Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. பேசாமல் ஏப்ரல் முதலாம் திகதியை இனி யாழ் கள கருத்தாளர்கள் தினமாக கொண்டாடலாம் 🤣.
  2. வணக்கம் அண்ணை. கண்டது சந்தோசம். (நோயும் சொல்லி மருந்தும் சொல்வது போல் பத்தோடுபதின்னொன்றாக இதற்கும் பதிலை சொல்லி விடுங்கோ🤣🙏🏾).
  3. புட்டினும் புதுமாத்தளனும் II காலம்: புத்தாண்டு தினம் 2027 இடம்: பதுங்கு குழியாக மாறிய பாரிசின் சிறுநீர் நாற்றம் எடுக்கும் ஒரு நிலக்கீழ் இரயில் நிலையம். மச்சான் அமுதன், உன் கடிதமும் நீ அனுப்பிய 50000 இலங்கை ரூபாயும் கிடைத்தது. அதை இங்கே மாற்றி 4999 யூரோவாகஎடுத்து கொண்டேன். உனது காலம் கருதிய உதவிக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேனோ? எப்போசெய்ய முடியுமோ? தெரியவில்லை மச்சான். எங்கட வெசாயில்ஸ் பக்கம் எல்லாம் சண்டைல அழிஞ்சு போச்சு மச்சான். இப்ப இஞ்ச பரிசுக்கு, எங்கடஆக்கள் இருக்கிற லாச்சப்பலுக்கு வந்திருக்கிறன். இஞ்ச ஒவ்வொரு ரோட்டிலும் 90% போல தமிழ் ஆக்கள்கடையள்தான். இப்ப பாதி எரிஞ்சும், ஏரியாமலும் இருக்கிறத பாக்க வயிறு எரியுது மச்சான். மச்சான் உண்ட கடிதத்தோட எங்கட பழைய பள்ளிக்கூட முன் வாங்கு நண்பன் படான்ஸ் எழுதினகடிதத்தையும் ஒரு போட்டோ கொப்பி எடுத்து வச்சிருந்தாய் மச்சான். இந்த மரண அவஸ்தையிலும் அதைவாசிச்சு வாய் விட்டு சிரிச்சன் மச்சான். அதுவும் “படான்ஸ் இன்னும் மாறவே இல்லை” எண்ட உன்ர கொமெண்டை வாசித்து விழுந்து விழுந்து சிரிச்சன் மச்சான். அவன்ர கதையள் எப்பவும் படான் கதையள் தானே மச்சான். அதானே ஆளுக்கு படான்ஸ் எண்டு பெயர்வச்சனாங்கள். ஆனால் அவன் நல்லவன்ரா. சும்மாவே படுத்திருந்து விட்டத்தை பார்த்து விதம் விதமா வாழ்க்கை தத்துவம்பேசுவான், இப்ப ஆரோ ஒரு பின் லாடன் அவனை பிடிச்சு நல்லா உரு ஏத்தி இருப்பான் போல கிடக்கு. வாயதிறந்தா டெத் டு அமெரிக்கா எண்டு கொண்டு திரியிறான். பாவம். கெதில காரை கொண்டுபோய் வெள்ளையள்மேல ஏத்துற அளவுக்கு மாறிடுவானோ எண்டும் பயமாகிடக்கு. சரி படான்ஸ் சொன்ன விசயங்கள் பற்றி பிறகு விளக்கிறன், அதுக்கு முதல் நீ உக்ரேன் பற்றி அரைகுறைவிளக்கத்தோட சிலதை கேட்டிருந்தாய் அதை ஒருக்காய் பாப்பம். மச்சான் - உக்ரேனில் பெண் படையணி இருக்கெண்டு கேட்டிருந்தாய். உண்மைதான். நான் இல்லை எண்டுசொன்னானே? ஆனால் ஆண்களை போல பெருவாரியாக பெண்கள் சண்டைக்கு போகேல்ல மச்சான். கணிசமான பெண்கள் சண்டைக்கு போக பெரும்பாலன பெண்கள், குழந்தைகள் தப்பித்தான் வந்ததுகள். கனஇடங்கள்ள உக்ரேனிய ஆம்பிளையள் சண்டை எண்டதும் போடர் வரை வந்து பிள்ளை குட்டியை விட்டுட்டுதிரும்பிபோனது உண்மை மச்சான். அதே போலதான் உக்ரேன் டிரைவர் மார் உட்பட பல உக்ரேன் புலம்பெயர்ந்தவர்கள் சண்டை பிடிக்க ஊருக்கு போனதும். பிறகு அங்க எல்லா ஆண்களுக்கும் கட்டாய சேவை அதுதான் வர முடியாது எண்டும் சொல்லி இருந்தாய். ஓம்இதையும் நான் இல்லை எண்டு சொல்லேல்ல மச்சான். ஆனால் தலைவரும்தான் கட்டாயம் ஒராளாவது வீட்டுக்கு வர வேண்டும் எண்டு எங்களிட்ட கேட்டவர்தானே? நாங்கள் நிண்டனாங்களே? நாளைக்கு சாகப்போற கிழடுகளை பாஸ்-பிணை வச்சிட்டு உச்சி எல்லேஓடியந்தனாங்கள். அப்படி உக்ரேன் ஆம்பிளையள் அதிகம் ஓடி வந்திருந்தால் ரஸ்யாவை தடுத்து அடிச்சிருக்க முடியாதுதானேமச்சான். அததான் சொல்லுறண்டா. இனியாவது மேலோட்டமா வாசியாமல் கொஞ்சம் ஊண்டி படி சரியே. நான் உக்ரேனியனிட்ட எதையோ வாங்கி குடிக்க சொன்னதும் உனக்கு ரோசம் வந்திட்டு போல. ஆனால் நான்சொன்னதுதான் உண்மை மச்சான். உந்த ரோசம் எல்லாம் நாங்கள் ஊரில நிண்டு சிறிலங்காவிட்ட காட்டிஇருக்க வேண்டும். சரி இனி படான்ஸ் சொன்னதுக்கு வாறன். மச்சான் எமக்கு அடிச்சது எல்லாரும் சேர்ந்துதான் மச்சான். நேட்டோவிண்ட சட்டிலைட் படத்த பார்த்து, ரஸ்யன் விமானத்தில, உக்ரேன் விமானிகள், இந்தியா சீனாகொடுத்த குண்டை போட்டவங்கள். ஆக எமக்கு அடிக்காதவன், அடிச்சவன் எண்டு இதில் நாம் யார் பக்கமும் எடுக்க முடியாது மச்சான். ஆனால் 2ம் உலக யுத்தத்தில் தன்னை அழித்த அமெரிக்காவையே ஆசியாவில் தனது 1ம் நண்பன் என நம்பும்நிலைக்கு கொண்டு வந்த ஜப்பான் மாரி நாங்கள் இவங்களோட டீல் பண்ணி இருக்க வேண்டும் மச்சான். இப்படி உலக வெடிப்புகள் வரும் போது அதை சாதுரியமாக தமக்கு சார்பா திருப்பிற இனம்தான் வெல்லும்மச்சான். நாங்கள் ஊரில இருந்து ஓடி வந்து கூட்டம் கூட்டமா ரஸ்யாவிலும் பெலரோசிலும் வாழவில்லைதானே மச்சான்? கிழக்கு ஜேர்மனி போன ஆக்கள் கூட மேற்கு ஜேர்மனிக்கு ஓடி வந்ததை அவை மறக்கலாம், நான் மறக்கேல்லமச்சான். ஆகவே ரஸ்யா போல ஊரில் எமது இனத்தின் அழிப்பில் மேற்க்குக்கும் பங்கு இருக்கிறது எண்டாலும், ரஸ்யாவை போல அன்றி புலம் பெயர் தேசம் எங்கும் எமது இனம் தழைக்க, நாம் வாழ்க்கையை கட்டி எழுப்ப, எமது பலத்தை ஒருங்கிணைக்க, உதவியது இந்த நாடுகளும் அவற்றின் ஜனநாயக, பல்லின, சகிப்புத்தன்மைபண்பும்தான் மச்சான். இதற்க்கான பிரதியுபகாரம்தான் மச்சான் நான் சொன்ன விசுவாசம். ஆனால் இது நிபந்தனை அற்ற விசுவாசமாக இருக்க தேவையில்லை மச்சான். எம் இன நலன் சார்ந்து இருக்க வேண்டும். இரெண்டு தரப்பும் எமக்கு கெடுதல் செய்தாலும் ஒரு தரப்பு கெடுதல் மட்டுமே செய்ய மறுதரப்புஇரெண்டையும் கலந்து செய்துள்ளது மச்சான். தவிரவும் உனக்கு ஒண்டு வடிவா விளங்க வேணும் மச்சான். இந்த உலகில் தார்மீகமான வெளியுறவு கொள்கை(ethical foreign policy) எண்டு ஒண்டு இல்லை மச்சான். மேற்கோ, ரஸ்யாவோ, சீனாவோ, இந்தியாவோ, ஈரானோ, ஏன் சின்னம் சிறு கிரிபாட்டி தீவோ, எல்லா நாடும்தன்னலமான வெளிநாட்டு கொள்கையைதான் (self interest based foreign policy) கைக்கொள்ளுது மச்சான். இதில் நல்லவன் கெட்டவன் யாருமில்லை மச்சான். மேற்க்கு மீது வைக்கும் எல்லா குற்றத்தையும், ரஸ்யா மீதும்வைக்கலாம். ரஸ்யா மீதுவைக்க்கும் எல்லா குற்றத்தையும் மேற்க்கு மீதும் வைக்கலாம். ஆகவே சும்மா விழலுக்கு நியாயம் பிளக்காமல் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்துக்கும், ஒட்டு மொத்த உலக தமிழ்இனத்திற்கும் நீண்ட, மத்திய, குறுகிய கால அடிப்படையில் யார் பக்கம் நிற்பதால் இலாபம் என மட்டும்தான்மச்சான் நாங்கள் பார்க்க வேண்டும், பார்க்க முடியும். இலங்கை புலம் பெயர் அழுத்தத்துக்கு பயப்படுகிறது எண்டால் அது ரஸ்யாவில இருக்கிற தமிழ் ஆக்களாலயோமச்சான்? இல்லைத்தானே? இப்ப இந்த உலக யுத்தத்தில ரஸ்யா வெண்டால் - நாங்கள் இனி மொஸ்கோ, விளாடிவொஸ்டொக், சென்பீட்டர்ஸ்பேக் எண்டு போய் (போகவிட்டால்) பழையபடி முதல்ல இருந்து ஆரம்பிச்சு, அங்க பரவி, பெற்றோல்செட் வாங்கி, அங்க லோக்கல் எம்பிமார் எங்கட குரலுக்கு மதிப்பு கொடுக்கும் அளவுக்கு வளந்து வர எத்தனைபத்தாண்டுகள் பிடிக்கும் மச்சான்? அதுகுள்ள இலங்கையில பிக்குமார் எங்களுக்கு சுண்ணாம்பு தடவிமுடிச்செல்லே இருப்பாங்கள். 2009 க்கு பிறகு புலம் பெயர் தமிழர் இந்த இனத்தின் பெரிய பலம் எண்டால் - அந்த பலம் தங்கி இருப்பதுஉலகில் நேட்டோ/ மேற்கு மேலாண்மை செய்யும் வரைக்கும்தான் மச்சான். இதை விளங்கி கொண்டால் நாம் எந்த பக்கம் நிண்டிருக்க வேண்டும் என்பதை கண்ணை மூடி கொண்டுசொல்லி இருக்கலாம். அடுத்து மனிதாபிமானம் பற்றி. மச்சான் உண்மையை சொல்லுறன். ஒரு ஏதிலி தமிழனா நான் செய்ய கூடியதுஇன்னொரு ஏதிலிக்கு அனுதாபப்படுவது மட்டும்தான் மச்சான். அது உக்ரேனிய ஏதிலியா இருந்தாலும், டொன்பாசில் இருக்கு ரஸ்ய வம்சாவழி ஏதிலியா இருந்தாலும், ரெயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட இந்திய, கறுப்பின ஏதிலியா இருந்தாலும் அத்தனை பேருக்கும்இரக்கப்படுவதில், தப்பு ஒண்டும் இல்லைத்தானே மச்சான். ஏதோ எங்களில ரஸ்ய, உக்ரேனிய ரத்தம் ஓடுமாப்போல சில தமிழ் ஆக்கள் ஏன் குத்தி முறியினமோ தெரியாதுமச்சான். அரசியலுக்கு சம்பந்தமில்லாத மனிதர்கள் எங்கே துன்பப்பட்டாலும் அதை வெளிகொணரும், அனுதாபப்படும்குறைந்த பட்ச மனிததன்மை கூட எம்மில் சிலருக்கு இல்லை மச்சான். அதை விசிலடிச்சு ஸ்கோர் கேட்டுகொண்டாடியது எல்லாம் வேற லெவல் மச்சான். வடிவா கவனிச்சு பார் மச்சான், இப்படி கொண்டாடிய தமிழர்கள் பலர் அநேகம் இலங்கை ஆமி கொக்கு சுடுறதுவக்கோட திரிஞ்ச 85 காலத்துக்கு முதல் ஊரை விட்டு கிளம்பின ஆக்கள்தான். அவையள பொறுத்த மட்டில் இது Sony PS 5 இல் அவையளின் பேரப்பிள்ளையள் விளையாடும் Mortal Kombat போல இன்னொரு கேம். பதுங்கு குழிக்குள் படுத்திருந்த, மிக் வீசிய குண்டில் உயிரோடு மணலுக்குள் புதைந்து போன நண்பனைவெறும் கையால் கிளறி எடுக்க முனைந்த, நவாலி தேவாலய, செஞ்சோலை சதைகளை கைகளால் கூட்டிஅள்ளிய எந்த தமிழனுக்கும் அதே கொடுமை இன்னொருவனுக்கு நடக்கும் போது ரசித்து விசிலடிக்க மனம்வராது மச்சான். அது ரஸ்யனோ, உக்ரேனியனோ. கடசியா இவன் படான்ஸ் சொன்ன வெள்ளைகாரனுக்கு சூ (சப்பாத்து) துடைக்கிற விசயம் பற்றி. மச்சான் ஊரில சொந்த துவக்கை துடைச்சு ஆம்பிளையா, வீரமா, கெத்தா வாழ விருப்பம் இல்லாமல்வெள்ளைகாரன்ர சூ துடைச்சாவது உயிரோட வாழ்ந்தால் போதும் எண்டு ஓடி வந்த ஆள்கள்தானே உடான்சும், படான்சும்? இப்ப திடீரெண்டு அது கசக்குதோ? நாங்கள் படிக்க, உழைக்க, கார் வாங்க, வீடு வாங்க, பிள்ளை பெற, நோய் வாய்பட்டால் மருந்து தர, இலவசமாக உலகில் முதலாவாதாக வக்சீன் தர, வாங்கிய வீட்டை வாடகைக்கு விட்டுட்டு ஊரில் போய் கும்மிஅடிக்க - இதெல்லாம் செய்யயுறதுக்காக வெள்ளைகாரனின் சூ துடைக்கும் போது எமக்கு உறைக்கவேஇல்லை மச்சான். ஆனால் சண்டை எண்டோனதான் மச்சான் நாங்கள் இதுவரை துடைத்து கொண்டிருந்தது வெள்ளைகாரன் சூஎன்று நியாபகம் வருகுது எங்களுக்கு. அப்ப கூட இன்னொரு வெள்ளைகாரனுக்கு சூ துடைப்பதில்தான் எமக்கு ஆர்வம் மச்சான். இதுதான் மச்சான் எங்கட புலம் பெயர் தமிழ் இனம். தங்களுக்கு ஒரு நியாயம் மற்றவைக்கு ஒரு நியாயம். வாய்க்கு வசதியா புரட்டி புரட்டி கதமட்டும் நல்லா வரும். இப்ப சொல்லு உக்ரேனியனியனிடம் இளனி வாங்கி குடியுங்கோ எண்டு நான் சொன்னது சரிதானே மச்சான். சரி மச்சான். நாளை மறுநாள் பிரான்ஸ் அகதியளை ஏத்தி கொண்டு ஒரு கப்பல் மார்சேயில் இருந்துசோமாலியா போகுதாம். பாப்பம் இடம் கிடைத்தால் சோமாலியாவில் இருந்து கடிதம் போடுறன். நட்புடன், அன்பு நண்பன் உடான்ஸ்
  4. அனைவருக்கும் ஒரு சிறு விளக்கம் (மட்டுப்பட்டளவிலேனும்) பன்முக கருத்துக்களை உள்வாங்கும், பிரசுரிக்கும் ஒரு களமாக யாழ் இப்போது இல்லை என்ற என் நிலைப்பாட்டினால் நான் யாழில் கருத்தாடாமல் இருப்பது தெரிந்ததே. அதில் மாற்றமில்லை. ஆகவே நான் இந்த திரியில் முன்னர் போல் கருத்தாடவில்லை. இது சில யுடியூப் பதிவாளர்கள் நான் வீடியோ மட்டும் போடுவேன் என்ற நிலைப்பாடு அல்ல. அதே போல் எந்த கள உறவையும் உதாசீனம் செய்யும் நோக்கமும் இல்லை. குசலம் விசாரித்த அனைவருக்கும் பதில் போட்டுள்ளேன். தவற விட்டிருந்தால் மன்னிக்கவும். கோஷான் கருத்து பரிமாறமல் இருந்தாலும் இடைக்கிடை உடான்ஸ் சாமியார் அவதரித்து கோமாளித்தனம் பண்ணுவார். அதற்கு நீங்கள் கருத்தெழுதி ஆதரிக்க வேண்டும் என்பது கூட இல்லை (எழுதினால் சந்தோசம்) வாசித்து, சிரித்து, சிந்தித்தாலே போதுமானது. 🙏🏾
  5. வணக்கம் அண்ணா. கண்டது சந்தோசம். சாமியார் உருட்டிய உருட்டின் (ஜோசிய சோலிகளை சொல்கிறேன்) படி இதுக்கு இப்போதைக்கு வாய்பில்லை. ஆனால் என்றோ ஒருநாள் இந்த கதை இப்படித்தான் முடிய வாய்ப்பு அதிகம். கண்டது சந்தோசம் பிரபா. ஊர் பயணம், கட்டுரை அசத்தல் ரகம்.
  6. வணக்கம் அண்ணா. கண்டது சந்தோசம். இங்கே நான் ரஞ்சித்துக்கு எழுதியது என் மனதில் பட்டது. யாழில் எனக்கு இருப்பதாக நீங்கள் சொல்லும் இடம், அதை நான் தாழ்த்தி கொள்வது இவை எதையும் விட ரஞ்சித்தின் மன நிம்மதி எனக்கு முக்கியமாக பட்டதால் எழுதிய வார்த்தைகள் அவை. அதை அவர் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. கண்டது சந்தோசம் ரதி அக்கா.
  7. காலம்: டிசம்பர் 2026 இடம்: வெசாயில்ஸ், பிரான்சு அன்பு நண்பன் அமுதனுக்கு, உன் பால்ய நண்பன் உடான்ஸ்சாமியார் எழுதிக்கொள்வது. மச்சான் இங்க இப்ப நிலைமை ரொம்ப மோசமடா. ரஸ்யாகாரன் போலந்துக்கால வந்து ஜேர்மனியில் பல பகுதியை பிடிச்சிட்டான். எங்கட சனம் கொஞ்சம் ஜேர்மனில இருந்து வெளிக்கிட்டு இஞ்ச ஒரு சேர்ச்சில வந்து அகதியளா இருக்குது. நல்லா வாழ்ந்த குடும்பங்கள்…ஒரு டெண்டுக்குள்ள ஒரு குடும்பமே ஒண்டி கொண்டு சாப்பாட்டுக்கு அடுத்தவன்கையை எதிர்பார்த்து நிற்குதுகள். 45 வயதுக்கு கீழ்பட்ட ஆக்கள் எல்லாம் கட்டாயா இராணுவத்திலசேந்திட்டினம். மிஞ்சி வந்திருக்கிற ஆக்கள் கண்ணில் அப்படி ஒரு மரண பயம் தெரியுது மச்சான். என்ர மகனையும் பிரான்சு கட்டாய இராணுவ பணிக்கு எடுத்து கொண்டு போட்டாங்கள். போன கிழமைஉப்பிடிதான் ஒரு தமிழ்பிள்ளை, பெற்றாருக்கு ஒரே மகள் - ரொமேனியா போடரில் நிக்கேக்க ரஸ்யண்டபொஸ்பரஸ் குண்டு பட்டு ஆள் அந்த இடத்திலயே அவுட். மகனுக்கு என்ன நடக்குமோ எண்டு நாங்கள் பயந்து கொண்டு கிடக்கிறம் மச்சான். தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை. லண்டன் பக்கம் நிலமை இன்னும் மோசம். லண்டனில அணுகுண்டு அடிச்ச பிறகு மிஞ்சின சனம் எல்லாம் ஸ்கொட்லாண்ட், வேள்ஸ் பக்கம் போய் வயல்களில நாட்கூலிக்கு நிக்குதாம். கோவில், கோபுரம் எண்டு இப்படி எங்கட தமிழ்ச் சனம் இருந்த ஊர் லண்டன்? இப்ப ஒரு புல் பூண்டு கூட இல்லையாம் மச்சான். கனடாவும் அதேநிலைமைதான். பார் மச்சான் எங்கட நிலமையை. ஊரில வந்து இருப்பம் எண்டால் ஐரோப்பிய அகதியளுக்கு இடம் இல்லைஎண்டு இலங்கை சொல்லி போட்டுது. இந்திய வம்சாவழி எண்டால் இந்தியா எடுக்குது. நாங்கள் என்ன செய்ய? எல்லாம் ஊழ்வினையோ? எண்டும் யோசிக்க வருகுது மச்சான். ஊரில முதல் வெடிச்சத்தம் கேட்டதும் கிளம்பி ஐரோப்பா வந்த ஆள் நான். பிறகு சனம் அங்க சாகும் போதுகொஞ்சம் காசை அனுப்பி போட்டு, இரெண்டு போராட்டத்தில முகத்தை காட்டி போட்டு, மக்கள், போராளிகள்அழிவை ஏதோ கிரிகெட் ஸ்கோர் கேட்பது போல எல்லே கேட்டு கொண்டு இருந்ததான். இப்ப ஒரு நாலு வருசத்துக்கு முதல் இந்த உலக மகா யுத்தம் தொடங்கேக்க, உக்ரேன் சனத்தின்ர சாவை கூடஇப்படிதானே “சணல் அடி” “நல்ல வெளுவை” எண்டு விசிலடிச்சு ரசிச்சனான். ரஸ்யா உக்ரேனை போட்டு வெளுத்த நேரம், வெளிநாட்டில் இருந்த உக்ரேன் சனம் எல்லாம் நாட்டுக்காக, இனத்துக்காக சண்டை பிடிக்க உக்ரேன் போனது. பொம்பிளையள், பிள்ளையளை போலந்துக்கு அனுப்பிபோட்டு, ஆம்பிளையள் நிண்டு சண்டை பிடிச்சவங்கள். எங்கட ஊரில? நாங்கள் வெக்கம் கெட்டு கோழையள் மாரி ஓடி எல்லே வந்தனாங்கள். சனமும் போராளியளும் அங்க சாக, நாங்கள் கொழும்பிலயும், பரிசிலயும், லண்டனிலயும், டுசிள்டோபிலயும், டொராண்டோவிலயும் வீடு வாங்கிற, கடை வாங்கிற, பிள்ளையள டொக்டர் ஆக்கிற பிசியில எல்லே திரிஞ்சனாங்கள்? எதோ சில இணைய தளங்களில் போய் பத்தி பத்தியா எழுதினத தவிர நாங்கள் வேற என்ன செய்தம் எங்கட இனத்துக்கு? புலம்பெயர் உக்ரேனியனிட்ட, புலம்பெயர் தமிழன் எதையோ வேண்டி குடிக்க வேணும் மச்சான். 1985 க்கு பிறகு ஊருக்கு போராட போன, அல்லது பிள்ளையள போராட அனுப்பின புலம்பெயர் தமிழன் எண்டுயாரும் இல்லைத்தானே மச்சான். மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு விசுவாசம் மருந்துக்கும் இல்லை மச்சான். ஊரில சண்டை வந்த போது அங்க விசுவாசமா நிண்டு போராடாமல் மேற்கு நாட்டுக்கு ஓடி வந்து பிச்சைஎடுத்தம். ஆனால் பிச்சை போட்ட நாட்டுக்கும் நாம் விசுவாசம் காட்டேல்ல மச்சான். அந்த நாடுகளுக்கு ரஸ்யாவோட பிரச்சனை எண்டால் - நாங்கள் அதில நியாயம் பிளக்க எல்லோவெளிகிட்டனாங்கள். நாங்கள் இனத்தின் இருப்பு பற்றி யோசிக்கிற ஆக்கள் எண்டால், ரஸ்யாவோட நிற்பதை விட மேற்கோடு நிற்பதுபுலத்திலும், புலம் பெயர்ந்தும் வாழும் நாட்டிலும் தமிழர் நலனுக்கு ஒப்பீட்டளவில் நல்லது எண்டு உணர்ந்துநடந்திருப்பம் மச்சான். ஆனால் நாங்கள்தான் மந்தைகள் ஆச்சே மச்சான். எங்களுக்கு சுய புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை. ஸ்கோர் கேட்டு கைதட்ட மட்டும்தான் தெரியும். சரி மச்சான் கனக்க எழுதி போட்டன். இனி ஐரோப்பாவில்/கனடாவில் முன்னர் போல் தமிழர் பரம்பல் இராது. ஆகவே இந்த நாட்டு அரசுகளை நெருக்கி, நாட்டில உங்களுக்கு கொஞ்சம்தன்னும் விடிவை தர முயற்சிக்க கூட இனி முடியாது. தவிரவும் ரஸ்யா, இந்தியா, இலங்கை இரெண்டுக்கும் நல்ல நண்பந்தானே. ஆகவே இனி இலங்கைக்கு வெளி அளுத்தம் எண்டு ஒண்டு மருந்துக்கும் இருக்கபோவதில்லை. குறைந்த பட்சம் உங்களுக்கு உயிராவது மிஞ்சும் எண்டு சந்தோசப்படு மச்சான். இஞ்ச அதுவும் சந்தேகம்தான். அடுத்த முறை எழுத கிடைத்தால் - அதுவரை, நட்புடன், உடான்ஸ் சாமியார் (யாவும் கற்பனையாக இருக்கட்டும்)
  8. ரஞ்சித், நீண்டகாலம் பழகிய உரிமையில் சொல்கிறேன். நீங்களும் விடை பெற வேண்டிய காலம் அண்மித்து விட்டது. Save your sanity 🙏🏾.
  9. கிரிப்டோ, பங்குகள், இண்டெக்ஸ் எல்லாம் ஒரு 30 நிமிடத்தில் கீழிறங்கியுள்ளன அண்ணா. வட்டி வீதத்தை இனி கூட்டுவோம் என FED கூட்டத்தில் முடிவாகியதன் பின். https://www.cnbc.com/2022/01/05/fed-minutes-december-2021.html
  10. In other news - பிட்காயின் 25, 32,38 வரை குறையும் என்கிறார்கள் சிலர்.
  11. எனக்கு வடிவா சொல்லத்தெரியேல்ல. என்ன காரணதுக்காக இது நல்லா விற்பனையாகும் என சொல்கிறார்கள்? அதிக திறனானான பேட்டரி, விலை பலமடங்கு குறைவு, இப்படி ஏதாவது சொல்லபடுகிறதா? GM, Tesla, VW, Volvo என giants பலரும் இப்போ முழு மூச்சாக இறங்கியுள்ள துறை. unique selling point இல்லாவிட்டால் கஸ்டமாய் இருக்கும். டெஸ்லாவின் யூ எஸ் பி - ஈலோன் மஸ்க். மற்றும் first off the block என்பது. NIO என்று இன்னுமொரு கம்பெனி பற்றியும் இப்படி ஒரு வருடம் முதல் கதைத்தார்கள். Fear of missing out (FOMO) உடன் டீல் பண்ணுவதும் ஒருவகையான உளவியல் சாவால்தான் .
  12. அதிகம் தெரியாது. இப்போ பார்த்த போது, insiders மிக அதிகமாக அண்மையில் பங்குகள் வாங்கி இருப்பதாக தெரிகிறது. 3 ஆலோசகர்களின் சராசரி ஆலோசனை. Moderate buy யாக உள்ளது.
  13. இல்ல நான் என்ன சொல்லுறன் எண்டா… நீங்களும் கு சா அண்ணையும் எப்போதும் திண்ணையில் பல்வேறு விடயங்களை, நலம் விசாரிப்புகளை, பகிடிகளை செய்வது வழமை. நீங்கள் வராதபடியால் அதை நாமும் சில சமயம் திரிகளில் தொடர்கிறோம். ஆனால் திரிகளில் அது சம்பந்தமில்லாமல் அரட்டுவதாக நிர்வாகம் அதை தூக்குவதும் உண்டு. இந்த அலுப்பை விட திண்ணைக்கே ஷிப்ட் ஆனால் சாவகாசமா கதைக்கலாம். நிர்வாகத்துக்கும் வேலை குறையும்.
  14. பாஸ், அதெல்லாம் பழைய கதை. போகி வருகிது, எல்லா குப்பையையும் போட்டு எரிச்சு போட்டு, கேட்டமாரி ஒரு கடிதத்தை கொடுத்து விட்டு திண்ணைக்கு வாங்க பாஸ். நாங்களும் உங்களோட ஒவ்வொரு திரியா அரட்டை அடிக்க அதை நிர்வாகம் வந்து தூக்க -அவையும் பாவம்தானே🤣. நிர்வாகத்துக்கு பாவம் பாத்தாதல் வாங்க பாஸ் 🙏🏾.
  15. அவருக்கு லெட்டர் எழுதுறெண்டால் செரிப்பழத்தை ஐஸ்கிரீமில முக்கி அடிக்கிறமாரி, சும்மா வளைச்சு, வளைச்சு எழுதுவார்🤣. கருணாநிதி, சம்பந்தருக்கு அடுத்து கடிதம் எண்டால் அது @குமாரசாமிஅண்ணைதான். சாட்டோட சாட்டா @பெருமாள்யும் கடிதம் எழுத சொல்லுவம். இரவிரவா திண்ணையில எமக்கு துணை அவர்தானே. என்னெண்டாலும் லண்டன் உறவெல்லே. உங்க பாக்கேல்லையே ஜேர்மன் உறவுகள் ஜாமீன், மேல ஜாமீன் போடுறதை 👍🏿.
  16. பதிலுக்கு நன்றி வசி. சுணங்கியமைக்கு மன்னிக்கவும். உங்கள் இணைபுக்களையும் பார்த்து விட்டு எழுத நினைத்தேன். பெரிதாக எதையும் திட்டமிடவில்லை. Remote working tech portfolio ஒன்றில் சிறியளவு முதலை போட்டு வைத்துள்ளேன். வைரஸ் பரவல் அதிகமாகி ஏர் லைன், குரூஸ் சேவைகள் முடங்கினால் - இந்த பங்குகள் உயரும் என்ற எண்ணத்தில். அதேபோல் அஸ்ராசெனக்கா, பைசர் பங்குகள் - நோய் தாக்கம் கூடினால் இவை கூடக்கூடும். ஒரு pharma portfolio விலும் போடலாம் என யோசிக்கிறேன். ஹோட்டல் பங்குகள் - யூகே ஹோட்டல்கள்தான் - ஆகவே, பிரயாண தடை வந்தாலும் உள்நாட்டு staycation மூலம் அவை மேல் எழக்கூடும். ஏலவே உள்ள கிரிப்டோ முதலீடும் (தங்கம் போல்) - லாக்டவுன் வந்தால் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன். இவைதான் எனது attempts to hedge the risk. அத்தோடு அண்மைகாலத்தில் கிரிப்டோவில் கொஞ்சம் அதிகமாகவே மினகெட்டு விட்டேன் - ஆகவே இப்படி செய்தது diversification ஐ கூட்டும் எனவும் நம்புகிறேன். இதை flag பண்ணியதற்கு நன்றி. நீங்கள் சொன்ன பின் தான் நானும் அவதானித்தேன். கிரிப்டோபில் கூட என் பெரும்பாலன holdings இருப்பது XRP யில். கிரிப்டோவில் அதையும் counter trend எனலாம் என நினைக்கிறேன். இதை பலன்ஸ் பண்ண வேண்டும். Trend க்கு இசைய அப்பிள், கூகிள் என கொஞ்சம் வாங்கலாமோ? எனது இயற்கையான ஆர்வம், கல்வி பின்புலம் காரணமாக தரவுகளை ஆராய்வது, நிகழ்வுகளின் அடிப்படையில் forecast பண்ணுவது ஓரளவு ஈசியாக உள்ளது. வரைபுகளை வைத்து டெக்னிக்கலாக செய்வது மிக கடினமாக உள்ளது. முயற்சி செய்யாமல் இல்லை. உங்களுக்கும் கடஞ்சாவுக்கும் யாழுக்கு வெளியான நண்பர்களுக்கும் நன்றி. ஆனால் ஏனையோரின் கருத்தில் தங்கி இருக்கும் இந்த நிலை - எனது அப்ரோச்சின் மிக பெரும் ரிஸ்க். கணிப்பு தவறினால்? என் அணுகுமுறை 1. முற்றிலும் இழக்க கூடியதை மட்டுமே முதலிடுவது 2. பச்சையில் இருக்கும் போது மட்டுமே வெளியேறுவது 3. CFD அறவே செய்வதில்லை (கையை சுட்ட அனுபவம் உண்டு) கொஞ்ச முதலீடு, மிக கொஞ்ச லாபம்/நட்டம், அதிக டென்சன் இல்லை. ஆனால் கிரிப்டோவில் முழுவதையும் இழக்க வாய்ப்பு உண்டு. நிச்சயமாக ஒரு தொழிலாக செய்ய இந்த அணுகுமுறை உதவாது. பைசர் நீண்ட கால நோக்கில் நிச்சயம் நல்ல தேர்வு. ஆனால் இப்போதைக்கு நல்ல செய்தி எல்லாம் வந்து முடிந்து விட்டதாக தெரிகிறது (famous last words🤣). ஆலோசனையை பார்த்தால் sell 0% hold 61% buy 39%. தவிரவும் மிக பெரிய நிறுவனம் (market cap) ஆகவே மெதுவாகவே அசையும். போனவருடம் ஒரு புதிய கம்பெனியை உருவாக்கி - சில பழைய மருந்து patents ஐ அதற்கு கொடுத்தார்கள். அதேபோல் mRNA ஆராய்சி மூலம் கான்சர் மருந்து போன்றவறை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது. இவை பைசருக்கான நல்ல காரணங்கள். Long term hold என்றால் நிச்சயம் வாங்கியது நல்ல நகர்வே. Short term trade என்றால் சொல்ல தெரியவில்லை (டெக்னிக்கலாக நன்று என்றால் வாங்கலாம் என நினைக்கிறேன்).
  17. 1. இதில் சொல்லபட்ட எனது கருத்தின் அடிப்படையில் சில விமான, குரூஸ், கொட்டல் பங்குகளை 2 கிழமைக்கு முன் வாங்கினேன். அப்போ 52week low விற்கு அண்மையாக விலைகள் இருந்தன. இப்போ கொஞ்சம் கூடி உள்ளது. இப்போதும் வாங்கும் வாய்ப்பு என்றே நினைகிறேன். ஏனையோர் என்ன நினைகிறீர்கள்? 2. BTC 46K இல் bottom அடைந்து விட்டது என்கிறார்கள் ? உங்கள் கணிப்பு என்ன சொல்கிறது? கடஞ்சா, இது நம்பகமான லிங்கா? இந்த bot தரும் tasks ஐ நீங்கள் செய்து விட்டீர்களா?
  18. நம்மள எல்லாம் வச்சிகிட்டு விடுமுறையா, வாய்ப்பில்ல ராஜ, வாய்ப்பில்ல🤣.
  19. 🤣 ஆனால் நானும் எங்கட அமெரிக்கன் ஐயா மாரி தடவல் தொழில்நுட்பம்தான். எலிகள் இல்லை. ஆகவே இது வேற ஏதோ சிக்கல். மோகன் அண்ணை சிக்கலை கண்டு பிடிச்சிட்டாராம். ஆனால் தீர்வுதான் இன்னும் இல்லையாம். நன்றி அண்ணா. 🤣 கொடுமை கொடுமை எண்டு கோயிலுக்கு போனால்……🤣
  20. மோகன் அண்ணா, நான் மேலே படங்கள் இணைத்துள்ளேன். இவை இன்று யாழின் முகப்பை எடுத்த screen shots. ஆனால் தகவல்கள் எல்லாம் 23 டிசம்பர் திகதியிலேயே நிக்கிறது. நான் கடந்த ஆறு மாதமாக ஒரு மாற்றமும் செய்யவில்லை. யாயினியும் இதே போல் விடயம் என்றே சொல்கிறா. பிகு எனது வேலை போன் VPN மூலம் இணையத்தை அணுகும். அதில் போய் (லொக் இன் இல்லாமல்) - பார்த்தாலும் இப்படித்தான் காட்டுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.