Everything posted by goshan_che
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
புட்டின் திருவாதிரையாம் - அதுதான் அப்படி🤣
- IMG_2505.png
- IMG_2501.jpeg
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
கச்சான் அல்வா, பாப் கான், மிக்சர், சோடா, எல்லாம் எடுத்து கொண்டு கூத்து பார்க்க நான் தயார். 🍿🥤🍭🥤
-
அந்தக் கண்கள்- நிழலி
ஒரு கணம் - அரண்டு விட்டேன் நானும் அப்படியே நினைக்கிறேன்
-
அந்தக் கண்கள்- நிழலி
🤣 கடவுளே எண்டு ஒரு 70, 75 இல இந்த வசதி பரவலா வந்துடவேணும். இளம் பராயத்தில் இருந்து நாமே ஓடி…ஓடி…எல்லாம் செய்து போட்டு…அந்த வயதில் ஆஸ்பத்திரி போக ஊபரோ, அல்லது உறவுகளையோ நம்பி இருக்க தேவையில்லை. ஏறி இருந்து… ஹலோ சிரி….டேக் மி டு த ஹொஸ்பிடல் பிளீஸ்😎
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
🤣 அந்த நியாபங்களை வைத்து எழுதினால், அவை தூண்டப்படுவது இயல்புதானே அக்கா🤣. நன்றி நியாத்தை கதைப்போம். ஓம் எதை, எதையோ செய்து, எப்படியோ இழுத்து பிடித்து வாழும் ஓர்மம் மட்டுமே உயிரிகள் அனைத்துக்குமான பொது விதி.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
உங்கள் இனிமையான வார்த்தைகளுக்கும், வாழ்த்துக்கும் நன்றி அக்கா.
-
அந்தக் கண்கள்- நிழலி
அருமையாய் எழுதியுள்ளீர்கள் நிழலி, அருமை. முந்தநாள் கிட்டத்தட்ட இதை ஒத்த சம்பவம் எனக்கு. வேலை விசயமாக 70 மைல் வேக தடை உள்ள இரெட்டை லேன் வீதியில், வேக மாக ஓடிக்கொண்டிருக்கிறேன். தூரத்தே ஒரு நடை மேம்பாலம். அதற்கு கீழ் ஏதோ ஒரு பொருள் தெரிகிறது, வேகத்தை மட்டுப்படுத்தி அடுத்த லேனுக்கு மாறி என்ன என்று பார்த்தால்…. குழந்தைகளை காவும் carrycot ! ஒரு கணம் ஈரக்குலை நடுங்கி விட்டது. வீதியோ அருகில் hard shoulder உள்ள மோட்டர் வே அல்ல, உடனடியாக நிறுத்த முடியாத A ரோட். ஒரு வழியாக அடுத்த உள்ளோட்டில் வாகனத்தை போட்டு விட்டு 999 க்கு அடித்தால் - விடயம் தெரியும் பொலிஸ் போகிறது என அவர்கள் சொல்லி கொண்டிருக்கும் போதே எதிர் திசையில் இரெண்டு பொலீஸ் கார்கள் கூவிக்கொண்டு பறந்தன. கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு வெளிக்கிட்டு வந்து விட்டேன். அது வெறும் கூடையாகத்தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் எனது திசையில் அம்பூலன்ஸ் என்னை முந்தி ஓடி இருக்கும். நியூசிலிம் வந்திருக்கும். அவங்கள ஓட விட்டு நீங்கள் பசன்சர் சீட்டில் இருந்து பாருங்கோ…. காரில் டிரைவர் சீட் மட்டும் போதும் என்றாகும்🤣
-
நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
நான் நல்லா இருக்கேன்..சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன்..வீடியோ வெளியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் Jeyalakshmi CPublished: Wednesday, March 22, 2023, 13:56 [IST] சென்னை: நான் நலமுடன் இருக்கிறேன். விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்துள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்ட நிலையில் அவர் வீடியோ மூலம் தனது உடல் நிலை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டது. இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. ஈவிகேஎஸ் இளங்கோவனை கடந்த வாரம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கொரோனா தொற்று மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஓரிரு நாட்களில் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று பரவியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு காரணமாக அவருடைய நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. மீண்டார் இளங்கோவன் இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இதய பாதிப்பு இருப்பதால் அவர் சில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. வீடியோவில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர் நலமுடன் இருப்பதாக நேரில் பார்த்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனது உடல் நலம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் அளிக்கப்பட்டுள்ள உடையில் இருக்கும் இளங்கோவன்..நான் நல்லா இருக்கேன்..சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று கூறியுள்ளார். இதனைப்பார்த்த அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். https://tamil.oneindia.com/news/chennai/i-am-fine-i-will-be-discharged-soon-video-posted-by-evks-ilangovan/articlecontent-pf884143-504081.html டிஸ்கி: அம்மா இட்லி சாப்பிட்ட மாதிரியோ?
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
நல்லதொரு துணுக்கு நாதம். நன்றி. நானும் ஏதோ ஜமீந்தார் தன் ஆசைநாயகி நியாபகமா வைத்த பெயர் என நினைத்தேன்🤣. IR8 = International Rice Research institute இல் உருவாக்கப்பட்ட ஒட்டு அரிசியினம்.
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
ரதி அக்கா சிறு வயதில் யாழில் இருந்து மட்டு போனவ என்று சொன்ன நியாபகம். மட்டு, திருமலையில், வன்னியில் கூட பெரும்பாலும் அரிசி மாத்தான். நெல்மிகை மாவட்டங்கள் எல்லோ? கோதுமையில் செய்வதென்றால் எல்லா இடமும் அவித்துத்தான்.
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
இல்லை வன்னி, திருமலை, மட்டகளப்பில் நாங்கள் கோதுமை மாவுக்குள் தண்ணியை ஊத்தி பசை கிண்டிப்போட்டு, அப்படியே சாப்பிடுவோம்🤣. என்ன மூத்தவரே, உங்களுகே கிழக்கில் இப்படி செய்வதுண்டா என தெரியவில்லை, பிறகு எப்படி உலகிலேயே யாழ்பாணத்தில் மட்டும்? அவைக்கு சொல்லி போடாதேங்கோ…. ஊரில…உத…. அமெரிக்கன் மா எண்டும் சொல்லுறவை🤣 ————— இந்த திரியை பார்த்து @ராசவன்னியன் சார் டென்சன் ஆக போறார் 🤣
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
ஐ லைக் திஸ் கு.சா டச் யா …🤣 காதலில் இதுதான் ஏழு நிலை…. காணும் இடம் எல்லாம் அவன், தூணிலும் அவன், துரும்பிலும் அவன், போனிலும் அவன், பிசைந்த புட்டிலும் அவன். மணந்தால் மாஸ்கோ தேவன், இல்லையேல் மரண தேவன் 🤣
- திரும்பும் வரலாறு!
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
யாழில் ஒரு உள்ளூர் கபடி போட்டி விடாமல் -போட்டி வைக்கும் போதே நீங்கள் கடும் உழைப்பாளி என்பதை தெரிந்து கொண்டேன் ஜி🤣. நன்றி. வாசிப்பில் கரை கண்ட உங்களையே திருப்திபடுத்திய எழுத்து என்பது பெருமையாக உள்ளது🙏🏾.
-
நீங்களும் ஆகலாம் நொஸ்டிரடாமஸ் 2023
உங்கள் எதிர்வுகூறல் என் கண்ணில் இப்போதுதான் பட்டது. நல்ல எதிர்வுகூறல்கள்.
-
நடுவீதி...
இதிலும் பாத்திரம் அறிந்துதான் பிச்சை இடல் வேண்டும். பொதுவாக கேட்போருக்கு ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கி, உடைத்து நான் ஒன்றை எடுத்து விட்டு (கடையில் கொடுத்து காசாக்கி குடு/குடிப்பதை தடுக்க) மிகுதியை கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் வீதி விளக்கில் நின்று யாசகம் எடுப்பவர்கள் பலர் இவ்வாறு உணவை வாங்க மாட்டார்கள். அல்லது வேண்டா வெறுப்பாக வாங்குவார். தொடர்ந்து போகும் வழி என்றால் - அடுத்து உங்கள் காரை தவிர்த்து விட்டு (இந்த லூசன் பிஸ்கெட்தான் தருவான்🤣) அடுத்த காருக்கு போவார்கள். அவர்கள் செய்வது வேலை. மாபியாக்கள் முதலாளிகள். நான் கடவுள் படம் தத்திரூபமாக காட்டி இருக்கும். அதே போல் ஒரு சாண்ட்விச் வாங்கி தா என கேட்பவரும் உண்டு. இங்கே இப்படி பாவம் பார்த்து வீட்டை கொண்டு போய் வச்சு, வேலையும் எடுத்து கொடுத்த ஆட்களை திரும்பி ஒருநாள் திடீரென வந்து குத்து கொண்டதும் உண்டு. தாயும் 13 மகனும் அவுட். தந்தைக்கு பலத்த காயம். https://www.independent.co.uk/news/uk/crime/mother-and-son-killed-stourbridge-west-midlands-took-homeless-man-in-tracey-peter-pirece-wilkinson-tripple-stabbing-a7661501.html?amp
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
நன்றி அக்கா. வருகைக்கும், வாசித்தமைக்கும், பாராட்டுக்கும்🙏🏾. மறக்கத்தகுமோ…முப்பாட்டன் எல்லோ…🙏🏾. உங்கள் எண்ணைப்படி முடிவை அமைக்காமைக்கு மன்னிக்கவும். நன்றி அண்ணா.
-
படம் கூறும் கதைகள்
ஒரு நவம்பர் மாதத்தில் பொப்பியையும், காந்தழையும் ஒப்பிட்டு என் மகனுக்கு நான் எழுதிய கவிதை கீழே 🙏🏾. நினைவு மாதம் மகனே, போர் இடர் மிகுந்து மானிடர் மடிந்து வானது பிழந்து வல்குண்டு வீழ்கையில் தான் - அதை மறந்து தன்னினம் நினைந்து பூத்திடும் புன்னைகை சூடி சா - அதை துணிந்து செருக்களம் புகுந்து சாக்களம் ஏகிய செல்வர்கள் வானுள்ள வரைக்கும் வையகம் வாழ்த்தும் வயதில்லா வாலிபர் அவர்தாம். இதில் கசகசா ஒன்றே காந்தழும் அதுவே வீரமும், தியாகமும் ஒன்றே.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
மீண்டும் மீண்டும் ரயில் கொள்ளையன் ரொனி பிக்ஸ் கதையை எழுத தூண்டுகிறீர்கள் 😀.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நன்றி கொழும்பான். இப்ப சுகங்கள் எப்படி? 🤣 சில சமயம் இவனெல்லாம் இந்த பெயருடன் இந்த பாஸ்போர்ட்டில் இருக்கிறானே என்ற கடுப்பையும் காண முடியும்🤣
-
திரும்பும் வரலாறு!
வரலாறு என்றும் கறுப்பு வெள்ளையாக இல்லை. யூதர்களோ எந்த இனமுமோ 100% சுத்தமானவர்கள் இல்லை. அதே போல் ஒரு இனத்தின் மீதான நியாயமான விமர்சனம் அந்த இனத்தை வழித்து துடைக்கவேண்டும் என்ற கொள்கை முடிவுக்கு வரவைத்தது பிழையே. பலஸ்தீனம் என்ற பெயரை விட பழையது இஸ்ரேல் என்ற நாடு. ஆகவே இரெண்டு தேசங்கள் என்பதுதான் அங்கே நியாயமான முடிவு. அதை தீவிர சயனிஸ்டுகளும், ஹிஸ்பொல்லா, ஹமாசும் ஏற்றால் நாளைக்கே தீர்வு வரும்.
-
தமிழன்னை அருட்புகழ்
நன்றி கரு.
-
திரும்பும் வரலாறு!
ஜப்பானியர்களும், ஆங்கிலேயரும் மட்டும் அல்ல, தெனமரிக்காவில் ஸ்பானியரும், கிழக்கிந்தியாவில் பிரான்ஸ், போச்சுகல், டச்சுகாரரும்…ஆபிரிக்காவில் பெல்ஜியம், ஜேர்மனியும், மத்திய ஆசியா, ஐரோபாவில், சொந்த மக்களின் மீதே ஸ்டாலினின் ரஸ்யர்களும் கொடூரத்தையே புரிந்தார்கள். ஆனால் நாஜிகள் மட்டும்தான் அதை யூதர் விடயத்தில் அங்கீகரிக்கப்பட்ட கொள்கை முழக்கமாக்கி செய்தார்கள். அத்தோடு அநீதி இழைக்கபட்ட இனமும் அதை மிக தெளிவாக தொடர்ந்தும் வலியுறுத்துகிறது. இதனால்தான் நாஜிகள் தனியாக பேசப்படுகிறனர். ஏனைவர்கள் சுரண்டும் இனவாதிகளாக இருந்தார்கள். நாஜிகள் யூத இனத்தை சுவடின்றி அழிப்பதை கொள்கையாக்கி செயல்பட்ட இன தூய்மைவாதிகளாக இருந்தார்கள்.