Everything posted by goshan_che
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
மிக சரியான கூற்று. மேலே சொன்ன நல்ல உதாரணங்கள் போல எனக்கு கெட்டதும் நடந்துள்ளது. நானும் உங்கள் நண்பர் போல அலி பாபாவில் போட்டு, பின் இன்னும் இறங்க மேலும் போட்டு இப்போ முழுசி கொண்டு நிக்கிறேன்🤣. அதே போல் ஷிபாவை 8இல் வாங்கி - 23 இல் விற்றேன் (ஏற்கனவே தீர்மானித்த exit plan படி).நான் வித்த பின் அது ஒருக்கா இறங்கி விட்டு, பிறகு 82 வரை போனது! வந்த லாபத்தை நினைத்து சிரிப்பதா, அல்லது இழந்த கொள்ளை லாபத்தை இட்டு அழுவதா என்று தெரியவில்லை🤣. வெற்றியையும், தோல்வியையும் சரிசமமாக நோக்கும் சென் பார்வை கைவரப்பெற்றால் (வருமா தெரியவில்லை) பாதி கிணறு தாண்டியது போல என நினைகிறேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இவர்கள் கூச்சலை கூட கொஞ்சம் பாவிக்கலாம். கூச்சல் peak க்கு போக முதல் விற்றால் கொஞ்சம் லாபம் பார்க்கலாம். ஒரு வருடம் முதல் பிளக் பெரியில் இப்படி கொஞ்சம் செய்தேன். அதே போல் வெள்ளி விலையிலும். ஆனால் அதிக ரிஸ்க் என்பதால் மிக சிறிய தொகையை போட்டு, அதை விட சிறிய தொகையுடன் வெளியேறி விட்டேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Good call. நான் முன்னர் வெளிவந்த நிலைக்கு மேலே இருந்ததால் உள்ளே போக விரும்பவில்லை. தொடர்ந்து உங்கள் கணிப்புகளை பகிருங்கள்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நான் இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்தே வருகிறேன் - இன்னும் ஒரு 3 மாதம் குறைந்தது இழுபடும் போல தெரிகிறது. Howey test எனும் கிரிப்டோவிற்கு முந்திய வழக்கின் அடிப்படையில் XRP கரன்சியா, security யா என்பதே வழக்கின் அடிப்படை தர்க்கம். செட்டில்மெண்டில் அல்லது தீர்ப்பில் XRPக்கு சாதகமானால் - XRP விலை எகிறும், அதே சமயம் கிடைக்கும் legal clarity யால் ஒட்டுமொத்த கிரிப்டோ உலகுக்கும் இது ஒரு பூஸ்டாக அமையும். மறுவளமானால் XRP தரை தட்டும். ஆனால் அவர்கள் இப்போ அமெரிக்காவுக்கு வெளியே இருந்து செயல்படுவதை பற்றி (plan B) சீரியசாக யோசிக்கிறார்கள்.
-
08DD4DD2-1CE1-49C7-9154-65E27779C846.jpeg
From the album: பலதும் பத்தும்
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நன்றி கடஞ்சா. நான் இதுவரை தடுமாறுவது இந்த exit strategy ஐ செட் பண்ணுவதில்தான். சிலதுக்கு (ஒன்றுக்கு) ஒரு விலை நிர்ணயம் வைத்துள்ளேன். அதை அடைந்ததும் 50% ஐ top slice பண்ணுவதாக பிளான். ஆனால் ஏனையவற்றை (கிரிப்டோவும், கரன்சியும்) ஒரு குறித்த விலைக்கு போனதும் மொத்தமாக விற்கும் முறையை கடை பிடிக்கிறேன். ஆனால் கதை விட கீழகண்ட முறை நல்லதாக இருக்குமோ? முதலில் போட்ட முதலை எடுப்பது பின்னர் லாபத்தை ஒவ்வொரு 5% உயர்வுக்கும் கிரமாக எடுப்பது. (கிரிப்டோவில் - எப்போதும் முதலின் 10% ஐ bag carrying இல் வைத்திருப்பது - in case there is a moon shot). இது நல்ல எக்சிட் ஸ்டிரடிஜியா?
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
உங்கள் கோரலை நான் தெளிவாக விளங்கி கொண்டேனோ தெரியவில்லை. அப்படி என்றால். Hospitality, emerging technologies ஐ உள்ளடக்கலாம் என நினைக்கிறேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
@Kadancha @vasee 1. இங்கிலாந்து வங்கி வட்டி வீதத்தை கூட்டும் என எதிர்பார்த்த போதும் கூட்டவில்லை. பொருளாதாரம் இன்னும் மந்த கதியில் இருப்பதாக வங்கி கருதுவது போல தெரிகிறது. 2. TRX 0.1 இல் resistance ஐ support ஆக மாற்றி விட்டதாக கருத இடமுண்டா? 3. LTC யின் ஏற்றம் மகிழ்சியான செய்தி. 800 வரை கோகலாமாம்?
-
3F823C66-09FE-494B-A7A3-208401B01E45.jpeg
From the album: பலதும் பத்தும்
-
4B5E5F37-A005-4CAF-84BA-BA12A7B0605B.jpeg
From the album: பலதும் பத்தும்
-
C733D8AD-52C9-46B5-8E19-BE8775ECA9FC.jpeg
From the album: பலதும் பத்தும்
-
76B27503-A58A-49D2-80A8-7277F7C2158E.jpeg
From the album: பலதும் பத்தும்
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நன்றி வசி. நிச்சயமாக இல்லை. திரி தொடங்கும் போது எழுதிய டிஸ்கிளைமர் ஒவ்வொரு பதிவுக்கும் பொருந்தும்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இது Overbought நிலையா அல்லது Oversold நிலையா ?
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
பெனி ஸ்டோக்ஸ் பற்றியும் உங்கள் தெரிவுகள் பற்றியும் முடிந்தால் எழுதவும்🙏🏾.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நன்றி கடைஞ்ச்சா… அந்த சைட்டில் போய் அவதானிக்கிறேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
யோவ் புலவரே என்னையா இது பொது வெளில வச்சி புரோக்கர் லிங் கேட்கிறீங்க🤣. இப்ப எல்லாமே ஆன் லைனில்தானே. உங்களுக்கு traditional brokers வேண்டும் என்றால் https://www.hl.co.uk Hargreaves Lansdown நல்லம். அவர்களும் ஒன்லைன் அப் எல்லாம் வச்சிருக்கினம். ஆனால் coinbase, binance, eToro போன்றவற்றையும் டிரை பண்ணலாம். புதிதாக தொடங்குபவர்கு நான் etoro வை பரிந்துரைப்பேன். User friendly. கொமிசன் இல்லை. ஆனால் இதை நம்பி ஏமாற வேண்டாம். Spread மிக அதிகமாக இருக்கும். அதாவது ஒரு பங்கின் விலை .10 என்றால் அவர்கள் .11 இல்தான் விற்பார்கள். பங்குகள் ஏறி கொண்ண்டிருக்கும் போது இந்த spread மேலும் அதிகரிக்கும். அதே போல் ஆட்டொமேடிக்கா take profit, stop loss ஐயும் செட் பண்ணவும் கூடும்: அதையும் பார்த்து எமக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும். ஈடோர்ரொவில் 100,000 டாலருக்கு ஒரு விளையாட்டு கணக்கு தருவார்கள். முதலில் அதில் விளையாடி பாருங்கள். அதில் கொஞ்சம் பிடிப்பு வந்ததும் நிஜத்தில் 50$ க்கு செய்து பாருங்கள் அதே போல் copy trading உம் செய்யலாம். அங்கே நல்லா உழைக்கும் ஒருவரை அப்படியே கொப்பி பண்ண ஒரு 1000 டொலரை போடுவது. நீங்கள் ஏதுவும் செய்யவேண்டியதில்லை. அவர் லாபம் என்றால் நீங்களும் லாபம். அவர் நட்டம் என்றால் நீங்களும் நட்டம். அதே போல் binance இல் அடிப்படை கணக்கு, பெரிய லெவலில் செய்பவர் கணக்கு எண்டு இரெண்டு இருக்கு. ஆனால் இது கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச். இங்கே ஸ்டொக் வாங்க முடியாது. மிக முக்கியமாக வாசியுங்கள். வசி தரும் வீடியோக்கள் போல தேர்ந்து எடுத்து பாருங்கள். ஒரு நிறுவனத்தை பற்றி முழுமையாக ஆராயுங்கள். கிரிப்டோவில் முதலில் mining என்றால் என்ன, proof of work என்றால் என்ன போன்ற அடிப்படைகளை விளங்கி கொள்ளுங்கள். நாம் மைன் பண்ணும் அளவுக்கு தேவையில்லை ஆனால் அடிப்படை விளங்கினால் நல்லம். அதே போல் மேலே எழுஞாயிறு சொன்ன tether பற்றியும் அறியுங்கள். பாய்ஸ் படத்தில் செந்தில் சொன்னது போல knowledge is wealth. அதை அடைந்து கொண்டால் பின்னர் அதை காசக்குவது அவ்வளவு கடினமாக இராது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
வீடு லண்டன் நிலவரத்தை சொல்கிறேன். நீங்கள் மிக மட்டமான ஏனெஜ்சியிடம் போகதவரைக்கும் இப்படி நடக்க குறைவு. ஏற்கனவே இந்த துறையில் வீடு வாடகைக்கு விட்டு இருப்பவர்கள் நிச்சயம் ஒரு நல்ல எஸ்டேட் ஏஜெண்டை பரிந்துரைப்பார்கள். சிலர் rent guarantee அதாவது வாடைக்கு ஆள் வருதோ இல்லையோ ஏஜென்சி வாடகை தரும் என்ற ஏற்பாடும் தருவார்கள். ஆனால் அப்படியானவர்களின் கொமிசன் அதிகமாய் இருக்கும். அது உங்களுக்கு சரி வராவிடில் லோக்கல் கவுன்சில்கள் உங்களிடம் வீட்டை வாடைக்கு எடுக்க தயாராய் இருப்பார்கள். ஆனால் அவர்கள் தரும் வாடகை மாக்கெட் ரேட்டில் 10% அளவில் குறைவாய் இருக்கும். அவர்கள் கொண்டு வரும் ஆட்களும் குழப்படிகாரராய் அமையலாம். ஆனால் ஏஜெண்ட் பீஸ் இல்லை, நீண்டகால rent guarantee மற்றும் சில கவுன்சில்களில் வீட்டை வாடைக்கு விட முன் திருத்தி எடுக்க grant உம் கிடைக்கும். ஊருக்கு போவதாகின் மிக நல்ல ஐடியா நீங்கள் செய்ய நினைப்பது. எனக்கு தெரிந்த பலர் வாடைக்கு விட்டு விட்டு அமெரிகா, இலங்கை, அவுஸ், ஸ்பெயின் போயுள்ளார்கள். எப்போதும் வீடு நல்ல கொண்டிசனில், வாடைக்கு கிராக்கி உள்ள இடத்தில் இருந்தால் - கவுன்சிலிடம் போகாமல் எஜென்சி மூலம் கொடுப்பது லாபம். ஆனால் வருடம் அல்லது இரெண்டு வருடம் ஒரு முறை வந்து பாக்கிற மாரி இருங்கோ. எப்பவும் உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை. தவிரவும் மருத்துவ இதர செலவுக்கு இலங்கையில் காசில்லை என்றால் நாயும் சீண்டாது. ஆகவே எப்போதும் அடுத்த பிளேன்னில் ஏற தயாராகவே அங்கே போக வேண்டும் என்பது என் கருத்து. நான் 80 (இருந்தால்) க்கு மேல் ஊரில் இருக்க விரும்பமாட்டேன். கேர் ஹோமில் இருந்து யாழில் வந்து அறழை கதையள் கதைக்க வேண்டியதுதான் (இப்பவே அதுதானே🤣).
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நன்றி. இந்த மெழுகுதிரியை எப்படி பார்ப்பது என்பதை யாராவது எளிய முறையில் விளங்க படுத்தினால் நல்லம். எல்லாம் தியரியை வாசிக்கும் போது விளங்குது ஆனால் அதை வைத்து கணிக்கும் போது சரியாக வருவது கஸ்டமாயிருக்கு. TRX 0.15 வரை போக கூடும் என்கிறார்கள். Take profit, stop loss போட்டு விட்டு பார்த்து கொண்டிருக்கிறேன்😎. பிட்காயினிலா போட்டனிங்கள்?
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
எனது அனுபவத்தின் அடிப்படையில் CFD யில் கவனமாக இருக்கிறேன். CFD முறையில் ஈடுபடும் 70% என் போன்ற சில்லறைகள் (அட அதான் retail investors🤣) நட்டம் அடைவதாக பேச்சு. யூகேயில் கிரிப்டோவை CFD யில் வாங்க முடியாது. போன வருடம் சம்மர் டைம் அரசு இந்த கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. Commodities இல் ஏனைய பங்குகளில் CFD செய்யலாம். இணைப்புக்களுக்கு நன்றி. வாசிக்க/பார்க்கவே லீவு எடுக்க வேணும் போல இருக்கு🙏🏾. எனக்கும் இந்த விளக்கத்தை அறிய ஆவல் பார்க்கலாம். அண்மையில் ஷிபா வில் கொஞ்சம் லாபம் பார்த்தேன். அதை வித்த பின் மேலும் கூடியது. லாபம்+முன்னைய முதல் முழுவதையும் TRX இல் போட்டுள்ளேன். பார்க்கலாம்🤞. Technically graph ஐ பார்க்க கூடியவர்கள் இருந்தால் டிப்ஸ் ஐ பகிரவும். 🙏🏾 அருமையான ஆலோசனை. இழக்க முடியுமானாதை மட்டுமே போடுங்கள்.
-
F25069C6-5704-48E2-A7C9-61D46BBAE8A0.jpeg
From the album: பலதும் பத்தும்
-
கொஞ்சம் சிரிக்க ....
பழைய ஸ்டொக்க யாருடைய தலையிலோ கட்டப்போறாங்கள். ஆனால் ஒண்டு விலை வேணும் எண்டால் குறைக்கலாம், சாதி மட்டும் குறைக்கேலாது😡.
-
7B0B585B-65F2-4704-9AD6-73D4667572CF.gif
From the album: பலதும் பத்தும்
-
9D2F3B0F-69C4-433B-9DEB-EA610AE2BEF1.jpeg
From the album: பலதும் பத்தும்
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இந்த கட்டுரையை வாசிக்கும் போது, சீனாவின் எவர்கிராண்ட் நிறுவனம் மட்டும் அல்ல, முழு வீட்டு மனை துறையும் அதன் தொடர்சியாக நாட்டின் பொருளாதார வளர்சியும் கூட சிக்கலில் இருப்பதாக படுகிறது. சீனாவில் சில எதிர்மறை மாற்றங்கள் ஏற்படின் அது ஏனைய நாட்டின் பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும்?