Everything posted by goshan_che
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
அதே. நன்றி நன்னி. 🤣. பார்த்திருக்கவே புரட்டும் நரி. யாரும் பார்க்கவில்லை என்றால் தான் பாவபட்டு காக்கைக்கு வடையை விட்டு கொடுத்தேன், காக்கா வேண்டாம் என்றது என்றும் நரி சொல்லக்கூடும். நன்றி சுவை அண்ணா.
-
தையல்கடை.
அருமை @suvy அண்ணா. எனக்கு கதை தேவையான அளவு இருந்ததாகவே தோன்றுகிறது. இப்படி கோர்வையாக, கனமாக, நீளமாக, ஆனால் விறுவிறுப்பு குறையாமல் எழுதுவதெல்லாம் ஒரு வரம். # தையல்கடை # தொய்வில்லாத தையல்
-
படம் கூறும் கதைகள்
ஓம். இப்படி கனக்க இருக்கு. ஊரில் சைக்கிள் வச்சிருந்தா… போக், ப்ரிவீல், சொக்கச்சோவர் போன்ற பதங்களை கேட்டிருப்போம்….. அவை முறையே…fork, freewheel, shock absorber ஆகும். பிகு படங்களை தொடரவும்🙏🏾.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
நன்றி அண்ணா. நானும் தொடர்களை இப்படித்தான் வாசிக்கிறேன். ஏனைய திரிகளில் என் பதில்கள் சுணங்கி வருவதை கண்டிருப்பீர்கள்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
இரெண்டுமே பிரச்சனைதான் மீரா. 1. நீங்கள் சொன்னது போல் காசை மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது. காசை வைத்து வாங்க பொருள், சேவைகள் இருக்க வேண்டும். இந்த நிச்சயமற்றதன்மை இலங்கையில் முன்பு போர்க்காலத்தில் கூட இருந்ததில்லை. இது ஒரு காரணம். அரிசி இறக்குமதி தீர்ந்து விட்டது என்றால் £50 உலையில் வைத்து வடித்து சாப்பிட முடியாது. போனவாரம் ஒருவரை சந்திதேன். பள்ளி நண்பர். மத்திய கிழக்கில் வேலை. நிகர மாத வருமானம் வரி இன்றி பவுண்சில் 10K எடுக்கிறார். இலண்டன் வரும் போது எபோதும் சந்திப்போம். இலங்கையில்தான் இதுவரை வீடு, முதலீடு எல்லாம். இந்த முறை சந்திப்பின் போது கேள்வி எல்லாம் - எப்படி இங்கே குடும்பத்தோடு வருவது என்பதை பற்றியே இருந்தது. இது ஒரு பாஷன் அல்லது trend அல்ல. மிக கவனமாக தமதும், பிள்ளைகளினதும் எதிர்காலத்தை திட்டமிட்டு, இலங்கையில் பல முதலீடுகளை செய்தவர்கள் - இப்போ இப்படி யோசிக்கிரார்கள். நாங்கள் வெள்ளைகாரன் பண்ணை வைக்கிறான் எண்டு பேய் கதை கதைக்கிறம். இது ஒன்றும் புதிதல்ல, வெள்ளைகளில் ஒரு adventure தேடி போக கூடிய பலர் உள்ளார்கள். 1991-96 ஆண்டு கால காபூலில் கூட கடை போட்ட ஆங்கிலேயன் இருக்கிறான். 2. இன்னொரு காரணம் - சுதந்திரம் இன்மை. இலங்கையில் தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் இதை அனுபவித்து இருப்பர். இன்றைக்கும் முகத்தை காட்டி பயமின்றி முக நூலில் நம்மாள் பிரித்தானிய படைகள் ஈராக்கில் போர்க்குற்றம் செய்தன என எழுத முடியும். முடிந்தால் ஓணாண்டி அப்படி இலங்கை படைகள் பற்றி எழுதட்டும் பார்ப்பம்🤣. அவர் மட்டும் அல்ல, நாம் யாழில் கூட முகம் காட்ட மறுப்பது கொலிடே போக வேணும் எண்டுதானே 🤣? நான் முன்பே சொல்லி உள்ளேன் நான் இலங்கை போவது ஒரு வெளிநாட்டினாகத்தான். அங்கே போய் அரசியல் கதைத்தால் என்ன நடக்கும் என்பது எனக்குத்தெரியும். நான் இலங்கையில் நிண்டால் யாழுக்கு கூட வருவதில்லை 🤣. வெளிநாட்டில் இருந்து திரும்பி போய் அங்கே வாழும் முழுப்பேரும் இப்படி அரசியல் விடயத்தில் வாயையும், சப்பாத்தையிம் பொத்தி கொண்டுதான் வாழ்கிறார்கள். அதில் பிழை இல்லை. சொந்த ஊரில் வாழ அவர்கள் கொடுக்கும் விலை அது. ஆனால் எனக்கு அந்த விலையை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. லண்டனில் கஞ்சி குடித்தாலும் சுதந்திரமாக குடிப்பேன். ஊர் விடாய்த்தால் - ஒரு மாசம் போய் “மூடிக்கொண்டு” இருந்து விட்டு வந்து விடுவேன்🤣.
- மனிதா உன்னைத்தான்!
-
திரும்பும் வரலாறு!
நிச்சயம் நடந்தது. ஜப்பானியர்கள் சீனாவை கைப்பற்றி அங்கே சீன இனத்தவரை சொல்லொணா கொடுமைக்கு ஆளாக்கினார்கள். குறிப்பாக comfort women என்று வகை தொகையின்றி சீன பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார்கள். அதே போல் பர்மாவில் இருந்து கிழக்கு நோக்கி death railway என அழைக்கப்படும் ரயில்பாதையை கட்டும் பணியில் பல போர்குற்றவாளிகளை அடிமைகளாக நடத்தி உள்ளார்கள். பலர் இறந்தனர். நான் போய் பார்த்துள்ளேன். தாய்லாந்தின் காஞ்சனாபுரி என்ற ஊரில் இன்றும் இந்த ரயில் பாதை, பாலம் எல்லாம் உள்ளது. இதில் இறந்தவர்கள் பலர் இந்தியா, சிங்கப்பூரில் பிடிக்கப்பட்ட தமிழர்கள். தாமே உயர்ந்த இனம் - சூரிய புத்திரர்கள் என்ற இனதுவேச, இனத்தூய்மைவாதம் இன்றும் ஜப்பானியர்களிடம் உண்டு. ஜப்பானியர் வேற்று இனத்தவரை திருமணம் முடிப்பதும் குறைவு. இன்றளவும் டோக்கியோவில் கூட ஒரு கறுப்பர் நடந்து போனால் ஆச்சரியமாக பார்க்கும் சமூகம்.
- திரும்பும் வரலாறு!
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நாங்கள் இலங்கையில் வாழவே முடியாது. உயிராபத்து. இனவாத ஒடுக்கல். ஆமியும் கொடுமை. புலியும் ஆள்பிடிக்குது. என்று வெளிநாட்டில் வந்து கையை தூக்குவம். பிறகு ஒரு இருபது வருசம் வெளிநாட்டில் தும்படிச்சு காசை சேர்தபின், இரெட்டை குடியுரிமை யும் எடுத்து கொண்டு, அதே இனவாதம் கொஞ்சமும் மாறாத இலங்கையில் போய் நிண்டு… இதுவல்லவோ பூலோக சொர்க்கம் என்போம்.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
நன்றி பிரபா. உண்மையில் முதலில் அந்த முருகர்சாமி அண்ணை reference இல்லாமல்தான் எழுதினேன். ஆனால் வாசித்துப்பார்த்தால் ஒரே அழுகாச்சி காவியமாக இருந்தது. ஒரு இழையோடும் நகைச்சுவையும் வேண்டும், வாசகரை ஒரு கணம் திசை திருப்பி விட்டு மீண்டும் கதைக்கு இழுத்து வரவும் வேண்டும். என்ன செய்யலாம் என நினைத்த போது இந்த தேவையை பூர்த்தி செய்ய வாசகருக்கு பரிச்சயமான ஒரு நபரை உள்வாங்கலாம் என முடிவு செய்தேன். அப்படி உள்ளே வந்தவர்தான் முருகர்சாமி அண்ணை.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நல்லது அக்கா. சந்திப்போம்.
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நான் இதை பணம், மனம் என பார்க்கவில்லை. நிகழ்ந்த இழப்புக்கு ஈடு அவசியம். விபத்துக்களின் பின் விழைவுகள் நீண்ட நாளின் பின்பும் தெரிவது உண்டு. அப்போ யோசித்து பயனில்லை அல்லவா? வேலையிட முகசுழிப்பு வரும் என்பது உண்மைதான். ஆனால் முதலாளியாக நான் இருந்தால், இப்படி இழப்பீடு கேட்கும் தொழிலாளியை முகம் சுழிக்கமாட்டேன். நல்லவேளை காப்புறுதி இருக்கிறது, அவர்கள் கட்டட்டும், இந்த மனிதருக்கும் போதிய ஈடு கிடைக்கட்டும் என்றே இருப்பேன். 👆🏼இதுதான் நல்ல மனம் என நினைக்கிறேன். அடுத்த வருடம் எனது பிறிமியம் கூடும்தான். ஆனால் அதுதான் தொழில் முனைவதன் ரிஸ்க்.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
ஓ….அவருக்கு இப்படி ஒரு காரணப்பெயரும் இருக்கா🤣
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
சிறி அண்ணாக்கு வெள்ளி கிழமை எண்டால், கந்தையா அண்ணைக்கு சனி கிழமை 🤣. கு.சா அண்ணை நாள் பார்க்கும் மூட நம்பிக்கைகள் இல்லாதவர்🤣.
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
பின்னர் இருவரும் கண்ணைனை உலகை சுற்றி பார்க்க அனுபினார்களாம். கண்ணன் பார்த்து விட்டு வந்து சொன்னானாம்… “உலகம் பூரா செம பிகருகளாய் கிடக்குது ஓய்”🤣
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
சிறி அண்ணா, எனக்கு ஜேர்மன் சட்டம் பற்றி அறவே தெரியாது. ஆனால் ஒரு தொழில் நிறுவனத்தின் employers liability, மற்றும் உழைப்பாளர் நலன் பேணும் health and safety regulations எல்லா மேற்கு நாடுகளிலும் ஓரளவு ஒத்த மாதிரியே இருக்கும். வெளிப்பார்வைக்கு தற்செயல்/விபத்து என தெரியும் ஒரு விடயம் ஒரு நிறுவனத்தின் அல்லது மனிதரின் கவன குறைவால் அல்லது செயல் குறைபட்டால் நிகழ்ந்துள்ளது என்பதை அதை தீர விசாரிக்கும் போதுதான் புலப்படும். உதாரணமாக ஒரு வாகன விபத்து. உங்கள் வாகனத்தை இன்னொரு நிறுவன வாகனம் முட்டி விட்டது. இருவரிலும் பிழை இல்லை அல்லது இருவரிலும் 50% பிழை. ஆனால் ஆழமாக ஆராயும் போது அந்த நிறுவனம் காசை மிச்சம் பிடிக்க ரயரை மாற்றவில்லை. புதிய ரயராக இருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என தெரிய வருகிறது. இப்போ விபத்துக்கான பொறுப்புகூறல் (liability) கிட்டதட்ட முழுக்க நிறுவனத்திடம் போய்விடும். இப்படி பல உதாரணங்கள். கருவிகள் ஒழுங்காக பராமரித்தல், கையாள்பவருக்கு போதிய பயிற்ச்சி, பயிற்சியின் வருடாந்த தொடர்ச்சி, ரென்சன் பார்ட்டியை இந்த தொழிலில் தொடர்ந்து வைத்திருந்தது சரியா? இப்படி பலதை ஆராய்ந்த பின்னே, இது உங்கள் நிறுவனத்தின் கவன குறைவால் நடக்கவில்லை என அறுதியாக கூறமுடியும். ஆகவே குறைந்த பட்சம் ஒரு no win no fees சட்ட ஆலோசகரையாவது அல்லது union இருந்தால் அவர்களையாவது நாடலாம் என நான் நினைக்கிறேன். இதனால் உங்களுக்கு இழப்பீடு மட்டும் அல்ல, இதே பிழை தொடர்ந்து மேலும் விபத்து வருவதும் தடுக்கப்படலாம். இப்படியான வழக்குகளுக்கு ஒரு limitation period இருக்கும். செய்வதாயின் அதற்குள் செய்ய வேண்டும். யோசிக்கவும்🙏🏾.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
ஒண்டும் தப்பா எழுதவில்லை தெய்வமே…கதைக்கு கொஞ்சம் ஜனரஞ்சகத்தை கூட்ட ஒரு சுவாரஸ்யமான மனிதர் தேவைப்பட்டார்…அவ்வளவே….🙏🏾
-
படம் கூறும் கதைகள்
Slingshot என்பது சரியே. Catapult உம் ஆங்கில வார்த்தைதான்.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
🤣 பாவம் எண்டு ஒரு கெளரவபாத்திரம் கொடுத்த என்னைதான் வையணும்🤣
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
நன்றி அண்ணா. நீங்கள் சொல்வது போல் கஞ்சல்கள் வயிற்றில் சேர்ந்தாலும், மனதில் சேர்ந்தாலும் ஆபத்துத்தான். முதலில் கஞ்சலை உள் எடுப்பதை குறைக்க வேண்டும் அல்லது ஆபத்து நெருங்கும் அறிகுறி தெரிந்ததும் ஆவது உதவியை எடுக்க வேண்டும்.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
இதை விட வேறு என்ன அதிகமாக சொல்ல முடியும். கதையை வாசித்து இதை பகிர வேண்டும் என நினைத்ததையே கதையின் வெற்றியாக கொள்கிறேன்🙏🏾. நன்றி. சியாமளனின் இந்த படத்தை பார்த்துப்போட்டு இரெண்டு நாள் பேயறைந்தது போல் இருந்திருக்கிறேன். என்னை ஊக்க்கப்படுத்த சொல்லுகிறீர்கள் என புரிந்தாலும், மூன்றாம் பிறை, Sixth Sense என வித்யாசமான படக்கதைகளை இணைத்து கதைப்பதே சந்தோசமாக உள்ளது🙏🏾.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
பாகம் IV ஐ தவிர்த்து பாகம் III இருந்து நேரடியாக பாகம் V ஐ வாசிக்கவும். பாகம் V ஹைபோகிளைசீமியா ஒரு பொல்லாத விசயம். சாதாரணமாக இருப்பது போல் இருக்கும், ஆனால் உணவையும் மருந்தையும் கிரமமாக எடுக்காது போனால் குருதியில் குளுகோசின் அளவு திடீரென்று, ஹிடின்பேர்க்கின் அறிக்கைக்கு பின்னான அதானியின் நிகர மதிப்பு போல கிடுகிடு என இறங்க தொடங்கி விடும். உடல் வியர்க்கும், நடுங்கும், கடும் கோபம் வரும், ஏன் ஆக ரத்த குளுகோசின் அளவு குறைந்தால் கொலை வெறி கூட வரும். இன்னும் குறைந்தால் கோமாக்கு கொண்டுபோய் ஆளின் கதையையே முடித்து விடும். இதை எல்லாம் தவிர்க்கவேண்டும் என்றுதான் அவன் கோப்பி கடைக்குள் நுழைகிறான். ஆனால் அவனின் லக் அப்படி, கோப்பி கடையில் ஒரு கூட்டம் சனமாக இருந்தது. அந்த நெரிசலில் நிற்க தலையை சுத்தி கொண்டு வந்தது அவனுக்கு. பிரித்தானியரில் என்ன கெட்ட பழக்கம் இருந்தாலும் வரிசையில் நிற்கும் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. ஆனால் இப்போ அந்த நல்ல பழக்கமே அவனுக்கு எமனாக வந்து விடும் போல் இருந்தது. ஒரு வழியாக வரிசையில் முன்னுக்கு நின்றவனிடம் தன் நிலையை சொல்லி, அனுமதி பெற்று இரெண்டு சீனி தூவிய டோநட்களையும் ஒரு கோக் கானையும் வாங்கி கொண்டு மேசையில் போய் அமர்ந்தான் அவன். கோக் குடியாதேங்கோ எண்டு சொல்லுறது இதுக்குத்தான். குளுகோஸ் தண்ணிக்கு அடுத்து ரத்தத்தில் சீனியின் அளவை உடனடியாக கூட்ட கோக்கை விட்டால் வேறு பானம் இல்லை. ….இதைதான் வருத்தம் ஏதும் இல்லாத பிள்ளையள் கூட வாங்கி குடிக்குதுகள். பின்ன ஏன் டயபிடிஸ் வராது….. நினைத்தபடியே…கோக் கானை “டொப்” என மூடி உடைத்து பருக தொடங்கினான் அவன். கோப்பி கடையில் கல்லாவில் நின்றவனை நினைக்க நினைக்க அவனுக்கு கோவம் பற்றி கொண்டு வந்தது. என்ன அசிரத்தை இது? ஏதோ இலவசமாக தருவது போல் இருந்தது அவனின் பாவனையும் நடந்து கொண்ட முறையும். முந்தி எல்லாம் இந்த நாட்டில் இப்படி இல்லை. முன்பு யூகேயில் கஸ்டமர் சேர்விஸ் நன்றாக இருக்கும். இப்போ?…பச்…. அவனை பார்த்தால் உக்ரேன் காரன் போல இருந்ததது. உக்ரேன்காரர் உக்கல் சனம், நிறவெறி பிடித்தவர் என யாழ்களத்தில் முருகர்சாமி அண்ணை எழுதியது ஏனோ அவனுக்கு நியாபகம் வந்தது. கிட்டதட்ட ஒரு இருபது நிமிடம் ஆகி இருக்கும். கோக் கான் முக்கால்வாசி தீர்ந்து விட்டிருந்தது. ஆனாலும் ஓடர் பண்ணிய டோநட்டை இன்னும் காணவில்லை. “ஹலோ ஆம் ஐ கெட்டிங் மை டோ நட் டுடே, ஓர் டுமோரோ”? கொஞ்சம் சத்தமாகவே உக்ரேன்காரனை டோநட் இன்றா அல்லது நாளையா கிடைக்கும்? கேட்டான் அவன். ஆனால் அந்த உக்ரேனியனோ (முடிவே கட்டிவிட்டான்) கோப்பி மெசின் அருகில் எதையும் கேளாதவன் போல் நின்று எதையோ கழுவிக்கொண்டிருந்தான். திடீரென திரும்பி பார்த்தால் அந்த உக்ரேனியன் அவனை நோக்கி ஒரு பெரிய கத்தியோடு ஓடி வந்து கொண்டிருந்தான்…….. கண்களில் நிறவெறி ஜொலி ஜொலித்தது…….. ”என்ர பிள்ளையாரே, முருகர்சாமி அண்ணை உவங்களை உக்கல் எண்டு சொன்னது சரிதான்” என ஒரு கணம் அவன் திகைத்து நின்றாலும்……. மறுகணமே அவனின் உடலில் அதிரீனலீனின் “தப்பியோடு அல்லது சண்டையிடு” பொறிமுறை வேலை செய்ய தொடங்கி இருந்தது. உக்ரேனியன் கொண்டு வரும் கத்தியோ பெரிது…வேறு வழியில்லை, ஒரு நல்ல கனமான மரக்கதிரையை தூக்கி கொண்டு அந்த உக்ரேனியனை நோக்கி பாய்ந்தான் அவன். —————————————— அப்போதுதான் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ், அவனின் பிரான்சில் இருந்து வருவிக்கபட்டிருந்த தம்பிக்கும், டாக்டர் பிரணவணுக்கும் சீசீடிவி படங்களை போட்டு காட்டி முடித்திருந்தார். தம்பிக்கு ஏதோ விளங்கியது போலவும் இருந்தது ஆனால் விளங்காதது போலவும் இருந்தது. கேள்வி குறியோடு டாக்டரின் முகத்தை பார்த்தான் தம்பி. மொழி பிரச்சனையை விளங்கி கொண்ட டாக்டர், ”ஐ வில் எக்ஸ்பிளைன் டு ஹிம் இன் ஹிஸ் ஓன் லாங்குவேஜ்”…….. என பிலிப்சுக்கு சொல்லியபடி தம்பியிடம் தனது புலம்பெயர் கொச்சை தமிழில் பேச தொடங்கினார். சீசீடிவி பார்தனிங்கள்தானே…சும்மா டோநட் எடுத்து கொண்டிருந்த அவர போட்டு நல்லா அடிச்சு வச்சிருக்கிறார். இதுக்கு ஒரு ரீசனும் இல்லை. பொலிஸ் அன் புரொவோக்ட் அட்டாக் எண்டு சொல்லினம்….. அதுக்கு முதல் மூண்டு அவர்ஸ் காரில இருந்து…போனில கதைச்சிருக்கிறார்…. ஆனால் போனை செக் பண்ணி பார்த்தா அந்த மூண்டு அவர்ஸ்சும் எந்த ஒரு கோலும் கூட வரலேல்ல உங்கட அண்ணாக்கு…. அதுமாரி….சில மாசமா…. ஒவ்வொரு நாள் காலமையிலும், பின்னேரமும் ஒப்பசிட்டா இருக்கிறா ஸ்கூல் வாசலில் வந்து நிண்டிருக்கிறார்….. ஆனா நாங்கள் செக் பண்ணி பார்த்தா உங்கட அண்ணாக்கு பிள்ளையோ, வைவ்வோ கூட இல்லை. எல்லாம் சேர்த்து பார்த்தா எனக்கு இது ஒரு மனசு சரியில்லாத வருத்தம் எண்டுதான் விளங்குது…. இத நான், தொடர்ந்து வெளிநாட்டில தனியாவே இருந்ததால வந்த ஒரு மெண்டல் ஹெல்த் பிரச்சனை என சஸ்பெட்க் பண்ணுறன்…. அதால… உங்கட அண்ணையை செக்சன் பண்ணுற முடிவை எடுக்கப்போறம்…. செக்சன் எண்டால்…? புரியாதவனாக கேட்டான் தம்பி. செக்சன் எண்டால்…. வந்த வருத்தம் மாறும் வரைக்கும் அவரை ஒரு சைகியாடிரிக் கொஸ்பிடலை தடுத்து வச்சிருப்பம். உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி நீங்கள் அப்பீல் பண்ணலாம். நாளைக்கு ஒரு இண்டர்பிரிட்டரை வச்சு எல்லாத்தையும் வடிவா சொல்லுறன். அவன் இப்போதைக்கு வெளியில் வர வாய்ப்பில்லை என்பதை முடிந்தளவு தன்மையாக சொன்னார் டாக்டர் பிரணவன். என்ன செய்தாலும்….. அண்ணையை பழையபடி மாத்தி தாங்கோ டொக்டர்…. எங்களை எல்லாம் வெளிநாட்டுக்கு எடுத்து ஆளாக்கினது அவர்தான்…. கண்ணீர் புரண்டோட…கை கூப்பினான் அவனின் தம்பி. அப்ப கூட்டத்தை முடிக்கலாம்…… என்ற தோரணையில்……. கையை திருப்பி….. மணிக்கூட்டை வெறித்துப்பார்த்தார் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ். (யாவும் கற்பனை) முற்றும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபா. ஐந்தாம் பாகம் பற்றிய பார்வையையும் எழுதுங்கள்.🙏🏾 நன்றி சுவை அண்ணா. இப்ப எழுதியதை வாசிதால் சேது விக்ரம் நியாபகம் வருவாரோ?😀
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
நான் நம்புகிறேன். Stigma வை தவிர்ப்பதே அடிப்படைகாரணம் அதனால் அதை தெரிந்தோரை விலத்துகிறனர் என நினைக்கிறேன்.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
நன்றி அண்ணா. பாகம் V இன் முடிவு எப்படி இருக்கும் என அறிய நானும் ஆவலலாய்த்தான் உள்ளேன்🤣. நான் எட்டியதும் எழுதி விடுகிறேன். உங்கள் கருத்தை பார்த்த பின் ஒரு முரட்டு முடிவாககவே வைக்கலாம் என நினைக்கிறேன். ஐடியாவுக்கு நன்றி.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
நன்றி அண்ணா. இது நோயின் அறிகுறியா? தனக்கு நோய் இல்லை என்று நிறுவிவிட வேண்டும் என்ற அந்தரிப்பா? பச்சை நன்றியீனமா? முடிவு வாசகர் மனதில். நன்றி அண்ணா. கெத்தா இரெண்டு கிளைமாக்ஸ் என அறிவித்து விட்டேன். இப்ப இரெண்டாவது கொஞ்சம் சின்னபிள்ளைதனமான முடிவாக தெரியுது. பாப்பம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இருக்கலாம். 3ம் பாகத்தில் இருந்து கற்பனையே என்பதை கவனத்தில் கொள்க. நன்றி வருகைக்கும் கருத்துக்கும். ஓம்…இவ்வாறானதொரு மறதி பிரச்சனையாகவும் இருக்கலாம். கதையின் எல்லா சம்பவங்களும் நிஜம் அல்ல.