குளிருக்கு ஏற்ற மாதிரியாக கட்டப்படவில்லை.பல வீடுகளில் வீட்டை வெப்பமேற்றவே முடியாது என்கிறார்கள். இந்த மாநிலங்களில் ஒரு அங்குலத்துக்கு குறைவான பனி விழுந்தாலே State of Emergency எல்லாமே மூடிவிடுவார்கள். பனி கொட்டினால் அதை துப்பரவாக்கும் இயந்திரங்களோ உப்போ அங்கு கடையாது. இதை என்கிறார்கள்.எமது தலைவர் ரம் இல்லை என்கிறார். The 2024 Atlantic hurricane season was a very active and extremely destructive Atlantic hurricane season, producing 18 named storms, 11 hurricanes, and 5 major hurricanes; it was also the first since 2019 to feature multiple Category 5 hurricanes. புளோரிடா,அலபாமா ,ரெக்சாஸ் ஊடாக வரும் புயல் மத்தியிலுள்ள மாநிலங்களை வருடாவருடம் தாக்குகிறது.பல கோடி சொத்துக்கள் அழிகின்றன.மக்களும் இறக்கிறார்கள்.
-
ஒன்ராறியோ வாழ் உறவுகளே 200$ கிடைத்ததா?
என்ன அல்வாயன் நீங்க மட்டும் தான் சாத்திரியாரா? பணம் கிடைத்ததோ?கிடைக்கும் கிடைக்கும்.
-
இலங்கையில் செல்போன் வாங்க புதிய விதிகள் - பதிவு செய்யப்படாத போன்கள் 28ஆம் தேதிக்குப் பிறகு என்ன ஆகும்?
நான் ரீ மோபில் TMobile மூலமாக பாவிக்கிறேன்.எனக்கு உலகம் முழுவதும் போன் வேலை செய்யும்.இலவச ரெக்ஸ் மெசேச்சும் இருக்கிறது. இனிமேல் நான் இலங்கை போகும் காலங்களில் எப்படி கை தொலைபேசியை பாவிக்கலாம். இப்போதுள்ளது குடும்பத்திற்கு (7 லைன்)பாவிக்கிறோம். பிள்ளைகள் AT&T பாவிக்க விரும்புகிறார்கள்.இது கனடா மெக்சிக்கோ தவிர மற்றைய நாடுகளுக்கு பணம் கூடுதலாக கட்ட வேண்டும். இலங்கை போனால் ஈ சிம்காட் விமானநிலையத்தில் எடுக்கலாமா?இங்கு கூடுதலான கட்டணம் அறவிடுவார்களா? இதுவரை சிம்காட்டே மாற்றியதில்லை. ஈசிம்காட் எப்படி மாற்றுவது?
-
ஒன்ராறியோ வாழ் உறவுகளே 200$ கிடைத்ததா?
காரியம் கைகூடும் நாள் செல்லும். தபால்பெட்டியை பார்த்துக் கொண்டே இருங்கள்.
-
ஒன்ராறியோ வாழ் உறவுகளே 200$ கிடைத்ததா?
அமெரிக்க தலைவர் கனடாவை 51வது மாநிலமாக சேர்க்கலாம் என்று சொன்னதிலிருந்தே கனடாவில் ஏதோ ஒருவரிடம் இருந்து தினம்தினம் ஒவ்வொரு அறிக்கையாக வருகிறது. கடைசியில் ஒருவருடம் முதலே மாநில தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக ஒன்ராறியோ மாநிலத்தவருக்கு 200$ கள் அன்பளிப்பாக கிடைக்கிறது.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
, தலைவர் துக்கம் விசாரிக்க வருகிறாராம். வரவேற்க தயாராக இருங்கள்.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
வணக்கம் இசை இந்தத் திரியிலாவது உங்களைக் கண்டது மிகவும் சந்தோசம். உங்களின் கருத்துக்களைப் பார்ப்பதற்காகவே இந்தத் திரி இன்னும் கொஞ்சம் ஓடட்டும்.
-
நெஞ்சுவலி… அப்பல்லோவில் அன்புமணி
சுகம் பெறட்டும். இந்த நெஞ்சுவலியுடன் பிரிந்திரந்தவர்கள் ஒன்று கூடுவார்கள்.
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
இப்ப பார்த்தா எல்லோருமே இதற்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள். அப்போ யார் தான் இதற்கு அனுமதி கொடுத்தது?
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
அத்தோடு விடவில்லையே.சாதாரண படம் ஓடுவதாக இருந்தாலும் அவர்கள் பச்சைக்கொடி காட்டினால்த் தான் ஓடும். அண்மையில் நடிகர் சித்தார்த்தை எந்தவித காரணமும் இல்லாமல் இடைநடுவில் கூட்டத்தைக் குழப்பி விரட்டுகிறார்கள். ஏன் தமிழ்நாட்டிலேயே நாங்க தாண்டா தமிழ்நாட்டையே ஆழுகிறோம்.உன்னால் என்ன புடுங்க முடியுமோ அதைப் புடுங்கு என்கிறார்கள். சிங்கள தேசத்தில் தமிழர் நாம் எப்படி கூனிக்குறுகி இருந்தோமோ எப்படியே தமிழன் திராவிடம் என்ற போர்வைக்குள் ஒழிந்திருக்கிறான். அடுத்து டாக்ரர் அருச்சுனாவை விசரன் என்று நீங்களும் பலரும் சொல்லிவருகிறீர்கள்.எனக்கும் சிலவேளைகளில் அப்படித் தான் தோன்றும். ஆனால் மாபியாக்களின் கையில் இருந்த சாவகச்சேரி வைத்தியசாலையை உலகத்துக்கு அறியத்தந்தவர்.அத்துடன் இன்று அந்த அவலநிலை குறைந்துள்ளது என எண்ணுகிறேன். அந்த ஒரு செயலுக்காகவே அவரைப் போற்றுகிறேன். எனக்கோ உங்களுக்கோ இங்கே சிலருக்கோ அந்த வைத்தியசாலையைப் பற்றி கவலை இல்லை.தென்மராட்சி மக்கள் இன்றும் அர்ச்சுனாவைக் கும்பிடுகிறார்கள். எல்லோரும் தமிழ்மக்களையே பைத்தியக்காரர் என்று சொல்வது வேதனையாக உள்ளது. அதே போல 2009க்குப் பின் எல்லோரும் பின்வாங்கியிருக்க இன்றும் எமது தலைவரை உயிர்ப்புடன் வைத்திருப்பவர் சீமான் ஒருத்தன் தான். அதற்காக சீமான் மேல் இன்னும் ஒரு மரியாதை உள்ளது. இன்று சீமானை ஏசுபவர்களில் சிலர் எமது தலைவனையும் இதே மாதிரியே கிண்டலடித்தார்கள். இந்தியாவின் எதுவித மாற்றமும் எமது மாற்றமல்ல.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சீமான் ஒருபைசா செலவு செய்யாமலே பிரபலமாகிறார்.(ஆக்குகிறார்கள்) வேடிக்கை மட்டும் பாருங்கள்.