Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இண்டைக்கு நான் தப்பித்தேன். உங்களைத்தான் தோலை உரித்து உப்பு கண்டம் போடப்போகிறார்கள்🤪. #கச்சேரி களைகட்டும்😂
  2. என்னது? பாலஸ்தீன ஆதரவாளர்களா😝. ஜோக் அடியாதேங்கோ அண்ணை. இப்படி எழுதும் ஆட்களில் 90% க்கும் மேல் அக் மார்க் முஸ்லிம் வெறுப்பாளர்கள். அவர்கள் சொந்த நிலத்தில், எங்கள் எதிரியான இந்தியா கஸ்மீரி முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து, அவர்கள் சிறப்புரிமையை மீறி, மாநில அந்தஸ்தை பறித்து, மாநிலத்தை இரண்டாக்கிய போது அதை வரவேற்றவர்கள். ஒரு அப்பாவி முஸ்லிம் பெண்ணின் அபாயாவை இரத்தினபுரியில் காடையர் கழட்டிய போது அதை சரி என வாதாடியவர்கள். உகிர் முஸ்லீம்களுக்கு ஒரு அநியாயமும் நடக்கவில்லை என எழுதியவர்கள். இங்கே பாலஸ்தீனத்துக்கு ஆதரவாய் எழுத ஒரு காரணம் மட்டும்தான். இஸ்ரேலை மேற்கு ஆதரிப்பதே அந்த காரணம். இஸ்ரேலை மேற்கு ஆதரிக்காமல், மேற்கின் இடத்தில் சீனா இருந்திருந்தால்…இப்ப வெட்டடா, கொத்தடா எண்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதி இருப்பார்கள்🤣.
  3. 1. காஸாவில் இருந்து வெளியேறி கொண்டிருந்த சிவிலியன் வாகன தொடரை இஸ்ரேல் தாக்கி குறைந்தது 12 பேர் பலி 2. துருக்கி தொலைகாட்சியில் பேசிய முன்னாள் ஹமாஸ் தலைவர் “எமக்கு சிவிலியன்களும், ஆமியும் ஒன்றுதான்” என கூறி ஹாமாசின் அண்மைய தாக்குதல் நியாயப்படுத்தியுள்ளார்.
  4. பிரித்தானியாவில் வாக்குரிமை தனியே பிரித்தானிய பிரஜைகளுக்கு மட்டும் அல்ல, சகல பொதுநலவாய நாட்டு பிரசைகளுக்கும் உண்டு. பிரித்தானியாவில் வாழும் ஒரு பொது நலவாய பிரசையும் தேர்தலில் வாக்களிக்கலாம். நிற்க, இது இன்றைய நிலை. போன வருடம் வரை பிரித்தானியாவில் வாக்களிக்க போகும் போது வாக்காளர் அடையாளம் காட்டும் தேவையில்லை. வாக்காளர் டாப்பில் பெயர் இருந்தால் - கையை விசுக்கி கொண்டு போய் தரும் சீட்டை வாக்கி, பென்சிலால் ஒரு கீறை போட்டு போய்கொண்டே இருக்கலாம். இப்போ சட்டத்தை மாற்றி இது கட்டாயம் என ஆக்கி உள்ளார்கள். இதை செய்யும் அளவுக்கு வாக்கு களவு ஒண்டும் நடக்கவில்லை. ஆனால் அடையாள ஆவணங்களை வைத்திராமல் இருப்போர் யார்? அடிமட்டத்தில் இருப்போர், சிறுபான்மையினர், பொருளாதார ரீதியில் நலிவுற்றோர், மற்றும் ஏற்கனவே வாக்கு போட பஞ்சிபடும் இளையோர் - இவர்கள் அட்டை இருந்தாலும் அதை எடுத்து போகும் அலுப்பில் போகாமலே விட கூடிய ஆட்கள். இப்படியானவர்களின் வாக்கு தொழிற்கட்சிக்கே கிடைக்கும் (அநேகம்). இதை குறைக்க பழமைவாதிகள் கொண்டு வந்த சட்டம்தான் இந்த கட்டாய அடையாள ஆவணம் கோரும் சட்டம். ஒரு கோழியை உரிக்க பல வழிகளுண்டு (ஆங்கில பழமொழி there are many ways to skin a cat - அப்படியே எழுதினால் @Eppothum Thamizhanடென்சன் ஆகி விடுவார்😝). வெளிப்படையாக இன்ன இனம் அல்லது மதம் சார்ந்தோருக்கு வாக்குரிமை இல்லை என ஆக்க தேவையே இல்லை. பயங்கரவாதத்தை பெருமையாக கூறல் (glorifying terrorism) எனும் குற்றத்தை செய்வோருக்கு வாக்குரிமை இல்லை என ஒரு சட்டம் கொண்டு வந்தாலே போதும். தவிரவும் ஒரு சில கவின்சில் வார்டுகளை தவிர - லண்டன் மேயர் கான், ஸ்காட்லாந்து முதல் மந்திரி யூசூப், முன்னாள் நிதி மந்திரி ஜாவிட் போன்றோர் முஸ்லிம் வாக்குகளாலேயே வென்றனர் என்பது தவறு. இவர்களுக்கு வாக்களித்தோரில் அறுதி பெரும்பான்மையினர் முஸ்லிம் அல்லாதோரே. ஜாவிட்டின் பொம்ஸ்குரொவ் மத்திய இங்கிலாந்தில் இருக்கும் வசதியான வெள்ளையர் அதிகம் இருக்கும் தொகுதி. அதேபோல சுனாக்கின் ரிச்மண்ட் தொகுதி வட இங்கிலாந்தில் உள்ள இன்னுமொரு வசதி படைத்த வெள்ளையர் வாழும் தொகுதி. ஆகவே இப்போதும் கூட வெள்ளை இனத்தவர் அல்லாதோர் வெல்வது வெள்ளை இனத்தவர் வாக்கு போடுவதாலே. நான் எதிர்வு கூறும் நிலை வரின், இப்படி நடவாது. அதாவது ரிசிக்களும், சுவேலாக்களும், பிரீதிகளுக்கும் தொடர்ந்து போடுவார்கள் - ஆனால் ஜாவிட்களையும், கான்களையும் ஒதுக்கி விடுவார்கள். இன்னொரு விடயம் இங்கே இப்போ உள்த்துறை அமைச்சர் ஒரு ஆசியர். அதாவது தமிழ் தாய்+கோவா தந்தை. பிறப்பு இங்கே. மிக கடுமையான வலதுசாரி, இஸ்ரேலிய ஆதரவாளர். குடியேற்றவாசிகள் தொடர்ந்தும் வருவதை எதிர்ப்பவர். நான் மேலே வரவிருப்பதாக சொல்லிய சட்ட மாற்றங்கள் இவர் சொல்லியே ஆலோசிக்கப்படும். ஆகவே எல்லா வெள்ளை இல்லாதவரையும் ஒரே சட்டியில் போட்டு வறுக்க மாட்டார்கள். எல்லா இஸ்லாமியரையும் கூட இல்லை. ஆனால் ஆய் ஊய் என கத்துபவர்கள், போராடுபவர்கள், யூதரை தொந்தரவு செய்வோர், பலஸ்தீனுக்கு நிதி சேகரிப்போர், சமூக வலைதளங்களில் எழுதுவோர் - கண்காணிக்கப்படுவாகள். இப்படியான சிலரை காத்திருந்து வெளிநாடு போன பின், பாஸ்போர்ட்டை பறித்து நடு தெருவில் விட்ட சம்பவங்கள் ஏலவே நடந்துள்ளன. இங்கே மதத்தை விட ideology தான் முக்கியம். ஜனநாயக தாராளவாதமா அல்லது அடிப்படை இஸ்லாமியவாதமா என்பதே கேள்வி. இந்த மோதலில் ஆரம்ப கட்டம் இப்போ. காலம் போக போக இது வலுப்பெறும். அப்போ ஜனநாயக சிஸ்டத்தில் இருந்து கொண்டு, அது கொடுக்கும் மட்டுபட்ட சுதந்திரம், மனித உரிமையை பயன்படுத்தி, அதையே தாக்க விடமாட்டார்கள்.
  5. இதை மிக இலகுவாக ஏனையோரை பதப்படுத்தல் மூலம் மாற்றலாம். வேறு ஒரு விடயத்துக்காக இப்படியான பதப்படுத்தல் பிரெக்சிற்றில் வெற்றி பெற்றது. இந்த டிவீட்டில் உள்ளது ஒரு சின்ன non scientific பரிசோதனை. ஆனால் இது வரலாற்றில் அடிக்கடி நடக்கும் ஒன்றே.
  6. ஹம்சா யூசூபின் மாமியாரின் செய்தி. இவர் ஒரு ஓய்வு பெற்ற தாதி, டண்டி யை சேர்ந்தவர்.
  7. யூகே யின் மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கையே 4.5 % க்கும் குறைவு. ஆகவே முஸ்லிம் அல்லாத வாக்காளர் “பதப்படுத்த” படும் போது இதை ஜனநாயகத்திலேயே செய்யலாம். இது கட்டம் கட்டமாக நடக்கும். ஆரம்பத்தில் ஒரு குழுவை தனியே அடையாளப்படுத்தி நடக்காது. ஆனால் பின்பு நடக்கும். ஜேர்மனியில் யூதர்கள் நாட்டின் ஜனநாயக தேர்தலில் வாக்களிக்கும் பிரஜைகள் என்ற நிலையில் இருந்து வதைமுகாம்களுக்கு அனுப்பபடும் நிலை வந்தது சில வருடங்களில். இப்போ இதை வாசிக்க ஏதோ தீர்கதரிசன வாக்கு போல தெரியலாம்…ஆனால் the tends are already showing.
  8. முன்னரும் யாழில் இதை நான் எழுதினேன். அடுத்த உலக யுத்தம் மத அடிப்படையில்தான் அமையும். அதாவது இஸ்லாமியர் எதிர் ஏனையோர் என்பதாக. அண்மையில் பேகம் வழக்கில் இங்கே பிறந்து வளர்ந்த ஒரு பங்களாதேச பெண்ணை - இந்த நாட்டின் குடி இல்லை என ஆக்கினார்கள். ஐசில் உடன் போய் சேர்ந்தார் என. ஹை கோர்ட்டும் கை விரித்து விட்டது. இப்படியான நிலை எல்லாம் 10 வருடம் முன்பு கூட நினைத்து பார்க்கவியலாதது. கொஞ்சம் கொஞ்சமாக மேற்கில் இஸ்லாமியரின் மீதான பிடி இறுகிறது. சட்டம் என்பது பாராளுமன்று நினைப்பதுதான். மிக இலகுவாக மாற்றலாம். பாராளுமன்றும், பெரும்பான்மையும் விரும்பினால். எமது வாழ்நாளில் இந்த போரை நாம் சிலவேளை காணாமல் போகலாம்…ஆனால் மேற்கை பொறுத்தவரை இந்த நிலை எடுப்புக்கு மாறான ஆட்கள் இந்த நாடுகளில் இருந்து வெளியேற்றபடுவது கட்டம் கட்டமாக ஆரம்பித்து விட்டது. ஒரு கட்டம் வரை சட்டப்படி இது நடக்கும். போர் காலம் நெருங்க இது சட்டத்துக்கு புறம்பான வழிகளிலும் நடக்கும்.
  9. முழு அளவிலான தரை வழி படை எடுப்புக்கு முன்னோட்டமாக இஸ்ரேலின் விசேட படைகள் காஸாவில் நுழைந்துள்ளனவாம்.
  10. சீமட்டிக் மக்கள்-எதிர் நடவடிக்கையில் ஈடுபடும், அல்லது ஹமாசை புகழும் வெளிநாட்டவர் (மாணவர், வேலையாட்கள், அறிவுசார் சமூகத்தினர்) நாட்டில் இருந்து வெளித்தள்ளப்படுவார்கள் என்பதாக சட்டத்தை மாற்றும் திட்டம் யூகேயில் தயாராகிறதாம்.
  11. தமிழர்கள் யூதர்கள் மட்டும் இல்லை. பலஸ்தீனியர்களும் கூட இல்லை. அவர்களுக்கு ஆபத்து என்றவுடன் அல்ஜசீரா ஓவர் டைம் பாக்குது… ஐநா? இலங்கை சொன்னவுடன் பெட்டி கட்டி கிளம்பிய ஆட்கள்…இப்போ வெளியேறும் உத்தரவை மீளப்பெற இஸ்ரேலை நெருக்குகிறது. ஐ சீ ஆர் சி… முஸ்லிம் நாடுகள்… வத்திகான்… HRW… Amnesty International …. எல்லாரும் மற்ற பக்கம் திரும்பி நிண்ட ஆக்கள்தான். யூதன்/ பஸ்தீனியன் என்றால் உயிர், தமிழன் என்றால் ம**. இதை சொல்வதால் இந்த பிணக்குகளில் அவலம் வர வேண்டும் என்பதல்ல. நாம் எல்லாராலும் வஞ்சிக்கப்பட்டோம் என்பதை நினைவு படுத்தவே. இதில் அவன் பெரிது இவன் சிறிது என்று எதுவும் இல்லை.
  12. ஓம். அப்போ இதையும் நான் சொன்னேன். சரி நேரம் கிடைத்தால் அந்த திரி வருகிறதா என தேடிப்பார்க்கிறேன்.
  13. ஓம் இது சரி. இதைத்தான் நான் அப்போதே சொன்னேன். ஆனால் நீங்களோ இல்லவே இல்லை இதன் பெயர் லிபரேசன் ஒப்பரேசன் என்றீர்கள். ஆகவேதான் உங்களிடமே கேட்கிறேன்.
  14. நெடுக்ஸ், அந்த நடவடிக்கையின் பெயர் “ஒப்பரேசன் லிபரேசன்” ஆ, அல்லது “லிபரேசன் ஒப்பரேசன்” ஆ? ஏன் கேட்கிறேன் என்றால் முன்பு ஒரு திரியில் இதன் பெயர்…. லிபரேசன் ஒப்பரேசன் என நீங்களும்… இல்லை ஒப்பரேசன் லிபரேசன் என நானும் விவாதித்தோம்.
  15. தாம் எப்படி பொதுமக்களை கொன்றோம், பாலியல் வன்கொடுமை செய்தோம் என விபரிக்கும் ஹமாஸ் ஆயுததாரியின் வாக்குமூலமாம்.
  16. நாலு சரணடைந்த ஹமாஸ் ஆயுததாரிகளை இஸ்ரேல் சுட்டு கொண்டதாக, கடும் பிரயத்தனம் செய்து ஒரு காணொளியை அல்ஜசீரா வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய IDF இன் X கணக்கு இதை பற்றி எழுதியுள்ளது. இடம், நேரம்தான் சரியாக தெரியவில்லை. ஆனால் கடஞ்சா சொன்னது சரியாகவே படுகிறது.
  17. இது நடந்த இடம் இஸ்ரேல் உள்ளயா? அல்லது காஸாவிலா? ஏன் என்றால் காஸாவுக்குள்ளும் பலர் கொண்டு போக பட்டார்கள் என நினைக்கிறேன். ஓம். நான் எப்போதும் இஸ்ரேல் இதை பாவித்தது என்பதை மறுக்கவில்லை. ரஸ்யாவும் பஹ்மூத் போன்ற மக்கள் வாழும் நகரங்களில் இதை பாவித்தது என்பதே என் கூற்று. HRW மட்டும் அல்ல, ஆம்னெஸ்டி இண்டெர்னேசனலும் இதை உறுதி செய்துள்ளது.
  18. உங்கள் நோக்கம் இது என நானும் கருதவில்லை. ஆனால் நான் அசெளகரியமாக உணர்தேன்.🙏
  19. இஸ்ரேலில் உர்சுலா. காஸா போகவில்லை என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.
  20. சற்று முன் இஸ்ரேலினுள் வீழ்ந்த ஹமாஸ் ரொக்கேட்.
  21. அதே…. அரபாத் காலத்தில் மதச்சார்பற்ற பலஸ்தீன கோரிக்கையை கையாண்டதை விட ஐசில் தனமாக நடக்கும் ஹமாஸ் அதன் வெளிநாட்டு வால்களை கையாள்வது இஸ்ரேலுக்கு இலகு. அதுவும் சீனாவில் போய் செய்துள்ளார்கள் பாருங்கோ. புத்திசாலித்தனத்தின் உச்ச கட்டம். அமெரிக்க செனேட்டர் ரொன் போல் இஸ்ரேல்தான் ஹமாசை உருவாக்கியது என்று பேசியுள்ளார். அப்படியாயின் அவர்கள் கணக்கு நன்றாகவே பலிக்கிறது. பேசியது2009 இல்.
  22. இஸ்ரேல் தூதர ஊழியர் பீஜிங்கில் தாக்கப்பட்டார். இலண்டனில் யூத பள்ளிகள் சில இன்று மூடல். https://x.com/MarioNawfal/status/1712792965314166941?s=20 👆🏼வீடியோ. இளகியமனமிருப்போர் தவிர்க்கவும்.
  23. அராஸ் எனும் பிரெஞ் நக்ரில் இறை கோசத்தை எழுப்பிய படி பள்ளிகூடம் ஒன்றில் ஆசிரியரை குத்து கொன்றுளாராம் ஒருவர். மேலும் இருவர் காயமாம். இன்று வெள்ளி கிழமை ஜும்மாவின் பின் போராட்டங்கள் வலுவாகும் என நம்புகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.