Everything posted by goshan_che
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
முன் குறிப்பு பாகம் IV ம் V ம் இக்கதையின் இரு வேறுபட்ட முடிவுகள் (கிளைமாக்ஸ்). ———————————————— பாகம் IV இன்று ஒரு மிக முக்கியமான நாள். அவனுக்கும் இவனுக்குமான அந்த சம்பாசணை நிகழ்ந்து கிட்டத்தட்ட பதின்மூன்று மாதங்கள் உருண்டோடி விட்டிருந்தன. அதன் பின் வைத்திய நண்பனின் ஆலோசனையின் பெயரில் அவன் இவனுடன் தொடர்பு ஏற்படுத்துவதை அறவே தவிர்த்து விட்டிருந்தான். பதின்மூன்று மாதங்கள் முன்னதாக நடந்த அன்றைய சம்பாசணையின் போது இவனுக்கு… நீ கட்டாயம் ஒரு சைக்கியாடிரிஸ்டை பார்க்க வேண்டும் மச்சான்…. உடல் காயம் போலத்தான், மனக்காயமும். இரெண்டுக்கும் ஒரு அளவுக்கு மேல் மருந்து அவசியம்….. என தயங்கி, தயங்கி அவன் சொல்லி இருந்தான். இவனும் கூட சற்றே மனம் நிதானப்பட்ட ஒரு நிமிடத்தில்… நீ சொல்றது சரிதான் மச்சான்…. எனக்கு ஏதோ பிசகீட்டுது எண்டு விளங்குது…கெதியா காட்டோணும்…மருந்து எடுக்கோணும்…. இல்லாட்டில் முழு விசராக்கிப்போடும்… என சொல்லியும் இருந்தான். ஆனால் அடுத்த நொடியே, போரிஸ், ஏலியன், மனைவி என வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறிவிட்டது. இதை எல்லாம் கருத்தில் எடுத்த வைத்திய நண்பன் அவனுக்கும், இவனுக்கும் மட்டுமான உறவை மட்டும் அல்ல, இத்தனை மாதகாலமும் இவனுக்கும் அவனின் வட்டத்தில் மனைவியை தவிர மிகுதி அனைவருக்குமான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்தே சிகிச்சையை தொடர்ந்தான். இந்த ஏற்பாட்டின் பலனாக, தன்னையும், மனைவியையும், வைத்தியரையும் தவிர வேறு எவருக்கும் இந்த பிரச்சனையின் ஆழம் தெரியாது என்ற நம்பிக்கையோடு இத்தனை மாதகாலமாக இவனும் தொடர்ந்து சிகிச்சையை எடுத்து வந்தான். இவனோடு தொடர்பில் இல்லாதபோதும் வைத்திய நண்பனோடும், திருமதி இவனோடும் அவன் தொடர்பில் இருந்து, இவனுக்கு வழங்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள் பற்றி முழுவதுமாக அறிந்தே இருந்தான். நேற்று வைத்திய நண்பன் பேசும் போது இவன் கிட்டதட்ட முழுவதுமாக தேறி விட்டான் எனவும். அன்றைய சம்பாசணையை பற்றி இவனுக்கு அதிகம் நியாபகம் இல்லை எனவும். அதை பற்றி கதைப்பதை தவிர்த்து, வழமை போல் உரையாடலை தொடரும் படியும் அவனுக்கு கூறி இருந்தான். இதோ…நெஞ்சம் நிறைந்த படபடப்போடு அவன் மொபலை எடுத்து இவனின் வாட்சப் நம்பரை அழுத்த தயாராகி விட்டான்……. அழைப்பை எடுக்க முதல், வைத்திய நண்பன் கடைசியாக சொன்னதை மீண்டும் ஒரு முறை அவன் நினைவு படுத்தி கொண்டான். மச்சான்…மறந்தும் வாயை விட்டுடாதயடா…இவனுக்கு தனக்கு வந்த பிரச்சனை எவ்வளவு பெரிசு…தான் என்ன குழிசையள் எடுத்தது…இனியும் என்ன குழிசையள் எடுக்க வேணும்…எல்லாம் வடிவா தெரியுமடா. ஆனால் இவனை பொறுத்தவரை…இது எதுவும் உனக்கு தெரியாது…அதை நீ மறந்துடாத… ——————————— இவனுடனான தொலைபேசி அழைப்பு நினைத்தததை விட சகஜமாகவே போய் கொண்டிருந்தது. ஆனால் உறவு முன்னர் போல் அந்நியோனியமாக இல்லை என்பதாக அவனுக்கு தோன்றியது. தொடர்பு விட்டு போனமைக்கு பரஸ்பரம் மன்னிப்புகள், குடும்பத்தினர் நலம் விசாரிப்புகள் என வழமையான விடயங்கள் பேசித்தீர்ந்த பின் உருவான அந்த அசெளகரியமான நிசப்தத்தை கலைத்து கொண்டு…இவன் தானாகவே பேசினான். மச்சான்…அண்டைக்கு நான் கதைக்கேக்க கொஞ்சம் அப்செட்டா இருந்தனாண்டா… ஒரு சின்ன ஸ்டிரெஸ்…நித்திரை கொண்டு எழும்பினதும் அது சரியாப் போச்சு…. என்ன சொல்வது என தெரியாத அவன்…ம்ம்…என்று சொல்லி விட்டு இதை எப்படி கையாள்வது என யோசித்து கொண்டிருக்கும் போதே…இவன் தொடர்ந்தான்…. நல்ல காலம் மச்சான்…. உண்ட பேய் கதையை கேட்டு நான் டொக்டரிட்ட போய் இருந்தா என்னை பைத்தியம் எண்டே முடிவு கட்டி இருப்பாங்கள்…. இனிமேலாவது கண்டதையிம் வாசிச்சு போட்டு…அட்வைஸ் பண்ணுறன் பேர்வழி எண்டு மற்றவனுக்கு விசர்பட்டம் கட்டாத மச்சான்……. அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாத அவன்…கதையை மேலும் வளர்க்க விரும்பாதவனாக…… ம்……ம்…ம் கொட்டினான். #stigma #கேடிசூழ் #கறை #வடு (யாவும் கற்பனை) பாகம் IV முற்றும்.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
நன்றி அண்ணாக்கள். மூன்றாம் பாகமும் அடுத்தனவவும் யாவும் கற்பனைதான். 🤣
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
பாகம் III அவனின் காருக்குள் மூச்சுக்காற்று புகாராகி, கண்ணாடியிலும் பதிந்து ஒரு திரைச்சீலை போல் ஆகி இருந்தது. அநேகமாக மூன்று அல்லது மூன்றரை மணி நேரம் அவன் இப்படி காரில் இருந்தபடியே பேசி கொண்டிருந்திருக்க வேண்டும். எஞ்சினை ஆன்பண்ணி புகார் நீக்கியை தட்டி விடவோ, அல்லது கண்ணாடியை இறக்கி விடவோ கூட அவனுக்குத் தோணவில்லை. பேச்சின் பொருள் அத்தகையது. காரினை ஸ்டார் செய்தபோது வெளியே வெப்பநிலை -2 எனக்காட்டியது டாஷ்போர்ட். ஆனால் அவனின் உடலோ தெப்பமாக வியர்வையில் நனைந்திருந்தது. இவனுடன் போனில் கதைத்து கொண்டே வேலைக்கு இன்று அவசர லீவு என ஒரு இமெயிலை தட்டிவிட்டிருந்தான் அவன். இனி இந்த நாள் முழுவதும் அவனுக்கு ஓய்வுதான். வேலையில் இருந்து போனிலும், இமெயிலிலும் நொய் நொய் என்று யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். இவன் போனில் சொன்னதை முதல் ஐந்து நிமிடம் வரை கூட அவன் பகிடி என்றே நினைத்தான். தன்னை ஏலியன்கள் பிந்தொடர்வதாயும். பெப்ரவரி 2023 இல் தன்னை கடத்திப் போக அவர்கள் திட்டமிட்டிருப்பதாயும். தனது மனைவியை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் காதலிப்பதாயும். அவளை கவர திட்டமிடுவதாயும். பொரிசும் ஒரு ஏலியன் என்றும் இவன் சொல்ல, சொல்லத்தான், அவனுக்கு கொஞ்சம், கொஞ்சமாக இது வழமையான பிராங்க் இல்லை என்பது புரிய தொடங்கி இருந்தது. படி… பொரிஸ் வாண்ட்ஸ் டு டேக் ஹேர் ப்ரொம் மீ படி… பிளீஸ் ஹெல்ப் மீ… ஐ ஒன்லி ஹாவ் யூ… என தன் ஆருயிர் நண்பன் உடைந்து அழுத போது…..அவனுக்கு முள்ளம் தண்டில் உள்ளிருக்கும் முன்ணானின் அடியில் இருந்து, மூளை வரை, சில்லிட்டது போல ஒரு உணர்வு பரவியது. ஒரு வழியாக இவனை சமாதானப்படுத்தி போனை வைத்து விட்டு, கொழும்பில் பெயர் போன இன்னொரு மன நல வைத்தியர் நண்பனுக்கு போன் பண்ணி, விபரம் சொல்லி, அவனை உடனடியாக இவன் வீட்டுக்கே போய் வைத்தியம் பார்க்கும் ஏற்பாட்டை செய்து விட்டு அதை இவனின் மனைவிக்கும் எடுத்து சொல்லி ஒருவழியாக இந்த பிரச்சனையின் தீர்வை நோக்கி ஒரு அடியை எடுத்து வைத்தபோதுதான்…. சுகர் வருத்தகாரனான அவன் நேற்று முன்னிரவில் இருந்து எதையும் சாப்பிடவில்லை என்பதும்….ஹைபோ கிளைசீமியா எனும் ரத்தத்தில் குளுகோசின் அளவு குறையும் நிலைக்கான அறிகுறிகள் அவனில் தோன்ற ஆரம்பித்துள்ளமையையும் அவன் அவதானித்தான். ஆன் செய்த வாகனத்தை அப்படியே ஆப் செய்து விட்டு…டெஸ்கோவில் இருக்கும் கோஸ்டா கோப்பிக்கடை நோக்கி நடக்கத்தொடங்கினான் அவன். தொடரும்…. (யாவும் கற்பனை)
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
🤣 மூளாயோ? மந்திகையோ? நன்றி நுணா. நன்றி அண்ணா. இந்த டெக்னிக்கை வைத்துத்தானே மாதர் குலத்தையே மடக்கி வைத்துள்ளார்கள் டெலி டிராமா காரர்கள்🤣
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
🤣. வாசிச்சி முடிய நீங்கள் எங்கையோ🤣 அது மட்டும் செய்யவே மாட்டமே. வேணும் எண்டால், ஏலாக்கட்டம் எண்டால் air fryer சுவிட்சை போட்டு விடலாம் 🤣. சரி பாஸ் “முடிஞ்சதும் அறிவிக்கிறன்”🤣 நன்றி நிழலி
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
ப்ரோ…நிண்டு வாசிச்சு கருத்து சொல்லுங்கோ ப்ரோ 😂
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
பாகம் II அவனுக்கும் இவனுக்குமான நட்பு அலாதியானது. வாழ்க்கைமுறை, சமயம், பிரதேசம், தெரிவுப்பாடங்கள் என பலதிலும் வேறுபட்டிருந்தாலும் தமிழும், கவிதையும், நாடகமும், புத்தகங்களும் அந்த இடைவெளியை இட்டு நிரப்பி, மேலதிகமாகவும் ஒரு பிணைப்பை ஏற்படுத்த போதுமாயிருந்தன. இருவரும் கிண்டல் அடிப்பதில் ஆளை ஆள் சளைத்தவர்கள் இல்லை என்பது மேலும் அவர்கள் நட்பை எப்போதும் கலகலப்பான உறவாக வைத்திருந்தது. இவனின் மெசேஜை பார்த்ததில் இருந்து, அவனுக்கு கொஞ்சம் கலக்கலாமகவே இருந்தது. அவர்களுக்கு இடையில் இப்படியான pranks செய்வதும் வழமைதான். அதுபோல் இதுவும் இவனின் குழப்படிகளில் ஒன்றாக இருக்கலாம். போன கிழமை கூட வாட்சப்பில் மாவீரர் நாளுக்கு இவன் எழுதியதை வாசித்து விட்டு, அவன் ஒரு தெரியாத நம்பரில் இருந்து கோல் எடுத்து சிங்களத்தில் “மாத்தையா டக்சி ஓடர் பண்ணீர்கள், வீட்டுக்கு வெள்ளை வான் ஒன்று அனுப்பவா” என கேட்டு கலாய்திருந்தான். இதுவும் அதுக்கான இவனின் பதிலடியாக இருக்கலாம். ஆனால் அவனின் உள்ளுணர்வு இது ஏதோ வேறு பிசகு என கூறியது. பரவாயில்லை இன்றைக்கு வேர்க் புரொம் ஹோம்தான், நல்ல வேளையாக வேலை போனையும் கையோடு எடுத்து வந்தது வசதியாக போய்விட்டது. வேர்க் புரொம் ஹோம் என்றாலே வேலையை தவிர மிச்சம் எல்லாம் செய்யும் நாள் என்பது எழுதப்படாத சட்டம் ஆகி விட்ட நாட்டில் அவன் மட்டும் என்ன விதி விலக்கா? கார் கழுவுவது, உடுப்பு தோய்ப்பது, ஆருக்கும் சம்பளம் வாங்காமல் அட்வைஸ் கொடுப்பது, யாழிலும் வட்சாப்பிலும் உழட்டுவது, இடைக்கிடையே, முதலாளி பாவம் எண்டு கொஞ்சம் வேலையும் செய்வது. இதுதான் அவனின் இந்த வேர்க் புரொம் ஹோம் நாட்களின் ரூட்டின். ஆகவே அருகில் இருக்கும் டெஸ்கோவில் காரை விட்டு விட்டு என்ன எண்டு கேட்போம் என நினைத்தவாறே காரை டெஸ்கோ கார்பார்க்குக்குள் விரட்டினான் அவன். என்ன மச்சான் ஓகேயா? அவனின் கேள்விக்கு பதில் வர தாமதித்தது…. மச்சான்…டேய்…என்னடா மெசேஜ் போட்டிருந்தாய்…என்ன ஏர்ஜெண்ட் மட்டர்? தொண்டையை கனத்தபடி இவன் பேசத்தொடங்கினான்….. ஐ’ ம் குட் படி. ஐ டு ஹாவ் எ குவஸ்யன் போர் யூ…. டேய் லூஸ் விளையாட்டு விளாடாத…வேலை கடுப்பில நிக்கிறன் பிறகு அடிக்கிறன்…. நோ..நோ…லிசின் மேட்… ஐயம் சீரியஸ் எபவுட் திஸ்… அட்சரம் பிசகாத லண்டன் உழைக்கும் வர்க்க ஆங்கில உச்சரிப்பில்…. தன் பிரச்சனையை எடுத்து சொல்ல ஆரம்பித்து இருந்தான்…. வாழ்வில் என்றுமே இங்கிலாந்துக்கு வந்தே இராத, பிரித்தானியாவுடன் எந்தவித பரிச்சயமும் இல்லாத இவன். (தொடரும்) (யாவும் கற்பனை அல்ல) ——————————————-
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
நன்றி அண்ணா. 🤣 அடுத்த ஆக்கத்துக்கு ஐடியா தந்தமைக்கு நன்றி. தலைப்பு கூட தயார்…. ஒரு முறிந்த பேனா முனகுகிறது🤣 மம்மி டாடி எல்லாம் லண்டனில்தானே லிவிங்ஸ்டன்🤣. மை பிரதர் மார்க் வா ஆல்சோ. இப்ப பாருங்கோ….. அடுத்த அத்தியாயத்தில் “அவன்” அசகாய சூரன் எண்டு பில்டப்ப கொடுத்து என் கெத்த காட்டுறன்🤣.
-
தையல்கடை.
கதை வெகு சுவாரசியமாக போகிறது. கும்பராசிக்கு சுக்கிர பெயர்ச்சி 18 ம் திகதி வரைக்கும் நல்லமில்லையாம்🤣. நானும் முந்தி சீட்டு எடுத்தால் நல்லா கழிவு எடுக்க விட்டு கடைசியாய்தான் எடுப்பேன். ஆனால் ஏத்தி விடும் ரிஸ்க் எடுத்ததில்லை.
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நல்லது. 15 மாதமா விடுப்பு கதைச்ச மனுசன் எண்டு கின்னஸில வரவில்லையா🤣. தொடருங்கள்.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
யாவும் கற்பனை அல்ல என்றால், எதுவுமே கற்பனை அல்ல என்று அர்த்தம் எடுக்க கூடாது🤣
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
நன்றி அண்ணா. வரவுக்கும் ஊக்கத்துக்கும்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நல்லது அக்கா. இலங்கையில் திரும்பி போய் வாழ்வது பற்றிய சுய ஆக்க திரியோடு ஒட்டி நான் பொதுப்படையாக எழுதிய பதிலுக்கு என்னை தனிப்பட்டு இழுத்து கருத்து எழுதியது யார் என்பது திரியை வாசிப்பவருக்கு புரியும். அந்த திரியிலும் உங்களுக்கு தக்க பதில் அளிக்பட்டே இருந்தது. அந்த பதிலின் வெப்பம்தான் இங்கே உங்களை என்னை இழுத்து எழுத வைத்தது என்பதும் புரிகிறது.
-
படம் கூறும் கதைகள்
இது பிளாட்டினத்திலும் பாசி பிடிக்கும் காலம் பிகு அருமையான கான்செப்ட். மிக பொருத்தமான படங்கள் 👏🏾.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
சக்சஸ்! இந்த குழப்பத்தை எதிர்பார்த்தே எழுதுகிறேன். நன்றி பிரபா. நன்றி அண்ணா. ஓம்…என்ன பெயர் என்பதில் ஒரு குழப்பம்தான் எனக்கும். இது நிமிடக்கதை, சிறுகதை இல்லை. நவீனம்/ நாவலும் இல்லை. நெடுங்கதை என்றால் நாவலின் இன்னொரு பெயர்?
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
பைத்தியம் U mad bro பாகம் I நதியே…நதியே காதல் நதியே நீயும் பெண்தானே…. அடி நீயும் பெண்தானே …. நிசப்தமான இரவை குலைத்தபடி சங்கர் மகாதேவன் போனில் பாடத்தொடங்கி இருந்தார். சை…இந்த அலாம் டோனை மாத்த வேணும். பழைய நொக்கியா மாரி இல்லை, இந்த போனில் புதிதா ஒரு டோன் போடுறதுகுள்ளா போதும் போதும் எண்டாயீடும். நினைத்து கொண்டே கட்டிலில் இருந்து பிரண்டு, போனின் அலார்மை அணைத்தான் அவன். அலாம் அடிக்கிறது என்றால் அது ஒரு கிழமை நாள், காலை ஆறரை மணியாக இருக்க வேண்டும். அவன்……. அப்படி ஒன்றும் கதாநாயகன் களை எல்லாம் இல்லாவிடிலும் இந்த கதையின் நாயகர்களில் ஒருவன். ஒரு பெண்ணின் கணவன். ஒரு மகனின் தந்தை. கட்டிலில் திரும்பி பிரண்டபோதுதான் அருகில் மனைவி இல்லை என்பது உறைத்தது. நேற்றே சொல்லி இருந்தாள் “நாளைக்கு காலமை அப்பாவுக்கு ஹொஸ்பிட்டல் அப்பொயிண்ட்மெண்ட், ஸ்கூல் ரன் உங்கள் பாடு”. கட்டிலால் எழுந்து பல்லை விளக்கி விட்டு வந்து மகனை எழுப்பி, மகனுடன் பள்ளிக்கு வெளிக்கிடசொல்லி தேவாரம் பாடி, இடையில் உணவும் தயார் செய்து, அதை உண்ணவும் வைத்து, வெளியே ரத்தம் உறையும் குளிரில் நிண்டபடி காரில் படிந்திருக்கும் பனியை சுரண்டி……. நினைக்கவே அலுப்பாக இருந்தது அவனுக்கு. ஆனாலும் செய்யதான் வேண்டும். சோம்பலாய் எழுந்து போனை பார்த்தால் - இவன் மிஸ்டுகால் என காட்டியது. இவன்…….. இந்த கதையின் இன்னுமொரு நாயகன். கொழும்பில் நல்ல வசதியாக வாழும் ஒருவன். மூன்று மாடியில் ஏழு அறை வீடு, டிரரைவர், சமமையல்காரன், தோட்டகாரன் என சகல செளபாக்கியமுமான வாழ்க்கை வாழ்பவன். சரி ஏதோ ஸ்கூல் விசயமாக்கும். பிறகு அடிப்பம். என நினைத்தபடி வேலையில் மூழ்கிப்போனான் அவன். காரில் இருந்து மகன் இறங்கி போகும் போது, urgent. Plz call…..plz அவனின் போனில் இவன் அனுப்பிய குறுஞ்செய்தி மின்னியது. (தொடரும்) (யாவும் கற்பனை அல்ல) ——————————————-
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
ஐ…நான் என்ன எழுதி இருக்கிறன் நீங்கள் என்ன பதில் போட்டிருக்கிறியள்🤣. நான் காணியை வாங்கி போட்டேன் எண்டு எங்கே எழுதினேன்🤣. ஓணாண்டி என்னிடம் பணம் இல்லை என்கிறார். நீங்கள் பணத்திமிர் என்கிறீர்கள்🤣. என்னை யாரும் தங்க தாம்பாளம் வைத்து அழைக்கவில்லை, எனக்கு மனதுக்கு பிடித்ததாக இருந்ததால் போய் எனக்கு ஏலவே இருந்த இடத்தில், அதன் ஏனைய பங்குதாரர் அதை வித்து தொலைப்போம் என்பதை தடுத்து, ஒரு திட்டத்தை செய்ய முனைந்தேன். அப்புறம் நான் ஒரு போதும் தனி நாடு கேட்டவன் அல்ல. யாழில் பலருடன் மோதுபட்டுள்ளேன், எனது பதினமவயதிலேயே தனிநாடு சரிவராது என நான் அறிந்து கொண்டேன் என்பதை எழுதி. சுயாட்சி இப்போ எனக்கு தேவையில்லை. ஆனால் இலங்கையில் இருக்கும் போது தேவைபட்டது. அந்த மக்கள் இன்னும் தமிழ் தேசியத்தை ஆதரிப்பதால் எனக்கு தேவையில்லை எனிலும் அவர்கள் கோரிக்கையை நான் ஆதரிப்பேன். நான் இலவசகல்விக்கு நன்றி கடனுடன் இருக்க தேவையில்லை என்பதை என் நிலைகொண்டு விளக்கியுள்ளேன். அதில் திமிர் ஏதும் இல்லை. அடேங்கப்பா பியர், பிராண்டி எல்லாம் இல்லை விஸ்கி எண்டு எப்படி கண்டு பிடிச்சனிங்கள்? ஊத்தி கொடுப்பவர்களுக்குதான் இந்த விபரம் எல்லாம் நினைவில் இருக்கும். எனக்கு கல்யாணம் பல கட்டி வைத்தது போதாது என்று இதை வேறு செய்கிறீர்கள். நன்றி 🤣. பிகு சாணாக்கியனை நீங்கள் மத ரீதியில் எதிர்க்க என்ன காரணம் என்பதை இன்னொரு திரியில் புட்டு, புட்டு வைத்ததால் இனிமேல் என்னை மேற்கோள் காட்டி எழுதவேண்டாம் என்று கோபப்பட்டவர் நீங்கள். இப்போ அதற்கு அரிவரி பிள்ளையள் மாரி கணக்கு தீர்கிறீர்கள் என்பது எனக்கும் வாசிப்போருக்கும் புரியும். ஆனால் இன்னொருவரின் 25 ம் ஆண்டு திரியை நாம் சந்தை போல் ஆக்ககூடாது என்பதால் அமைகிறேன்
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
இதுவும் உண்மைதான். எதையும் நோய் என பார்க்காமல் எல்லாவற்றையும் போர்த்து மூடல் Vs தொட்டதுக்கும் நோய் சொல்லல். இரெண்டு extreme உம் கூடாது.
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
இல்லை அவை எல்லாம் கிட்ட போகும் ஆனால் தாண்டி போவது 134 மட்டும்தான். இப்ப வன் வே வந்த பின் எப்படியோ தெரியாது.
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
தேவையான ஒரு தலைப்பு. மன நிலை சமநிலை குழம்புவதை இன்னும் ஒரு இழுக்காக stigma பார்க்கும் நிலையில்தான் எம் சமூகமும், ஏனைய சமூகங்களும் உள்ளன. இதனடிப்படையில் ஒரு கதை எழுதிகொண்டிருக்கிறேன். உங்கள் பதிவு வருகிறது. Great minds think alike 🤣 பிகு 134 பஸ்சுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அது கொழும்பு லேடிஸ் காலீஜை தாண்டி போகும் ஒரே பஸ் 🤣
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
மிக தெளிவான பார்வை. ஒரு பிரச்சனை வரும் வரைக்கும் எல்லாம் சுவர்க்கம் போலத்தான் இருக்கும். இலங்கை திரும்பி போனவர்கள் யாராவது G7 + Aus+ NZ கடவுச்சீட்டை, அல்லது நிரந்தர வதிவிட உரிமையை விட்டெறிந்து விட்டு போனார்களா? இல்லவே இல்லை. ஏன்? சொர்க்கத்தில் போய் இருப்பவர்களுக்கு ஏன் நரகத்துக்கு மீண்டும் வரும் வழி தேவைபடுகிறது🤣. அங்கே இறுகினால் இங்கே ஓடி வந்து சோசலிடம் கையை தூக்கலாம். இதுதான் நான் சொல்லும் பாதுகாப்பு.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நாங்கள் எல்லாரும் எங்களை போலவே ஏனையோரையும் நினைக்கிறோம் அதுதான் பிரச்சனை. இப்ப பாருங்கோ…கொவிட் வரைக்கும் ஊருக்கு அடிக்கடி போன, அங்கே நேரத்தையும், பணத்தையும் முதலிட்ட, திரும்பி அங்கே வரவேண்டும், பிரயோசனமாய் ஏதாவது செய்ய வேண்டும் என முனைந்து, அதன் பின் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்த்து யோசித்து கொண்டிருக்கும் எனது அனுபவமும், பட்டறிவும் 2009 க்கு பின் நாட்டுக்கு ஒரு தடவை (என நினைக்கிறேன்) சுற்றுலா போய் வந்த உங்கள் அனுபவமும் வேறு வேறாகத்தான் இருக்கும். எனது முதலாவது கருத்திலேயே சொல்லி உள்ளேன், போர், குண்டு வெடிப்பு போல அல்ல, பொருளாதார சிக்கல் - இங்கே இருக்கத்தான் முடியுமா என்ற நிலைக்கு பெரும் பண வசதி படைத்தவர்களியே கொண்டு வந்து விட்டுள்ளது. Trend இல் ஆளை ஆள் பார்த்து வெளியேற இவங்கள் அன்றாடம் காய்சிகளோ அல்லது உழைக்கும் வர்கமோ, மத்திய வர்கமோ கூட இல்லை(இதுவும் நடக்கிறது) . வெளிநாட்டில் வந்து படித்து விட்டு கொழும்பு திரும்பிய, உயர் தட்டு மக்கள். பலருக்கு யூகேயில் நிரந்தர வதிவிட உரிமை ஏலவே உண்டு, ஆனால் வியாபாரம், சொத்து இலங்கையில் என்பதால் திரும்பியவர்கள். பிள்ளைகளை பின்பு மேற்படிப்பு படிக்க அனுப்பும் எண்ணத்தில் கொழும்பில் சர்வதேச பாடசாலையில் யூகே கல்விமுறையை பின்பற்ற வைத்தவர்கள். இப்போ குடும்பமாக கிளம்பி வந்துள்ளார்கள். பிகு முன்பே சொல்லியுள்ளேன் - சிறிலங்கா என்ற தேசத்தின் மீது - தமிழருக்கு சுயயாட்ட்சி வழங்கும் வரை எனக்கு எந்த விசுவாசமும் வராது. நான் இலங்கையில் இருக்கும் போதே என் மனநிலை அப்படித்தான். இலவச கல்வி - அது எல்லாருக்கும் இலவசம் இல்லை. பெற்றார் வரி கட்டும் வேலையில் இருந்து, நியாயமான, தொழில், காணி உட்பட்ட வரிகளை செலுத்தி, அந்நிய செலாவணியையும் ஈட்டி தந்த குடும்பத்தின் பிள்ளைகளுக்கு - இலவச கல்வி கிட்டவில்லை. சொல்லப்போனால் இலவச கல்விக்கும் மேலதிகாமாகவே, ஏனையோருக்கு சேர்த்தே அவர்கள் செலவழித்துள்ளார்கள். Don’t judge others with your own yardstick
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
🤣 ம்ம்ம்… பொதுபடையாக கூறப்போய் அசிங்கப்பட்டு விட்டேன்🤣. என் பழைய நேர்ஸ் - இலங்கை என்றதும் என்னை பிலுபிலு என பிடித்துக்கொண்டார். அவருக்கு அப்போ 60 இருக்கும். அவரின் 30 வயதுகளில் இருந்த போது, வேலை நீக்க காசை எடுத்து கொண்டு இலங்கையில் 3 வருடம் வாழ்ந்தாவாம். மவுண்ட்லேவனியாவில் ஒரு வீட்டில் ரூம் எடுத்து, ஹோட்டலில் ஒவ்வொரு நாளும் குளியலாம், கும்மாளமாம். அருமையான நாடு என்றார். நானும் ஓமோம் சிறிலங்கா சொர்க்கம் என சொல்லிகொண்டே மனதுக்குள் நினைத்தேன் - அதே காலகட்டத்தில்தான் அந்த “நரகத்தில்” இருந்து தலை தெறிக்க என் மக்கள் ஓடி கொண்டிருந்தார்கள் என. ஒரே ஒரு உதாரணம். கொவிட் நேரம் இப்படி உலகம் முழுவதும் போன ஐரோப்பியருக்கு என்ன நடந்தது. அடிச்சு பிடிச்சு தத்தம் நாடுகள் அனுப்பிய பிளேனில் ஏறி நாடு திரும்பிவிட்டார்கள். எங்கே போனாலும் பாஸ்போர்ட்டை மாத்தவே மாட்டர்க🤣. இதுதான் நான் சொன்ன “பாதுகாப்பு”. ரொனி பிரிக்ஸ் என ஒரு கொள்ளையன் கதை உண்டு. 25ம் ஆண்டு பதிவாக போடுகிறேன்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
ஐயோ பாவமே. தாய்லாந்தில் குடியேற வேற காரணங்கள் 🤣. வாழ்க்கை செலவு குறைய, பேத்தி வயதான பெண் - இதுதான் பல வெள்ளைகள் தாய்லாந்து போக காரணம். இந்த வெள்ளைகளை firangi (பரங்கி) என அழைப்பார்கள். கல்லூரியில் படிக்கும் பெண்கள் கூட, short term, long term என எழுதாத ஒப்பந்தங்கள் போட்டு, கணவன் மனைவியாக வாழ்வார்கள். ஆனால் எத்தனை 20-45 வயதானவர்கள் இப்படி போகிறார்கள். மிக சிலரே. அப்படி போபவர்கள் கூட digital nomad என வேலை மேற்கில் இருக்கும் வாழ்க்கை கிழக்கில் இருக்கும் வேலைகளோடுதான் போகிறார்கள். மேற்கின் சுக வாழ்வை அனுபவித்து விட்டு, பென்சன் காசை எடுத்து கொண்டு வாழ்வின் கால் இறுதியை வெப்பவலய நாடுகளில் வாழப்போவது - வேறு. இங்கே பலர் ஸ்பெயினுக்கு போவார்கள்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நன்றி. நான் ஊரில் ஒரு கணிசமான முதலீட்டையும் போட்டு, போயிருக்கும் போது பிராக்காக செய்ய என ஒரு திட்டத்தையும் அமல்படுத்தியும் ஆகி விட்டது. ஆனால் இப்போ அதை போய் செய்யத்தான் வேணுமா என்றாகி விட்டது. அண்மையில் என் முஸ்லிம் நண்பன் ஒருவன் சொன்னது யோசிக்க வைத்தது. அவரின் அப்பாவுக்கு ஒரு மருந்து கட்டாயம் தேவை. என்ன விலை கொடுத்தும் வாங்க முடியும். வசதி அப்படி. ஆனால் எங்கும் மருந்து இல்லை. ஒரு பாமசியில் நம்பரை வாங்கி கொண்டு பிறகு கூப்பிடுகிறோம் என்றுள்ளார்கள். பின் ஒரு அழைப்பு வந்துள்ளது சாதாரண விலையை விட 3 மடங்கு அதிகம், அத்தோடு நாம் தரும் மருந்தில் எந்த நிறுவன, மருந்து பெயரும் இராது என்றுள்ளார்கள். ஆரோ ஒரு அநாமேதய நபர் தரும் பெயர் இல்லாத மருந்தை வாங்கி போட வேண்டும் அல்லது மருந்து போடாமல் இருக்க வேண்டும். எப்படி இருக்கு? இப்போ கொஞ்சம் நிலமை சீராகியுள்ளது. ஆனாலும் முன்னரே கான்சர் என போய் அப்பலோவில் படுத்தால் - மஹரகமவுக்கு கொண்டு போங்கோ என்பதே பதில். எனக்கு தெரிய சிறுநீரக பிரச்சனைக்கே நவலோக்கா - பல மில்லியனை புடிங்கி விட்டு, கடைசியில் தேசிய ஆஸ்பத்திரிக்கு போங்கோ எண்டு சொல்லி உள்ளது. எல்லாம் ஒப்பீட்டளவில்தான் அண்ணை. அந்த நோக்கியாவை புடிங்கி விட்டால் அவர்களும் சோகம் ஆகி விடுவார்கள்.