Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. சில விடயங்களை மீளப் போய் பார்ப்பது - நாம் விடயங்களை சரியாக அணுகுகிறோமா இல்லையா என கணிக்க உதவும். மேலே எழுதியது 11 மாதங்களுக்கு முன். உக்ரேன் போருக்கு முன். பணவீக்கம் இப்போ 8% தொடுகிறது. வங்கியின் வட்டி வீதம் 1.75. இன்னும் இரு வாரத்தில் 2.25 ஆகலாமாம். அடுத்த வருட ஆரம்பத்தில் பணவீக்கம் 22% ஆகலாம் என்கிறது கோல்ட்மன் சாக்ஸ். அப்போ வங்கி வீதம் 5%? ஆக கூடும்? என்றால் மோர்ட்கேஜ் 5 வருட டீலுக்கு 8% ? https://www.theguardian.com/business/live/2022/aug/30/pound-uk-recession-economy-mortgages-energy-market-gas-business-live
  2. ஓம். பிஜேபி செய்யாவிட்டாலும் தமக்கு ஆபத்து என நினைத்தால் குடும்பம் செய்யும்.
  3. பகிர்வுக்கு நன்றி. பி டி ஆர் - சொல்வதுதான் உண்மை. இத்தனை வேறுபாடுகள் கொண்ட ஒரு நாடு, வாள்முனையில் அல்லாமல் (கஸ்மீர் தவிர்த்து) 75 ஆண்டுகள் நிலைத்ததே அதிசயம்தான். ஆனால் அதிசயங்கள் எல்லாம் முடிவுக்கு வருவதுதானே இயல்பு. இந்திய அதிசயத்தை முடிக்க வந்த தூதர்கள்தான் சங்கிகள். இஸ்லாமியர்கள், தேசிய இனங்களுக்கான வெளியை சுருக்கி, சுருக்கி இனி இங்கே இருக்க முடியாது என்ற நிலைக்கு இந்தியாவை இட்டு போக கூடிய ஒரே சக்தி சங்கி கூட்டம்தான். அந்த வகையில் தமிழ் தேசியத்துக்கு இது உவப்பான செய்திதான்.
  4. அருமையான பதிவுகள் வசி. கலை சொற்களை விடாப்பிடியாக தமிழில் எழுவதற்கு 👏. இந்த திரியில் எழுதுவது குறைந்து விட்டாலும் வாசிப்பது குறையவில்லை.
  5. வழமையாக நான் யூட்டியூப் பதிவுகளை குறிப்பாக வரலாறு சம்பந்தமான பதிவுகளை கரிச்சுகொட்டுவேன்🤣. ஆனால் உண்மையிலேயே இது “பராவாவில்லை ரகம்”. ஆனால் ரவிதாசனும் ஏனைய இருவரும் உத்தம சோழன் காலத்தில்தான் கண்டு பிடிக்க பட்டனர் என்பது ஆதாரபூர்வமாக நிறுவபட கூடியதாக தெரியவில்லை. அவர்கள் தண்டிக்கபட்டதாக கூறும் கல்வெட்டு ராஜராஜன் காலத்துக்குரியதே. அதற்கு முன்பே, உத்தம சோழன் ஆட்சியில் அவர்கள் கண்டுபிடிக்க பட்டார்கள் என்பதற்கு ஆதராம் இருக்கிறதா? அறிந்தோர் சொல்லவும். எனக்கு உத்தம சோழன் மீதுதான் சந்தேகம். அநிருத்த பிரம்மராயருக்கு பின், உத்தம சோழன் கொலையாளிகளில் ஒருவரை பிரதம அதிகாரி ஆக்கினான் என்பதும். 16 வருடம் பட்டத்து இளவரசனின் கொலை மர்மம் துலங்காமல் இருந்தது என்பதும், ராஜராஜன் ஆட்டி கட்டில் ஏறியதும் கொலையாளிகள் தண்டிக்கபட்டனர் என்பதும் உத்தம சோழன் நோக்கி கையை காட்டுகிறது. அடுத்து உத்தம சோழனுக்கு கொலை செய்ய முகாந்திரம் இருந்தது. கண்டராதித்தனின் மகனாக அவரே வந்திருக்க வேண்டிய பட்டத்துக்கு, ஆதித்தன் வருகிறார். உத்த சோழன் தான் கொலையை செய்தார் எனில் ஏன், ராஜராஜன், 1. அவருக்கு பட்டத்தை விட்டு கொடுத்தார்? 2. ஏன் கொலையாளிகளை கொல்லாமல் விட்டார் என்ற கேள்விகள் எழுகிறன. ஒன்றில் ராஜராஜன் இதை உத்தம சோழன் செய்திருப்பார் என நம்பவில்லை, அறியவில்லை அல்லது சோழ வம்சத்தில் பட்டத்துக்காக சகோதர கொலை நடந்தது என்பதை பதிவு செய்ய அவர் விரும்பாமல் போகலாம். ஆனால் இந்த கொலைக்கான பழி தீர்தலாகவே காந்தளூர் சம்ஹாரத்தை நிகழ்த்தினார் என நான் நம்புகிறேன்.
  6. ஐயரபாத் ரெட்ஹில்ஸ் விலை ஏற்றம் போல் இங்கேயும் ஒரு செங்குத்தான விலை ஏற்றம் வருமோ?
  7. ஐயர்வாள் மதுரையை தரம் உயர்த்தி பலாலி-மதுரை சேவையை நிரந்தரமாக்க வேண்டும். எப்போ விமானடிக்கெட் பார்த்தாலும் டெல்லி மிக மலிவாக இருக்கும். சென்னை அப்படி இல்லை. இடப்பற்றாகுறை தரையிறங்கு கட்டணத்தை அதிகரிக்க வைத்துள்ளது என நினைக்கிறேன். திருப்பதி போபவகளுக்கு பரந்தூரில் இறங்குவது வசதியாக அமையும் என எண்னுகிறேன்.
  8. ஓம் நான் இங்கே பச்சை தண்ணி என்றது சோமபானம் கலக்காத தண்ணியை. சூடான திரவத்தை அருந்துவது வியர்க்க வைப்பதன் மூலம், வியர்வை ஆவியாவதன் மூலம் உடலை குளிர்விக்கும் என்பது சரிதான்.
  9. 😢 மூண்டு ஆலோசனைகள் 1. நிறைய பச்ச தண்ணி 2. நிறைய பச்ச தண்ணி 3. நிறைய பச்ச தண்ணி
  10. நீங்கள் சொல்லும் இசைவாக்கம் ஒரு காரணியாக இருப்பினும் அது மட்டும் இல்லை. ஏனென்றால் அங்கே இப்போதும் போய் காண்டாவன நேரம் நிண்டிருக்கிறேன் ஆனால் இங்கே போல் உணருவதில்லை. அதே போல் இலங்கையில் கூட 38 என்பது அகோர வெய்யில்தான். 40 எல்லாம் டெல்லி, அபுதாபி பக்கம்தான். https://www.dailymirror.lk/breaking_news/SL-experiencing-highest-temperatures-in-140-years:-Prof--Jayaratne/108-165441 இங்கே பாருங்கள் 👆. 37 ஐயே வரலாறு காணாத வெப்ப நிலை என்கிறார்கள் இலங்கையில் (2019இல்). நீங்களும் இப்போதும் அடிக்கடி ஊருக்கு போறவர். உண்மையை சொன்னால் நான் வெய்யிலில் இப்போதும் அதிகம் நிற்பது எண்டால் ஊரில்தான். இங்கே ஒரு 5 நாள் அடிக்கும். பொதுவாக வார நாளில். ஆகவே வீட்டில்தான். ஆனால் ஊரில் நல்ல வெய்யிலில் திருவிழா, பீச், கிரிகெட் மச் - ஆனால் இங்கே இருப்பது போல் தோலை சுடும் வெப்பத்தை உணர்வதில்லை. உண்மை. மேலே தந்த கட்டுரை இதை ஆமோதிக்கிறது.
  11. என் அனுபவத்தில் அதே 38 பாகை வெய்யில் என்பது ஊரை விட இங்கே அதிக செறிவுடன் இருப்பதாக நான் உணர்கிறேன். வேறு யாரும் இப்படி உணர்வதுண்டா? மத்திய தரை கோட்டுக்கு அருகில் இருக்கும் வெய்யில் போல் அல்ல tropic of cancer/ capricorn (கடக/மகர கோடு) அருகில் உள்ள நாடுகளில் சமர் காலத்தில் விழும் வெய்யில் ? பூமி 23.5 பாகை சாய்ந்துள்ளதால், சம்மர் காலத்தில் சூரியனுக்கு அருகில் வட தென்னரை கோளங்கள் வரும். ஆனால் மத்திய தரை பகுதி எப்போதும் சூரியனில் இருந்து தூரத்திலேயே இருக்கும். இதனாலேயே ஊரில் 38பாகை வெய்யிலை விட இங்கே 38 பாகை வெய்யியில் அதிக intense ஆக உள்ளது? இது எனது விளக்கம் மட்டுமே, பிழையாகவும் இருக்கலாம். யாரும் விசயம் தெரிந்தவர்கள் இதை விளக்கினால் நல்லம்.
  12. நல்ல வேளை கோட்ட ஓடும் போது இதை போட்டு கொண்டு ஓடேல்ல😆
  13. அடடே பிளேனுக்கே தண்ணி காட்டிடாங்களே🤣
  14. மிஞ்சப்போவது வெறுமை அதை சொல்லும் கருத்துப்படம் அருமை.
  15. உங்கள் நட்புக்கும் நன்றி பிரபா🙏🏾.
  16. புட்டினும் புதுமாத்தளனும் - இறுதிப்பாகம் இடம் - அடிஸ் அபாபா காலம் - நல்ல காலம் இல்லை அன்பு நண்பன் அமுதனுக்கு, உடான்ஸ் சாமியார் எழுதி கொள்வது. மச்சான், போன முறை எழுதும் போது சோமாலியா போறன் எண்டு எல்லே எழுதினான் மச்சான், ஆனால் உந்த ஏஜென்சிகாரன் படுபாவி எத்தியோப்பாவில இறக்கி விட்டுட்டு எஸ்சாய்யிட்டான் மச்சான். ஆனால் எத்தியோப்பியா எண்டதும் நாங்கள் குறைவா நினைச்சது சரியான பிழை மச்சான் - இந்த பகுதிக்குள் வரும் ரிப்ட் சமவெளிதான் மனித நாகரிகத்தின் தொட்டிலாம் மச்சான். அது மட்டும் இல்லாமல் அபிசினியா எண்டு ஒரு பெரும் சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆண்ட மக்கள் கூட்டம் மச்சான் இவங்கள். ஆரம்பகால முஸ்லீம்கள் அரேபியாவில் இருந்து துரத்து பட்டு அகதியா வந்த போது அடைக்கலம் கொடுத்த செல்வம் கொழித்த கிறிஸ்தவ நாடும் கூட. பார் மச்சான் நிலமையை இப்ப - பஞ்சம் எண்டதுமே நினைவுக்கு வரும் ஒரு இனமாக மாறிப்போட்டுது. கிட்டதட்ட எங்கட கதையும் இது மாரித்தானே மச்சான்? ஆனாலும் மனசை விடாத மச்சான், கீழ போறது எல்லாம் மேல வரும். ஒவ்வொரு அஸ்தமனத்தின் பின்பும் ஒரு உதயம் வந்தே தீரும். இடையில் வரும் இரவுகளை மெழுகுதிரி கொண்டு கடப்பதுதான் புத்திசாலித்தனம். சரியடா மச்சான், கனக்க எழுத மனமில்லை. இந்த கடிதம் கொண்டுவாற சேவையும் மாசகடைசியோடு நிக்கப் போதாம். இனிமேல் நான் கடிதம் போடுறது சந்தேகம்தான். சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் எழுதுறன். பின்ன வரட்டே. என்றென்றும் நட்புடன். உடான்ஸ் சாமியார்
  17. நல்லதொரு படைப்பு பகிடி. எழுத்துப்பிழை ஓக்கே, கருத்து நேர்த்தியாக இருக்கிறது. பக்கம் சாராமல் நேர்மையாகவும் இருக்கிறது 👏🏾.
  18. இங்கே நாங்கள் எல்லாம் உக்ரேனை கூகிள் மப்பில் (மப்பிலும்) பார்த்த கூடங்கள்தான். அந்த மக்கள் பற்றிய உங்கள் அனுபவங்கள் எப்படி? அவர்கள் பெரும்பாலும் இன, நிற வெறியர், நாஜிகள் என பலரும் மேற்கு ஐரோப்பாவில் இருந்து சொல்வது எந்தளவு உண்மை. எனது வேலையின் நிமித்தம் உக்ரேனில் இருக்கும் மட்டுபட்ட நாஜி பிரசன்னம் பற்றி அறிந்துள்ளேன். ஆனால் இது பல்கேரிய, ஹங்கேரி ஏன் ஜேர்மனியில் கூட உள்ள விடயம்தான். இதை விடவும் மேலதிகமாக இன வெறியர்களா உக்ரேனியர்கள்? உங்கள் அனுபத்தில்?
  19. சும்மா திண்ணையில உலாத்த வந்த என்னை இழுத்து விட்டதும் இல்லாமல் நக்கல் வேற 🤣
  20. டமார்…..காதை கிழிப்பது போல ஒரு பெரும் சப்தம். எங்கும் கந்தக நெடி… நாசி எங்கும் ரத்தமும், சதையும் கந்தகமும் நிரம்பி மூச்சு முட்டுவதை போல ஒரு உணர்வு. ஓடு…ஓடு…பங்கருக்குள் ஓடு…மனம் ஆட்காட்டி பறவையாய் ஓலமிடுகிறது. எப்படியாவது உயிர் வாழ்ந்து விட்டால் போதும் என்ற உத்தரிப்பு. பெரியார், கால்மார்க்ஸ், கடவுள் மறுப்பு எல்லாம் கண நேரத்தில் மறந்து போக, வாய் தன் பாட்டில் “நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க” என முணுமுணுக்கிறது. இங்கே அருகில் மரம் போல கிடப்பது அப்பாவா? “அப்பா எழும்புங்கோ, மிக் அடிக்குது பங்கருக்க ஓடுவம்”. இந்த மனிசன் ஏன் அசையாமல் கிடக்குது…. உடம்பு வேற சில்லிட்டு போச்சு…. ஐயோ அப்பா…எழும்பனை எண்ட ராசா…. இதோ இன்னொரு மிக்கின் மிகை ஓலி வெடிப்பு. வேற வழி இல்லை கட்டிலுக்கு கீழ பாயுவம். பொத்…..எங்கும் ஒரே இருட்டு….. திடீரென லைட் எரிகிறது ….. “என்னப்பா மறுபடியும் கனவே….” சலித்துக்கொண்டு கட்டிலுக்கு திரும்புகிறாள் 83 இல் கைக் குழந்தையாக வெளி நாடு வந்து விட்ட மனைவி. கட்டிலில் நாளை வாட்டர் பார்க் போகும் சந்தோசத்தோடு சலனம் இன்றி உறங்கிகொண்டிருக்கிறான் மகன். அப்பா? போடா பைத்தியக்காரா என ஏளனமாக சிரிக்கிறது கட்டில் அருகே இருக்கும் விளக்கு மேசையின் கால். மறுநாள் “மிஸ்டர் ராஜு உங்களுக்கு இருப்பது சிறுவயது யுத்த அனுபவங்கள் தந்த Post Traumatic Stress Disorder - நீங்கள் கொஞ்சகாலம் இந்த உக்ரேன் செய்திகளை பார்க்காமல் விடுங்கள்”. அட்வைஸ் பண்ணுகிறார் ஆங்கில வைத்தியர் மில்லர். “உங்கள் வலியை என்னாலும் உணர முடிகிறது ராஜு”. மில்லரின் கண்கள் பரிவை சொரிகிறன. “இது வலி இல்லை டாக்டர், வடு. ஆழ்மனதில் பதிந்து விட்ட அனுபவச் சுவடு. இன்னுமொருவனுக்கு அதுவே நடக்கும் போது இந்த சுவடு என்னை அறியாமலே தலையை தூக்கி பார்க்கும். இதை நீங்கள் அறியவோ, உணரவோ முடியாது”. வாய் வரை வந்த வார்த்தைகளை வலுகட்டாயமாக விழுங்கியபடி, “தங்க்யூ டொக்டர்” வினநயமா விடை பெற்றான் ராஜு.
  21. கோசான் தேவையில்லாத இடங்களில் தலையை நுழைப்பதால் ஏற்படும் பின் விழைவுகளை தவிர்க்க?🤪

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.