Everything posted by goshan_che
-
ஈழத்தமிழர் அரசியல்
நிச்சயமாக. இதனால்தான் மீள் பார்வை அவசியமாகிறது. Finding fault (குற்றம் கண்டு பிடித்தல் ) இல்லாமல் lessons learnt (பாடம் கற்றல்) தேவைப்படுகிறது. இப்படி முயற்சிகவில்கையே? எனும் போது இல்லை முயற்சிதோம். இப்படி அது முடிந்தது என்று சொல்லும் போது அடுத்த நிலைக்கு போகலாம்.
- 147 replies
-
-
- 1
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
இது எனது பார்வை இலங்கையில் கமெரன், மனிங், டொனமூர் சோல்பெரி என்று பல யாப்புகளை வைத்து ஆங்கியேயர்கள் படிபடியாக ஒரு அரசியலமைப்பு சோதனை களமாகவே இலங்கையை பார்த்தார்கள். இந்தியாவை போல் அன்றி இலங்கையில் மத, இன குழுக்கள் வன்முறையாக மோதவில்லை. வன்முறையான அல்ல மென்முறையான சுதந்திர போர் கூட நடக்கவில்லை. இலங்கையை Asia’s oldest democracy என்பார்கள். காராணம் 21 வயதுக்கு மேலானா அனைவருக்கும் 1931, ஆசியாவிலே முதன் முறையாக இங்குதான் வாக்குரிமை கொடுக்கப்பட்டது. கல்வியறிவும் மிகுந்து இருந்தது. சட்டம், ஒழுங்கு, நிர்வாக சேவை எல்லாம் தரமானதாக இருந்தது. இன அடிப்படையிலான அரசியல் இருந்தாலும் அது ஒரு கொலைவெறி அரசியலாக இருக்கவில்லை. எந்த தமிழ்தலைவரும், போத்துகேயர் வரும் போது நாம் தனிநாடு, ஆகவே பிரித்து கொடுங்கள் என ஜின்னா போல் கேட்கவும் இல்லை. ஆகவே, அவுஸ்ர்ரெலியா, நியூசிலாந்து போல ஒரு mature democracy யாக, இலங்கை இருக்கும் என அப்போ, ஆங்கிலேயரும், தமிழரும் எதிர்பார்த்தார்கள். அது நியாயமான எதிர்பார்ப்பும்தான். அப்படி இருந்தும் சோல்பெரி யாப்பில் சில இன ஒதுக்கலுக்கு எதிரான சரத்துகளை சேர்த்து, இராணியே நாட்டின் தலைவர் என்ற நிலையில், லண்டன் பிரிவீ கவுன்சிலே அரசியல் யாப்புக்கான நீதிமன்றம் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை வைத்து விட்டே போனார்கள். பண்டரநாயகவுக்கு பிரதமர் ஆசை வரும் வரை எல்லாம் சுமூகமாகத்தான் (ஒப்பீட்டளவில்) போனது. இனவாதம் ஆட்சியை பெற்று தரும் என இலங்கையில் முதலில் நிறுவியவர் பண்டா. அதன் பின் நடந்தது race to the bottom தான். மாறி மாறி, யார் பெரிய இனவாதி என நிறுவ போட்டி போட, மக்களும் உள்ளதில் பெரிய இனவாதியை ஒவ்வொரு தேர்தலிலும் வெல்லவைத்தார்கள். சிங்களவர்கள் மட்டும் ஆங்கிலேயன் விட்டுப்போன சோல்பெரி யாப்பின் படி ஆட்சி செய்திருந்தால், நாடு இன்றைக்கும் சொர்க்கம்தான். ஆகவே 73 வருடங்களாக விடப்பட்ட பிழைகளுக்கு ஆங்கிலேயர்களையோ, 1948 இல் இருந்த தமிழ் தலைவர்களியோ நோவது நியாமில்லை. 48க்கு முன் பண்டாரநாயக்கவே இலங்கையை, கண்டி, கரையோரம், யாழ் என பிரித்து மூன்று சமஸ்டிகளின் ஒன்றியம் ஆக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார். எனவே 1948 இல் நாம் இருந்திருந்தாலும், தமிழருக்கு தனிநாடு கேட்டிருக்க மாட்டோம். பின்னாளில் இனவாதம் இப்படி கோரத்தாண்டவம் ஆடும் என்பதை அன்று யாரும் எதிர்வு கூற முடியாமலே இருந்திருக்கும். இல்லவே இல்லை. தமிழர்கள் அடிக்க தொடங்கியது 83 க்கு பிறகுதான். அதன் பிறகு கலவரமே நடக்கவில்லை. அப்படி அவர்கள் ஏன் செய்யவில்லை? அவர்களுக்கு வாக்கு அரசியலில் எதுவும் சாதிக்க முடியாது என்ற நம்பிக்கை இருந்தது. ஆகவே அவர்கள் இவர்களின் பேச்சை (உணர்சி வசப்படுத்தல்) கவனத்தில் எடாமல், தம் வழியே பயணித்தர்கள். ஓம்
- 147 replies
-
-
- 1
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
அதை சொல்லவில்லை. ஊரில் முன்னம் பல செல்வந்தர்கள் சிங்கள ஊர் பெயருடன் இருந்தார்கள். கெக்கிராவை சுப்ரமணியம். கந்தானை கந்தையா. இப்படி. 48 க்கு முன் காலி, பாணதுற, அம்பலாங்கொடை இப்படி நாடு பூராவும் தமிழர்கள் தொழில் செய்தார்கள். இவை படிபடியாக அழிக்ககப்பட்டு 83 இல் கொழும்போடு முடக்கப்பட்டது. 83 இல் அதுவும் அழிக்கப்பட்டது. இப்போ கொழும்பில் இருக்கும் நிலை 90க்கு பின் மீள கட்டியது. ஏனைய இடங்கள் விட்டது விட்டதுதான்.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
தமிழர்கள் சுய முயற்சியில் குடியேறினார்கள். வியாபாரம் செய்தார்கள். எந்த சிங்களவருடை எதையும் பறிக்கவில்லை. ஆனால் இப்போ தமிழ் நாட்டில் சேட்டுகளுக்கு இருப்பது போல, உகண்டாவில் இந்தியர்களுக்கு இருப்பதை போல, சிங்களவர்களை உறிஞ்சி வாழ்கிறார்கள் என்ற குற்றசாட்டு இருந்தது. இது பெருமளவுக்கு உண்மையும் கூட. ஆனால், தமிழர் காணிகளில் இருந்து மக்கள் படிபடியாக கலவரஙக்ளால் விரட்டப்படு அவை சிங்கள குடியேற்றமாக மாற்றப்பட்டது. அம்பாறை பிள்ளையார் கோவில் போயிருப்பீர்கள் என நம்புகிறேன். இப்போ ஒரு முழு சிங்கள பகுதியில் இருக்கிறது. ஐயர் குடும்பம் மட்டும். ஒரு தலைமுறைக்கு முன்னர் கோவிலை சுற்றிலும் தமிழர்கள்தான்.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
உணர்சி வசப்படுத்தியது போல இதுவும் ஓர் அங்கம்தான். தனியே ஆயுத கவர்சி மட்டும் அல்ல - எப்போதும் அநியாயத்துக்கு எதிராக கிளர்ந்து எழுபவர்கள் நிஜ ஹீரோக்கள். இந்த கிரேக்க சொல்லின் அர்த்தமே “பாதுகாப்பவன்”. நாம் கூட மாவீரரை great warriors என்றல்லாமல் great heroes என்றே மொழிபெயர்கிறோம். ஆகவே போராடபோனவர்கள் ஹீரோக்கள்தான். 1ம், 2ம் உலக யுத்தங்களில் போராட போனவர்களும் அவரவர் நாடுகளில் இன்றைக்கும் ஹீரோக்கள்தான். அதற்க்கா இந்த யுத்தங்கள் வந்ததே இந்த ஹீரோ கவர்சியால் என்று சொல்ல முடியாதல்லவா? அதே போல்தான் போராட்டமும். நிச்சயமாக போராட ஒரு அடிப்படை நியாயம் இருந்தது. அல்லது அரசுக்கு எதிராக துவக்கு தூக்குபவர்களை மக்கள் கொள்ளை கூட்டம் என்றே பார்த்திருக்கும். பின்னாநாளில் அரசுக்கு ஆதரவாக நின்ற ஆயுததாரிகளை அப்படி பார்க்கவும் செய்தது. ஆகவே போராட்டத்தின் நியாயம்தான் போராளிகளை ஹீரோக்கள் ஆக்கியது. மிகச்சிலர் ஆயுத கவர்சியில் சேர்ந்தது உண்மை. அப்படியானவர்கள் பெரும்பாலானோர் “கல்லிலும் முள்ளிலும் தூங்கினோம், பசி மூடவே போர்க்களம் ஆடினோம்” என்ற வாழ்க்கையை பார்த்து தலை தெறிக்க ஓடிவிட்டர்கள். நிச்சயமாக இது தலைகீழ். இப்படி போனவர்கள் 5% கீழும் இல்லை. என்பதே எனது அனுபவம். (பின்னாளின் கட்டாய ஆட்சேர்ப்பை தவிர்த்து). 83, திருநெல்வேலி தாக்குதல் வரைக்கும் தமிழர்கள் திருப்பி அடிக்கவில்லை ( கலவரங்களில்). 83 இல் கூட ஒரு தாக்குதலுக்கு பதிலாக கலவரம் அவிழ்த்து விட பட்டதே ஒழிய - கலவரத்தில் தமிழர்கள் எதிர்த்து அடிக்கவில்லை. ஓம், இப்போ முஸ்லீம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்ட செய்யபடும் சீண்டல்கள், போலியான வாக்குவாதங்கள் கூட இல்லை. அரசியல் காரணக்களுக்காக, தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக தாக்கபட்டார்கள்.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
இது நிச்சயமாக உண்மை. 83 க்கு முன்னரும், 2009 க்கு பின்னரும் தனியே தமிழர், அரசோடு இரு தரப்புக்கு மத்தியில் மட்டும் பேச்சு என்ற நிலையில் நீங்கள் சொல்வது உண்மைதான். தனியே சிங்கள அரசோடு மட்டுமே நாம் முழு நேரமும் டீல் பண்ணி இருந்தால் இந்த நிலைப்பாடும் சரியானதாகவே இருந்திருக்கும். பிகு: அண்ணா இது நான் சொல்வது சரி என நிறுவும் போட்டி அல்ல என மேலே முதல்வன் கூறியதை மனதில் கொள்கிறேன். ஆகவே இத்தோடு அமைகிறேன். பார்ப்போம் மற்றையவர்கள் பார்வை எப்படி உள்ளது என.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
இதில் நிச்சயம் இன்றைய தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் இருக்கிறது. நிச்சயம் இவர்கள் ஒரு டீலை போட்டு, திறைசேரி மேற்பார்வையிலாவது, வடக்கு மாகாணத்துக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வரும் ஒரு நிதியத்தை உருவாக்கில் பலதை செய்யலாம். இதற்கு எதிர்ப்பு தெற்கில் நிச்சயம் கிளம்பும் என்பதை ஊகித்து, அவ்வாறு எதிர்புகள் எழா வண்ணம் முன்னேற்பாடுகளை செய்யலாம். 2013 இல் சீவி இப்படி ஒரு மாகாண நலன் சார்ந்த அரசியலை முன்னெடுப்பார் என எதிர்பார்த்தேன். கூட்டமைப்பின் எம் பிகள் அரசியல் தீர்வு குறித்து, விசாரணை குறித்து சம நேரத்தில் பேசுவார்கள். அவரவர் அவரவர் வேலை பகுப்பை சரியாக செய்தால் போதும். ஆனால் நடந்ததோ இதன் நேரெதிர். சிவி முழுக்க முழுக்க எம்பிகள் செய்ய வேண்டியதை செய்ய, எம்பிகளோ அவருடன் முறுகுவதை தவிர வேறெதையும் செய்யவில்லை.
- 147 replies
-
-
- 1
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
அப்படி பார்த்தால் இது ஒரு கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா கதை போல நீண்டு கொண்டே இருக்கும். பகிடியாக ஒரு வழக்கு சொல்வார்கள். கலியாணம் இலட்சியம், கறி சோறு நிச்சயம் என்று. கலியாணம் கட்டினால்தான் கறி சோறு சாப்பிடுவேன் என்று பிடிவாதமாக இருந்தால் சில நேரம் கலியாணமே நடக்காது போகலாம், கறி சோறும் கிடைக்காமலே போகலாம். ஆனால் கலியாணம் கட்டுவது எங்கள் இலட்சியம்தான் ஆனால் கிடைக்கும் போது கறி சோற்றையும் சாப்பிடுவோம் என்ற கொள்கை நிலைய நாம் எடுத்தால் - கலியாணம் நடக்காமல் போனாலும், கறி சோறாவது உண்டிருப்போம். Politics is the art of the possible, the attainable — the art of the next best என்கிறார் பிஸ்மார்க். அரசியல் என்பது அடைய கூடியதை அடையும் கலை. இயலுமானதை, அடுத்த சிறந்த தெரிவை வெல்லும் கலை.
- 147 replies
-
-
- 1
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
எமக்கு ஜென்ம வைரி ஒருவந்தான். அவன் மட்டுமே எம்மை அடங்கினாலும், அடங்காது விட்டாலும் அழிப்பேன் என்ற நிலைப்பாட்டில் இருப்பவன், இருந்தவன். ஆனால் அவனுக்கு எம்மை தனியே அழிக்கும் இயலுமை இருக்கவில்லை.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
இதில் நியாயம் உண்டு. தமிழர்கள் பெரிய எடுப்பில் போராடாமல் (ஆயுதம் தூக்க முன்) ராஜதந்திர நகர்வுகளை செய்திருக்கலாம். தரப்படுத்தல், வளப்பகிர்வு போன்றவற்றில் சாதித்தும் இருக்கலாம் என்றே நானும் என்ணுகிறேன். ஆனால் மஹாவம்ச மனோநிலையை புரிந்து கொண்டால் - இது ஒரு அளவுக்கு மேல் பலன் தராது என்பது புரியும். 48 இல் நாம்தான் முதல் குறி. மலையக தமிழரையும் சேர்த்தால் கணிசமான மக்கள். கல்வி, வேலை யில் முன்னிடம். பேரினவாதம் தனக்கான முதல் எதிரி என எம்மையே தீர்மானித்தது. முஸ்லீம்களை அல்ல. 48 இல் இருந்து எத்தனை கலவரங்கள் தமிழருக்கு எதிராக நடந்தது? எத்தனை முஸ்லீம்களுக்கு எதிராக நடந்தது? 2009 க்கு பின் இந்த கணக்கு எப்படி இருக்கிறது. ஆகவே தமிழர்களை திட்டமிட்டு அழிக்கும் போது தேவை கருதி முஸ்லீம்கள் அணைக்கப்பட்டார்கள். அதை அவர்கள் பயன்படுத்தினார்கள். இப்போ role reversal. 48-2009 முஸ்லிம் தலைவர்களிடம் இருந்து, நாம் பாடம் படித்து, நடைமுறை படுத்த வேண்டிய காலம் -இப்போ.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
ஆரம்பித்தது பிழையே இல்லை. அடைய முடியா இலக்கை, எந்த இலக்கும் தொடங்கும் போது அடைய முடியாத இலக்குத்தான் என்று எண்ணியபடி, பெரிய வலுக்கள் எல்லாம், அடைய முயற்சித்தால் அழிக்கப்படுவீர்கள் என எச்சரித்த பின்னும் அடைய முயன்றதால் தோற்றுப்போனோம்.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
போராட்டம் உணர்சி வசப்பட்டதால், படுத்தியதால் ஏற்பட்டது என்பதை நான் முற்றாக மறுக்கிறேன். 1. உணர்சிவசப்படுதல் வேறு, உணர்வு உந்தல் வேறு. உணர்வில்லாதவன் ஏன் போராடப்போகிறான்? ஆகவே எல்லா போராட்டமும் உணர்வின் அடிப்படையிலேயே எழுகிறது. 2. தொடர்சியான திட்டமிட்ட கலவரங்கள். இவற்றை கலவரங்கள் என்பதே பிழை. இரு குழுக்கள் அடிபட்டால்தான் கலவரம். ஒரு குழு இன்னொரு குழுவை அரச ஆதரவோடு தாக்குவது - வேட்டை. தொடர்ந்து ஆண்டுவிழா போல தமிழர்கள் வேட்டையாடப்படார்கள். 3. திட்டமிட்ட குடியேற்றங்கள். தமிழர் நிலங்கள் கல்லோயா, மகாவலி என்று அபகரிக்கப்பட்டது. 4. மொழி வாரி அடக்குமுறை. சிங்களம் மட்டுமே தமிழர் பகுதிகளிலும் ஆட்சி மொழி என்பதன் மூலம், தமிழ் மட்டும் அல்லது தமிழும் ஆங்கிலமும் மட்டும் தெரிந்த பல்வேறு சமூக நிலைகளில் இருந்த தமிழரை ஒரிரவில் “எழுத்தறிவில்லாதவர்கள்” ஆக்கியது. 5. தமிழர் தாயகம் தவிர ஏனைய பகுதிகளில் தொழில் கூட செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியது. 6. ஆங்கிலேயர்கள் விட்டு சென்ற சோல்பெரி யாப்பு தந்த சிறுபான்மை உரிமைகள் பாதுகாப்பு சரத்தை 1ம் குடியரசு யாப்பு அகற்றியது. 7. சத்தியாகிரகங்கள் வன்முறை மூலம் கேலிக்கூத்தாக்கப்பட்டது. ஒப்பந்தங்கள் மீள, மீள கிழிக்கப்பட்டது. இப்படி தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக, கெளரவம் குறைவதாக, அழித்தொழிக்க படப்போகிறோம் என்று அச்ச உணர்வு வருவதாகவே வட்டு கோட்டை தீர்மானத்துக்கு முந்திய காலம் இருந்தது. தரப்படுத்தல் ஒன்றை தவிர போராட்டம் ஆரம்பிக்க கால்கோலிய அத்தனை காரணங்களிலும் தமிழர் பக்கம் 100% நியாயம் இருந்தது. Survival instinct என்பார்கள். திருப்பி அடி, அல்லது அழிக்கப்படுவாய் என்ற உணர்வே அப்போ இருந்தது. அழியப்போகிறோம் என்ற நிலையில், அகிம்சை வழியில் ஏதும் செய்யமுடியாது என்ற நிலை வந்த பின்பே போது போராட்டம் எழுந்தது. மேலே சொன்னது போல கூட்டணி உணர்சிவசப்படுத்தியது உண்மை. ஆனால் இயக்க தலைவர்கள் எவரும் இந்த உணர்சி வசத்தால் போராட வரவில்லை. நான் அறிந்தவரை தலைவரோ, ஏனைய இயக்க தலைவர்களோ உணர்சி வசப்படும் பேர்வழிகள் அல்ல. தவிரவும் வெகு விரைவிலேயே எல்லா இயக்க தலைமகளும் கூட்டணி உசுப்பேத்துவதை தவிர எதையும் செய்யாது என்பதை கண்டு, கூட்டணியின் உண்ணாவிரதத்தை கலைப்பது போன்ற செயல்களில் ஈடுபட தொடங்கியும் விட்டார்கள். மாணவர் பேரவை, தலைவர், தியாகி சிவகுமாரன் போன்றோர் தனியாக அல்லது சிறு குழுவுடன், புரட்சிகர சிந்தனையாளர்கள் இன்னொரு புறம் - தீர்க்கமான பார்வையோடுதான் போராட்டத்தை தொடங்கினார்கள். உசுப்பேத்தல், உணர்சி வசப்படுத்தல் நிச்சயம் இருந்தது. ஆனால் போராட்டம் உருவாக பெரிதும் காரணமானது, அநியாயம் நடக்கிறது, போராடாவிட்டால் அழிந்து போவோம் என்ற பய/எச்சரிக்கை உணர்வுதான். இந்திரா காந்தி இலங்கையில் நடப்பது nothing less than genocide என்று பேசியுள்ளார். இந்தியா படைகளை அனுப்பியது. இணை அனுசரனை நாடுகள் என ஜி7 இல் உள்ள பெரும்பாலான நாடுகள் கவனம் செலுத்தின. கொழும்பு வருபவர்கள் வன்னிக்கு போய் கை நனைக்காமல் திரும்பாத காலம் ஒன்று இருந்தது. நோர்வே மத்தியஸ்தம் செய்தது. தேவையான அளவு சர்வதேச கவனத்தை போராட்டம் ஈர்த்தது அதற்கு ஒரு காரணம் அதன் பின்னால் இருந்த நியாயம். ஓம் எல்லாருக்கும் எந்த நேரமும் அடங்க மறுக்க கூடாது என்பதை நான் ஒரு பாடமாக கருதுகிறேன்.
- 147 replies
-
-
-
- 3
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
ஏன் ஒன்றிணைக்க முடியவில்லை என்று நான் நினைப்பதை மேலே சொல்லியுள்ளேன். ஆனால் போராட்டம் தோற்று போனது என்பதற்காக அது உண்மையான போராட்டம் இல்லை என்றாகாது. போராட்டம் உண்மையானதுதான், அதனை மேற்கொண்ட விதத்தில் (தனியே புலிகள் மட்டும் அல்ல), மாறி வரும் புறச்சூழலை கணித்து நகர தவறியதில், அதி கூடிய கொள்கை இறுக்க நிலையில் இருந்ததில் விமர்சனங்கள் வைக்கலாம் - ஆனால் போராட்டத்தின் நியாப்பாடு நிதர்சனமானது.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
2005க்கு பின்னான வன்னி நிலமைகள் (கல்யாணம் செய்து வைத்தல்) நீங்கள் சொல்வதை போல இருந்தாலும் அதை மட்டும் வைத்து 30 வருட கால போராட்டத்தை எடை போட முடியாது. ஆனால் போராட்டம் மக்கள் மயப்படவில்லை என்பதை நான் ஏற்கிறேன். 83-86 இல் போராட தயராக ஆயிரகணக்கில் ஆட்கள் இருந்தார்கள். புலிகள் கடும் கேள்விகளுக்கு பின்பே ஆட்களை தேர்ந்து இயக்கத்தில் சேர்த்தார்கள். ஆனால் பின்னாட்களில் அது அவர்களே பாஸ் நடைமுறை கொண்டு வரும் அளவுக்கு, அதன் பின் இன்னும் கட்டாய ஆட் சேர்புக்கு போகும் அளவுக்கு மாறி விட்டிருந்தது. இங்கே என்ன பிரச்சனை என்றால் ஒரு இலட்சிய வேட்கை கொண்ட தலைமை, அதே அளவு வேட்கை இல்லாத மக்களை வழி நடத்தியதுதான். அதற்காக மக்களை முழுதாக பிழை சொல்ல முடியாது. 30 வருடமாக பல இன்னல்களை தாண்டி போராட்டம் மக்கள் ஆதரவு இன்றி நிலைக்கவில்லை. போருக்கு பின்னும் கூட தேர்தல்களில் மக்கள் மாற்றி யோசிக்க 10 வருடம் எடுத்தது. ஆனால் மக்களால் ஒரு அளவுக்கு மேல் முடியவில்லை. எமது மக்கள் ஆப்கானிகள் அல்ல. முடிவில்லாமல் நீளும் யுத்தம், நிச்சயம் இதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்றே யோசிக்க வைத்தது. நிச்சயமாக இதை கணிக்க தவறியது பிழைதான். இனி நாம் யாரும் படை திரட்ட போவது இல்லை. போராடவும் போவது இல்லை. ஆனால் இதில் ஒரு பெரிய பாடம் இருக்கிறது. முன்பு யாழில் சிலர் எழுதினார்கள், பலஸ்தீனம் போல் ஊரில் ஒரு இண்டிபாடா கிளர்சியை செய்யலாம் என. நிச்சயம் அதற்கு மக்கள் ஆதரவு தரப்போவதில்லை. போராடுவதற்குரிய சுந்தந்திர சூழல் ஒரு போதும் தமிழருக்கு இலங்கையில் இருந்ததில்லை. ஆனால் அதற்கும் மேலாக இப்போ மக்கள் ஆக கூடியது P2P, தூபி இடிப்பை எதிர்த்தல், காணாமல் போனோர் போராட்டம் இந்தளவு போராடத்தான் தயார். ஆகவே எமது மக்களிடம் அதிகம் தியாகங்களை இனியும் எதிர்பார்க்காமல், உரிமைக்கான அரசியலை எப்படி முன்னெடுப்பது என்பதையே சிந்திக்க வேண்டும்.
- 147 replies
-
-
- 1
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
இதை ஏற்று கொள்கிறேன். இதை மேலே சொல்லி உள்ளேன். ஆகவேதான் எல்லாரையும் ஒரு அணியில், ஒரு தலைமையின் கீழ் திரட்டுவது சாத்தியமில்லை என உணர்ந்து ஒரு பொது கூட்டை அமைத்தல் நாம் கற்கும் பாடமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இப்போ பாருங்கள் - எந்த கட்சியில் இருந்தாலும் முஸ்லிம் அரசியல்வாதிகள், தம் இனத்தின் நலன், வளப்பகிர்வு சார்ந்து ஒத்த நிலைப்பாட்டுக்கு வருவார்கள். கல்முனை விசயம் நல்ல உதாரணம். அங்கே முஸ்லிம்கள் ஒரு தரப்புத்தான். அத்தனை பேரும் ஒருவரை ஒருவர் தாக்காமல் தமது கூட்டு நிலைப்பாட்டை முந்தள்ளுவர். ஆனால் தமிழரில் சந்திரகாந்தன், வியாழேந்திரன், முரளிதரன், விக்னேஸ்வரன், கூட்டமைப்பு, சைக்கிள்…ஆளை ஆள் பழி போடுவது, ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அணுகுமுறை. ஆகவே எந்த அணியில் இருந்தாலும் சில அடிப்படை கொள்கைகளில் சமரசம் இல்லை என்ற ஒரு பொது கூட்டு நிலையை நாம் அடைவது அவசியம். யுத்தகாலத்தில் இருந்தது போல் இப்போ இல்லை. உதாரணமாக அப்போ புலிகள் தனிநாட்டு கோரிக்கையிலும், ஈபிடிபி அதற்கு நேரெதிர் கோரிக்கையிலும் இருந்தார்கள். ஆகவே பொதுவில் உடன்படுவது விட்டு கொடுப்புகள் இல்லாமல் கடினம். ஆனால் இப்போ எல்லாரும் இலங்கைக்குள்தான் தீர்வு கேட்கிறார்கள். எனவே இது இப்போ இலகுவாக இருக்க வேண்டும்.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
ஆரம்பகாலத்தில் இயக்கங்களை தடை செய்ததில், கையாண்ட முறையில் புலிகள் தவறு செய்தார்கள் என்பது உண்மையே. ஆனால் அந்த பிழைகளில் இருந்து அவர்கள் பாடம் படித்தார்கள் என்றும் படுகிறது. அவர்கள் கூட்டமைப்பு என்ற ஒற்றை புள்ளியில் பல முன்னாள் எதிரிகளை உள்வாங்கியது - அவர்கள் பாடம் படித்தார்கள் என்பதை காட்டுவதாகவே நான் கருதுகிறேன். தமிழர்கள் ஓரளவுக்கேனும் ஒரு கூட்டு பிரக்ஞையுடன் செயல்பட்ட காலம் என்றால் கூட்டமைப்பு புலிகளின் வழிகாட்டலுக்கு போனதில் இருந்து 2009 வரைதான். ஆனால் ஒரு கை மட்டும் தட்டி ஓசை எழாது. கடைசி வரை அவர்களால் புளொட்டையோ, ஈபிடிபியையோ, தமவிபுவையோ ஓரணியில் முடியாவிட்டாலும், ஒத்த அரசியல் கோரிக்கையின் கீழாவது கொண்டு வர இயலவில்லை. இது இயலாமல் போனதுக்கு புலிகள் ஒரு காரணம்தான். ஆனால் அதே அளவு காரணம் இந்த இயக்கங்களின் தலைமைகள் மீதும் உண்டு. இவர்களுக்கு தமிழ் இனத்துக்கு ஒரு தீர்வு வர வேண்டும் என்பதை விட, புலிகள் அழிந்தொழிய வேண்டும் என்பதே முக்கியமாக இருந்தது. இதில் கற்க கூடிய பாடங்கள் என்ன? புலிகள் காலத்தில் தமிழர் பொதுக் கூட்டு 75% தான் சாத்தியமானது. மிகுதி 25% சாத்தியம் ஆகாமல் ஏன் போனது? முஸ்லீம் அரசியல்வாதிகள், சிங்கள அரசியல்வாதிகள் எந்த கட்சியாயினும் இனம் சம்பந்த பட்டு ஓரணியில் திரள்வது போல் நம்மால் ஏன் திரள முடியவில்லை? தனியே சுயநலம் மட்டும் இதன் காரணம் இல்லை. எல்லா இனத்திலும் அரசியல்வாதிகள் சுய நலமிகள்தான். இந்த கேள்விகளுக்கு விடை காணும் போது 100% க்கு அண்மித்த ஒரு தமிழ் பொது கூட்டை கொள்கை அளவில் ஸ்தாபிக்க கூடியதாக வரக்கூடும்.
- 147 replies
-
-
-
- 2
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
தரப்படுத்தல் - என் பார்வை தரப்படுத்தல் ஒரு சிக்கலான விடயம். ஆனால் இதை தமிழர் தரப்பு கையாண்ட முறையில் பல பாடங்களை படிக்க முடியும். தரப்படுத்தல் மட்டும் அல்ல, நிர்வாக சேவையில், இராணுவத்தில், பொலிசில் இப்படி பல இடங்களில் தமிழர்கள் அளவு குறைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட கால உள்நோக்கம் சிங்கள பொது கூட்டுக்கு இருந்தது. அநகாரிக தர்மபால போன்றோர் ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே இதை பற்றி பேச தொடங்கி விட்டார்கள். ஒரு காலத்தில் இருந்த தரப்படுத்தலுக்கும் இப்போ இருக்கும் தரப்படுத்தலுக்கும் பல வேறுபாடுகள் இருப்பினும் அடிப்படை ஒன்றுதான். இந்தியாவில் தரப்படுத்தல் சாதிவாரி இட ஒதுக்கீடு என்று உள்ளது. அது பிராமணர்கள் காலாகாலமாக பெற்ற அவர்கள் எண்ணிக்கைக்கு அதிகமான இடங்களை சுதந்திரத்தின் பின் ஏனைய சாதிகளுக்கு பிரித்து கொடுக்கிறது. இலங்கையில் அதுவே மாவட்ட ரீதியாக இருக்கிறது. இதில் இந்தியாவில் ஏழை பிராமணன் பாதிக்கபடுகிறான். அதே போல் யாழ் மாவட்டத்தில் வருவதால், யாழ்-வன்னியின் எல்லையில் செம்பியன்பற்றில் வாழும் ஒரு ஏழை மாணவனும் பாதிக்க படுகிறான். ஆனால் தரப்படுத்தலை உதவி அரசாங்க அதிபர் மட்டத்தில் செய்தால் - அது மேலும் குளறுபடி, களவுகளுக்கே வழி கோலும் (வாழ் நாள் முழுவதும் யாழில் படித்து விட்டு, ஓ எல், ஏ எல் சோதனையை மட்டும் மன்னாரில் எடுப்பது போல்). நாம் யாரும் இந்திய பிராமணர்கள் இல்லை. எனவே 1947 இல் இருந்த பிராமண ஆதிக்கத்தை சமன் செய்ய ஏற்படுத்தபட்ட இட ஒதுக்கீட்டை நாம் பக்க சார்பின்றி அணுகுவதால் - அதன் நியாயம் எமக்கு இலகுவில் புரிகிறது. ஆனால் இதே போல குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் மிக அதிகமான வளமான பதவிகளில், இடங்களில்தான் 1948இல் நாம் இருந்தோம். இங்கே தமிழர் என்று பொதுவாக கூறினாலும் அது யாழ் தமிழரையே சேரும். சிறுபான்மை ஒன்று, தனது எண்ணிக்கைக்கு பலமடக்கு விகிதாசரத்தில் கூடிய பெரும்பான்மை இடங்களை, பதவிகளை, வளங்களை அனுபவிப்பது என்பது ஒரு நியாயமான நிலை அல்ல. இதை சமன் செய்ய இந்தியாவில், தென்னாபிரிக்காவில் எங்கும் இந்த கோட்டா முறை நடைமுறையில் உள்ளது. 1948 இல் இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு என்ற தத்துவத்தை எமது அரசியல் தலைமைகள் ஏற்று கொண்ட பின் (அதன் காரணங்களை பின்பு ஆராயலாம்) ஒன்று பட்ட இலங்கைக்குள் யாழ் தமிழர் தொடர்ந்தும் தம் எண்ணிக்கைக்கு அதிகமான அளவில் கல்வியில், ஏனையவற்றில் தொடர்ந்தும் கோலோச்ச முடியும் என எதிர்பார்த்தது நடைமுறை சாத்தியம் இல்லாதது. இதை நிச்சயமாக சிங்கள பொதுக்கூட்டு இனவாத கண்ணோட்டத்தில்தான் முன்னெடுத்தது. ஆனால் இதன் பின்னால் உள்ள நியாயத்தையும், இதை தடுக்க முடியாது என்பதையும் எமது தலைமைகள் கண்டு கொள்ள தவறி விட்டன. தமிழ் தலைமகள் எப்போதும் proactive ஆக எதையும் செய்வது அரிது. ஒரு விடயத்தில் நாம் proactive ஆக செயல்படும் போது, அந்த விடயத்தின் agenda setting ஐ நாம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். ஆனால் நாம் எப்போதும் சிங்கள பொதுகூட்டு ஒரு விடயத்தை செய்த பின் react பண்ணுவதே வழமை. அப்போ அவர்கள் போட்ட அஜெண்டாவில்தான் விடயம் நகரும். தரப்படுத்தலில் பல நல்ல விடயங்கள் யாழ் அல்லாத தமிழருக்கு நடந்தது. இப்போ ஒவ்வொரு வருடமும் மட்டகளப்பில் ஓ எல் சோதனை செய்த 10 மாணவர்கள் டொக்டர் ஆகிறார்கள். இதை தரப்படுத்தலுக்கு முன்னான நிலையுடன் ஒப்பிடுங்கள். அது மட்டும் அல்ல மருத்துவராக தேவைப்படும் புள்ளிகள் அடிப்படையில் ஒரு காலத்தில் மிக இலகு என்ற நிலையில் இருந்த மட்டகளப்பு இப்போ, யாழ், கொழும்பு, காலிக்கு நிகராக வந்து விட்டது. உலகெங்கும் கோட்டா சிஸ்டம் அடைய விழைவது இந்த பெறுபேறைத்தான். கொழும்பின் நிலைக்கு மட்டகளப்பை உயர்த்துவது அல்லது உயர்த்த முனைவது. இந்த யதார்தத்தை புரிந்து கொண்டு, முடிந்தளவு எமது பங்கை உறுதி செய்யும் திரை மறைவு நகர்வுகள் எதையும் எம் தலைவர்கள் செய்யவில்லை. இந்த தவிர்க முடியாத யதார்த்தை எமது மக்களுக்கு புரியவைக்கவில்லை. அதிலும் கொஞ்சம் நியாயம் இருக்கிறது என்று பேசவே இல்லை. சரி இந்த வாய்புகளை இழந்தால், வேறு வகையில் இவற்றை ஈடு செய்ய முடியுமா என சிந்திக்கவில்லை. சரி இதை எப்படி அணுகி இருக்கலாம்? இப்போ இருப்பதை போல், 30 ஆண்டுகால போரின் பிந்திய நிலை அல்ல அன்று. போர்கால சமநிலையும் அன்று இல்லை. அன்றைய தமிழ் தலைவர்கள் அரசோடு டீல் போட பெரிய தடைகள் ஏதும் இருக்கவில்லை. தேவைபடும் போது போட்டார்கள். ஆனால் பண்டா-செல்வா, டட்லி-செல்வா என்று பெரும் எடுப்பில் ஒப்பந்தம் போட்டால் அதை இனவாதிகள் கிழிக்க வைப்பார்கள் என்பதை ஊகித்து, திரைமறைவில் சில டீல்களை போட்டிருக்கலாம். பின்னாளில் தொண்டைமானும், அஷ்ரப்பும் இதைதான் செய்து காட்டினார்கள். ஆனால் நாம் செய்தது முழுக்க முழுக்க வோட்டரசியல். உணர்சிப் பேச்சு. இரத்தப்பொட்டு, வட்டுக்கோட்டை தீர்மானம். இதை கூட உண்மையாக செய்யவில்லை என்பதுதான் ஆக பெரிய கொடுமை. தனி நாடு சாத்தியமோ இல்லையோ தலைவர் அதற்கு முழு மனதோடு தன்னை அர்பணித்து போராடினார். ஆனால் இவர்களுக்கு தனிநாட்டை எப்படி அடைவது என்ற ஐடியாவே இல்லை. வெறும் வாயால் வடை மட்டுமே சுட்டார்கள். தனிநாட்டுக்கு ஒரு துரும்பைதானும் தூக்கி போடவும் இல்லை. முழுக்க முழுக்க வோட்டு அரசியல் மட்டுமே குறி. கற்ற பாடங்கள் என நான் காண்பன 1. சிங்களவர்கள், முஸ்லீம்கள் போல் எமக்கும் ஒரு பொதுகூட்டு தேவை (இப்போ இது இல்லை). 2. நாம் proactive அரசியல் செய்யவில்லை. இனி செய்ய வேண்டும். 3. வரலாற்றின் போக்குக்கு குறுக்கே நின்று ஒரு சிறுபான்மை அணை கட்ட முடியாது. 4. எமது அரசியல் மக்கள் நலன் சார்ந்து, எடுக்கும் கொள்கை முடிவுகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும். மக்களுக்கு உள்ளதை உள்ளபடி கூறல் வேண்டும். உணர்சி வசப்படுத்தல் அறவே ஆகாது. 5. சிங்கள தலைவர்களோடு டீல் பேசும் போது இரெண்டு விடயங்களை கருத வேண்டும். அ. நாம் அவர்களுக்கு எதையாவது கொடுக்க வேண்டும் - வாக்குகள், மாலை மரியாதை -எதுவாகிலும். ஆ. பெரிய எடுப்பில் ஒப்பந்தம் போட்டால் அதை சிங்களவர்கள் குழப்பி அடிப்பது நிச்சயம். ஆகவே தொண்டா பிரஜா உரிமை விடயத்தில் சாதித்தது போல, அஷ்ரப் ஒலுவில் துறைமுகம் இதர திட்டங்களில் சாதித்தது போல ஒரு அணுகுமுறை தேவை. 6. இந்த அணுகுமுறையை தமிழ் தேசிய அரசியல்வாதிகள், அரசாங்கத்தில் சேராமலே செய்ய வேண்டும். பொறுப்பான எதிர்கட்சியாக எல்லாம் அவர்கள் செயல்பட தேவை இல்லை. தமிழ் தேசிய அரசியலை நீர்த்து விடாமல் பேணுவது அதே சமயம் மக்கள் நலனின் பால்பட்டு சில டீல் களை செய்வது. இவர்கள் இந்த அணுகுமுறையை எடுக்க தவறினால் அந்த வெற்றிடத்தை இன்னும் பல அங்கஜன்கள் நிரப்புவார்கள். பிகு: இந்த பாடங்கள் போருக்கு பிந்தியவர்களுக்கே, போர்காலத்தில் இருந்த சமநிலை வேறு.
- 147 replies
-
-
-
- 7
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
85E70413-E48D-4592-BA7B-3B8F0458F42B.jpeg
From the album: பலதும் பத்தும்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அண்மையில் இருட்டிய பின் வீட்டுக்கு வெளியால ஒரு 10 நிமிசம் சாறத்தோட வாக் போனான். திண்ணையிலும் எழுதினேன். ஒரு மாதிரி அசூசையாகதான் இருந்தது. எப்படா வீட்ட போவம் எண்டமாரி. இனி போவதாக இல்லை. ஆனால் குமாரசாமி அண்ணை போல் எனக்கு இதை ஏன் நாம் இப்படி பார்கிறோம் என புரியவில்லை. எமக்குத்தான் இது வீட்டுடுப்பு - ஊரில் பலருக்கு இது நிரந்தர உடைதானே?
-
E92FFBDC-6A25-4D39-81ED-DB5C48C05B46.jpeg
From the album: பலதும் பத்தும்
-
6AB838C6-6F3D-4CE1-976D-3F75A7E334A5.jpeg
From the album: பலதும் பத்தும்
-
9F250333-C1D0-4447-8086-57BC7ED4E262.jpeg
From the album: பலதும் பத்தும்
- 92A9BD63-6CE6-4BAD-A52E-8E446CA517B6.jpeg
- 5351279B-E780-4754-B0D4-78817F8EE5E0.jpeg
- 6CF05D0E-8AE0-40C1-B478-633BEEFFFCE0.jpeg